'நான் சுயமரியாதைக்காரன்"
நூல் வெளியீட்டு விழாவில் சித்தராமையா
பெங்களூரு, ஜன.7- “ஜாதிய ரீதியாக பிளவுபட்டி ருக்கும் வரை, நாம் யாரும் மனிதர்களாக வாழ முடி யாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், கருநாடக மேனாள் முதலமைச்சருமான சித்தராமையா கூறியுள்ளார்.
எம்.எஸ்.முத்துராஜ் எழுதிய ‘நான் சுயமரியாதைக் காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.
‘நான் சுயமரியாதைக்காரன்' புத்தகத்தை திரைப் பட இயக்குநர் நாகதிஹள்ளி சந்திரசேகர் வெளி யிட்டார். புத்தகத்தின் ஆசிரியர் எம்.எஸ்.முத்துராஜ், மேனாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் எச்.எம். ரேவண்ணா மற்றும் மாநில சவிதா சமாஜத் தலைவர் என்.சம்பத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் சித்தராமையா பேசியதாவது:
கருநாடகத்தில் 12 ஆவது நூற்றாண்டில் ஜாதி களை ஒழிக்க பசவண்ணர் பாடுபட்டார். அவரது வழியில், ஜாதிகளால் புரையோடிப் போய் இருக்கும் தீண்டாமையை எதிர்க்க வேண்டும்.
நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, எந்த ஜாதியை சேர்ந்தவர் குருதி கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்த பிறகு நாம் ஜாதி பற்றி பேசுகிறோம். ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ்வது கடினம். செய்யும் தொழிலையே ஜாதியாக மாற்றி, மேல் ஜாதி-கீழ் ஜாதி என்று பிரித்து வைத்துள்ளனர். பல்வேறு தொழில் செய்பவர்களால்தான் மனித சமூகம் வாழ முடியும். பசவண்ணர் கூறியது போல் எந்த ஜாதியும் மேலா னதும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.
மூடநம்பிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை விதைப்ப வர்களை புறக்கணிக்காவிட்டால் சமுதாயத்தில் மாற் றத்தை ஏற்படுத்த முடியாது.
அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். கருநாடகத்தில் நாடு விடுதலை அடைந்த போது கல்வி அறிவு பெற்றவர்கள் விழுக்காடு 18 ஆக இருந்தது. தற்பொழுது 78 சதவிகிதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் ஜாதிகள் குறையவில்லை. படித்தவர்களால்தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. கல்வி பகுத்தறி வுடன் இருக்க வேண்டும். ஜாதி உணர்வுடன் முதுநிலை கல்வி கற்றாலும் அது கல்வியே இல்லை. கற்றவர்களிடையே ஜாதியம் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது. சுயமரியாதை உள்ளவர்களாக வாழ வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.