ஞாயிறு, 27 நவம்பர், 2016

கடவுள் இல்லை லாலா.லஜபதிராய் கருத்து

கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து
(தோழர்  லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.
நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.
இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக்  காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,
சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப்  பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.
மிருகத்தனமானது
வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.
இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள்  எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.
ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?
வேதங்கள் பொய்
சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?
அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?
லாலாஜி வாழ்க்கை
இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
(பகுத்தறிவு, 1933)

தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.
  • கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.
  • -விடுதலை,26.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக