ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இங்கர்சால் பொன்மொழிகள்



உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்
  • உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.
  • ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.
  • உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.
  • உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.
  • நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.
  • உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.
  • உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.
  • உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.
  • பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.
  • அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.
  • உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.
  • சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.
  • நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.
  • அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.
  • -விடுதலை.1.3.14

நாத்திக நன்னெறியின் அழைப்பு!

"மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கிறது" என்றார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் உலகத் தலைவர் தந்தை பெரியார்.
பகுத்தறிவின் சீலத்திற்கு இதைவிட சிறந்த வரைபடத்தை எங்கே காண்போம் - எங்கே காண்போம்?
இன்னொன்றும் முக்கியம், மிக முக்கியம்!
"மக்களை எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்கிறேன்" (விடுதலை, 4.4.1968) - என்றும் தத்துவச் சுரங்கம் தந்தை பெரியார் தம் சிந்தனைப் பெட்டகத்திலிருந்து அள்ளித் தந்துள்ளார்.
இது ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட சூரணங்கள் என்று நினைக்கத் தேவையில்லை. உலக மாந்தர்தம் சீர்கெட்ட சிந்தனையிருட்டை விரட்டி, புத்துலகப் பூங்காவுக்கு அழைத்து வரும் தூண்டா விளக்காகும்.
ஒரு காசுக்குப் பெறாத கடவுளைக் கட்டிக்கொண்டு அழவில்லையா? மதியை மயக்கும் அபினாம் மதத்தின் அழுக்குச் சேற்றில் ஆனந்த குளியல் போடவில்லையா?
மதக் குருமார்களின் சுரண்டலுக்கும், சூழ்ச்சிக்கும் தன்னை விற்கும் தக்கை மனிதர்களாகத் தவழ்வதைக் காண முடியவில்லையா?
சாத்திர சம்பிரதாய மூடச் சாக்கடையில் புழுக்களாகக் குதித்தாடவில்லையா?
யதார்த்தமான இன்ப நடப்பு வாழ்வை - இல்லாத வாழ்வாக - ஏக்கம் நிறைந்த வாழ்வாக - நினைத்து, இடி வீழ்ந்த குட்டிச் சுவராக தாவாயில் கைகளை வைத்துக் கைதியாக மனிதன் கிடக்கவில்லையா?
இல்லாத சொர்க்க இன்பத்தை எண்ணி எண்ணி இருக்கிற வாழ்வைத் தொலைத்துக்கொண்டிருக்கும் தொல்லை விலங்குகளைத் தம் மூளையில் மாட்டிக்கொண்டு மூலையில் குப்பைபோல ஒதுங்கி, ஒடுங்கிக் கிடக்கவில்லையா?
பஞ்சமா பாதகங்களையும் பட்டியல் போட்டு மனிதனைச் செய்யவிட்டு, பாவ மன்னிப்புப் பட்டிகளையும், பிராயச்சித்தம் ஏற்பாடுகளையும், கழுவாய் தேடும் கணவாய்களையும் திறந்து வைத்து, மக்களின் ஒழுக்கத்தைக் களவாடி, மனிதன் சட்டைப் பைக்குள்ளிருக்கும் பணத்தையும், காலத்தையும் பட்டப் பகலில் திருடும் நிலை நாட்டில் நிகழவில்லையா?
இந்தக் கசமாலக் குட்டைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பது எப்படி? கற்பனை இருட்டிலிருந்து வெளிச்சமான நிஜ உலகிற்குக் கூப்பிடுவது எப்படி? அதற்கு என்ன மார்க்கம்?
நன்னெறி பகுத்தறிவு - பகுத்தறிவு! நன்னெறிப் பாதை - நாத்திக நன்னெறியே!
மனிதநேயத்தின் அடிப்படையில் மக்களைக் கூவிக் கூவி அழைக்கும் கொள்கை இது.
நம்பு - நம்பினால் மோட்சம்! நம்பாவிட்டால் நரகம் என்று அச்சுறுத்தும் - பேராசையைத் தூண்டும் ஆபாசப் புத்தி இங்கு இல்லை.
இது ஒரு நேர் வழி! இன்ப வாழ்வைத் தரும் புது வழி!!
அறிவாளிகள் நாட்டில் அதிகம் இருக்க முடியாது. படிப்பாளிகள் வேறு, அறிவாளிகள் வேறு! மூளை உள்ளவர்கள் வேறு - அந்த மூளையைச் சதா செயல்பட வைக்கும் சாதனை மனிதர்கள் வேறு!
இவர்கள் எண்ணிக்கையில் எத்தனைப் பேர் என்பது முக்கியமல்ல! அணுகூட சிறியதுதான், ஆற்றல் மிக்கது! மடிக்கணிப் பொறி கையடக்கத்திற்குள் வந்து மாபெரும் உலகப் பரப்பைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தவில்லையா?
ஆம், அந்தச் சிறுபான்மை எண்ணிக்கை நாத்திகர்கள்தான் இந்த மூட உலகப் பந்தைப் புரட்டிப் போடவேண்டியவர்கள்.
மாற்றம் நிகழாமல் இல்லை. இங்கிலாந்து நாட்டில் அரசுப் பேருந்துகளில் நாத்திகப் பிரச்சார விளம்பரப் பலகைகளைக் காண முடிகிறது.
உருத்திராட்சக் கொட்டை மகிமை என்று லண்டன் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட விளம்பரம் தடைபடுத்தப்பட்டதே!
(தமிழ்நாட்டின் ஊடகங்களை நினைத்தால் வெட்கம்தான் - அதுவும் மாறும் - அல்லது மாற்றுவோம்!).
உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதானிருக்கிறது - இதோ ஒரு பட்டியல் (விழுக்காட்டில்):
1. சுவீடன் -    46.85
2. வியட்நாடம்    -    81
3. டென்மார்க்    -    43.80
4. நார்வே -    31.72
5. ஜப்பான்    -    64.65
6. செக் குடியரசு    -    54.61
7. பின்லாந்து    -    26.80
8. பிரான்சு    -    43.54
9. தென்கொரியா -    30.52
10. எஸ்டோனியா    -    94
(டைம்ஸ் ஆஃப் இந்தியா, 5.6.2010)
இப்பொழுது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலும்கூட கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள இளைஞர்கள் திரள ஆரம்பித்துவிட்டனர்.
(தினமணிக்கதிர், 19.9.2010)
நாத்திகம் பரவப் பரவத்தான் நாட்டு மக்கள் மத்தியிலும் சகோதரத்துவமும், சமத்துவமும் கைகோத்து நல்லாட்சி புரியும்.

திருச்சியில் ஜனவரி 7 முதல் 9 முடிய திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் - விஜயவாடா கோரா நாத்திக மய்யமும் இணைந்து நடத்தவிருக்கும் உலக நாத்திகர் மாநாடு - இந்த வகையிலே புதிய திருப்பத்தை அளிக்கப் போகிறது.
முக்கியமாக புதிய தலைமுறையினரே, முனைந்து வாருங்கள்!
இளைஞர்களே - உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முற்போக்குக் கொள்கை மாநாடு உங்களின் கைகளைக் குலுக்கிடக் கூப்பிடுகிறது.
"பெரியாரே ஒளி!" என்றார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். இதில் எண்ணற்ற சிந்தனை விதைகள் முளைத்து முறுவலிக்கின்றன!
ஒளியில்லா வாழ்வும் ஒரு வாழ்வா? பாழ் செய்யும் மதமும் ஒரு மார்க்கமா?
மறுபரிசீலனை செய்திட அழைக்கிறது திருச்சிராப்பள்ளி! மறுக்காமல் வாருங்கள்,
மாற்றத்தைக் காணுங்கள்!
எங்களுக்காக அல்ல,
உங்களுக்காக -
உங்கள் சந்ததிகளின்
மறுமலர்ச்சிக்காக!
நாத்திகப் பேரறிஞர்கள் - நன்மார்க்கம் காட்ட கூடுகிறார்கள் - கூடுகிறார்கள் - நீங்கள் கூட வேண்டாமா?
-மின்சாரம் -
-விடுதலை,31.12.10

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஜெர்மனி உலகப் பகுத்தறிவாளர் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு






புதுச்சேரி, செப். 12_ புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 6.9.2015 புதுச்சேரி ராசாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கைலாச நெ.நடராசன் வரவேற்பு ரையாற்றினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை தாங் கினார். புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர.இளங்கோ வன், மண்டல கழகச் செய லாளர் கி.அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கள் ஜி.கே.எம், லோ.பழனி, மேனாள் ப.க.தலைவர் கோ.கிருட்டிணராசு ஆகி யோர் முன்னிலை வகித்த னர். புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட பகுத்தறிவா ளர் கழக துணைத் தலை வர் மு.ந.நடராசன் இணைப் புரையாற்றினார். முன்னதாக கன்னட மூத்த எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியு மான பகுத்தறிவாளர் எம். எம் கல்புர்கி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து ஒரு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப் பட்டு வீரவணக்கம் செலுத் தினர். மறைந்த ஏவுகணை விஞ்ஞானி ஆ.ப.ஜெ. அப் துல்கலாம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்க ணம் தந்த அறிஞர் இரா பர்ட் கால்டுவெல் ஆகி யோரின் படங்களை பகுத் தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் மா.அழகிரி சாமி அவர் கள் கழக பொறுப்பாளர் கள் முன்னிலையில் திறந்து வைத்தார். எதிர்வரும் காலங்களில் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் செயல்படவேண்டியது பற்றி கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவா ளர் கழக பொறுப்பாளர் கள் தெரிவு செய்யப்பட்டு பொதுச்செயலாளர் மா. அழகிரிசாமி அவர்கள் அறிவிப்பு செய்தார்கள்.
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள்
புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகப் புரவலராக மேனாள் திராவிடர் கழ கப் பொருளாளர் தொழில் அதிபர் இரா.சடகோபன் அவர்களும், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவராக மீண்டும் வீர. இளங்கோவன் அவர்க ளும், துணைத்தலைவராக பட்டய கணக்காளர் கு. இரஞ்சித்குமார் அவர் களும், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகச் செயலாள ராக கைலாச நெ.நடராசன் அவர்களும், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராக கோ. கிருட்டிணராசு அவர்க ளும், துணைச் செயலாள ராக தோழர் செ.கா.பாஷா அவர்களும் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன், மாநில தலை வர் சிவ.வீரமணி ஆகி யோர் கருத்துரைக்கு பின் தமிழக பகுத்தறிவாளர் கழ கப் பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி அவர்கள் கழகபொறுப்பாளர்கள் புதிய உறுப்பினர்களை ஈர்த்து கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க செய்ய வேண்டும் எனவும், நடைபெறவிருக்கின்ற பெரியார் 1000 வினா விடை போட்டியில் அதிக மாணவ மாணவியர்களை கலந்து கொள்ள செய்ய பகுத்தறிவாளர் கழகம் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும் ப.க.உறுப் பினர் பட்டியல் முகவரியு டன் சரியாக இருக்க வேண்டும் எனவும் கருத் தரங்குகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என் றும் பகுத்தறிவாளர் கழ கத்தின் சார்பில் ஆண்டு இறுதியில் பொதுக்கூட் டம் நடத்த வேண்டும் மேலும் நம்முடைய கருத் துக்களை பெரியார் கருத் துக்களை நவீன முறையில் யீணீநீமீதீஷீஷீளீ, ஷ்லீணீஜீ மூலம் பரவ செய்ய வேண்டும் எனவும் சிறப்பாக நகைச் சுவையுடன் எடுத்துக் கூறினார். இறுதியில் பகுத் தறிவாளர் கழக தமிழக அமைப்புச் செயலாளர் தோழர் தமிழ் செல்வன் அவர்கள் தமது உரை யில்:_ தந்தை பெரியார் அவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என கொசுக்கடியையும் பொருட்படுத்தாது இயக்க தோழரின் வீட்டுத் திண் ணையில் உறங்கி இயக்க வளர்ச்சிக்கு உழைத்தது பற்றி சுவை பட எடுத்து கூறினார். மேலும் ப.க.தோழர்கள் கருத்தரங்குகளுக்கு ஒருவர் இன்னொருவரை அழைத்து வரவேண்டும் எனவும், அரசு அலுவல கங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கருப்பு சட்டையுடன் சென்று நம்மை அடையாளப்படுத் தினால் நமக்கு ஆதரவா னவர்களை நாம் அடை யாளம் கண்டு இயக்க வளர்ச் சிக்கு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் என வும் ஆண்டுக்கு ஒரு முறை ப.க.கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும், பெரி யார் 1000 வினா போட்டி களை கழகத் தலைவர் செயலாளர்களுடன் ப.க. தலைவர், செயலாளர் பொறுப்பாளர்கள் இணைந்து சிறப்பாக அதிக அளவில் கலந்து கொள்ள செய்து நடத்த வேண்டும் எனவும், ஜெர் மனியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் புதுச்சேரி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.
இடையில் பகுததறிவா ளர் கழக அமைப்புச் செய லாளர் சமீபத்தில் வெளி யான இராபர்ட் இங்கர் சால் வாழ்க்கை வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி பொறுப்பாளர்கள் முன் னிலையில் வெளியிட்டு வழங்கினார். தோழர்கள் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர். முடிவில் ஜெ.ஜீவன் சார்வாகன் நன்றி கூறினார்.
-விடுதலை,12.9.15

கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம்

ஹார்வேடு பல்கலைக் கழக மாணவர்களிடையே கணக்கெடுப்பு
கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம்
அமெரிக்கா ஹாஸ்பர்க்கில் பகுத்தறிவு மாநாடு
கேம்ப்ரிட்ஜ், செப்.12_ அமெரிக்க அய்க்கிய நாட் டில் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள பன்னாட்டளவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் இணைந்து வரும் புதிய மாணவர்களில் பலர் தம்மை வெளிப்படையாக நாத்திகர்கள் என்றும் கட வுள் கவலையற்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள தாக புதிதாக வெளியாகி யுள்ள புள்ளிவிவரத் தகவ லை ஹார்வேடு பல் கலைக்கழகத்தின் மாண வர்கள் ஏடான கிரிம்சன் வெளியிட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க, புரோடொஸ்ட்டன்ட் கிறித் தவர்களைக்காட்டிலும் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களின் எண் ணிக்கை அதிகமாக உள் ளது. பல்லாயிரம் ஆண்டு களாக இருந்து வருகின்ற வற்றை உடைத்து நொறுக்கி, இன்றைக்கும் கிறித்தவர்கள் பெரும் பான்மையராக உள்ள நாடாக உள்ள அமெரிக்க அய்க்கிய நாட்டில் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பெருகிவருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் நம்பிக்கைகளும், வாழ்க்கை முறைகளும் என்கிற தலைப்பில் திரட் டப்பட்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக புள்ளி விவரத் தகவல்களின்படி, 21 விழுக்காட்டளவில் கடவுள் கவலையற்றவர் களாகவும், 17 விழுக்காட் டளவில் நாத்திகர்களாக வும் மொத்தத்தில் 38 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாத கட வுள் கவலையற்றவர்கள் அல்லது நாத்திகர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.
17 விழுக்காட்டளவில் கத்தோலிக்கர் மற்றும் 17 விழுக்காட்டளவில் புரோட் டஸ்டன்ட் மொத்தத்தில் 34 விழுக்காட்டளவில் தங்களைக் கிறித்தவர் களாகவும் அறிவித்துக் கொண்டுள்ளனர்.
யூதர்களாக 10 விழுக் காட்டளவிலும், இந்துக் களாக 3 விழுக்காட்டள விலும், முசுலீம்களாக 3 விழுக்காட்டளவிலும், 0.4 விழுக்காட்டளவில் மோர்மன்களாகவும் அறி வித்துக் கொண்டுள்ளனர்.
மேற்கண்ட எந்த வகையிலும் இடம் பெறா தவர்களாக மற்றவர்கள் பட்டியலில் 12 விழுக் காட்டளவினர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த புள்ளிவிவரத் தகவல்களை ஹார்வார்ட் மாணவர்கள் ஏடான தி ஹார்வார்ட் கிரிம்சன் வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான புள்ளிவிவரங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் அண்மையில் வெளியாகி உள்ள ஹார்வார்ட் புள்ளிவிவரங்கள் பழை மையான நம்பிக்கைகளிலி ருந்து அமெரிக்கர்கள் வெளியேறி, அதிலிருந்து மாற்றமடைந்து வருகி றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாற்றம்
அமெரிக்க இளைய தலைமுறையினர்குறித்த நீண்ட கால ஆய்வுகளின் மூலமாக குறிப்பாக 30 வயதுக்குள் உள்ள இளை ஞர்கள் பல்லாயிரக்கணக் கானவர்கள் மத நம்பிக் கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வரு கின்றனர்.
கடந்த மே மாதத்தில் பியூ ஆய்வு மய்யம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங் களின்படி, கிறித்தவ மத நம்பிக்கைகளிலிருந்து 2007ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை 8விழுக்காட்டளவில் குறைந்துள்ளனர். பல்லா யிரக்கணக்கிலான இளை ஞர்கள் மதங்களின்மீது பல்வேறு குற்றச்சாட்டு களைத் தெரிவித்து தங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிட்டார்கள்.
பியூ புள்ளி விவரதகவ லின்படி, 1981 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுக் கிடையே பிறந்த இளைஞர் களில் 35 விழுக்காட்டினர் மத அடையாளமில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட் டுள்ளனர். 32 விழுக்காட் டினர் புரோட்டஸ்டன்ட் கிறித்தவர்களாகவும், 16 விழுக்காட்டினர் கத்தோ லிக்கக் கிறித்தவர்களாக வும் குறிப்பிட்டனர்.
ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய மாணவர் களாக இணைபவர்களி டையே மின்னஞ்சல் வாயிலாக  புள்ளிவிவரங் கள் திரட்டப்பட்டன.
இந்த ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்கள் 1,184 மாணவர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்களில் 70 விழுக் காட்டினருக்கும்மேல் கல்வி முடித்து செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்களில் 53 விழுக்காட்டளவில் ஆண்களும், 46.5 விழுக்காட்டளவில் பெண்களும், 0.5 விழுக்காட்டளவில் மூன்றாம் பாலினத்தவர்களும் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் புதிய மாணவர்கள் 2019ஆம் ஆண்டில் கல்வி முடித்துச் செல்லும் மாணவர்களில் பெண்கள் 51 விழுக்காடாகவும், ஆண்கள் 48 விழுக்காடாகவும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவராக தங்களை அறிவித்துக்கொண்டுள்ளவர்கள் 0.4 விழுக்காட் டளவில் உள்ளனர்.
பகுத்தறிவு மாநாடு
அமெரிக்க அய்க்கிய நாட்டில் பென்சில்வேனியா மாநிலத் தலைநகர் ஹாரிஸ்பர்க்கில் நாத்திகர், மனிதநேயர்கள் பங்கேற்கவுள்ள பகுத்தறிவுரீதியில் காரணங்களை ஆராயும் மாநாடு இம்மாதம் 11 முதல் 13 முடிய 3 நாள்கள் நடைபெறுகிறது.
3 நாள்கள் நடைபெறும் பகுத்தறிவு மாநாடு ஹாரிஸ்பர்க்கில் 800 ஈ பார்க் டிஆர், பெஸ்ட் வெஸ்டர்ன் பிரிமியர் தி சென்ட்ரல் ஹோட்டல் மற்றும் கருத்தரங்க மய்யத்தில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று (11.9.2015) மாநாட்டுக்கு வருகைதரும் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி முடிய நடைபெற்றது.  இரவு 7 மணியளவில் நாத்திகக்கருத்துகளின் டிஜிட்டல் வடிவம் உள்ளிட்டவைகுறித்த பில், சூசி ராபின்ஸ் மற்றும் விருந்தினர்களின் உரைகளுடன் தொடங்கியது. இரவு 8 மணியளவில் நகைச்சுவையாளர் மேரிபெத் மூனி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிளவில் எ பெட்டர் லைஃப் படம்குறித்து கிறிஸ் ஜான்சன் பேசினார்.
இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று (12.9.2015) காலை 8 மணிமுதல் மாலை 5.20 மணி முடிய வருகையாளர்கள் பதிவு செய்யப்படுகிறது. 9 மணிக்கு அறிமுகம் மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து, 9.10 மணியளவில் நெகிழ்வுக்குள்ளாகிவரும் மதச்சார்பற்ற அரசியல் அதிகாரநிலைகுறித்து சாரா லெவின் உரையைத் தொடர்ந்து, நான் மலேரியாவால் பாதிக்கப்பட்டேன், நீங்களும் பாதக்கப்படலாம் எனும் தலைப்பில் பென் பிளாஞ்சார்ட் உரையாற்றினார். 10.45 மணியளவில் பகுத்தறிவுக்கருத்துகளும், முசுலீம் உலகமும் எனும் தலைப்பில் முகம்மத் சையீத் உரையைத் தொடர்ந்து, இயேசு இல்லாத கிறித்தவம்: எல்லாம் தொடக்கம் எவ்வாறு எனும் மாற்றுத் தத்துவம் எனும் தலைப்பில் ரிச்சர்ட் கேரியர் உரையாற்றினார்கள்
உணவு இடைவேளைக்குப்பின், புனிதப்பசுக்கள்: நம்பிக்கை மற்றும் உலகைச்சுற்றியுள்ள பழைமைவாதம்குறித்த சுருக்கமான பார்வை எனும் தலைப்பில் சேத் ஆண்ட்ரியூஸ், கடவுள், மத நம்பிக்கைக்குப் பின்னரும் வாழ்க்கையில் விளையாடும் பட்டினியிலிருந்து பெறக்கூடிய பாடங்கள் எனும் தலைப்பில் தெரசா மேக்பெயின், கருப்பர் இனத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்:கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எனும் தலைப்பில் மாண்டிசா தாமஸ்  உரையாற்றுகிறார்கள்.
இரண்டாம் நாள் தொடர் நிகழ்வாக இரண்டாம் அடி:அற்புதம் விளைகிறது தலைப்பில் மேட் தில்லாஹண்டி, நட்சத்திர மீன்களை பாதுகாப்பது குறித்து சாரா மோர்ஹெட், நம்முடைய கடவுளற்ற கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது எனும் தலைப்பில் லீ மூரே, பேச்சுவழக்கு சொல் கவிதை தலைப்பில் விக்டர் ஹாரிஸ்,  ராமென் பாட்காஸ்ட் குறித்து மார்க் நேபோ மற்றும் ஆரோன் ரா ஆகியோர் இரண்டாம் நிகழ்வில் உரையாற்றுகின்றனர். இசை நிகழ்ச்சி ஷெல்லி சேகல் வழங்குகிறார்.
மூன்றாம் நாள் நிகழ்வாக நாளை (13.9.2015) காலை 8 மணி முதல் 10 மணி முடிய பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் தொடங்குகிறது.
பாலியல் வன்செயல்கள், வன்புணர்ச்சி,  எனும் தலைப்பில் விசித்திரமான கழுதைகள்குறித்து குறிப்பிடும் பைபிள் எனும் தலைப்பில் டேவிட் ஃபிட்ஸ்ஜெரால்ட், கடவுள் மத நம்பிக்கையாளர்களைப் புரிந்து கொள்வது எனும் தலைப்பில் பெத்பிரஸ்வுட் உரையாற்ற இசை நிகழ்ச்சி ஜார்ஜ் கிராப் வழங்குகிறார். இளைஞர் வளர்ச்சி குறித்த கருத்துகள் வினா_விடை  நிகழ்ச்சியை அமண்டா மெட்ஸ்காஸ் வழங்குகிறார்.
காரணங்களை முன்னிட்டு மீண்டும் போராடுவது எனும் தலைப்பில் கெவின் டேவிஸ் பேசுகிறார்.
பட்டினிக்கு எதிராகப் போராடும் நாத்திகர்கள் என்கிற வகையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் பென்சில்வேனியா நாட்டின் தலைநகர் ஹாரிஸ்பர்க்கில் மனிதநேயத் தொண்டூழியர்களுடன் இணைந்து உணவு கிடைக் காமல் பட்டினியால் வாடுபவர்களுக்காக உணவு வங்கிக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
-விடுதலை,12.9.15

பைபிளையும் ஏசுவையும் நான் நம்பவில்லை! டார்வின் கடிதம் ஏலம்


நியூயார்க், செப். 12- உலகின் அனைத்து மக்களும் தாம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என எண்ணியிருந்த காலத்தில், பரிணாம வளர்ச்சி பற்றிய தனது தேடல்களை புத்தகமாக வெளியிட்ட சார்லஸ் டார்வின் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டிருந்த கடிதம் ஏலத்துக்கு வரவிருக்கிறது.
இங்கிலாந்தின் பணக் கார குடும்பத்தில் பிறந்த டார்வின் தனது சிறு வயது முதலே, இயற்கை யின் புதிர்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட் டினார். அதன்பின்னர் மேற்கொண்ட ஐந்து ஆண்டு கப்பல் பயணம், அவரை ஒரு பிரபல புவியியல் வல்லுநராகவும் அடையாளம் காண காரணமானது.
அவரது பரிணாம வளர்ச்சி கொள்கை என்ற தனித் தன்மையான கருத்தால் டார்வின் தனியாகத் தெரிந்தாலும், தனது கடவுள் மறுப்பு கொள் கையை அவர் பகிரங்க மாக ஒப்புக்கொள்ள வில்லை.
அவரது புத்த கத்தைப் படித்த ஆத்திகரான மெக்டெர்மோட் என்கிற ரசிகனின் கேள் விக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் ஏசு கடவுளின் குழந்தை என ஒப்புக் கொள்ள முடியவில்லை என டார்வின் குறிப்பிட் டிருந்தார்.
மெக்டெர் மோட் இதுகுறித்து யாரி டமும் வெளிப்படுத்த மாட்டேன் என அவர் டார்வினுக்கு கொடுத்த வாக்குப்படி இதுவரை யாருக் கும் தெரிவிக்கவில்லை.
இந்தக் கடிதம் எழுதிய இரண்டாண்டுகளில் டார்வின் மரணத்தைத் தழுவினார். எனினும், இந்தக் கடிதம் பற்றி 100 ஆண்டுகளுக்கு எந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாமல் இருந்தது. பிரிட்டனின் பிரபல போன்ஹாம்ஸ் என்னும் ஏல நிறுவனத்தின் அறி வியல் மற்றும் வரலாறு தொடர்பான சேமிப்பு களில் ஒன்றான இந்தக் கடிதத்தை வரும் 21-ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏலம்விட இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய கடிதம்  90 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 60 லட்சம்) வரை   ஏலம் கேட்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-விடுதலை,12.9.15

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நாத்திகர்களின் எண்ணிக்கை வளர்கிறது

மதநம்பிக்கை, சமயச்சிந்தனைகள் எதிர்காலத்தை வளப்படுத்தாது
இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்களின் கருத்து
மும்பை ஏப்ரல் 21  இந்தியத் தொழில் நுட் பக்கழக மாணவர்களி டையே நாத்திகக் கருத்து வலுவாக பரவியுள்ளது. 2013-_14 ஆம் கல்வியாண் டில் பயிலும் மாணவர் களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் நுட்ப கழகங்களில் பயி லும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்வி கற்கும் நிலையில் அவர் களின் கடவுள்/மத நம் பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில் நுட்ப மேற்கல்வி பயி லும் மாணவர்கள் முழு மையான நாத்திக கருத்துள்ளவர்கள் என் றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை பற்றிக் கவலை இல் லாதவர்கள் என்றும் 47.1 விழுக்காடு மாண வர்கள் கடவுள் நம்பிக் கையுடையவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங் களுக்கு இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான், கல்வி கற்கும் போது அறிவியல் உபகரணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத் தது. மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலை யில்லை என்று கூறினர்.
பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை, என்று கூறினர். மதப் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர் கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டுத் தான் இங்கு வருகிறார்கள். 2013-_14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பகழக மாண வர்களில் பெருமாபாலா னோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தி விடு கின்றனர். தேர்வு என்று வரும் போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.    மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழக பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாண வர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ணயித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது. இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது.
ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கை களை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட்டுத் தான் வருகிறார்கள்.  முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு,பாடங்களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவைகளால் தான் ஒரு தலைசிறந்த மாணவர் களாக அவர்கள் இங் கிருந்து வெளியேற முடி யும் என்பதும், தொழில் நுட்ப கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளுடன் பயிலும் போது சரியான எல்லையை அடைய முடியாமால் போவதுடன் அவர்களால் சுதந்திர மான மனநிலையுடன் செயல் பட முடியாமல் போய் விடுகிறது என்று கணிப்பு வெளியாகியுள்ளது.
-விடுதலை,21.4.15

சனி, 5 செப்டம்பர், 2015

நடைபாதைக் கோயில்களை இடித்துத்தள்ள, தமிழக அரசின் உத்தரவு.


அய்யாவின் அடிச்சுவட்டில் ... 136

பகலவன் பாருக்கே சொந்தம்
அதன்பிறகு, நடைபாதைக் கோயில்களை இடித்துத்தள்ள, தமிழக அரசின் உத்தரவு. அன்றே விடுதலையில் வெளியிட்டோம். அரசு ஆணையானது, நமக்கு எல்லோருக்கும் பயன்படும் என்பதால் இங்கே அதன் சுருக்கத்தைத் தருகிறேன்.
தமிழ்நாடு அரசு
கிராம வளர்ச்சி, உள்ளாட்சித் துறை
ஜி.ஓ.எம்.எஸ். எண் 1052; 28 மே 1973
உத்தரவு:
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாலைகளில் அங்கீகாரமின்றி கட்டப்படும் கோயில்களைத் தடுப்பது குறித்து, கடந்த சில காலங்களாகவே அரசு பரிசீலித்து வந்துள்ளது. பொதுவாக சாலை ஓரங்களில் அமைக்கப்படும் கோயில்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமலே அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த கோயில்கள் ஒரே இரவில் எழுப்பப்பட்டு விடுவதால் கட்டப்படும் நிலையிலேயே அதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகரசபைகள் சட்டம், 1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டப்படி, பொதுமக்கள் வழிபாட்டுக்காகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு கீழ்க்கண்ட விதிகள் இன்னும் அமுலில் இருந்து கொண்டிருக்கின்றன.
1920ஆம் ஆண்டு தமிழ்நாடு, மாவட்ட நகரசபைகளின் சட்டம் 191வது பிரிவும், 1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் 230வது பிரிவும், இந்த கட்டிடங்களை முறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை அரசுக்கு வழங்குகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகரசபைகளின் 1920ஆம் ஆண்டு சட்டம், கட்டிட விதிகள் பிரிவு 6(4)ன்படி மாவட்ட ஆட்சித்தலைவரின் முன் அனுமதியின்றி, மத சம்பந்தப்பட்டவைகளுக்கோ, பொதுவழிபாட்டுக்கோ, கட்டிடங்கள் கட்டுவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்தக் கூடாது. அப்படிக் கட்டுவதனால் பொதுமக்கள் அமைதிக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ ஆபத்து வரும் என்ற நோக்கத்தோடு அனுமதியளிக்க மறுத்தால், மாவட்ட ஆட்சித்தலைவரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசுக்கு அப்பீல் செய்யலாம். அரசு சரி என்று உணர்ந்தால் அனுமதி கொடுக்கலாம்.
1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி விதிகளின்படி:--_
(1) (IV): பொதுமக்கள் வழிபாட்டுக்காக கட்டிடம் கட்டப் பட்டால், அதனால் பொது அமைதிக்கு பாதகமில்லை என்று போலீஸ் கமிஷனரிடமிருந்து சர்டிபிகேட் பெற்றாக வேண்டும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் அரசுக்கு விண்ணப் பிக்கலாம். அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
நகரசபை இடத் திலோ, மாநகராட்சி இடத்திலோ இது போன்ற கட்டிடங் களுக்கு, அரசாங்க நகரசபை நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்ற அடிப்படையில் நிராகரிக்க முடியும்.
அரசுக்கோ, நகரசபைகளுக்கோ சொந்தமான இடங்களில், பொதுநோக்கத்துக்காக சாலை ஓரங்களில் கட்டப்பட உத்தேசித்திருக்கும் எந்த கட்டிடத்திற்கும் அனுமதி மறுக்கலாம். சாலை ஓரங்களில் உள்ள கோயில்களை இந்த முறையில் தடுக்கலாம்.
இதன் பிறகு, 7.10.1978இல் சென்னை தியாகராயர் நகர் பெரியார் நினைவு திடலில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபாதை கோயில்களை அகற்றக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், நான் மற்றும் ஜனசக்தி ஆசிரியர் தா. பாண்டியன், மேயர் வேலூர் நாராயணன், குணசீலன், சைதை எம்.பி. பாலு மற்றும் பார்வதி கணேசன், திருவண்ணாமலை கண்ணன் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். ஏராளமான பொதுமக்கள் கழக தோழியர்கள் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி நடைபெற்ற கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று 1973ஆம் ஆண்டு, மே மாதம் 28ஆம் தேதியே தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆணை எண்_1052. இவ்வளவு தெளிவாக அரசு ஆணை இருக்கும்பொழுது நடைபாதைக் கோயில்களை அகற்றுவதில் என்ன தவறு? ஏன் தயக்கம்? கோயிலையும் பக்தியையும் காப்பாற்றினால்தான், தங்களுடைய ஆதிக்கம் கெட்டியாக இருக்க முடியும் என்பதில் பார்ப்பனர்கள் அக்கறையுடன் இருக்கிறார்கள்.
புதுப்புதுக் கோயில்களை எப்படியும் உண்டாக்குவதிலே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமே _ இதே, பகுதியிலே பார்ப்பனர்கள் சேர்ந்துகொண்டு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கவில்லையா?
அது எப்படி உண்டானது? யார் அதற்கெல்லாம் காரணம் என்பதெல்லாம் சந்தி சிரித்ததே! பார்ப்பனர்க்கு எப்பொழுதும் பின்புத்திதான். ஒன்றைக் கொடுத்து ஒன்பது வாங்கிக் கொள்வது அவர்கள் வாடிக்கை. அவர்கள் நம்மை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் நம் கொள்கைக்கு நல்ல அளவு விளம்பரமாகவே முடிந்திருக்கின்றன. நாம் மாநாடுகள் நடத்தினால் அவசரப்பட்டு சுவரொட்டிகள் அடிக்க அய்யா அவர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா முடிந்த சில நாட்களில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் விடுதலை அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னார், இப்பொழுது பெரிய பிரச்சினையாகி உள்ள இந்த நடைபாதைக் கோயில்கள் பற்றி நான், தீசிஸ் (Thesis)  எழுதலாம் என்று இருக்கிறேன். இவ்விஷயத்தில் யார் யாரை சந்தித்தால் விவரம் கிடைக்கும் என்று கேட்டார். நானும் அதற்கான பட்டியலை அவரிடம் கொடுத்திருக்கிறேன். பார்ப்பனர்கள் எழுத எழுத நிலைமை எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? நீதிபதி மோகன் பேசினார், பேசினார் என்று எழுதி எழுதி விஷயம் நல்ல அளவு விளம்பரமாகிவிட்டதே!
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுக்கேகூட பார்ப்பனர்கள்தானே நல்ல அளவு விளம்பரம் கொடுத்தார்கள். சட்டசபையில் ஒத்திவைப்புத் தீர்மானம், கறுப்புக்கொடி காட்டியது என்ற வகையிலே நம் மாநாடு நல்ல அளவுக்கு விளம்பரம் ஆகிவிட்டது என்று அன்று கூறினார்கள். இவ்வாறு பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்கி உரையாற்றி என்னுரையை நிறைவு செய்தேன்.
கூட்டத்தில் ஜனசக்தி ஆசிரியர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் பேசும்போது, நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி ஒரு பொதுக்கூட்டத்தை நாம் இங்கு நடத்த வேண்டி உள்ளது. இப்படி ஒரு காரணத்திற்காகப் பொதுக்கூட்டம் இங்குதான் நடக்கும், அவ்வளவு விசித்திரமான நாடு.
நடைபாதைக் கோயில்கள் என்று சொல்லுவதே அசிங்கம் _ ஆபாசம் இல்லையா? தங்களுடைய கடவுள்களை நடைபாதைக் கடவுள்கள் என்று சொல்லும் அளவுக்குப் பக்தர்கள் விட்டு வைக்கலாமா? நாங்கள் எல்லாம் உயிரோடு இருக்கும்பொழுது எங்கள் கடவுள்கள் வக்கின்றி நடைபாதையிலே குடியிருக்க அனுமதிக்க மாட்டோம் என்று பக்தர்கள் கூற வேண்டாமா? இப்படி ஒரு இழிபெயர் தங்கள் கடவுள்களுக்கு ஏற்பட்டதற்காகப் பக்தர்கள் வெட்கப்பட வேண்டும். பக்தர்கள் தங்கள் கடவுள்களை மதிக்கிறார்கள் என்றால், நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்தி ஏர்கண்டிஷன் அறைக்குள் கொண்டுபோய் வைத்துக் கொள்ளட்டுமே! என்று குறிப்பிட்டார்.
********
கொழும்புவில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கப்பெற்று அதில் நான் கலந்துகொண்டேன், விழாவானது.
கொழும்பு, பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் கோவூர் அரங்கில் 24.9.1978 மாலையில் தந்தை பெரியாருக்கு, நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எனது முதல் பயணமும் (இன்றுவரை) இலங்கைக்குச் சென்ற இறுதிப் பயணமும் இதுதான்! முன்னதாகவே விமானம் மூலமாக கொழும்பு விமானநிலையம் வந்தடைந்த என்னை பெரியார் நூற்றாண்டு விழா குழுவினராகிய கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்களான தோழர்கள் நவசோதி எம்.ஏ., சந்திரசேகரன் பி.எஸ்.சி., எஸ்.பி. பாண்டியன், காசிநாதன், கவிஞர் சிவராசன், கம்பளைதாசன் மற்றும் தோழர்கள் வேலணை வீரசிங்கம், அழகுராசா, தியாகராசா உள்ளிட்ட தோழர்களும் மன்ற அமைப்பாளர் ப. சந்திரசேகரன் பி.எஸ்.சி., அவர்களும் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாலையில், இலங்கையின் பிரபல தினசரி இதழான வீரகேசரி நிருபர் பேட்டி கண்டார். திராவிடர் கழக பகுத்தறிவு மன்றத்தின் பொறுப்பாளரும் சங்கம் ஏட்டின் ஆசிரியருமான தோழர் மா.செ. அருள் என்னுடன் வந்தார். இலங்கை திராவிடர் கழகத்தலைவர் ஆ.பெ. முனுசாமி அவர்களும், ஆரம்ப கால இயக்க தோழர் இளஞ்செழியனும், அ.தி.மு.க இலங்கை அமைப்பாளர் தோழர் வித்தகன் ஆகியோரும் என்னைச் சந்தித்தனர்.
முதல் நாள் இரவு, திராவிடர் கழகத்தை இலங்கையில் வளர்த்து நிலைநிறுத்திய பெரியார் பெருந்தொண்டர் கு.யா.திராவிடக்கழல் அவர்கள் பல மாதங்களுக்கு முன் மறைந்தார். அவர் இல்லம் தேடிச்சென்று, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி திரும்பினோம். (வசதியற்ற எளிய சூழ்நிலையில் வாழ்ந்த பெருமகன்) பின்பு, கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக தயாரித்து அச்சிட்ட பெரியார் நூற்றாண்டு விழா மலரை நான் வெளியிட்டு முதல் பிரதியை சுயமரியாதை வீராங்கனை ஞான செபஸ்தியான் (தற்போது இந்த 94 வயது இளைஞர், நமது பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர்), சீதக்காதி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். அடுத்தது, இந்தியப் பேரரசு வெளியிட்ட நூற்றாண்டு விழா அஞ்சல் தலை, மற்றும் குறிப்புகளை நான் வழங்க, மன்றத்தின் அமைப்பாளர் திரு.சந்திரசேகரன், வீரசிங்கம், அழகுராசா உள்ளிட்டத் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிறகு, விழாவில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள் தொண்டினை நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்குடன் அய்யாவுக்கு நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் நடத்தும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி, பாராட்டுத் தெரிவித்து, 1932ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் தேதி பெரியார் அவர்கள் இலங்கையில் ஆற்றிய பேருரை குறித்தும், அய்யா அவர்கள் எப்படி ஒரு பகுத்தறிவுப் பகலவன் என்பதை விளக்கியும், பகலவன் பாருக்கே சொந்தம் ஒரு ஊருக்கல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல என்பதையும் பல ஆதாரங்களுடன் விளக்கி உரையாற்றினேன். அய்யா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவிருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு தொழில் அமைச்சரும் பிரபல தொழிற்சங்கத் தலைவருமான திரு. எஸ். கருணாகரத் தொண்டைமான் அவர்களை நான் சந்தித்து உரையாற்றினேன். அவர்களுக்கு அய்யா அஞ்சல் தலை, அய்யா வாழ்க்கை வரலாறு, இலங்கை பேருரை, வைக்கம் போராட்டம் பற்றிய நூல்களை வழங்கினேன்.
யாழ்ப்பாணம் பகுதிகளில் ஜாதிக்கொடுமைகள் உள்ளது. அங்கு உங்கள் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். பிறகு நான் பத்திரிகையாளர்களுடன் கொழும்புவில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஒன்றான ஹாலிடே இன் (Holiday Inn) என்ற ஓட்டலின் முதல் மாடியில் இலங்கை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பிரபல வணிக வியாபாரியான வேலணை வீரசிங்கம் செய்த இந்த ஏற்பாட்டில், இலங்கையின் பிரபல நாளேடுகளான வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, கலாவல்லி ஆகிய நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அய்யா விழாவன்று, சுயமரியாதை காப்போம், ஜாதியைத் தகர்ப்போம் என மக்கள் கடல் உறுதி பூண்டனர். இந்நிகழ்ச்சியில் எனக்கு ஈடு இணையற்ற வரவேற்பையும் அனைத்து தரப்பும் உள்ள தமிழ்ப் பெருங்குடியினர் நல்கினர். பெருநகரில் நடந்த அந்த நூற்றாண்டு விழாவில் மக்கள் கடல் ஆர்வப் பெருக்குடன் பங்கேற்றது நினைவில் நீங்கா வடுவாக உள்ளது என்பதனை நினைவுப்படுத்துகிறேன்.
(தொடரும்)

அறிவுலக மேதை இங்கர்சால்


இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 11ஆம் நாள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை ரெவரெட்ஜான் இங்கர்சால் ஒரு பாதிரியார். அவருடைய தாய் மேரி லிவிங்ஸ்டோன், இங்கர்சால் இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போதே இறந்துவிட்டார். இவரது தந்தை வேதநூலில் உள்ளதை அப்படியே நம்பக் கூடியவர்.
இங்கர்சால் தந்தையின் அறிவுரைப்படி வேதநூலை முழுமையாகப் படித்தார். ஆனால், சிந்தனை செய்துகொண்டே படித்தார். தனக்குள் கேள்விகளை எழுப்பினார். அதனால் அவருள் பல அய்யங்கள் எழுந்தன. படிப்பு போலவே விளையாட்டிலும், சிரித்து மகிழ்வதிலும் ஆர்வம் உடையவராய் இருந்தார்.
தனது 19ஆம் வயதிலே சிறந்த பாடல்களை எழுதினார். 20ஆம் வயதில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசக் கல்வியளித்தார். சட்டம் படித்து 1854இல் வழக்கறிஞரானார். அடிமைத்தனத்திற்கு எதிராய் முழங்கினார்.
1862இல் பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட ஈவா பார்க்கரை மணந்தார். 1863 முதல் வழக்கறிஞர் தொழிலைச் சிறப்புடன் செய்தார். தமது 34ஆம் வயதில் இல்லினாய்ஸ் பகுதியின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார்.
1877இல் மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்திரம் என்னும் தலைப்பில் ஒர் அரிய சொற்பொழிவாற்றினார். 1897இல் நான் ஏன் நம்பிக்கையற்றவன் என்னும் சிறந்த சொற்பொழிவாற்றினார். மனிதரை சீர்திருத்தும் விதம் என்பது அவரது மற்றொரு சிறந்த உரை.
மனிதன் கடவுளை நேசிப்பதைவிட மனைவியை நேசிப்பதே சிறந்தது என்றார்.
தான் ஈட்டிய செல்வத்தின ஒரு பகுதியை  பிறருக்குக் கொடுத்து உதவினார்.
21.07.1899இல் உயிர் நீத்தார். எச்சடங்கும் இன்றி இறுதியடக்கம் செய்யப்பட்டது. அவரது நூலிலிருந்து சில பக்கங்கள் மட்டும் படிக்கப்பட்டன.
1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய உருவச் சிலை பியோரியா என்ற ஊரில் திறக்கப்பட்டது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இங்கர்சாலைப்பற்றி பரப்புரைச் செய்தவர் தந்தை பெரியார். உலகளவில் இம்முயற்சியை எவரும் செய்தாரில்லை.
1.    மதம் என்றால் என்ன?
2.    கடவுள் கவலையற்றவன் நான் ஏன்?
3.    வால்டையரின் வாழ்க்கைச் சரித்திரம்.
4.    கடவுள்கள்
5.    பேய், பூதம், பிசாசு அல்லது ஆவி
6.    மனிதன் மங்கை, குழந்தை அவர்தம் சுதந்திரம்.
7.    எவ்வழி (Which Way?)
ஆகியவை இவரது சிந்தனைப் பேழைகளாகும்.
தற்போது இங்கர்சால் களஞ்சியம் என்ற பெயரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இங்கர்சால் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்பை வெளியிடவுள்ளார் என்பது உலகப் பகுத்தறிவாளர்களுக்கு உவப்பளிக்கும் செய்தியாகும். வாழ்க இங்கர்சால் பெருமை; வளர்க அவரின் கொள்கை வாரிசுகள்.
-உண்மை,16-31.8.15

வியாழன், 3 செப்டம்பர், 2015

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்:


இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தார்வாடி, செப்.1_ மூட நம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதி ராகவும் பேசியதால் சுட் டுக் கொல்லப்பட்ட மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் உடல் முழு அரசு மரியா தையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
தார் வாடில் நடைபெற்ற அவ ரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் மரி யாதை செலுத்தினர்.
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் மூத்த எழுத்தாளரும், முற் போக்கு சிந்தனையாளரு மான எம்.எம்.கல்புர்கி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 8.40 மணியளவில் அவரது வீட் டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
நேற்று அவரது உடல் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக தார் வாட் கர்நாடக பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கேசிடி மைதானத்தில் வைக்கப்பட்டது. அப் போது கர்நாடக முதல்வர் சித்த ராமையா, அமைச் சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ஜெயசிறீ, முன்னாள் முதல் வர்கள் எடியூரப்பா, ஜெக தீஷ் ஷெட்டர்,
குமார சாமி, தார்வாட் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் கல்புர்கியின் மனைவி உமா தேவி, மகன் விஜய், மகள்கள் பூர்ணிமா, ரூபா தர்ஷி உள்ளிட்டோருக்கு ஆறு தல் கூறினர்.
இதையடுத்து ஊர் வலமாக கொண்டு செல் லப்பட்ட கல்புர்கியின் உடல், கர்நாடக பல்கலை. வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரி யாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த எழுத்தாளரான கல்புர்கி யின் மறைவையொட்டி, தார்வாட் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
உரைநடை இலக்கியத் தில் ஆழமான புலமை மிக்க கல்புர்கியின் மறை வுக்கு கன்னட எழுத்தா ளர்களும், பேராசிரியர் களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல் வெட்டு அறிஞராகவும், ஹம்பி கன்னட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்புர்கியின் கொலையை கண்டித்து மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர் களும் கர்நாடகாவில் பல இடங்களில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
விடுதலை,1.9.15