வெள்ளி, 10 செப்டம்பர், 2021

அறிவியல் மனப்பான்மைக்கு ஆக்கம் கூட்டிய சார்லஸ் டார்வின்

 

"பூமியின் வடிவம் உருண்டை போன்றது", 'சூரியனைச் சுற்றி பூமியும் இதரக் கோள்களும் சுற்றிவருகின்றன'. - இப்படிப்பட்ட அறிவியல் செய்திகளை இன்றைய தலை முறையினரிடம் சொன்னால், 'இதில் என்ன வியப்பு?' 'இதில் புதுமை ஒன்றும் இல்லையே!' என எளிதாக உடனே கருத்து கூறிவிடுவார்கள்சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட செய்திகளைச் சொன்னால் அதை எள்ள ளவும் நம்ப மாட்டார்கள்மதநம்பிக்கைகளுக்கு எதிரானது எனக் கருதி அப்படிப்பட்ட செய்திகளைக் கேட்கக் கூட மறுப்பார்கள்அன்றைய காலக்கட்டத்தில் 'பூமியின் வடிவம் தட்டையானது', 'பூமிநிலையாக இருக்கிறது'; 'பூமியைச் சுற்றித்தான் சூரியன் வருகிறதுஇப்படித்தான் உண்மைக்கு மாறானவையே 'உண்மை வடிவம்தாங்கி மக்கள் மனதில் நிலைத்திருந்தனஇப்படிப்பட்ட உண் மைக்கு மாறான கருத்துகள் அறிவியல் வளர்ச்சியின் மூலம்படிப்படியாக மாறி இன்றைய நிலையை அடைந் துள்ளனஎத்தனையோ காலமாக அறிவியல் வளர்ச்சி தொடர்ந்திருந்தாலும்திருப்பு முனையாக அமைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் சிலவேகோபர்நிகஸ் (1473-1543), கலிலியோ கலிலி (1564-1642), அய்சக் நியூட்டன் (1643-1727) ஆகிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப் புகள் அறிவியல் வளர்ச்சியின் பாதையையே நிர்ணயம் செய்யும் விதமாக அமைந்தனஅப்படிப்பட்ட ஒரு திருப்பு முனை கண்டுபிடிப்பினை வழங்கியவரே அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் (1809-1882).

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைஉலகில் உள்ள உயிரினங்களை இன்றிருக்கும் நிலையிலேயே கடவுளால் படைக்கப்பட்டன என்பதை ஒவ்வொரு மதமும்ஒவ்வொரு வகையில் நிலைநிறுத்தி வந்தனஇந்த நம்பிக் கையை முற்றிலும் தகர்த்துஉலக நினைப்பையே புரட்டிப் போட்டது சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு (Theory of Evolution). இந்த பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக நிறுவிட சார்லஸ் டார்வின் பல ஆண்டு காலம் உழைக்க வேண்டிவந்ததுஉலகம் முழு வதும் சுற்றிபல இடங்களில் வாழும்வாழ்ந்த உயிரினங் களைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்.

•             சிறு உயிரினங்களிலிருந்து படிப்படியாக அடுத்த நிலை உயிரினங்கள் உருவாகி உள்ளனஉயிரினங்கள் இன்று இருக்கும் புறத்தோற்றம்அகத்தோற்றத்துடன் தொடக்கத்தில் தோன்றிடவில்லைஇந்தத் தோற்றங்களும் நிரந்தரமானவை அல்ல எனும் கருத்தை உயிர் இனங் களின் தோற்றம் (Origin of Speciesஎனும் ஆய்வறிக்கை மூலம் நிறுவினார்.

•             உயிரினங்களின் தோற்றம்அங்க அவயவங்க ளின் வடிவம்பயன்பாடு ஆகியன அந்தந்த உயிரினங் களின் தேவைகருதியேசுற்றுப்புறச் சூழல்வாழும் நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமையப் பெறுகின்றனஉயிரினங்கள் இயற்கையிலிருந்து தம்மை தெரிவு செய்து கொள்கின்றனஇதனை இயற்கையின் தெரிவு (Natural Selectionஎன ஆய்வுப் பதிவாக வெளிப்படுத்துகிறார்.

•             உலகில் தோன்றிய உயிரினவகைகளின் இருப்புநீடிப்பு நிரந்தரமானதல்லஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த உயிரினங் களோடு போட்டி போட்டு வாழமுடியாமல்நாளடைவில் அவை அழிந்து போகக் கூடிய நிலைமைகளும் ஏற் பட்டனஇதனை 'தகுதி உள்ளவையே வாழும்' (Survival of the Fittestஎனும் கருதுகோளாக அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் நிறுவுகிறார்.

இந்த மூன்று கருத்துகளையும் கொண்டதுதான் பரிணா மக் கோட்பாடுடார்வினது அறிவியல் ஆய்வு கட்டுரைகள் படிப்படியாக வெளிவந்து நிறைவாகஉலக உயிரினங்களின் முழுப் பரிணாமத்தின் மூலம் உருவானதுதான் மனித இனம் எனும் உண்மையினை நிறுவுகிறார்மனித இனம் உருவானது மனிதக் குரங்கிலிருந்துதான் - குரங்கிலிருந்து உருவானதுதான் மனித இனம்இப்படி உயிரினங்கள் பரிணாமம் அடைவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆயிற்று என தனது அறிவியல் கண்டுபிடிப்பை நிறுவிய தும், 'மனிதனைப் படைத்தது கடவுள்தான்எனும் நம்பிக் கையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மதவாதிகள் டார்வினை எதிர்க்கத் தொடங்கினர்டார்வின் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவில்லைஆனால் கடவுளின் சக்தியால் பல உயிரி னங்களோடு மனிதரும் படைக்கப்பட்டனர் எனும் நம் பிக்கை-பல ஆண்டுகாலமாக உருவாக்கிவிதைத்து வளர்க்கப்பட்ட நம்பிக்கை தகர்ந்து விடும் என்பதாலேயே மதவாதிகள் டார்வினை-அவரது கண்டுபிடிப்பை கண் மூடித்தனமாக எதிர்த்தனர்மதவாதிகளின் எதிர்ப்பில் ஆதாரம் எதுவுமில்லைநம்பிக்கையை வளர்த்து ஆதிக்க நிலையை உருவாக்கிய காரணத்தால் மதவாதிகளால் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்பை எளிதாக எதிர்க்க முடிந்ததுவெறும் நம்பிக்கையின் பால் ஈடுபாடு கொண்டி ருந்தார்கள்டார்வினின் கோட்பாட்டை எதிர்ப்பதற்கு காரணம் எதுவும் தேடவேண்டிய அவசியமில்லைகார ணம் சொல்ல வேண்டியது - சிந்தித்து விடை காண்பது போன்ற சற்று இன்னல் நிறைந்த பணிகள் மதநம்பிக்கை யாளர்களுக்கு எழாதுசிந்தித்து முடிவு எடுக்கும் பொழுது அதன்மூலம் கிடைத்த முடிவுகள்--ஆதாரப் பூர்வமாக நீடித்து நிற்கும் நிலைமையினைப் பெறும்கடும் அறி வார்ந்த ஆராய்ச்சி செய்து பரிணாமக் கோட்பாட்டை நிறுவிய டார்வினை மதவாதிகளின் ஆதாரமற்றஎதிர்ப்பு கள் ஒன்றும் செய்யமுடியவில்லைதனது ஆராய்ச்சி முடிவு குறித்து எந்த நிலையிலும் டார்வின் பின்வாங்கிட வில்லைசற்றும் அசைந்து கொடுக்கவில்லைஉண்மை யைக் கூறுபவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டுடன் இருந்தார்.

எடின்பரோகேம்பிரிட்ஜ் என தான் பயின்ற உயர்கல்வி நிலையங்களிலும் ஆராய்ச்சி செய்த சூழலிலும் பழகியதனக்கு ஆதரவாக உதவி செய்தவர்களே தனது கண்டுபிடிப்பு குறித்து எதிர் கருத்து கொண்டவர்களாக இருந்த போதிலும்தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளுடன் ஒன்றிப்போய் இருந்தார்இறுதிவரை தனது அறிவியல் கண்டுபிடிப்பிலிருந்து பின் வாங்காமல் வாழ்ந்து மறைந்தார்அவர் மறைந்தாலும் அவரது அறிவியல் உண்மைகள் வாழ்ந்து கொண்டிருக் கின்றனஅந்த அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள் வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இருப்பினும்ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த மதவாதிகள் 'உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டது'  எனும் தங்களது நம்பிக்கையை தகர்த்த டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை எதிர்த்தே வந்துள்ளனர்டார்வினின் கோட்பாடு அறிவியல் சார்ந்தது என்பதால் படைப்புத் தத்துவத்திற்கு அறிவியல் முலாம் பூசி ‘படைப்பு அறிவியல்' (Creation Scienceஎன சற்று மாறுதலான கருத்தினை முன்வைத்து பரப்பினர்கருத்துக்கு அறிவியல் பூச்சு பூசி மக்களிடம் கொண்டு சென்றனர்அமெரிக்க அய்க்கிய நாட்டில் சில மாநிலங்களில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை பாடமாக வைத்திட தடை விதிக்கப்பட்டது. 'படைப்பு அறிவியல்பாடமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படிஎந்த மதக் கருத்துகளையும் பொதுக் கல்வி கூடங்களில் பயிற்றுவிப்பது கூடாது எனத் தீர்ப்பளித்தனர். 'படைப்பு அறிவியல்பாடத்தினை புறந்தள்ளிவிட்டுடார்வினின் பரிணாமக் கோட்பாடு பாடமாக்கப்பட்டது.

தொடர்ந்து அமெரிக்க மதவாதிகள் மதக்கருத்துகளுக்கு புதுப்பூச்சு பூசி ‘அறிவார்ந்த வடிவமைப்பு' (Intelligent Designஎன்பதாக மதக்கருத்துகளைப் பரப்பி வருகின் றனர்இந்த அனைத்து நிலை தடைகளையும் தாண்டி டார் வினின் கோட்பாடு ஏற்கப்பட்டு பாடமாக போதிக்கப்படுகிறது.

தொடக்கநிலையில் டார்வின் கோட்பாடுகளை எதிர்த்து வந்த கத்தோலிக்க மதத்தின் கிறிஸ்தவ தலைமை யிடமான வாடிகன் மதபீடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொள் வதாக அறிவித்தது.

அறிவியல் ஆய்வுமுறைகள் உண்மையானவை என்ற நிலையிலும் அதனை பொதுவெளியில் ஏற்றுக் கொள் வதற்கு பல காலம் ஆகிறதுவெறும் நம்பிக்கையின்பால் வேர் பிடித்துள்ள மதக் கருத்துகளை மாற்றிட உண்மையின் அடிப்படையிலான அறிவியல் கருத்துகள் போராடித்தான் நிலைபெற முடிகிறதுநான் கல்லூரியில் பயின்றபொழுது விலங்கியல் பாடத்தில் டார்வினின் பரிணாமக் கோட் பாட்டை விளக்கி பார்ப்பனப் பேராசிரியர் வகுப்பெடுத்தார்வகுப்பின் முடிவில்அறிவியல் பாடத்திட்டப்படி பரிணா மக் கோட்பாடு பற்றி மாணவர்களாகிய உங்களுக்கு விளக்கிவிட்டேன்ஆனால் அந்த அறிவியல் கருத்துகள் எனக்கு ஏற்புடையது அல்லகடவுள்தான் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தார் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்தப் பேராசிரியர் கூறியதுபடிப் பிற்கும்நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள எதிர்நிலை களை விளக்கியதுஇத்தனை தடைகளையும் தாண்டித் தான் அறிவியல் கருத்துகள் ஆக்கரீதியான பயன்பாட்டை மனித சமுதாயத்திற்கு வழங்கி வருகின்றன.

இந்த மாபெரும் ஆக்கப் பணியில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதுஅறிவியல் படித்தோரிடமும்பயிற்றுவிப்போரிடமும் கூட அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கின்ற பிரச்சா ரத்தை வலிமையாக மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையில் பெரியார் இயக்கத்தின் அங்கமான பகுத்தறிவாளர் கழகம்அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறதுபகுத்தறிவாளர் கழகம் சார்லஸ் டார்வினின் 200-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை நடத்தியதுஅறிவியல் அறிஞர்களின் பிறந்தநாள்களை பெரும்பாலும் கல்விநிலையங்கள்ஆராய்ச்சிக் கூடங்கள் நடத்தி வரும் வேளையில், 2009-ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினின் 200-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சென்னை-பெரியார் திடலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுநிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அய்தராபாத் மூலக்கூறு உயிரியல் மய்யத்தின் நிறுவனத் தலைவரும்தேசிய ஆய்வு மய்யத்தின் மேனாள் துணைத் தலைவருமான அண்மையில் மறைந்த அறிவியல் அறிஞர் டாக்டர் பி.எம்பார்கவா வருகை தந்திருந்தார்நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில தோழர்களை அவர்களது பெயரைச் சொல்லி - புருனோஎடிசன்டார்வின் என பார்கவா அவர்களுக்கு அறிமுகப்படுத் தினார்தோழர்களின் பெயரைக் கேட்டதும் பார்கவா அவர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டார். 'நான் எத்தனையோ அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு உரையாற்றிட சென்றிருந்தாலும்பெரியார் திடலில் - சார்லஸ் டார்வினின் பிறந்தநாள் நிகழ்வில் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்த அறிவியலாளர் களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுது பெரியார் இயக்கம் எத்தகைய வகையில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடும் பணியில்அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பினைப் போற்றும் வகையில் செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்பாராட்டுகள்!' என்பதை தெரிவித்தார்சார்லஸ் டார்வினின் 200-ஆம் ஆண்டு பிறந்தநாளை பகுத்தறிவாளர் கழகம் ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடத்தியது.

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கு நேரடியாக எதிர்ப்பினை அறிவியல் பூச்சுடன் காட்டிய மதவாதிகளைப் போலவேநம் நாட்டில் இந்துத்துவவாதிகள்ஆளும் அரசியல் அதிகாரப் பலத்துடன் மதக் கருத்துகளை அறி வியல் என பரப்பிவருகின்றனர். 'பசுமாடு தொடர்பான அனைத்தும் புனிதம் எனும் கருத்தை 'பசு அறிவியல்' (cow scienceஎன்பதாக பரப்பி வருகின்றனர்அறிவியல் அல்லாததை அறிவியல் என தெரிந்தே திரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்இந்த நிலையினை நீடிக்கவிடாமல்அறிவியல் மனப்பான்மையினை வளர்த்து 'எது அறிவி யல்?' 'எது அறிவியல் அல்லஎனும் பகுத்திடும் வல்ல மையை மக்களிடம் உருவாக்குவதற்கு பகுத்தறிவாளர் கழகம் பல வகையிலும்முன்னிலும் வலுவாகப் பிரச்சாரப் பணி ஆற்றிட வேண்டும்சார்லஸ் டார்வினின் பிறந்த நாளில் அத்தகைய சூளுரையை அறிவியல் ஆக்கத்தில் அக்கறை உள்ளோர் அனைவரும் மேற்கொள்வோம்வாழ்க சார்லஸ் டார்வின் புகழ்வாழ்க அறிவியல் மனப் பான்மை!

(புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்பகுத்தறிவு ஆசிரியரணியின் ஏற்பாட்டில் 08.02.2021 அன்று நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில் 'அறிவியல் மனப்பான்மைக்கு வித்திட்ட சார்லஸ் டார்வின்எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.)