தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சென்னை,மார்ச் 9- தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 6.3.2022 அன்று காலை 10.45 மணியளவில் துவங்கி நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் வேணுகோபால், கடவுள் மறுப்பு வாசகம் கூறி, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, உரையாற்றினார். மாவட் டத்தலைவர் மு. இரா. மாணிக் கம் தன் தலைமையுரையில், நீண்ட நாட் களுக்குப் பின், இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதற்கு, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து உரையாற்றினார்.
21.11.2021 அன்று காலை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் துணை அமைப்புகளான ஆசிரியரணி, எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய மாநில கலந்துரையாடல் கூட்டம், பகுத்தறிவாளர் கழக புரவலர் ஆசிரியர் அவர்கள் தலைமையிலும், கருத்துரை கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் வழிகாட்டு தலிலும் நடைபெற்றதைக் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது, முக்கிய வழிகாட்டுதல் நடைமுறைகளாக குறிப்பிடப்பட்டதாவது,
ஒரு துண்டறிக்கையாக, மாநில பகுத் தறிவாளர் கழக தலைமை வெளியிட்டது பற்றியும், அதில் கூறப்பட்டிருந்த முக் கியமான, சில வழிகாட்டுதல் பற்றியும் கூட்டத்தில் குறிப்பிட்டு உரையாற்றுகை யில், ஓர் ஆண்டுக்கு குறைந்தது ஒரு நிகழ்ச்சியாவது நடத்துதல், ஓர் ஆண் டுக்கு 4 மாத இடைவெளியில் மாவட்ட கமிட்டி - 3 நடத்துதல், மாவட்ட உறுப்பி னர்களின் முகவரி பட்டியல், அலைபேசி எண் தயாரித்தல், உறுப்பினர்கள் சேர்த்தல். மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டப் பொறுப்பாளர் களுக்கிடையே, வாரம் ஒரு முறையாவது அலைபேசியில் பேசுதல், மாநில பொறுப் பாளர்களுடன் குறைந்தபட்சம் மாதத் திற்கு ஒரு தடவை பேசலாம், விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ்களுக்கு அவசியம் சந்தாதாரராக, பொறுப்பாளர்கள் இருத்தல், நிகழ்ச்சிகள் நடத்தும் போது, நிகழ்ச்சிக்கு முன்பும், நடந்தவுடனும் விடுதலைக்கு செய்தி அனுப்புவது அவசியம்.
மாவட்ட கழகங்கள், அடுத்த மாநில கூட்டத்தில், தங்கள் செயல்பாடுகளை, அறிக்கையாக, கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங் குதல், மாவட்ட கழக அனைத்து நிகழ்வு களையும், மாவட்ட கழக பதிவேட்டில் பதிவு செய்தல், மாவட்டத்திற்கு ஒரு வாட்ஸ்அப் குழு மாவட்ட பெயரில் ஆரம்பித்தல், முகநூலில் பதிவுகள் இடுதல், ஆசிரியரணி பொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாவட்ட அளவில் ஆசிரியர் அமைப்பு களின் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, தேசிய கல்விக் கொள்கை - நீட் எதிர்ப்பு பற்றி விவாதித்து - கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல் ஆகிய வழிமுறைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.தா. சண்முகசுந்தரம் வழங்கிய கருத்துரையில், எப்படி செயல்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற வழிகாட்டுதல் உரையுடன், நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வை, கருத்தரங்கங்கள் மூலம், மக்களிடைய பரப்ப வேண்டும் என்றும், உறுப்பினர்கள் ஒவ்வொருவரி டம் இருந்தும், உறுப்பினர் படிவம் முழு மையாக பூர்த்தி செய்யப்பட்டு, மாவட் டத்தலைவரிடம் கொடுக்கப்பட வேண் டும் என்றும் பேசினார். (அதன்படி, கூட் டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர் களிடம் இருந்து உறுப்பினர் படிவம் பெறப்பட்டது).
கலந்துரையாடலின் போது மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தனது உரையில், கரோனா தொற்றின் போது, நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழல் இருந்த போது, தான், மாவட்டத் தலைவருடன், வாரம் ஒரு முறையாவது பேசி, பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகள், காணொலி கருத்தரங்கங் களை நடத்து வது பற்றி விவாதித்ததாக குறிப்பிட்டார்.
மாநில தலைவரை தான் நேரில் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டார்.
பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இளம்பெரியார் நன்றியுரையில், ஆணவக் கொலைக்கு எதிரான, மூட நம்பிக்கை ஒழிப்புக்கான சட்டம், தமிழ் நாடு அரசால் இயற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டார். பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட துணைச்செயலாளர் அரும் பாக்கம் சா. தாமோதரனுக்கும் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர் களுக்கும், கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன:
மூடநம்பிக்கை ஒழிப்புக்கான சட்டம் இயற்றப்பட, தமிழ்நாடு அரசை வலி யுறுத்தியும், ஆணவக்கொலைக்கு எதி ரான சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கூட்டம் பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக