சென்னை, ஜூலை 19 கடந்த 14.7.2019 ஞாயிறு மாலை 6 மணி யளவில் குரோம்பேட்டை பெரியார் மன்றத் தில் தாம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ந.விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அ.சிவகுமார் மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தமிழ் செல்வன் உறுப்பினர் சேர்க்கை, பெரியார் 1000, தொழில் முனைவோர் கூட்டமைப்பு, பகுத் தறிவாளர் கழக பொன் விழா ஆண்டு ஆகியவை சிறப்பாக நடைபெறுவது குறித்து விளக்கி உரையாற்றினார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார். மாநில ப.க. துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம், தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ப.முத்தையன், கோ.நாத்திகன், மகளிரணி தோழர் கள் மற்றும் கழக தோழர்கள் கலந்துக் கொண்டனர். கு.பிச்சைமுத்து மறை மலை நகர ப.க. தலைவர் தொகுப்புரை வழங்கினார்.
கலந்துரையா டலில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் கள் விவரம் வருமாறு:
தீர்மானம் 1. அ.சிவகுமார் அவர் களை மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளராக நியமிப்பதென தீர் மானிக்கப்பட்டது.
தீர்மானம். 2. ச. கமலகண்ணன் அவர்களை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளராக நியமிப் பதென தீர்மானிக் கப்பட்டது.
நன்றியுரை
கூட்ட முடிவில் ச.கமல கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.
- விடுதலை நாளேடு, 19. 7. 19