குவைத், அக். 18 உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் 13.10.2018 அன்று மாலை 6.30 மணிக்கு குவைத், ஹீர்ரன்ஜா விடுதியில் தோழர் ஆலஞ்சியார் தலைமையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் குவைத் உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் ச.செல்லப்பெருமாள் வரவேற்புரையாற்றினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா & விருது வழங்கும் விழவை ஏற்பாடு செய்த உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் ச.செல்லப்பெருமாளை பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தார்கள். அக்கடிதம் விழாவில் வாசிக்கப்பட்டது. பெரியார் விருது பெறும் வி.சி.க. முதன்மைச் செயலாளர் கமீ.அன்பரசன், குவைத் ஆசிரியை ஜெசிமா சிராஜூதீன், குடி அரசு இதழ் விருது பெறும் தமிழ்நேசன் அமானுல்லா ஆகியோருக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்த கடிதங்களை விழாவில் வாசிக்கும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது. கடிதங் களை வாசித்து, பாராட்டுக் கடிதங்களை விருது பெற்றோர்களுக்கு நூலக காப் பாளர் ச.செல்லப்பெருமாள் வழங்கினார்.
விழாத்தலைவர் ஆலஞ்சியார் திரா விட இயக்கச் சிந்தனைகளை முன்னெ டுத்துச் செல்வோம் என்று பேசினார்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, தந்தை பெரியார் விருதினை வெற்றியூர் கமீ.அன்பரசன், ஜெசிமா சிராஜூதின் ஆகியோருக்கும் குடிஅரசு இதழ் விருதினை தமிழ்நேசன் அமானுல்லாவிற்கும் வழங்கி சிறப் புரையாற்றினார்.
தந்தை பெரியார் கொள்கைகள் உலக மயமாக்கிடும் முயற்சியில் குவைத் மண்ணில் ஈடுபட்டு வரும் உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகப்பணிகளை பெரிதும் பாராட்டியும், தந்தை பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி களை விளக்கியும், அன்னை மணியம்மை யார் நூற்றாண்டு விழா பற்றியும் இன எதிரிகள் செயல்களுக்கு எதிர்வினையாற்ற ஒவ்வொரு தோழரும் பாடுபட்டு சமூக வலைதலைங்களில் பரப்புரையாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் திராவிட இயக்கச் சிந்தனைகளை, தந்தை பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை நாம் முன்னெ டுத்து செல்ல வேண்டிய அவசி யம் பற்றி விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் சுப்ரீம் டிராவல்ஸ் அபுபக் கர், சித்திக், வல்லம் அப்பாஸ், தூத்துக்குடி தந்தை பெரியார் படிப்பக பொறுப்பாளர் சு.காசி வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தந்தை பெரியார் பற்றிய பாடல்களை இசைமுரசு கலிபுல்லா பாடினார். நிகழ்ச்சியின் நிறைவில் திராவிடர் கழக தோழர் இரா.சித்தார்த்தன் நன்றியுரை கூறினார்.
குவைத் மண்ணிற்கு பரப்புரை மேற் கொள்ளச்சென்ற தோழர்கள் மா.அழகிரி சாமி, தமிழன் பிரசன்னா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு 12.10.2018 அன்று இரவு 8.30 மணியளவில் குவைத் விமான நிலையத்தில் திராவிடர் கழகம், திமுக, விசிக சார்பில் திரளாக தோழர்கள் வரவேற்பு அளித்தார்கள்.
- விடுதலை நாளேடு, 18.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக