திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பென்சில்வேனியாவில் 3 நாள்கள் நாத்திகர் மாநாடு

பென்சில்வேனியா, ஹாரிஸ்பர்க்கில் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் 3 நாள்கள் மாநாடு

நாத்திகர்கள், மனிதநேயர் கள் மாநாடு பென்சில்வேனி யாவில் ஹாரிஸ்பர்க்கில் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி முடிய பெஸ்ட் வெஸ் டர்ன் பிரிமியர் பகுதியில் உள்ள தி சென்ட்ரல் விடுதி யிலும், 800 ஈ பார்க் டிரைவ் கான்பெரன்ஸ் சென்டரிலும் நடைபெறுகிறது.
கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் அல்லது கடவுள் இருக்கிறதா என்று அய்யப்பாட்டில் உள்ளவர்கள்  ஆகியோர் கூடுகின்றனர். அதே நேரத் தில் கடந்த சில ஆண்டுகளில், நாடுமுழுவதும் நாத்திகர்கள், கடவுள் கவலை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
லாண்ட்காஸ்டர் நகரில் மட்டும் இரண்டு பிரிவினராக நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள், கடவுள் நம்பிக்கைகளில் அய்யப்படுபவர்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். நான்கு ஆண்டு களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புடன் மண்டல மத்திய பென் சில்வேனியா குழு இணைந்து மாதாந் திர சந்திப்பு லாண்ட்காஸ்டரில் நடைபெற்றுவருகிறது.
அந்த சந்திப்புகளைத் தொடர்ந்து மதத் தொடர்பற்றவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பியூ புள்ளி விவரத்தின்படி, 2007ஆம் ஆண்டில்   16.1 விழுக்காடாக இருந்தவர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 22.8 விழுக்காடாக அதிகரித்தது.
இந்த மாற்றங்கள் நடைபெற்று வரும் அதேநேரத்தில், இரு குழுக் களில் மூத்த குழுவாக உள்ள லாண்ட்காஸ்டர் சுதந்திர சிந்தனைச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஸ்காட் ரொஹோடிஸ் மற்றும் பென்சில்வேனியா கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் அமைப்பின் தலைவர் பிரெயின் ஃபீல்ட்ஸ் ஏற்பாட்டின்படி, ஹாரிஸ்பர்க் நகரில் 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக பென்சில் வேனியாவில் கடவுள் நம்பிக்கையற்ற வர்களின் கூட்டம் நடைபெற்றது.
ஹாரிஸ்பர்க்கில் மாநாடு
ஹாரிஸ்பர்க் மாநில அளவிலான மாநாடுகள் 2013ஆம் ஆண்டு பிலடெல்பியாவிலும், 2014ஆம் ஆண்டு பிட்ஸ்பர்க்கிலும் நடை பெற்றது. 2015ஆம் ஆண்டில் மாநில நாத்திகர்கள், மனிதநேயர்கள் மாநாடு பென்சில்வேனியாவில் ஹாரிஸ்பர்க் கில் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி முடிய பெஸ்ட் வெஸ்டர்ன் பிரிமியர் பகுதியில் உள்ள தி சென்ட்ரல் விடுதி யிலும், 800 ஈ பார்க் டிரைவ் கான் பெரன்ஸ் சென்டரிலும் நடைபெறு கிறது.
மூன்று நாள்கள் நடைபெறுகின்ற மாநாட்டில் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் பேசுகிறார்கள். இசை, நகைச்சுவை மற்றும் கவிதை உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறு கின்றன. லாண்ட்காஸ்டர் நகரில் உருவாகியுள்ள புதிய குழுவான ஏஎஸ்கே   (நாத்திகம், சமய நம்பிக் கையில்லாத அறிவுசார் அமைப்பு) பகுத்தறிவான எதிர்காலத்தை நோக்கி என்கிற தலைப்பில் கருத் தரங்க ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
மதத்திலிருந்து மீட்சி என்கிற அமைப்பின் செயல் இயக்குநர் சாரா மோர்ஹெட் முக்கிய பேச்சாளராக பேசுகிறார். இவர் வாஷிங்டன் டிசியில் நடத்த உத்தேசித்துள்ள  காரணங் களை ஆராயும் கூட்டத்துக்கான திட்டமிடலில் இணைந்து பணியாற்றி வருபவரும் ஆவார்.
மாநாட்டின் செயல் இயக்குநர் பொறுப்பேற்று  ஃபீல்ட்ஸ் உடன் இணைந்து செயல்பட்டுவருபவரான  ரொஹோடிஸ் கூறுகையில், பென்சில் வேனியாவில் உள்ள நாத்திகர்கள் மற்றும் மனிதநேயர்கள் ஆகியோர் இயக்க செயல்பாடுகள்குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகும் என்றார்.
ஃபீல்ட்ஸ் கூறுகையில், கல்வி புகட்டல் மற்றும் பொழுதுபோக்கு களுடன் உள்ள கலவையாக, நாத்திக சமூகத்தில் தொடர்புடைய மற்ற பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் பேச்சாளர்கள் என்றார்.
அதிகரித்துவரும் வருகைப்பதிவு
கடந்த மூன்று ஆண்டுகளில் நாத் திகர்கள் சந்திப்பு மற்றும் கூட்டங் களில் வருகைதருவோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. முதல் மாநாட்டில் 100 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டில் இரண்டு மடங்கில் நாத்திகர்கள் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டனர்.
மாநாட்டின் முடிவில் குறிப்பிடத் தக்க நிகழ்வாக ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் பட்டினியால் வாடுபவர் களுக்கான நாத்திகர்களின் சேவைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொண்டூழியர்கள் 22,818 பிரவுன் பை உணவு உணவுப் பொட்டலப்பைகள் பென்சில்வேனியா மத்திய உணவு வங்கிக்கு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆதரவளிப்ப வர்கள் அளிக்கும் நிதி 5,700 டாலர் அதிகரித்துள்ளது. நம்பிக்கைகளுக்கு அப்பால் அறக்கட்டளையின் சார்பில் 250 டாலர் அளிக்கப்படுகிறது. 20 ஆயிரம் பேருக்கான உணவுக்கு 5 ஆயிரம் டாலர் என்கிற இலக்கைத் தாண்டி நிதி குவிந்துள்ளது.
அவுட்ரீச் அறக்கட்டளையின்மூல மாக உணவுப்பொட்டலத்தில் சோறு டன் பீன் கேஸ்ரோல்ஸ் வழங்கப்படு கிறது. இத்திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு முக்கியக் காரணம் பட்டி னிக்கு எதிராக போராட வேண்டும் என்பதையும் தாண்டி, நாத்திகர்கள் அறச்செயல்களை செய்யமாட்டார்கள் என்கிற கருத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளதாகும்.
ஃபீல்ட்ஸ் கூறுகையில், நாத்தி கர்கள் பலரும் எப்போதுமே பல ருக்கும் சமுதாய ரீதியில் உதவி புரிந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதை எப்போதுமே வெளியே அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை என்றார். மாநாட்டில் பங்கேற்ப வர்கள்தான் உணவுப் பொட்டலங் களை உருவாக்குவார்கள். ஆனாலும், மற்ற தொண்டூழியர்கள் தேவைப்படும் போது ஏற்றுக்கொள்கிறார்கள்.
ரொஹோடிஸ் கூறுகையில், அவர் கள் எங்கள் கருத்துடன் ஒத்துப்போக மாட்டார்கள். என்றாலும், பட்டினிக்கு எதிராக செயல்படுப வர்கள். சர்ச்சுகளிலிருந்து வந்தார்கள் என்றாலும், நாங்கள் மகிழ்வுடன் அவர்களை வரவேற்று அவர்களுடன் இணைந்து மக்களுக்கு உணவளிப் போம் என்று குறிப்பிட்டார். தொண்டு செய்வதில் ஆர்வம் உள் ளவர்கள் அவர்கள் ஆர்வத்தின்படி தொண் டாற்றக் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பென்சில்வேனியாவில் 3 நாள்கள் நடைபெறக்கூடிய நாத்திகர்கள் மாநாட்டு ஏற்பாடுகளில் நாத்திகர்கள், மனித நேயர்கள் பலரும் ஆர்வத் துடன் பணியாற்றி வருகின்றனர்.
-விடுதலை,31.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக