படம்: 1 மலேசியா நாட்டில் உள்ள கெடா மாநிலம் கூலிம் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழாவில் பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்தார் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன். நிகழ்வில் தேசியத் தலைவர் அண்ணாமலை, தேசிய துணைத் தலைவர் பாரதி, கூலிம் கிளை தலைவர் டாக்டர் முரளி, துணைத் தலைவர் மாரிமுத்து, கெடா மாநில தலைவர் சு பாலன் குமரன், அறிவிப்பாளர் சரளா, கூலிம்கிளைச் செயலாளர் விக்டர், உதவி தலைவர் மனோகர், பட்டர் வொர்த்குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் எழுச்சி உரை ஆற்றினார் பெரியார் பிஞ்சுகளின் உரையரங்கமும் நடைபெற்றது. 18.9.2022 மாலை 4 மணி கூலிம் தமிழவேள்கோ. சாரங்கபாணி தமிழ் பள்ளி. படம் 2: மலேசிய நாட்டின் ம. தி .க சார்பில் பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு போல் நடைபெற்றது. தேசிய தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மேனாள் மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் நிகழ்வை தொடங்கி வைத்து தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பான கருத்துக்களை பதிவு செய்தார் மாநில கழக பொருளாளர் குணாளன் வரவேற்புரையாற்றினார் செயலாளர் யோகேஸ்வரி ஏற்பாட்டு குழு தலைவர் நாராயணசாமி துணைத் தலைவர் மருதமுத்து தேசிய துணைத் தலைவர் பாரதி, தேசிய உதவி தலைவர் மனோகர், டத்தோ மரியதாஸ், பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, கெடா மாநில தலைவர் பாலன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா படங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தந்தை பெரியார் குறித்த பேருரை ஆற்றினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. (18.9.2022 காலை 9 மணி - பட்டர்வொர்த் தேவான் தத்தோ ஹாஜி அகமத் படாவி அரங்கம்).
வியாழன், 9 மார்ச், 2023
பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும் மலேசியா நாட்டில் உள்ள கெடா, பினாங்கு மாநிலங்களில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா
ஞாயிறு, 24 ஜூலை, 2022
மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை 'டத்தோ' விருது பெற்றார்
கோலாலம்பூர், ஜூலை 23 மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணா மலை அவர்கள்; பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோசிறீ உத்தாமா அமாட் ஃபூசி அப்துல் ரசாக்கின் 73ஆம் அகவை நாளில், உயரிய டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து மலேசிய திராவிடர் கழக தோழர் இரெசு. முத்தையா தெரிவித்துள்ளதாவது:
மலேசிய திராவிடர் கழக வரலாற்றில் 'டத்தோ' விருது பெறும் முதல் தேசியத் தலைவர் என்ற பெருமை மதிப்புமிகு ச.த.அண்ணாமலையையே சாரும்.
இளவயது முதலாக, திராவிடர் கழகத்தில் தன்னை ஒருவராக இணைத்துக் கொண்டு திறம்பட பணியாற்றி வருபவராவார். திராவிடர் கழகத்தில் அவரின் தொண்டு அளப்பரிய தாகும்.
மலேசியத் திராவிடர் கழகத்தில் - கிளைச் செயலாளர், தலைவர், மாநிலத் தலைவர், தேசிய உதவித் தலைவர் என படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்று கழகத்தின் தேசியத் தலைவராக செயல்பட்டு வரும் வேளையில் அவருக்கு 'டத்தோ' விருது கிடைத்திருப்பது கழகத் திற்கு கிடைத்திட்ட உயரிய பெருமையாகும்.
'டத்தோ' விருது பெற்றுள்ள ச.த. அண்ணா மலைக்கு மனமுவந்த வாழ்த்துகளை உரித்தாக்கு வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.
மலேசியத் திராவிடர் கழகத்தின் மேனாள் பணியாளன் என்ற உரிமையோடும்; மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத்தின் சார்பாகவும், வாழ்த் துகளை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தாங்கள், மேலும் மேலும் பல உயரிய விருது களைப் பெற்று பெருமையுற விழைகிறேன்.
வெள்ளி, 10 ஜனவரி, 2020
மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்
பினாங்கு, ஜன. 5- மலேசியா திராவிடர் கழகத்தின் சார்பில் மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் குடும்ப விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
25.12.2019 அன்று பட்டர்வொர்த் நகர் - ஜாலான் பாகான் லூவாரில் உள்ள சிறீ ஆனந்த பவன் உணவக அரங்கில் மாலை 7 மணி அளவில் விழா தொடங்கி நடைபெற்றது. 1929ஆம் ஆண்டில் முதன்முதலாக தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணமாக வந்த நாடு அன்றைய மலாக்கா நாடு. அன்னை நாகம் மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்க ளுடன் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய இடம் பினாங்கு தீவு. அதையொட்டி அமைந்துள்ள பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியார் சுயமரியாதை கொள்கைப் பிரச்சாரம் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர், தந்தை பெரியாரின் 40ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பட்டர்வொர்த் நகரத்தில் 2013ஆம் ஆண்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியுள் ளார்.
நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பினாங்கு மாநிலத் தலைவருமான ச.த.அண்ணாமலை தலைமை வகித் தார். வந்திருந்தோரை வரவேற்று பினாங்கு மாநிலச் செயலாளர் சோ.மருதமுத்து உரையாற்றினார். தேசிய பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அறிமுக உரையாற்றினார். கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்றிருந்த திராவிடர் கழகத்தின் பொரு ளாளர் வீ.குமரேசன் சிறப்புரையாற்றினார்.
பினாங்கு மாநில அரசால் விருது வழங்கப்பட்டோருக்குப் பாராட்டு
தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பொதுவாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய மலேசியா திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மலேசியா திராவிடர் கழக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் செ.குணசேகரன் (PKT, PJK) அவர்களுக்கு DJN (Darjah Johan Negari) விருதி னையும், மலேசியத் திராவிடர் கழகத்தின் பெர்கான் மாத்தாய் பாவ் கிளைத் தலைவர் த.இரவி ஆகி அவர்களுக்கு PJM (Pingat Jasa Masyarakat) விருதினை யும் பினாங்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது, விருது வழங்கப்பட்ட கவிஞர் செ.குணாளன் அவர்களுக்கு தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ குமரேசன் அவர்களும் மற்றும் த.இரவி அவர்களுக்கு மலேசியா திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர்களும் சால்வை, சந்தன மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். விருது பெற்றோர் பற்றிய குறிப்புகளை சோ.மருத முத்து அவர்கள் எடுத்துரைத்தார்.
திராவிடர் கழகப் பொருளாளரின் உரை
நினைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொரு ளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:- மனிதர்களில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்க ளின் உயர்விற்கு பாடுபட்ட மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார். மனித சமத்துவத்திற்கு எதிராக எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன என்பதை தயவு தாட்சண்யமின்றி உடைத்து எறிந்தவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது சமூக நிலைக்கு - சமூக இழிவுக்கு எவை காரணம் என்பதை தனது பிரச்சாரத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எந்த சாஸ்திர புராணங்கள் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்ததோ, உடல் உழைப்பில் தான் சாகும்வரை அந்த மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்தியதோ அவைகளையெல்லாம் தூக்கி குப்பையில் போடச் சொன்னார். பிரச்சாரத்தின் வலிமை, கடுமை, அதிகமாக இருந்தாலும், தனது வழிமுறையில் வன்முறை என்பது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் பெரியார் பரப்பிய கருத் துக்கள் அவர் மறைந்தும் இன்றும் நீடித்து நிலைத்து இருக்கிறது. வற்புறுத்தலால் சொல்லப்படும் கருத்துக் கள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலைபெற முடியாது. மக்கள் மனங்களில் மனிதரிடம் இயல்பாக இருக்க வேண்டிய சுயமரியாதை, பகுத்தறிவு பண்பு களை தட்டியெழுப்பி முழுமையாக கடைப்பிடிக்கச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்திய புரட்சியாளர் தந்தை பெரியார். இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எவரும் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருக்க முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தாலும் பெரியாரின் பேச்சினை நேரில் கேட்டிருக்க முடியாது. பெரியாரது கருத்தின் வலிமை என்பது இன்று அவரை பார்த்திராத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தெரியவரும். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் மலேசிய நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடிவந்த தமிழர்களிடம் ஒரு குறிப் பிட்ட மாற்றத்தை, அவர்களது வாழ்நிலை உயர்விற் கான மாற்றத்தை தந்தை பெரியாரின் கொள்கைகள் உருவாக்கியுள்ளன.
மலேசிய நாட்டுக்கு இரண்டு முறைதான் தந்தை பெரியார் வருகை தந்துள்ளார். இங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார். அவரது மனிதநேயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாக தங்களை ஒருங்கிணைத்து செயல்படத் தொடங்கினார்கள். அப்படி உருவான அமைப்புதான் மலேசியத் திராவிடர் கழகம். அதன் சார்பாக தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. வெறும் நினைவு நாளை துக்கம் கருதி நடத்தப்படும் நிகழ்வல்ல இது. அடக்கப்பட்ட மக்கள் எழுச்சி கொண்டு முன்னேறியதைக் கொண்டாடும் நிகழ்வு பெரியாரின் நினைவு நாள். சமூக இழிவுக்கு ஆளான தமிழன் எழுச்சி பெற்று, சமூக, பொருளாதார அரசியல் என பலதுறைகளிலும் சாதனை புரிந்து மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கம் காட்டியதை கொண்டாடும் நாள் இது. பெரியாரது கொள்கை வழி நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். தொடர்ந்து வெற்றியடைவார்கள். பல்வேறு சோதனைகளை தாண்டி சாதனை புரிவார்கள். அப்படி சாதனை புரிந்த மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் இருவர் மலேசியா - பினாங்கு மாநில அரசால் பாராட்டுக்கு உரியவர்களாக அடையாளம் காணப் பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளனர். பொது வாழ்க் கையில் பொது சேவையில் குறிப்பிடத்தக்க பணியாற் றியதற்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கையாளர்கள் இறுதியில் பாராட் டப்படுபவர்களாக, சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய வர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
தந்தை பெரியாரின் கொள்கைகளான சுயமரி யாதை உணர்வுடன் மனிதன் வாழ வேண்டும்; வாழ் வில் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினை கடைப் பிடித்திட வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்காக மட்டுமே சொல்லப்பட்டதல்ல; குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது அல்ல; உண்மையில் தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுமையும் உள்ள மக்களுக்கு பொருந்தக் கூடியவை; பயன்தரக்கூடியவை. பெரியாரது கொள் கைகள் ஓர் உலகத் தத்துவம் சார்ந்தவை. உலக மக் களை மனிதர்களாக வாழ செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அந்த வகையில் தந்தை பெரியார் ஒரு உலகத் தலைவர். தந்தை பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வரும் வேளையில் இங்குள்ள மக்கள், தமது உயர்வுக்குக் காரணமாக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை இந்த தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, உணர்த்தி அவர்களையும் வாழ்நிலையில் உரிய மரியாதையுடன் வாழச் செய்திட தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதி பூணு வோம். என்றும் பெரியார் வெல்வார்; பெரியாரின் கொள்கை மனிதனை வளப்படுத்தும்; மானுடத்தை தழைத்தோங்க செய்திடும்!
- இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.
மறைந்த பொறுப்பாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு மாநிலப் பொருளாளர் சுப்பிரமணியம் செப்டம்பர் 15, 2019 அன்று மறைந்தார். கழகத்தின் சார்பாக பெறப்பட்ட நிதி உதவியினை மலேசியா திராவிடர் கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை மறைந்த சுப்பிரமணியம் அவர்களது துணைவியார் பத்மினி அவர்களிடம் வழங்கினார்.
சமூக நல காவலன் விருது
பினாங்கு மாநிலத்தின் கொடை நெஞ்சரும், சமூகவியலாளருமான டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் அவர்களின் எழுத்துப்பணி மற்றும் அவர் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் சமூக நல காவலன் விருது வழங்கப்பட்டது.
விழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய செயலவை கணக்காயர் ரவீந்திரன், தேசிய துணைப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநில பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை மகளிர் அணி தோழர்கள் இரா.அமுதவல்லி, பொன்.பரமேஸ்வரி, த.முருகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக பினாங்கு மாநில திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் பெ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.
மாநிலத்தில் சொந்தமாக கட்டிடம், அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் கழகம் பினாங்கு மாநில திராவிடர் கழகம். கழகம் பினாங்கு மாநிலத்தில் வலுவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆண், பெண், குழந்தைகள் எனப்பலரும் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து தந்தை பெரியாரின் கொள்கையை பிரச்சாரம் செய் திடும் குடும்ப விழாவாக நடைபெற்றது சிறப்புக்கு உரியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.
- விடுதலை நாளேடு 5 1 20
வியாழன், 2 ஜனவரி, 2020
மலேசியா-பேராக் மாநிலம் ஈப்போ நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்
ஈப்போ, டிச. 28- மலேசியா நாட்டு பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை மலேசியா திராவிடர் கழகத்தினர் வெகு சிறப்பாக - கொள்கைப் பிரச்சார விழாவாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சி 27.12.2019 அன்று ஈப்போ நகர் மேடான் இஸ்தானா - ரிஷிபவன் உணவக மேல்தளத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வருகை தந்திருந்தார். மக்கள் நீதிக் கட்சியின் (மலேசியா நாட்டு ஆளும் அரசியல் கூட்டணியில் அங்கம் வகித்து வரும்) சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மானமிகு இரா.கோபி வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தின் பொழுது, செல்வி.எல்லீஸ் ஏலன் தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையினை வாசித்தார். நிகழ்ச்சி நிறைவின் பொழுது பத்திரிகையாளர் எம்.ஏ.அலி 'யார் இவர்' எனும் தலப்பில் பெரியார் பற்றிய குறுங்கவியினை வாசித்தார். நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக.பஞ்சு, ஆலோசகர் ரெ.சு.முத்தையா, பேராக் பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி.முனியரசன், மலேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் கு.கிருஷ்ணன், ஈப்போ நகர் கிளைத் தலைவர் ஏலன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம்
மலேசிய நாடாளுமன்றத்தின் சுங்கை சிப்புட் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்ரமணியம் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:
"நான் தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் கூட்டத் திற்கு வேண்டி விரும்பி பங்கேற்றுள்ளேன். தொடக்கத்தில் திராவிடர் கழகத்தைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. 2008ஆம் ஆண்டு சென்னை நகருக்குச் சென்றபொழுது அங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் ஓர் அரங்கில் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள புத்தகங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றுள் சில புத்தகங்களை வாங்கி வந்து படித்தேன். பெரியாரைப் படிக்க படிக்க என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு ஒருவித புதிய தன்னம்பிக்கை, புதிய துணிச்சல், விரிவாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு ஏற்பட்டது. தந்தை பெரியாரின் உழைப்பினால் மலேசிய நகர்த் தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை உணர்வுடன் வாழ்வில் முன்னேறி இங்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். பெரியாருடைய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டங்கள் வழி வகுக்கும். அடுத்த ஆண்டு தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியினை நாங்களே ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திடுவோம்.
இவ்வாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் தமது உரையில் குறிப்பிட்டார்.
திராவிடர் கழகப் பொருளாளர் உரை
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணமாக மலேசிய நாட்டிற்குத்தான் வந்தார். பினாங்கு நகருக்கு கப்பலில் வந்த பெரியார் அடுத்த நாள் (21.12.1929) இந்த ஈப்போ நகரில் நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது மலேசிய நாடும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தன. அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. இந்தியாவில் இயற்றப்பட்டதைப்போல பால்ய திருமண தடைச் சட்டம் மலேசியாவிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், விதவை மணத்தை ஒவ்வொருவரும் ஆதரித்துக் கைக்கொள்ள வேண்டும் எனவும், குடும்ப சமுதாய நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைக் கைவிட்டு சிக்கனமாக நடத்திட வேண்டும் எனவும், மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமக்குள் நாட்டு வேற்றுமை பாராட்டாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தந்தை பெரியார் அன்றைய மலாய் நாட்டின் பல ஊர் களில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். மக்களைச் சந்தித்து அவர்களது உயர்விற்கான வழிமுறைகளை வலி யுறுத்தினார். அந்த வருகை ஏற்படுத்திய தாக்கங்களை 1954ஆம் ஆண்டு மீண்டும் மலேயா நாட்டிற்கு பெரியார் வந்த பொழுது நேரடியாக பார்த்தார். 25 ஆண்டுகால இடைவெளியில் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இன்று அதைவிடப் பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டு, தமிழர்கள் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் ஏற்பட அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். அந்த நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் கொள்கைகளை மேலும் பரப்பிட இந்த நினைவுநாள் கூட்டத்தை மலேசிய திராவிடர் கழகத்தினர் நடத்துகின்றனர்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் எளிதாக நடை முறைக்கு வந்துவிடவில்லை. பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் நடைமுறைக்கு வந்தது. பயன்பெற வேண்டிய மக்களே தொடக்க காலத்தில் எதிர்த்தனர். காரணம் அந்த அளவிற்கு பழைமைக்கு ஆட்பட்டு சமூக அடிமை வாழ்விற்குப் பழக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். படிப்படியாக உண்மை நிலை உணர்ந்து முன்னேறினர். இன்றைக்கு தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு உலகம் முழுவதும் வரவேற்கப்படும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டு நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு நிகழ்வுகளாக, உலகினருக்கு எடுத்துக் கூறக்கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.
மலேசியாவில் தமிழர்கள் பலர் அரசியல் களத்தில் ஆளும் தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். ஏற்கெனவே தந்தை பெரியாரின் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சட்ட அனுமதியுடன் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால்தான். தமிழ் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலமே பெரியாரின் கொள்கைக் கடைப்பிடித்து மேலும் முன்னேறி வளம் பெற வேண்டும். அதற்கு அமைப்பு ரீதியான பிரச்சாரப் பணிகள் ஆக்கம் பெற வேண்டும். இந்த நினைவு நாள் கூட்டம் அப்படிப்பட்ட நிகழ்வாகும். தொடர்ந்து, அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள், பலரது பங்கேற்புடன் நடைபெற வேண்டும். இவ்வாறு வீ.குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.
நிறைவாக மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன் நன்றி கூறினார்.
இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது, பொதுப்படையான தமிழர்கள் பலரும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தது சிறப் புக்குரியதாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகம் நடத்திய தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முழுமையான கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றது.
- விடுதலை நாளேடு 28 12 19
மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் தந்தை பெரியாரின் 46ஆம்ஆண்டு நினைவு நாள் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பங்கேற்பு
மலேசியாவில் தந்தைபெரியாரின் கொள்கை யினை ஏற்று இயங்கி வருகின்ற திராவிடர் அமைப்புகளான மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான இயக்கம் மற்றும் பேராக் மாநில பெரியார் பாசறை ஆகியவற்றின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சார விழாவாக கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.
24.12.2019 அன்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய கூட்டம், கோலாலம்பூர் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள விஸ்வமாதன் சம்பந்தன் தான் சிறீடத்தோ கே.ஆர். சோமா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை தலைமை வகித்தார். நினைவு நாள் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் சுடர்மதி அம்மையார் 'பெரியார் தமிழரா' எனும் தலைப்பில் ஒரு ஆளுமையான கவிதையினைப் படைத்தார். கூட்டத்தில் மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் கெ. வாசு, பேராக் மாநில பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி. முனியரசன், மலேசிய மலாக்கா மாநில திராவிடர் கழகத்தின் ஆலோசகர் ரெ.சு. முத்தையா, மலேசிய தமிழ் மொழிக் கழகத்தின் தேசிய தலைவர் திருமாவளவன் மற்றும் பகான் மாநில சபாய் சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மின்னல் பண்பலை வானொலியின் அறிவிப்பாளர் புலவர் பொன் கோகிலம் கவிதை வாசித்தார். நிறைவாக தமிழக திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் தலைவர் எடுத்த முயற்சி வெற்றி
மலேசிய திராவிடர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் நவம்பர் 2019இல் கோலாலம்பூர் வருகை தந்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக அனைத்து மலேசிய திராவிடர் அமைப்புகளும் இணைந்து செயல்பட முன்வந்ததுபற்றி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இணைந்து செயல்படுவதன் அவசியத்தை உறுதி செய்து உரையாற்றினர். கூட்டமைப்பின் தலைவர்கள் தந்தை பெரியார் மலேசிய நாட்டிற்கு இருமுறை வந்து சென்றது பற்றியும், ஆதலால் தமிழர் தம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் நன்றி கலந்த வெளிப்பாட்டுடன் உரையாற்றினர்.
தமிழ் மொழிக் கழகத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன் முதன் முறையாக கருப்புச்சட்டை அணிந்து தனது வாழ்வில் ஓர் புதிய அத்தியாயத்தை கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தொடங்கியுள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மலேசிய பகான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் பெண் விடுதலைக்கு தந்தை பெரியார் ஆற்றிய அரும் பணிபற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். மேலும் பெரியார் இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு' கொள்கையினை மறுத்துப் பேசிய தானும் கடவுளைப் பார்த்திட முடிய வில்லை என்பதை ஏதார்த்தமாக தனது கடவுள் மீதான நம்பிக்கை அற்ற நிலையினை வெளிப்படுத்தினார்.
கழகப் பொருளாளர் சிறப்புரை
நினைவுநாள் கூட்டத்திற்கு சிறப்பு வருகை தந்த தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
தமிழகம் தாண்டி, தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் நிலையில் சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் ஒரே நாடு மலேசியா. 1946ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசிய திராவிடர் கழகம் தமிழர் தம் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்தது. பெரியார் பற்றாளர்கள் பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் நடைபெறுவது தமிழர் தம் ஒற்றுமை கலந்த செயல்பாட்டு உணர்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தந்தை பெரியாரது சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலக மனிதர்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில், மனித குல மேம்பாட்டை வலியுறுத்துகின்ற வகையில் 'பெரியார் உலகமயம்' என்பதாகப் கொள்கைப் பரவல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புரட்சிக் கவிஞரின் தந்தை பெரியாரின் 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' காலம் உருவாகி வருகிறது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பொழுதே தந்தை பெரியார் தமதுஉலகம் தழுவிய பார்வையினை உறுதிப்படுத்தினார். பெரியார்தம் கொள்கைகளை ஏற்று வாழ்பவர்கள், சமுதாயப் பணி ஆற்றுபவர்கள் மேம்பட்ட நிலையில்தான் உள்ளனர்; எந்தவிதமாற்றுக் கொள்கையினர்களைவிட செம்மாந்து வாழ்ந்து வருகின்றனர்.
தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மனிதரின் முழு ஆற்றலை மனித மேம்பாட்டுக்குப் பயன்படுத்திட வழி அமைத்துள்ளது. 'இனிவரும் உலகம்' என அறிவியல் வளர்ச்சியினை தொலைநோக்கி மக்களிடையே அறிவியல் மனப்பான்மை பெருகிட வித்திட்டவர் தந்தைபெரியார். மக்களில் பாதியினரான பெண்களின் சமூகநிலை அனைத்து நாடுகளிலும் உரிய உரிமைகளுடன் இல்லை. பெண்கள் விடுதலை பெற்ற சமுதாயந்தான் முழு வெற்றி பெற்ற சமுதாயமாக வாழ்ந்திட முடியும் என உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற வகையில் தந்தை பெரியார் தமது மனிதநேயக் கருத்துகளை விதைத்து, அவரது வாழ் நாளிலேயே அதன் விளைச்சலை பார்த்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகள், கொள்கைப் பரப்பை மேற்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் அவற்றை எடுத்துச் செல்கின்ற வகையில் மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் பணி அமைந்திட வேண்டும். பெரியார் தம் கொள்கைகளை உலகமயப்படுத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சிப் பணிகளுக்கு ஆக்கம் ஊட்டிட நினைவு நாளில் உறுதியேற்போம், செயல்படுவோம்.
இவ்வாறு வீ. குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
நிகழ்ச்சியில் நன்றியுரையினை மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் சா.இரா. பாரதி வழங்கினார். நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் பஞ்சு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் மலேசியாவின் பெரியார் இயக்க முன்னோடிகள், இன்றைய பொறுப்பாளர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். பெரியார் நூலகத்தினை மலேசிய பள்ளிகளில் அமைத்து வரும் பணியினை தொடர்ந்து ஆற்றி வரும் மு.கோவிந்தசாமி மற்றும் கே.ஆர்.ஆர். அன்பழகன் உள்பட மகளிர் பலர் வருகை தந்திருந்தனர். தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு கூட்டத்தின் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு ஏதுவாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது. அனைவரின் பாரட்டுதலுக்கும், பெருமைக்கும் உரியதாக இருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஒரு குடும்ப விழாவாக தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இனிதே நடந்தது.
(மேலும் தகவல்கள் 3ஆம் பக்கம் காண்க)
மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்
மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.
25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.
1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.
பெரியார் ஓர் உலகத் தலைவர்
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-
தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.
மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.
இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.
பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 26.12.19
மலேசியா - கெடா மாநிலம் சுங்கப் பட்டாணியில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்
மலேசிய திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத்தின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, திராவிடர் களின் ஒற்றுமை நிகழ்வாக எழுச்சி யுடன் சுங்கப் பட்டாணி நகரத்தில் நடைபெற்றது.
25.12.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுங்கப் பட்டாணி பெர்டானா ஹைட்ஸ், லார்ட் 88இல் அமைந் துள்ள மக்கள் முற்போக்குக் கட்சியின் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.
1955ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி யுடன் கொள்கைப் பூர்வமாகக் கொண் டாடி வரும் பெரியார் பெருந்தொண் டர் எம்ஜிஆர். கலை ரசிகர் சா.வடி வேல் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலே சியா திராவிடர் கழகத்தின் கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந் தோரை வரவேற்று கெடா மாநிலச் செயலாளர் ஜே.வி.ராஜகோபால் உரையாற்றினார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை, தேசியப் பொதுச்செயலாளர் பெகர்.பொன்.பொன்வாசகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமது உரையின் பொழுது மலேசிய திராவிடர் கழகம் மலேசிய நாடு முழுவதும்,- மாநிலம் முழுவதும் கிளைகள் அமைத்து பெரி யாரது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வரும் பணியைப் பற்றி விரி வாகப் பேசினர்.
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக தமிழகத்திலிருந்து வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் சிறப்புரை ஆற்றினார்.
பெரியார் ஓர் உலகத் தலைவர்
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-
தந்தை பெரியார் முறையாகப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் மனித குல மேம்பாட்டிற்கு சுயமாக சிந்தித்து செயலாற்றிய ஓர் ஒப்பற்ற புரட்சியாளர். சமூக மாற்றம் என்பது சேவையின் மூலம் வரலாம்; சீர்திருத்தத்தின் மூலம் வரலாம்; புரட் சியின் மூலமும் வரலாம். ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டு வரும். புரட்சி யின் மூலம் வரும் மாற்றமானது, சமூக தலைகீழ் மாற்றமாகும், பெரும்பா லான நாடுகளில் ஏற்பட்ட சமூக புரட்சிகள் ஆயுதம் தாங்கி போராடி யதன் மூலம் நடைபெற்றவை. ஆனால் பெரியார் நடத்திய சமூகப் புரட்சி என்பது அமைதி வழியிலான அறிவா யுத புரட்சி. கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து விடாது வலியு றுத்தி அதற்காக இடம் அமைத்துப் போராடி அடக்கு முறையினை எதிர்த்த வழிமுறையினை தந்தை பெரியார் நடத்தினார். தனது வாழ்நாளிலேயே அதன் வெற்றியின் ஒரு பகுதியைக் கண்டவர். ஆயுதம் தாங்கி நடத்தப்படும் புரட்சிகள், மக்கள் மனங்களில் உரிய மாற்றத் தினை உருவாக்காத நிலையில் அந்த புரட்சி மாற்றங்கள் நிலைத்திருக்க முடியாது. அறிவாயுதம் தாங்கி பெரி யார் நடத்தியது மக்கள் மனங்களில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியப் புரட்சி; அவர்களைத் தொடர்ந்து மேம்படுத்திவரும், நீடித்து நிலைக்கும் புரட்சி மாற்றமாகும். வன்முறைக்கு துளியும் இடம் கொடுக்காத சமூக மாற்றம், தந்தை பெரியார் நடத்திய புரட்சியின் மூலம் ஏற்பட்டது. சுய மரியாதை உணர்வினை ஊட்டி, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதர் முழுமையான உயர்வினை அடைய முடியும், பிறரையும் சமத் துவத்துடன் வாழ வைத்திட முடியும். 'மனிதன் தானாய் பிறக்கவில்லை; தனக்காக மட்டும் வாழ்ந்திடக்கூடாது' என மனிதநேயம் வலியுறுத்தியவர் தந்தை பெரியார். தமது கொள்கை களை பரப்பிட தனியாக ஓர் அமைப் பினை உருவாக்கி அதனை இயக்கமாக வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என 94 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இன்று உலகம் தழுவிய இயக்கமாக இருக்கிறது.
மலேசியாவில் வாழுகின்ற தமிழர் களின் வாழ்வில் ஓர் புதிய விடியலை உருவாக்கியது பெரியாரின் கொள் கைகள் தான். அதன் வெளிப்பாடுதான் கடந்த 90 ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கல்வி நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள். பெரியார் ஓர் உலகத் தலைவராகி வருகிறார். பன் னாட்டளவில் பெரியாரது கொள்கை கள் போற்றப்பட்டு, ஏற்கப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அண்மையில் அமெரிக்காவில், மேரி லாந்தில் நடைபெற்ற பெரியார் சுய மரியாதை, மனிதநேய பன்னாட்டு மாநாடே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. தந்தை பெரியாரையே பார்த்திராத ஓர் தலைமுறை அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பரப்பி வருகிறது. இது அடுத்த தலை முறைக்கும் தொடர வேண்டும். அத்த கைய பொறுப்பு இன்றைய தலை முறையினருக்கு உண்டு. அந்தப் பணியினை செய்து முடித்திட, பெரியாரது கொள்கை நடைமுறையில் பயன் பெற்று உயர்ந்திட நமக்கு உரிமை இருக் கிறது. அந்தக் கடமையினை ஆற்றிட தந்தை பெரியாரது நினைவு நாளில் சூளுரையாக மேற்கொள்கிறோம்.
இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
விழா நிகழ்ச்சிகளை முருகேசன் வழங்கிட, மலேசிய திராவிடர் கழக கெடா மாநில துணைச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் சா.வடி வேலு நன்றி கூறினார்.
பிற்பகல் நேரத்திலும் பலர் நிகழ்ச் சியில் பங்கேற்றதும், அலுவலகப் பணி என்பதால் தாமதமாக நிகழ்ச் சிக்கு வந்து பங்கேற்றதை வெளிப் படுத்தியும் ஒருவித கொள்கைப் கட் டுப்பாடுடன் பெரியார் பற்றாளர்கள் நடந்து கொண்டதும் சிறப்புக்குரிய தாக இருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு 26 12 19
சனி, 21 டிசம்பர், 2019
மலேசியாவில் திராவிடர் எழுச்சி!
மலேசியா நாடு முழுதும் முக்கிய தலைநகர்களில் திராவிடர் கூட்டமைப்பு பிரச்சார பெருமழை
தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரைகள்
சிலிர்த்தெழுந்த சிங்கம் போல் தொடர் நிகழ்ச்சிகள்
மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்காரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கடந்த 24.11.2019 அன்று கிரவுன் பிளாசா ஓட்டலில் Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில், ஆசிரியர் கி.வீரமணி (தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர்) அவர்களின் தலைமையில் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியாரின 46ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2019) தொடர் நிகழ்வை மிகுந்த சிறப்புடன் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 26 நவம்பர், 2019
மலேசியாவில் பெரியார் பன்னாட்டமைப்புPeriyar International உருவாக்கம்
நமது சிறப்புச் செய்தியாளர்
பிரிந்த அமைப்புகள் சேர்ந்த பெரியாரிய கூட்டமைப்பு பிறந்தது!
மலேசிய திருநாட்டில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுப் பெருமைமிகு சாதனை
மலேசியாவில் பெரியார் பன்னாட்டமைப்பு
Periyar International உருவாக்கம்
அமெரிக்க சிகாகோவைத் தலைநகரமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், டெக்சாஸ் பேராசிரியர் டாக்டர் இலக்குவன்தமிழ், சிகாகோ பாபு, பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா ஆகியோரின் அரிய முயற்சியால் தொடங்கப் பெற்று, இன்று பல மாநிலங்களிலும், பல நாடுகளிலும் அமைப்புகளை உருவாக்கி சமூகத் தொண்டு நிறுவனமாக நடக்கும் பெரியார் பன்னாட்டமைப்பு மலேசியாவிலும் ஆசிரியர் முன்னிலையில் 24.11.2019 அன்று உருவாக்கப்பட்டது.
மானமிகு தோழர் மா.கோவிந்தசாமி எம்.ஏ., அவர்கள் தலைவராகவும், மானமிகு கே.ஆர்.ஆர்.அன்பழகன் பி.ஏ., அவர்கள் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். விரிவாக்கம் தொடரவிருக்கிறது என்பதும் கூட்டம் முடிந்த பின் அமைந்த முடிவில் ஒன்றாகும்.
கோலாலம்பூர் (கோலக்கிள்ளான்), நவ.26- 24.11.2019, ஞாயிறு காலை 11 மணியளவில் மலேசிய திராவிடர் இயக்க வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயம் இணைக் கப்பட்டது. மறக்க முடியாத பொன்னாளாகும் அந்நாள்!
ஆம்! புரட்சிக்கவிஞர் அவர்கள் கொட்டிய கவிதை முரசொலிக்கு விளக்கம் அளிக்கும் இலக்கிய மாக இயக்க நடவடிக்கைகள் அமைந்தன!
‘‘இங்குள திராவிடர் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்'' என்று கூவி முழங்கும் வண்ணம் சில ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த கழகக் கொள்கைக் குடும்பத்தினர் மீண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பல அமைப்புகளாக இருப் பவர்கள் ஓர் அணியில் நிற்க - பெரியாரிய கூட்ட மைப்பை உருவாக்க அனைவரும் இசைந்தனர், ஒன்று கூடினர்.
கழகத் தலைவர் ஆசிரியர் தங்கியிருந்த கோலக் கிள்ளான் (Port klang) துறைமுக நகரின் கிரிஸ்டல் கிரவுன் பிளாசா ஓட்டலில் இரண்டாம் தள அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களான தேசியத் தலைவர் பினாங்கு அண்ணாமலை, பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் மற்றும் பொறுப் பாளர்கள் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்கா£ரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கிரவுன் பிளாசா ஓட்டலில் Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர்.
அதற்குமுன் கோலக் கிள்ளான் நகரில் பல ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்றுவரும் திருவள்ளுவர் மண்டபம் - மன்றம் நூலகம் சென்று காலை 10 மணி யளவில் திருவள்ளுவர் சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்தார். அதன் முக்கிய பொறுப்பா ளர்கள் திரு.இராமன் தலைமையில் ஆசிரியரை வரவேற்றனர்.
சுமார் 20, 25 ஆண்டுகளுக்குமுன் இதே மண்ட பத்தில் வந்து பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டதையும், நடிகவேள் எம்ஆர்.இராதா அவர்களை அழைத்து திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி இதே மண்டபத்தில் உரையாற்றிட வைத்ததுமான பழைய நினைவுகள்பற்றி சிறிது நேரம் உரையாடி ஆசிரியரை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து விடை பெற்றார். ஆசிரியருடன் கே.ஆர்.ஆர்.அன்பழகன், வெற்றி முனியாண்டி, சிங்கப்பூர் இராஜா ராமன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
அதேநேரத்தில் கிரவுன் பிளாசா ஓட்டலின் இரண் டாவது தளமான அதே அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக் கூட்டம் அதன் தேசியத் தலைவர் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர் கள் மலேசிய திராவிடர் கழகத்தின் முக்கிய செயல வைப் பொறுப்பாளர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின், கடந்த கூட்ட குறிப்புகளை முன்வைத்தும், தேசிய பொருளாளர் கு.கிருட்டிணன் அவர்கள் கணக்கறிக்கை தாக்கல் செய்தும், கழக நிலை குறித்து கலந்து உரையாடியும், கழகப் பொருட் கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும், கழக செயல் நடவடிக்கை குறித்து முடிவெடுத்தும் பல்வேறு கருத்து களைப் பரிமாறிக் கொண்டனர். தேசிய துணைப் பொதுச்செயலாளர் மானமிகு ச.நாகேந்திரன் அனை வருக்கும் நன்றி கூறி, காலை 11 மணியளவில் அந்தக் கலந்துறவாடல் நடவடிக்கைகளை முடித்துக் கொண் டனர்.
அதன் பிறகு அதே அரங்கில் சிறப்பு வருகை தந்த தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் ஒன்று திரண்டு அரங்கில் கூடி வரவேற்றனர்.
1. மலேசிய திராவிடர் கழகம் சார்பில்...
மானமிகு தோழர்களான
1. ச.த.அண்ணாமலை, தலைவர்
2. சா.பாரதி, துணைத் தலைவர்
3. பொன்.பொன்வாசகம், பொதுச்செயலாளர்
4. வீ.இளங்கோ, உதவித் தலைவர்
5. கு.கிருட்டிணன், பொருளாளர்
6. மு.இராதாகிருட்டிணன், அமைப்புச் செயலாளர்
மற்றும் முன்னாள் துணைத் தலைவர், பொருளாளர் தாப்பா கெங்கையா, அர்ச்சுனன், மகளிரணி தோழர் கள், முதுபெரும் பெரியார் தொண்டர் பெரியசாமி மற்றும் தோழர்கள்.
2. மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகம்
மானமிகு தோழர்கள்
1. இ.ரெசு.முத்தய்யா, ஆலோசகர்,
2. நாக.பஞ்சு, தலைவர்
3. ச.அன்பரசன், பொதுச்செயலாளர்
3. பேராக் மாநில பெரியார் பாசறை
மானமிகு தோழர்கள்
1. வா.அமுதவாணன், தலைவர்
2. த.சி.முனியரசன், துணைத் தலைவர்
3. அ.அல்லிமலர், பொருளாளர்
4. க.மணிமாலா, மகளிர் தலைவி
4. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்
மானமிகு தோழர்கள்
1. கெ.வாசு, தலைவர்
2. மரு.கிருட்டிணன், உதவித் தலைவர்
3. மு.மணிமாறன், செயலவை உறுப்பினர்
4. ம.பத்துமாலை, செயலவை உறுப்பினர்
5. சிறப்பு அழைப்பாளர்கள் (மேலே காட்டிய) ம.தி.க.வின் பல உறுப்பினர்கள், பெரியாரிஸ்டுகள் கூடுதலாக
மானமிகுவாளர்கள்
1. கோவிந்தசாமி
2. கே.ஆர்.ஆர்.அன்பழகன்
3. வெற்றி முனியாண்டி மற்றும் பல மகளிரணித் தோழர்கள்
கூட்டத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியரை ம.தி.க.வின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் வரவேற்றும், இந்தக் காலகட்டத்தில் மலேசிய மண்ணில் பெரியார் கொள்கைக்கு எதிரான பிற்போக்கு ஜாதி, மதவாத சக்திகளும் மற்றும் பல போலி தேசியங்களும் கழகப் பிரச்சாரத்திற்கு எதிராக வும், தந்தை பெரியார் கொள்கை முதன்முதலாக வேரூன்றிய மலேசிய மண்ணிலிருந்து அகற்றிட முயன்றும், அவற்றை முறியடித்து எவரும் கனவுகூட காண முடியாதபடிச் செய்வோம். நாம் அனைவரும் இந்த பெரியாரிய கூட்டமைப்புப்பில் பங்கேற்ற திராவிடர் இயக்கங்கள் ஓர் அணியில் திரண்டு கொள்கை பரப்பும் தொண்டறப் பணியில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகும் என்பதைக் கூறி, இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்; அதனை அத்துணை அமைப்புகளின் சார்பிலும் தோழர்கள் நாகபஞ்சு, ரெசு.முத்தய்யா, அமுதவாணன், கெ.வாசு, கிருட்டி ணன் முதலிய அனைவரும் ஒத்த குரலில் அதே கருத்தைப் பிரதிபலித்து சிறு சிறு விளக்க உறுதி உரையாற்றினர்.
தனியாக வந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பெரியசாமி அவர்களும், மற்ற நண்பர் களும் பிசிறு தட்டாமல், ஒரே குரலில் இந்த ஒருங் கிணைப்பை வரவேற்றார்கள்.
அதன்பின் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலை வரும், ‘விடுதலை' ஆசிரியருமான கி.வீரமணி அவர் கள் மிகுந்த மகிழ்ச்சித் ததும்பும் உற்சாகத்துடன் உரையாற்றினார்.
‘‘இன்று தான் அடையும் மகிழ்ச்சியை என்றும் அடைந்ததில்லை என்றும், வரும் டிசம்பர் 2 இல் 86 வயதுடன் செல்லும் தான், 26 வயது இளைஞனைப் போல திரும்பக் கூடிய தெம்பையும், பலத்தையும், மகிழ்ச்சியையும் நீங்கள் இந்த ஒற்றுமை உணர்வின் மூலம் தந்துள்ளமைக்கு எனது தலைதாழ்ந்த நன் றியை, பாராட்டை உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு அமைப்பினருக்கும் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.
‘‘நீரடித்து நீர் விலகாது'' என்ற பழமொழியை உண்மை என்று காட்டியுள்ளீர்கள். நடந்தவைகள் நடந்தவைகளாகவும், கடந்தவைகளாகவும் இருக்கட் டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக அமை யட்டும்.
நம்முடைய பிரிவுகள்பற்றி யாரும் இனி கவலைப் படத் தேவையில்லை. இன்று வளர்ந்து பக்குவப்பட் டுள்ளோம் மீண்டும் காலம் கனியும் - அப்போது ஒரே கழகமாகவும் மீண்டும் இந்த பெரியாரின் பெரும் கொள்கைக் குடும்பம் ஒன்று சேருவது நிச்சயம் - உறுதியும்கூட!
நம்மிடையேயான சிறு கருத்து மாறுபாடுகள் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஓர் குடும்பம் என்றால், எல்லாம் இருக்கும்; அப் பனுக்கும், மகனுக்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும், ஏன் கணவனுக்கும், மனைவிக்கும், துணைவனுக்கும், துணைவிக்கும்கூட கருத்து மாறுபாடு வரத்தானே செய்கிறது?
அதனால், உறவு பறிபோய்விடுமா?
உறவை யாராவது பறித்துத்தான் விட முடியுமா?
பெரியார் பெருந்தொண்டர்களாகிய நாம் அனை வரும் இதை மனதில் நிறுத்தினால் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்துவிடும்!
கருத்து மாறுபாடுகள் என்பவை எப்போதும் மறையக் கூடியவை, கருத்து வேறுபாடுகளின் தன் மையோ வேறு.
நமக்குள்ளே வந்து தலையை நீட்டியது கருத்து மாறுபாடுகளே தவிர, வேறுபாடுகள் அல்ல தோழர்களே!
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமது தொண்டை மானம் பாராத தொண்டு என்றும், நன்றி எதிர்பாராத் தொண்டு என்றும் கூறிடு வார்.
1330 குறள்களிலேயே அய்யாவுக்கு மிகவும் பிடித்த குறள்,
‘‘குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்''
என்ற குறள்தான் என்பதை நன்கு அறிந்தவர் கள்தான் நீங்கள் அனைவரும்.
நம் கொள்கை எதிரிகளின் துள்ளலும், எள்ளலும், கிள்ளலும்பற்றி மட்டுமே யோசியுங்கள். நம்முள் வீரமும், செயல் திறனும் பன்மடங்கு பெருகி ‘விஸ்வ ரூபம்' எடுப்பது உறுதி!
அதன்முன் எவரும் வாலாட்ட முடியாது! அய்யா சொன்ன அறிவுரையை என்றும் மனதில் நிறுத்துங்கள்.
‘‘எது நம்மைப் பிரிக்கின்றதோ அதை அலட்சி யப்படுத்துங்கள் - பொருட்படுத்தாதீர்கள்.
எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப் படுத்துங்கள், ஆழப்படுத்துங்கள்!
வெற்றி நம் மடியில் வந்து தானே விழும்!''
எனது அன்பான வேண்டுகோளை ஏற்று ஒருங் கிணைந்து - முதல் கட்டமாக செயல்பட முன்வந்த அனைவருக்கும் எமது நன்றி.
இந்நாட்டில் பழைய அந்த சுயமரியாதைச் சுடரொளிகள் 70 ஆண்டுகளுக்கு மேலே தங்களது தியாகத்தால், துன்பத்தால், எதிர்ப்புகளை உரமாக்கி, நம் கொள்கைப் பயிர்களைச் செழிக்க வைத்தனர்.
அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்! வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாளை நீங்கள் அத்துணை அமைப்புகளும் ஓர் மேடையில் - ஓர் குடையின்கீழ் நின்று நடத்தி கொள்கைப் பிரகடனத்தை முழங்கி, பணியைத் திட்டமிட்டு செய்யத் தொடங்குங்கள்.
தமிழ்நாடு என்றும் உங்களுக்கு, உங்கள் பணிக்கு உறுதுணையாக நிற்கும். என்றும் தொடர்புடன் இருங்கள் - வளர்த்துக் கொள்ளுங்கள் - பயிற்சி முகாம் தேவை என்றால், எங்கள் விருந்தினர்களான இளைஞர்களை அழைத்து வாருங்கள் - இருகரம் ஏந்தி உங்களை வரவேற்போம் - ஏற்பாடு செய்வோம் - என்றும் நாம் ஒரே குடும்பம், சுயமரியாதைப் பல்கலைக் கழகக் குடும்பம்!'' என்று உருக்கமுடன் பேசினார்கள்.
‘‘வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் நினைவு நாளை நடத்த மாந்த நேய திராவிடர் கழ கத்தினர் கேட்டனர்; மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித் தோம்.
எங்கே, எந்த கழக நிகழ்ச்சி என்றாலும், கொள்கைப் பிரச்சாரம் என்றாலும், ஓர் அணியாய் திரண்டு அங்கே சென்று பெரியாரின் இராணுவ சிப்பாய்களாக நிற்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் விமர் சிக்கவே கூடாது என்பதில் உறுதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள்'' என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அனைவரும் வழிமொழிந்து வரவேற்று, அய்யா நினைவு நாளையே, கொள்கைப் பிரச்சாரத்தின் திருப்ப நாளாகும் என்றனர்.
இறுதியில் மலேசியக் கழகத் தலைவர் ச.த.அண்ணாமலை தமிழ்நாடு கழகத்தின் பெரியார் உலக முயற்சிகளைப் பாராட்டினார்; விளக்கிக் கூறு மாறு ஆசிரியரைக் கேட்டுக்கொண்டார்.
‘‘கொள்கை விளக்க இயக்க வெளியீடுகளை, இந்நாட்டுக்குத் தேவையான நூல்களை - பகுத்தறிவு வெளியீடுகளைப் பரப்பும் திட்டத்தைக் கைக்கொள் ளும், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல் போன்ற கருத்துள்ள நூல்களை பெரியார் எழுத்து, பேச்சுகளையும், கழக வெளியீடுகள் பரப்பும் திட்டத் தையும் சிறப்புற செயல்படுத்தவேண்டும்'' என்றார்.
‘‘அடிப்படையில் நமது இயக்கம் ஒரு பிரச்சார இயக்கமே! வன்முறையிலோ, தீவிரவாதத்திலோ, பயங்கரவாதத்திலோ, இரகசிய வழிகளிலோ நம்பிக் கையில்லா அமைதிப் புரட்சி இயக்கம், அறிவுப் புரட்சி இயக்கம் என்பதை பிரச்சாரத்தில் தெளிவுபடுத்துங்கள்'' என்று விளக்கமாக எடுத்துரைத்தார். வந்திருந்த அத்துணைத் தோழர்களுக்கும் பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தய்யன், தமிழ்நாடு கழக வெளியீடுகளை முதல் நாள் திருமண வீட்டிலும், கழகக் கலந்துறவாடலிலும் பரப்பும் கடமையை சிறப்பாகச் செய்தார்.
- விடுதலை நாளேடு, 26.11.19
செவ்வாய், 13 நவம்பர், 2018
மலேசியா பள்ளிகளில் பெரியார் நூல்கள் இடம்பெறுகின்றன!
மலேசியா, செரம்பான் நகரத்தில் டான்சிறீ மாணிக்கவாசகம் சாலையில் அமைந்துள்ள லோபாக் தமிழ்ப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்களுக்கு தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்பாக திராவிட இயக்க பணியாளரும், தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை நிறைமலி மேனகை, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.கிருட்டிணன் மற்றும் பல ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- விடுதலை நாளேடு, 13.11.18
வியாழன், 25 அக்டோபர், 2018
மலேசியா ரவுப் நகர் அரசு தமிழ்ப்பள்ளியில் பெரியார் நூலகம் அமைந்தது
பாரம்பரிய மலாய் இசையுடன் நடனமும் இடம்பெற்றது
மலேசியா. பகாங் மாநிலம், ரவுப் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு தமிழ்ப் பள்ளியில் சுமார் இருநூறு மாணவர்கள் தங்களின் தொடக்க நிலை கல்வியை பயில்கிறார்கள். இருபது ஆசிரியர்கள் பணிபுரி கின்றனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 22.10.2018 அன்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பழங்களும் சுவை நீரும் வழங்கப்பட்டன. பெரியார் பிஞ்சு இதழ்களும் பாரதிதாசன் நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வழங்கப் பட்டன.
பள்ளியின் மேல் மாடியில் பெரியார் நூலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கி. தமிழ்வாணன் அனைவரையும் வரவேற்று விழாவிற்கு தலைமை தாங்கினார்.
நூலகத்தை திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். பெரியாரின் மலாயா வருகைகளைபற்றியும், அதனால் ஏற்பட்ட தமிழர் எழுச்சி பற்றியும் கூறினார். பெரியார் வலியுறுத்திய கல்வி, சேமிப்பு, சிக்கனம் பற்றி மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார். இந்த நூலகம் பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடை யார், கு.க.இராமன், கு.கிருட்டிணன் மற்றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- விடுதலை நாளேடு, 24.10.18
வெள்ளி, 19 அக்டோபர், 2018
தமிழ்மணியின் 70ஆம் ஆண்டு விழாவையொட்டி அன்பளிப்பு
பெரியார் உலகத்திற்கு - மலேசிய தன்மான இயக்க நிறுவனர் பெரு. அ.தமிழ்மணி அவர்களுக்காக, கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு (தமிழ்மணியின் 70ஆம் ஆண்டு விழாவையொட்டி) 1 லட்ச ரூபாய் அன்பளிப்பாக திராவிடர் கழகத் தலைவரிடம் வழங்கினார். உடன்: மலேசிய திராவிடர் கழகப் பிரமுகர், பெரியார் பெருந்தொண்டர் தோழர்
எப். காந்தராஜ், சிறீதரன், வா.மு.சே. திருவள்ளுவர் ஆகியோர் உள்ளனர். (சென்னை & 16.10.2018)
- விடுதலை நாளேடு, 18.10.18
வியாழன், 18 அக்டோபர், 2018
மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் பெரு. அ.தமிழ்மணி தமிழர் தலைவருடன் சந்திப்பு!
மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், முதுபெரும் பெரியார் பற்றாளருமான மானமிகு
பெரு. அ.தமிழ்மணி அவர்களும், மலேசிய திராவிடர் கழகப் பிரமுகரும், பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு எப்.காந்தராஜ் அவர்களும் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சென்னை பெரியார் திடலில் 11.10.2018 அன்று பகல் 12 மணியளவில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். மலேசியாவில் உள்ள நிலைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர்.உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர்
சு. அறிவுக்கரசு, மஞ்சை வசந்தன், சொற்பொழிவாளர் அன்பழகன்.
- விடுதலை நாளேடு, 12.10.18
வியாழன், 4 அக்டோபர், 2018
மலேசியா அரசு தமிழ்ப் பள்ளியில் 140ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா
கிள்ளான், அக்.2 பெரியார் பெரிதும் விரும்பிய மலேசியா லெட்சுமி தோட்டத்தில், பிறந்தநாள் விழா நினைவு மய்யம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மலேசியா, கிள்ளான் நகருக்கு அருகில் லெட்சுமி தோட்டம் என்று அழைக்கபட்ட புக்கிட் ராஜா நகரில் அமைந்துள்ள அரசு தமிழ்ப்பள்ளியில் பெரியார் பிறந்தநாள் வெகு சிறப்பாக, பரிசுகள், நூல்கள், பெரியார் பிஞ்சு இதழ்கள், இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பெரியார் தமிழர்க்காக மட்டுமின்றி உலக மனித குலத்திற்கே வழிகாட்டிய சிந்தனையாளர் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.மல்லிகா தமது உரையில் கூறினார். திராவிட இயக்க பணியாளரும் தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். பெரியார் 1954இல் இங்குள்ள மக்களை சந்தித்து மன மகிழ்வோடு உரையாடி அறிவுரை வழங்கியதை நினைவு படுத்தினார். வரலாறை பதிவு செய்ய பெரியார் மய்யம் விரைவில் அமைக்கப்படும், பள்ளியின் நிர்வாகம் இந்த வேண்டுகோளை ஏற்றுகொண்டுள்ளது என அறிவித்தார். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெரியார் பெருந்தொண்டர்கள், கோ.ஆவுடையார், கு.கா.இராமன், கு.கிருட்டிணன் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 2.10.18
வெள்ளி, 28 செப்டம்பர், 2018
மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தமிழர்களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் பெரியார்
மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
கோலாலம்பூர், செப். 23- மலேசிய திராவிடர் கழகம், தலைமைக் கழக ஏற்பாட்டில் பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழா கடந்த 17.9.-2018ஆம் நாளன்று பிற்பகல் 2.00 மணிக்கு, மலேசிய தலைநகர், கோலாலம்பூர், பிரிக்பீல்டு, பார் வையற்றோர் சங்க மண்டபத்தில், கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கலைஞருக்கு இரங்கல்
தொடக்க நிகழ்வாக அண்மையில் மறைந்த முத்தமிழ் மூதறிஞர் செம்மொழிவேந்தன் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ச.த.அண்ணாமலை
இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் கழகம் கடந்த 72 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக தந்தை பெரியார் மேற்கொண்ட பணிகளையும், கொள்கை களையும் மலேசிய தமிழர்கள் மத்தியில் பேசியும், பரப்புரை செய்துவருவதையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள மாநி லக் கிளைகள், தங்கள் கிளைகளின் வழி சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று தமதுரையில் கேட்டுக் கொண்டார்.
டத்தோ எம்.இராஜன்
சிறப்புரையாற்றிய 'தமிழ்மலர்' நாளிதழின் தலை மையாசிரியர் டத்தோ எம்.இராஜன் அவர்கள், தமிழர் களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் தந்தைபெரியார் என்று புகழுரைத்தார். தந்தை பெரியா ரின் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதற்கு மலேசிய திராவிடர் கழகத்திற்கு தமது நாளிதழில் ஒருபக்கத்தை ஒதுக்கி தருவதாக வாக்குறுதியளித்தார்.
திருமாவளவன்
மலேசிய தமிழ்நெறிக் கழகத்தின், தேசியத் தலைவர் திருமாவளவன் தமதுரையில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாருக்கும், தந்தை பெரியாருக்கும் ஏற்பட்ட நட்புறவை சுவைப் பட கூறினார். தந்தை பெரியாரை குறை கூறுபவர்கள் அவரை முழுமையாக அறியாதவர்கள் என்றும், தன் தமிழனம் தலை நிமிர்ந்து வாழவகை செய்த ஒரே தலைவர் தந்தைபெரியார் என்றும் பெருமைபட கூறினார்.
து.காமாட்சி
சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு து.காமாட்சி அவர்கள் பெண்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்ட தந்தைபெரியாரை பெண்ணினம் போற்றி புகழ வேண்டும் என்று தமதுரையை நிறைவு செய்தார்.
கவிதை - பேச்சுப் போட்டி
இப்பெரியார் விழாவில் ஆரம்ப மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்களுடன், மழலையர் பள்ளி மாணவர்களின் சிறப்புபடைப்புகளாக கவிதைகள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டிகள், பாடல்கள் என ஒரு கலவையாக தந்தை பெரியார் 140ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய உதவித் தலைவர் செ.குணாளன், பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், துணைப் பொதுச் செயலாளர் கா.நா.கோபால், தேசியப் பொருளாளர் சா.பாரதி, தேசிய இளைஞர் தலைவர் பா.சோம சம்பந்தனார், தேசிய மகளிர் தலைவி சு.குமுதா, செயலாளனி க.சாந்தி, கழக மத்திய செயலவை உறுப் பினர்கள், பொறுப்பாளர்கள், கிளை உறுப்பினர்கள், பெரியார் பற்றாளர்களுடன், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.
மலேசிய தலைநகர், காப்பார், புக்கிட் பெருந்தோங் நகர்களில் பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள்
கோலாலம்பூர், செப். 23- மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள், நூல்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டன.
காப்பார் நகரில் உள்ள மெதடிசு தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார் மற்றும் டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
புக்கிட் பெருந்தோங் நகரத் தமிழ்ப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள் வழங் கப்பட்டன.
திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி விளக்கவுரை நிகழ்த்தினார்.
பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையன், கு.க.இராமன், இரா.பெரியசாமி, அன்பு இதயன் மற்றும் கழகத் தோழர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- விடுதலை நாளேடு, 23.9.18
திங்கள், 3 செப்டம்பர், 2018
மலேசியாவில் அய்ந்து அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் திறப்பு!
மலேசியாவில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டுஅய்ந்து அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் திறப்பு!
மலேசியா, செப்.3 செலங்கூர் மாநிலம், காப்பர் அருகில் அமைந்துள்ள ஜாலான் ஆக்கோப் தோட்ட அரசு தமிழ்பள்ளியில் பெரியார் நூலகம் அமைக்கப்பட்டது. சுமார் இருநூறு மாணவர்கள் இந்த பள்ளியில் பயில்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் திருமதி சாந்த குமாரி முன்னிலை வகித்தார். திராவிட இயக்க பணியாளரும், விவசாயிகள் நிர்வாகிகள் சங்க தலைவருமான மானமிகு மு.கோவிந்தசாமி நூலகத்தை திறந்து வைத்து உரைநிகழ்த்தினார்.
இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் அய்ந்து ஊர்களில் உள்ள அரசு தமிழ்ப் பள்ளிகளில் பெரியார் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார். அந்நூலகங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், இரா.பெரியசாமி, கு.க. இராமன், பெற்றோர்கள், ஆசிரியைகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
- விடுதலை நாளேடு, 3.9.18