சனி, 15 ஆகஸ்ட், 2015

இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)


வீ. குமரேசன்
உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத்திற்கு மட்டுமே உரிய சிறப்பான மாண்பு பகுத்தறிவு. இயல்பாக அமையப்பெற்ற பகுத் தறிவுப் பண்பினை எத்தனை மனி தர்கள் பயன்படுத்தி பாங்குடன் வாழ்கின்றனர், எனும் கேள்விக்கு விடையாக அமைவது மிகச்சொற்பமே.
மிகவும் குறைவான இந்த மனிதர்களின் பகுத்தறிவுச் செயல்பாட்டால் மனித சமுதாயம்  காலங்கள் பலவற்றைக் கடந்து இன்று முன்னேற்றம் மற்றும் நாகரிக நிலையினை எட்டியுள்ளது. அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிப் படை ஆதாரமாக அமைவது பகுத் தறிவே. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் பலனை நுகருகின்ற மக்களில் மிகப்பெரும்பாலானோர் வெறும் பொருளற்ற நம்பிக்கையின் பால் ஈடுபாடு உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளை அறிவார்ந்த வகை யில் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து அவற்றின் உண்மை நிலையினை அறிந்து  உணர்ந்து கொள்ள பொரு ளற்ற நம்பிக்கையாளர்கள் முன்வருவ தில்லை. உண்மை நிலையினை உணரும் ஒரு சிலரும் அவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்திட துணிவு கொள்வதில்லை. இத்தகைய மனித இன நிலைப்பாடு ஆண்டாண்டு காலமாக நிலவி வருகிறது.
தாம் சரி என நினைத்ததை செயல் படுத்த முன்வராதவர் ஒரு வகை அடிமை நிலையாளர்களே!The man who does not do his own thinking is a slave, and is a traitor to himself and to his fellow-men) என அறைகூவல் விடுத்து மக்களிடம் மதம், கடவுள் பற்றிய ஒரு விழிப்புணர்வினை உரு வாக்கியவர்  பகுத்தறிவு மாமேதை இராபர்ட் கிரீன் இங்சர்சால் ஆவார். அறிவியல் உலகில் பல்வேறு முன் னேற்ற நிலைகளை அடைந்திருந் தாலும், மதம் சார்ந்த வாழ்வியல் முறை களால் புரையோடிப்போன அமெரிக்க நாட்டு மக்களிடையே பகுத்தறிவுப் புத்தொளி பாய்ச்சிய  அறிஞர் இங்கர் சால். 19ஆம் நூற்றாண்டில் 66 ஆண்டு காலம்  வாழ்ந்து தனது அறிவார்ந்த சிந்தனை மற்றும் பரப்புரை மூலம் மாந்த இனம் முழுமைக்கும் நிலையான பகுத்தறிவுக் கருத்து விளக்கச் சுரங் கத்தை கொடையாக வழங்கிச் சென்ற வள்ளல் இங்கர்சால் ஆவார். மதப்பரப் புரைகளால் மயங்கி, முனைப்புடன் செயல்படும் முனை மழுங்கிய மக்களி டம் தனது பகுத்தறிவுப் பரப்புரை பணிகள் மூலம் விழித் தெழச் செய்து, வாழ்வில் அவர்களை அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்த விடிவெள்ளி இங்கர்சால்.
பகுத்தறிவு மேதை வளர்ந்த குடும்பச் சூழல்
அமெரிக்க அய்க்கிய நாட்டில் நியுயார்க் மாநிலம் டிரஸ்டன் நகரில் 1833-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 11 ஆம் நாள் இராபர்ட் கிரீன் இங்கர் சால் பிறந்தார். அவருடைய தந்தையார் ஜான் இங்கர்சால், அடிப்படையில் கருப்பின அடிமை ஒழிப்புக் கோட் பாளர். கிறிஸ்தவ மத போதகராக தமது வாழ்க்கையின் பெரும் பகுதியினைக் கழித்தவர். கட்டுப்பாடு மிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், மத நம்பிக்கைகள் இராபர்ட் இங்கர்சாலி டம் எதிர்மறை விளைவையே ஏற்படுத் தியது. பைபிளை படிக்கச் சொல்லி தந்தை நிர்ப்பந்தப்படுத்தியதால் மகன் இங்கர்சாலுக்கு பைபிளை ஆழ்ந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது. மதப்புத்த கத்தை ஆழ்ந்து படித்ததன் விளைவாக இங்கர்சால் மனதில் அய்யப்பாடுகள் மற்றும்  வினாக்கள், விமர்சனங்கள் என தொடர்ந்து எழுந்தன.
மகனின் போக்கினைப் பற்றி அக்கறைப்பட்ட தந்தை இங்கர்சால், மகன் எழுப்பிய வினாக்களுக்கு பின்னால் உள்ள நியாய நெறியினை உணர்ந்தவராகவே இருந் தார். அவரால் மகனுக்கு உரிய விளக்கம் அளித்திட முடியவில்லை. சிறுகச் சிறுக தந்தை வழி மகன் செல்லும் தடம் மாறி மகன் வழியினை தந்தை ஏற்றிடும் சூழல் உருவானது. மத போதக ராக இருந்த தந்தை இங்கர்சாலின் இறுதிக் கட்டத்தில், இறக்கும் தறுவாயில் மதத் தொடர்பான குறிப்புகளை கேட்பதை விடுத்து, பிளாட்டோ எழுதிய சாக்ரடீஸின் மரண வாக்குமூலத்தினைப் படிக்கச் சொல்லிக் கேட்டாராம். இராபர்ட் கிரீன் இங்கர்சால் தமது குடும்பத்தில், தம்மை ஆளாக்கிய தந்தையிடமே மனமாறுதலை, உண்மை நிலை உணரும் நிலைமைகளை உரு வாக்கிய அறிஞராக விளங்கினார்.
வழக்குரைஞர் தொழிலில் இங்கர்சாலின் வாதிடும் வல்லமை
பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்த இங்கர்சால் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராக இருந்து சட்டவியலைக் கற்றார். 1854 ஆம் ஆண்டில் தம்மை வழக் குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். வழக்குரைஞர் தொழிலில் மிகவும் சிறப் பாகவே சேவை ஆற்றினார். நீதிமன்றத்தில், வழக்கு சார்ந்த  கூற்று களை முறைப்படுத்தல் மற்றும் அவரது வாதிடும் திறன்கண்டு உடன் பணிபுரிந்த வழக்குரைஞர்களால் பாராட்டப்பட்டார்.
அவரது வாதிடும் வல்லமைக்குச் சான்றாக ஒரு வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதாடி அவருக்கு நீதிமன் றத்தில் விடுதலை பெற்றுக் கொடுத்தார் இங்கர்சால். தீர்ப்பிற்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் இங்கர்சாலிடம் வந்து அவரது வாதிட்ட வழிமுறைகள், அடுக்கி வைத்த ஆதாரங்கள் - இவைகளைப் பார்த்து தான் குற்றம் புரியவில்லையே என்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினாராம். வழக்குரைஞர் தொழிலில் பெற்ற சிறப்பு களால் இல்லியனாய் மாநில அட்டர்னி ஜெனரல் பதவி அவரைத் தேடி வந்தது.
பார்வையாளர்கள் முன் இங்கர்சால்  உரையாற்றுவதுபோல் கிடைத்துள்ள ஒரே படம் (மே 30, 1894 - நியூயார்க்)
இங்கர்சாலின் அரசியல் ஈடுபாடு
அமெரிக்க நாட்டுக் குடியரசுக் கட்சி யின் முக்கிய உறுப்பினராக இங்கர்சால் விளங்கினார். 1876-ஆம் ஆண்டு அமெ ரிக்க குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட குடியரசுக் கட்சியின் வேட் பாளர் தேர்வில் ஜேம்ஸ் ஜி.பி.ஜேயனை ஆதரித்து இங்கர்சால் ஆற்றிய உரை(Plumed Knight), அரசியல் உரைவீச்சுக்கு முன்மாதிரியாக இன்றும் திகழ்கிறது. இல்லியனாய் மாநில ஆளுநர் (Governer)பதவிக்கு இங்கர்சால் போட்டியிட்ட பொழுது அவரது கட்சி மற்றும் ஆதர வாளர்கள் இங்கர்சால் கடைப்பிடித்த கடவுள் மறுப்பு மற்றும் பைபிள் பற்றிய அவரது கருத்தை மாற்றிக் கொள்ளக் கேட்டுக் கொண்டபொழுது அரசியல் பதவிகளுக்காக வெற்றி வாய்ப்பினைப் பெற தமது பகுத்தறிவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது என உறுதி யாகக் கூறிவிட்டனர்.
மத நம்பிக்கை களைப் போற்றி மகிழும் வாக்கு வங்கி யினருக்கு உவப்பாக, உள்ளத்திற்கு இத மாக இருந்தால்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை எட்ட முடியும் எனும் உண்மை நிலையினை உணர்ந்திருந்தாலும், இங்கர் சால் தமது கடவுள் நம்பிக்கை அற்ற கொள்கையில் வெளிப்படையாக இருந் தார். தேர்தலில் தோல்வியினைத் தழு வினார். தேர்தல் வெற்றியினை விட தமது கடவுள் மறுப்பு கொள்கைப் பிடிப்பினை வெளிப்படையாகப் பிரகடனப்படுத் தினார், மத ஆட்சிப் பீடத்தினை ஆட்டம் காணச் செய்த இங்கர்சால்
மத ஆளுமையினை புரட்டிப் போட்ட இங்கர்சாலின் பகுத்தறிவுப் பரப்புரை
இங்கர்சாலின் பகுத்தறிவுக் கருத்துகள் பொதுப்படையானவை. கடவுள் கவலை யிலர் (agnostic) என தம்மை அடை யாளப்படுத்திக் கொண்டாலும் கடவுள் பற்றிய கருத்துகளை ஆழமாக விமர்சனம் செய்து கடவுள் மறுப்பு  ஆதாரத்திற்கு இங்கர்சால் ஆக்கம் கூட்டியுள்ளார். கடவுள் என்பது அறியாமையின் விளைவே.(God is the out come of ignorance).
வாழ்வில் முடிந்தவரை ஒருவர் முயல்கிறார். அடுத்தக் கட்டத் திற்கு செல்ல இயலாத தன் முனைப்பு, முயற்சியற்ற நிலையில் - அதனை கட வுளுக்கு விட்டுவிடுகிறார். எங்கு அறிய முடியாமல் ஒருவகையான இருட்டுத் தன்மை நிலவுகிறதோ அந்த நிலையில் கடவுளுக்கு இடம் அளிக்கப்பட்டு விடு கிறது.  கடவுள் என்பது அறியத் துடிக்கும் அக்கறை இல்லாத மனிதன் வைத்த முற்றுபுள்ளியே. கடவுள் என்பது ஆய்வு நிலையில் விளைந்த முற்றுப்புள்ளி அல்ல.
அறியாமையினால் உருவாக்கப்பட்ட முற்றுப்புள்ளி. இந்த கடவுள் பற்றிய மனிதனின் முற்றுப்புள்ளியினை கேள் விக்குறியாக்கியவர் இங்கர்சால்-. கடவுள் ஒரு ஊகமே (God is a guess) .என  (பொய்) நம்பிக்கையின்மீது சம்மட்டியால் ஓங்கி அடி கொடுத்தார் இங்கர்சால். மருத்துவ உலகின் ஒரே எதிரி மதம் என ஆணித்தரமாக பரப்புரை செய்தார்.
மனிதர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கடவுளை நம்புகின்றனர். அதற்காகக் கடவுளுக்கு பிரார்த்தனை செய்கின்றனர். ஊறுபட்ட உடலைக் குணப்படுத்த பிரார்த் தனை போதும் என நினைக்கின்றனர்.
பிரார்த்தனை என்பது மருந்து அல்ல (Prayer is not medicine). ஊறுபட்ட உடலை குணப்படுத்த மருத்துவர்கள் முனைந்து மனிதர்கள் காப்பாற்றப்படும் பொழுது, பிரார்த்தனையினை வலி யுறுத்தும், வழிநடத்தும் மத குருமார் களுக்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது.
பிரார்த்தனையின் பய னில்லா நிலை யினை மருத்துவர்கள் நிலைநிறுத்தும் பொழுது, மதகுரு மார்கள் உடல்நலம் பற்றிய அக் கறையினை  விட்டுவிட்டு, ஆன்மா பேணுதலுக்கு தாவி விடுகின்றனர் என அமெரிக்க நாட்டில் நிலவிய மதக் கருத்துகளை, - மத குருமார் களின் நடவடிக்கைகளை பொதுக்கருத்து மேடை யில் இங்கர்சால் போட்டு உடைத்தார். மனித சமுதாயத்தில் நிலவிடும் ஆணாதிக்க நிலையினையும் கடவுள் நம்பிக்கையினையும் பற்றி பரப்புரை செய்தார்.
ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை அடிமைப்படுத்துபவர் களாக இருந்து வந்துள்ளனர். இதற்கு கடவுளும் துணைபோகிறது. பெரும் பாலான கடவுள் படைப்புகள் ஆண் களாகவே படைக்கப்பட்டுள்ளது இதற்கு ஆதாரம் கட்டுகிறது. சமு தாயத்தில்  எண்ணிக்கை அளவில் சரிநிகராக உள்ள பெண்களை அடிமை நிலையில் தொடர்ந்து வைத்துக் கொள்ள கடவுள் நம்பிக்கை, மத நடவடிக்கைகள் துணை யாக உள்ளன.
பெரும்பாலான கட வுளரை ஆண் களாக படைத்துள்ளது பெண்களை தொடர்ந்து ஆண்களுக்கு அடங்கி உள்ளவர்களாக வைத்துக் கொள் ளுவதற்கான ஒரு ஏற்பாடே தவிர வேறல்ல என்றார் இங்கர்சால். பெண் விடுதலைப் போராளியாகவும், இங்கர் சால் விளங்கினார். இங்கர்சால் பகுத்தறிவு அறிஞராக மட்டுமல்லாமல் பகுத்தறிவுக் கருத்துப் பரப்புரையாளராகவும் விளங்கினார். தமது வாதத்திறமை மிக்க பேச்சுவல்ல மையால் மத நம்பிக்கையாளர்களையும் ஈர்த்ததார்.
அவரது கூட்டங்களுக்கு வரும் மக்கள் வெள்ளத்தால் மத குரு மார்களுக்கு பெரும் அச்சமூட்டுபவ ராக இங்கர்சால் இருந்தார். கடவுள் நம்பிக்கையாளர்களும் பெருந் திரளாகக் கட்டணம் கொடுத்து இங்கர் சாலின் உரைவீச்சினைக் கேட்கக் காத்திருந்தனர்.
கருத்து வளத்துடன், நடைமுறை முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, அதனை தனது தனித்துவ வாதத்தன்மையால் வலியுறுத்தினார். தனது பரப்புரையில் எள்ளல், நையாண்டி செய்து கருத்துகளை வெளியிடும் அணுகுமுறையால் மக் களை ஈர்த்தார் இங்கர்சால்.
ஒருமுறை ஞானஸ்நானம் பற்றிய உங்களது கருத்து என்ன? என்று இங்கர்சாலிடம் கேட்டபொழுது பளிச்சென ஞானஸ் நானத்தை விட சோப்புஸ்நானம் சிறந்தது எனக்கூறி தமது கருத்தினை கேலி அணுகுமுறையாலும் மக்களிடம் கொண்டு சென்றார் இங்கர்சால். அறிவியல் உலகில்  அக்கறை போக்கு கொண்டிருந்தாலும், மதக்கருத் துகளில் உறங்கிக்கிடந்த அமெரிக்க நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி சிந்திக்க வைத்த சிறப்பாளர் இங்கர்சால் ஆவார்.
மத நம்பிக்கைகளை புரட்டிப் போட்டு மதபீடங்களுக்கு மாபெரும் சவாலாகவே விளங்கினார் மனிதநேய மாண்பாளர் இங்கர்சால்.
(தொடரும்)

- வீ.குமரேசன்


நேற்றையத் தொடர்ச்சி....
கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, சுதந் திரச் சிந்தனை, மனிதநேயம் பற்றிய பரந்துபட்ட உரைகள் மற்றும் தமது எழுத்துப் படைப்புகளால் ஒரு மாபெரும் கருத்துப்புரட்சி செய்த இங்கர்சாலின் பங்களிப்புகள் அமெரிக்க நாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல. மத ஆதிக்கம் நிறைந்த உலகின் அனைத்துப் பகுதிகளி லும், பரப்புதலுக்கு உரியவை. மனித நேயம் தழைத்திட, பேணுதலுக்கு பயன் படுபவை. இந்த தொலைநோக்குப் பார் வையுடன் இங்கர்சாலின் கருத்துகளை தந்தை பெரியார் தமிழ் நாட்டில் பரப்புரைக்கு கொண்டு வந்தார். 1933 ஆம் ஆண்டில் ஈரோடு - பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பாக மதம் என்றால் என்ன?, 1934 ஆம் ஆண் டில் கடவுள் - இங்கர்சாலின் சொற் பொழிவுகள் மற்றும்  நான் சம்சய வாதி ஆனதேன்? - இங்கர்சாலின் சொற்பொழிவு, 1935 ஆம் ஆண்டில் இங்கர்சால் எழுதிய வால்டையரின் சரிதம், குடிஅரசு பதிப்பகத்தார் சார் பாக 1936 ஆம் ஆண்டில் இங்கர்சால் பொன் மொழிகள் முதற்பாகம் - சத்தியாக்கிரகம் அல்லது உண்மை யுணர்ச்சி, இரண்டாம் பாகம்  ஆண், பெண், சிசு, சுதந்திரம், பகுத்தறிவு வெளியீடாக பேய், பூதம், பிசாசு - இங்கர்சால், பகுத்தறிவுக் கழக வெளி யீடாக இரண்டு வழிகள் - இராபர்ட் ஜி. இங்கர்சால் ஆகிய படைப்புகளை தந்தை பெரியார்  தமிழில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார்.
இங்கர்சாலின் படைப்புகளை  வெறும் அடையாள வெளியீடாக அல்லாமல் இங்கர்சாலின் பகுத்தறிவுக் கருத்துகள், சுதந்திர சிந்தனைகள் மக் களிடம் சென்றடைய வேண்டும், நூல் களை மக்கள் வாங்கிப் படித்திட வேண் டும் என்னும் நோக்கத்தில் சிறு சிறு புத் தகங்களாக, குறைந்த விலையில் பதிப் பித்து வெளியிட்டார். மேலும்  பிரச்சார பயணத்தின்போது தாம்பேசிய கூட்டங் களில், அந்த வெளியீடுகளை மக்களி டம் கொண்டு சேர்ப்பதில் முனைப் பாக இருந்தார். தமது பிரச்சாரத்தின் பொழுது பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைத் திட வேண்டுமென இயக்கத் தோழர்கள் கேட்டுக்கொண்ட பொழுது ஆண், பெண் என பேதப்படுத்தாது இருபால் குழந்தைகளுக்கும் இங்கர்சால் எனப் பெயர் சூட்டினார். பகுத்தறிவுப் பண்பு மானிடரின் மாபெரும் சொத்து. பகுத் தறிவுக் கருத்துகள் உலகம் முழுவதும் பரவிட வேண்டும் என திட்டமிட்டு, அது தொடர்ந்திடும் செயல்பாடாக இருந்திட வேண்டும் என பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் உலகளா விய சிந்தனையுடன் இயக்கம் கண்டு மானிடம்  மேம்பட தமிழில் இங்கர்சால் படைப்புகளை அறிமுகம் செய்ததும் அடங்கும்.
பெரியார் இயக்கம் நடத்திடும் இங்கர்சாலின் 183 ஆம் பிறந்த நாள் விழா
இங்கர்சால் எதிர்த்திட்ட மதக்கருத் துகள் உலகம் முழுவதும் பரவி பெரும் பான்மையாக நிலவுகின்றன. அந்த மதக் கருத்துகளை மாய்த்திட இங்கர்சாலின் பரப்புரைகள் பரவலாக்கப்பட வேண் டும். அமெரிக்காவில் இங்கர்சால் நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஜெஃப் இங்கர்சால் (Jeff Ingersoll) செயல்பட்டு வருகிறார். இவர் இராபர்ட் கிரீன் இங்கர் சாலின் ஏழாம் தலைமுறை கொள்ளுப் பேரன்(seventh cousin)
இங்கர்சாலின் பிறந்தநாளை கொண் டாட வேண்டி பல்வேறு நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்களுக்கு, மனித நேய அமைப்பினருக்கு பொதுப்படை யான வேண்டுகோளினை ஜெஃப் இங்கர்சால் விடுத்திருந்தார். இங்கர் சாலின் படைப்புகளை பல ஆண்டு களாக பரப்புரை செய்து வரும் பெரியார் இயக்கம் இங்கர்சாலின் 183 ஆம் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. பகுத்தறிவாளர் கழகம் அப்பணியினை மேற்கொண்டுள்ளது.
பகுத்தறிவு அறிஞர் இங்கர்சாலின் பிறந்த நாளில் இதுவரை பெரியார்தம் இயக்கம் வெளி யீடுகளாகக் கொண்டு வந்த இங்கர் சாலின் படைப்புகளோடு அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் எனும் தொகுப்பு நூலாக வெளியிடுகிறது. களஞ்சியத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்து, அறிவார்ந்த அணிந்துரையுடன் வழங்கியுள்ளார். பெரியார் இயக்கத் தோழர்களுக்கு இங் கர்சாலின் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அரும்பணி காத்திருக்கிறது. இங்கர் சாலின் பிறந்தநாள் விழா, இங்கர்சால் பகுத்தறிவு களஞ்சிய வெளியீடு  என  இங்கர்சாலின் படைப்புகளைப் பரப்பு வதில்  தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கமும் செய்திடும் பணிகள் முன் மாதிரியானவை.
உலகப் பகுத்தறிவாளர்களை, மனித நேயச் சிந்தனையாளர்களை- அவர்தம் கருத்துகளைப் பரப்புவதில் தந்தை பெரியார் காலத்தில் இருந்து  தமிழர் தலைவர் வழிநடத்தும் தற்காலம் வரை எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் பரப்புரைச் செயல்பாடுகள் தனித்துவம் கொண்டவை. இந்தப் பணிகள் பிற பகுத்தறிவு அமைப்பினர்  முழுமை யாகச் செய்திடாத செயல்பாடாகவே உள்ளது. அந்த வகையில் உலகப் பகுத் தறிவாளர்களை நாத்திக மனிதநேயச் சிந்தனையாளர்களை போற்றிப் பேணு வதில் ஒரு புரவலகம் (Patron House) ஆக திராவிடர் கழகம் விளங்கிவரு கிறது. அடக்கப்பட்ட ஒரு இனத்தின் பெயரைக் கொண்டுள்ள தந்தை பெரியார்தம் இயக்கம் உலகின் ஒரு பகுதி மக்களின் மேம்பாடு கருதி செயல் படும் அமைப்பு அல்ல; ஒடுக்குமுறை கள் உலகின் எந்த பகுதியிலும் மதம், கடவுள் பெயரால் அடக்கு முறை நிலவினாலும் அதனை எதிர்ப்பதில் - அத்தகைய எதிர்ப்புப் பணியினைக் கடந்த காலங்களில் செய்த , தொடர்ந்து செய்துவரும் பெரும் மக்களை போற் றிப் பாராட்டிப் பரப்புரை செய்வதில்-
அத்தகைய அமைப்புகளுடன் ஒருங் கிணைந்து செயல்படுவதில் எடுத்துக் காட்டாக ஏற்றத்துடன் திகழ்ந்துவரு கிறது. தந்தை பெரியாரது சிந்தனைகள் மனிதநேயம் போற்றிடும் உலகளாவிய சிந்தனைகளாகும். தந்தை பெரியார் மனிதநேயம் தழைத்து பூத்துக்குலுங்கிட பாடுபட்ட உலகத் தலைவராவார். அவரது இயக்கம் மானிடத்தை பேணிப் பாதுகாக்கும், மனிதநேய இயக்கமாகும். உலகத் தலைவர் தந்தை பெரியார்தம் இயக்கம்  பகுத்தறிவு உலகின் மாமேதை இங்கர்சாலின் பிறந்தநாளை அவர்தம் பிறந்தநாளான ஆகஸ்டு 11ம் நாள் சென்னை- பெரியார்திடலில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறது. இந்தவிழா வில் வெளியிடப்படும் அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் மற்றும் கடந்த காலங்களில் இங்கர்சாலின் கருத்துக்களைப் பரப்பு வதில் பெரியார் இயக்கம் மேற்கொண்ட, தற்சமயம் மேற்கொண்டுவரும் பணிகள் பற்றிய குறிப்பும் அமெரிக்க நாட்டில் செயல்பட்டு வரும் இங்கர்சால் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ஜெஃப் இங்கர்சாலுக்கு அனுப்பப்பட்டு இங்கர் சால் அறக்கட்டளையுடன் ஒருங் கிணைந்து செயல்படுவதற்கு வேண்டு கோளும் விடுக்கப்பட்டுள்ளது. வாழ்க அறிவுலக மேதை இங்கர்சால்! பெரு கிடுக இங்கர்சாலின் பகுத்தறிவுக் கருத்து கள்! பெரியார் இயக்கத்தின் புத்தாக்கப் பரப்புரைகள் பரவிடுக!
-விடுதலை,11,12.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக