செவ்வாய், 30 ஜூலை, 2019

மத நம்பிக்கை சரிகிறது: தெளிவுபடுத்தும் ஆய்வு முடிவுகள்

உலகின் பல்வேறு நாடுகளிலும் மனித சமத்துவமின்மையாலும்,  மத அடிப்படை வாதங்களாலும் அப்பாவி மக்கள் பெரிதும் வாழ்வாதாரங்களை இழப்பதுடன், உயிரி ழப்புகளும்  ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரபு மக்கள் மதநம்பிக் கையை இழந்து வருகிறார்கள் என்கிற ஆய்வுத்தகவலை பிபிசி தமிழ்  (24.6.2019) இணையம் வெளியிட்டுள்ளது.



அதன் விவரம் வருமாறு:

முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல் வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க் கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19இல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் இங்கே


அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களை "மத நம்பிக்கையற்றவர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்வது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எட்டி லிருந்து 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 30 வயதிற்குட்பட்ட மக்கள்தான் அதிகள வில் தங்களை மத நம்பிக்கை

யற்ற வர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது. இதில் விதிவிலக்கு ஏமன்.

பெண்கள் உரிமை




அதே போல ஒரு பெண் அங்கு பிரதமர் அல்லது அதிபராகும் உரிமைக்கு பெரும் பாலான மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இதில் அல்ஜீரியா மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. அங்கு 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஒரு நாட்டின் தலை வராக பெண் இருப்பதற்கு ஒப்புக் கொண்டு உள்ளனர்.

ஆனால் வீட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் உட்பட, பலரும் கணவர்தான் குடும்பத்திற் கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று நம்புகின்றனர். மொரோக்கோ நாட்டில் மட்டும் சரிபாதிக்கும் குறைவான மக்களே கணவன்மார்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.



ஒரு பாலுறவு


அங்கு பெரும்பாலான மக்கள் ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த அல்லது மிகக் குறைந்தளவு மக் களே ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்கிறார் கள். சமுக தாராளவாத கொள்கைகள் கொண்ட நாடாக பார்க்கப்படும் லெபனா னில் கூட ஆறு சதவீத மக்களே இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக் காவில் பாதுகாப்பு குறித்த கவலைகள் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. தங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப் புக்கு எந்த நாடு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்ரேலுக்கு பிறகு, அமெரிக்காவே மிகவும் அச்சுறுத் தலாக இருப்பதாக கூறுகின்றனர். மூன்றா வது இடத்தில் ஈரான் உள்ளது.

கணக்கெடுப்புக்காக கேள்வி கேட்கப் பட்டவர்களில் அய்ந்தில் குறைந்தது ஒருவர் பிற நாடுகளுக்கு குடியேற யோசித் திருந்தார்கள் சூடானில் பாதி மக்கள் தொகையினர் குடியேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தனர். பொருளாதார விஷயங் களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், 6.7.19

வெள்ளி, 19 ஜூலை, 2019

போற்றத்தக்க நாத்திகர் சார்லஸ் பிராட்லா



சார்லஸ் பிராட்லா பிரிட்டனில்

மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார்.அவருக்குப்
பதவிப் பிரமாணம் செய்தபோது
கடவுளின் சாட்சியாக என்று
சொல்லி பதவிஏற்குமாறு கூறி
னார்கள்,இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது
என்றுகூறி மறுத்துவிட்டார்.உங்க
ளுக்கு நம்பிக்கை இருக்கிறதா
இல்லையா என்பதைப்பற்றி எங்க
ளுக்கு கவலையில்லை,இந்த அவை
நம்புகிறது இந்தநாட்டின் அரசியல்
சாசனம் நம்புகிறது அதற்கு கட்டுப்
பட்டவர் நீங்கள் எனவே கடவுள்
சாட்சியாக என்றுகூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுக்க
வேண்டும் அதற்கு நீங்கள் மறுப்பீர்
களேயானால் உங்கள் தேர்வு ரத்து
செய்யப்படும் என்றார்கள்.இந்த
அவையின் ஆயுள்காலம் ஐந்து
வருடங்கள்தான் இந்த ஐந்து வருடங்
களுக்காக என்ஆயுள்முழுவதும் கட்டிக் காக்கும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது என்தேர்வை
நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால்
தாராளமாக நீங்கள்ரத்து செய்து
கொள்ளுங்கள் என்றார் பிராட்லா
அவர்தேர்வை ரத்துசெய்தார்கள்.
அவருடைய தொகுதிக்கு மீண்டும்
தேர்தல் நடந்தது மீண்டும் பிராட்லா
போட்டியிட்டார் மீண்டும் வெற்றி
பெற்றார் மீண்டும் அதேபிரச்சனை.
எனக்கென்று ஒருகொள்கை ஒரு
நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்
டுத்தர இயலாது என்று திட்டவட்ட
மாக மறுத்துவிட்டார் பிராட்லா.
மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்
பட்டது.முன்றாவது முறையாக அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது
மூன்றாவது முறையும் போட்டியிட்
டார் மற்ற இரண்டுமுறைை வாங்கிய வாக்குகளைவிட இம்முறை அதிகவாக்குகள் வித்தி
யாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா
இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்
கள் தயவுசெய்து பிடிவாதம் பிடிக்
காமல் இந்தஅவையின் வேண்டு
கோளை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்றார்கள்,பிராட்லா மிகவும்
உறுதியாகச் சொன்னார் நான்யார்
என்கொள்கைகள் என்ன என்பதை
த் தெரிந்து கொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும்
மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
என்தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த
மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்
அவர்களுடைய ஜனநாயக உரிமை
களை இழிவு செய்கிறீர்கள் அவர்
களுடைய தன்மானத்திற்கே சவால்
விடுகிறீர்கள் என்றுகடுமைகாட்டிய
பிராட்லாஇதற்குமேல் பேச என்னி
டம் எதுவுமில்லை என்றுகூறி அமர்ந்துவிட்டார்.இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது கடவுளின்
பெயரால் பதவிஏற்பவர்கள்  கடவுளின்
பெயராலும் மனட்சாட்சியின்பெயரால்
பதவி ஏற்பவர்கள் மனசாட்சியின் பெய
ராலும் பதவிஏற்கலாம் என்று பிரிட்டன்
அரசியல் சட்டமே திருத்தப்பட்டது.
இன்று பகுத்தறிவுவாதிகள் மனட்சாட்சி
யின் பெயரால் பதவி ஏற்பதற்கு
சாரலஸ் பிராட்லாதான் காரணம்.

*மதுரை பாலன் முகநூல் பதிவுl*

புதன், 17 ஜூலை, 2019

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்




சென்னை, ஜூலை 19 கடந்த 14.7.2019 ஞாயிறு மாலை 6 மணி யளவில் குரோம்பேட்டை பெரியார் மன்றத் தில் தாம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ந.விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அ.சிவகுமார் மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தமிழ் செல்வன் உறுப்பினர் சேர்க்கை, பெரியார் 1000, தொழில் முனைவோர் கூட்டமைப்பு, பகுத் தறிவாளர் கழக பொன் விழா ஆண்டு ஆகியவை சிறப்பாக நடைபெறுவது குறித்து விளக்கி உரையாற்றினார்.

தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்  சிறப்புரை ஆற்றினார். மாநில ப.க. துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம்,  தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ப.முத்தையன், கோ.நாத்திகன், மகளிரணி தோழர் கள் மற்றும் கழக தோழர்கள் கலந்துக் கொண்டனர். கு.பிச்சைமுத்து மறை மலை நகர ப.க. தலைவர் தொகுப்புரை வழங்கினார்.

கலந்துரையா டலில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் கள் விவரம் வருமாறு:

தீர்மானம் 1. அ.சிவகுமார் அவர் களை மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளராக நியமிப்பதென தீர் மானிக்கப்பட்டது.

தீர்மானம். 2. ச. கமலகண்ணன் அவர்களை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளராக நியமிப் பதென தீர்மானிக் கப்பட்டது.

நன்றியுரை


கூட்ட  முடிவில் ச.கமல கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 19. 7. 19

திங்கள், 1 ஜூலை, 2019

பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்

தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் அறிவித்தார்கள். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்: புதுக்கோட்டை அ.சரவணன், புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்: இரா.மலர்மன்னன்.
-  விடுதலை நாளேடு, 22.6.19