புதன், 23 பிப்ரவரி, 2022

மாநில பகுத்தறிவாளர் கழகப் பகுத்தறிவு ஆசிரியரணி - பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

வியாழன், 17 பிப்ரவரி, 2022

தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் தெலங்கானா மாநில நாத்திக அமைப்பினர்


தாம்பரம், பிப். 14- 13.2.2022 அன்று பகல் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்திற்கு தெலங்கானா மாநில நாத்திக அமைப்பின் பொறுப்பாளர்கள் தோழர் சாரையா, தோழர் ஸ்பாடகஸ் மற்றும் பெரியார் பெருந் தொண்டர் மானா மதுரை ஒன்றிய கழக அமைப் பாளர் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் பெரியகோட்டை மா.சந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்

தோழர்களை தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தை யன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலை வர் கரைமா நகர் தே.சுரேஷ் ஆகியோர் வரவேற்று இயக்க புத்தகங்களை மகிழ்வுடன் வழங்கி சிறப்பு செய்தனர்.

13.2.2022 அன்று பகல் தாம் பரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் பகுத் தறிவு புத்தக கண்காட்சி மற் றும் விற்பனை நிலையத்திற்கு சென்னை மண்டல திராவிடர் கழக தலைவர் தி.இரா.இரத் தினசாமி,அவர் வாழ்விணை யர் இர.ஆதிலட்சுமி,பேரன்கள் சி.பா.திலீபன்,சி.பா.தீரன், தி.இரா.சந்தோஷ் வீரமணி, தோழர் நடராசன் ஆகியோர் வருகை தந்தனர் தோழர்களை தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், பெரியார் பெருந் தொண்டர் சிவகங்கை மா.சந் திரன், தாம்பரம் நகர செயலா ளர் சு.மோகன்ராஜ், குன்றத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கரைமா  நகர் ப.கண்ணதாசன் மற்றும் மாவட்ட இளைஞரணி தலை வர் கரைமா நகர் தே.சுரேஷ் ஆகியோர் வரவேற்று இயக்க புத்தகங்களை மகிழ்வுடன் வழங்கி சிறப்பு செய்தனர்.

மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி 2035 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி ஆதரவு வழங்கினார்.

உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!

சனி, 12 பிப்ரவரி, 2022

நாடெங்கும் பகுத்தறிவுப் பேரொளி பரவ வழி செய்வீர்! வெற்றி நமதே விரைந்து செயல்படுவீர்!

ஆறாம் அறிவு யாதெனில்!