திங்கள், 24 ஆகஸ்ட், 2015

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.
************
மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.
************
அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.
************
முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?
மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதிஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.
************
எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!
பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.
நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடைய
தாகிறது.  மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மை யானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங் களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்க படுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா
-விடுதலை,3.10.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக