அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2024

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு (3)



விடுதலை நாளேடு
Published March 17, 2024

– வீ.குமரேசன்

நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி…

அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (Physical Structure) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருவது. அதை ஒழித்திட, ஆதிக்க முழுமைத் தன்மையை அறியாத பல முற்போக்காளர்கள் அமைப்பு தொடங்கி – இடையில் விட்டவர்கள் பலர்; அமைப்பு தொடங்கியவர்களின் காலத்திற்கு பின்னர் தொடராதவை சில; ஆனால் நூற்றாண்டுகள் ஆகியும் தொடர் நிலையை விட இன்றைய நிலையில் வேகமாக, முழு வீச்சுடன், சமூகப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும், முழுமை யாக உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு வருகிறது திராவிடர் இயக்கம்.

உலக மக்கள் சமத்துவமான வாழ்க்கை வாழ்ந்திட ‘பார்வையற்றவர்களாக’ இருக்க வேண்டும்; ஆம் நிறப் பாகுபாட்டை பார்க்க முடியாத பார்வையற்றவர்களாக’ – பாலினப் பாகுபாட்டைக் கருதாத பார்வையற்றவர் களாக’ – நிறப் பாகுபாடு என்பதே தெரியாத பார்வை யற்றவர்களாக’ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மானுடம் உண்மையான மானுடமாக மாறும். இன் றைக்கு மனிதர்களானவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வில்லை. அமனிதர்கள் என்ற நிலையில் தான் உள்ளனர். அமனிதர்கள், விழிப்புணர்வு ஊட்டப்பட்டு மனிதர்களாக மாற வேண்டும். அந்தப் பணியைச் செய்வது, மனித நேயர்களான நமக்கெல்லாம் இருக் கிறது. மாநிலம் விட்டு எல்லைகளைத் தாண்டி ‘மனிதர்’ என்ற நிலையில் அனைவரும் அந்த லட்சிய எல் லையை அடைந்திட, வென்றெடுக்க அயராது பாடுபட வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஊடக வாயிலாகப் படிக்க நேர்ந்தது. இங்குள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் அங்குள்ள கொடி மரத்தினை தாண்டி கோயிலுக்குள் செல்ல உரிமை இல்லை என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறோம். மனிதநேய அமைப் பினரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு கோயில் – அந்தக் கோயிலுக்கு செல்லும் மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தோர் என கருதப்படுகிறது. அந்த மதம் மனிதரைப் பாகுபடுத்திப் பார்ப்பது. அதே மதத்தைச் சார்ந்த மற்ற கோயில்களில் எல்லாம் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதா? கடவுள் என்பவர் உலகத்தைப் படைத்தவர், உலக மக்களைப் படைத்தார் எனக் கருதும் மதம், அனைத்து வகை மக்களும் தங்கு தடையின்றி வழிபாட்டுத் தலத்திற்கு செல்லலாம் என்பதே நியாயமானது. ஆனால் பாகுபாடு, பிரிவினை, உயர்வு – தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது மதம் என்பதே உண்மை நிலை.

‘கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், கடவுள் எல்லாம் அறிந்தவர்’ என்பது உண்மையானால், அதை மறுக்கின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தான் கடவுள் உள்ளார் என வரையறைப்படுத்துவது; சர்வசக்தி பெற்ற கடவுள், மதம் சாராத மக்கள் உள்ளே சென்றால் தீட்டுப்பட்டு விடுவார்; கடவுள் என்று சொன்னால் கடவுள் சக்தி மிக்கவரா? உள்ளே நுழைய விரும்பும் மக்கள் சக்தி மிக்கவர்களா?

முரண்பாடுகளின் மொத்தக் கூட்டே ‘மதம்‘ என்ப தற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ‘கடவுளர்களால் கைவிடப்பட்ட இடம்‘ (god forsaken place) என்பதுவும் ஓர் முரண்பட்ட எடுத்துக்காட்டு.

சட்டம் என்பது விளக்கம் அளிப்பவரின வியாக்கி யானம் விளக்கத்தைப் பொறுத்த ஒன்றாக கொடுக்கப் பட்டது சரியான சட்ட விளக்கம் அல்ல. (Law is nothing but interpretaption, it is not good interpretaption)

கேள்வி: திராவிடர் என்பவர் யார்?
நல்ல கேள்வி, திராவிடர் என்பது இனவாதப் பிரிவினை அடிப்படையிலானது அல்ல; ரத்தப் பரிசோதனைகளால் அல்ல; புறத்தோற்றத்தினானதும் அல்ல; மரபணு அடிப்படையிலும் அல்ல; எதன் அடிப்படையிலானது?

பண்பாட்டு அடிப்படையிலானது ‘திராவிடர்’ அடையாளம், யாரையும் பாகுபடுத்தி, பிரித்து, தள்ளி வைத்திடும் பண்பாடு அல்ல அது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனும் சமத்துவநிலைப் பண் பாடு. “மனிதர் அனைவரும் சமம், அனைத்தும் அனை வருக்கும்“ என்பதே அந்த பண்பாடு.
‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ என்பது குறள் கூறும் பண்பாடு. அதுதான் திராவிடர் பண்பாடு. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
சமத்துவ நிலை மட்டுமல்ல; அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும். பொருளியல் மேம்பாடு மட்டும் போதாது. மனிதரின் தன்மானம் – சுயமரியா தையை மதித்துப் போற்றும் நிலை வர வேண்டும்.
நாடு, எல்லைகளைக் கடந்தது இந்தப் பண்பாடு. ‘திராவிடர்’ என்பது மனிதநேயம் சார்ந்தது. இந்தப் பண்பாடு மனிதர் அனைவருக்கும் சொந்தமானது. இந்தப் பண்பாட்டை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் அனை வரும் திராவிடரே.

கேள்வி: (பேராசிரியர்) என்னை நான் ‘திராவிடர்’ என அழைத்துக் கொள்ளலாமா?

ஏன் கூடாது (Why Not)? அனைவரும் சமம்; அனைத்தும் அனைவருக்கும் என்ற பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் அனைவரும் திராவிடரே.
நீங்கள் அமெரிக்காவில் வாழும் ‘திராவிடர்’, நாங்கள் இந்தியாவில் வாழும் ‘திராவிடர்’ – அதற்கு மானிடப்பற்றே அடிப்படை.

வாழும் இடங்கள்தான் வேறு; பண்பாடு ஒன்றுதான். பண்பாட்டு அடிப்படையில் அனைவரும் திராவிடர் கள். அனைவரும் திராவிடர்கள் அனைவரும் மனி தர்கள் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலைதான் தந்தை பெரியார் காண விரும்பியது, தான் 95 ஆண்டு காலம் வாழ்ந்து பாடுபட்டது. தனது காலத்திற்குப் பின் தனது இயக்கம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நினைத்தது. பெரியார் செயல் முடிப்போம். மனிதர்களாக வாழ்வோம்.
அனைவருக்கும் நன்றி…
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினருக்கு நினைவுப் பரிசாக இயக்க வெளி யீடுகளை தமிழர் தலைவர் வழங்கினார். புத்தகங்களை வழங்கிடும்பொழுது, புத்தகத்தில் உள்ள கருத்துகள் பற்றியோ, இயக்கம் குறித்து மேலும் அறிந்திட விரும் பினாலோ, தயக்கமின்றி பெரியார் திடலைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்வு முடியும் வேளையில் தமிழர் தலைவர், வருகை தந்த பேராசிரியரிடமும், மாணவர்களிடமும் தனது வயது (91) காரணமாக கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை செவித்திறன் குறைபாடு காரணமாக மீண்டும் கேட்கப் (repeat) பணித்தது குறித்து தெரிவித்தார்.
குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன், “உங்களுக்கு 91 வயது ஆனதாகத் தெரியவில்லை; 20 வயது இளைஞரைப் போல பதில் அளித்தீர்கள்.”(You do not look 91 years old. You responded to our queries as a 20 – year old youth) என சிரித்துக் கொண்டே செல்ல அனைவரும் பேராசிரியரின் கருத் தினைக் கைதட்டி வரவேற்றனர்.

(உங்கள் தலைவருக்கு 91 வயது என சொன்னீர்கள். ‘எப்படி எங்களுடன் உரையாடுவார்? கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள அவரால் முடியுமா?’ என நிகழ்ச்சிக்கு முன்பாக அந்தக் குழுவின் தலை வரான பேராசிரியர் எங்களிடம் கேட்டார். சமுதாயத்தில் தடைகள் பலவற்றை தகர்த்த தலைவருக்கு வயது ஒரு தடையே அல்ல; நீங்கள் நேரிலேயே நிகழ்ச்சியின் பொழுது பார்க்கலாம் என கூறியிருந்தோம் – நாங்கள் கூறியபடியே நிகழ்ந்தது)
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலா ளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடே சன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

தமிழர் தலைவரிடம் நேர்காணல் நடத்திட வருகை தந்த குழுவினர் முன்னரே திராவிடர் இயக்கம் பற்றிய பல செய்திகளை படித்துத் தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக தமிழர் தலைவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போனி தாமஸ் அவர்கள் நேர்காணல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என நினைத்திருந்தோம், 90 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது; நேரம் கடந்தது தெரியவில்லை. தலைவர் அளித்த கருத்துகளும், செய்திகளும் நடந்த நிகழ் வினை ஒரு முடிவாகக் கருதாமல் தங்களுக்கு ஒரு அருமையான தொடக்கமாக இருந்தது எனக்கூறி விடைபெற்றுச் சென்றார். தொடர்ந்து திராவிடர் கழகத் துடன் தொடர்பில் இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.
– நிறைவு

சென்னை – பெரியார் திடலில் அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்



விடுதலை நாளேடு
Published March 10, 2024

அமெரிக்க அய்க்கிய நாடுகள் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் நேற்று (9.3.2024) சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.
திராவிடர் கழக தலைமையகத்தினரை ஏற்கெனவே தொடர்பு கொண்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்து உரையாடிட உறுதி செய்திருந் தனர்.
வருகை தந்த இதழியல் தொடர்பகத் துறையின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winston) தலைமையிலான ஆய்வு மாணவர்கள் (10 பேர்) திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் இயக்கம் பற்றி அறிந்திட தமிழர் தலைவருடன் ஒரு நேர்காணல் – கலந் துரையாடலை நடத்திட அனுமதி கோரி யிருந்தனர்.
திட்டமிட்டபடி பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேர்காணல் உரையாடல்
நிகழ்ச்சியின் தொடக்கமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் பற்றிய ஒரு சுருக்கமான உரையினை தமிழர் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் அவர்கள் திராவிடர் இயக்கம் பற்றிய கேள்விகளைக் கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் ஆழமான – சுருக்கமான விளக்கத்தினை தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். பேராசிரியரைத் தொடர்ந்து ஆய்வு மாணவர்கள் ஒவ்வொரு வரும் இந்திய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பணி, எதிர் கொள்ளும் அறைகூவல் பெண் உரிமை & அதிகாரத்துவம், மூடநம்பிக்கை ஒழிப்பு, திராவிட மாடல் ஆட்சி பற்றிய கேள்வி களைக் கேட்க விரிவான விளக்கத்தினை தமிழர் தலைவர் வழங்கினார்.
ஏறக்குறைய ஒண்ணே முக்கால் மணி நேரம் நடைபெற்ற நேர்காணலுக்குப் பின்னர் பேராசிரியருக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தந்தை பெரியார் குறித்த – இயக்க செயல்பாடுகள், சாதனைகளைப் பற்றிய புத்தகங்களை தமிழர் தலைவர் வழங்கினார். அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகக் குழுவினர் நன்றி கூறி மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைச் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி,
ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ப.க. மாவட்ட செயலாளர் பா.ராமு மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு முன்பு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம், பெரியார் காட்சி யகம், அன்னை மணியம்மையார் மருத்துவமனை, சுயமரியாதைத் திருமண நிலையம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, கழகத்தின் செயல்பாடு களை அமெரிக்கப் பல்கலைக் கழக குழுவினர் கேட்டு அறிந்தனர்.

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு



விடுதலை நாளேடு
Published March 15, 2024

வீ.குமரேசன்

தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரி யரும் – மாணவர்களும் 9.3.2024 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். 10 ஆய்வு மாணவர்களை உள்ளடக்கி ஒரு பேராசிரியர் தலை மையில் வந்திருந்தனர். அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் & இதழியல் அன்னன்பெர்க் பள்ளியைச் (Annenberg School for Communication and Journalism) சார்ந்தவர்கள் அவர்கள். மாணவர்களை வழிநடத்தி வந்தவர் “ஊடகம் மற்றும் மதங்கள்” பற்றிய அமர்வின் தலைவர் (Knignt Chair in Media and Religion) பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winsson) ஆவார். இவர்களை ஒருங்கிணைத்து பெரியார் திடலை முன்னமே தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று அழைத்து வந்தவர் கேரளாவைச் சார்ந்த இதழியலாளர் போனி தாமஸ். – வருகை தந்தோரில் பேராசிரியர் உள்பட பெண் மாணவர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.
வருகை தந்த குழுவினரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சற்று நேரம் அவர்களிடம் உரையாடிய பின்னர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலா ளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், ச.இன்பக்கனி ஆகியோர் குழுவினருக்கு பெரியார் திடலைச் சுற்றிக் காண்பித்தனர்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் காட்சியகம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், ‘விடுதலை’ அச்சகம், பெரியார்- மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை 30 நிமிடங்களில் சுற்றிப் பார்த்தனர். பார்த்த இடங்கள் பற்றிய சில செய்திகளை அவர்களிடம் கூறியபொழுது அமைதியாக கேட்டுக் கொண்டனர். அதிகமான விளக்கங்களைக் கேட்கவில்லை. அந்த அமைதியாகக் கேட்டுக்கொள்ளும் முறை ஓர் ஆழ மான அணுகுமுறை என்பது பேராசிரியரும், ஆய்வு மாணவர்களும் பின்னர் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் தமிழர் தலைவர் அளித்த பதிலுக்கு, கூடுதல் விளக்கங்களைக் கேட்டுப் பெற்ற பொழுதுதான் அறிய நேர்ந்தது. புதிய இடமானாலும், திராவிடர் கழகம் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் ஏற் கெனவே படித்து அறிந்திருந்த தன்மை அவர்கள் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மூலம் வெளிப் பட்டது.

தமிழர் தலைவருடன்
சந்திப்பு – உரையாடல்
பெரியார் திடலைச் சுற்றிப் பார்த்த பின்னர் அன்னை மணியம்மையார் அரங்கிற்கு வந்து அமர்ந்தனர். வருகை தந்த தமிழர் தலைவரை முதன் முறையாக குழுவைச் சார்ந்தோர் சந்தித்தனர்.
வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று, கழகம் பற்றிய வரலாறு, இன்றைய நிலை, எதிர்கொள் ளும் அறைகூவல்கள் பற்றிய சிறிய உரையினை வழங்கினார்.

தமிழர் தலைவரின் முன்னோட்ட உரை
தமிழர் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், “இது பெரியார் மண்; பெண்களை அதிகாரப்படுத்தும் மண்” அவர்களை வரவேற்கிறது என்றார். நேர்காண லில் பேராசிரியரும், மாணவர்களும் எந்த வகையான கேள்விகளையும் தயக்கமின்றி, தவிர்த்தலின்றி கேட்கலாம் என்ற முன்னுரையோடு செய்திகளைக் குறிப்பிட்டார்.
“திராவிடர் கழகம் என்பது சமூகத்தில் உரிமை மறுக் கப்பட்டோருக்கு, அடித்தள மக்களுக்குமான இயக்க மாகும். அவர்களுக்கு மறுக்கப்பட்டதை பெற்றுத் தரு வதில் தொடர்ந்து போராடி வெற்றிகளை பெற்றுவரும் இயக்கமாகும். போராட்டமும் தொடர்கிறது; பெற வேண்டியவையும் ஏராளம் உள்ளன.

மறுக்கப்பட்டதை பெற்றுத் தருவதோடு நிறைவடை கிற இயக்கம் திராவிடர் கழகம் அல்ல; எடுத்துக்காட்டாக உழைக்கும் அடித்தள மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி கற்பது மறுக்கப்பட்டு வந்தது – மறுக்கப்பட்ட கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லா மல் அந்த உரிமை மறுக்கப்பட்ட மக்களை அதிகாரத் தளத்தில் அமர வைத்துப் பார்க்கும் இயக்கமாகும். மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வி கற்பதில் இட ஒதுக்கீடு, கல்வி கற்றபின் உரிய பணியில் சேர்வதற்கும் இடஒதுக்கீடு என தொடர்நிலை போராடும் அமைப் பாகவே திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது. சமூக அநீதி மேலோங்கிய நிலை மாறி சமூகநீதி நிலவிவரும் நிலை உருவாகியுள்ளது.
சமூகநீதி என்பது மனித சமத்துவம் சார்ந்தது. மனித சமத்துவம் என்பது பாலின சமத்துவத்தையும் உள்ள டக்கியது. பாலின சமத்துவம் நிழலல்ல; நிஜம் என்கிற நிலைமைகளை கடந்த காலங்களில் நிலைநாட் டப்பட்டு வந்துள்ளது. 100 ஆண்டு கால வரலாற்றில் போராட்டங்கள், சாதனைகளைக் கண்டுள்ள அமைப்பு இது.

தேர்தலில் நேரடியாக பங்கேற்காத – போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம். கழகத்தின் பொறுப்பா ளர்களும், உறுப்பினர்களும் ஆட்சி அதிகாரம் மிக்க பொறுப்பிற்கு வர விருப்பப்படாதவர்கள். இது ஒரு சமூக இயக்கமாகும்; இதனுடைய பணி கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களை விழிப்படையச் செய்வது மட்டுமே. அதற்காக, மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகக் களப் போராட்டங்கள், மறியல் போராட்டங்கள் என சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்ளை நடத்தி வருகிறது. தேவைப்பட்டால் சட்ட மீறலின்போது கைது செய்யப்படுவதற்கும் – சிறைத் தண்டனை பெறுவதற்கும் இயக்கத்தின் மூலம் ஆயத்தமாக இருப்பவர்கள் இந்த இயக்கத்தின் தோழர்கள். இவையனைத்திலும் வன்முறை என்பது சிறிதளவும் இல்லாமல் சட்டத்திற்கு மதிப்பளித்து (ஏற்றுக் கொள்வது என்பது வேறு) நடந்து கொள்ளும் இயக்கமாகும் திராவிடர் கழகம். தந்தை பெரியார் காலம் தொடங்கி, அன்னை மணியம்மயார் காலம் தொடர்ந்து எம்முடைய தலைமையில் இயக்கம் செயல்பட்டு வரும் காலத்திலும் இந்த அணுகுமுறையில் எள்ளளவும் மாற்றம் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக சமுதாயப் பணி ஆற்றிவரும் எங்கள் இயக்கம் இன்றைக்கு நாட்டிற்கே சமூக நீதித் தளத்திலும், பிற சமுதாயப் பணிகளிலும் ஓர் எடுத்துக்காட்டு இயக்கமாக இருந்து வருகிறது.

மனிதநேயம், மனித சமத்துவம் என்பதே பெரியார் கொள்கையின் மய்யப் புள்ளி. இன்றைக்கு இந்தியாவை யும் தாண்டி உலகளாவிய அளவில் தந்தை பெரியாரு டைய மனிதநேயக் கொள்கைகளை எடுத்துச்சென்று பரப்பிடும் பணியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சமூகப் பணிகளை ஆற்றிட தேவைப் பட்ட நிதியினை தந்தை பெரியார் தனது சொத்துகளைக் கொண்டு அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் பயன்படுத்தி வந்தார். பெரியாரின் மறைவிற்குப் பின்னரும் அடுத்து வழிநடத்திய அன்னை மணியம் மையார், பெரியாரின் துணைவியார் என்ற நிலையில் தனக்குக் கிடைத்த சொத்தினையும் சேர்த்து தனியாக ஒரு அறக்கட்டளை அமைத்தார். இன்றைக்கும் அந்த அறக்கட்டளை மூலம் – பொது மக்களின் நன்கொடை யினையும் கொண்டு தொடக்க நிலை கல்வி நிலையங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி, உயர் கல்வி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலைகளிலும் கல்விக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கல்விக் கூடங்களில் பெண்கள் கல்வி என்பது முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.”

கேள்வி – பதில் – விளக்கம்
தமிழர் தலைவரின் இந்த முன்னோட்ட உரையினை அடுத்து போராசிரியர்களும், மாணவர்களும் கேள்வி கேட்க மற்றும் விளக்கங்கள் வேண்டிய அத்துணைக் கும் சுருக்கமாகவும், கொள்கை விளக்கமாகவும் தமிழர் தலைவர் பதிலிறுத்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய விளக்கங்களின் சுருக்கமும் பின்வருமாறு:
கேள்வி: சமுதாயத் தளத்தில் அமெரிக்க நாட்டிற்கும், இந்திய நாட்டுச் சூழலுக்கும் உள்ள நிலைமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமெரிக்காவில் மனித சமத்துவம் சட்ட ரீதியாக நிலவுகிறது. இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் சமத் துவ உரிமையினை வலியுறுத்தினாலும் நடைமுறையில் ஏற்றத் தாழ்வினை தூக்கிப் பிடிக்கின்ற வகையில் ஜாதிக் கட்டமைப்பு நிலவி வருகிறது. அதை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட – பகுத்தறிவு சுயமரியாதை உணர்வினை தட்டி எழுப்பிட எங்களைப் போன்றவர்கள் பணியாற்றி வருகிறோம். அமெரிக்க நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறி வாளர் அமைப்புகள் என்பன ஒரு சிறிய அளவிலே செயல்பட்டு வருகின்றன. காரணம் ‘ஜாதி கட்டமைப்பு’ என்பது அமெரிக்காவில் இல்லை.

மத அடிப்படை யிலானது இந்த ஜாதி கட்டமைப்பு. மத உணர்வுகள் ஆழமாக சமுதாயத்தில் வேரூன்றியுள்ள நி¬லையில் அந்த ஜாதி கட்டமைப்பினை தகர்த்திட சிறிய அளவிலான இயக்கங்கள் பயன் தராது. எனவேதான் எங்களின் பகுத்தறிவு இயக்கம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எங்களது இடை விடாத பணிகளின் மூலம் கடந்த நூறாண்டில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகளும் ஏராளமாக உள்ளன. பெரும் பான்மை மக்கள் கல்வி கற்கவே தடை இருந்த நிலை யில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம்.
அமெரிக்காவில் இத்தகைய வளர்ச்சிக்கான தடைகள் இல்லாத நிலையில் முன்னேற்றம் என்பது பல மடங்கு நடைபெற்றுள்ளது.
கேள்வி: ‘மதம்‘ என்பது ஒரு பெரிய பிரச்சினையா?
ஆம். மதம் என்பது ஒரு மாபெரும் பிரச்சினைதான். முன்னேற்றம் காண்பதற்கு ஒரு பெரும் தடையாக மதம் நீடிக்கிறது. மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. கேள்வி கேட்கும் உரிமை அதில் கிடையாது. மத உணர்வுகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், அனைத்து மதங்களும் பெண்களை சமமாக நடத்தாததில் ஒரே விதமாக உள்ளன. சமத்துவமற்ற நிலையில் நாடுகளுக்கிடையில் வேறுபாடு இருக்கலாம். எந்த மதமும் ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்துவதில்லை என்பதுதான் உண்மை நிலை.

எதையும் பகுத்தறிவு சார்ந்து வாழும் நிலையினை வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் மக்கள் இயக்கமாக தொடங்கியவர் புத்தர். புத்தர் கற்பித்தது ஒரு வாழ்க்கை நெறி; அதனை அவர் மதமாக நடத்திட வில்லை. ஆனால், பின்னாளில் புத்தரின் கருத்துகளும் மத வலையில் மாட்டிக் கொண்டு மத அடையாளத் துடன் இருந்து வருகிறது. இந்தியாவில் மதம் என்பது தொடக்கத்தில் “வேத மதமே”. தொடர்ந்து “பிராமண மதமாக” அறியப் பட்டது. 1863இல் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற மதங்கள் பற்றிய மாநாட்டில் “பிராமண மதத்தின் பிரதிநிதியாகவே விவேகானந்தர்” கலந்து கொண்டார்.
மனிதரிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி அந்த பாகுபாட்டிற்கே ஒருவித ‘புனிதத் தன்மையையும்‘ இந்த மண்ணில் ஏற்படுத்திவிட்டார்கள். மதப் போர்வை யுடன் உள்ள பாகுபாட்டை அவ்வளவு எளிதில் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. பெண்களின் சமத்துவம் மதத்தில் இல்லை. கடவுளரில் பெண் கடவுளர்கள் உள்ளனர். ஆனால், பெண்களானவர்கள் கோயில் களில் – பெண் கடவுளரின் கோயிலில் கூட பெண்கள் அர்ச்சகராகும் நிலைமை இல்லை! கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே துதிபாடல் பாடும் ஓதுவாராக பணியமர்த் திடும் நிலைமை அண்மையில் தான் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கு அடித்தளமிட்ட ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தந்து இந்த இயக்கம் சமுதாயப் பணியாற்றி வருகிறது.
(தொடரும்)

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள்

Published March 16, 2024

தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு
வீ.குமரேசன்

நேற்றைய (15.3.2024) தொடர்ச்சி…

கேள்வி: அரசானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பண உதவி அளித்து வருவதாக அறிகிறோம். அதுபற்றி கூறுங்களேன்?
ஆம். தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக (உதவித் தொகை அல்ல) பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் உயர்கல்வியினை (கல்லூரி, பல்கலைக்கழகங்களில்) தொடர்ந்து மேற்கொள்ள மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிதி உதவியால் பெண்கள் உயர் கல்வி கற்பது உயர்ந்து வருகிறது.
மேலும், பெண்களுக்கு தந்தையின் சொத்தில் உரிமை என்பது இல்லா நிலையினை மாற்றிட 1929இல் தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது கொள்கை வழியில் 1989இல் கலைஞர் முத்தமிழறிஞர் தமிழ்நாட்டின் முதலமைச் சராக இருந்தபொழுது பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தினைக் கொண்டு வந்தார். 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆதரவு பங்கேற்புடன் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நாடு முழுவதற்குமான பெண்களின் சொத்துரிமைக்கான சட்டம் பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்பதில் மதம், புராணம், சாஸ்திரங்கள் பெரும் தடையாக இருந்தன. அண்ணல் அம்பேத்கரும் பெண்களுக்கு சம உரிமை வழங்கிட ‘ஹிந்து கோடு பில்’ (Hindu Code Bill) கொண்டு வர முயற்சித்த பொழுது, மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதை ஏற்காத அம்பேத்கரும் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மதத் தடையை தகர்த்து பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்திட பாடுபட்டது திராவிடர் இயக்கம்தான்.

கேள்வி: பாலியல் சமத்துவத்திற்கு ஆதரவாக பெண் களுக்கான நலத் திட்டங்கள் பல உள்ளதாக அறிகிறோம். அவற்றைப் பற்றிய விவரங்களை அறிந்திட விரும்பு கிறோம்.
பெண்களின் உடல்நலம் பேணப்பட வேண்டும். குழந்தைப் பேறு – அளவில்லாமல் – திட்டமில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் பெண்களின் குடும்பச் சுமை அதிகரிக்கத்தான் செய்யும். 1930களிலேயே குடும்பக் கட்டுப்பாட்டை பிரச்சாரமாக செய்தவர் தந்தை பெரியார். பெண் விடுதலை நோக்கில் – குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்களின் சுமை, கட்டுப்பாடு என்ற வகையில்தான் பெரியார் பிரச்சாரம் செய்தார்.
“குடும்பக் கட்டுப்பாடு” செய்து கொள்ள ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் முன் வருகிறார்கள்.
பெண் சிசு கொலை என்பதே பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமை. பெண் கருக்கலைப்பு சட்ட விரோதமாக்க¢ப்பட்டது.
இவை அனைத்தும் பெண்களின் உடல் நலம் பேணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏற்பட்டன.

கேள்வி: மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி உங்களது
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழில் வெளிவந்த கட்டுரையினை படிக்க நேர்ந்தது. ஆயுஷ் மருத்துவம், யோகா பற்றிய தங்களது கருத்து என்ன?
அறிவியல் பூர்வ அடிப்படையில் அல்லாத எந்த மருத்துவச் சிகிச்சையும் மனித வாழ்வுக்கு ஆபத்தான தாகும். ஆயுஷ் என்பதில் ஆயுர்வேதச் சிகிச்சையும் அடங்கும். அதில் அறுவைச் சிகிச்சைக்கு இடமே இல்லை. ஆயுர்வேதம் படித்து சிகிச்சை செய்பவர்கள் எப்படி அறுவைச் சிகிச்சையினை மேற்கொள்ள முடியும்? இவையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இவைகளை எங்களது இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
யோகா என்பது மத அடையாளத்துடன் பரப்பப் பட்டு வருகிறது. யோகா என்பது ஒருவித மூச்சுப் பயிற்சியே. நன்றாக மூச்சை இழுப்பதாலும், முழுமை யாக மூச்சை வெளியிடுவதுமே. மனதை ஒருமைப் படுத்துவது என்பதைத் தவிர ‘அருள்’ (spiritual) சார்ந்து எதுவும் அதில் இல்லை. உடல்நிலையைப் பேணுதல் எனும் வகையில் ஏற்றுக் கொள்ளலாம். மதத்தை பரப்பிட யோகா பயிற்றுவிப்பது எதிர்க்கப்பட வேண்டும்.

கேள்வி: இந்தியாவில் நிலவிடும் ‘ஜாதி முறை’ பற்றி விரிவாக அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
சமூகத்தில் ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஜாதி முறைதான். பிறப்பால் மனிதரை உயர்வு-தாழ்வு கற்பித்து அதை கடவுள் விதித்த விதி என மக்களை நம்ப வைத்து விட்டனர் மதவாதிகள். அடக்கப்பட்டுக் கிடப்பதே – அழுத்தப்பட்டுக் கிடப்பதே – உரிமை மறுக்கப்பட்டு இருப்பதே தமக்கு விதிக்கப்பட்ட ‘தலைவிதி’ என இருந்து வந்தனர். சிலர் அந்த அடக்குமுறையை – அடிமைத்தனத்தை கொண்டா டவும் செய்தனர். ஜாதியை சுட்டிக்காட்டி கல்வி மறுக்கப்பட்டது. குலத் தொழிலைத்தான் செய்திட வேண்டும் எனும் சமூக விதி இருந்தது. இவை அனைத்திற்கும் ‘மதம்‘ பாதுகாப்பு அளித்து வந்தது.

உழைக்கும் மக்களின் உரிமைக்காக, உயர்வுக்காக பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்றினாலும், தொடங் கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையிலும் தொடர்ந்து எழுச்சியுடன் செயல்பட்டு வருவது திராவிடர் இயக்கம் தான்.
100 ஆண்டு கால ஏற்றத்தை, ஏற்பட்ட சமத்துவத்தை பின்னுக்கு இழுக்கின்ற வகையில் ஒன்றியத்தில் ஆட்சி யில் இருப்போர் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எந்த ‘ஜாதி’ அடையாளத்தை வைத்து உரிமை மறுக்கப்பட்டதோ – அந்த அடையாளத்தைக் காட்டித்தான் உரிமை பெற வேண்டும். அதற்கான வழிமுறைதான் இடஒதுக்கீடு. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை இடஒதுக்கீடு வழிமுறை சமத்துவ நிலைக்கு எடுத்துச் செல்லும். இதற்காக திராவிடர் இயக்கம் 1921ஆம் ஆண்டிலேயே (பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுதே) கம்யூனல் ஜி.ஓ. (Communal G.O.) கொண்டு வந்தனர். விடுதலை பெற்ற இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாக ஆபத்து வந்த நிலையில் மக்களைத் திரட்டி போராடி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தத்தை கொண்டு வரச் செய்து, இடஒதுக்கீடு தொடர்ந்திட தந்தை பெரியார் காரணமாக இருந்தார். அவர் காட்டும் வழியில் இடஒதுக்கீடு வழிமுறையில் பற்பல ஏற்றங்களைக் கொண்டு இன்றைக்கு தமிழ்நாடு மாநிலம் நாட்டிற்கே எடுத்துக் காட்டாக – வழிகாட்டியாக விளங்கிக் கொண்டு இருக் கிறது. இவையனைத்திற்கும் திராவிடர் இயக்கம்தான் முக்கிய காரணமாகும்.

இன்னும் சமத்துவத்திற்கான நிலை முழுமையடைய வில்லை. இடஒதுக்கீட்டால் பயன் பெறாதோர் பலர் உள்ளனர். பல ஜாதியினர் உள்ளனர். அது பற்றிய விவரங்களை அறிய ஜாதிக் கணக்கு (Caste Census) மேற்கொள்வது மிக அவசியம். ஒரு மனித உடலின் ஆரோக்கியத் தன்மை – நோய்த்தாக்கம் பற்றி தெரிந்திட ‘ஸ்கேன்’ எடுப்பது மருத்துவ வழி முறை. ஜாதிக் கணக்கு மேற்கொள்வது சமூகத்தை ஸ்கேன் செய்வது போன்றதே. நாடு தழுவிய ஜாதிக் கணக்கு மேற்கொள்ளப்பட்டு, யாருக்கு எப்படி, எவ்வளவு இடஒதுக்கீடு என அளிப்பது தான் நியாயமான செயலாகும். அதற்காக வலிந்து குரல் கொடுத்து வருகிறது திராவிடர் இயக்கம். ஆனால் ஒன்றிய அரசில் உள்ள கட்சியினர் ‘ஜாதிக் கணக்கு’ மேற் கொள்வதற்கு எதிர்ப்பாக உள்ளனர்.

இந்த எதிர்ப்பானது ‘ஜாதி முறை’, உயர்வு – தாழ்வு தொடர வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. இப்படிப்பட்ட அரசியல், சமூகச் சூழலை மாற்றிடுவதுதான் எங்களது – எங்களின் இயக்கத்தின் பணி. வெற்றி – தோல்வி பற்றிய கண் ணோட்டம் இல்லாமல், சமூக சமத்துவத்திற்கு ‘ஜாதி முறை’யை ஒழிப்புதான் ஒரே வழி என திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது.
கேள்வி: அமெரிக்காவில் நிறப்பாகுபாடு உள்ளது. இந்தியாவில் ஜாதிப் பாகுபாடு உள்ளது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
இரண்டு வகைப் பாகுபாடுகளும் பிறப்பின் அடிப் படையில் வண்ண அடிப்படைகளில் ஆனவையே. அமெரிக்காவில் நிலவிடும் வெள்ளையர் – கறுப்பின மக்கள் என பாகுபாடு நிலவி வந்தாலும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. வெள்ளையர்களின் நிலைப்பாடு என்பது கறுப்பர்கள் தனியாக கல்வி கற்கலாம். தங்களுடன் சேர்ந்து கல்வி கற்கத் தேவையில்லை என்பதுதான். அந்த நிலைமை களும் இன்றைக்கு மாறி வந்துள்ளன.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை ‘சூத்திரர்கள்’ (உழைக்கும் மக்கள்) கல்வியே கற்கக் கூடாது. கல்வி கற்பது ஒரு ஜாதியினருக்கே உரித்தானது. மறுக்கப்பட்டோர் கல்வி கற்றால் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். கல்வி கற்பதை அருகில் இருந்து கேட்டுக் கெண்டிருந்தால், அவர்களது காதில் காய்ச்சிய ஈய உலோகத்தை ஊற்ற வேண்டும். கல்வி கற்று உச்சரித்தால் – அந்த உச்சரித்த நாக்கு வெட்டப்பட வேண்டும் என கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தது. இவை அனைத்திற்கும் மதம், கடவுள் பாதுகாவலர்கள் என ஆதிக்கவாதிகள் ஏற்படுத்தி விட்டனர்.

நிறப்பாகுபாடைவிட ஜாதிப் பாகுபாடு கொடுமையானது (Caste discrimination is worse than discrimination by Colour) அமெரிக்காவில் வெள்ளையரும், கருப்பினமக்களும் சமம்; ஆனால் சேரக் கூடாது, தனியேதான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்தியாவில் அனைவரும் சமமில்லை. ஜாதி அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பது நடைமுறை. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய குடிமக்களில் உடல், நிறம், ஜாதி, பிறப்பிடம் என எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என கூறுகிறது. ஆனால் நடைமுறையில் பாகுபாடற்ற நிலை முழுமையாக வரவில்லை.
(தொடரும்)
நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி…
அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (றிலீஹ்sவீநீணீறீ ஷிtக்ஷீuநீtuக்ஷீமீ) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருவது. அதை ஒழித்திட, ஆதிக்க முழுமைத் தன்மையை அறியாத பல முற்போக்காளர்கள் அமைப்பு தொடங்கி – இடையில் விட்டவர்கள் பலர்; அமைப்பு தொடங்கியவர்களின் காலத்திற்கு பின்னர் தொடராதவை சில; ஆனால் நூற்றாண்டுகள் ஆகியும் தொடர் நிலையை விட இன்றைய நிலையில் வேகமாக, முழு வீச்சுடன், சமூகப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும், முழுமை யாக உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு வருகிறது திராவிடர் இயக்கம்.
உலக மக்கள் சமத்துவமான வாழ்க்கை வாழ்ந்திட ‘பார்வையற்றவர்களாக’ இருக்க வேண்டும்; ஆம் நிறப் பாகுபாட்டை பார்க்க முடியாத பார்வையற்றவர்களாக’ – பாலினப் பாகுபாட்டைக் கருதாத பார்வையற்றவர் களாக’ – நிறப் பாகுபாடு என்பதே தெரியாத பார்வை யற்றவர்களாக’ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மானுடம் உண்மையான மானுடமாக மாறும். இன் றைக்கு மனிதர்களானவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வில்லை. அமனிதர்கள் என்ற நிலையில் தான் உள்ளனர். அமனிதர்கள், விழிப்புணர்வு ஊட்டப்பட்டு மனிதர்களாக மாற வேண்டும். அந்தப் பணியைச் செய்வது, மனித நேயர்களான நமக்கெல்லாம் இருக் கிறது. மாநிலம் விட்டு எல்லைகளைத் தாண்டி ‘மனிதர்’ என்ற நிலையில் அனைவரும் அந்த லட்சிய எல் லையை அடைந்திட, வென்றெடுக்க அயராது பாடுபட வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஊடக வாயிலாகப் படிக்க நேர்ந்தது. இங்குள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் அங்குள்ள கொடி மரத்தினை தாண்டி கோயிலுக்குள் செல்ல உரிமை இல்லை என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறோம். மனிதநேய அமைப் பினரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு கோயில் – அந்தக் கோயிலுக்கு செல்லும் மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தோர் என கருதப்படுகிறது. அந்த மதம் மனிதரைப் பாகுபடுத்திப் பார்ப்பது. அதே மதத்தைச் சார்ந்த மற்ற கோயில்களில் எல்லாம் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதா? கடவுள் என்பவர் உலகத்தைப் படைத்தவர், உலக மக்களைப் படைத்தார் எனக் கருதும் மதம், அனைத்து வகை மக்களும் தங்கு தடையின்றி வழிபாட்டுத் தலத்திற்கு செல்லலாம் என்பதே நியாயமானது. ஆனால் பாகுபாடு, பிரிவினை, உயர்வு – தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது மதம் என்பதே உண்மை நிலை.
‘கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், கடவுள் எல்லாம் அறிந்தவர்’ என்பது உண்மையானால், அதை மறுக்கின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தான் கடவுள் உள்ளார் என வரையறைப்படுத்துவது; சர்வசக்தி பெற்ற கடவுள், மதம் சாராத மக்கள் உள்ளே சென்றால் தீட்டுப்பட்டு விடுவார்; கடவுள் என்று சொன்னால் கடவுள் சக்தி மிக்கவரா? உள்ளே நுழைய விரும்பும் மக்கள் சக்தி மிக்கவர்களா?
முரண்பாடுகளின் மொத்தக் கூட்டே ‘மதம்‘ என்ப தற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ‘கடவுளர்களால் கைவிடப்பட்ட இடம்‘ (ரீஷீபீ யீஷீக்ஷீsணீளீமீஸீ ஜீறீணீநீமீ) என்பதுவும் ஓர் முரண்பட்ட எடுத்துக்காட்டு.
சட்டம் என்பது விளக்கம் அளிப்பவரின வியாக்கி யானம் விளக்கத்தைப் பொறுத்த ஒன்றாக கொடுக்கப் பட்டது சரியான சட்ட விளக்கம் அல்ல. (லிணீஷ் வீs ஸீஷீtலீவீஸீரீ தீut வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீஜீtவீஷீஸீ, வீt வீs ஸீஷீt ரீஷீஷீபீ வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீஜீtவீஷீஸீ)
கேள்வி: திராவிடர் என்பவர் யார்?
நல்ல கேள்வி, திராவிடர் என்பது இனவாதப் பிரிவினை அடிப்படையிலானது அல்ல; ரத்தப் பரிசோதனைகளால் அல்ல; புறத்தோற்றத்தினானதும் அல்ல; மரபணு அடிப்படையிலும் அல்ல; எதன் அடிப்படையிலானது?
பண்பாட்டு அடிப்படையிலானது ‘திராவிடர்’ அடையாளம், யாரையும் பாகுபடுத்தி, பிரித்து, தள்ளி வைத்திடும் பண்பாடு அல்ல அது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனும் சமத்துவநிலைப் பண் பாடு. “மனிதர் அனைவரும் சமம், அனைத்தும் அனை வருக்கும்“ என்பதே அந்த பண்பாடு.
‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ என்பது குறள் கூறும் பண்பாடு. அதுதான் திராவிடர் பண்பாடு. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
சமத்துவ நிலை மட்டுமல்ல; அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும். பொருளியல் மேம்பாடு மட்டும் போதாது. மனிதரின் தன்மானம் – சுயமரியா தையை மதித்துப் போற்றும் நிலை வர வேண்டும்.
நாடு, எல்லைகளைக் கடந்தது இந்தப் பண்பாடு. ‘திராவிடர்’ என்பது மனிதநேயம் சார்ந்தது. இந்தப் பண்பாடு மனிதர் அனைவருக்கும் சொந்தமானது. இந்தப் பண்பாட்டை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் அனை வரும் திராவிடரே.
கேள்வி: (பேராசிரியர்) என்னை நான் ‘திராவிடர்’ என அழைத்துக் கொள்ளலாமா?
ஏன் கூடாது (கீலீஹ் ழிஷீt)? அனைவரும் சமம்; அனைத்தும் அனைவருக்கும் என்ற பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் அனைவரும் திராவிடரே.
நீங்கள் அமெரிக்காவில் வாழும் ‘திராவிடர்’, நாங்கள் இந்தியாவில் வாழும் ‘திராவிடர்’ – அதற்கு மானிப்பற்றே அடிப்படை.
வாழும் இடங்கள்தான் வேறு; பண்பாடு ஒன்றுதான். பண்பாட்டு அடிப்படையில் அனைவரும் திராவிடர் கள். அனைவரும் திராவிடர்கள் அனைவரும் மனி தர்கள் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலைதான் தந்தை பெரியார் காண விரும்பியது, தான் 95 ஆண்டு காலம் வாழ்ந்து பாடுபட்டது. தனது காலத்திற்குப் பின் தனது இயக்கம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நினைத்தது. பெரியார் செயல் முடிப்போம். மனிதர்களாக வாழ்வோம்.
அனைவருக்கும் நன்றி…
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினருக்கு நினைவுப் பரிசாக இயக்க வெளி யீடுகளை தமிழர் தலைவர் வழங்கினார். புத்தகங்களை வழங்கிடும்பொழுது, புத்தகத்தில் உள்ள கருத்துகள் பற்றியோ, இயக்கம் குறித்து மேலும் அறிந்திட விரும் பினாலோ, தயக்கமின்றி பெரியார் திடலைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
நிகழ்வு முடியும் வேளையில் தமிழர் தலைவர், வருகை தந்த பேராசிரியரிடமும், மாணவர்களிடமும் தனது வயது (91) காரணமாக கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை செவித்திறன் குறைபாடு காரணமாக மீண்டும் கேட்கப் (க்ஷீமீஜீமீணீt) பணித்தது குறித்து தெரிவித்தார்.
குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன், “உங்களுக்கு 91 வயது ஆனதாகத் தெரியவில்லை; 20 வயது இளைஞரைப் போல பதில் அளித்தீர்கள்.” (சீஷீu பீஷீ ஸீஷீt றீஷீஷீளீ 91 ஹ்மீணீக்ஷீs ஷீறீபீ. சீஷீu க்ஷீமீsஜீஷீஸீபீமீபீ tஷீ ஷீuக்ஷீ ஹீuமீக்ஷீவீமீs ணீs ணீ 20 – ஹ்மீணீக்ஷீ ஷீறீபீ ஹ்ஷீutலீ) என சிரித்துக் கொண்டே செல்ல அனைவரும் பேராசிரியரின் கருத் தினைக் கைதட்டி வரவேற்றனர்.
(உங்கள் தலைவருக்கு 91 வயது என சொன்னீர்கள். ‘எப்படி எங்களுடன் உரையாடுவார்? கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள அவரால் முடியுமா?’ என நிகழ்ச்சிக்கு முன்பாக அந்தக் குழுவின் தலை வரான பேராசிரியர் எங்களிடம் கேட்டார். சமுதாயத்தில் தடைகள் பலவற்றை தகர்த்த தலைவருக்கு வயது ஒரு தடையே அல்ல; நீங்கள் நேரிலேயே நிகழ்ச்சியின் பொழுது பார்க்கலாம் என கூறியிருந்தோம் – நாங்கள் கூறியபடியே நிகழ்ந்தது)
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலா ளர்கள் ச.இன்பக்கனி, பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வெங்கடே சன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
தமிழர் தலைவரிடம் நேர்காணல் நடத்தியதை முன்னர் திராவிடர் இயக்கம் பற்றிய பல செய்திகளை வருகை தந்த குழுவினர் படித்துத் தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக தமிழர் தலைவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போனி தாமஸ் அவர்கள் நேர்காணல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என நினைத்திருந்தோம், 90 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது; நேரம் கடந்தது தெரியவில்லை. தலைவர் அளித்த கருத்துகளும், செய்திகளும் நடந்த நிகழ் வினை ஒரு முடிவாகக் கருதாமல் தங்களுக்கு ஒரு அருமையான தொடக்கமாக இருந்தது எனக்கூறி விடைபெற்றுச் சென்றார். தொடர்ந்து திராவிடர் கழகத் துடன் தொடர்பில் இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

பெரியார் பன்னாட்டு மய்யம்’ அமெரிக்காவில் தொடங்கப்பட்டது

அமெரிக்கா செல்லும் ஆசிரியரை அகமகிழ்ந்து வழியனுப்பும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்கள்

9.10.1994 மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் எனக்கு கழகத் தோழர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வந்து வழி அனுப்பினர். இரவு 9:00 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருக்கையில், கழகத் தோழர்கள் சால்வைகளையும், கைத்தறி ஆடைகளையும் அணிவித்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன்  சென்னை மாவட்டத் தலைவர்கள், நண்பர்கள், கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை பெரியார் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என பெருந்திரளான தோழர்கள் கூடி என்னை வழி அனுப்பி வைத்தனர். என்னுடன் என் வாழ்விணையரும் அமெரிக்காவிற்கு வந்தார்.

29.10.1994 அன்று அமெரிக்காவில் செயின்ட் லூயிசில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், திராவிடர் கழகப் பொன்விழாவும் ஒன்றாக கொண்டாடப்பட்டன. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் தேவ் நேச்வில் டென்னசி பேசுகையில் “தாம் தமிழகத்திற்கு வந்தபொழுது 69 சதவிகித இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து அடைய முடியாத ஒன்று என்று அங்குள்ளோர் அனைவரும் சொன்னார்கள். ஆனால், அதை முறியடித்து அதை அடைந்து காட்டியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்’’ என்று நன்றியுணர்ச்சியுடன் கூறினார். செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் அரசு செல்லையா அவர்கள், திராவிடர் கழகத்தின் தொண்டைப் பாராட்டி எடுத்துரைத்தார். அங்கு சிறப்புரையாற்றுகையில், “மற்றவர்கள் என்னைப் பெருமைப்படுத்தி, பொது வாழ்க்கையில் ஈடுபடாவிட்டால் எங்கோ சென்றிருப்பார்” என்றார்கள். நான் எங்கும் சென்றிருக்க மாட்டேன். நான் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கலாம். பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், வேறு எதிலும் பெறமுடியாத உண்மையான மனநிறைவை, மகிழ்ச்சியைப் பெரியார் தொண்டனாக இருப்பதில் பெறுகிறேன்’’ என எடுத்து கூறினேன்.

மாலையில் “என்னை செல்ல மகனாக நினைக்கும் ஆல்டன் “மாம்’’ வர்ஜினியா கர்சனர் அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.’’ அவரிடம் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும் கழகம் ஆற்றிவரும் கல்விப் பணிகளையும் விளக்கிக் கூறினேன்.

அன்னை திருமதி.வர்ஜினியா கர்சனர்


அமெரிக்க சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் துவக்க விழா நிகழ்வில் ஆசிரியருக்கு சிறப்புச் செய்யும் விழாக் குழுவினர்கள்

13.11.1994 அன்று அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில தலைநகரான ராலே நகரில், கரோலினா தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் தணிசேரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கழகத்தின் பணிகளை எடுத்துக் கூறினார். அங்கு “பெண்ணுரிமை’’ என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், “வளர்ந்த நாடுகளில் கூட இன்றும் ஆண் ஆதிக்கம்தான் நிலவுகின்றது. முழுமையான பெண்ணுரிமை பெற்ற சமுதாயத்தினால்தான் மனிதநேயத்தை வளர்க்க முடியும். மனிதநேயத்தை வளர்ப்பதுதான் பெண்கள் உரிமை பெறுவதற்கு ஏற்ற வழி’’ என்பதை விளக்கி உரையாற்றினேன்.

சிகாகோ இந்தியத் தூதர் சின்காவுக்கு தந்தை பெரியார் புத்தகங்களை கொடுக்கும் ஆசிரியர் உடன் திரு.சந்திரஜித் யாதவ் அவர்கள்

13.11.1994 அன்று சிகாகோ நகரில் திரு.சந்திரஜித யாதவ், சிகாகோ இந்தியத் தூதரகத் தலைமைப் பொறுப்பாளர் மாண்புமிகு சின்கா முன்னிலையில் ‘பெரியார் பன்னாட்டு மய்யம்’ துவக்கப்பட்டது. அந்த துவக்க விழாவில் சிகாகோ இந்தியத் தூதர் சின்கா பேசுகையில் “அமெரிக்கர்கள் கேட்கும் “ஜாதி, மனிதாபிமான’’க் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது பூசி மெழுக வேண்டியிருக்கிறது. இனி பெரியார் மய்யம் அதற்கான பதிலை நேரிடையாகச் சொல்லும். ஆசிரியர் கி.வீரமணி, திரு.சந்திரஜித் இருவரின் பேச்சையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். “நன்றி எதிர்பார்க்காத இவர்களின் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்’’ என்று உளமார வாழ்த்தினார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15 .11. 20

வியாழன், 2 ஜனவரி, 2020

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 6

- ஒரு தொகுப்பு -

23.12.2019 அன்றைய தொடர்ச்சி...

கொலம்பியா பல்கலைக்கழகம்

(Columbia University)

400 ஆண்டு கால அமெரிக்க அய்க்கிய நாடுகளின் வரலாற்றில் 250 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க உயர் கல்வி நிலையம் கொலம்பியா பல்கலைக் கழகமாகும். நியூயார்க் நகரம் முழுவதும் வானைத் தொடும் கட்டிடங்கள் (Skyscrapers) நிறைந்திருந்தாலும், பழமையான கொலம்பியா பல்கலைக் கழகத்தால் நியூயார்க் நகரத்திற்கு கூடுதல் சிறப்பு சேருகிறது.

இந்தியாவில் பரோடா மன்னரின் சமஸ்தான நிதி உதவியில் உயர்கல்வி கற்க அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வந்து சேர்ந்த இடம் கொலம்பியா பல்கலைக் கழகம். மும்பையில் B.A. பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில் 1913-15 ஆண்டுகளில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளியியலில் M.A. பட்டமும், பின்னர் டாக்டர் பட்டமும் அண்ணல் அம்பேத்கர் பெற்ற இடம் கொலம்பியா பல்கலைக்கழகமாகும்.. பல்கலைக்கழக வாயில் சிறியதாக இருந்தாலும், உள்ளே சென்றதும் முதற் கட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான நூலகத்திலேயே கொலம்பியா பல்கலைக் கழக முழுமையின் வீச்சை தெரிந்து கொள்ள முடிந்தது. பழமையின் சிறப்பைக் கட்டியம் கூறும் வகையில் அமைந்த பரந்து விரிந்த வளாகம். மாணவர்கள் (இருபாலரும்) ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த விதமும், நாமும் இந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்திருக்கக் கூடாதா? வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டதே! என்ற நினைப்பும் வந்தது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் அதன் மேனாள் மாணவரும், மானுடம் போற்றிய சட்ட மேதையுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு மார்பளவு சிலை எழுப்பப்பட்டு இருந்தது. வளாகத்தை சுற்றிச் சுற்றிப் பார்த்த பொழுது - அந்திசாயும் நேரமாகிவிட்டது. பல்கலைக்கழகத்தை விட்டு அகல முடியாமல், இரவு தொடங்குவதற்கு முன்னர் மற்றொரு முக்கிய நினைவுப் பூங்காவை பார்த்திட வேண்டும் என பல்கலைக்கழக வளாகத்தை விட்டு நீங்கினோம்.

ஸ்ட்ராபெர்ரி தோட்டம்

(Strawberry Fields)

நியூயார்க் மத்திய பூங்காவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் இசைப் பாடகர் ஜான் லெனன்

நினைவாக அமைக்கப்பட்ட 'Imagine' மொசைக் தளத்தில் தோழர்கள்.

நியூயார்க் நகரத்தின் மய்யப் பகுதியின் மத்தியப் பூங்காவில் உள்ளது ஸ்ட்ராபெர்ரி தோட்டம்.  எத்தனையோ தேசியப் பூங்காக்கள் அமெரிக்காவில் இருந்த போதிலும் இந்தப் பூங்காவிற்கு மட்டும் ஒரு கூடுதல் சிறப்பு உள்ளது. உலகப் புகழ் வாய்ந்த பீட்டில்ஸ்  (Beatles) பாடகர் எனப் பெயர் பெற்ற ஜான் லெனன் (John Lenon)  இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள டகோட்டா பகுதியில் தான் வசித்து வந்தார். காலை நேரத்தில் இந்த மத்தியப் பூங்கா விற்கு நடைபயிற்சிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டி ருந்தாராம்.

கிறிஸ்தவ மத நம்பிக்கையுடன் ஏசுகிறிஸ்து மீது மதிப்பு வைத்து வழிபடும் மக்களைக் கொண்ட மேலைநாட்டில், தனது இசைப் பாடல்கள் மூலம் 'ஏசு கிறிஸ்துவை விட பிரபலமானவர்' என ஜான் லெனன் போற்றப்பட்டார். இதனை சகித்துக் கொள்ளாத மதவெறியன் ஒருவன் 1980 டிசம்பர் 8-ஆவது ஜான் லெனன் நடைப் பயிற்சிக்கு சென்ற பொழுது அவரை சுட்டுக் கொன்றுவிட்டான். இசைப் பாடகர் நினைவாக நியூயார்க் மக்கள் 1985 -ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை (Strawberry Fields) அமைத்து அர்ப்பணித்தனர்.

பாடகர் லெனன் பாடிய பிரபலமான பாடலான கற்பனை செய்வீர்!' (Imagine) நினைவாக 'Imagine Mosaic' எனும் ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அந்த இடத்தை மட்டும் பார்வையிட்டு, இரவு நேரமாகி விட்ட படியால் பூங்காவின் இதரப் பகுதிகளுக்குச் செல்லமுடிய வில்லை. மதவெறிக்குப் பலியான மாபெரும் இசைப் பாடகனின் நினைவாக அமைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை,  Imagine Mosaic தளத்தை பார்த்த நிறைவுடன் விடுதிக்கு திரும்பினோம். நியூயார்க் நகரத்தின் முக்கிய இடங்களை பார்த்ததுடன் அமெரிக்க சுற்றுலா நிறைவுபெற்றது.

விடுதியில் இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் செப்டம்பர்  28 ஆம் நாள் காலை சிற்றுண்டியை விடுதியிலேயே முடித்துக் கொண்டு, விடுதியை காலி செய்து விட்டு நியூயார்க் நகருக்கு நினைவுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்கக் கிளம்பினோம். அமெரிக்காவில் 'ஒரு டாலர் கடை' (One $ Shop) மிகவும் பிரசித்தி பெற்றது. நல்ல பொருட்கள் ஒரு டாலர் (இந்திய ரூபாயில் 70-75 வரை) விலைக்கு வாங்க லாம். பகல் முழுவதும் கடைகளைச் சுற்றிப் பார்த்து வீட்டுக்கும் உற வினர்களுக்கும், நண்பர் களுக்கும், பொருட்களை வாங்கி மாலை நேரத்தில் சென்னைக்கு திரும்பிட நியூயார்க் விமான நிலை யம் வந்து சேர்ந்தோம். வாங்கிய பொருட்களை முறையாக அடுக்கி - கூடுதல் எடை எந்தப் பெட்டியிலும் இல்லாத அளவிற்கு அடுக்கி வைத் துக் கொண்டு தாயகம் திரும்பிட விமான பயணத் திற்கு தயாரானோம்..

அமெரிக்க நாட்டில் இரண்டு நாள் மாநாடு, கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள, அருகிலுள்ள வாஷிங்டன் D.C.  மேரிலாந்து, பெனிசில் வேனியா, நியூயார்க், மாசசூசெட்ஸ் ஆகிய மாநிலங்களிலுள்ள முக்கிய நகரங்களில் - முக்கிய இடங்களை சுற்றுலா சென்று பார்த்ததில் அமெரிக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டதை விட அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. விடுதலை வேட்கை, தனிமனித சுதந் திரம், அரசையும் மதத் தையும் பிரித்துப் பார்க்கும் மக்கள் என பாராட்டுதலுக்கு உரியவைகள் நிறைய இருந்தன. இருப்பினும் கருப்பர் இனத்தை அடக்கி ஆண்ட நிலைமை, அதனை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மனப்போக்கு முரண்பாடாகத் தெரிந்தது. தனிமனித உணர்வுக்கு மதிப்பளித்தல், பிறர் விசயங்களில் தேவையற்ற தலையிடாத பண்பு, பெரும்பாலான நேரங்களில் மெதுவான குரலில் பேசும் பாணி, சாலை விதிகளை எந்தவித நிர்பந்தமுமின்றி இயல்பாகக் கடைப்பிடிக்கும் போக்கு, புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் புன்னகை புரிந்து மனித இயல்பைக் காட்டும் தன்மை என பல விசயங்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. கல்வி கற்பதில், கல்வித் தரத்தில் பல மடங்கு முன்னேறியுள்ளனர். உயர்கல்வியில், வேலை வாய்ப்பில் உடன்பாட்டு செயல்முறை (Affirmative Action)  பாராட்டுக்குரியதாகும்; ஒடுக்கப்படும் நிலையில் உள்ள நம்நாட்டினர் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

மிகப் பலருக்கு அமெரிக்கச் சுற்றுலா முதன்முறையாக இருந்தது. மிகச் சிலர் முன்னமே சென்று இருந்தாலும், சுற்றுலா செல்வது முதன்முறையே. எத்தனையோ பேர் வெளிநாட்டினர் அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருக்கலாம்.  ஆனால் சுயமரியாதைகாரர்கள் சென்ற அமெரிக்கச் சுற்றுலா மாறுபட்ட கண்ணோட்டத்துடன், மனிதநேயம் மதிக்கப்படுதல் பற்றிய புரிதலோடு இருந்தது. தனியாகச் சென்றிருந்தால் கூட இதில் கிடைத்த அனுபவம் பெற்றிருக்க முடியாது. சுற்றுலா செல்லுவது துணைத் திட்டமாக, மாநாட்டில் பங்கேற்பது முதன்மைத் திட்டம் என்ற அளவில் மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாடு ஏற்பாட்டாளர்களுக்குதான் சுற்றுலா சென்றதால் கிடைத்த அனுபவத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். மாநாடு, சுற்றுலா என வகைப்படுத்தி இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வழிகாட்டிய தமிழர் தலைவருக்கு சுற்றுலா சென்ற சுயமரியாதைத் தோழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த பன்னாட்டு மாநாடு 2021-ல் நடைபெற உள்ளது. எங்கு நடைபெற உள்ளது என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அடுத்த மாநாட்டிலும் பங்கேற்று, சுற்றுலா செல்ல அணியமாக இருப்போம்.

வாழ்க பெரியார், வாழ்க பகுத்தறிவு, போற்றுக சுயமரியாதை மனிதநேயம்!

வீ. குமரேசன்

(நிறைவு)

- விடுதலை நாளேடு 28 12 19

செவ்வாய், 31 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 5

21.12.2019 அன்றைய தொடர்ச்சி...

'பல்கலைக் கழக நிறுவனர் ஹார்வர்டு அவர்களின் சிலை முழுவது கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. கால் விரல் பகுதிகளில் மட்டும் வண்ணம் தேய்ந்து, உள்ளே இருக்கும் ஒளிர் மஞ்சள் நிறத்தில் வெண்கலம் தெரி கிறதே! ஏன் அப்படி?' என்ற கேள்வியினை கேட்டதும் வழிகாட்டி புன்முறுவலுடன் பதிலளித்தார்.  அது வேறொன்றுமில்லை, இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பல மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லும் முன்பு சிலையின் கால் பகுதியைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் செல்வார்களாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களோ, இரவு முழுவதும் சிலை முன் அமர்ந்து காலைப் பிடித்துக் கொண்டு வேண்டிக் (தேர்வில் வெற்றியடைய)  கொள்வார்களாம். கால் பகு தியைத் தொட்டுத் தொட்டு, தேய்த்துத் தொடர்ந்து வணங்கி யதால் கருப்பு வண்ணம் மறைந்து வெண்கலம் தெரிகிறது என்றார்.

நன்றாகப் படித்துத் தேர்வு எழுதினால் வெற்றி யடைந்து விடலாம் எனும் தன்னம்பிக்கை சார்ந்த செயலை விடுத்து சிலையைத் தொட்டு வணங்கினால் வெற்றி யடைந்து விடலாம் என ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களது நினைப்பு ஒருவகை மூடநம்பிக் கையே. தந்தை பெரியார் அடிக்கடி கூறுவது போல முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்பது நம் மக்களுக்கு மட்டுமே சொந்தமா? மேலை நாட்டிலும் சொந்தம் கொண்டாட 'உரிமை'(!) இல்லையா? என்று சொன்ன நிகழ்வு நினைவிற்கு வந்தது. முட்டாள்தனம் உலகம் முழுவதும் - அனைத்து மக்களிடம் ஏதோ ஒருவகையில் நிலவிவருகிறது.

மாசசூசெட்ஸ் மாநிலத்தில் முக்கியமான இரண்டு இடங்களைப் பார்க்க விரும்பினோம். காலக் குறைவு, பயண தூரம் காரணமாக பார்க்க முடியாமல் போய் விட்டது. ஒன்று - யேல் பல்கலைக் கழகம். புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களுள் ஒன்று. அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்த பொழுது அவரை அழைத்து ‘Sub Fellowship’ பட்டம் கொடுத்துப் பாராட்டி மகிழ்ந்த பல்கலைக் கழகம் யேல் பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு திருக்குறள் பாடம் சொல்லி விளக்கமளித்த உயர்கல்வி நிறுவனம் யேல் பல்கலைக் கழகம். மற்றது - அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த - சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய பொழுது சுட்டுக் கொல் லப்பட்ட ஜே.எப். கென்னடியின் நினைவகம். இரண்டு இடங்களும் நாங்கள் பயணம் செய்த வழியிலிருந்து விலகி தனித் தடத்தில் இருந்ததாலும், பயணத்தூரம் அதிகமாக இருந்த படியாலும் பார்க்க முடியாமலே போய்விட்டது.

அமெரிக்க உயர்கல்வி நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டுமட்டும் இருந்த நிலையில் அவைகளை நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. அனைவருக்கும் கல்வி என்பதில், அமெரிக்கா அண்மை யில் உருவான (400 ஆண்டுகள்) நாடு என்றாலும், எவ் வளவு உறுதியாக உள்ளது, அந்நாட்டு மக்கள் பல்துறை களில் சிறந்து விளங்கி வருவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது புலப்பட்டது.

சுற்றுலா தொடங்கி இரண்டு மூன்று நாட்களே ஆகி, நண்பகல், மற்றும் இரவு நேர உணவிற்கு இந்திய உணவகங்களுக்குச் சென்றாலும், அங்குள்ள அசைவ உணவைத் தவிர இதர உணவு வகையில் வட இந்தியச் சுவையில் இருந்தது, ஒரு நெருடலாகவும், உணவு அருந்தியும், அருந்தாமல் இருப்பது போலவே இருந்தது. உடன் வந்த வழிகாட்டியிடம் முன்னமே இந்த உணவு ஒவ்வாமையைத் தெரிவித்ததால் பாஸ்டன் நகர் சுற்றுலா முடிந்ததும், தென்னிந்தியர் (ஆந்திரர்) நடத்தும் 'கோதாவரி' உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என தென்னிந்திய உணவு வகைகள் கண்ணில் பட்டதுமே கூடுதல் பசியும் தொற்றிக் கொண்டது. வயிற்றுக்கு வேண்டிய மட்டும் அந்த உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அடுத்து நியூயார்க் நகரை நோக்கிப் பயணமானோம். பாஸ்டனிலிருந்து நியூயார்க். 350 கிலோ மீட்டர், பயண நேரம் 4.30 மணி என்ற நிலையில் தொடர்ந்து பேருந்துப் பயணத்தால் களைப் புடன் இருந்த பலர் அந்தப் பயணத்தை தூக்கத்திலேயே கழித்தனர். இரவு சரியாக 9.00 மணிக்கு நியூஜெர்ஸியில் உள்ள விடுதிக்கு, இரவு உணவை இடையில் இருந்த பஞ்சாபி உணவகத்தில் அருந்திவிட்டு சென்று சேர்ந்தோம்.

நியூஜெர்ஸியில் ஒன்ரூட் (One Route) பகுதியில் இருந்த ஹாலிடே இன் டோடோவா (Holiday Inn Totowa)  விடுதிக்கு வந்து அன்று இரவும் அடுத்தநாள் இரவும் தங்கினோம்.

நியூயார்க் நகரச் சுற்றுலா

அடுத்த நாள் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

சுதந்திர தேவி சிலை

(Liberty Statue)

நியூயார்க் நகரம் அட்லாண்டிக் பெருங்கடலின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது - அமெரிக்கா எனும் பொழுது வானைத் தொட்டுவிடத் துடிக்கும் உயரமான கட்டடங்களின் தோற்றத்தைக் (Skyscrapers) காட்டும் நகரம் நியூயார்க். முதல் இடமாக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் - அமெரிக்காவைக் காட்சிப் படுத்த வேண்டு மானால் அதன் அடையாளமாகத் திகழும்  சுதந்திர தேவிச் சிலையினைப் பார்க்கச் சென்றோம். நியூ யார்க்கின் ஒரு பகுதியான மன்காட்டன் தீவில் (Manhattan Island) அமைந்துள்ளது அந்த பிரம்மாண்டமான சிலை. மோட்டார் படகின் மூலம்தான் சிலை உள்ள தீவினைச் சென்றடைய முடியும். விமானப் பயணம்-வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது எப்படி பயணிகளைப் பரிசோ தனை செய்வார்களோ அப்படி பல நிலைச் சோதனை களைத் தாண்டி மோட்டார் படகில் ஏறி அமர்ந்தோம். படகு புறப்பட்ட திசையை நோக்கி சுதந்திரத் தேவிச் சிலை தூரத்தில் தெரிகிறதா என்ற தேடலுடன் பயணம் செய் தோம்.

நியூயார்க் - மன்காட்டன் தீவில்

சுதந்திர தேவிச் சிலை விடுதலை வேட்கையின் எழுச்சி வடிவமாக அமைக்கப்பட்டது. வலதுகையில் ஒளி விளக்குச் சுடரை ஏந்திப் பிடித்தும், இடது கையில் ‘July 4, 1776’ என்ற நாள் பொறிக்கப்பட்ட அமெரிக்க விடுதலை பிரகடனமும் உள்ளது. இந்த சிலை 1886-ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க அய்க் கிய நாடுகளின் தேசிய பூங்கா சேவைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தரையிலிருந்து 93 மீட்டர் உயரமுள்ள (சிலை மட்டும் 46 மீட்டர்) செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்ட இந்த சிலையானது பிரான்ஸ் நாட்டினரால் அமெரிக்க அய்க்கிய நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசாகும். 'விடுதலை' (Liberty)  உணர்வினை வெளிப் படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் அடையாளமாக பரிசளிக் கப்பட்டது. (பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பல நூற்றாண் டுகளுக்கு முன்னரே - கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே விடுதலை உணர்விற்கு வித்திட்டவர் பகுத்தறிவாளர் புத்தர். புத்தரின் போதனையின் சாரம்சமான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ளதாக அதன் வரைவுக் குழுத் தலைவரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறி னார். சமூக புரட்சியாளர் தந்தை பெரியார் முழுமையான விடுதலை மனிதனுக்கு வேண்டும் என்ற சீரிய நோக்கத் தில் தான் நடத்தி வந்த பத்திரிக்கைக்கு 'விடுதலை' (Liberation) எனப் பெயரிட்டார். 87-ஆம்  பிறந்த நாள் கண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 57-ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை ஏட்டின் ஆசிரியராக இருப்பது வெளி வருகிற செய்தி ஒப்பீடும்  அமெரிக்க மண்ணில் சுதந்திர தேவி சிலை யினைப் பார்க்கும் நேரத்தில் மனதில் எழுந்தது.

சிலையின் முழுமையான பரிமாணமும் தூரத்தில் இருந்துதான் பார்க்கமுடியும். தீவை அடைந்து, படகி லிருந்து இறங்கி, நெருங்கிச் சென்று பார்க்கும் பொழுது சிலை முழுமையையும் ஒரு பார்வை வீச்சில் சிக்கவில்லை. ஒவ்வொரு பகுதியாகத்தான் பார்க்க முடிந்தது. பீடப் பகுதியில் ஏறி சிலையை சுற்றி வர வழி இருக்கிறது. சிலையில் கிரீடம் அமைந்துள்ள பகுதி வரை ஏறிச் செல்ல படிக்கட்டும் உள்ளது. கால அளவு போதாத காரணத்தால் சிலையை மட்டும் அருகில் இருந்து பார்த்தோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 'விடுதலை' ஏட்டினைப் படித்துவரும் 'விடுதலை' வாசகர்களாகிய சுற்றுலா சென்ற சுயமரியாதை  தோழர்கள் சுதந்திரதேவி சிலையின்  (Statue of Liberty) முன்பு ஒன்றாக சேர்ந்து ஒளிப்படம் எடுத்தது குறிப்பிடத் தக்கதாக இருந்தது.

அரை மணி நேரம் மட்டும் சுதந்திர தேவி சிலை யுள்ள தீவில் செலவழித்து விட்டு அந்த லட்சினையுள்ள நினைவுப் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் படகுப் பயணத்தில், புறப்பட்ட துறைமுகப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுர நினைவிடம்:

மறக்க முடியாத நாள்: 11 செப்டம்பர் 2011. நெஞ்சை விட்டு அகலாமல் நீடிக்கும் காட்சி உலக வர்த்தக மய்யத்தின் இரட்டை கோபுரங்கள் - நினைத்துப் பார்க்க முடியாத சில நொடிகளில் தரைமட்டமாகி, பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிய தீவிரவாதிகளின் வான்தாக்குதல்.

வர்த்தகக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட ஒரு சில வினாடிகளில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்த கொடுமையான காட்சியை தொலைக்காட்சியில் நேர லையில் பார்க்க நேரிட்டது. அமெரிக்க குடியரசுத் தலைவராயிருந்த ஆபிரகாம் லிங்கன் 1863-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது அந்தத் துயரச் செய்தி அட் லாண்டிக் கடலின் மறுகரையில் உள்ள அய்ரோப்பாவிற்குச் சென்றடைய ஒரு வார காலம் பிடித்தது என்று சொல் வார்கள். அறிவியல் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இன்று செய்திகளை நேரலைக் காட்சியாகவே கொண்டு சேர்க்கிறது. இருப்பினும் அந்த அளவிற்கு மானுடப் பற்று மேம்படாமல் மங்கிக் கொண்டே வருவதற்கு இரட்டை கோபுர தகர்ப்பே ஒரு சாட்சியாக - நினைவிடமாக இருக்கிறது. இமை துடிக்கும் நேரத்தில் கம்பீரமாக நின்ற நியூயார்க் இரட்டை கோபுரம் இடிந்து நிர்மூலமான நிகழ்வு எவருடைய நெஞ்சைவிட்டும் அகலாது. பகல் நேரத்தில் நடந்த தகர்ப்பில் அந்த இரட்டை கோபுரங்களில் இருந்த அலுவலகங்களில் பணிபுரிந்த ஏறக்குறைய 3000 நபர்கள் உயிரிழந்தனர். 25000 பேர் படுகாயமடைந்தனர். மனித நேயமற்ற வகையில் அப்பாவி மக்கள் பலிவாங்கப்பட்டது. மனிதகுல வரலாற்றில் நிலைத்துவிட்ட பெரிய தழும்பாகவே நீடிக்கும்.

இரட்டை கோபுரம் நிர்மூலமான இடத்தை, நினை விடமாக எழுப்பி இறந்தவர்களின் நினைவுகள் உலக மக்களின் நெஞ்சங்களில் ஈரத்துடன் உள்ளன என்பது போல அந்த நினைவிடத்தில் நீரூற்றுகள் அமைத்துள் ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டாலும், ஒவ்வொருநாளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நியூயார்க் வருபவர்கள் இரட்டை கோபுர நினைவகத்தை பார்வையிட்டு உயிர் துறந்த மனித உறவுகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். நாங்கள் அந்த நினைவிடத்தை பார்வை யிட்ட பொழுது அப்படி வீரவணக்கம் செலுத்தியதன் அடையாளங்கள் - மலர் வளையங்கள், மலர் கொத்துகள் பரவலாகக் காணப்பட்டன. எங்களது வீர வணக்கத்தையும் உயிர் துறந்தவர்களுக்கு செலுத்தும் விதமாக மலர் வளை யம் வைத்தோம். நினைவிடம் பரந்துபட்டு இருந்தாலும், நகரின் மையப் பகுதியில் இருந்தாலும், அந்த இடத்தைப் பொருத்த அளவில் அமைதிப் பூங்காவாகவே இருந்தது. நினைவிடத்தைவிட்டு கனத்த நெஞ்சுடன் புறப்பட்டோம்.

ஓருலக வர்த்தக மய்யம்

(One World Trade Centre)

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சில ஆண்டு களிலேயே வன்முறையினை எதிர்த்து மனிதகுலம் ஓரணியில் நிற்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையில் நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு அருகிலேயே ஓருலக வர்த்தக மய்யம் மிகவும் எழிலோடும் பிரம்மாண்டமாகவும் எழுப்பப்பட்டுள்ளது. பல அடுக்குகளுடன்  தரையிலிருந்து கோபுர நுனிவரை 1792 அடி உயரத்தில் ஓருலகு வர்த்தக மய்யம் எழுப்பப்பட்டு 4 நவம்பர் 2014 திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வட அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் மேல் அரைக்கோளப் பகுதியிலேயே உயரமான கட்டடமாக எழுப்பட்டுள்ளது. மேல்தளத்தில் செல்லுவதற்கு மின் துக்கி உள்ளது. அந்தப் பகுதியில் தொலைநோக்கி கருவியுடன் கூடிய மய்யமும்  (Observatory) செயல்படுகிறது. மேல் தளத்திலிருந்து சுற்றிலும் பார்த்தால் நியூயார்க் நகரின் முழுப் பரிமாணமும் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒட்டுமொத்த பருந்துப் பார்வை  (Bird's eye view)   வசதி பெரும்பாலான நகரங்களில் இருக்காது. கட்டணம் செலுத்திதான் ஓருலகு வர்த்தக மய்யத்தை பார்வையிட முடியும். சிறிய கைக் கணினி  (tablet)  வடிவமைப்பையும் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

கை கணினியைப் பார்த்தவாறு, காது கேட்பானுடன் நகர்ந்து கொண்டே வர்த்தக மய்யம் பற்றியும், நியூயார்க் நகர் பற்றிய விளக்கங்களையும் கேட்க முடியும். கீழிலிருந்து பார்த்தால் வானத்தை தொடுவது போன்ற கட்டடங்கள் - வர்த்தக மய்யத்தின் மேல் தளத்திலிருந்து பார்த்தால் பிற கட்டடங்களின் உயர் நுனிக்கு மேலாக நாம் இருந்து பார்க்கும் நிலை - ஒருபக்கம் கடலில் நகர்ந்து செல்லும் படகுக் கப்பல், சுதந்திர தேவி சிலை சிறியதாகத் தோன்றும் நிலை - இப்படி நாம் இருக்கும் இடத்தை பொறுத்து, பிரம்மாண்டமாகப் பார்க்கப்பட்ட இடங்கள் கூட பிரம்மாண்டம் குறைந்து நமக்குள் அடங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒருமணி நேரத்தை ஓருலகு வர்த்தக மய்யத்தில்  செலவழித்துவிட்டு அய்க்கிய நாடுகள் அவையை பார்வையிடலாம் எனப் புறப்பட்டோம். செல்லும்பொழுது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அய்.நா. அவை நடவடிக்கையில் பங்கேற்ற வந்திருந்த படியால் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துள் வந்திருப்பதாக அறிய வந்தோம். பார்வையாளர்கள், சுற்றுலாவாசிகள் எவரும் அய்.நா. அவை உள்ள பகுதிப் பக்கம் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை. அய்.நா. அவையை தூரத்தில் இருந்து கூட பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கத்துடன், எழுச்சியின் வடிவத்தை உருவாக்கிய பல்கலைக் கழகம் ஒன்றிற்குச் சென்றோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 23.12.19

புதன், 18 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 3

- ஒரு தொகுப்பு -

16.12.2019 அன்றைய தொடர்ச்சி...

பிலடெல்பியா நகரம் (City of Philadelphia)

சில்வர் ஸ்பிரிங் நகரிலிருந்து 135 மைல்கள் (217 கிலோ மீட்டர்) பயணம் செய்து சரியாக 12.30 மணிக்கு பிலடெல்பியா நகருக்கு வந்துசேர்ந்தோம். அமெரிக்க நாட்டிலேயே பெரிதும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நகரம் பிலடெல்பியா, அமெரிக்கா, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் விடுதலைக்கான வித்து ஊன்றப்பட்ட இடம் பிலடெல்பியா நகரமாகும். அமெ ரிக்க விடுதலைப் போரில் பங்கேற்ற ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்ஸன், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகிய தலைவர்-தளபதிகள் வாழ்ந்த நகரம் பிலடெல்பியா ஆகும். அமெரிக்க விடுதலைப் போருக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் பிலடெல்பியா. அமெ ரிக்கா விடுதலை பெற்ற பிறகு அந்நாளில் (1776-ஆம் ஆண்டில்) 13 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கிய அமெரிக்க அய்க்கிய நாட்டின் தலைநகராக விளங்கிய நகரம் பிலடெல்பியா. அதற்குப் பின்னர்தான் வாஷிங்டன் D.C. உருவாக்கப்பட்டு தலைநகர் மாற்றப்பட்டது.

விடுதலை மணி தேசியப் பூங்கா

(National Park of Liberty Bell)

பிலடெல்பியா நகரின் கட்டடங்களின் அமைப்பே 400 ஆண்டு கால வரலாற்றைச் சொல்வது போல விளங்கிக் கொண்டிருந்தன. விடுதலை மணி (Liberty Bell)  தேசியப் பூங்காவிற்கு சென்றோம். லிபர்டி பெல் என்று அழைக்கப்படும் வரலாற்று புகழ்பெற்ற மணி, விடுதலை உணர்வின் வெளிப்பாடாக, ஓர் அடையாள மாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க விடு தலைப் போருக்கு முன்னர், பிலடெல்பியா சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும் மணியாக இருந்த வழக்கம் பின்னர் நகரின் முக்கிய பிரச்சினைகள், அபாய அறிவிப்புகள் பற்றிய எச்சரிக்கை விடுப்பதற்கான பயன்பாட்டில் இருந்தது. இந்த வழக்கத்தை ஒட்டி முக்கிய நிகழ்வுக்காக அதற்கென பிரத்யேகமாக 4 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணி இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. வந்து சேர்ந்தபொழுது அந்த மணியில் ஏற்பட்ட கீறல் காரணமாக உரிய அளவில் ஒலி எழுப்பிட அந்த மணி பயன்படவில்லை. அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் பொழுது இந்த விடுதலை மணி ஒலித்ததாகவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த லிபர்டி பெல்லை ஒரு நினைவுச் சின்னமாகக் கருதி, விடுதலை உணர்வின் மேன்மையை பறைசாற்றிடும் வகையில் ஒரு தேசியப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த விடுதலை மணியில் கிறிஸ்துவ மத போதனைப் புத்தகத்தில் உள்ள வரிகளான, ‘Proclaim Liberty throughout all the Land unto all the Inhabitants there of’ (அனைத்து நிலப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் விடுதலை பிரகடனப்படுத்தப்படுவதாகுக) எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த லிபர்டி பெல் சின்னத்தைப் பற்றி அதனைப் பார்வையிட்ட பல தலைவர்களும் அதன் பின்னணியில் உள்ள விடுதலை வேட்கையினைப் பற்றிப் பாராட்டி கருத்து தெரிவித்த நிகழ்வுகள் படங்களாக அந்தப் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.

பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசுக்கு சென்றவர்கள் ஈபிள் கோபுரத்தைப் (Eiffel Tower) பார்க்காமல் எப்படி வர இயலாதோ அந்தளவிற்கு பிலடெல்பியாவிற்கு வருபவர்கள் லிபர்டி பெல் நினைவுச் சின்னத்தை பார்க்காமல் திரும்ப முடியாது; அப்படிப்பட்ட முக்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுப் பூங்காவாக அது திகழ்கிறது.

அந்த நினைவுச் சின்னப் பூங்காவிற்கு அருகிலேயே, அமெரிக்க விடுதலைப் போரை முன்னின்று நடத்திய வரும், விடுதலை பெற்ற அமெரிக்க அய்க்கிய நாடு களின் முதல் குடியரசுத் தலைவராக விளங்கியவருமான ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த இல்லம், சிதிலமடைந்து தரை மட்டமான நிலையிலும், எஞ்சிய கட்டுமானங் களைப் பாதுகாத்து நினைவுச் சின்னமாக்கியுள்ளனர். அதைப் பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு சின்னம் பற்றிய சிறப்பைவிட விடுதலைப் போரை நினைவு படுத்திப் பார்க்கின்ற ஓர் உணர்வினை அந்த இடம் ஊட்டிவருகிறது.

இந்த இடங்களை எல்லாம் சுற்றிக் காட்டிட ஓர் உள்ளூர் வழிகாட்டிப் பெண்மணி வந்திருந்தார். ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளையும் மிகுந்த ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டு வந்தார். ஆங்கிலத் தில் அவர் விளக்கமளித்தாலும் அமெரிக்கர்களின் ஆங்கிலப் பேச்சின் முழுமையைப் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. கேட்டுக் கேட்டு பழக்கப்படவேண்டும் என உணர்ந்து கொண்டோம். அந்த வழிகாட்டிப் பெண்மணி எங்களுடன் வருகை தந்த பின்னர் விடைபெறும் பொழுது (கட்டணம் பெற்றுக் கொண்ட வழிகாட்டியாக இருந்த போதிலும்) எங்களுடன் நிரந்தரமாக வந்த வழிகாட்டியிடம் ஒரு நிகழ்வினைக் கூறி ஆதங்கப்பட்டாராம். அதாவது அந்தப் பெண்மணி ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளை விளக்கிக் கொண்டு இருந்த பொழுது அதைக் கவனிக்காமல் சுற்றுலா வந்த எங்களுள் சிலர் சத்தமாக உரையாடிக் கொண்டு இருந்ததைத்தான் அந்தப் பெண்மணி ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியி ருந்தார். அதாவது, அவரது எதிர்பார்ப்பு இதுதான்: விளக்கமளிப்பதை கவனிக்காமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; அதற்கு இடையூறு அளிக்கும் வகையில் உரையாடிக் கொண்டிருந்ததை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக அவர் நினைத்து வெளிப்படுத்தியி ருக்கிறார். அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் நில விய ஒருவித சுயமரியாதை உணர்வு நியாயமாகத்தான் பட்டது; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்,  பிலடெல்பியா நகரைச் சார்ந்த அந்த வழிகாட்டிப் பெண்மணி.

நண்பகல் பசிநேரம் நெருங்கியதால் அங்கிருந்து நகரின் மய்யப்பகுதியில் அமைந்திருந்த ஓர் இந்திய உணவகத்திற்கு சென்று உணவருந்தினோம். பொதுவாக இந்திய உணவகமாக இருந்தாலும் அங்குள்ள அமெரிக் கர்களின் சுவையறிந்து அதற்கு ஏற்றாற்போல இந்திய உணவு வகைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. உப்பு, காரம் மிகவும் குறைந்து சப்பென்று சாப்பிடுவது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

நண்பகல் உணவருந்திய பின்பு பிலடெல்பியா புறநகர்ப் பகுதியில் இருந்த கிரௌன் பிளாசா (Crown Plaza) விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் பயணம் - நயாகரா அருவிக்கு நீண்ட தொலைவு தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டோம். இரவு உணவினையும் அதே இந்திய உணவகத்திற்குச் சென்று  சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடம், புதிய சூழல் என பயண அனுபவம் சற்று களைப்பு கலந்த களிப்பாகவே இருந்தது. விடுதி அறைகள் மிகவும் தூய்மையாகவும், நல்ல தண்ணீர், மின்சார வசதி முழுவதும் தங்கு தடையின்றி இருந்தது. குடிநீரும், குளிக்கும் நீரும் ஒன்றே. அறையிலேயே எந்நேரத்திலும் காபி அல்லது தேநீரை நாமே தயாரித்துக் கொள்ள உதவியாக உரிய பொருட்கள், உபகரணங்கள் இருந்தன. தொடர்ந்து வந்த பயணக் களைப்பினைப் போக்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் தங்கிய விடுதி ஏற்பாடுகள், வசதிகள் விடுதியில் வழங்கப்பட்ட காலை நேர சிற்றுண்டி விருந்து அனைத்தும் சிறப்பாக இருந்தன.

பிலடெல்பியா விடுதியின் வரவேற்புத் தளத்தில் நேர்கொண்ட ஓர் அனுபவம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவியது. விடுதிக்கு வந்ததும், அறைச்சாவி களை பெற்று, உடன் வந்த தோழர்களுக்கு வழங்கிவிட்டு, ஒரு விளக்கம் வேண்டி வரவேற்பு முனையில், மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்த  பெண் விடுதி ஊழியர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாக, தான் மற்றொருவருக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருப்பதாகவும், அவரை அடுத்து மற்றொருவர் எங்களுக்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருப்பதால். அவருக்கு உரிய பதிலைத் தந்துவிட்டுத்தான் எங்களது கேள்விக்கு அவர் பதிலளிக்க முடியும் என எந்தவித சங்கடமுமின்றி தெளிவாகக் கூறினார். முன்னர் வந்தவர் முன்னரே செல்ல வேண்டும்; பின்னர் வந்தவர் காத்திருந்து தனது முறை வரும்பொழுதுதான் வேண்டிய விளக்கத்தைப் பெறமுடியும் என்பது சற்று உடனடிச் சங்கடமாக இருந்த போதிலும், நினைத்துப் பார்த்தால் சரியாகவே தோன் றியது. நாகரிக வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாகவே அந்த நிகழ்வு அளித்த அனுபவம் உணர்த்தியது.

சுற்றுலா சென்று பல்வேறு இடங்களைப் பார்ப்ப தோடு, மனிதநேய நாகரிக வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஓர் அலாதியான இன்பம் இருந்தது. அனைவரும் விரைவாகத் தூங்கி அதிகாலையில் எழுந்து (காலை 6.30 மணிக்கே காலை விருந்து சிற்றுண்டி தயாராகி விடும்) தயாராகி அடுத்த ஊருக்கு பயணத்தை தொடர்ந்திடும் நினைப்புடன் அவரவர்களது அறைக்குச் சென்றோம்.

நயாகரா அருவி  (Niagara Falls)

காலைச் சிற்றுண்டியை பிலடெல்பியா விடுதி யிலேயே முடித்துவிட்டு சரியாக 9.30 மணிக்கு நயாகரா நகரத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். பிலடெல்பியா இருப்பது பெனிசில்வேனியா மாநிலம். நயாகரா இருப்பது நியூயார்க் மாநிலத்தில்; பயண நேரம் 669 கி.மீ.; சாலை வழிப் பயணநேரம் 7.15 மணி; நெடுநேரப் பயணம்; இடையில் நண்பகல் உணவிற்கு இறங்கியதைத் தவிர வேறெங்கும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்தோம். நயாகரா - அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள நகரம்; கனடா நாட்டின் தென்பகுதி யினை ஒட்டியுள்ள அமெரிக்க நகரம். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள எல்லைப் பாதுகாப்பிற்கு எந்தவித ராணுவமும் நிறுத்தப்படவில்லை. நாடுவிட்டு நாடு செல்லும் பயணிகள் ஏதோஉள்ளூர் பயணம் போன்று பாஸ்போர்ட், விசா சம்பிரதாய பரிசோதனையுடன் வந்து செல்லுகின்றனர். ஆனால் அமெரிக்காவின் தென் எல்லையில் உள்ள நாடு மெக் ஸிகோ. அங்கிருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கோ கெடுபிடிகள் அதிகம். அமெரிக்கா, கனடா போன்ற நாடு களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுவும், வாழ்வாதார, அடிப்படை வசதிகளைப் பொறுத்த அளவில் அதிக வேறுபாடுகளும் கிடையாது. ஆனால் ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்ஸிகோ நாட்டு மக்க ளிடையே வாழ்வாதாரக் கட்டமைப்பும், வேலைவாய்ப்பு வசதியும் மிகவும் குறைவு. சட்டத்தை மீறி மெக்ஸிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் மெக்ஸிகோவினர் நுழைந்து விடுகிறார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட வர்களை உடல் உழைப்பு வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளும் வழக்கம் அமெரிக்கநாட்டின் தென் பகுதியில் உள்ள கலிபோர்னியா, கொலரோடா, டெக் ஸாஸ் ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.

நயாகரா நகரைச் சென்றடையும் பொழுது இரவுப் பொழுதாகி விட்டது. விடுதியில் இறங்கி அறையில் பெட்டி, பொருட்களை வைத்து விட்டு, அருகிலேயே இரவு உணவையும் முடித்துவிட்டு கால்நடையாகவே நயாகரா அருவியை பார்க்கச் சென்றோம். இரவு நேரத் தில் வண்ணவிளக்குகள் அந்த நதியின் இருபுறங்களிலும் உள்ள இரண்டு நகரங்கள் மின்னிடும் சூழலில் நயாகரா அருவியை பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.

நயாகரா அருவி என்பது ஒன்றல்ல; மூன்று அருவிகளின் சங்கமம் ஆகும். குதிரை லாட அருவி (Horseshoe Falls) கனடா நாட்டின் ஆண்டாரியா மாநிலப்பகுதியில் உள்ளது. மீதமுள்ள அமெரிக்க அருவி  (American Falls), பிரைடல் வொய்ல் அருவி (Bridal Veil Falls)  ஆகிய இரண்டும் அமெரிக்க நாட்டு நிலப்பரப்பில் உள்ளவை. இவை மூன்றும் சங்கமிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 165 அடிகளாகும்.

பலவித வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் விழும் நீர் அந்தந்த வண்ணங்களில் ஒளிர்ந்தது. அமெரிக்கப் பகுதியில் உள்ள கரையிலிருந்து நீர்வீழ்ச்சிப் பக்கம் நெருங்கிச் சென்ற வேளையில் நீர்த்திவலைகள் காற்றோடு காற்றாகக் கலந்து வந்து உடம்பில் ஒட்டிக் கொண்டன. ஆற அமர ஓர் இடத்தில் இருந்து அமை தியாக அருவி கொட்டுவதைப் பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இரவு நேரத்தில் நயாகரா அருவிக் காட்சிகளை பார்த்து ரசித்த நினைவுகளுடன் மீண்டும் அடுத்த நாள் பகல்நேரத்தில் அருவியைப் பார்த்திடும் நினைப்புடன் விடுதிக்கு திரும்பி வந்தோம்.

அடுத்தநாள் (25, நவம்பர்) காலைச் சிற்றுணவை விடுதியிலேயே முடித்துக் கொண்டு அறையைக் காலி செய்து பொருட்களை சுற்றுலாப் பேருந்தில் இருத்தி விட்டு மறுபடியும் நயாகரா அருவியைப் பார்க்கச் சென்றோம். பகல்நேரத்தில் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. நயாகரா அருவியின் ஒட்டு மொத்த பேரழகையும் கண்டு மகிழ்ந்தோம். அருவியை, நதியின் கரையிலிருந்து பார்ப்பது ஒருவகை அனுபவம்.  நீர் விழும் இடத்திற்கு அருகில் சென்று பார்ப்பது, அந்தச் சூழலில் மகிழ்வது சற்று மாறுபட்ட அனுபவம். அருவியை அருகில் சென்று பார்ப்பதற்கான பயண ஏற்பாட்டை நயாகரா நகர சுற்றுலா நிர்வாகமே செய்து வருகிறது. அதற்கு  ‘Maid of the Mist’ (நீர்த்திவலை மங்கை) என அந்தப் பயணத்திற்கு - அது தொடர்பான சுற்றுலா ஏற்பாடுகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.  எங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனமே ஒட்டு மொத்தமாக நதியில் மின்சார குறுங்கப்பலில் (Motorised Miniship) பயணிக்க பயணச் சீட்டுகளை வாங்கிவிட்டனர். கப்பலில் ஏறிப் பயணிக்க பெருங் கூட்டம் காத்திருந்தது. கப்பலில் ஏறும் முன்பே  ‘Maid of the Mist’ நிர்வாகம் பயணிகள் அனைவருக்கும் உடம்பில் அருவி நீர் படாமல் இருக்க நெகிழி உடையினை (Polythene dress) வழங்கினர். உடையினை அணிந்த எங்களுக்கு ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தது ஒருவித மகிழ் வினைத் தந்தது. பயணிகள் இரண்டு அடுக்குகளில் அமர்ந்து, நின்றிருக்க, கப்பலானது நதியின் போக்கை எதிர்த்து நகர்ந்தது.  அருவியை நெருங்க நெருங்க ஒருவித பேரழகு மனநிலை நெஞ்சம் முழுவதும் கவ்விக் கொண்டது. அருவியையை நெருங்க நெருக்க நீர்த்திவலைகள் மிகுந்த காற்றுச் சூழல் அதிகரித்துக் கொண்டே வந்தது. அபாயக்கோடு வரை கப்பல் பயணிக்கும் பொழுது சுற்றுலா சென்ற அனைவரும் வயது, உடல்நிலை எதையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்த சூழல் இயற்கையின் இயல்புப்போக்கு எவ்வளவு இனிமை யானது என்பதை புரிய வைத்தது. ஒளிப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்வுகளில் பார்த்த நயாகரா நீர் வீழ்ச்சியினை நேரில் நெருங்கி தொட்டுப் பார்த்துவிட்ட தீரச் செயலுடன் எங்களது கப்பல் பயணம் மீண்டும் கரையினை வந்தடைந்தது. தங்களிடம் உள்ள செல்பேசி காமிராக்கள் மூலம் அந்தச் சூழல் முழுவதையும் ஒருவரை மற்றவர் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம், சுயப்படபிடிப்பும் (Selfie) செய்து கொண்டோம். கரை திரும்பிய பின்னர் கரைப்பக்கம் அருவியை நெருங்கிப் பார்த்திடும் பார்வையாளருக்கான இடங்களில், வயது முதிர்ந்தவர்களும் படியேறிப் பார்த்து ரசித்து இளைஞர் களாகிவிட்ட சூழலையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடிந்தது.

அமெரிக்காவில் எந்தவொரு சுற்றுலா இடம்-போற்றுதலுக்குரிய நினைவிடம் போனாலும் அதன் நினைவாகப் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வித வணிக மயச் சூழலை பரவலாகப் பார்க்க முடிகிறது. நயாகரா அருவியைப் பார்த்ததன் நினைவாக, ‘Maid of the Mist’  இலட்சினையுடன் பொறிக்கப்பட்ட உடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தோழர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக் கொண்டோம்.

நயாகரா அருவி தந்த உள மகிழ்ச்சியுடன், குளிர்ந்த மனநிலையுடன் அந்த நெஞ்சம் நிறைந்த இனிய சூழலைவிட்டு அகல முடியாமலும், தொடரவேண்டிய பயணம் அதிகம், தூரமும் அதிகம் என்ற கட்டாயத்தால் அங்கிருந்து நகர்ந்து வந்து பேருந்தில் ஏறினோம்; பாஸ்டன் நகர் நோக்கிய பயணம் தொடர்ந்தது. முந்தையநாள் பயண தூரத்தை விட அந்தநாள் பயணம் அதிகம்; 476 மைல் (766 கிலோ மீட்டர்). நண்பகல் உணவை இடையில் முடித்துக் கொண்டு தொடர்ந்து பயணம் செய்து இரவு 9.00 மணி அளவில் பாஸ்டன் நகரின் புறப்பகுதியில் உள்ள விடுதிக்கு  (Laquinta Andover)  வந்து சேர்ந்தோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 18 12 19