ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம்

ஹார்வேடு பல்கலைக் கழக மாணவர்களிடையே கணக்கெடுப்பு
கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம்
அமெரிக்கா ஹாஸ்பர்க்கில் பகுத்தறிவு மாநாடு
கேம்ப்ரிட்ஜ், செப்.12_ அமெரிக்க அய்க்கிய நாட் டில் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள பன்னாட்டளவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் இணைந்து வரும் புதிய மாணவர்களில் பலர் தம்மை வெளிப்படையாக நாத்திகர்கள் என்றும் கட வுள் கவலையற்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள தாக புதிதாக வெளியாகி யுள்ள புள்ளிவிவரத் தகவ லை ஹார்வேடு பல் கலைக்கழகத்தின் மாண வர்கள் ஏடான கிரிம்சன் வெளியிட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க, புரோடொஸ்ட்டன்ட் கிறித் தவர்களைக்காட்டிலும் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களின் எண் ணிக்கை அதிகமாக உள் ளது. பல்லாயிரம் ஆண்டு களாக இருந்து வருகின்ற வற்றை உடைத்து நொறுக்கி, இன்றைக்கும் கிறித்தவர்கள் பெரும் பான்மையராக உள்ள நாடாக உள்ள அமெரிக்க அய்க்கிய நாட்டில் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பெருகிவருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் நம்பிக்கைகளும், வாழ்க்கை முறைகளும் என்கிற தலைப்பில் திரட் டப்பட்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக புள்ளி விவரத் தகவல்களின்படி, 21 விழுக்காட்டளவில் கடவுள் கவலையற்றவர் களாகவும், 17 விழுக்காட் டளவில் நாத்திகர்களாக வும் மொத்தத்தில் 38 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாத கட வுள் கவலையற்றவர்கள் அல்லது நாத்திகர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.
17 விழுக்காட்டளவில் கத்தோலிக்கர் மற்றும் 17 விழுக்காட்டளவில் புரோட் டஸ்டன்ட் மொத்தத்தில் 34 விழுக்காட்டளவில் தங்களைக் கிறித்தவர் களாகவும் அறிவித்துக் கொண்டுள்ளனர்.
யூதர்களாக 10 விழுக் காட்டளவிலும், இந்துக் களாக 3 விழுக்காட்டள விலும், முசுலீம்களாக 3 விழுக்காட்டளவிலும், 0.4 விழுக்காட்டளவில் மோர்மன்களாகவும் அறி வித்துக் கொண்டுள்ளனர்.
மேற்கண்ட எந்த வகையிலும் இடம் பெறா தவர்களாக மற்றவர்கள் பட்டியலில் 12 விழுக் காட்டளவினர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த புள்ளிவிவரத் தகவல்களை ஹார்வார்ட் மாணவர்கள் ஏடான தி ஹார்வார்ட் கிரிம்சன் வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான புள்ளிவிவரங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் அண்மையில் வெளியாகி உள்ள ஹார்வார்ட் புள்ளிவிவரங்கள் பழை மையான நம்பிக்கைகளிலி ருந்து அமெரிக்கர்கள் வெளியேறி, அதிலிருந்து மாற்றமடைந்து வருகி றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாற்றம்
அமெரிக்க இளைய தலைமுறையினர்குறித்த நீண்ட கால ஆய்வுகளின் மூலமாக குறிப்பாக 30 வயதுக்குள் உள்ள இளை ஞர்கள் பல்லாயிரக்கணக் கானவர்கள் மத நம்பிக் கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வரு கின்றனர்.
கடந்த மே மாதத்தில் பியூ ஆய்வு மய்யம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங் களின்படி, கிறித்தவ மத நம்பிக்கைகளிலிருந்து 2007ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை 8விழுக்காட்டளவில் குறைந்துள்ளனர். பல்லா யிரக்கணக்கிலான இளை ஞர்கள் மதங்களின்மீது பல்வேறு குற்றச்சாட்டு களைத் தெரிவித்து தங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிட்டார்கள்.
பியூ புள்ளி விவரதகவ லின்படி, 1981 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுக் கிடையே பிறந்த இளைஞர் களில் 35 விழுக்காட்டினர் மத அடையாளமில்லாமல் இருப்பதாகக் குறிப்பிட் டுள்ளனர். 32 விழுக்காட் டினர் புரோட்டஸ்டன்ட் கிறித்தவர்களாகவும், 16 விழுக்காட்டினர் கத்தோ லிக்கக் கிறித்தவர்களாக வும் குறிப்பிட்டனர்.
ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய மாணவர் களாக இணைபவர்களி டையே மின்னஞ்சல் வாயிலாக  புள்ளிவிவரங் கள் திரட்டப்பட்டன.
இந்த ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்கள் 1,184 மாணவர்கள் உள்ளனர். 2019 ஆம் ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்களில் 70 விழுக் காட்டினருக்கும்மேல் கல்வி முடித்து செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டில் கல்வி முடித்து செல்லும் மாணவர்களில் 53 விழுக்காட்டளவில் ஆண்களும், 46.5 விழுக்காட்டளவில் பெண்களும், 0.5 விழுக்காட்டளவில் மூன்றாம் பாலினத்தவர்களும் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் புதிய மாணவர்கள் 2019ஆம் ஆண்டில் கல்வி முடித்துச் செல்லும் மாணவர்களில் பெண்கள் 51 விழுக்காடாகவும், ஆண்கள் 48 விழுக்காடாகவும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவராக தங்களை அறிவித்துக்கொண்டுள்ளவர்கள் 0.4 விழுக்காட் டளவில் உள்ளனர்.
பகுத்தறிவு மாநாடு
அமெரிக்க அய்க்கிய நாட்டில் பென்சில்வேனியா மாநிலத் தலைநகர் ஹாரிஸ்பர்க்கில் நாத்திகர், மனிதநேயர்கள் பங்கேற்கவுள்ள பகுத்தறிவுரீதியில் காரணங்களை ஆராயும் மாநாடு இம்மாதம் 11 முதல் 13 முடிய 3 நாள்கள் நடைபெறுகிறது.
3 நாள்கள் நடைபெறும் பகுத்தறிவு மாநாடு ஹாரிஸ்பர்க்கில் 800 ஈ பார்க் டிஆர், பெஸ்ட் வெஸ்டர்ன் பிரிமியர் தி சென்ட்ரல் ஹோட்டல் மற்றும் கருத்தரங்க மய்யத்தில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று (11.9.2015) மாநாட்டுக்கு வருகைதரும் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி முடிய நடைபெற்றது.  இரவு 7 மணியளவில் நாத்திகக்கருத்துகளின் டிஜிட்டல் வடிவம் உள்ளிட்டவைகுறித்த பில், சூசி ராபின்ஸ் மற்றும் விருந்தினர்களின் உரைகளுடன் தொடங்கியது. இரவு 8 மணியளவில் நகைச்சுவையாளர் மேரிபெத் மூனி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிளவில் எ பெட்டர் லைஃப் படம்குறித்து கிறிஸ் ஜான்சன் பேசினார்.
இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று (12.9.2015) காலை 8 மணிமுதல் மாலை 5.20 மணி முடிய வருகையாளர்கள் பதிவு செய்யப்படுகிறது. 9 மணிக்கு அறிமுகம் மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து, 9.10 மணியளவில் நெகிழ்வுக்குள்ளாகிவரும் மதச்சார்பற்ற அரசியல் அதிகாரநிலைகுறித்து சாரா லெவின் உரையைத் தொடர்ந்து, நான் மலேரியாவால் பாதிக்கப்பட்டேன், நீங்களும் பாதக்கப்படலாம் எனும் தலைப்பில் பென் பிளாஞ்சார்ட் உரையாற்றினார். 10.45 மணியளவில் பகுத்தறிவுக்கருத்துகளும், முசுலீம் உலகமும் எனும் தலைப்பில் முகம்மத் சையீத் உரையைத் தொடர்ந்து, இயேசு இல்லாத கிறித்தவம்: எல்லாம் தொடக்கம் எவ்வாறு எனும் மாற்றுத் தத்துவம் எனும் தலைப்பில் ரிச்சர்ட் கேரியர் உரையாற்றினார்கள்
உணவு இடைவேளைக்குப்பின், புனிதப்பசுக்கள்: நம்பிக்கை மற்றும் உலகைச்சுற்றியுள்ள பழைமைவாதம்குறித்த சுருக்கமான பார்வை எனும் தலைப்பில் சேத் ஆண்ட்ரியூஸ், கடவுள், மத நம்பிக்கைக்குப் பின்னரும் வாழ்க்கையில் விளையாடும் பட்டினியிலிருந்து பெறக்கூடிய பாடங்கள் எனும் தலைப்பில் தெரசா மேக்பெயின், கருப்பர் இனத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்:கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எனும் தலைப்பில் மாண்டிசா தாமஸ்  உரையாற்றுகிறார்கள்.
இரண்டாம் நாள் தொடர் நிகழ்வாக இரண்டாம் அடி:அற்புதம் விளைகிறது தலைப்பில் மேட் தில்லாஹண்டி, நட்சத்திர மீன்களை பாதுகாப்பது குறித்து சாரா மோர்ஹெட், நம்முடைய கடவுளற்ற கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது எனும் தலைப்பில் லீ மூரே, பேச்சுவழக்கு சொல் கவிதை தலைப்பில் விக்டர் ஹாரிஸ்,  ராமென் பாட்காஸ்ட் குறித்து மார்க் நேபோ மற்றும் ஆரோன் ரா ஆகியோர் இரண்டாம் நிகழ்வில் உரையாற்றுகின்றனர். இசை நிகழ்ச்சி ஷெல்லி சேகல் வழங்குகிறார்.
மூன்றாம் நாள் நிகழ்வாக நாளை (13.9.2015) காலை 8 மணி முதல் 10 மணி முடிய பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் தொடங்குகிறது.
பாலியல் வன்செயல்கள், வன்புணர்ச்சி,  எனும் தலைப்பில் விசித்திரமான கழுதைகள்குறித்து குறிப்பிடும் பைபிள் எனும் தலைப்பில் டேவிட் ஃபிட்ஸ்ஜெரால்ட், கடவுள் மத நம்பிக்கையாளர்களைப் புரிந்து கொள்வது எனும் தலைப்பில் பெத்பிரஸ்வுட் உரையாற்ற இசை நிகழ்ச்சி ஜார்ஜ் கிராப் வழங்குகிறார். இளைஞர் வளர்ச்சி குறித்த கருத்துகள் வினா_விடை  நிகழ்ச்சியை அமண்டா மெட்ஸ்காஸ் வழங்குகிறார்.
காரணங்களை முன்னிட்டு மீண்டும் போராடுவது எனும் தலைப்பில் கெவின் டேவிஸ் பேசுகிறார்.
பட்டினிக்கு எதிராகப் போராடும் நாத்திகர்கள் என்கிற வகையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் பென்சில்வேனியா நாட்டின் தலைநகர் ஹாரிஸ்பர்க்கில் மனிதநேயத் தொண்டூழியர்களுடன் இணைந்து உணவு கிடைக் காமல் பட்டினியால் வாடுபவர்களுக்காக உணவு வங்கிக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
-விடுதலை,12.9.15

1 கருத்து:

  1. வணக்கம் ஐயா!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி ஐயா!
    www.eppoluthu.blogspot.in

    பதிலளிநீக்கு