பகுத்தறிவு உலகு

மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூலை, 2024

திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!

 


விடுதலை நாளேடு
Published July 3, 2024

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்

சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

சென்னை, ஜூலை 3 – உலக நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர், சுதந்திர சிந்தனையாளர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 30.6.2024 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டத்தின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ், செயற்குழுவில் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

21 மாநிலங்களில் செயல்பட்டுவரும் – கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் இராமு ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் அடுத்த தேசிய மாநாட்டினை, பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் பங்கேற்று உரை

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வேண்டுதலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற நிலையில் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவரின் உரைச் சுருக்கம் வருமாறு:

சமுதாயத்திற்குக் கேடு ஏற்படுத்திவரும் மதவெறியை, மூடநம்பிக்கைகளை எதிர்த்து களமிறங்கி போராடி வருவதில் பகுத்தறிவாளர் சங்கங்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த சிறப்பான பணியினை ஆற்றி வருகின்றன. அவை ஆற்றிய களப்பணிகளால் நாட்டில் ஒரு மாறுதலான அரசியல் சூழல் ஏற்படும் என நினைத்திருந்த நேரத்தில், மதவெறி அமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் சக்தியினர் மீண்டும் அதிகார நிலைக்கு வந்துள்ளனர். எந்தச் சோதனையினையும் சாதனையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவாளர் சங்கத்தினர் நடப்புச் சூழலையும் நேர்கொண்டு சமுதாயத்தில் மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

திருச்சியில் மாநாடு

பகுத்தறிவாளர்களின் செயல்பாடு உலகளாவிய மக்களுக்குரியது; அனைவருக்கும் தொடர்புடையது. அந்த வகையில், பன்னாட்டு பகுத்தறிவு, மனிதநேய, நாத்திக, சுதந்திர சிந்தனைமிக்க அறிஞர்களை – அமைப்பின் தலைவர்களை அழைத்து, தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடத்திடலாம். தமிழ்நாட்டின் மய்யத்தில் இருக்கும் திருச்சி மாநகரில் அந்த மாநாட்டினை நடத்திடுவோம்.

வருகின்ற டிசம்பர் திங்கள் 28, 29 ஆகிய இரு நாள்களில் மாநாட்டினை நடத்திடுவோம். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டினையும் சேர்த்து மிகப்பெரும் மாநாடாக நடத்திடுவோம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெறும் காலத்தில் இந்த உலக மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது.
இரண்டு நாள் மாநாட்டிலும் அறிஞர் பெருமக்கள், முற்போக்குக் கொள்கையாளர்கள் பங்கேற்று உரையாற்றுவர். மாநாட்டின் நோக்கத் தலைப்பில் பங்கேற்பாளர்கள் கட்டுரை படித்திடவும், தனி அரங்கு நிகழ்ச்சிகளாகவும் இரண்டு நாள்களும், திருச்சியில் மக்கள் பங்கேற்கும் வகையில் திறந்தவெளியில் பொதுக் கூட்டம் நடைபெறும். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடத்தப்படும்.

கடந்த காலங்களில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகள் மற்றும் பல கழக மாநாடுகளை நடத்திக் காட்டிய திருச்சி நகரில், இரண்டு நாள் மாநாடு நடைபெறுவது மக்களுக்கும், பகுத்தறிவாளர் சங்கத்தினருக்கும் ஆக்கமும், ஊக்கமும் நிச்சயம் அளித்திடும்.

மாநாடு குறித்த தொடர் பணிகள் பற்றிய ஆலோசனை களை கூட்டமைப்பின் அங்கமாக உள்ள சங்கத்தினர் தெரிவிக்கலாம். மாநாட்டினை வெற்றிகரமாக அனைவரது ஈடுபாட்டுடன் நடத்திடுவோம்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்று சிறப்புச் செய்தார்.

 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உலக நாத்திகர், திருச்சி, மாநாடு

வியாழன், 14 மார்ச், 2024

பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு

 



Published March 8, 2024, விடுதலை நாளேடு

தந்தை பெரியாரின் பகுத்தறிவு – பெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை

பெங்களூரு, மார்ச் 8- தேசிய அறிவியல் நாளையொட்டி கடந்த பிப்ரவரி 28 அன்று கருநாடகத் தலைநகர் பெங்களூரில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பும், நெகிலா யோகி டிரஸ்டின் மானவ பந்துத்வா வேதிகே மற்றும் அகில கருநாடக விசார வாதிகளா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு நாள் மாநாடு ஒன்றை நடத்தின.
பெங்களூரு குமார பூங்கா கிழக்கிலுள்ள காந்தி பவன் மகாதேவ தேசாய் அரங்கில் காலை 10 மணியளவில் மாநாடு தொடங் கியது. புகழ்பெற்ற எழுத்தாளரும், கருநாடகா சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந் தவருமான அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித் துறை அமைச்சர் சத்தீஷ் ககோலி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட் டமைப்புத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், நெகிலா யோகி டிரஸ்ட் தலைவர் பேராசிரியர் ஹெ.ஆர்.சுவாமி, பகுத்தறி வாளர் சங்கத் தலைவர் நடேகர் உள்ளிட்ட பெருமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, ஜவகர் லால் நேரு ஆகியோரின் படங்கள் அடங்கிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத் தாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
காலையில் நடந்த தொடக்க விழாவுக்குப் பிறகு, மதிய உணவு அனைவருக்கும் வழங் கப்பட்டது. காலை முதலே நிகழ்ச்சிகளின் இடையில் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளையும், ஒடுக்கப்பட்டோர் உரிமை களையும் முன்னிறுத்தும் பாடல்களை வெவ் வேறு குழுவினரும் தொடர்ந்து இசைத்தனர்.

மதியம் முதல் அமர்வாக தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும், பெண்ணுரிமையும் என்ற தலைப்பிலான இரண்டாம் அமர்வு தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார்.
45 நிமிடங்கள் உரையும், அதனைத் தொடர்ந்து கேள்வி-பதிலுமாக அந்த அமர்வு நடந்தது. இயல்பாக குழந்தைப் பருவம் முதலே எழுந்த பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, அவரது கேள்வி கேட்கும் மனப் பான்மை, அதையே ஓர் இயக்கமாக அவர் மாற்றிய பாங்கு ஆகியன குறித்து எடுத்து ரைத்தார். பெரியாரின் பெண்ணியம் எப்படி தனித்தன்மையானது என்பதையும், அதைத் தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கி, எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதை யும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில் அமைந்த உரைக்கு, கன்னட மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்த விவரக் குறிப்புகளின் திரையிடல் அவர்கள் புரிந்து கொள்ளவும் எளிமையாக அமைந் தது. இந்த அமர்வை வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஒருங்கிணைத்தார். அமர்வுக்கு, பகுத்தறிவுச் சிந்தனையாளரும், மறைந்த எழுத்தாளருமான பெரியார் பெருந் தொண் டர் வேமண்ணா அவர்களின் மகன் பாவேந் தன் தலைமை ஏற்றார். கேள்வி-பதில் பகுதி யில் தந்தை பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு ச. பிரின்சு என்னா ரெசு பெரியார் பதிலளித்தார்.

உரைக்குப் பின்னரும் பல்வேறு அமைப் பினரும், தோழர்களும் பேரார்வத்துடன் வந்து தந்தை பெரியார் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள விழைந்தனர். அடுத்தடுத்த அமர்வுகளில் சாவித்திரி பாய் பூலே பற்றி மகாராட்டிர அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதியின் டாக்டர் சவிதா ஷேத், ஜவகர்லால் நேரு பற்றி ஆய்வாளர் டாக்டர் பிரதீப் மால்குடி ஆகியோரும், நவீன மருத்துவ வளர்ச்சி – பகுத்தறிவுப் பார்வையில் என்ற தலைப்பில் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.




 நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:50 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிவியல் நாள், பெங்களூரு, மாநாடு

சனி, 18 மார்ச், 2023

விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு மாநாடு

 

     January 18, 2023 • Viduthalai

 

"நாத்திகம் - எதிர்மறையான கருத்தல்ல; மனிதரின் 

முன்னேற்றம் - வளர்ச்சிக்கான ஒரு வாழ்வியல் முறை" 


தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி வழி நிறைவுரை ஆற்றினார்

ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் நாத்திக அறிஞர் கோரா அவர்களின் 120ஆம் ஆண்டு மற்றும் சரஸ்வதி கோரா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள்களை போற்றும் விதமாக பன்னாட்டு மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. 

2023 ஜனவரி 7, 8 & 9 ஆகிய மூன்று நாள்கள் நாத்திகர் மய்ய வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். ஜனவரி  7ஆம் நாள் தொடங்கிய மாநாட்டு நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நாட்டின் பிற மாநிலங்களி லிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாத்திக அமைப் பினர் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

தொடக்க நிகழ்ச்சி

மாநாட்டு தொடக்க நிகழ்ச்சிக்கு நாத்திகர் மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் தலைமை வகித்தார். "நாத்திகம் - மதச் சார்பின்மை சிந்தனை  & சமூகச் செயல்பாடு" எனும் மாநாட்டின் நோக்கம் குறித்து நாத்திகர் மய்யத்தினைச் சார்ந்த விகாஸ் கோரா விளக்க வுரை ஆற்றினார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் மேனாள் பேரவை துணைத் தலைவர் மண்டலிபுத்தபிரசாத், சட்டமன்ற உறுப்பினர் கட்டே ராமமோகன், அமெரிக்க நாட்டு - மதத்திலிருந்து விடுதலைக்கான நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் பார்க்கர் மற்றும் அமித்பால், ஜெர்மனி நாட்டு - அய்யுறும் உளப்பாங்கிற்கான (ஷிளீமீஜீtவீநீ) அய்ரோப்பிய மன்றத்தின் தலைவர் அமர்தேவ் சர்மா, இந்திய பகுத்தறி வாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், மராட்டிய மாநில மகாராட்டிரா அந்த ஸ்ருத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட் டில், இங்கிலாந்துநாட்டு மனிதநேயர் பன்னாட்டமைப்பின் உத்தம் நிருலா, பஞ்சாப் மாநில தர்கச்சீல சங்கத்தின் சுமீத் சிங், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, டில்லியிருந்து பத்திரிகை யாளர் சக்தி எடமருகு மற்றும் விடுதலை  வீராங்கனையும், காந்திய நாத்திகருமான திருமதி  மனோரமா ஆகியோர் உரையாற்றினர். 

கருத்து அமர்வுகள்

முதல் நாள் பிற்பகல் தொடங்கி 'ஊடகமும், மதச் சார்பின்மையும்', "நாத்திகமும் அரசியலும்", "மதச்சார் பற்ற சமூகப் பணிகள்", "பன்னாட்டு மனிதநேயர் இயக் கம்" ஆகிய நான்கு தலைப்புகளில் உரை வீச்சு  & கலந்து ரையாடல் நடைபெற்றது. மாலையில் கோரா - சரஸ்வதி கோரா ஆகியோரது வாழ்க்கை பற்றிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

ஜனவரி 8ஆம் நாளன்று கருத்து அமர்வுகள் இரண்டு அரங்குகளில் தொடர் நிகழ்வுகளாக நடைபெற்றன. 'அறி வாய்வு சிந்தனையும் தடையற்ற விளக்க விசாரணையும்', 'மனித உரிமையும் நாத்திகமும்', 'நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை'', 'கல்வியும் அறிவியல் பார்வையும்', 'மதவாத உச்சக்கட்டமும் மதவெறியும்', 'புத்துலகில் சமூகச் செயல்பாடும், சீர்திருத்தமும்' ஆகிய தலைப்புகளில் உரைவீச்சும், விவாத விளக்கங்களும் நிகழ்ந்தன.

நிறைவு நிகழ்ச்சி

மாலையில் நடைபெற்ற மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக நிறைவுரை ஆற்றினார். மாநாட்டுப் பேராளர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாத்திகர் மய்யத்தினர் நிறைவு நிகழ்ச்சியில் ஆசிரியர் அவர்களின் உரையினை செவிமடுத்தனர்.

ஆசிரியர் அவர்களின் நிறைவுரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது நிறைவு ரையில் பேசியதன் சுருக்கம்:

அண்மையில் நாத்திகர் மய்ய தொடக்க கால செயல் பாட்டாளரும், கோரா - சரஸ்வதி கோரா அவர்களின் முதல் மருமகனுமான அர்ஜூன் ராவ் (வயது 105) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாத்திகர் மய்யத்தை நிறுவிய கோரா அவர்கள் சமூக மாற்றங்களை உருவாக்கிய நாத்திகராக வாழ்ந்து மறைந் தார். அவர் நினைத்ததை, லட்சியத்தை எட்டு கின்ற வகையில் அவருக்குப் பின்னர் பணியாற்றிய  காலம் சென்ற லவனம், விஜயம் மற்றும் கோரா குடும்பத்தைச் சார்ந்த மறைந்த பெருமக்கள் அனைவரும் போற்றுதலுக் குரியவர்கள். இன்றைய பொறுப்பாளர்களும் தொடர்ந்து கோரா காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது நாத்திகம் பரப்பிடும் பணி தொடர வேண்டும் என்பது எமது விருப்பம்.

தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பொழுது கோரா அவர்கள் கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 'கடவுள் எனும் கோட்பாடு' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிய கோரா, பலவித கண்டனங்களுக் கும், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆளானார். சுதந்திரப் போராட்டத்தோடு நாத்திகம் பரப்பிடும் பணியிலும் கோராவும், அவரது இணையரான சரஸ்வதி கோராவும் ஈடுபட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக் காகப் பணி யாற்றிய அவர்தம் பாங்கு, அதனால் பயன் பெற்ற மக்களாலேயே தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நாத்திகம் என்பது எதிர்மறையான கோட்பாடு அல்ல; நேர்மறையானது; மனிதரை மேம்படுத்திட வல்லது என எடுத்துரைத்தார்; சென்ற இடமெல்லாம் கொள்கை முழக்கம் புரிந்தார்.

இந்த மாநாட்டின் நோக்கம் நாத்திகம், மதச்சார் பின்மையை வலியுறுத்துவதாக உள்ளது.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே 'மதச் சார்பின்மையைக் கொண்ட நாடு' என பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு அந்தக் கோட்பாடு நடைமுறையில் உள்ளது என்பது கேள்வியே. இந்தக் கோட்பாட்டையே பொருளற்றதாக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் 'கடவுள் காப்பாற்றுவார்' என்று குரல் எழுப்புபவர்களாக உள்ளனர். ஏன் அமெ ரிக்க நாட்டில்  'புழக்கத்தில் உள்ள பண நோட்டில்கூட 'கடவுளின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' (மிஸீ நிஷீபீ ஷ்மீ  ஜிக்ஷீust) என்று அச்சடிக்கப்பட்டுள்ள அளவில் மதச் சார்பின்மையை பொருளற்றதாக்கி வருகின்றனர்.

இறையாண்மை மக்கள் வசமே

இறையாண்மை என்பது 'இறைவன்' என்று சொல்லப் படுகின்றவரிடம் இல்லை; இந்திய அரசமைப்புச் சட் டத்தை நாட்டுக்கு, தமக்குத்தாமே வழங்கிக் கொண்டுள்ள இந்த நாட்டு மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது. இதை மறுக்கின்ற வகையில் 'கடவுளிடம்தான் அனைத் தும் உள்ளது' என்பது தவறானது மட்டுமல்ல; அரசமைப் புச் சட்டத்தினையே அவமதிக்கும் செயலாகும்; அரச மைப்புச் சட்டம் உருவான பொழுது அந்த அவையிலே, முதுபெரும் சமதர்மக் கொள்கையாளர் என்று அறியப் பட்ட எச்.வி. காமத் தனது கூற்றாக - முகப்புரையிலே 'கடவுளின் பெயராலே' என்ற வாசகங்கள் இடம் பெற வேண்டுமென வாதிட்டார். பகவத் கீதையின் உள்ளீடாக 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும் இருந்திட வேண்டும்' எனக் கூறினார். ஆனால் அவரை ஆதரித் தோர் வெகு சிலரே - எதிர்த்தோர் மிகப் பலர். இதுதான் அரசமைப்புச் சட்டம் உருவான வரலாறு.

அந்த நேரத்தில் அத்தகைய எதிர்ப்பு நிலவி, அரச மைப்புச் சட்டம் உருவானதில் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் அவர்களின் பங்குபெரிதானதாகும்.

ஆனால், இன்று அத்தகைய நிலைமைகள் தலைகீழாக மாறிப் போயுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி, நாட்டு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் என்பது மதச்சார்பின்¬யை கேலிக் கூத்தாக்குகிறது.

சமூகத்தில் நியாயமாக நடைபெற வேண்டிய செயல்பாடுகள் தாமதமாவதைப் பொறுத்துக் கொள்ள லாம்; முரண்பாடானவை நடைபெறும்பொழுது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அன்றாடம் மக்கள் நேர்கொள்ளும், அவதிப்படும் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தடை என்று உள்ள நிலையில், மக்களை திசை திருப்பிட கோயில்கட்டும் பணியில் கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குள் கட்டி முடித்திட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டம் - மதவாத முடக்கம்

தமிழ்நாட்டின் - இந்திய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கடல்வழி வர்த்தக வளர்ச்சிக்கு உதவிடும் சேதுக் கால்வாய் திட்டம் முறையாக ஆய்வு செய்து அரசு அனுமதி பெற்று அரசே தொடங்கிய திட்டம். இதனை புராணப் புனைவான இராமன் கட்டிய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக அரசியல் வாதிகள் போர்வையில் உள்ள மதவாதிகள் உச்சநீதிமன் றத்திற்குச் சென்று தடையாணை பெற்றுள்ளனர். உலகில் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்று வரவிருந்த சேது  சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இத்தகைய மனித முன்னேற்றத்தை மறந்து, மதத் தைத் தூக்கிப் பிடித்து மனிதத்தை மறுக்கும் செயல்கள் முறியடிக்கப்பட வேண்டும். இவை குறித்தெல்லாம் இந்த மாநாடு கலந்து பேசி, விவாதம் மேற்கொண்டு ஆக்கரீதியாக தீர்மானங்களை நிறைவேற்றிட வேண்டும். நாத்திக அடிப்படையில் மதச்சார்பின்மை உலகெங்கும் வலியுறுத்தப்பட வேண்டும். மாநாட்டு நிகழ்ச்சிகள் அதன் நோக்கத்தினை நிறைவேற்றிடும் வகையில் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகிறோம். 

                         இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

கழகப் பொருளாளரின் உரை

மாநாட்டினை தொடங்கி வைத்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

நாத்திகத்தினை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடைபெறுகின்றது. சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவிடும் சூழலில் - கடவுள்கள் பெயரால் பேதம், பிரிவினை, உரிமை மறுப்பு நடைபெறும் சூழலில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்போடு மட்டுமல்ல; கடவுள் எதிர்ப் பாகவும் களம் காண வேண்டும். இது யாரையும் புண் படுத்திட அல்ல; மனிதனை - ஒடுக்கப்பட்ட மக்களை ஏற்றம் காணச் செய்திடும் செயல். இதுதான் நேர்மறை நாத்திகம் (றிஷீsவீtவீஸ்மீ கிtலீமீவீsனீ) ஆகும்.

மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைக்காகப் போராடியவர்கள் பலர் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். காரணம் அந்த மதங்களின் கடவுளர்கள் மனிதரைப் பேதப்படுத்திடவில்லை; ஒடுக்கப்படுவதை வலியுறுத்திடவில்லை. ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம் கடவுளின் பெயரால் மனிதரை பிளவுபடுத்தியுள்ளது. எனவே மனிதரை ஒன்றுபடுத்திட, ஒற்றுமைப்படுத்திட கடவுள் மறுப்பு - கடவுள் எதிர்ப்பு அவசியமாகியது. இதைத்தான் தந்தை பெரியார் 'கடவுள் மற - மனிதனை நினை' என சமூகச் செயல்பாட்டுக்கான முழக்கமாக வழங்கினார்.

மேற்கத்திய நாடுகளில் மதம் குறுக்கிடாத மதச் சார்பின்மைக்கு அறைகூவல் வந்துள்ளது. மத உணர் வாளர்களின் ஆதிக்கம் - அரசின் மீதான ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மதவாதிகளின் குறுக் கீட்டால் - ஆதிக்கத்தால் மனித சமுதாயம் இழந்தவை ஏராளம்; கண்ட பின்னடைவுகள் பலப்பல.

கடந்த கால வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. இந்தியநாடு மதச் சார்பின்மையற்ற அரசு ஆளும் நாடு என அறிவிக்கப்பட்டாலும், மதத்தின் பிடியிலிருந்து விலகிய பாடில்லை. மதம் நீங்கிய மனித வாழ்க்கைதான் உண்மையான வாழ்வாகும்; உன்னத மான வாழ்வாகும் எனக் கூறி மாநாட்டினை தொடங்கி வைக்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக, நாத்திகர் மய்யத்தின் களப் பணிகளைப் பார்வையிட பேராளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பன்னாட்டு மாநாட்டில் 

கலந்து கொண்ட கழகத்தினர்

விஜயவாடாவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பி.சி.ஜெயராமன், திரா விடர் கழகப் பொறுப்பாளர்கள் தாம்பரம் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், அ.கருப்பையா, நாத்திகன் - மீனாம்பாள் இணையர்; கோ.தங்கமணி - இரா.தனலட்சுமி இணையர், இளைஞரணி பார்த்திபன், வழக்குரைஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாடலிலும் கருத்துரைகளை வழங்கினர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:16 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மாநாடு, விஜயவாடா

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பஞ்சாபில் இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு

 

 October 29, 2022 • Viduthalai

பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்ஷீல் பவன் அரங்கில் இந்திய பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு (FIRA - FEDERATION OF  INDIAN  RATIONALIST  ASSOCIATION)12ஆவது தேசிய மாநாடு  இன்று 29.10.2022 காலை  தொடங்கியது. இம்மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 28 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். பல்வேறு அமர்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பகுத்தறிவாளர்களின் அமைப்புகளின் சார்பில் தங்களது படைப்புகளை அளிக்கிறார்கள்.

பஞ்சாபில் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு
 November 01, 2022 • Viduthalai

29.10.2022 அன்று பகுத்தறிவாளர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய கருத்தரங்கு பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரில் தர்க்க்ஷீல் பவன் அரங்கில் நடைபெற்றது.

இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் இருந்து பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 28 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி வீரமணி அவர்கள் கருத்தரங்கு வெற்றி பெற வாழ்த்துடன்,  FIRAஅமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் என் பதையும் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அச்செய்தி கருத்தரங்க பேராளர்களுடைய பலத்த கரவொலிகள் இடையே படிக் கப்பட்டு FIRAசெயலாளரிடம் கருத்தரங்க மேடையில் வழங்கப்பட்டது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:01 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பஞ்சாப், மாநாடு

திங்கள், 26 செப்டம்பர், 2022

கனடா - டொராண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாடு நிறைவு நாள் (25.9.2022) நிகழ்ச்சிகள்



   September 26, 2022 • Viduthalai

தமிழர் தலைவரின் முதன்மை உரையுடன் நடைபெற்றன

டொராண்டோ, செப்.26 - கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 25.9.2022 அன்று காலை (கனடா நேரப்படி) 9 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடந்தேறின.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் அருள்செல்வி வீரமணி உரையாற்றினார். முதல் நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் சுருக்கமாக எடுத்துரைத்தார். தொடக்க உரையாளரின் அறிமுகத்தினை பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கினார்.

தமிழர் தலைவரின் முதன்மை உரை

இரண்டாம் நாளான நிறைவு நாள் நிகழ்ச்சிகளின் முதன்மை உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்கள். தமிழர் தலைவரின் உரைச்சுருக்கம்: 

'மனிதநேயம்' தத்துவமாக உலகெங்கிலும் பரப்பப்பட வேண்டும். மனிதகுல இன்னல்களுக்கு தீர்வு மனிதநேயத்தை பேணிக் கடைப்பிடித்திட வேண்டும். உலகில் மனிதரின் பண்பாடு நாடுகளிடையே மாறுபட்டு நிலவுகிறது. அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளும் பலவாறாக உள்ளன. மனிதருக்கு இன்னல்தரும் ஆதிக்க அடக்கு முறையாளர்களும் பலவாறாக உள்ளனர். அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்களும் பர தரப்பட்டவையாக உள்ளன. அவை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஒற்றுமை தேவைப்படுகிறது. அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும். அதற்கு அடிப்படை மனிதநேயம் காக்கப்பட வேண்டும்; மனிதநேய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.


தமிழர் தலைவருக்கு 'மனிதநேய சாதனையாளர்' விருது
கனடா மனிதநேயர் (Humanist Canada)அமைப்பு வழங்கியது

சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்புகளுள் ஒன்றான கனடா  (Humanist Canada)  மனிதநேயர் அமைப்பு - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 'மனிதநேயர் சாதனையாளர்' விருதினை வழங்கியது. தமிழர் தலைவரின் மனிதநேய மற்றும் மனித உரிமைக்கான  பங்களிப்பை (Life long Contribution) பாராட்டும் விதமாக 2022ஆம் ஆண்டுக்கான 'மனித நேயர் சாதனையாளர்' விருதினை வழங்கிடுவதாகக் குறிப்பிடும் பட்டயம் வழங்கப்பட்டது.

விருதினை கனடா - மனிதநேயர் அமைப்பின் தலைவர் மார்டின் பிரித் வழங்கினார். விருதினை தமிழர் தலைவர் சார்பாக திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ. குமரேசன் நேரில் பெற்றுக் கொண்டார். உடன் மாநாட்டில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள் இருந்தனர். மற்றும்  பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், பொருளாளர் அருள்செல்வி பாலகுரு   ஆகியோரும் உடனிருந்து விருதினை பெற்றுக் கொண்டனர்.

மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியார் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். மனித சுயமரியாதை உணரப்பட்டு, அதனைக் கடைப்பிடித்தால் சமூக அநீதிகள் களையப்பட்டு விடும்; சமூக அநீதி ஒழிக்கப்பட்டு விடும். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியார் ஒரு மனிதநேயப் போராளியாக சமூகப் பணியாற்றினார்.

மனித சுயமரியாதை மறுக்கப்படும் வகையில் சில மனிதருக்கு பொதுப் பாதையில் நடக்கும் உரிமை மறுக்கப் பட்டது. கேரளா - வைக்கத்தில் இந்தக் கொடுமையை எதிர்த்து காங்கிரசில் தலைவராக இருந்த பெரியார், காந்தியாரிடம் கேட்டார்; "நாய், பன்றிகள் பாதையில் நடக்கலாம்; மனிதர்கள் நடக்கக் கூடாதா?" என உரிமைக் குரல் எழுப்பினார். இருப்பினும் காந்தியார் பெரியாரை காங்கிரசுக்காரராக வைக்கத்திற்குச் சென்று போராட அனுமதிக்கவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு  போராடி சிறைவாசம் சென்று அனைத்து மக்களுக்கும் பொதுப் பாதையில் நடந்து செல்லும் உரிமையினை பெரியார் பெற்றுத் தந்தார். தலைமை வழிபாட்டையும், அதிகாரப் பதவியையும் என்றுமே பெரியார் விரும்பியதுமில்லை; நாடிச் சென்றதுமில்லை.

ஜாதிக் கட்டமைப்பை வெளி நாட்டவர் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஜாதி முறையை ஒழித்து சமத்துவத்திற்குப் போராடியவர் தந்தை பெரியார். நமது உரிமைகளுக்காக நாமும் போராட முன்வர வேண்டும்;  வெற்றி பெற வேண்டும். சமூகநீதிப் பயணத் திட்டத்தைஉருவாக்கி செயல்படுத்த வேண்டும். இது ஆயுதப் போராட்டமல்ல; களத்தில் சந்திக்க வேண்டிய போர் அல்ல இது; மனித மனங்களில் நடைபெற வேண்டிய போர்; கருத்துப் பரப்பலின் மூலம்தான் உண்மையான மாற்றத்தினை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.

மனிதநேயம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் நடந்து விட்டது. மக்களிடம் சென்று நடைமுறை மனிதநேயம் கடைப்பிடிக்க ஆவன செய்திட வேண்டும்.

இன்னல்படும் மக்களின்  உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் - தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தால் திராவிட மாடல் - மக்களுக்கு  உரிமையுடன் பலன் பெறும் ஆட்சி முறைகள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதிக்கான போராட்டம் என்பது எதிர்நீச்சல் போன்றது. அவதிப்படுபவர் நிலையி லிருந்து சமூக அநீதி உணரப்பட வேண்டும். வன்முறை அற்ற அணுகுமுறையின் மூலம் சமூகநீதி கிடைக்கப் பெற வேண்டும். உலகம் கருவியால் வென்றெடுக்கப்படக் கூடாது; கருத்தால் வெல்லப்பட வேண்டும்.

சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து அய்ந்தாம் தலை முறையாக வெற்றிகரமாக மக்கள் பணி ஆற்றி வருகிறது. 

அவதிப்படுவது வெளியே கேட்காமல் இருக்கும் மனிதர் களை தேடிப் பிடித்து உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நாம் பல வகையிலும் கடமை ஆற்றிட வேண்டும்.

அரசியலும், சமூகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மனிதநேயராக ஆட்சி செய்து வருகிறார். சுயமரியாதை இயக்கம், மக்கள் கருத்தை திரட்டி, ஆட்சியாளர் ஆவன செய்திடும் நிலையினை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில், சுயமரியாதை இயக்கப் பணிகளை நேரில் பார்த்திட மனிதநேய அமைப்பின் தலைவர்களை வருக வருக என அழைக்கிறேன்.

இந்த அணுகுமுறை உலகெங்கும் பரவிட வேண்டும். நாடுகள் பலவகையாக இருந்தாலும் மனிதநேயம் நம்மை இணைத்து செயல்படுத்திடும் - வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். மனிதநேயம் காத்திட வழி அமைப்போம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது முதன்மை உரையில் குறிப்பிட்டார்.

தேநீர் இடைவெளிக்குப் பின்னர் உரை வீச்சுகள் தொடங்கின.

தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா எனும் அமெரிக்க - சியாட்டல் வாழ் மதுரையில் தமிழ் கற்ற அறிஞர் 'திருக்குறளும் சமூகநீதியும்' என்ற தலைப்பில் உரை ஆற்றினர். அனைவருக்கும் பொது என்னும் கருத்து திருக்குறளில் உள்ளது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

அடுத்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் சங்க கால இலக்கியங்களில் சமூகநீதி, பாலியல் நீதி நிலவியதை இலக்கியக் குறிப்புகளுடன் விளக்கி, தமிழர் வரலாற்றின் உயரிய நிலையினை குறித்து ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.

கனடா நாட்டு ஆய்வு விசாரணை அமைப்பினைச் சார்ந்த லெஸ்லி ரோசன் பிளட் மகளிரிடமும், குழந்தைகளிடமும் பேணப்பட வேண்டிய மனிதநேயம் பற்றி உரையாற்றினார்.

அடுத்து டொராண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன், கனடா நாட்டில் குடியேறியவர்களின் (ஈழத் தமிழர்களின்) இன்னல்களுக்கான தீர்வு, பற்றி உரையாற்றினார்.

மனிதநேயத்தின் வழி தட்பவெப்ப நிலை மாற்றத்தினை மட்டுப்படுத்துவதுபற்றி பேராசிரியர் அரசு செல்லையா உரையாற்றினார்.

சிறீலங்காவில் "மனிதநேயமும் சமூகநீதியும்" எனும் தலைப்பில் சிறீகதிர்காமநாதன் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டின் திராவிட சிந்தனையாளர் மய்யத்தின் புகழ் காந்தி, இன்றைய இளைஞர்களை மதச்சார்பின்மை கருத்தின்பால் ஈர்த்திடும் வழிமுறைகள் பற்றி உரையாற்றினார். திராவிட சிந்தனைகள், வரலாறு, பாடக் குறிப்புகளில் இடம் பெறுவதன் அவசியத்தையும், வேண்டாத பாடக் குறிப்புகளை நீக்கிட வேண்டுவது குறித்தும் பேசினார்.

பிற்பகல் அமர்வுகள்

நண்பகல் உணவிற்குப் பின் முதல் நிகழ்வாக 'திராவிட இளைஞர்களின் நகைச்சுவை' எனும் அமர்வில் இளங்கதிர் இளமாறன் மற்றும் நிகில் முனியப்பன் நிகழ்ச்சியினை வழங்கினர். தந்தை பெரியார் பற்றிய குறிப்புகளை இயல்பான நகைச்சுவை இழையுடன்  வழங்கினர். 

அடுத்து இன்றைய 'இளைஞர்கள் சமூகநீதி- பெரியார் ஓர் உத்வேகம்" எனும் தலைப்பின் திராவிடர் கழக மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.

தேநீர் இடைவேளைக்குப்பின் அவைகள்  இரண்டாக நடைபெற்றன.

கனடா நாடாளுமன்ற உறுப்பினரும், மாநாடு நடைபெற ஆவன செய்திட்ட ஈழத் தமிழருமான கேரி ஆனந்த சங்கரி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றினார். வருங்காலத்திலும் மனிதநேயர் சமூகநீதிக்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடுவதாகவும் உறுதியளித்தார்.

ஆங்கிலத்தில் மாணவர் கலந்துரையாடலை, கனடா - ஆய்வு விசாரணை மய்யம், மனிதநேயர்களான டொராண்டோ மனிதநேய சங்கத்தினர் நடத்தினர்.

தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற பெரும்பாலானவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேராளர்கள் பேசினர். தங்களது பெரியார் இயக்க தொடர்பு, ஏற்பட்ட விதம் பற்றியும் வருங்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றியும் ஒவ்வொருவரும் சுருக்கமாகப் பேசினர்.

இறுதியாக நிகழ்ச்சியினை தொகுத்து, நிறைவுரையினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின்  தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆற்றினார்.

சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேயர் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்வுகளும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றன.

செய்தித் தொகுப்பு: வீ. குமரேசன்


இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கனடா, மாநாடு, விருது

சனி, 11 ஜூன், 2022

பெரியார் பன்னாட்டமைப்பு உலக மாநாடு - அழைப்பு! மனிதநேய அன்பர்களே & நண்பர்களே,


  June 03, 2022 • Viduthalai

மிக்க மகிழ்வுடன், நீண்ட இடைவெளிக்குப் பின், நேரே கூடுவோம், வாருங்கள்! கனடா நாட்டின் டொராண்டோ (ரொறன்ரோ) நகரிலே மாநாடு! செப்டம்பர் 24 - 25, 2022 (சனி & ஞாயிறு) - 2 நாட்கள் பெருவிழா! உலகெங்குமிருந்து பெரும் தலைவர்கள் & மனிதநேய அமைப்புகள் பங்கேற்பர்! தமிழ்நாட்டின் திராவிட மாடல் & சமூகநீதி  உலக அளவில் புகழ் பெறுவதைக் காண வாருங்கள்! இது பெரியார் பன்னாட்டமைப்பின் மூன்றாவது உலக மாநாடு!  செருமனி (2017) & அமெரிக்காவில் (2019) நடந்தது போலவே, இம்முறை டொராண்டோவிலும் (2022) சிறப்புற நடக்கும். அனைவரையும் இனிதே வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்! காலம் கருதி, விரைவாக ஏற்பாடுகள் செய்வோம். அனைவரையும் இப்போதே அன்புடன் அழைக்கின்றோம். மேலதிகத் தகவல்கள் விரைவில்! இணைந்திருப்போம்!

இங்ஙனம்,
பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா
(3.6.2022)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:03 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கனடா, பன்னாட்டு, மாநாடு

வியாழன், 29 ஏப்ரல், 2021

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு, சென்னை பெரியார் திடல் 10.1.1996


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு சென்னை பெரியார் திடலில் 10.1.1996 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பெரியார் பிஞ்சுகள், இளைஞரணி, மகளிரணியினர், மாணவரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர்கள் என அனைவரும் கழகக் கொடியினை உயர்த்திப் பிடித்தவண்ணம் கலந்துகொண்டனர். ‘தீ மிதி’ நிகழ்வும், மாநாட்டு மேடையில் நடைபெற்றது. திராவிடர் கழக அமைப்பாளர் பேபி சமரசத்தின் மகன் செல்வன் எழிலனுக்கும், ஒசூர் மாணிக்கவாசகம் தனலட்சுமி ஆகியோரின் செல்வி செந்துவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து திருமணம் நடத்தி வைத்தேன்.

மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் இனமுரசு சத்யராஜ், எம்.டி.கோபால கிருட்டினன், ஆந்திர மாநிலம் விஜயவாடா, கோரா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் இலவணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாத்திக அமைப்பின் அதிகாரப் பூர்வப் பங்கேற்பாளரான நார்மன் டெய்லர், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பார்பராஸ் டாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஷீட், லண்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஹுமனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரி ஸ்டோப்ஸ் ரோப் ஆகியோர் உரையாற்றினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைமை உரையாற்றுகையில், “ஒரு காலத்தில் ரசல், இங்கர்சால் போன்றவர்களை நாம் இங்குக் கொண்டு வந்தோம். இன்று தந்தை பெரியாரை பிற நாட்டவர்கள் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய திருப்பம்! தந்தை பெரியாரின் தத்துவம். தலைமுறை இடைவெளி யில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம், தமிழகத்தைத் தாண்டி, எல்லைகளைக் கடந்து உலக மானிட இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’’ என்பன போன்ற தந்தை பெரியாரின் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினைத் தொடர்ந்து, 11.1.1996 அன்று தஞ்சை வல்லத்தில் பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் Lasse Siren (Finland), Harie Bols (Holland), Robyn Johannes (Belgium), Robert Morgan (U.S.), Pertti Holopa Nien (Sweedish), Herma Mittendorff (Holland), Eric Jacob (Germany), Norman Taylor (Australia), G.Lavanam (Vijayawada), Everelt Cross ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாகத் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினைத் திறந்து வைத்தனர். அறிஞர்களின் ஆங்கில உரையினை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், “சிலை அமைப்புக் குழுவினருக்கும், கழகத் தோழர்களும், சிலையினை அன்பளிப்பாக வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்து, ஏணிப்படி அமைத்துத் தந்த கல்வி வள்ளல் ‘வீகேயென் கண்ணப்பன், சிலையின் அடிபீடத்தை சிறப்பாக உருவாக்கித் தந்த ஈஸ்வரனார், வேழவேந்தன் ஆகியோருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தேன். நமது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பன்னாட்டு நாத்திகர்களுக்கு நினைவுப் பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்து, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் காலத்தைக் கடந்து என்றும் நாட்டிற்குத் தேவை’’ என பல கருத்துகளை கூறினேன். பன்னாட்டு நாத்திகர்களை வழி நெடுக கழகத் தோழர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16- 30 .21

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பகுத்தறிவாளர் கழகம், பெரியார் திடல், மாநாடு

சனி, 24 ஏப்ரல், 2021

நான்காவது நான்காவது உலக நாத்திகர் மாநாடு!


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16-30.21

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:55 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உலக நாத்திகர், மாநாடு, விஜயவாடா

புதன், 23 டிசம்பர், 2020

பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு

மாநாட்டுத் தகவல் - 

வை.கலையரசன்

 
“சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு’’ என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

மேலும், “சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடைமை முதலிய குணங்கள் மனிதனின் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவையேயன்றி காலக்கொடுமையாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது அல்ல” என்பது தந்தை பெரியாரின் கருத்தாகும்.

அத்தகைய பகுத்தறிவைப் பரப்பும் பணியில் இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஈடுபட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். நேரடியாக திராவிடர் கழகத்தில் பணியாற்ற இயலாதவர்கள் பகுத்தறிவைப் பரப்பும் தொண்டறப் பணியைச் செய்வதற்காக 1970ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கினார்.

இதன் தொடக்கவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 20.11.1970 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களை அழைத்தபோது, அவர் தம்மையும் பகுத்தறிவாளர் கழகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் அமைச்சர் என்.வி.என். அவர்கள் முன்னின்று தமிழக அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களையும் பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்பு உறுப்பினர்களாக சேர்த்து சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், பங்கேற்றிருந்த இரு அமைச்சர்களும் நாங்களும் உறுப்பினராகச் சேரவேண்டும் என்று அறிவித்தனர்.

அன்றைய சட்டப்பேரவைச் செயலாளர் திரு. சி.டி.நடராஜன் அவர்கள் தலைவராகவும், அய்.ஏ.எஸ். அதிகாரிகளான கா.திரவியம், வி.எஸ்.சுப்பையா ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், மாநிலக் கல்லூரியின் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்கள் செயலாளராகவும் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் கிளைகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

 8.11.1971 அன்று காரைக்குடி மேல ஊரணித் தெருவில் பகுத்தறிவாளர் கழகத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகம் அமைக்கப்படுவதன் காரணத்தை கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

“நாம் பகுத்தறிவாளர் கழகம் துவக்குகிறோம் என்றால் மனிதர்களுக்கான கழகத்தைத் துவக்குகிறோம் என்பதுதான் தத்துவம். ஏன் என்றால் உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவன்களுக்குமில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் அதனைச் சரியாக பயன்படுத்தாத காரணத்தால் மிருகமாக இருந்தான். இப்போதுதான் மனிதனாக முற்பட்டிருக்கிறான். அதை காட்டுவதுதான் இப்பகுத்தறிவுக் கழகம் என்பதாகும். மனிதன் தோன்றி எத்தனையோ ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. நமக்குத் தெரிய 3,000, 4,000 ஆண்டுகளின் சரித்திரம் தெரிகிறது என்றாலும், இந்த நூற்றாண்டில்தான் மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டு அதன் காரணமாக பல விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டுபிடித்துள்ளான்.

இத்தனை ஆண்டு காலம் மனிதன் தன் பகுத்தறிவை - சிந்தனா சக்தியைப் பயன்படுத்த முடியாமல் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற சில தடைகளிலிருந்ததால் மனிதன் பகுத்தறிவு  பெற்றும் சிந்திக்க முடியாதவனாகி விட்டான். அத்தடைகளைச் சிறிது சிறிதாக உடைக்க ஆரம்பித்தான். அதன் பலனாக மனிதனின் ஆயுள் வளர ஆரம்பித்ததோடு, பல விஞ்ஞான அதிசய அற்புதங்கள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன. இன்று மனிதன் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கின்றான்.

இந்நிலையில் நாம் இப்போதுதான் பகுத்தறிவிற்கே கழகம் அமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஒரு நாட்டில் மட்டும்தான் நமது மூடநம்பிக்கையைக் கொண்டு பலன் அனுபவிக்கும்படியான ஒரு ஜாதிக் கூட்டம் இருக்கிறது. அதுதான் எல்லா வகையிலும் நாம் அறிவு பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் மதத்தின் பெயரால், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்கின்ற பேதம் இந்த ஒரு நாட்டில் தான் இருக்கிறது. இங்குதான் மனிதன் சமுதாயத் துறையில் இழிமகனாக இருக்கிறான். எனவே, மற்ற எல்லா நாடுகளையும்விட நம் நாட்டிற்குத்தான் பகுத்தறிவாளர் கழகம் மிக மிக முக்கியமாகும். சமுதாய சீர்திருத்தம், பகுத்தறிவுத் தொண்டு ஆகியவைகளை திராவிடர் கழகம் செய்து வந்தாலும், அது அரசியலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் நமது மக்களின் நலனையும், தேவையையும் கருதி அரசியல் கட்சிகளை ஆதரிக்க வேண்டி இருப்பதால் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இதில் பங்கு கொள்ள வாய்ப்பில்லையானதால் அரசியல் சார்பற்ற தன்மையில் இக்கழகமானது அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கழகங்கள் இதுவரை 20க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன. மதம், கடவுள் என்கின்ற முட்டாள்தனமான மூட நம்பிக்கையானது மனிதனிடையே புகுத்தப்பட்டதோடு, சிந்திப்பது பாவம், சிந்தித்தால் நரகத்திற்குப் போக வேண்டும் என்கிற அச்சத்தினையும் ஏற்படுத்தி விட்டதால் மனிதன் சிந்தனையற்ற காட்டுமிராண்டியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அதனை மாற்றி மனிதனைப் பகுத்தறிவுவாதியாக்கவே இக்கழகமானது அமைக்கப்படுகிறது.

- (‘விடுதலை’ - 2.12.1970).

அத்தகைய பகுத்தறிவாளர் கழகம் இன்று நாடெங்கும் விரிந்து பகுத்தறிவு, மனிதநேயம், சமூகநீதி, அறிவியல் மனப்பான்மை சார்ந்த கருத்துகளைப் பரப்புரை செய்து வருகிறது.

மாநில அளவில் நூற்றுக்கணக்கான மாநாடுகளை நடத்தி, பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அரசுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டி வருகிறது.

 அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சிகள், பகுத்தறிவுக் கலை விழாக்கள் என்று சமூக, கலை, இலக்கியத் துறைகளில் தமது  பங்களிப்பைச் செய்துவருகிறது. 

உலக பகுத்தறிவாளர் அமைப்பான பன்னாட்டு மனிதநேய அறநெறி கழகத்(IHEU)துடன் இணைந்து உலக நாத்திகர் மாநாடுகளை நடத்தி, பல நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்களை அழைத்து பங்கேற்கச் செய்திருக்கிறது பகுத்தறிவாளர் கழகம்.

மேலும் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான (FIRA) Fedaration of Inidan Rationalist Association என்னும் அமைப்புடன் இணைந்து பல்வேறு இடங்களில் இந்தியா முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் மாநாடுகளை நடத்தியுள்ளது.

அரசுத் துறைகள் அனைத்திலும் தனது கிளைகளைப் பரப்பி, பகுத்தறிவாளர் கழகம் செய்த பெரும் பணியின் மூலம்தான் இன்று  தமிழக அரசு அலுவலகங்கள் மதசார்பற்ற தன்மையில் ஓரளவிற்காவது இருந்துவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பழைய பண்டிகைகளோடு, புதிது புதிதாய் ‘அட்சய திருதியை’ போன்றவற்றை உருவாக்கி, ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளும் மறுபுறம் கார்ப்பரேட் சாமியார்களும் மக்களைச் சூறையாடுகின்றனர்.

பள்ளிகளிலும் மாணவர்களிடமும் மூடநம்பிக்கைகளையும், ஜாதி உணர்வுகளையும் புகுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி மிக மிக கட்டாயமான - தேவையான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா துவக்க மாநாடு விருதுநகரில் 2019 நவம்பர் 16 அன்று முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், உரை அரங்கம், நூல் வெளியீடு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, அறிவியல் கண்காட்சி என பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட பகுத்தறிவுத் திருவிழாவாக நடைபெற உள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பல்வேறு அறிஞர் பெருமக்களும்,  பகுத்தறிவாளர்களும் இதில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

- உண்மை இதழ், 1-15.11.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:47 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பகுத்தறிவாளர் கழகம், மாநாடு

வெள்ளி, 10 ஜனவரி, 2020

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்! மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம்!

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

விஜயவாடா ஜன.6 மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்; மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம் என்றார் விஜய வாடா உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் 80 ஆம் ஆண்டு விழாவினையும் உலக நாத் திகர் மாநாட்டையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்கள் நிறுவிய நாத்திகர் மய்யம் (1940-2020) கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகங்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகரில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகளை (ஜனவரி  7, 8 மற்றும் 9- 2011 மற்றும் ஜனவரி    5, 6 மற்றும் 7 - 2019) நாத்திகர் மய்யமும் இணைந்து நடத்தியுள்ளது. விஜய வாடாவில்  ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் சிறப்புப் பங்கேற்பாளர்களாக  பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) முதன்மை செயலதிகாரி கேரி மெக்லேலண்ட் (2018 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்) மற்றும் ஜெர்மனி சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவர் முனைவர்  வோல்கர் முல்லர் (தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) விஜயவாடா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டு நாள் மாநாட்டின் நிறை வுரையினை திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறி வாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆற்றி, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநில பகுத்தறிவாளர் அமைப்பின் தோழர்களை, நாத்திகப் பெருமக்களை  எழுச்சி கொள்ளச் செய்தார்.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய  ‘Understanding Rationalism'  புத்தகத்தை மாநாட்டில் தமிழர் தலைவர் வெளியிட்டார்.

மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நாத்திகர் மய்யத்தின் டாக்டர் சமரம் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். உடன் விகாஸ் கோரா உள்ளார்.

தமிழர் தலைவருடன் 80 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விஜயவாடா உலக நாத்திகர் மய்யத்தின் பொறுப்பாளர்களான கோரா குடும்பத்தினர்

இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நாத்திகப் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். அமெரிக்க - மேரிலாந்து மாநிலத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா, பகுத் தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம், நாத்திகம் பற்றிய தங்களது கட்டுரைகள் குறித்து உரையாற்றினர்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

80 ஆம் ஆண்டு விழா காணும் விஜயவாடா - நாத்தி கர் மய்யம் நடத்திட்ட 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டு மலரினை தமிழர் தலைவர் வெளியிட, அதனை இங்கிலாந்திலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட், ஜெர்மனி நாட்டிலிருந்து வருகை தந்த முனைவர் வோல்கர் முல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உலக நாத்திகர் மாநாட்டை சிறப்பாக நடத்திய முனைவர் விஜயம், டாக்டர் சமரம் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து  தமிழர் தலைவர் பாராட்டி, சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவர் வெளியிட்ட

நாத்திகப் புத்தகம்

உலக நாத்திகர் மாநாட்டில் ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய ‘Understanding Rationalism' புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு இணையருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவரின்

மாநாட்டு நிறைவு எழுச்சியுரை

ஜனவரி 5 ஆம் நாள் பிற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவுரையினை ஆற்றினார். தமிழர் தலைவரின் நிறைவுரை மாநாட்டிற்கு வருகை தந்தோருக்கு எழுச்சியுரையாக அமைந்தது.

தமது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

மதவெறிக்கு ஊக்கம் காட்டும் செயல்கள் அதி கரித்துவரும் நடப்புக் காலகட்டத்தில், விஜயவாடா நாத்திகர் மய்யம் உலக நாத்திகர் மாநாட்டை சரியானபடி நடத்துகிறது. மதவெறிப் பிரச்சாரத்தை மாய்த்து, மனித நேயக் கருத்துகள், மக்களது மனதில் தழைத்தோங்கிட வழி செய்திடும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. நாத்திகப் பிரச்சாரத்தைப் பொறுத்த அளவில், நாத்திக அறிஞர் கோரா நிறுவிய விஜயவாடா நாத்திகர் மய்யம் ஓர் எடுத்துக்காட்டு நாத்திக அமைப்பாக - நிறுவனமாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது. நாத்திக அறிஞர் கோரா, நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியார் அவர்களின் சீடர் ஆவார். ஆனால், காந்தியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கை மிகுந்த காந்தியாருக்கு நாத்திகக் கருத்துடைய கோரா சீடராக இருந்தது ஒரு வேறுபட்ட சிறப்பு. மக்கள் சமத்துவத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட புரட்சியாளர் தந்தை பெரியாரும் கடவுள் மறுப்பினை உரிய அணுகுமுறையாகவே கடைப்பிடித்தார்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

தந்தை பெரியாரும், ஒரு காலத்தில் காந்தியாரின் சீடராகவே இருந்தார். மனிதரிடம் நிலவிவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு  அடிப்படையான மனித விரோத வருணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்தவர் தந்தை பெரியார். வருணாஸ்ரம  தர்மத்திற்கு ஆதரவு அளித் தவர் காந்தியார். காந்தியாரை விட்டு அமைப்பு ரீதியாக முழுமையாக பிரிவதற்கு முன்பு 1927 இல் பெங்களூரில் காந்தியாரைச் சந்திக்கிறார் தந்தை பெரியார். அவர்கள் பேச்சில் வருணாஸ்ரம தருமம்பற்றிய பேச்சு விவாதப் பொருளாக அமைந்தது. வருணாஸ்ரம தர்மத்தை உடனே கைவிட வேண்டிய அவசியமில்லை. நாளா வட்டத்தில் அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என காந்தியார் கூறிய கருத்தினை பெரியார் ஏற்றுக் கொள்ள வில்லை. வருணாஸ்ரமம் தூக்கி எறியப்பட வேண்டியது. அதில் படிப்படியாக மாற்றம் என்பது கால விரயம் மட்டுமல்ல, வீணானதும்கூட. அப்படி வருணாஸ்ரமத்தில் மாற்றத்தைக் கொண்டுவர, மதத்தில் மாற்றங்களை உருவாக்க காந்தியார் நினைத்தால், காந்தியாரையே மதவாதிகள் விட்டு வைக்கமாட்டார்கள் என தந்தை பெரியார், காந்தியாரிடமே நேரடியாக தெரிவித்துவிட்டு விடைபெற்று, விலகி தமது கொள்கைகளை நடை முறைப்படுத்த தனியாக இயக்கம் கண்டு வெற்றியினைப் பெற்றார். பெரியார் எச்சரித்தபடி 1948 ஆம் ஆண்டில் மதவெறிக்குப் பலியானார் காந்தியார். கோராவின் நாத்திகக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத காந்தியார், இறுதியில் பெரியார், கோரா கூறிய மனிதநேயம், மனித சமத்துவம் பற்றிக் கூறும் நிலைக்கு வந்தபொழுதுதான்,  அதுவரை காந்தியாரை ஆதரித்துப் போற்றிய மதவாதிகள் - மத வெறியர்கள் காந்தியாரையே சுட்டுக்கொன்றனர். பொது வாக கொள்கை வழிநடக்கும் தலைவரைப் பின்பற்றி சீடர் நடப்பது வாடிக்கை. ஆனால், சீடர்களான பெரியார், கோரா வலியுறுத்திய கருத்துகளின் வழிதான் அவர்களது தலைவராக விளங்கிய காந்தியார் இறுதியில் வர வேண்டிய நிலை வந்தது. சீடர்கள் வழி தலைவர் நடந்து கொண்டார். தொடக்கத்திலேயே  இவர்களது வழி வந்தி ருந்தால், காந்தியார் மேலும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்றியிருக்க முடியும். கடவுள் மறுப்பு, நாத்திகக் கொள்கை ஏற்படுத்திய நிலைதான் சீடர் வழி தலைவர் எனும் வரலாற்றுக் குறிப்பு. அத்தகைய மாபெரும் மனிதநேய தத்துவத்துவமான நாத்திக நன்னெறி குறித்து தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்தி வருகிறது.

நாத்திகம் ஒன்றும் புதிய தல்ல!

நாத்திகம் என்பது புதியதல்ல; இயல்பானதுதான். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே நாத்திகர்கள்தான்; பிறந்த பொழுது எந்த மத அடையாள மும் தானாக வந்ததில்லை. குழந்தையின் பெற்றோர்தான் தங்களது மத அடையாளத்தை குழந் தையின்மீது திணித்து விடுகின்றனர். இயல்பாகவே குழந்தைகள் வளர்க்கப்பட்டால், மத அடையாளங்களால் உருவாகும் மதவெறிக்கு இடமே இல்லை. இயல்பானதற்கு மாறாகத் தான் மனிதரிடம் மதக் கருத்துகள் இடம் பெறுகின்றன. சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட மதவெறியினை எதிர்த்து - அதற்கு அடிப்படையான மத அடையாளமே தேவையில்லை என தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவார்கள்.

மக்களை ஆதிக்கம் செலுத்தும்

மதவாதம்!

மனிதருடைய ஆற்றல், நேரம், உழைப்பு ஆகிய வற்றை பெரும்பாலும் மதத் தொடர்பான விசயங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மனிதருடைய முழு மையான பங்களிப்பு சமுதாயத்திற்குக் கிடைக்கவிடாமல், மதம் சார்ந்த விசயங்கள் தடையாக இருக்கின்றன. அப் படிப்பட்ட தடை என்பது இருப்பதை உணராமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் நல்ல நேரம் - கெட்டநேரம் (ராகுகாலம், எமகண்டம்) வகைப்படுத்தி, எந்த ஒரு முனைப்பான செயலையும் கெட்ட நேரத்தில் செய்யக்கூடாது எனும் மனப்பான்மையினை உருவாக்கிவிட்டது மதம். மதம் சார்ந்த பண்டிகைகள் மனிதரது உழைப்புக்கு விடுமுறை என்பதாக மட்டுமல்லாமல், பண விரயம், கடன் வாங்கி பண்டிகைக்கு செலவிட வைத்துவிடும் நிலை என்ப தெல்லாம் மதம் சார்ந்த நடவடிக்கைகாளல் ஏற் பட்டவையே!

இப்படி மனித உழைப்பை மட்டுப்படுத்தும் நிலைமையினை நீக்கிட கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகக் கருத்துகள் மக்கள் மனதில் உறுதிப்பட வேண் டும். மதம் சார்ந்த சிந்தனைகளை, நடவடிக் கைகளை குறைத்துக் கொண்டதால், உலக நாடுகளில் உள்ள பலர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். தனி நபர் வாழ்வு நிலையும் உயர்ந்து, சமுதாயம் மேம்பாடு அடைந்திட்ட நிலைமைகள் கண்கூடாகத் தெரிகிறது.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள்

மதம் சார்ந்த சிந்தனைகளைப் புறந்தள்ளப்பட வேண்டும். மனிதநேயம் சார்ந்த சிந்தனைகள் வளர்த் தெடுக்கவேண்டும். அத்தகைய சமுதாயப் போக்கிற்கு உலக நாத்திகர் மாநாட்டு நடவடிக்கைகள் ஆக்கம் கூட்டும். அந்த மகத்தான பணியில் நாம் அனைவரும் - இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும்  இணைந்து பணியாற்றுவோம். மனித குலம் மேம் பாடடைய பாடுபடுவோம். இறுதி வெற்றி நமக்கே; நாத்திக இயக்கத்திற்கே!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவரின் எழுச்சியுரையினால் உணர்வு வயப்பட்ட அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கால் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தானாக எழுந்த கரவொலி எழுச்சி கலந்த மகிழ்ச்சி வெள்ளமாக அரங்கம் முழுவதும் அதிர்வுகளை எழுப்பியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமிழர் தலைவருக்கும் - வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் சிறப்பு

உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட் மற்றும் வோல்கர் முல்லர் ஆகியோருக் கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினர்.

நாத்திகர் மய்யத்தின் 80 ஆண்டுகால செயல்பாட் டிற்கு ஆர்வம் கூட்டியவர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பகுத்தறி வாளர் அமைப்புப் பேராளர்களுக்கும் நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து....

அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப் பின்  (FIRA - Federation of Indian Rationalist Association) சங்க அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் - மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர்கள் அ.த.சண் முகசுந்தரம், ரஞ்சித்குமார், பொறுப்பாளர்கள் - நடராசன், மாணிக்கம் புதுவை குப்புசாமி இணையர் ஆகியோர் மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலை வருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் சென்றி ருந்தனர்.

- விடுதலை நாளேடு, 6.1.20
இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:58 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மாநாடு, விஜய்வாடா

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆந்திர கோரா நாத்திக மய்யத்தின் 80ஆவது ஆண்டு விழா - 11ஆவது உலக நாத்திகர் மாநாடு

மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும் நிலைமையினை உருவாக்க உறுதி பூணுவோம்
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டில்  தமிழர் தலைவர் சூளுரை
விஜயவாடா, ஜன.5 ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்றுள்ளார். நாத்திக மய்யத்தின் 80ஆம் ஆண்டு நிறைவில் நடத்தப்படும் 11ஆவது உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் இன்று (5.1.2020) பிற்பகலில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் டாக்டர் சமரம் கோரா புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்று, அதனை மேலும் செழுமைப்படுத்த தமிழர் தலைவரின் ஆலோ சனைகளை கேட்டறிந்தார். தந்தை பெரியாரின்  புத்தகங்களை கணினி மூலம் தொடர்பு கொண்டு படித்திட உரிய அனுமதி தர வேண்டியும் தமிழர் தலைவரிடம் கேட்டார். தமிழர் தலைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகமும், விஜயவாடா நாத்திக மய்யமும் இணைந்து உலகம் முழுவதும் நாத்திக மனிதநேய கருத்துகள் பரவிட, பயன்பட செயல்பட வேண்டும்  என்று தமிழர் தலைவர் தமது விருப்பத்தினையும் தெரிவித்தார்.
நாத்திக மய்யத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சிறிய தொரு உரையாற்றிட அழைக்கப்பட்டார். அப் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்ட தாவது: இந்த நாட்டில் ஜாதி மனிதர்களை பிளவு படுத்துகிறது. மதங்கள் மனிதரை வேறுபடுத்து கின்றன. உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கிறது. இந் நிலைக்கு ஒரே தீர்வு மனிதநேயத்தை வலியுறுத்தும் நாத்திகமே, சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளே!
தந்தை பெரியார் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழக இலக்கியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக  மாந்தரையே ஒரே குலமாக கருதிய போக்கு நிலவியது. அப்படிப்பட்ட மனிதநேயம் சார்ந்த மனப்பான்மை, அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்கிட இந்த உலக நாத்திகர் மாநாடு வலு  சேர்க்கும்; நாம் அனைவரும் வலிமை சேர்ப்போம். நாத்திகக் கருத்துகள் தழைத்தோங்கும் பொழுது மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும். அத்தகைய நிலை மையினை உருவாக்க உறுதி பூணுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாத்திகத்தின் பல்வேறு கூறுகள், கடைப் பிடிக்கப்பட தேவையான அணுகுமுறைகள் பற்றிய தலைப்புகளில் உரை வீச்சு ஆற்றப்பட்டு வருகிறது.

உலக நாத்திக மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயவாடா ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

பஞ்சாபிலிருந்து மாநாட்டிற்கு வருகைதந்த நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருடன்...

கோரா உலக நாத்திக ஆராய்ச்சி நூலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்...

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்


- விடுதலை நாளேடு,5.1.2020
இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நாத்திகர், மாநாடு, விஜயவாடா

திங்கள், 9 டிசம்பர், 2019

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம்!

சாலை விபத்துகளைவிட ஜனநாயக விபத்து ஆபத்தானது

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்


விருதுநகர்,டிச.1சாலைவிபத்துக்களைவிட ஜன நாயக  விபத்து ஆபத்தானது; வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம் என்று திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு கருத்தை சொன்னார்கள். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நீங்கள் வெள்ளமென திரண்டிருக்கிறீர்கள். காலையில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டில் அரங்கம் நிரம்பி வழியக்கூடிய அளவிற்கு திரண் டிருந்தீர்கள். அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்து, பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இங்கே கூடியிருக்கிறோம்.

நாட்டிலேயே திராவிடர் கழகம்தான்

முதல் இயக்கம்

இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய அளவிற்கு, தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்ன காரணத்தி னாலோ தெரியவில்லை; இந்த மண், நம்முடைய மண். கரிசல் மண் மட்டுமல்ல, காமராசருடைய பூமி. காமராசரைப் பார்த்து, பச்சைத் தமிழர் என்ற அளவில் வைத்து, சிறப்பாகத் தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அதுமட்டுமல்ல, நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கு வந்தவர்கள். இப்படிப்பட்ட வரலாறு உள்ள இந்த பூமியில், திராவிடர் கழகத்தின் சார்பில் கூட அல்ல, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், ஒரு அறிவார்ந்த, பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இன் னுங்கேட்டால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., நீதிபதிகள் எல்லாம் பங்கேற்ற அமைப்பு, உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பின் பொன்விழா மாநாட்டினை இங்கே நடத்துவதற்கு, இங்கே இருக்கின்ற யாரோ சில அனாமதேயங்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதோ அல்லது காவல்துறையினர் மிரட்டல் கடிதங்களை வைத்துக்கொண்டு, இங்கே கூட்டம் நடத்த அனுமதி யில்லை என்று சொல்வது. அதற்குப் பொருத்தமில்லாத அளவிற்கு அவர்களையே பார்த்து மற்றவர்கள் கேலி செய்து சிரிக்கக்கூடிய அளவிற்கு இருப்பது நியாயமா? காவல்துறையை மிகவும் மதிக்கக்கூடிய இயக்கம் இருக்கிறது என்றால், நாட்டிலேயே திராவிடர் கழகம் தான் முதல் இயக்கம். அதைத்தான் எங்களுடைய துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும் அனைத்தும்

கிட்டுவதுதான் சமூகநீதி

இந்த இயக்கம் அப்படிப்பட்ட ஒரு இயக்கம். சட்டம், ஒழுங்கு, அமைதி - இவை அத்தனையும் காப் பாற்றப்படவேண்டும். சமூக நல்லிணக்கம் நிறைந்து இருக்கவேண்டும். எந்த இடத்திலும் ஜாதிச் சண்டை களோ, மதச் சண்டைகளோ இருக்கக்கூடாது. மனித நேயம் மலரவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டுவதுதான் சமூகநீதி. சமத்துவம் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு இயக்கம் எங்கள் இயக்கம்.

நாங்கள் என்ன அரசியலுக்குப் போகக்கூடியவர் களா? குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலுக் காவது எங்களுடைய தோழர்கள் போட்டியிடலாம் என்று சொல்லி, அதன் காரணமாக நாக்கிலே தேனைத் தடவி, எங்கள் பின்னாலே ஆட்களைக் கூட்டி வந்திருப்பவர்களா?

மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம்.

இதோ வெள்ளம்போல இங்கே அமர்ந்திருக்கிறார் களே, இவர்கள் எல்லாம் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களா? இதுவரையில் அப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இந்த இயக்கம் ஒப்பற்ற ஒரு இயக்கம். மக்கள் இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம். மக்களுக் காக எங்களை நாங்கள் தியாகம் செய்துகொள்வோமே தவிர, மக்களுக்கு ஒரு சிறு தொல்லைகூட கொடுக்காத அளவிற்கு,

பொதுச் சொத்துக்கு நாசமின்றி,

பொது அமைதிக்குப் பங்கமின்றி

பொது ஒழுக்கத்திற்குக் கேடின்றி

நடத்தவேண்டும் என்ற அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் உருவத்தால் மறைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்குகிற இந்தக் காலகட்டத்தில்கூட, அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கின்ற இயக்கம் இந்தக் கருஞ்சட்டை இயக்கம் - இந்தப் பகுத்தறிவாளர் கழக இயக்கம்.

எங்களுடைய மாநாடு நடைபெற்றதே, யாருக் காவது இடையூறு உண்டா?

ஊர்வலம் நடத்தக்கூடாது;

கூட்டம் போடக்கூடாது - ஏன்?

இது என்ன நியதி?

அரசமைப்பு சட்டத்தில் இருக்கிற உரிமை என்ன?

மீண்டும் காற்று அடிக்கும்

எச்சிலிலை கீழே வரும்

நாங்கள் எல்லாம் சட்டம் படித்தவர்கள் என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; நியாயம் தெரிந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறோம். இந்த நாட்டில் காலூன்ற முடியாதவர்கள் எல்லாம், யாரோ சில பேர் இன்றைக்கு அடித்த காற்றில் மேலே போகின்ற சில எச்சில் இலைகள், மேலே வந்துவிட்டது என்கிற காரணத்திற்காக இந்த எச்சில் இலைகளுக்கு நீங்கள் சல்யூட் அடிக்க லமா? மீண்டும் காற்று அடிக்கும் எச்சிலிலை கீழே வரும்.

நாங்கள் எப்பொழுதும் மேலேயும் போக மாட்டோம்; கீழேயும் போகமாட்டோம்; ஒரே இடம்  நாங்கள் போகக்கூடியது சிறைச்சாலையைத் தவிர வேறு கிடையாது.

லஞ்சம் வாங்கிவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல; ஊழல் செய்துவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற் காக நாங்கள் சிறைச்சாலைக்குப் போகக்கூடிய வர்கள்.

நாங்கள் சர்வபரிதியாகம்

செய்துகொள்ளக் கூடியவர்கள்

உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டும் என்பதற்காக, எங்களை நாங்கள் ‘‘சர்வபரிதியாகம்'' செய்துகொள்ளக் கூடியவர்கள்.

உங்கள் பிள்ளைகள் உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காக சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள் நாங்கள்.

இப்படிப்பட்ட எங்களுடைய தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று மார்தட்டி னாரே தந்தை பெரியார் - அப்படிப்பட்ட ஒரு அற்புத மான இயக்கம் இது.

இது ஏதோ ஒரு சமூக விரோத இயக்கத்தைப் போல-

இது ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்தைப் போல-

இது ஏதோ பெரிய பயங்கரவாத இயக்கத்தைப் போல - தவறாக நீங்கள் நினைத்துக் கொண்டு, அனுமதி மறுக்கிறீர்கள்.

மேலதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள்; புதிதாக வந்த அதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் நான் இந்த சொல்லை சொல்வதற்கு என்னுடைய தகுதிக்குக் குறைவு என்று நினைக்கின்றேன். ஏனென் றால், யாரும் காவல்துறையினரின் மதிப்பைக் குறைக் கக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையை நம்பித்தான் இருக்கவேண்டும்.

கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை

நமக்குப் பிடிக்காத நிலை என்று கருதியவுடன், காவல்துறையை நாம் கொச்சைப்படுத்திவிட்டு, அத னுடைய மரியாதையை நாம் குறைத்துவிட்டோமே யானால், மீண்டும் நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்காது.  இராணுவம் எப்படி நாட்டிற்கு மிக முக்கியமோ, அதுபோலத்தான் காவல்துறை. ஆனால், அந்தக் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் தாண்டி இருக்கிற தனி ஒரு காவல்துறை உண்டு - அதுதான் கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை.

தமிழகத்தில் மட்டுமல்ல, சமுதாய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய டாக்டர் அம்மையார் சொன்னாரே, அவர் என்ன திராவிடர் கழகத்துக் காரரா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்தவரா? ஒரு பிரபலமான டாக்டர். அறிவுபூர்வமான சிந் திக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான பெண்மணி. அவர் மிகவும் எளிமையாக சொன்னார்.

திராவிடர் கழகத்தினரின் பணியை யாராவது, இந்திய நாட்டில் செய்கிறார்கள் என்று காவல் துறையோ அல்லது வேறு ஏவல் துறையோ சொல் லட்டும்.

இது இந்திய அரசமைப்புச் சட்டம். இதன்மீதுதான் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

அதிலே அடிப்படை உரிமை என்பது முன் பகுதி.

அதற்கடுத்து இருக்கக்கூடிய பகுதி, புதிதாக இணைக்கப்பட்ட பகுதி - அதுவும் நெருக்கடி நிலை  காலகட்டத்தில்.

Fundamental duties
51-A, I it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and Reform.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக் கின்ற அடிப்படைக் கடமைகள்.

நழுவக்கூடாதது, தவறக்கூடாத ஒரு கடமை என்னவென்றால், பல கடமைகள் இருக்கின்றன.

ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள்

51-ஏ,  யார் வேண்டுமானாலும் அதனைப் படித்துப் பார்க்கலாம். ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்ட வர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள். எனவே, ஆதாரத்தோடுதான் நாங்கள் சொல்லுகிறோம்.

அதில் ஒரு பகுதி,

ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவேண்டும்.

மனிதநேயம்,  ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய உணர்வு வரவேண்டும்.

அதற்குமேலே சீர்திருத்தம்.

இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றக் கூடிய இயக்கம் நாட்டில், இந்தியாவில், உலகத்தில் பெரியார் இயக்கமான திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத்தைத் தவிர, இதனை முழு வேலையாக செய்துகொண்டிருக்கிற ஒரே இயக்கம் இந்த இயக் கத்தைத் தவிர வேறு எந்த இயக்கம்?

இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பரவினால், உங்கள் வேலை சுமை குறையும்.

பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

இந்த இயக்கத்தினுடைய பிரச்சாரம் பரவினால், கலவரங்கள் இருக்காது; காலிப்பயல்களுக்கு நாட்டில் இடம் இருக்காது.

வாலாட்டலாம் என்று நினைக்கக்கூடாது. மக்கள் தானே திருந்தக் கூடிய நிலையில் இருப்பார்கள்.

நாங்கள் கேட்பது என்ன?

95 வயது வரையில் வாழ்ந்தாரே பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கும். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துவார். மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பேசினார்'' என்றார்.

சாலையோர விபத்துகளைவிட ஜனநாயக விபத்துகள் ஆபத்தானவை

எண்ணிப் பாருங்கள் தோழர்களே, யாரோ சிலர் பேசுகிறார்கள்; கூலிகள், வடநாட்டுக்காரன் பணம் கொடுக்கிறான் என்பதற்காக, வடநாட்டுக் காவிகளின் பணம் வருகிறது என்பதற்காக, இங்கே திடீரென்று பல நேரங்களில் ஜனநாயகத்தில்  விபத்துகள் ஏற்படு வது உண்டு. சாலையோர விபத்துகளைவிட ஜன நாயக  விபத்துகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக, ஏதோ அதுதான் நிரந்தரம் என்பது போல,

எங்கள்மீது ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

காலங்காலமாக, 50 ஆண்டுகாலமாக நாங்கள் இந்தப் பணியை செய்துவருகிறோம். ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

திராவிடர் கழகம் தன்னுடைய பணியை செய்து கொண்டு வருகிறது 75 ஆண்டுகாலமாக - அதனுடைய பவளவிழாவை கொண்டாடுகிறது. யாராவது விரலை நீட்ட முடியுமா? இன்ன குற்றம் என்று சொல்ல முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

யாருக்காக நாங்கள் பாடுபடுகிறோம்?

இந்த இயக்கத்தின் கொள்கை என்ன?

இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றவரை கவிழ்த்துவிட்டு, அந்த நாற்காலியை நாங்கள் பிடிக்கவேண்டும் என்பதற்காகவா?

எங்களைப் பொறுத்தவரையில், ‘‘துறவிக்கு வேந்தன் துரும்பு''

இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு எந்த நாற்காலியைப்பற்றியும் கவலை யில்லை. காரணம் என்ன?

எங்களுடைய கொள்கை - சமத்துவம். அதுகூட புரியாத சிலர் சொல்வார்கள். இங்கே நண்பர்கள் விளக்கினார்கள்; தோழர் இராசா அவர்களும் விளக் கினார்கள்; நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.

கடவுள் மறுப்போ, பார்ப்பன எதிர்ப்போ எங்களு டைய கொள்கையல்ல. அது ஒரு திட்டம்.

ஏன்?

ஜாதி ஒழியவேண்டும் என்பதற்கு குறுக்கே எவை இருந்தாலும் எதிர்ப்போம்.

சமத்துவம் நிலைக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நடத்துவது மனுதர்ம ஆட்சியா?

யாரையும் புண்படுத்துவது எங்கள் வேலையல்ல!

இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் போன்றவர்களால்  உரு வாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் நடைபெறுவது என்ன? மனுதர்மம்.

இதனைத் தட்டிக் கேட்பதற்கு எங்களைவிட்டால், நாதியுண்டா தோழர்களே, உங்களுக்கு. இந்த மக்களுக்கு நாதி உண்டா?

யாரையும் ‘புண்படுத்துவது' எங்கள் வேலையல்ல-

யாரிடத்திலும் வீண் வம்புக்குப் போவது எங்கள் வேலையல்ல -

இது புரட்சிகரமான இயக்கம். இதற்கு ஒப்பான ஒரு புரட்சி இயக்கத்தை  நீங்கள் உலக வரலாற்றில் பார்க்க முடியாது.

எங்கள் புரட்சி வெறும் ரத்தம் சிந்துகின்ற புரட்சியல்ல - அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி - மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய புரட்சி.

மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,

சமத்துவத்திற்கு எதிரி யார்?

பகுத்தறிவினுடைய உணர்வு என்னவென்று அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு, தானே எல்லாம் சரியாகும்.

சமத்துவத்திற்கு எதிரி யார்?

என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா?

சொன்னார்களே,

முகத்திலிருந்து பிறக்க முடியுமா?

தோளிலிருந்து பிறக்க முடியுமா?

தொடையிலிருந்து பிறக்க முடியுமா?

காலிலிருந்து பிறக்க முடியுமா?

அறிவியல் பூர்வமாக வந்த அரசமைப்புச் சட் டத்தை எடுத்துவிட்டு, எப்பொழுதோ உளறி வைத் தார்கள், எழுதி வைத்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறது?

எங்களுக்கு யாரையும் புண்படுத்துவதோ அல்லது யாரையோ கொச்சைப்படுத்துவதோ, தனி மனித விரோதமோ எங்களுக்கு முக்கியம். கிடையாது. தயவு செய்து நடுநிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

இளைஞர்களே,

மானம் பெரிது.

தந்தை பெரியார் சொன்னார், உலக மக்களுக்காக சொன்னார்; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொல்லவில்லை.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

மனிதர் என்று எவன் இருக்கின்றானோ அவனுக் குப் பகுத்தறிவு. அறிவு, அறிந்து கொள்வது. பகுத்தறிவு, ஆராய்ந்து, எது நல்லது? எது கெட்டது? எது தேவை? என்று அறிந்து கொள்வது.

‘‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்'' என் பதுதானே முக்கியம். இதுதானே பண்பாடு.

ஆனால், மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்; அதைத்தானே இப்பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்; அதைத்தானே கல்விக் கொள்கையாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்த அமைப்பு இல்லை என்றால், அதனை எடுத்துச் சொல்லக்கூடிய நாதி இல்லையே!

என்னுடைய கையில் இருக்கின்ற புத்தகம் அசல் மனுதர்மம். நாங்கள் போட்டதல்ல. பார்ப்பனர்கள் அச்சிட்டது.

ஒரு வரிகூட மாற்றம் இல்லாமல், 1919 - நீங்களோ, நாங்களோ பிறக்காத காலம். நூறு ஆண்டுகளுக்கு முன் -

திருவந்திபுரம் இளையவல்லி கோமாண்டூர்  இராமானுஜ ஆச்சாரியார்

அவர் எழுதிய புத்தகம். அச்சு போடுகிறவர் யார்?

நம்மாள்.

அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவர்களுடைய செலவில் செய்யமாட்டார்கள்.

வெந்தக் காய்கறிக்குத்தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது

ஏனென்றால், அவாளுக்கு வெந்தக் காய்கறிக்குத் தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது.

இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்குத் தீட்டு உண்டு-

ஆனால், பாலுக்குத் தீட்டு கிடையாது

நெய்க்குத் தீட்டு கிடையாது.

ஏனென்றால், மாட்டிடம் உதையை வாங்கிக் கொண்டு பாலைக் கறக்கிறான் பாருங்கள், அவன் கீழ்ஜாதி.

அதேபோன்று, பணத்திற்குத் 'தீட்டு' கிடையாது-

பச்சரிசிக்குத் தீட்டு கிடையாது.

ஆனால், சமைத்துக் கொடுத்தால் மட்டும் ‘தீட்டு'; சாப்பிட மாட்டேன் என்பார்கள்.

இப்படி சொல்லி சொல்லி, காலம் காலமாக ஏமாற் றிய உன்னை, பகுத்தறிவோடு சிந்தித்துப் பார் என்று சொன்ன ஒரு மாபெரும் இயக்கம்தான் பகுத்தறிவாளர் இயக்கம் - அதை சொன்ன தலைவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

இப்பொழுதுதான் மும்பையில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது

மனுதர்மத்தைக் கொண்டு வந்து அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்கிறார்கள்.  இந்த இயக்கம் இல்லை என்றால், அதைத் தட்டிக் கேட்கவில்லை என்றால், எதிர்க்கவில்லை என்றால் - தமிழ்நாடுதான் இன்றைக்குக் கலங்கரை விளக்கம். மற்ற இடங்களில் எல்லாம் கப்பல்கள் முட்டிக் கொள்கின்றன - அங்கே இருட்டு.

இப்பொழுதுதான் வடமாநிலங்களில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுதுதான் பல இடங்களுக்குப் பரவுகிறது. பரவும், பரவாமல் இருக் காது. ஏனென்றால், இது ஏவுகணை - பெரியாருடைய சிந்தனை இருக்கிறதே, அது ஏவுகணை போன்றது.

இலக்கு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.

அசல் மனுதர்மம்

முதல் அத்தியாயம், சுலோகம் 87

‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார்.''

இது மனுதர்ம வாசகம்.

உடனே நம்மாள் சொல்வார்கள், வீரமணி வந்தான், திராவிடர் கழகத்துக்காரன் வந்தான்; இந்து மதத்தை மட்டும்தான் பேசினான். வேற மதத்தைப்பற்றி பேசவில்லை.

மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற

ஊசிதான் பகுத்தறிவு ஊசி

மனிதர்களுக்கே மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்த படுகிற பாட்டை பார்க்கிறோம். மதம் பிடித்து யானையை ஊசிப் போட்டு அடக்குகிறார்கள். அதுபோன்று, மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற ஊசிதான் பகுத்தறிவு ஊசி. அதுதான் பெரியாருடைய ஊசி.

இதை நாங்கள் சொல்லவில்லை.

எந்த மதம் எங்களை ‘‘சூத்திரனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘பறையனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘சக்கிலியனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘கேவலமாக்குகிறது?''

எந்த மதம் என்னுடைய தாயை ‘‘தேவடியாள்'' ஆக்குகிறது?

அந்த மதம் எனக்குத் தேவையா? தூக்கி வங்காள விரிகுடாவிற்கு அப்பால் போடவேண்டாமா?

சொல்லுங்கள்!

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

நான் சொல்லவில்லை. இதோ அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்து மதம் என்ற பெயரே வெள்ளைக்காரன் கொடுத்தது, வெளிநாட்டுக்காரன் கொடுத்தது.

சொன்னது பெரியாரல்ல - சங்கராச்சாரியார்.

எங்களுக்கு மதம் பிடிக்காது. அருமையாக புரட்சிக்கவிஞர் சொன்னார்:

இந்த மண்ணில்

எண்ணிலா மதங்கள்

கந்தகக் கிடங்கில்

கனலின் கொள்ளிகள்

என்றார்.

நூறு வயது வரையில் வாழ்ந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், கடைசியில் உண்மை யைச் சொல்லிவிட்டுப் போனார்.

காஞ்சி சங்கராச்சாரியார், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனாரே அந்த சங்கராச்சாரியாருக்கு குருநாதர். இப்பொழுது இறந்துபோனவர், ஜெயிலுக் கும், பெயிலுக்கும் அலைந்தவர். அவருக்கு முன்பு இருந்தவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

அவருடைய நண்பர்தான் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். அவர் எழுதியுள்ள ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தின் 19 ஆம் பக்கத்தில்,

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட் டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கை யோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட் டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர் கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

சொல்லுவது யார்?

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

வழக்குப் போடுங்கள்!

ஆகா, இப்படியெல்லாம் நீங்கள் பேசினால், வழக்குப் போடுவோம் என்று யாராவது சொன்னால், வழக்குகளைக் கண்டு சளைப்பவர்களா? நாங்கள். மற்றவர்களுக்காவது வழக்குரைஞர் தேவை. எனக்கு அதுவும் தேவையில்லை. அதற்காகத்தானே படித்திருக்கி றோம்.  வழக்குப் போடுங்கள். இங்கே சொல்லுவதை விட, நீதிமன்றத்தில் சொன்னால், நன்றாகப் பதிவாகும்.

கடவுள் மறுப்புக்கு ஒருவர் வழக்குப் போட்டு, இப்பொழுது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரியார் எப்பொழுதெல்லாம் கடவுள் மறுப்பு சொன்னார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் (ஒரு பார்ப்பனர் நீதிபதி உள்பட) ஆதாரத்தோடு எழுதினார்கள்.

ஆகவே, வழக்கு போடட்டும். அதைப்பற்றி கவலையில்லை.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

மனு?  வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனை வருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கி றோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

நாங்கள் ஏன் மனுதர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் ஜாதி தர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்கிறோம்?

அந்த வருண தர்மத்தை நானே உருவாக்கினேன்; நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று பகவான் கண்ணன் கீதையில் சொன்னான் என்றால், கீதையும் எங்களுக்கு விரோதிதானே!

தனிப்பட்ட முறையில் கீதை மீது எங்களுக்கு என்ன கோபம்?  கிருஷ்ணன்மேல் என்ன கோபம்?

நான்கு வருணத்தை நானே உண்டாக்கினேன்; நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது'' என் கிறான், கிருஷ்ணன் கீதையில். அரசமைப்புச் சட்டத் தையே நூறு முறை திருத்தலாம்; ஆனால், அவர் சொன்ன தர்மத்தை, அவராலேயே மாற்ற முடியாதாம்.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு -

சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

இந்த இயக்கம் ஏன் தேவை? இன்னும் நூறாண்டுக்கு அல்ல; இன்னும்பல ஆண்டுகளுக்கு.

கடைசி முட்டாள் இருக்கின்ற வரையில்,

கடைசி தற்குறி இருக்கின்ற வரையில்,

கடைசி அறியாமையில் உழலக் கூடியவன் இருக்கின்ற வரையில்,

கடைசி நிர்மூடன் இருக்கின்ற வரையில்,

இந்த இயக்கம்  தேவைப்படும்.

அறிவியல் தேவைப்படுவதைப்போல,

இருட்டை நீக்க வெளிச்சம் தேவைப்படுவதுபோல,

இதனுடைய விளைவு என்ன நண்பர்களே!

நாம் படிக்காத மக்களானோம்; ஏன் மூட்டைத் தூக்கினோம். நீதிக்கட்சி வருவதற்கு முன் எத்தனை பேர் நம்முடைய நாட்டில் படித்தோம்.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 12 19

எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டாமா?

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முரசம்

விருதுநகர், டிச.2  எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரி குடாவில் தூக்கி எறியவேண்டாமா? என்று முரசு கொட்டினார் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?''

இன்னொரு ஆதாரத்தைச் சொல்லுகிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் துணை வேந்தராக இருந்த மிகப்பெரிய தமிழ றிஞர் - நம்முடைய அருமை நண்பர் டாக்டர் அற வாணன் அவர்கள்.

அவர் எழுதிய ‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?'' என்ற நூலில் சொல்கிறார்,

‘‘காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமானதாக இல்லை; சுத்தமாக இல்லை. 1901 இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பெற்ற  முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமி ழருள் படித்தோர் தொகை ஒரு விழுக்காட் டிற்கும் குறைவுதான்; 99% பேர் படிக்காமல் இருந்தனர்.  அக்காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. அல்லது இல்லாமலே உள்ளன. நாயக்கர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர் காலம், பல்லவர் காலம், களப்பிரர் காலம், சங்ககாலம் எனப் பின்னோக்கிப் பார்க் கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம், யூத நாடுகளைப் போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற் பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளில் அரசர்கள், பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள், அரசர் ஆட்சிதோறும் காணப்படுகின்றன. எந்தச் செலவுமில்லாமல் இலவசமாகப் பிராமணர் களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அரசே  மானியங்கள் வழங் கிற்று என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன'' என்று பேராசிரியர் க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

எனவே, நம்மாள் படிக்கவில்லை. படிக்கச் சொல்லி முதல் முயற்சியை செய்த இயக்கம் திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி.

நீதிக்கட்சி 1920 இல் பிறக்கவில்லை என்றால், நமக்கு யாருக்கும் படிப்பறிவு வந்திருக்காது. ஏழு சதவிகிதம்கூட இல்லையே! நாம் எல்லாம் இன் றைக்குப் பெருமைப்படுகின்றோமே, அய்.ஜி.யாக, டி.அய்.ஜி.,யாக நம்மாட்கள் வந்திருக்கிறார்கள்; எங் களுக்குப் பெருமை. அதிகாரிகளாக காவல்துறையில் வந்திருக்கிறார்கள்; எங்களுக்குப் பெருமைதான்.

அவர்கள் எங்களுடைய கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கட்டும்; ஆனால், காக்கிச் சட்டைக்குள் வெறும் பூணூல் இருந்ததற்குப் பதில், இன்றைக்கு நம்மாள்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம் பாருங்கள்.

இது எப்படி நடந்தது?

முப்பத்து முக்கோடி தேவர்கள் வரம் கொடுத்ததால் நடந்ததா?

நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகளால் வந்ததா இது?

பெரியார் என்ற மாமனிதருடைய உழைப்பினால் வந்த பலன் அல்லவா!

நீதிக்கட்சியினுடைய பலன் அல்லவா!

கல்வி வள்ளல் காமராசர் கேட்டாரே, ‘‘எவன்டா உன் தலையில் எழுதினவன்? அவன் தலையைக் கொண்டு வா - அதனை மாற்றி எழுதுவதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன்'' என்று சொன்னவர் காமராசர்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் - குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்பது.

அந்தக் குலக் கல்வித் திட்டம் மறுபடியும் இப் பொழுது வரப் போகிறது.

அதனுடைய முன்னோட்டம்தான் நீட் தேர்வு -

அதனுடைய முன்னோட்டம்தான் புதிய கல்விக் கொள்கை.

இந்தப்  பீடிகையை ஏன் நான் போட்டேன் என்று சொன்னால்,  நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தக் கட்சிக்காரராக வேண்டுமானாலும் நீங்கள் இருங்கள்; தேர்தல் நேரத்தில் யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஏலம் போட்டு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்.

இப்பொழுது ஏலம்தானே நடக்கிறது, மிக முக்கியமாக.

ஏலம் என்ற கோலம் - தேர்தல் காலம்.

அது எங்களுக்கு முக்கியமல்ல.

மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு

அருமை நண்பர்களே, உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா?

உங்கள் பாட்டன் படிக்கவில்லை,

உங்கள் பாட்டி படிக்கவில்லை.

உங்கள் அப்பன் படிக்கவில்லை

என் அப்பன் படிக்கவில்லை

நான் படித்தேன், என் மகன் படித்தான்

என் பேரன் இனிமேல் படிக்க முடியாது. காரணம், மீண்டும் குலக்கல்வி கதவைத் தட்டிக் கொண்டு வருகிறது. அதுதான் காவிக் கொள்கை - அதுதான் மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு.

இதனை சொல்வதற்கு இந்தக் கூட்டத்தைத் தவிர, வேறு எந்தக் கூட்டமும் வாய் திறக்காது. திராவிட இயக்கம்தான் அதனை செய்யும்.

இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா?

எத்தனைப் பேர்களுக்குத் தெரியும் - இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா? இந்த இயக்கம் என்ன செய்தது என்பதுபற்றி.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன் நண்பர் களே, காதைத் தீட்டிக்கொண்டு காவல்துறையும், அரசாங்கத் துறையும் பதிவு செய்யட்டும்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்,  மருத்துவப் படிப்பிற்கு மனு போடவேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் மனு போட முடியும்.

அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந் தது; திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தது. அதனால்தான், நம்மாள்கள் எல்லாம் படித்தார்கள்.

இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம், இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ்., நெடுஞ்செழியன் எம்.பி. பி.எஸ்., அன்பழகன் எம்.பி.பி.எஸ்.

ஆக, இவையெல்லாம் வந்ததற்குக் காரணம்,

இந்த இயக்கம். சரசுவதி  பூஜையை நீங்கள் தொடர்ந்து கொண்டாடிய காரணத்தினால் அல்ல. அல்லவே அல்ல.

சரசுவதி என்று பெயர் கொண்ட பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாது. பேத்தி சரசுவதி பொறியாளர் சரசுவதி, மருத்துவர் சரசுவதி, நீதிபதி சரசுவதி என்றால், அது இந்த இயக்கத்தினுடைய சாதனையாகும்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால்,

இந்தக் கொள்கைப் பரவாவிட்டால் என்னவாகி யிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

இப்பொழுது வேகமாக வருகிறார்கள்,

புதிய கல்விக் கொள்கை,

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிறார்கள்.

வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை...

130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை - அனைத்து மக்களும் படிக்கவேண்டும் என்றால், என்ன நியாயம்?

செம்மொழி தமிழ் என்று கலைஞர் பாடுபட்டு உருவாக்கினாரே, அந்த செம்மொழி நிறுவனம் இன்றைக்குத் தினக்கூலி நிறுவனமாக ஆக்கப்பட்டு விட்டதே!

இதிலே நடுவிலே நடுவிலே வித்தைகள். நம்மு டைய பிரதமர் மிக அழகாக வித்தை காட்டுவார்; வித்தையிலேயே மிகச்சிறந்த வித்தை மோடி வித்தை தான். மோடி வித்தை மிக அழகாகக் காட்டுவார்.

‘‘டமில், டமில் ரொம்ப ரொம்ப ரொம்ப புராதான மொழி.

டமில் வால்க!

திருவள்ளுவர், டமில் வாழ்க!

வேட்டிக் கட்டிக்கொண்டு டமில் வாழ்க என்று சொல்வார்.

யாரை ஏமாற்றுகிறீர்கள்?

நாங்கள் ஏமாறுவோமா?

நாங்கள் போதைக்கு அடிமையானவர்கள் அல்ல; நாங்கள் டாஸ்மாக் கடையின் முன் நிற்கக்கூடிய கூட்டமல்ல; அறிவைத் தட்டி எழுப்பக் கூடிய கூட்டம்.

ஆச்சாரியாருடைய குலக்கல்வி

மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆச்சாரியாருடைய குலக்கல்வி மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது. பழைய கள்; புது மொந்தை.

எனவேதான், இந்த மாநாட்டினுடைய 21 தீர் மானங்களில் மிக முக்கியமான தீர்மானம், பெற் றோர்களே உங்களுக்காக, மாணவச் செல்வங் களே உங்களுக்காக - எங்களுக்காகவோ, எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காகவோ -  எங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்காகவோ அல்ல - கருப்புச் சட்டைக்காரர்கள் பிள்ளை களுக்கோ அல்ல - எங்களை எதிர்க்கிறார்கள் பாருங்கள், புரியாமல் - அந்தக் காவிச் சட்டைக் காரருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

நீட் தேர்வு  ஒழிந்தால்தான், உங்களுடைய பிள்ளைகளும் படிக்க முடியும்.

இல்லையென்றால், எல்லாம் அனிதாக்கள் தான்; எல்லாம் சுபசிறீக்கள்தான். நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு காலம்தான் தற்கொலை செய்துகொண்டிருப்பது.

டாக்டர் ஷாலினி இவ்வளவு பெரிய டாக்டராக வந்திருக்கிறாங்க. இவர்கள் என்ன நீட் தேர்வு எழுதியா வந்தார்கள்? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நமது இயக்கம்  - அறிவுப் புரட்சி இயக்கம்

1. நமது இயக்கம் புரட்சி இயக்கம் - மாறுதலை விரும்பும் உழைக்கும் புரட்சி இயக்கம்.

2. ரகசியம் இல்லாதது

3. வன்முறை, வெறியாட்டம், காலித்தனம், கலவரம் இவற்றில் நம்பிக்கை இல்லாத, பங்கு கொள்ளாத அறிவுப் புரட்சி இயக்கம்.

4. இதுவரை நடத்திய கிளர்ச்சிகள் - அறப் போராட்டங்களில் ரத்த ஆறு ஓடியதா?

5. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து உண்டா?

6. முகமூடித்தனம் எங்கள் இயக்கத்தில் இல்லை?

7. பொதுச்சொத்துக்கு நாசம் உண்டா?

8. இளைஞர்களின் கட்டுப்பாடு

9. சிறைக்கஞ்சா நெஞ்சுறுதி

10. தன்னலம் துறந்த தற்கொலை பட்டாளம்

11. இயக்கத்தால் சம்பாதித்தவர்கள் உண்டா?

12. தீவிரவாதம் - பயங்கரவாதம் ஒன்றாவது உண்டா?

13. பெரியார் ஒரு முறிமருந்து - விஷக்கடிக்கு மாற்று (தீவிர மாற்று மருந்து) ஒன்றுதான் மருந்து!

வாய்ப்புக் கொடுத்தால்

அறிவு வருகிறது

சந்திராயன் சிவன் இருக்கிறார். சிவன், சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறார். அப்பேர்ப்பட்ட சிவன், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். மயில்சாமி அண்ணாதுரை எங்கே படித்தவர். இந்தி படித்தவரா? சமஸ்கிருதம் படித்தவரா? ஆங்கில மொழியில் படித்தவரா? இல்லையே! எம்மொழி செம்மொழி!

வாய்ப்புக் கொடுத்தால் அறிவு வருகிறது. இது வரையில் வாய்ப்புக் கொடுக்கவில்லை; எங்களைத் தட்டித் தட்டி வைத்திருந்தீர்கள்.

உனக்குப் படிப்பு வருமாடா?

தர்ப்பைப் புல்லைக் கிள்ளி உன் வாயில் போட் டால்கூட, உன் நாக்கில் போட்டால்கூட உனக்குப் படிப்பு வராதுடா, போடா சூத்திரப் பயலே என்று கேட்ட வாத்தியார்தானே, பார்ப்பான் வாத்தியார் தானே இருந்தான்.

இன்றைக்குத்தானே எங்கள் ஆள்கள் வாத்தி யார்களாக எல்லாம் வந்திருக்கிறார்கள். அதனால் தானே வாத்தியார்களை மட்டம் தட்டுகிறார்கள். ஆசிரியர்களே வரக்கூடாது என்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நீட் தேர்வு எத்தனை  உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

இரட்டை வேடம் போடலாமா தமிழக அரசு

ஒரு அரசாங்கம் -  இரட்டை வேடம் போடலாமா - தமிழக அரசு.

நீட் தேர்வை நாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளமாட்டோம். எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண் டாரா?

நுழைவுத் தேர்வை அவர் கொண்டு வந்தபொழுது, 21 ஆண்டுகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாங்கள் போராடி, இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

கலைஞர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு இருக் கலாம், அது வேறு விஷயம். கடைசியில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டார்கள். அவருடைய பெயரை சொல்லக்கூடிய தமிழக அரசு - அந்த சகோதரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்,  உங்களுக்குப் போட்டியாக நாங்கள் உங்களுடைய நாற்காலியில் உட்காரப் போகிறோம் என்றா கேட்கிறோம்.

ராஜாவை மிஞ்சும்

ராஜ விசுவாசிகள்

எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

உங்கள் பலகீனங்கள் ஏன் டில்லிக்கு அடிமையாக உங்களை ஆக்குகிறது.

டில்லி சொல்லிவிட்டது என்றவுடன், அந்தக் கல்வித் திட்டம் இன்னும் அமுலுக்கு வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு முன்பாகவே அறிவிப்பு செய்துவிட்டார்கள். ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்.

முதலில் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இருந் தனர் நம் பிள்ளைகள். பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்து, வாங்க, வாங்க என்று கூப்பிட்டார்கள். காமராசர் சோறு போட்டால், அந்தப் பிள்ளைகள் படிப்பார்கள் என்றால், சோறு போடுங்கள் என்றார். அதேபோன்று, தியாகராயர் சொன்னார் முதலில்.

நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்?

இன்றைக்கு நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். கன்கரண்ட் பட்டியலுக்கு - அதனை மாற்றவேண்டும் என்பது முக்கியம்.

ஆனால், இன்றைக்கு நாட்டில் ஒரே ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியா முழுவதும்.

ஒரே கொள்கை - ஒரே ஆட்சி.

இது கூட்டாட்சி இல்லையா!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் பாகம் என்ன சொல்கிறது?

India that is Bharath shall be a Union of  State

கூட்டாட்சித் தத்துவத்திற்கு

பெரிய ஆபத்து

இந்தியா, அதாவது பாரத நாடு பல மாநிலங் களுடைய கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சித் தத்துவத் திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து இப்போது.

அதுமட்டுமல்ல, மாநிலங்களுக்கு இருக்கின்ற கல்வி வேறு; மத்தியில் இருக்கின்ற கல்வி வேறு. அது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்.

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு.

எல்லாவற்றிற்கும் மேலே, பல்கலைக் கழகத்தில்  படிக்கப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் முத்திரை அடித்துக் கொடுப்பார்கள்,  ‘‘எலிஜிபிள் பார் காலேஜ் கோர்ஸ்'' என்று.

பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும். அதற்கு ஒரு தேர்வு எழுதவேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நீட் தேர்வு எழுதவேண்டும். அதற்குப் பிறகு  நெக்ஸ்ட் என்ற தேர்வு.

இன்று அகில  உலகமும் பாராட்டக் கூடிய மருத் துவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இங்கே இருந்து போனவர்கள்தான். ஆனால், இப்போது மருத்துவப் படிப்புப் படிக்கவேண்டும் என்றால், நீட் தேர்வு எழுதவேண்டுமாம்.

இது என்ன கொடுமை?

இன்றைய மாணவர்களுக்கு எதிர்காலமே இல் லையே!  இதைக்கேட்பதற்கு நாதி இல்லையே! கேட்டால், வாய்ப்பூட்டு,  இதைப்பற்றி பேசுவதற்கு கூட்டத்திற்கு அனுமதி கேட்டால், அனுமதி கிடை யாது.

‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக்கிறது''

ஆகவேதான், இந்தத் தீர்மானம் மிக முக்கிய மானது நண்பர்களே ‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக் கிறது'' - இந்த மாநாடு ஒரு திருப்பம் என்று சொல்ல வேண்டும்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையில் பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்.

இதுவரையில் நீட் தேர்வால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளி கள் கொள்ளையடிக்கிறார்கள்.

‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' நீதிபதிகள் கேள்வி

உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் கேட்கிறார்கள், ‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று.

அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதே - நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லையே நாம்! அது சட்டப்படி நமக்குள்ள உரிமை!

சட்டமன்றம் கூடும்பொழுது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள். மசோதாவை  மீண்டும் நிறைவேற் றுங்கள். என்ன காரணத்தினால், நாங்கள் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பினீர்கள் என்று கேளுங்கள்.

இந்த நாட்டில் ஒரு பக்கம் நீதிமன்றம்; அதில் பூணூல் மயம்; இன்னொரு பக்கத்தில் நீட், நெக்ஸ்ட் தேர்வு. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு, அவர் களுடைய படிப்பில் மண்ணைப் போட்டால் என்ன நியாயம்?

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல...

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி. ஆனால், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தானே அங்கே வந்து உட்காருகிறார்கள்.

போஸ்ட் கிராஜூவேட், சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் - இவையெல்லாம் யாருக்கு?

இவை எல்லாவற்றையும்விட சமூகநீதி - அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அந்த சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக் கின்ற ஆட்சி மத்தியில் இருக்கின்ற ஆட்சி.  அதற்குத் தலையாட்டுகின்ற ஆட்சிபோல் மாநிலத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எங்களுக்கென்றும் தனிப்பட்ட முறையில் யார்மீதும் கோபமோ, வெறுப்போ கிடையாது. இந்த சமுதாயத்தின்மீது இருக்கிற அக்கறைதான்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற, சிறுபான்மை சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்களுக்கு.

10 சதவிகித இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காம்.

Socially and Educationally backward classes

உச்சநீதிமன்றத்தினுடைய 9 நீதிபதிகள் அது தவறு என்று  கொடுத்த தீர்ப்பு இந்திரா சகானி வழக்கு இருக்கிறது. அதையெல்லாம் மதிப்பதற்குத் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக கூடுதல் பணம் கொடுக்கிறோம்; கூடுதல் இடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நமக்கு ‘வரம்' போல் அளித்தாரே, அதை இன்றைக்கு இவர்கள் அமல்படுத்தவில்லை.

டாக்டர்கள் ஏன் போராடினார்கள்?

மத்திய  சதவிகிதத்திற்கு ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொடுத்தாயிற்று. 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா? இல்லையா?

இதைக் கேட்பதற்கு நாதியில்லையே! நம்மால் என்ன செய்கிறான், டாஸ்மாக் கடையின்முன்  போய் நிற்கிறான்.

தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குத் தைரியும்.

இதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா? தோழர்களே!

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு

இந்த இயக்கம் வெட்டியாக இதனை செய்ய வில்லை. நம்முடைய பிள்ளைகள், அது காவல் துறையில் இருக்கலாம்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக நம்மவர்கள் வர முடியாமல் இருந்தது. மண்டல் கமிசன் வந்த பிறகுதானே, நம்மாட்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தார்கள்.

வங்கிகள் எல்லாம் பொதுத் துறை நிறுவனங்கள். இப்பொழுது அவற்றை எல்லாம் தனியார்த் துறையாக மாற்றுகிறார்கள். ஆகையால்தான், எங்களுடைய மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.

திராவிட இயக்கம், தமிழ்நாடுதான் இதற்காகக் குரல் கொடுக்கிறது. இந்தியாவினுடைய இதர பாகங்களிலும் இது எதிரொலிக்கிறது.

எனவே, நண்பர்களே!

நீட் தேர்விலே ஆள் மாறாட்டம் - எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இதுவரையில் தமிழ் நாட்டு வரலாற்றில்.

வடநாட்டில்கூட காப்பி அடிப்பதற்கு சட்டம் உண்டு. தமிழ்நாட்டில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் புற்றீசல் போன்று வெளிவந்து கொண்டே இருக்கின்றன. வழக்கு மேல் வழக்குப் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

ஊழலை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்தோம் என்று சொன்னார்களே, நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

எனவே, நண்பர்களே!

கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, பிராந் தியமில்லை. நாங்கள் படிக்கவேண்டும்; எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்;  எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வாழ்வளிக்கவேண்டும். அதற்கு சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான குரல் இருக்கிறதே - அந்தக் குரலை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜாதி உண்டானது எப்பொழுது?

50 ஆண்டுகள் பகுத்தறிவாளர் கழகம் - வெள் ளைக்காரன் ஆட்சி 200 ஆண்டுகள். ஜாதி உண்டானது எப்பொழுது? ஜாதி காரணமாகத்தானே, மனுதர்மம் காரணமாகத்தானே நம்மை படிக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு  அறிவைக் கொடுக்காதே - இங்கே இருந்து படித்து அமெரிக்கா விற்குப் போனாங்க பாருங்கள் - அங்கே ஜாதியைக் கொண்டு போயிருக்கிறார்கள்.  Caste in the  United states  புள்ளிவிவரம்.

அம்பேத்கர் மிக அழகாக சொன்னார், இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே, அம்பேத்கருடைய அறிவுரை

If Hindus migrated to other regions on the earth; caste would become a world problem

உலகப் பிரச்சினை ஆகும். இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் நண்பர்களே, உங்களுக்கு மிக முக் கியமாக சொல்கிறோம். இதை நாங்கள் வேடிக்கையா கவோ, விளையாட்டுக்காகவோ சொல்ல வில்லை.

பெற்றோர்களே  நீங்கள் வரவேண்டும். அலட்சிய மாக இருக்காதீர்கள். அய்.அய்.டி.யில் படிக்கின்ற பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

காரணம் என்ன?

93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியார் காலத்தில்.

இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியாருடைய தொண்டர்கள் காலத்தில்.

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் 69 சதவிகித இட ஒதுக்கீடு. இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அனுபவிப்பவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி வந்தது என்று தெரியுமா?

எங்களை எவ்வளவு கேலி செய்தார்கள்;

எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்

அன்றைக்கு                எங்களை எவ்வளவு கேலி செய் தார்கள்; எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; எங்கள்  குடும்பத்தினருக்கு எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தன.

அந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் தோழர்களே,

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு. அதனால்தான், அந்த அம்மையாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தோம். இன்னமும் சொல்கிறோம், அதிலிருந்து எங்களுக்கு மாறுபாடு கிடையாது.

மூன்று பார்ப்பனர்களை வைத்து

வேலை வாங்கியவர்கள் நாங்கள்!

நாங்கள் ஒரு முடிவெடுத்தால், அதில் எங்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

சுலபத்தில் முடிவு எடுக்கமாட்டோம்; அப்படி முடிவு எடுத்துவிட்டால், நன்றி காட்டுவது எங்கள் பண்பாடு.

69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி வந்தது?

இங்கே, சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று  பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - எழுதிக் கொடுத்தது திராவிடர் கழகம்.  நிறைவேற்றியது அவர்கள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலாவது 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதா? அதற்கும் இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.

அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ் - அவர்  ஆந்திரப் பார்ப்பனர்.

அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்த வர் சங்கர் தயாள் சர்மா - உத்தரப்பிரதேச பார்ப்பனர்.

மூன்று பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.

கருஞ்சட்டைப் பட்டாளம் இராணுவத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்

நீங்கள் எங்களை அலட்சியமாக நினைக்க வேண்டாம்; வெறும் எண்ணிக்கையைப் பொறுத் ததல்ல. எவ்வளவு பேர் இவர்கள் என்று நினைக் காதீர்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் மெஜாரிட்டியா? விஞ்ஞானிகள் எல்லாம் மெஜா ரிட்டியா? இராணுவம் எல்லாம் மெஜாரிட்டியா? 130 கோடி மக்களுக்கு 130 கோடி இராணுவம் இருக்கிறதா? அல்லது இந்த ஊரில் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறதோ, அவ்வளவு  போலீஸ் இருக்கிறதா? போலீசுக்குப் பயந்து தானே, சட்டம் ஒழுங்கே!  இராணுவத்திற்குப் பயந்துதானே எதிரி படையெடுக்காமல் இருக் கிறான்.

அதுபோல், கருஞ்சட்டைப் பட்டாளம் இராணு வத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்.

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல!

எனவே,

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்;

இந்த இயக்கத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

இந்த இயக்கம் பொறுப்புள்ள இயக்கம்

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல

இந்த இயக்கத்திற்கு ரகசியத்தில் நம்பிக்கையில்லை

இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல

முகமூடித்தனம் எங்களுக்குத் தெரியாது.

இரட்டை வேடம் எங்களுக்குத் தெரியாது.

அதுமட்டுமல்ல, எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு செய்யக்கூடியவர்கள் நாங்கள். அதிலிருந்து தப்பிப்பவர்கள் நாங்களல்ல.

அது உன்னுடைய மதத்தில் இருக்கிறது.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர் சொல்வார்,

என்ன பாவம் வேண்டுமானாலும் செய் - ஞாயிற் றுக்கிழமை சர்ச்சுக்குப் போனால் சரியாகிவிடும்.

இன்னொரு மதக்காரர் சொல்வார்,

வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போனால் சரி யாகிவிடும்

தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம்!

12 ஆண்டுகள் செய்த பாவம், மகாமகக் குளத்தில் சென்று குளித்தால் உன் பாவம் போய்விடும் என்று சொல்வார்.

தவறு செய்யாதே -

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று'' - குறள்

தண்டனை அனுபவி - இதுதான் பகுத்தறிவுவாதி.  தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம். அதில் ரகசியம் கிடையாது. கொலை, கொள்ளைக் கூட்டமா?

எனவேதான் நண்பர்களே, இந்த மண்ணிலே சொல்லுங்கள். மாபெரும் விழிப்புணர்ச்சியை அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, தமிழக அரசே, நீங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். நிமிர முடியுமா? என்று கேட்காதீர்கள். அது உங்களைப் பொறுத்தது. மக்கள் நிமிர வைப்பார்கள்.  அதுதான் மிக முக்கியம்.

நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படு கிறவர்கள் அல்ல; அடுத்த தலைமுறையினுடைய மான வாழ்வை, உரிமை வாழ்வை, கல்வி வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறவர்கள்.

எனவேதான், இளைஞர்களே! இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!

நீங்கள் திசை தடுமாறாதீர்கள் -

உங்களை திசை தடுமாற வைக்க எத்தனையோ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்; போதை மருந்தை தயாராக வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட் என்ற ஒரு போதை வைத்திருக்கிறார்கள். தறி கெட்டு கிரிக்கெட்டு - அதிலே சூதாட்டம்.

தமிழ்நாட்டில் ஏது வெற்றிடம் -

கற்றிடம்தான் தமிழ்நாடு!

இன்னும் சில பேர், புதிது புதிதாக மாயக் குதிரையை உருவாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏது வெற்றிடம் - கற்றிடம்தான் தமிழ்நாடு.

ஆகையால், வெற்றிடம் என்று திடீரென்று சொல்வது, புரூடாக்கள் விடுவது - நம்முடைய ஊடகங்கள் அதனை பெரிதாக்குகின்றன. அவர் இந்தத் தேசத்திற்காக 35 முறை சிறைக்குச் சென்றவர்.

காருக்குறிச்சி அருணாசலம்  அருமையாக நாதசுரம் வாசிப்பார்; நாங்களும் ரசிப்போம். அதற்காக அவரை பிரதமராக ஆக்க முடியுமா?

என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

ஆகவே நண்பர்களே! அறிவுபூர்வமான செய்தி களை சொல்வதுதான் எங்களுடைய வேலை. அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, நாங்கள் திரும்பிப் போவோம் என்று நினைத்துக் கொண்டு வருவதில்லை.

ஒரு மனிதன் விபத்தில் சாகக்கூடாது - ஒரு பயனும் கிடையாது. ஆனாலும், ஒரு பயன் இருக்கிறது அதில் - அங்கேயும் பகுத்தறிவு வேலை செய்ததினால் - உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்கிறார்கள்.

அந்த உறுப்புகள்கூட, செட்டியார் உறுப்பு செட்டியாருக்கு இல்லை; நாடார் உறுப்பு நாடாருக்கு இல்லை; முதலியார் உறுப்பு, முதலியாருக்கு இல்லை. அங்கேயே ஜாதி ஒழிந்து போய்விட்டது - ஆனால், புரிய மாட்டேன் என்கிறது நம்முடைய ஆட்களுக்கு.

அய்யங்கார் ரத்தம், அய்யங்காருக்கா ஏற்று கிறார்கள்?

முதலியார் விழியை, முதலியாருக்கா பொருத்து கிறார்கள்?

ஆகவேதான் நண்பர்களே,

ஜாதியால்,

மதத்தால்,

பதவியால்

சூழ்ச்சியால்

ஏமாறாதீர்கள்;

இந்த இயக்கம் இல்லாவிட்டால்

உங்கள் கதி என்ன?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் பேரப் பிள்ளைகளுடைய கல்வி வாழ்க் கையை நினைத்துப் பாருங்கள்.

படித்தவர்களுடைய வேலை வாய்ப்பைப்பற்றி நினைத்துப் பாருங்கள்.

சமூகநீதி அழிந்தால், கல்வி வாய்ப்புகள் ஒழிந்தால், அதைக் கேட்கின்ற இந்த இயக்கம் இல்லாவிட்டால் உங்கள் கதி என்ன? முடிவு செய்யுங்கள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 2 12 19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:10 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மாநாடு, விருதுநகர்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் – 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் நூல் : எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் “திராவிட இயக்கத் தூண்கள்” நூல் அறிமுக உரை: முனைவர் அரிமா த.கு.திவாகரன் நன்றியுரை : ஒசூர் செல்வி ( மாவட்டத் தலைவர், தி.க.மகளிரணி ஒசூர்) zoom : 82311400757 Passcode : PERIYAR

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்தராபாத்
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • அறிக்கை
  • அறிவியல் நாள்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இந்திய பகுத்தறிவாளர்
  • இயேசு
  • இரங்கல்
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலகத் தமிழர் மாநாடு
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கன்னடம்
  • கனடா
  • காணொளி
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • கோரா
  • சங்கமம்
  • சச்சி ராமாயண்
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செ.ர.பார்த்தசாரதி
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • ஞாயிறு மலர்
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • திரைப்படம்
  • தில்லி
  • தீர்மானம்
  • துரை.சந்திரசேகரன்
  • தெலங்கானா
  • தெலங்கானா மாநிலம்
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாகபுரி
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நாத்திகர் சங்கம்
  • நிகழ்ச்சிகள்
  • நிர்வாக குழு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • நூற்றாண்டு
  • ப.க.
  • ப.க. கலந்துரையாடல்
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புதுவை
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சியாளர் ஹோசிமின்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியார் லலாய் சிங்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பேராசிரியர்
  • பேராசிரியர்கள்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மனிதநேய மாநாடு
  • மாணவர்
  • மாணவர் பேரணி
  • மாநாடு
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மு.நாகநாதன்
  • மும்பை
  • மேற்கு வங்கம்
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லாஸ் ஏஞ்சல்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • வடஇந்தியர்
  • விசாகப்பட்டினம்
  • விஞ்ஞானி
  • வியட்நாம்
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வீரவணக்கம்
  • வைக்கம்
  • ஜெயகோபால்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK
  • periyar

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!
      தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு! விடுதலை நாளேடு மார்ச் 3, 2025 அன்று வெளியிடப்பட்டது. பெல்லம்பள்ளி, மார்ச் 3 ''ப...
  • வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!
      உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை! விடுதலை நாளேடு P...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (4)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று முழங்கிய எபிகூரஸ்
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (18)
    • ►  டிசம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2023 (19)
    • ►  நவம்பர் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ►  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.