ஜபல்பூர்டிச.28 மத்திய பிரதேசம் மாநிலம்ஜபல்பூர் நகரில் தந்தை பெரியாரின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் கொள்கைப் பூர்வ நிகழ்வாக டிசம்பர் 24 அன்று நடைபெற்றது.

மாலை 4 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சி பெரியாரியப் பற்றாளர்கள்ஜபல்பூர் நகரில் வசித்துவரும் தமிழகத்தை பூர்வீக மாகக் கொண்டவருமான சந்திர சேகர் ஆகியோரது ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுஜபல்பூர் நகரில் பொதுமக்கள் கூடும் இடத்தில் தந்தை பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத் திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியினை தொடங்கினர்.

கூட்டத்தில் மாநில குஸ்வகா தலைவர் பஜ்நாத் படேல்மாநில புத்தர் கழக பொதுச் செயலாளர் மனோஜ் பாக்ம்ரோஅய்க்கிய ஜனதா தள கட்சியின் மாவட்டத் தலைவர் ராம்ரத்தன் யாதவ் மற்றும் பல பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று உரையாற் றினர்.

ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் (செப் டம்பர் 17), நினைவு நாள் (டிசம்பர் 24) நிகழ்ச்சியினை சிறப்பாகக் கொண்டாடப்படுவதைபெரி யாரின் கொள்கைகளை பிரச்சாரம் செய்திடும் விழாவாக நடத்திடுவதை ஜபல்பூர் நகரில் வாழும் தோழர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுநிகழ்ச்சி யின் நிறைவாக சந்திரசேகர் நன்றி கூறினார்.