வெள்ளி, 23 டிசம்பர், 2016

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

ஸ்டாக்ஹோம்,அக்.28நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட் டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக சுவீடன் திகழ்கிறது.

சுவீடனில் உள்ள பொர் லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம்புகழ் பெற்றஸ்டோராடூனாதேவா லயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள் கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர்எவ்விததயக் கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசுஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள் கையில்நம்பிக்கைஉடையவர் களின்உடலைஎவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்க லாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த் தைகளோ இருக்காது.

ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!

சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக் கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனி தன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும்என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர் களுக்கு ஒரு கல்லறைத் தோட் டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்து களைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படிநல்லடக்கம்செய் யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள் ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.

மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவா லயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்தி கர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

சுவீடன் நாத்திகக் கருத்து களை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட் டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங் களின் தாக்கம் அன்றாட வாழ் வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.

சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,

இந்தநாடுநாத்திகக்கருத் துகள்நிறைந்தநாடு,இங் குள்ளமக்கள்மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப் பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை யில் கூறப்போனால் எங்க ளின் ஒருவித மனநோய்கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையா கும், என்று கூறியிருந்தார்.

 -விடுதலை,28.10.16

சனி, 3 டிசம்பர், 2016

மனிதநேயத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கி.வீரமணி



கிருஷ்ணசாமி வீரமணி அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்து சமூகச் சீர்திருத்தவாதியானவர். (ஆசிரியர் பத்து வயதிலேயே சமூகச் சீர்திருத்தம் பேசிய வர் - ப.கா.) தென்னிந்தியாவில் மனிதப் பொதுமை நலத்திற்காகப் போராடி வருபவர் ஆசிரியர் வீரமணி. தற்போது அவர் திராவிடர் கழகத்தின் தலைமை ஏற்று அதனை வழிநடத்தி வருகிறார். திராவிடர் கழகம் விடுதலை வேட் கையை மக்களிடையே விதைத்து வளர்த்து ஊக்கப்படுத்தி வரும் இயக்க மாகும். மேலும் சாதிய - பாலியல் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடி வரும் இயக்கம் அது! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக அவ்வியக்கம் அரும் பணி ஆற்றி வருகிறது. திராவிடர் கழகத் தின் தலைவர், பெரியாரின் (1879-1973) அடியொற்றித் தடம் பிறழாது பணியாற்றி வருகிறார்.
ஏழுகோடிப் பேருக்கு மேல் உள்ள தற்காலத் தமிழ்நாட்டைத் தற் போதுள்ள நிலைக்குச் செம்மைப்படுத்திக் கொண்டு வந்தவை பெரியாரின் கொள் கைகளும் அவருடைய இயக்கமும் தாம்! 1967 முதற்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வரும் இரண்டு அரசியல் கட்சி களுமே பெரியார்தான் தங்களுக்குச் சமூக அரசியல் தூண்டுணர்வு தரும் ஆசான் என்று இன்றுவரை கூறி வருகின்றன. 1973இல் பெரியார் இயற்கை எய்திய பின்னர் அவர்தம் வாழ்விணையர் இயக்கத்தின் தலைமை ஏற்றார். அவருக்குப் பின் ஆசிரியர் வீரமணி அவர்கள் தலைமைப் பொறுப் பினை ஏற்றுக் கொண்டார்.
தற்போது வீரமணி அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தின் வேந்தராகவும் பல பள்ளிகளை யும், கல்லூரிகளையும் ஊர்ப்புற மேம் பாட்டு மய்யங்களையும் ஆறு மருத்துவ மனைகளையும் உள்ளடக்கிய அய்ம் பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வரும் ஒரு மாபெரும் இயக்கத் தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர். பல புத்தகங்களைப் பதிப்பித்து வெளி யிட்டவர்;‘The Necessity of Scientific Temper எனும் அவரு டைய புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். அறிவியல் மனப்பான்மை பெறுவதில் தான் நம் எதிர்காலம் அடங்கி இருக் கிறது என்று கருத்துரைத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
1933இல் பிறந்த ஆசிரியர் வீரமணி அவர்கள் தமது பத்தாம் அகவை யிலேயே இயக்கத்தில் இணைந்து துடிப்புடன் பணியாற்றி வந்தார்.
பின்னர் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுத் தமிழ் நாளே டான விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன் பதிப்பாசிரியராகவும் அவர் தொடர்ந்து இருந்து வருவதோடு (உண்மை) எனும் கிழமை இதழின் ஆசிரியராகவும், ‘The Modern Rationalist  எனும் ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அவருடைய வயதோ (எண்பதற்குமேல் ஆகி விட்டது) அவர்மீது எதிரிகள் தொடுத்த கொலை வெறி வன்முறைத் தாக்குதல் களோ அவருடைய தொண்டறப் பணிகளின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை.
ஓர் ஆய்வு நூலகம், அருங்காட்சி யகம், புத்தக விற்பனை நிலையம், ஆசிரியர் அலுவலகம், அச்சகப் பணி மனை, திருமண அரங்கு, பெரியார் நினைவிடம் என்று பரந்து விரிந்து கிடந்த ஒரு வளாகத்தில் 2014 பிப்ரவரி யில் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்தேன். இந்த இயக்கத்தின் தோற் றத்தைப் பற்றியும் அதன் தற்போதைய தொண்டறப் பணிகளைப் பற்றியும் அவருடன் நான் கலந்துரையாடினேன். பெரியாரைப் பற்றி அவர் தெளிவாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளர்; தற்காலத் தமிழ் நாட்டின் தந்தை அவர்; இங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அறிவு ஆசான் பெரியார் தான் என்று ஆசிரியர் விளக்கினார்.
ஆசிரியர் வீரமணி அவர்கள் பகுத் தறிவுப் பணியைத் தொடர்ந்து முன் னெடுத்துச் செல்கிறார். சாதிய அமைப் பின் உருவாக்கமான சமூக ஏற்றத் தாழ்வுகளை - முரண்பாடுகளைக் கொண்டுள்ள இந்துத்துவத்தை அவர் எள்ளி நகையாடுகிறார். பல ஆண்டு களுக்கு முன்பு கீழ்ச்சாதியில் பிறந்த வர்கள் புனிதமான ஓர் இந்துக் கோயில் உள்ள தெருக்களில் நடப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. சாதி என்பது நம் சமுதாயத்தின் மேல் படர்ந்த நஞ்சு; ஏனெனில் ஒருவரது தகுதி நிலையும் சிறப்புரிமையும் அவரது பிறப்பினால் முடிவு செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்க நிற வேற்றுமையைவிட இது மிகவும் கொடுமையானது. நிற வேற்றுமையில் கருப்பின மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்படவில்லை. அவர்களுக்குத் தனிப்பள்ளிகள் ஒதுக்கித் தரப்பட் டிருந்தன. ஆனால் இங்கே சாதிய அமைப்பின் மிகக் கொடுமையான செயல் என்னவென்றால், ஒரு சாதியில் நீங்கள் பிறந்துவிட்டால் அந்தச் சாதி யிலேயே நீங்கள் வாழ்கிறீர்கள்; அந்தச் சாதியிலேயே நீங்கள் சாகிறீர்கள். ஆகவே சாதிய அமைப்பு முறையே இங்கு எல்லாவற்றையும் முடிவு செய் கிறது. நீங்கள் கல்வி பெறுவதற்கு உரிமை உடையவரா இல்லையா என்பதைச் சாதிதான் முடிவு செய்கிறது. நீங்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராக இருந் தால் உங்களுக்குக் கல்வி பெறும் உரிமை கிடையாது என்று ஆசிரியர் வீரமணி தெளிவாக விளக்கினார். பெரியார் தொண்டினால் சமூகம் எப்படிப்பட்ட மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் போது, பெரியார் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்த நிலையை இப்போது நாம் கற்பனை செய்து பார்ப்பது கூடக் கடினமாக இருக்கிறது. அடிப்படையாக - இந்து மதம் மட்டுமே சாதிய அமைப்பினைக் கட்டிக் காத்துப் பேணி வருகிறது என்றார் அவர். நாங்கள் மக்களுக்கு அறிவியல் மனப்பான்மை வரவேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக மனித நேயம் மிக்கவர்களாகவும் பகுத்தறிவாளர்களாக வும் மக்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று ஆசிரியர் கூறி முடித்தார்.
மக்கள், உரிமை, சமத்துவம், உடன் பிறப்பொற்றுமை (சகோதரத்துவம்) ஆகியவற்றைப் பெறவேண்டும் என்பது திராவிடர் இயக்கத்தின் மனித நேயப் பார்வை என்று ஆசிரியர் வீரமணி விளக்கினார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையிலும் இந்த இயக் கத்திற்கு அவர் நன்றி செலுத்துகிறார். ஏனென்றால் கீழ்ச்சாதி உறுப்பினர் ஆனபடியால் இதற்கு முன்னர் கல்வி பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த இயக்கத்தினால் தான் தம்முடைய தலைமைப் பண்புகளும், திறன்களும் மதிக்கப்படுகின்றன என்றார்.
கடந்த பல ஆண்டுகளாகச் சமூக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கின்ற. அவற்றுள் சமஸ்கிருத மந் திரங்களை ஓதி நடத்தப்பெறும் இந்துத் திருமணங்களை விட்டு விலகி மதச் சார் பற்ற திருமணங்களுக்கு மக்கள் மாறி வந் துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (இம் மந்திரங்களை அவர் பெரும் பித்தலாட் டம் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் மக்களுக்கு இவற்றின் பொருள் என்ன வென்று தெரியாது). மதச்சார்பற்ற திரு மணங்களை அவர் ஊக்கப்படுத்தி வரு கிறார். ஆயிரக்கணக் கான சுயமரியா தைத் திருமணங்களை அவர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.
அவருடைய இயக்கத்தின் இயல் பினையும் அரசியலையும் ஒப்பிட்டுக் கூறுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு என்ற முறையில் எந்த அரசும் வரலாம்; போகலாம். ஆனால் சமு தாயத்தில் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திராவிடர் கழகம், அரசியல் கட்சிகள் உள் நுழைந்து சிக்கலை உண்டு பண்ணவியலாத சமூகச் சமத்துவத்தையும் அதிகாரத்தையும் விரும்புகிறது. திராவிடர் கழகம் சாதி ஒழிப்பிற்காகவும் பெண் உரிமை பெறு வதற்காகவும் போராடும் இயக்கம் என்றார் ஆசிரியர் கி.வீரமணி. கிறித்துவ மதத்தில் ஒருவர் பாதிரியாக (புரோகி தராக) வேண்டுமென்றால் அதற்குரிய கல்வித் தகுதியை அவர் பெற்றிருந்தால் அப்பணியில் அவர் அமர்த்தப்படுகிறார். அதைப் போலவே ஒரு முசுலீம் முல்லா வாக வேண்டுமென்றால் அதற்குரிய கல்வியைப் பெற்று அப்பணியில் அமர லாம். ஆனால் இந்து மதத்தில் இது போன்று நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்து மதத்தில் பரம் பரையாக இந்து மதத்தின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் பயின்று பயிற்சி பெற்ற உயர்சாதியினர் (பார்ப்பனர்) மட்டுமே அத்தகைய பணிகளைப் பெறமுடியும், என்று ஆசிரியர் வீரமணி குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத்தின் தனிச் சிறப்பி னைப் பற்றி விளக்கிய ஆசிரியர், பெரியார் பகுத்தறிவையும் சமூகநீதியை யும் முன்னெடுத்துச் செல்வதற்காகத் தம்முடைய செல்வம் அனைத்தையும் ஒரு பொது அறக்கட்டளையாக உரு வாக்கினார். பள்ளிகள், மருத்துவமனை கள், குழந்தைகள் காப்பகங்கள் என்று இந்த இயக்கம் மனிதநேயச் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அனைத்துலக அளவில் இது தெரிந்த செய்தியே. 2014இல் மேரிலேண்ட் மாநிலத்தின் மேனாள் ஆளுநர் பாரிஸ் கிளிண்டெனிங் அவர் களுக்கு இங்கு வரவேற்பளிக்கப்பட்டது. இயக்கத்திற்கு வழங்கப்பெறும் நன் கொடைகள், மதவாதிகளிடமிருந்து வரும் எதிர்ப்பினைப் புந்தள்ளி இவர் களின் தொண்டறம் தொடர்வதற்குப் பெரிதும் துணை செய்கின்றன.
என்மீது நான்கு முறைக்கு மேல் கொலை வெறித் தாக்குதல் நடத்தப் பெற்றது. இந்துத்துவத் தேசிய முன்னணி யினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் எனக்கு மாலையணிவிக்க வருபவர் களைப் போல வந்தமையால் என் ஓட் டுநர் வண்டியை நிறுத்தினார். உடனே அவர்கள் தாக்கத் தொடங்கி விட்டனர். தாக்குதலில் மூக்கின் இடைப்பகுதி கிழிந்து போய்விட்டது என்றார் ஆசிரியர்.
இத்தகைய தாக்குதல்களுக்கும் அச் சுறுத்தல்களுக்கும் அஞ்சாது, பகுத்தறி வையும் மனித நேயத்தையும் பரப்புவ தற்காக, சமத்துவத்தையும் சமூக நீதியை யும் வென்றெடுப்பதற்காக வேறு சிந் தனையின்றித் தமது எண்பதாவது வயதி லும் பயணம் செய்வது மகிழ்ச்சியளிப்ப தாகப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஆசிரியர்.
- தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,4.3.15

ஞாயிறு, 27 நவம்பர், 2016

கடவுள் இல்லை லாலா.லஜபதிராய் கருத்து

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து
(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.
நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.
இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,
சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.
மிருகத்தனமானது
வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.
இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.
ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?
வேதங்கள் பொய்
சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?
அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?
லாலாஜி வாழ்க்கை
இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
(பகுத்தறிவு, 1933)

தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
  • கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.
  • -விடுதலை,26.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தூக்கிலிடப்பட்ட பகத்சிங் - குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் கிடையாது


பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பது ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறை யினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவு களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையைக் கண்டறிந்தார்கள் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, பகத்சிங்கிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதும், குற்றமற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி என்பவர், பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார்.
பகத்சிங் மேற்படி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர் சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கை அனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருந்தவர் (Unknown gunmen)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட் டிருந்தது. அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இந்த புகாரின் முறையிடுபவரும் கண்ணால் கண்ட சாட்சியு மாவார்.
அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை அவர் பின்தொடர்ந்ததாகவும், அவர் 5 அடி 5 அங்குலம் உயரம் உடையவ ராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும் வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது. குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞருக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்தவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன், என்று அவர் கூறினார். லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது.
-விடுதலை ஞா.ம.,26.3.16

முசுலிம் நாட்டிலும் நாத்திகம் முளைக்கிறது


இசுலாமிய மதத்தைச் சார்ந்த மன்னராட்சி உள்ள சவுதி அரேபி யாவில் சமூக வலைத்தளங்களில் நாத்திகக் கருத்துகள் பதிவுகள் பெருகி வருகின்றன. 28 வயது இளைஞர் ஒருவர் சமூகவலைத் தளமான டிவிட்டரில் தன்னுடைய நாத்திகக் கருத்துகளை பதிவு செய் திருந்தார். நாத்திகக் கருத்துகளைப் பதிவிட்டதில் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவ்விளைஞர் தண் டனைக்கு உள்ளானார்¢.
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் மதக்கருத்து களைக் கண்காணித்து வரும் காவல் துறையின் ஒரு பிரிவு டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங் களின்மூலமாக மதம் தொடர்பான கருத்துகள் பதிவிடுவதைக் கண் காணித்து வருகிறது.
காவல்துறையினர் கண்காணிப் பில் 600க்கும மேற்பட்டோர் கடவுள் இருப்பதாகக் கூறப்படுவதை மறுக் கின்ற கருத்துகளை பதிவிட்டுள் ளார்கள். குர்ஆன் வசனங்களிலும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதுடன், கடவுள் கருத்துகள் என்று கூறப்படுபவை யாவும் உண்மைக்கு மாறானவையாகவும், பகைமை உணர்ச்சிகள் நிரம்பி, அதையே கற்பிப்பதுமாக உள்ளன என்று கடவுள், மதம் உள்ளிட்டவை குறித்து தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
28 வயதுள்ள ஓர் இளைஞர் நூற் றுக்கணக்கிலான நாத்திக கருத்துப் பதிவுகளை பதிவிட்டிருந்தார். அப்பதிவுகளைக் கொண்டு கண் காணிப்பு காவல்துறையினர் அவ் விளைஞரிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது தன்னை கடவுள், மத நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகன் என்றும், தான் பதிவிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரி விக்கப் போவதில்லை என்றும், எனக்கு சரி என்று பட்டதை எழுதி யுள்ளேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விளைஞர் அவ்வாறு குறிப் பிட்டதைத் தொடர்ந்து,  சவுதி அரேபியா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் 2000 சாட்டை அடிகள் கொடுக்கவும் உத்தர விட்டது. மேலும் அவ்விளைஞருக்கு 20ஆயிரம் ரியால் தண்டத் தொகை செலுத்தவேண்டும் என்றும் தீர்ப் பளித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப் பில் 5,300 டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சத்து 63 ஆயிரம் ஆகும்.
விடுதலை ஞ.ம.,5.3.16

வியாழன், 3 நவம்பர், 2016

மீரட் நகரில் நாத்திகப் பிரச்சாரத்துக்கு எதிராக இந்துத்துவாக் கும்பல் வன்முறை வெறியாட்டம்

நாத்திகம் குறித்த தேசிய அளவிலான இரண்டாவது மாநாடு -- நான் ஏன் நாத்திகனானேன்? பகத்சிங் குறித்த அமர்வில் செய்தியாளர் சந்திப்பில் நாத்திக சம்மேளனம் அமைப்பினர்.

மீரட், நவ.2 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியாராக இருந்தவர் நாத்திகராக மாறினார்.அவருடையநாத்திகப்பிரச் சாரத்துக்கு எதிராக அம்மாநிலக் காவல் துறையினரின்துணையுடன்இந் துத்துவா கும்பல் வெறியாட்டம் போட்டுவருகிறது

வட இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பிந்து சேவா சன்ஸ்தான் தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பிவருகின்ற நாத்திக அமைப்பாக இயங்கிவருகின்ற அமைப்பாகும்.

சுவாமி பாலெண்டு மத பரப்புரை செய்பவராக இருந்தவர். நாத்திகராக மாறி, தொடர்ந்து நாத்திகப் பிரச்சாரத்தை பிந்து சேவா சன்ஸ்தான்  அமைப்பின்மூலமாக தொடர்ந்து செய்துவருபவர் ஆவார்.

கடந்த 14.10.2016 அன்று மீரட் நகரில் கூட்டம் நடத்துவதாக அறிவித் திருந்தார். மத உணர்வுகளைப் புண் படுத்துவதாகக் கூறி, இந்துத்துவா கும்பல் அப்பகுதிக்கு திரண்டு வன் முறைத் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினரிடம் பாலெண்ட் புகார் கொடுத்தார். ஆனால், வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள்.

சுவாமி பாலெண்ட்மீது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சாமியார்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலெண்டை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின் றனர்.
-விடுதலை,2.11.16

சனி, 29 அக்டோபர், 2016

சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

 

ஸ்டாக்ஹோம்,அக்.28நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட் டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக சுவீடன் திகழ்கிறது.
சுவீடனில் உள்ள பொர் லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம்புகழ் பெற்றஸ்டோராடூனாதேவா லயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள் கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர்எவ்விததயக் கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசுஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள் கையில்நம்பிக்கைஉடையவர் களின்உடலைஎவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்க லாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த் தைகளோ இருக்காது.
ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!
சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக் கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனி தன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும்என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர் களுக்கு ஒரு கல்லறைத் தோட் டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்து களைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படிநல்லடக்கம்செய் யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள் ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.
மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவா லயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்தி கர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சுவீடன் நாத்திகக் கருத்து களை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட் டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங் களின் தாக்கம் அன்றாட வாழ் வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.
சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,
இந்தநாடுநாத்திகக்கருத் துகள்நிறைந்தநாடு,இங் குள்ளமக்கள்மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப் பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை யில் கூறப்போனால் எங்க ளின் ஒருவித மனநோய்கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையா கும், என்று கூறியிருந்தார்.

விடுதலை,28.10.16

பரந்து பட்ட உலகில் பகுத்தறிவுத் தந்தை பெரியார்





தந்தை பெரியார் தம் பிறந்த நாளை செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு கொண்டாடிய நிலையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய நினைவு அலைகள்...

தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டைவிட பெருகிக் கொண்டே வருகின்றன. பிறந்த நாள் கொண்டாட்டம் மாநில, நாட்டு எல்லைகளைத் தாண்டி உலகின் பல நாடுகளிலும் பெருகி, தந்தைப் பெரியார்தம் மானிடம் போற்றிய - பகுத்தறிவு - சுயமரியாதை கொள்கைச் சிறப்பிற்கு பெருமை சேர்த்து வரு கிறது. செய்தி ஊடகங்களிலும் - அச்சு ஊடகம் மற்றும் மின் ஊடகங்கள் - தந்தை பெரியார் பற்றிய பதிவுகள் பெருகி வருகின்றன. இந்த ஆண்டு தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாளையொட்டி ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் ஏதாவது ஒரு தளத்தில் தந்தை பெரியார் பற்றிய செய்திகளை, சிறப்புகளை பதிவு செய்துள்ளன.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் மானமிகு கோ.ஒளிவண்ணன் தந்தை பெரியாரது 138ஆம் பிறந்த நாளையொட்டி பெரியாரது வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய, எழுதிய கட்டுரை “தி டைம்ஸ் ஆப் இந்தியா” (The Times of India) இதழில் செப்டம்பர் 20, 2016 அன்று பிரசுரமாகி உள்ளது. தந்தை பெரியார் பற்றிய ஆங்கில கட்டுரை மற்றும் அதன் தமிழாக்கத்தினை “விடுதலை” வாச கர்களுக்கு வெளியிடுகிறோம்.

- ஆசிரியர்


1931ஆம் ஆண்டின் குளிர்காலம். கப்பல் ஒன்றின் அழுக்குப் படிந்த நான்காம் வகுப்பு அறை; மனிதர்களும், பண்டங்களுமாக நிரம்பி வழிந்தது. அதில் அய்ம்பத்திரண்டு வயதான தாடி நரைத்த ஒரு மனிதர் ஒரு நிலக்கரிச் சாக்கு மூட்டையின் மீது அமர்ந்திருந்தார். நான்காம் வகுப்பு என்பது கப்பலின் அடித்தளத்தில் இருக்கும். மேல் வகுப்புப் பயணம் கட்டுபடி ஆகாத கூலிக்காரர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் ஆனது. அளவுச் சாப்பாடுதான் கிடைக்கும். நாளுக்கு இரண்டுமுறை அவித்த உருளைக் கிழங்கும், வேர்க்கடலையும், தானியங்களும், பன் ரொட்டியும் கலந்த உணவு தருவார்கள்.

அந்த மனிதர் அப்போதுதான் காய்ச்சல் வந்து குணமாகியிருந்தார். அவ்வப்போது இருமல் வந்து தொந்தரவு கொடுத்தது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வசதியான அறை ஒன்றில் பயணம் செய்திருக்கலாம். எனினும் அவர் நான்காம் வகுப்பில் பயணம் செய்ய முன் வந்ததன் காரணம் அது வணிக முறைப் பயணமோ, உல்லாசப் பயணமோ அல்ல என்பதுதான். உலகின் பல நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல், சமூக இயக்கங்கள் பற்றியும், அவை எப்படி அந்தச் சமூகங்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவின என்பது பற்றியும் தெரிந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கம். அவர்தான் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.இராமசாமி.

1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று எஸ்.இராமநாதனையும், ஈரோடு இராமுவையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் அய்ரோப்பாக் கண்டத்தில் பத்து மாதம் பயணம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

போகும் வழியில் கொழும்புவில் சில நாள் தங்கி மூடநம்பிக்கை, ஜாதி, சமயம் அனைத்தையும் கண்டித்துப் பல கூட்டங்களில் பேசினார். ஜாதி இந்துக்களின் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் ஆதிதிராவிடர்களின் சங் கத்தில் உரையாற்றினார். ஆதிதிராவி டர்கள் வலுப்பெற வேண்டுமெனில் சமுதாயம்முழுவதும்ஒன்றுசேர்ந்து ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிக் கொடு மைகளையும் எதிர்த்து நின்றால்தான் அது சாத்தியம் என்று வலியுறுத்தினார். அடுத்து எகிப்து, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.மார்க்சும்,ஏங்கல்சும்வெளி யிட்டிருந்த பொதுவுடைமை அறிக் கையைப் (Communist Manifesto) படித்திருந்த காரணத்தால் ரஷ்ய மக் களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினார். ரஷ்ய நாட்டு ஆட்சி முறை அவரை மிகவும் கவர்ந்தது.

1932 ஜூன் மாதம் அவர் இங்கி லாந்து நாட்டின் பார்ன்ஸ்லி (Barnsley) என்னுமிடத்தில் தொழிற் கட்சியைச் சேர்ந்த 30,000 தொழிலாளர்கள் குழுமி யிருந்த அவையில் உரையாற்றினார். பிரிட்டன் - தொழிற் கட்சியின் தலைவரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜார்ஜ் லான்பரி (George Lanbery) அவையில் இருந்து பெரியாரின் உரையைச் செவி மடுத்தார். சொந்த நாட்டில் கொண்டிருந்த கொள்கைகளுக்கு நேர்மாறாக எப்படி ஆங்கில அரசு இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறது என்பதை அவரிடமே கிண்டலாகத் தெரிவித்தார் பெரியார். இங்கிலாந்தில் இருந்த பொதுவுடைமைக் கட்சி அலுவலகங்கள் பலவற்றையும் சென்று பார்த்தார். இங்கி லாந்து நாடாளுமன்றத்தின் முதல் பொது வுடைமை கட்சி உறுப்பினரான சாபூர்ஜி சக்லத்வாலா (Shapurji Saklatwala)வைச் சந்தித்தார். ஜெர்மனியில் சோஷியலிஸ்ட் அமைப்புகள் பலவற்றிற்கும் சென்றார். அத்தோடு நிர்வாணச் சங்கம் ஒன்றிற்கும் சென்று அவர்களின் வாழ்க்கைக் கோட் பாடுகளைத் தெரிந்து கொள்ள முற்பட்டார்.

இந்தப் பயணத்தை மேற்கொண்டதில் பெரியாரின் முதன்மையான நோக்கம் மற்ற நாடுகளில் செயல்பட்டு வரும் முற்போக்கு இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே. பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு அந்த நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப்பற்றியும், நிர்வாக அமைப்பு,  நிதி அமைப்புகள் பற்றியும் “குடிஅரசு” இதழில் விரிவாக எழுதினார்.

1929 இல் மலேசிய நாட்டில் சுயமரி யாதை இயக்கத்தை வளர்க்க விரும்பிய நண்பர்களின்வேண்டுகோளைஏற்று அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொள்வதற்காக டிசம்பர் 15ஆம் நாளன்று நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரியாரைப் பினாங்கு துறை முகத்தில் 50,000க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து வரவேற்றார்கள். மலேசியா விலும்,சிங்கப்பூரிலும்நிகழ்த்திய சொற் பொழிவுகள் அனைத்திலும் பெரியார் வலியுறுத்தியது சமயத்தையும், சமயச் சடங்குகளையும் நீக்கி விட்டுப் பொருளாதார முன்னேற்றத்தில் அனை வரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதே. மலேசியத் தமிழர்கள் தாயகம் திரும்புவதைப்பற்றி யோசிக்காமல் மலேசியக் குடிமக்களாக ஆகிவிடுவதே நல்லது என்று அறிவுரை கூறினார். இறுதிவரை அவரைவிட்டுப் பிரியாமல் தோழமையுடனிருந்த அவரது தாடி இந்தப் பயணத்தின்போதுதான் வளரத் தொடங்கியது.

பெரியார் 1954இல் மீண்டும் ஒருமுறை மலேசியா சென்றார். அப்போது பர்மாவில் பன்னாட்டுப் பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பர்மாவில் இரண்டு வார காலம் சுற்றுப்பயணம் செய்தபின் டிசம்பர் 11 அன்று பினாங்கு வந்தார். பர்மாவில் இருந்தபோது அம்பேத்கர் அவர்களைச் சந்தித்தார். பெரியாரைப் பவுத்த மதத்தில் சேருமாறு வேண்டிய அம்பேத்கரிடம், இந்து மத்திலேயே இருந்தால்தான் அதனை எதிர்க்க இயலும் என்று பதில் கூறினார் அவர்.

புத்தகங்களில் கண்ட விவரங் களைப் பெரியார் ஒருபோதும் அப் படியே நம்பிவிட மாட்டார், ஒரு ஆராய்ச்சியாளராக இருந்து தன்னுடைய அனுபவத்திலிருந்தும், முயற்சிகளில் இருந்தும் அறிவு பெறுவதையே விரும் பினார். அறிவைத் தேடி இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் மேற்கொள்வதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை, அதனால் ஏற்படும் தொல்லைகளை அவர் பொருட்படுத் தியதில்லை. மற்றவர்கள் அதிகம் சென் றிராத பாதையில் பயணம் மேற்கொள்ள விரும்பி முன்வந்தவர் அல்லவா அவர்?

கோ.ஒளிவண்ணன்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் கழகத்தின் பொருளாளர்
(தமிழில்: அ.அய்யாசாமி)
-விடுதலை,23.9.16

திங்கள், 17 அக்டோபர், 2016

பகுத்தறிவாளர்கள் படுகொலைகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி




பெங்களூரு, செப்.7 சமூக செயற்பாட்டா ளர்கள்மீது தேசவிரோத குற்றச்சாட்டை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற அரசுகள், பகுத்தறிவாளர்கள் கொலை வழக்குகளில் முன்னேற்றம் காணாமல் இருப்பதேன்? என்று பேராசிரியர் கல் புர்கி நினைவு நாளில் நடைபெற்ற பேரணியில் பலரும் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

“நீங்கள் எங்களை மவுனமாக்கிவிட லாம், ஆனால், உண்மையை மவுன மாக்கிவிட முடியாது’’ என்கிற பேராசி ரியர் எம்.எம்.கல்புர்கியின் சொற்கள் யாவும் கருநாடக மாநிலத்தில் தார் வாட்நகர்த்தெருக்கள்எங்கும்எதிரொ லித்தன.30.8.2016அன்றுபகுத்தறி வாளர் பேராசிரியர் எம்.எம்.கல் புர்கி படுகொலை செய்யப்பட்ட முதலா மாண்டு நினைவுநாளில் கூடிய பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டனப் பேரணியில் பங்கேற்றார்கள்.

பேரணியில் குருதியை உறையச் செய்யும் படுகொலைகளான கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலைகளைக் கண்டித்து பேரணியில் சற்றேறக்குறைய 8000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஜாதியை விமர்சித்து வந்தவர் பேராசிரியர் கல்புர்கி.  சமூக செயற் பாட்டாளராகிய கோவிந்த் பன்சாரே காந் தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு புகழ்பாடுவதா? என்கிற விமர்சனத்தை முன்வைத்தவர்.இந்துக்களின்அடை யாளமாகக் கூறப்படுகின்ற  சிவாஜி யின் வாழ்க்கை வரலாற்று நூலை பன்சாரேஎழுதியவர்.அந்தநூல் ஏராளமாக விற்பனையாகி மிகவும் பிரபலமடைந்ததாகும். அந்நூலில், சிவாஜிகுறித்து இதுவரை கூறப் பட்டுவந்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிவா ஜியின் படையிலேயே தளபதிகளாக, படைவீரர்களில் மூன்றில் ஒரு பங் கினராக முசுலீம்களே இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், தங்களைத் தாங்களே சாமியார் என்று கூறிக்கொள்பவர்கள், போலிகளின் மொத்த உருவமாக இருக் கின்ற அற்புதங்களை செய்வதாக கூறிக் கொள்பவர்கள் ஆகியோரை தோலுரித்தும் பேசிவந்த பகுத்தறிவாளர் ஆவார். இம்மூன்று அறிஞர் பெருமக்களையும் இந்துத்தவா குழுக்கள் கொன்றுவிட்டன.

பேராசிரியர் கல்புர்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று அவருடைய மாணவர்கள் என்று கூறிக்கொண்ட இளைஞர்கள் இருவரால்   அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆண்டு முழுவதும் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணை செய்து வந்த போதிலும், ஒருவர்கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் புனேவில் தபோல்கர் சுட்டுக் கொல் லப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பன்சாரே சுடப்பட்டு இறந்தார். இம்மூன்று கொலைகளும் இன்னமும் காவல்துறையினராலும், புலனாய்வுத் துறையினராலும் தீர்க்கப் படாமல் கிடப்பில் உள்ளன.

கண்டனப் பேரணி

பேராசிரியர்கல்புர்கியின்முதலா மாண்டு நினைவு நாள் பேரணியை  அவரது வாழ்விணையர் உமா தேவி கல்புர்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தபோல்கர் வாழ்விணையர் சைலா தபோல்கர், பன்சாரே வாழ் விணையர் உமா பன்சாரே மற்றும் மக்களுக்காக பாடுபட்டுவரும் 90 சமூக நிறுவனங்களின் சார்பில் ஏராள மானவர்களும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
தார்வாட் நகரில் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் இல்லத்திலிருந்து கண்டனப் பேரணி தொடங்கியது.

Ôவகுப்புவாதமே நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்Õ, Ôகொள்கைகளை துப்பாக் கிகளால் அடக்கிவிட முடியாதுÕ, Ôசிந்தனையாளர்களை கோழைகள் கொன்றார்கள். கொலையாளிகளை கோழைகள் காப்பாற்றி வருகிறார்கள்Õ  என்னும் பதாகைகளைத் தாங்கியபடி  அமைதியாக ஊர்வலத்தில் சென்றார்கள்.

கருநாடகாபல்கலைக் கழகம், பச வேஷ்வரா குதிரைமீது அமர்ந்திருக்கும் சிலை, அரசமைப்பு சட்டத்தை கையிலேந்தி, எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் நிலையில் பொன்னிற டாக்டர் அம்பேத்கர் சிலை, தார்வார்ட் சிபிடி, ஆர்.எல்.எஸ் கல்லூரி வழியே நினைவு நாள் பேரணி சென்றது.

அப்பகுதியில் உள்ள 10 கல்லூரி களிலிருந்தும்  மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் கல்புர்கி நினைவு நாள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இளைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “பேராசிரியர் கல்புர்கி எங்களுக்கு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரவாக இருந்தார்’’ என்றார்.

பேராசிரியர் கல்புர்கி மற்ற பேரா சிரியர்களை மிகவும் நேசித்தார். ஆனால், அவர் கொள்கைவழி செயல்பாடுகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவருக்கு எச்சரிக்கையாக காவல் துறையில் புகார், அச்சுறுத்தல்கள் என்று தொடர்ச்சியாக இருந்து இறுதியில் கொல்லப்பட்டுவிட்டார்.

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிறீ ராம் சேனா மற்றும் சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அவரைத் தொடர்ச்சியாக  கண்காணித்து வந்துள்ளன.
தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளில் சனாதன் சன்ஸ்தா விசாரணை வளையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வமைப் பிலுள்ளவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், இம்மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இந்துத்துவா கொள்கைகள் கொடும் நஞ்சாக இருப்பதை எடுத்துக்காட்டி, இந்துத்துவாவுக்கு எதிராக கல்புர்கி, பன்சாரே மற்றும் தபோல்கர் மூவரும் வெளிப்படையாகவே பேசினார்கள்.
ஜாதி, வகுப்புவாதம், மூட நம் பிக்கைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களை அடக்கி ஒடுக்கு வது,ஆகியபிரச்சினைகளுக்குஎதி ராகவும், பகுத்தறிவையும், அறிவி யல் மனப்பான்மையையும் நிலை நிறுத்தும்வகையிலும் முற்போக்கான கருத்துகளை  பேசினார்கள்.

பேராசிரியர் கல்புர்கி

பேராசிரியர் கல்புர்கி ஹம்பியில் உள்ளகருநாடகபல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிறந்த கல்வியாளராகவும்நாடகஎழுத்தா ளராகவும்,கொள்கைவழியில் செயற் பாட்டாளராகவும் செயல்பட்டு வந்த வராவார். 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், 700 அறிவுபூர்வ கட்டுரைகளை எழுதியவரும் ஆவார். மேலும், கல்வெட்டியல், நாட்டுப்புறக் கதைகள், வரலாறு, யாப்பிலக்கணம், கவிதை மற்றும் மொழியியல் தொடர்பு என பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர்.

உண்மைக்கு மாறான வரலாற்று திரிபுவாதங்களை  முறியடிக்கும் வண் ணம், உண்மையான வரலாற்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி என்பது முற்றிலும் வர லாறு மட்டுமல்ல, உண்மைக்கு மாறானவற்றை வரலாறு என்று கூறிக்கொண்டு தற்போது இலாபம் அடைந்துகொண்டிருப்பவர்களை தோலுரித்துக்காட்டுவதும் ஆகும்.

கருநாடகாவின் 12 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி பசவன்னாவின் கொள் கைகளுக்கு புத்துணர்வை ஊட்டி, இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட மோச மான ஜாதிய முறைகளுக்கு எதிராக போராடினார்.

பசவன்னாவும் கவிஞர் ஆவார். அவருடையகவிதைவரிகளில் ‘நிலை கொண்டிருப்பவை வீழ்ச்சி அடையும், ஆனால், எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவை நிலையாக இருக்கும்’ (மாற்றம் என்பதே மாறாதது) என்று ஜாதி ஒழிப்புகுறித்து கூறியுள்ளார்.

பேராசிரியர்கல்புர்கிஎழுதியÔபச வன்னா வாழ்க்கை வரலாற்று நாடகÕத் தில், அவர் ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பசவன்னாவின் தொண்டு மற்றும்  பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாடுகள்,  அர்ச்சகர் ஆச்சார முறைகள் குறித்த விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

12ஆம் நூற்றாண்டில்  பசவன்னா கூறியதை 21 ஆம் நூற்றாண்டில் எடுத் துக்காட்டியதால் பேராசிரியர் கல்புர்கி கொல்லப்பட்டுள்ளார்.

1924ஆம் ஆண்டில் பெல்காமில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் காந்தி குறிப்பிடும்போது, Ôபசவன்னா நம்முடைய காலத்தில் வாழ்ந் திருந்தால், பின்பற்றத்தக்க மதிப்புக்குரிய துறவியைப் பெற்றிருந்திருப்போம்Õ என்றார்.

இன்றும் இந்தியாவில் எங்கும் ஜாதியின் கொடூரம் நிறைந்துள்ளது.

ஜாதி இந்துக்களால் பசவன்னா மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார். காந்தி இந்து மகாசபாவின் பெய ரால்ஆர்.எஸ்.எஸ்.காரரால்கொல்லப்பட்டார். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொன்றவர்களும் இந்துத்துவா வலதுசாரி அமைப்பினைச் சேர்ந்தவர்களே என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்து ஜாதிய நீண்ட கால பழைமைவாதத்தின் நிழ லாக கொலைகள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன.

பேராசிரியர்கல்புர்கியின் நினைவு நாள் பேரணி தொடக்கத்தில் டிரம் கள் இசைக்கப்பட்டு, சீர்திருத்தக் கவிஞர் பசவன்னாவின் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. சமுதாய சீர்திருத்தவாதி ஜோதிபா புலே, பகத்சிங் வழியில் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகி யோருக்கும் இறப்பே கிடையாது என்று முழக்கங்கள் வானைப்பிளந்தன.

எழுத்தாளர் அஞ்சும் ராஜாபாலி கூறும்போது, “இதுபோன்ற காலகட்டங் களில் நம்முடைய சிந்தனைச் சுதந்திரம், கருத்து சுதந்திரம், அரசியல் தேர்வு என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இதுபோன்ற சுதந்திரங்களின் மதிப்புகளைஅறிந்திருப்பதோடு,அவற் றுக்காக போராடவேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். பேராசிரியர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய இம்மூன்று பகுத்தறிவாளர்கள்நமக்கானஉணர் வுகளை அளிப்பவர்களாக இருக்கிறார் கள். இம்மூவரையும் கொலையாளிகள் கொன்றதன்மூலமாக,மூவரின்கொள் கைகளையும்அழித்துவிடமுடியாது. அரசிடம் நாங்கள் வலியுறுத்துவதெல் லாம், இம்மூவரின் கொலை வழக் குகளில் புலனாய்வுத்துறை தீர்க்கமான முடிவுகளை சட்டத்தின் துணைகொண்டு வெளிப்படுத்திட வேண்டும் என்பது தான்’’ என்றார்.

பேரணியில் ஏராளமான பேச்சாளர் களின் கருத்து மழைக்கிடையே எழுத் தாளர் அஞ்சும் ராஜாபாலி பேசிவிட்டு விமானத்தைப் பிடிக்கச் சென்றார்.

மாநிலகாவல்துறையின்மீதுநம் பிக்கைஇல்லாதநிலையில்,தேசிய புலனாய்வுத்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவு என அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இம்மூவரின் கொலை வழக்குகளில் உண்மையை வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

நாட்டின் புலனாய்வுத்துறை மற் றும் நீதித்துறைக்கு கவனத்துடன் செயல்படவேண்டிய அளவில் இந்த மூன்று கொலை வழக்குகளும் உள்ளன. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியில் தலையீடுகள் இருந்துவருவதாலேயே நம்பகத்தன்மை இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில், காவல்துறையினர் மத்தியில் சமுதாய பிரச்சினைகளில் அக்கறைகொண்டு பேசுபவர்கள்மீது தேச விரோத சட்டங்களை போடுவதில் மகிழ்ச்சி அடைகின்ற நிலை இருந்து வருவதோடு, இந்துத்துவா பயங்கரவாதம் மீதான  வழக்குகளை முன்னெடுப்பதில் விருப்பமின்மை அல்லது செயலற்ற தன்மையே வெளிப்பட்டு வருகின்றது.

ஒற்றைக்கோரிக்கையாக மதசார் பற்ற ஜனநாயகம் மற்றும் குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற நம்மு டைய அரசமைப்பை நிறுவிய முன் னோடிகளின் கனவை நிறைவேற்ற, இந்திய அரசமைப்பின் மகத்துவத்தை நிலைநாட்ட, உண்மையாக்கிட முன் வருவார்களா?

அண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், முசுலீம்கள், மாணவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்கு தல்களின்மீதான எதிர்ப்புகளின் பிரதி பலிப்பாக, இந்துத்துவா இருண்ட பாசீசத்துக்கு எதிரான எதிர்கால வெளிச்சக் கீற்றுகளாக பிரகாசிக்கத் தொடங்கியதன் சாட்சியாக பேராசிரியர் கல்புர்கியின் நினைவுநாள் பேரணி வரலாறை பதிவு செய்துள்ளது.

-விடுதலை,7.9.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

போர் விமானிகளாகவும் முதன்முதலில் பெண்கள் பணியேற்று சாதனை!

அவனி சதுர்வேதி, மோகனா சிங், பாவனா காந்த். இந்திய விமானப் படையில், வீர தீர சாகசம் செய்ய தகுதி பெற்றிருக்கும் முதல் பெண் போர் விமானிகள். இந்திய விமானப் படை சரித்திரத்தில் இடம் பெறப் போகும் வீராங்கனைகள்.
"அய்தராபாத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி. அதுவும் கடுமையான பயிற்சிக்குப் பிறகு தேர்வாகியிருக்கின்றனர் மூவரும். வட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்திய விமானப்படையில் பெண் போர் விமானிகளை நியமிக்க, இந்திய விமானப் படைத் தலைமை சுமார் 83 ஆண்டுகளாக தயாராகயில்லை. காரணம், போர் விமானியாக செயல்பட தரப்படும் பயிற்சிகள் மிகவும் கடுமையானவை. எதிரியின் நாட்டுக்குள் ஊடுருவ வேண்டி வரும். அப்படி ஊடுருவும் போது, எதிரியின் விமான, குண்டு தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும். ஆபத்து, அபாயம், சாகசம், சாமர்த்தியம், வீரம், விவேகம் கலந்த பணிக்கு ஆண்கள்தான் சரியானவர்கள் என்று, பெண்கள் போர் விமானிகளாக ஆவதை இந்திய விமானப் படைத் தலைமை தள்ளிப் போட்டு வந்தது.
ஹெலிகாப்டர்களை, போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் விமானங்களை ஓட்டும் பெண் விமானிகள் 1991- லிருந்து இந்திய விமானப் படையில் பணி புரிகிறார்கள். ஆனால் பெண் போர் விமானிகள் யாரும் இல்லை.
பெண் போர் விமானிகள் தேவை என்னும் கருத்தியலில், இந்திய விமானப் படைத் தலைமையகம் தனது தயக்கத்தை தள்ளி வைத்தது. எட்டு திறமையானப் பெண்களைத் தேர்ந்தெடுத்து அதில் மூன்று பெண்களை போர் விமானி பயிற்சிக்காகத் தெரிவு செய்தனர். மூன்று பெண்களும் முழு ஒத்துழைப்பு தந்ததுடன், மிகுந்த ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் முதலாம் நிலையில் 55 மணி நேரம் Pilatus PC 7 ரக போர் விமானம் ஓட்டி அனுபவம் பெற வேண்டும். இரண்டாம் நிலையில் Kiran Mark II விமானத்தை வானில் இயக்க வேண்டும். மூன்றாவது நிலையில், ஹாக் விமானங்களை ஓட்டும் அனுபவம் பெற்றதும் சூப்பர்சானிக் விமானங்களை இயக்கும் பயிற்சி தரப்படும். இந்த மூன்று நிலைகளையும் இவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து ஜூன் 18 ஆம் தேதி, பெண் போர் விமானிகளாக நியமிக்கப்பட்டனர்'' என்கிறார் இந்திய விமானப் படைத் தலைவர் அருப் ரஹா.
இதுவரை தரப்பட்ட பயிற்சியில், இந்த மூவரும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மனோ ரீதியிலும், உடல் ரீதியாகவும் பயிற்சிக்கு பொருத்தமாக உள்ளனர். இன்னும் 5நி + என்னும் சோதனைக்கு அவர்கள் ஆளாக வேண்டும். சாதாரண புவி ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும் அய்ந்து மடங்கு சக்தியை அவர்கள் கையாள வேண்டி வரும். ஆண் போர் விமானிகளுக்கு 9G + அதாவது ஒன்பது மடங்கு புவி ஈர்ப்பு விசை சக்தியை கையாள வேண்டி வரும். அதே பரிசோதனைகளில் இந்த மூன்று பெண் விமானிகளும் பங்கேற்க வேண்டி வரும். அந்த பரிசோதனைக்குப் பிறகே, இவர்கள் சூப்பர்சானிக் போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
பிகாரைச் சேர்ந்த பாவனாவுக்கு போர் விமானியாக வேண்டும் என்ற லட்சியம் சிறு வயது முதலே இருந்தது.
"எனது பெற்றோர்கள் என்னை ஊக்கு-வித்தார்கள். இந்த வேலையெல்லாம் பெண்ணுக்கு ஏற்றதல்ல என்று சொல்லவே இல்லை. மிகச் சிரமமான பணி என்று தெரிந்தே வந்திருக்கிறோம் சாதித்துக் காட்டுவோம்'' என்கிறார் பாவனா.
"அப்பாவும், தாத்தாவும் விமானப் படையில் போக்குவரத்து விமானத்தில் பணி புரிந்தவர்கள். அதனால் விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் என் ரத்தத்தில் இருக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்ததும், எல்லாரையும் போல தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலையில் அமர்ந்தேன். அத்துடன், இந்திய பாதுகாப்பு படைகளில் சேர என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். போர் விமானியாகத் தேர்வு பெரும் வாய்ப்பு கிடைத்ததும் அதை இரண்டு கைகளால் வாரிக் கொண்டேன்'' என்கிறார் மோகனா சிங்.
"ஆண் போர் விமானிகளுக்குத் தரப்பட்ட பயிற்சிதான் எங்களுக்கும் தரப்படுகிறது. பெண்கள் என்று எந்தச் சலுகையும் தரப்பட-வில்லை. நாங்களும் சலுகைகளை எதிர்பார்க்க-வில்லை. பெண்களாலும் போர் விமானியாக முடியும் என்று நிரூபிக்க வந்திருக்கிறோம், நிரூபித்து காட்டுவோம்'' என்று சொல்லும் அவனி சதுர்வேதி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
அத்துடன் போர்ப் பிரிவு அல்லாத விமானிகளாக 22 பெண்கள் உள்பட 130 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமான பயிற்சி நிறைவு விழா துண்டிகல் அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், விமானப் படையின் போர்ப் பிரிவில் பெண்கள் இணைந்துள்ளது ஒரு மைல்கல் என்று தெரிவித்தார்.
இது ஒளிமயமான நாள் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் முப்படையிலும் முழுமையான பாலினச் சமத்துவம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த மூவருக்கும் ஓர் அறிவுரையினை இந்திய விமானப் படை தந்துள்ளது. குறைந்தது நான்கு ஆண்டுகளுக்காவது தாய்மை அடைவதைத் தள்ளி வைக்குமாறு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
முழுமையான போர் விமானியாகத் தகுதி பெற அய்ந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி இந்த பெண் விமானிகளுக்குத் தேவைப்படும். இது எல்லா முன்னணி நாட்டு விமானப் படையில் உள்ள விதி. இயற்கையாகவே, பெண்களின் உடல் அமைப்பு நீண்ட நேரம் போர் விமானியாகப் பறக்க ஏதுவாக அமையவில்லை. அதுவும், உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், கர்ப்பம் தரிக்கும் போதும் போர் விமானத்தை ஓட்டுவதென்பது மிகவும் சிரமமான விஷயம். இவற்றைத் தெரிந்து கொண்டுதான் ஒரு சாகச வாழ்க்கைக்குத் தயாராக வந்துள்ளனர் இந்த மூன்று வீராங்கனைகளும்.
-உண்மை இதழ்,16-31.7.16

கருநாடகாவில் பகுத்தறிவாளர் கல்புர்கி பெயரில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்

கருநாடக சட்டப்பேரவையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் திருத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும், அச்சட்டத்துக்கு பகுத்தறிவாளர் கல்புர்கியின் பெயரை சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருநாடகா மூடநம்பிக்கை தடுப்புச்சட்டம் 2016 என்று கருநாடக மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் 8.7.2016 அன்று முன்வைக்கப்பட உள்ளதாக  கருநாடக மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர கருநாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமய்யா தலைமையிலான ஆளும் காங்கிரசு அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள அச்சட்டத்துக்கு பகுத்தறிவாளர் எம்.எம். கல்புர்கியின் பெயர் சூட்டப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன் வரையிவிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு
மூடநம்பிக்கை தடுப்புச்சட்டத்தின் படி தொலைக்காட்சிகளில் ஜோதிடம் என்கிற பெயரால் நடத்தப்பட்டுவரும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டிய 13 வகையிலான மூடநம்பிக்கைகள் குறித்து சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 11 வகையிலானவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவையாக உள்ளன.
நரபலியைத் தடுத்திட மரண தண்டனை
மாந்தீரிகம், பில்லி சூனியம் என்றுகூறி நரபலி கொடுக்கின்ற மூடத்தனத்துக்கு முடிவு கட்டும்வகையில் அச்சட்டத்தில் இதுபோன்ற நரபலி செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என சட்டமுன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களிடையே கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பாலினைத் தேர்வு செய்வது, நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி கொடுமைப்படுத்துவது, பிற சடங்குகள் என்கிற பெயரால் காயப்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கையான செயல்களைத் தடுப்பதற்கு இச்சட்டத்தில் வழிவகை காணப்பட்டுள்ளது.
காவல்துறையில் விழிப்புணர்வு அதிகாரிகள்
கருநாடக மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் குறைந்த பட்சம்  அய்ந்து காவல் நிலையங்களில் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ள மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மூடநம்பிக்கை-களில் ஈடுபட்டு குற்றமிழைப்பவர்களை கைது செய்வது உள்ளிட்ட பணிகளின்மூலமாக அச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது அவர்களின் பணிகளாக இருக்கும்.

-உண்மை இதழ்,16-31.7.16