திங்கள், 14 மார்ச், 2022

காரல் மார்க்ஸ்

#காரல்_மார்க்ஸ்

ஆதிகாலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள்மூலம் இந்தி யாவில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப் பனர்கள்தான். உலகில் கிருஸ்தவ சகாப்தம் உதயமாவதற்கு முன்பே, இந்தக் காரியங்களைச் செய்தவர்கள் அவர்கள். கிரா மங்களில் உண்டாக்கப்பட்ட சிறுசிறு வகுப்புகள், ஜாதி பிரி வினைகளாலும், உயர்வு - தாழ்வுப் பிரிவினைகளாலும் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தப் பேதங்கள் மனிதனை வெளியிலிருக்கும் நிலைமை களுக்கு அடிமையாக்கின. சூழ்நிலைகளை ஆட்டிப் படைக்கவேண்டியவன் அவைகளுக்கு அடிபணிய நேர்ந்தது. இதனால் தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டிய சமுதாயம் மாறாத நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இத னால் மிருகங்களை வணங்க வேண்டியவனானான். இயற் கையைக் கட்டி ஆளவேண்டிய மனிதன், குரங்கை அனுமான் என்றும், பசுவை சப்பலா என்றும் நம்பிக்கொண்டு அடிபணிந்து கும்பிடலானான்.

- காரல் மார்க்ஸ்

('British Rule in India' என்ற நூலில்)

‘‘Compare with the preceding the utterance of Manava Dharma Sastra Chapter X, S.62'' Desertion of life without reward, for the save of preserving a priest or a cow may cause the beautitude of those base - born tribes.''

ஆதாரம்: (Karlmarx - Capital Vol.II Page 241)

மனுதர்ம சாத்திரம் பத்தா வது அத்தியாயம் 62 ஆம் சுலோகத்தை எடுத்துக்காட்டி, காரல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: பார்ப்பான், பசு இவர்களைப் புரக்கும் பொருட்டு கூலி பெறாமலேயே, உயிரைத் தியாகம் செய்வதே, சூத்திரர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் மார்க்கமாகும்.''

இந்த நாட்டில் சமனிலை, சமத்துவ ஒப்புரவு சமுதாயம் உருவாவதற்குக் கண்டிப்பாக வருண ஜாதி அமைப்புகளும், பார்ப்பனியமும் முற்றிலும் வேர றுக்கப்பட்டு மிச்சசொச்சம் ஏது மில்லாமல் எரித்து, அவற் றின் சாம்பலை பல்லாயிரம் அடி களுக்குக் கீழ்ப் புதைப்பது அவ சியம்.

இன்றைக்குக்கூட இந்துராஜ் ஜியம் அமைப்போம் என்று கூறும் ஒரு சக்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டிருப்பதும், அவற்றின் நடவடிக்கைகள் எல் லாம் பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்துவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்; தந்தை பெரியாரும், மார்க்சும் இந்துத்துவாவின் வேர் எங்கிருக்கிறது என்று சொன்னது இப்பொழுது நடைமுறையில் கண்ணெதிரே ராமராஜ்ஜியம் என்பது சூத்திரன், சம்புகன், இராம அவதாரம் எடுத்துக் கொல் லப்பட்டதையும் கவனத்தில் கொள்க!

- #மயிலாடன்

(இன்று மார்க்ஸ் நினைவு நாள் 1883)
14.3.22

புதன், 9 மார்ச், 2022

பகுத்தறிவாளர் கழக பெரியாரியல் பயிற்சி பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை -1

வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களுக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு? -2

தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்