திங்கள், 31 ஜூலை, 2017

ஜெர்மனி: பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு (27.7.2017)

ஸ்வென் வொர்ட்மன் அவர்களால் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி - வாழ்க்கைச் சுருக்கம்'' புத்தகம் ஜெர்மனி மாநாட்டில் வெளியிடப்பட்டது,
மாநாட்டில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார் -- பேராசிரியர் அ.அய்யாசாமி எழுதிய ‘‘‘‘Periyar Self-Respect''  ஆங்கில புத்தகம் ஜெர்மனி மாநாட்டில் வெளியிடப்பட்டது.பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசனின் 71 ஆவது பிறந்த நாள், நடராசன் - ராசலட்சுமி ஆகியோரின் 52 ஆவது மணவிழாவினையொட்டி அவரது இல்லத்தில் நினைவு கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்து, விழா நாயகருக்குப் பயனாடை அணிவித்தார். உடன் புதுச்சேரி மேனாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர் (புதுச்சேரி, 23.7.2017)
-லிடுதலை,28.7.17

ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு எழுச்சியுடன் தொடங்கியதுபெரியார் நூல்கள் ஜெர்மன் மொழியில் வெளிவர உதவிய  ஆராய்ச்சி வல்லுநர்கள் கிளாடியா வாடர், ஸவென் வொர்ட்மன் ஆகியோருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்


 
evolt ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆங்கில நூலான  'Periyar Self-Respect Movement'வெளியிட்ட காட்சி

கொலோன், ஜூலை 28 தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவப் பரப்பலின் முயற்சிகளில் ஒன்றாக ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது.

ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா" 27.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணி) எழுச்சியுடன் துவங்கியது.மாநாட்டினை நடத்திடும் அமெ ரிக்க பெரியார் பன்னாட்டு மய் யத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரி யர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் மாநாட்டுக்கு வருகை தந்தோர் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். பன்னாட்டு மாநாடு கொலோனில் நடைபெறுவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி எடுத்துரைத்த அவர், அதற்காகப் பெருமைப்படுவதாகவும் தமதுரையில் குறிப்பிட்டார்.
தொடக்கம்

லண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வ நாயகம் மாநாட்டை திறந்து வைத்து சிறப்பானதொரு உரையினை வழங் கினார். பெரியார் சுயமரியாதை  இயக்க பன்னாட்டு மாநாட்டினை தொடங்கி வைப்பது தமது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு எனவும், பெரியாரின் மனிதநேய தத்துவம் உலகமெலாம் பரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  பெரியார் தம் கொள்கைகளை உலகமயமாக்குப் பணியில் தாமும் இணைந்து பணியாற்றிட அணியமாக இருப்பதாகவும் கூறினார்.

புத்தக வெளியீடு

பன்னாட்டு மாநாட்டில் வெளியிட ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டு நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் அச்சிடப்பட்டன. 'கடவுளும் மனிதனும்' (Gott und Mensch) எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய நூலினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். 'பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்" (Periyar E.V. Ramasamy - Eine Kurzbiographie) நூலினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸவென் வொர்ட்மேன் ஜெர்மனியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு ஜெர்மனி மொழியாக்கங்களை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, முதல் நூலினை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸல்க் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய "பெரியார் சுயமரியாதை" (Periyar Self-Respect) எனும் ஆங்கில நூலினை பெரியார்  மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் நூலினை ஜெர்மனியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன் - ஒலிவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

"பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன்மொழிகள்"  (Inscriptions at Periyar Memorial)  (தமிழ், ஆங்கிலம்)  நூல்களை திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வெளியிட பல்கலைக் கழக மாணவர் பாஸ்கல் பெற்றுக் கொண்டார்.'ரிவோல்ட்' ஏட்டில் வெளிவந்த சுயமரியாதை தத்துவம், இயக்கம்பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான 'பெரியார் சுயமரியாதை இயக்கம்' (Periyar Self-Respect Movement) எனும் ஆங்கில நூலினை தமிழர் தலைவர் வெளியிட, வியட்நாம் நாட்டைச் சார்ந்த கொலோன் பல்கலைக் கழக ஆராய்ச்சி  மாணவர் சினா முதல் நகலினைப் பெற்றுக் கொண்டார். ஜெர்மன் மொழியாக்க நூல்களைப் படைத்த கிளாடியா வெப்பர், ஸ்வென் வொர்ட்மேன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.

புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் அமெரிக்க நாட்டு மருத் துவர் சித்தானந்தம் சதாசிவம் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டு சிறப்புரை

நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி மாநாட்டு சிறப்புரையினை ஆற்றினார். சுயமரியாதை தத்துவம் பற்றி ஆங்கிலத்தில் அரியதொரு சொற்பொழிவினை வழங்கினார். தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்  ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால் பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்  அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மானிடருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம் எனக் குறிப்பிட்டு கூறி  தமது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேராளர்கள் பலரும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர். 

-விடுதலை,28.7.17.

.

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்கு பேராளர்கள் புறப்பட்டனர்-1

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழர் தலைவர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஜெர்மனிக்குப் புறப்பாடு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வழியனுப்பி வைத்தார்.
சென்னை, ஜூலை 26 ஜெர்மனியில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கும் தமிழர் தலைவர் உள்ளிட்ட 40 பேராளர்கள், தோழர்கள் இன்று சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் வழியாக சென்றனர். ஜெர்மனிக்கு செல்லும் பயணக் குழுவினருக்கு கழகப்பொதுச் செயலாளர் தலைமையில் வழியனுப்புவிழா நடைபெற்றது.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல் கலைக்கழகத்தில் இம்மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று  நாள்களில் சுயமரியாதை இயக்க 91 ஆவது ஆண்டு நிறைவு விழா, பெரியார் பன்னாட்டு மய்யம் (அமெரிக்கா) ஜெர்மனி கிளை ஏற்பாட்டின்கீழ் நடைபெறுகிறது. பன்னாட்டளவில் நடைபெறும் மாநாட்டில்  கல்வியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், சுய மரியாதையாளர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக் கின்றனர்.
தமிழர் தலைவர் புறப்பட்டார்
முன்னதாக இன்று (26.7.2017) காலை 9.30 மணியளவில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர் வாழ்விணையர் மோகனா அம்மையார் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி யளவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி,  வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி உள்ளிட்ட கழகத் தோழர்கள், தோழியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென் றார்கள். முன்னதாக அனைவரையும் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மகிழ்வுடன் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
இவ்வழியனுப்பு விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இன்பலாதன், பேராசிரியர் ந.க.மங்கள முரு கேசன், ராஜம் மங்களமுருகேசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், விடு தலை தலைமை செய்தியாளர் வே.சிறீதர், தலைமை புகைப்படக் கலைஞர் பா.சிவக் குமார், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம்,   சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, தென்சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன், தொழிலாளரணி நாகரத்தினம், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், சீ.லட்சுமிபதி, கமலக்கண்ணன், கா.பாஸ்கர், பொய்யாமொழி,  சிவசாமி, சுரேஷ், ராஜன், மா.குணசேகரன், ஜனார்த்தனன், மனோகரன், நங்கை.மோகன்,கோடம்பாக்கம் சீனுவாசன், பெரியார்செல்வன், மணிமாறன், ஜெ.குமார், கு.பிரீத்தா, ஜெ.இன்பவல்லி, ச.தேவி, நாக வல்லி முத்தய்யன், தரமணி மஞ்சுநாதன், செந் துறை இராஜேந்திரன்,  சி.காமராஜ், க.அன்புமதி, க.அருள்மதி, ஊடகவியலாளர் மு.குணசேகரன், கற்பகவிநாயகம், பெரியார் திடல் சுரேஷ், கலைமணி, விமல், சி.கே.பிரித்விராஜ், உடு மலை வடிவேல், அருள், யுவராஜ்,  புதியவன், கலைமதி, ஓட்டுநர்கள் அசோக், மகேஷ், ஆனந்த், இளங்கோவன் உள்பட பலரும் வழியனுப்பும் விழாவில் பங்கேற்றனர்.
ஜெர்மனியில் பெரியார் 'சுயமரியாதை இயக்க' பன்னாட்டு மாநாட்டுக்கு பயணமானவர்கள் பட்டியல்
சென்னையிலிருந்து விமானம் மூலமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் இன்று (26.7.2017) ஜெர்மனி மாநாட்டுக்கு புறப் பட்டவர்கள் பட்டியல் வருமாறு:
மோகனா வீரமணி
கவிஞர் கலி. பூங்குன்றன்
மருத்துவர் பிறைநுதல் செல்வி
வீ.குமரேசன்
வழக்குரைஞர் அ.அருள்மொழி    
கலைச்செல்வி அமர்சிங்
வெற்றிச்செல்வி கலி.பூங்குன்றன்  
தங்கமணி கோவிந்தசாமி  
தனலட்சுமி இராஜகோபாலன்
ஜெயராமன் பெரம்பூர் சிதம்பரநாதன்  
முத்தையன் பக்கிரிசாமி  
வீரபத்திரன் ராகவன் தேசப்பன்  
கே. சோமசுந்தரம்  
இராஜமாணிக்கம் பெரியசாமி  
அன்பழகன் வெங்கடேசன்  
சக்திவேல் கிருஷ்ணன்  
கார்த்திக் சக்திவேல்  
கணேசன் சன்னாசி  
மு.க. ராஜசேகரன்  
த. ஜெயகுமார்  
சுப்பராயன் மண்ணாங்கட்டி  
அ.தங்கசாமி   
கே. முனியசாமி  
கோவிந்தராஜன் வாஞ்சிநாதன்  
சங்கர் திருஞானம்  
சிவக்குமார் பழனியப்பன்  
ஆ.கலைச்செல்வன்   
சடகோபன் விவேகானந்தம்  
விஜயானந்த் மண்ணாங்கட்டி  
ஊமை. ஜெயராமன்  
தமிழ்செல்வி ஜெயராமன்  
லதாராணி பச்சையப்பன்  
ராஜேந்திரன் சாமிக்கண்ணு  
ஜெயச்சந்திரன் மாணிக்கம்  
நாராயணசாமி காசி விஸ்வநாதன்  
சிவ. வீரமணி  
எஸ். எஸ். சுந்தரம்  
சா.தேவதாஸ்   
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
.

ஜெர்மனியில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்குப் பங்கேற்கச் செல்லும் பேராளர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் உள்ளிட்டோரை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார் (சென்னை, 26.7.2017) - செய்தி 7ஆம் பக்கம் காண்க..

ஜெர்மனியில் நடைபெறும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் வாழ்த்து
சென்னை, ஜூலை 26- ஜெர்மனியில் ஜூலை 27,28,29 ஆகிய நாள்களில் கொலோன் பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் 91ஆம் ஆண்டு நிறைவு விழா, பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்கு தமிழகத் தலைவர்கள் அளித்துள்ள வாழ்த்துகள் வருமாறு:-
வைகோ வாழ்த்து (மதிமுக)
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1932 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தந்தை பெரியார் அவர்கள், 17.05.1932 இரவு 7.30 மணிக்கு மாஸ்கோவில் இருந்து இரயில் மூலம் ஜெர்மனிக்குப் புறப்பட்டு, 19.05.1932 அன்று காலை 9.30 மணிக்கு பெர்லின் நகரை அடைந்தார். 14.06.1932 வரை அங்கேயே தங்கி, ஜெர்மனி முழுவதிலும் பயணம் செய்து பல்வேறு மக்களையும், தலைவர்களையும் சந்தித்து அவர்களின் கலை, பண்பாடு குறித்து அறிந்துகொண்டார்.
அத்தகைய பெருமைக்கு உரிய ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளை நடத்துகின்றது.
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பெரியாரின் கடவுளும் மனிதனும் என்னும் நூல்கள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. பெரியாரின்  ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, பெரியாரின் நினைவிடம், கல்வெட்டு, பொன்மொழிகள் ஆகிய ஆங்கில நூல்களும் பெரியார் சுயமரியாதை எனும் ஆங்கில நூலும் இதே நிகழ்வில் வெளியிடப்பட உள்ளன. பெரியார் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள சிறப்புமிகு மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர். சுயமரியாதை இயக்கம் குறித்து நடத்தப்பட்ட பன்னாட்டுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் பாராட்டி சிறப்பிக்கப்படுகின்றார்கள்.
கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு, மானமிகு கி.வீரமணி பெயரிலான சமூக நீதி விருது வழங்கப்பட உள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லசு, துணைத் தலைவர் ஸ்வன்வோர்மன், செயலாளர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் முன்னின்று மாநாட்டு நிகழ்ச் சிகளை நேர்த்தியாக ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.
தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகத்தின் 41 பேராளர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் சரித்திரச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஆய்வு செய்து உரையாற்றுகின்றார்கள் என்பது நமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியினை அளிக்கின்றது.
நூறாண்டுக்கால வரலாற்றுப் பின்னணியும், சிறப்பும் கொண்ட நம் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான சுயமரியாதை இயக்கத்தின் விழாவை அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளின் பேராளர்கள் எல்லாம் ஜெர்மனியில் கூடிக்கொண்டாடுவதும், பெரியாரின் தனிச்சிறப்பை பன்னாட்டு பெருமக்களிடையே பரப்புவதும் நாம் அனைவரும் உவகையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கத்தக்கதாகும்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டிப் பாடினாரே, அத்தகைய சிறப்புமிகு நம் தந்தை பெரியாரின் உலகுதொழும் தத்துவங்களை உலக மயமாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வில்லில் இருந்து புறப்பட்ட கணை எப்படி போய்ச் சேர வேண்டிய இலக்கை அடைந்துதான் நிற்குமோ, அதனைப்போலவே பெரியாரின் பெரும்பணியும் வெற்றியை ஈட்டும்வரை ஓயாது என்று முழக்கமிட்ட அறிஞர் பெருந்தகை அண் ணாவின் எண்ணத்திற்கு வலுசேர்க்கவும், வாகை சூடவும் உள்ள ஜெர்மனியின் சுயமரியாதை மாநாடு வெற்றிகளைக் குவித்திட மறுமலர்ச்சி தி.மு.கழகம் பாசமலர்களை, வாச மலர்களை தூவி வாழ்த்து கின்றது! பாராட்டி மகிழ்கின்றது!
இவ்வாறு கூறியுள்ளார்.
தொல்.திருமாவளவன் வாழ்த்து (வி.சி.க.)
'பெரியார் பன்னாட்டு மய்யத்தின்' சார்பில் ஜூலை 27,28, மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் ஜெர்மனியில் "பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு" நடைபெறுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
1932இல் பெரியார் பயணம் செய்து சுயமரியாதை சிந்தனைகளைப் பரப்பிய அதே ஜெர்மனி தேசத்தில், 85ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தின் அனைத்துலக மாநாடு நடைபெறுவது, தந்தை பெரியாரின் கருத்தியல் வலிமைக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். அத்துடன், தந்தை பெரியாருக்குப் பின்னர் அவரது சிந்தனைகளையும், இயக்கத்தையும் கட்டிக்காப்பாற்றி, இன்று உலகளாவிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றிருப்பது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அளப்பரிய சாதனையாகும்.
ஜெர்மனி தேசத்தின் 'டோச்சு' மொழியில் இன்று பெரியாரின் சிந்தனைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்படுவதும் அய்ரோப்பியர்கள் உள்ளிட்ட பன்னாட்டவரிடையே சுயமரியாதை உணர்வுகளை ஊட்டுவதும் போற்றுதலுக்குரிய வரலாற்றுச் சாதனையாகும். இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர்கி. வீரமணி அவர்களையும் இம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்துள்ள பெரியார் இயக்கப் பன்னாட்டுப் பொறுப்பாளர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனமாரப் பாராட்டுகிறது. பாவேந்தரின் தொலைநோக்குப் பார்வையின்படி இன்று பெரியாரின் சிந்தனைகளை உலகமே போற்றுவது நம் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
புரட்சிகர மாற்றங்களைப் படைக்கும் உலகச் சிந்தனையாளர்களின்  வரிசையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் ஒளிவீசுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பன்னாட்டு மாநாடு மகத்தான வெற்றி பெற விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இரா.முத்தரசன் வாழ்த்து (சி.பி.அய்)
பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணியின் தொடர்ச்சியாக உலக அளவில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துச்செல்ல ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாநாட்டிற்கு எங்களது வாழ்த்துக்கள்.
பெரியார் துவக்கிவைத்த சுயமரியாதை இயக்கம், அவர் இவ்வியக்கத்தை துவக்கியதன் மிக முக்கிய காரணம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பது தான், பெரியார் கண்ட இயக்கத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் பலன் தமிழகம் மட்டுமல்ல; வட இந்தியா துவங்கி உலகம் முழுவதும் தற்போது தெரியவருகிறது. சமூக நீதிக்கான போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் உங்கள் பயணம் அமைந்துள்ளது.
ஜெர்மனியில் நடக்கவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கம் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடக்கவிருக்கிறது. இன்று உலகமெங்கும் மக்கள் சுரண்டப்படுகின்றனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. முக்கியமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மிகவும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
மிகவும் முக்கியத்துவம் மிகுந்த இந்த மாநாட்டில் பல்வேறு தலைசிறந்த தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். தற்போது உலகம் எதிர்கொள்ளும் சூழல் மற்றும் மிகவும் மோசமான முதலாளித்துவச் சுரண்டல்கள் போன்றவற்றை எதிர்க்கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையில் இம்மாநாடு இருக்கும் என்பதில் எங்களுக்கு அய்யமில்லை.
தங்களைப் போன்ற அனுபவசாலிகள் இம்மாநாட்டை வழிநடத்திச்செல்வது குறித்து நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். உங்களின் சமூகப்பணிக்கான நடவடிக்கைக்கு எங்களது வாழ்த்துக்கள். மேலும் மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்.
சமூக விழிப்புணர்வுடன் சமூகப் புரட்சியும் இந்த காலகட்டத்தில் தேவைப்படுகிறது, இந்த மாநாடு புதிய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டும், உங்கள் பயணம் பாதுகாப்பகவும் இனிமையாகவும் இருக்க எங்களது வாழ்த்துக்கள்!
-விடுதலை,26.7.17

வெள்ளி, 28 ஜூலை, 2017

இனத்தால் திராவிடர் - மொழியால் தமிழர் - உலகத்தால் மனிதர்


சு. அறிவுக்கரசு
மலேசியாவில் தமிழ்பேசி வாழும் திராவிடர்களின் "மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்" சார்பில் உலகத்தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. ஜூன் 24, 25 ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற இம்மாநாட் டில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டிலிருந்து பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர் களில் நானும் ஒருவன். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்புதல் பெற்று கலந்து கொண்டேன். என்னுடன் இராம. அன்பழகன், மஞ்சை வசந்தன் ஆகியோ ரும் கலந்து கொண்டனர். தவிரவும் இள.புகழேந்தி, வே.மதிமாறன்,   அ.மார்க்சு ஆகியோரும் பங்கு பெற்றனர்.
24.6.2017 அன்று காலை 11 மணியளவில் மாநாட்டுத் தொடக்க விழா நடந்தது. மலேசிய நல்வாழ்வுத்துறை அமைச்சர் டத்தோஸ் டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். தமிழ்மொழி, தமிழர் பெருமை பற்றியும், தந்தை பெரியார் வளர்த்தெடுத்த மூடநம்பிக்கை ஒழிப்பு முதலிய கொள்கை வழி வாழ்வதன் சிறப்பு பற்றியும்  பெருமிதத்துடன் பேசிய அமைச்சர், மலேசிய அரசு தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் செய்துவரும் செயல்கள், திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு, மாநாட்டின் கொள்கை களான "இனத்தால் திராவிடன் - மொழியால் தமிழன் - உலகத்தால் மனிதன்" எனும் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மாநாட்டின் அமைப்பாளர்களுடனும், பேராளர்களு டனும் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டி ருந்து விட்டுச் சென்றார்.
மாநாட்டின் முதல் நிகழ்வாக மாநாட்டின் தலைவரும் மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் பெரு.அ. தமிழ்மணி தமது தலைமையுரையை மிகச் சுருக்கமாக நிகழ்த்தினார்.
மனித குலம் தோன்றியது முதல்  திராவிடர் இனமே உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தது என்றும், அவர்கள் இன்றைய நிலையில்  உலகத்தில் 250 கோடி என்ற அளவில் உள்ளனர் என்றார். திராவிடர் இனத்தின் முதல் தாய் மொழி தமிழே என்று பெருமை பொங்கப் பேசினார். 1856இல் அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி 12 திராவிட மொழி களை இனம் காட்டினார் என்றும், பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சிகளுக் குப்பிறகு சற்றொப்ப 30 மொழிகள் இனங் காணப்பட்டுள்ளன என்பதையும் எடுத் துரைத்தார். எனவே இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர், உலகத்தால் மனிதர் என்கின்ற உயரிய தத்துவத்தை உயர்த்திப் பிடிப் போம் என்று முழங்கினார்.
அதன்பிறகு மலேசியப் பிரதமர் துறைத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ் வி.தேவமணி அவர்கள் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட களஞ்சியம் மலரை வெளியிட்டுப் பேசினார். மாநாட்டு மலரை நான் பெற்றுக் கொண்டேன். என்னைத் தொடர்ந்து பேராளர்கள் பலரும் பெற்றுக் கொண்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர், கருத் தரங்கு தொடங்கியது. பேராசிரியர் அ.மார்க்சு,  மஞ்சை வசந்தன், இள.புகழேந்தி, இராம. அன்பழகன் ஆகியோர் உரை யாற்றினர். நகைச்சுவைப்  பேச்சாளர் என அறிமுகம் செய்யப்பட்ட இராம.அன்பழகன் பேசும் போது,   பார்ப்பனர் ஆதிக்கத்தால் எப்படியெல்லாம் மொழி, பண்பாடு, வாழ்க்கை முறைகள் கெடுக்கப்பட்டன என்பதையும், தந்தை பெரியாரின் பகுத் தறிவுப் பரப்புரையால் இன்றைய திரா விடர்கள் தமிழ்நாட்டில் முன்னேறியிருப் பதையும் விளக்கிக் காட்டினார்.பெரிதும் பெரியார் பற்றாளர்களாகவே நிறைந் திருந்த கருத்தரங்க மண்டபம் அவரது உரையை மிகவும் ரசித்துக் கேட்டது.
மறுநாள் 25.6.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் மாநாடு தொடங்கியது. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மலேசியக் கல்வித் துறைத் துணை அமைச்சர் டத்தோ. ப.கமலாநாதன் பேசி னார். வே.மதிமாறன் உரைக்குப்பின், நான் பேசினேன். தமிழ்மொழியின் சிறப் புகள் சிலவற்றைக் குறித்துப் பேசியபின் அம் மொழியின் ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றைக் குறிப்பிட்டுக் கூறினேன். சோழ, பாண்டிய அரசர்கள் எவ்வாறு  தமிழைப் புறக் கணித்து சமஸ்கிருதத்தை வளர்த்தனர் என்பதை விளக்கினேன். பக்தி இலக்கிய காலத்தில் பக்தியும், மூடநம்பிக்கை களுமே வளர்ந்தன என்பதை எடுத்துக் காட்டினேன். தமிழிசை, தமிழ் சித்த மருத் துவம், தமிழ்க்கலைகள் எப்படி வடமொழி மயமாக்கப்பட்டன என்பதையும் எடுத்துக் கூறினேன். தமிழர்களின் உயரிய வாழ் வியல் முறைகள் ஒழித்துக்கட்டப்பட்டு ஆரியப் பழக்க வழக்கங்கள் திணிக்கப் பட்ட விவரங்களை விவரித்தேன். பார்ப் பனர் அல்லாத மக்களுக்கு கல்வி மறுக்கப் பட்டதால் வேலை வாய்ப்புகளும் மறுக் கப்பட்ட அவலத்தைக் கூறினேன். 1916இல் தோன்றிய பார்ப்பனரல்லாதார் எழுச்சி, திராவிடர் இனஉணர்வு தோன்றிய சூழ் நிலையைக் கூறினேன். சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் ஊட்டிய திராவிட இன உணர்வு, எவ் வகையில் பார்ப்பனர் அல்லாதாரை முன் னேற்றியது என்பதை ஆதாரங்களோடு பேசினேன். ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என எல்லாத் துறையிலும் எல்லா நிலைகளிலும் இயங்கினால்தான் தமிழ் மொழி வாழும் என்பதால் தமிழ் மொழி காக்க, வளர்க்க திராவிடர் இயக்கம் பாடு பட்டதை விளக்கிப் பேசினேன்."எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லி சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் - குறை  களைந்தோமில்லை" என்று புரட்சிக் கவிஞர் பாடியதை எடுத்துக் கூறி தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப கணினித் தமிழை வளர்த்திட தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் உதவி வருவதை எடுத்துக் காட்டினேன். இத்தாலி நாட்ட வரான வீரமாமுனிவருக்குப் பின் தமிழ் எழுத்தைச் சீர்மைப்படுத்தியவர் பெரி யாரே என்பதை நிறுவினேன்.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்பதைக் கூறி
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித் தார் என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளின் படி திராவிடர் எனும் இன உணர்வு ஒன்றேதான் நம் இன மேன்மைக்கும், உயர்வுக்கும் உதவும் என்பதாக தந்தை பெரியாரும் பாடு பட்டார் என்று கூறி அவர் வழியிலேயே திராவிடர் கழகம் தமிழ் நாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் செயல்படுகிறது என்பதைக் கூறி முடித்தேன்.
இரவு 7 மணிக்கு மேல் பேராளர் களுடன் கலந்துரையாடல் நிகழ்வு தொடங் கியது. வா.மு.சே.திருவள்ளுவர் தொடக்க வுரையாற்றினார். பலரின் கருத் துரைக்குப் பின் உலக திராவிட இன உணர்வாளர் மாநாட்டை ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றில் நடத்துவதென முடி வெடுக்கப்பட்டது. இதற்கென உலக திராவிட இன உணர் வாளர் பேரவை ஒன்று தொடங்குவதென வும் முடிவானது. அதன் தலைவராக பெரு. அ.தமிழ்மணி அவர்களே செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவருக்குத் துணைபுரிய செயலவை ஒன்றினை அமைத்துக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டின் இறுதியில்  மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மாநாட்டின் துணைத் தலைவருமான, எஃப்.காந்தராசு நன்றி தெரிவித்தார்.
27.6.2017 முதல் 1.7.2017 வரை மலேசியா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் பேசுவதற்காக அனுப்பப்பட்டோம். 1929இல் தந்தைபெரியாரின் முதல் மலேசியப் பயணத்தின்போது நிகழ்வு களை ஏற்பாடு செய்து பேராக் மாநிலம், ஈப்போவில் நடைபெற்ற அகிலமலாயா தமிழர் மாநாட்டிற்காகத்தான் அழைக்கப் பட்டார். அந்த மாநிலப்பகுதிகளில் பேசு வதற்காக நானும், இராம.அன்பழகனும் அனுப்பப்பட்டோம்.
முதல் நிகழ்ச்சி சித்தியவான் நகரில், சித்தியவான் வட்டார பொது அமைப்பு களான தமிழ் இளைஞர் மன்றம், மக்கள் சக்தி, வீர திராவிடர் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து "மக்கள் ஓசை" நாளேட் டின் செய்தியாளர் ம.விசுவநாதன் ஏற்பாடு செய்திருந்தார். "சித்தர் குடில்" எனும் பெயர் தாங்கிய மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகி யிருந்தது. எம்.எல்.மணிவண் ணன் தலை மையில் ம.விசுவநாதன் வரவேற்புரையாற் றினார். எங்களுக்கான நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான மாநாட்டுத் துணைச் செயலாளர் மு.விந் தைக்குமரன் அறிமுக உரையாற்றினார். இராம.அன்ப ழகன் 50 நிமிடங்களும், நான் ஒரு மணி நேரமும் உரையாற்றினோம். கூட்ட முடிவில் ஒருவர் அய்ய வினா எழுப் பினார். சோழ மன்னர்கள் சமஸ்கிருதத்தைக் கற் பித்தனர் என்றால்  அவர்களின் கல் வெட்டுகள் தமிழில் இருப்பது எப்படி என்று கேட்டார். "அந்தக் கல்வெட்டுகளைப் படித்தால் தெரியும் எவ்வளவு தப்பும் தவ றுமாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என் பதை! எழுதித்தந்தவரும் கல்லில் பொறித் தவரும் அதனைச் சரி பார்த்த வருமே தமிழ்மொழி அறிவற்றவர்கள் என்பது புரியும்" என்பதை எடுத்துக் கூறி விளக்கம் அளித்தேன். கூட்டம் இரவு பத்தேகால் மணிக்கு முடிவுற்றது. அதன் பின்னர் வீராசாமி (அரக்கோணம்) என்ப வரின் விருந்து உபசரிப்பு, சீனர் உணவு கடையில் அளிக்கப்பட்டது.
அடுத்து 29.6.2017 அன்று பேராக் மாநிலம் சுங்கை சிட்புட் நகரில் மலேசியத் திராவிடர் கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. பேராக் மாநில திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமையில், சுங்கைசிட்புட் நகர தி.க. தலைவர் க.ஏலன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பணியிலிருக்கும் மாவட்ட காவல் துறை ஆணையர் அ.பரமேசுவரன் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாட்டில் காணக்கிடைக்காத அபூர்வ நிகழ்வு என்று இதனைப் பாராட்டிப் பேசி னேன். எங்கள் இருவரின் உரைக்குப்பின் கூட்டம் இரவு 10 மணிக்கு முடிந்தது. பேராக் மாநில திராவிடர் கழகச் செய லாளர் இரா.கோபி கூட்ட நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்துப் பேசி நன்றி கூறி முடித்து வைத்தார்.
"மக்கள் தொண்டு என்பது மக்களை மோட்சத்திற்கு அனுப்புவது அல்ல. மக்கள் கொண்டிருக்கும் தவறான கருத் துகளை, எண்ணங்களைத்திருத்தி அவர் களைச் செம்மையான வாழ்க்கை முறை களுக்கு அழைத்துச் செல்வது  ஆகும்" என்கிற தந்தை பெரியாரின் கருத்தை கூட்ட அழைப்பிதழில் அச்சிட்டது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருந்தது குறிப் பிடத்தக்கது.
- தொடரும்
-விடுதலை,28.7.17

நேற்றைய தொடர்ச்சி....
மறுநாள் 30.6.2017 அன்று பேராக் மாநில பெரியார் பாசறை சார்பில், பானீர் கிராமத்தில் "பெரியார் உணர்த்திய வாழ் வியல்" எனும் தலைப்பில் உரையாற்றிட ஏற்பாடாகியிருந்தது. சிறிய கிராமமாக இருந்தாலும் பெரிய மண்டபம். பெரியார் தொண்டரும், பெரியார்  பாசறை நிறுவன ருமான வாசு தலைமையேற்றார். முனிய ரசன் வரவேற்றுப் பேசினார். ஈப்போ நகரத் தமிழர் தன்மான இயக்கத்தைச் சேர்ந்த இலட்சுமணன், நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மு.விந்தைக்குமரன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் நானும், இராம.அன்பழகனும் உரையாற்றிட கூட்டம் இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. பக்கத்திலுள்ள காம்பார் நகரில் இரவு உணவை முடித்துக் கொண்டு ஈப்போ நகருக்குத் திரும்பினோம்.
1.7.2017 அன்று மாலை ஈப்போ நகரம், புந்தோங் பகுதியில் அருளொளி மன்றத் தில் மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் தமிழ் உணர்வாளர் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் இலட்சுமணன். அன்று மதியம் அவரின் இல்லத்தில் உணவு அளித்து உபசரித்தார். உணவு உண்டு, சற்றே ஓய்வுக்குப்பின் நிகழ்ச்சிக்கு வந்தோம். கூட்டத்தின் தலைவரும், மேனாள் மாநில அமைச்சருமான டத்தோ கோ.ராஜூ அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
கூட்டம் 7.30 மணிக்குத் தொடங்கியது. தலைவர் டத்தோ கோ.ராஜூ 10 நிமிடங் களுக்குமேல் மலேசியத் தமிழர்களின் நிலை பற்றியும், மொழிவளர்ச்சிக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் சிறப்பாகப் பேசினார். இலட்சு மணன் வரவேற்புரை ஆற்றும்போது தமிழர்கள் மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவு நெறியில் வாழவேண்டும் எனப்பேசினார். பெரியார் பாசறைறைச் சார்ந்த முனியராசன் இணைப்புரை வழங்கினார். ஈப்போ மு.விந்தைக்குமரன் எங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
இராம.அன்பழகன் தமிழர்களிடையே நிலவியுள்ள பல்வேறு மூடநம்பிக்கை களை நகைச்சுவை மிளிர எடுத்துரைத்தார். ஈப்போ நகரில் வாழ்ந்திருந்த அழ.சிதம் பரம் (செட்டியார்) அவர்களின் மருமக னாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருப்பதையும், தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற வர்கள் தமிழ்ப்பணி ஆற்றியதையும் நினைவு கூர்ந்து உரையைத் தொடங் கினேன். ஊருக்குள் நுழையும் போதே, அங்குள்ள தமிழ்ப்பள்ளியின் சுற்றுச் சுவரில் தந்தை பெரியார் அவர்களின் அழகிய உருவப்படமும், பொன் மொழி களும் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டிப் பாராட்டிப் பேசினேன். பெருமை மிக்கத் தமிழ்மொழி அயல் கலாச்சாரப் படையெடுப்பால் எவ்வாறு சிதைக்கப் பட்டது என்பதனை எடுத்துச் சொல்லி, தந்தை பெரியார் ஊட்டிய சுயமரியா தையும், திராவிட இனமான உணர்வும் எந்தெந்த வகைகளில் தமிழ்ச்சமு தாயத்தை மேம்பாடடையச் செய்தது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் கூறிப் பேசினேன். இறுதியாக முனிய ராசன் நன்றியுரைக்குப்பின் கூட்டம் முடி வுற்றது. கூட்டத்திற்கு வருகை தந்திருந்த உள்ளூர் பெரியவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டபின் இரவு உணவுக்கு விடைபெற்றோம்.
மலேசியாவின் பல மாநிலங்களில், பல ஊர்களில் 22 பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். கோலாலம்பூர் நகரில் இருநாள் மாநாடு முடிந்ததும் தமிழகப்  பேச்சாளர்கள் இருவர் இருவ ராகப் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று திரும்பினோம். மொத்தம் 20 கூட்டங்கள் நடைபெற்றன. கிள்ளான் எனும் ஊரில் நடைபெற்ற கூட்டத்தின் இடையே சில இளைஞர்கள் இடையூறு செய்ததாலும், இதன் காரணமாக மற்றொரு ஊரில் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட தாலும் இரு கூட்டங்கள் நடைபெறாத நிலை.
மறுநாள் காலையில் ஈப்போ நகரி லிருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வந்த டைந்தோம். அழகான அரங்கம் ஒன்றில்  மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற் றது. மாநாட்டுத் தலைவர் பெரு. அ.தமிழ் மணி அவர்கள் தம் நிறைவுரையை நிகழ்த்தித் தொடங்கி வைத்தார். மாநாட் டுப் பொறுப்பாளர்கள் சிலர் தத்தமது நன்றியுரையை நிகழ்த்தினர். அதன்பின் தமிழ் நாட்டிலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்திருந்தோர் உரையாற்ற அழைக்கப் பட்டனர். இறுதியில் அழைக்கப்பட்ட நான் விரிவாகவே பேசும் நிலை ஏற்பட் டது. சிலர் குழப்பம் விளைவித்ததால் கிள்ளான் பகுதியில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்படாத நிலையை மனதில் கொண்டு, தமிழ்த்தேசம், தமிழ்த்தேசியம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு மத, ஜாதி உணர்வுகளுக்கு உயிர் கொடுக் கும் செயலில் ஈடுபடுவதைக் குறித்து விளக்கம் தந்தேன். தமிழ் விரிவுரை யாளராகப் பணிபுரிந்த மறைமலை அடிகள் - இந்தியப் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின் காரணத்தால் - தமிழ் மொழி வட்டாரப்பேச்சு மொழி என்று தகுதியிறக்கம் செய்யப்பட்டு அதற்கெனத் தனியே துறை தேவையற்றது என்றாக்கப் பட்ட, பழைய வரலாற்று செய்திகளை எடுத்துச் சொல்லி, திராவிட நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி இழந்த பெருமையை மீண்டும் தமிழ் பெற்றது என்ற வரலாறையும் நினைவுப் படுத்தினேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1948ஆம் ஆண்டில் தான் தமிழ்த்துறை ஏற்படுத்தப்பட்டது என் பதைக் குறிப்பிட்டு அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஏற்பாடு செய்தவர் லாசரஸ் எனும் கிறித்துவப் பாதிரியாரே தவிர தமிழ் வளர்க்க என்று ஏற்படுத் தப்பட்ட திருப்பனந்தாள், திருவாவடு துறை, தருமபுரி, திருவண்ணாமலை, மதுரை சைவ சமய மடங்களல்ல எனும் உண்மையை எடுத்துக்கூறினேன். எல்லீஸ், கால்டுவெல், ஹீராஸ் போன்ற அய்ரோப்பிய அறிஞர்களின் தொண்டி னால் தமிழும், திராவிட உணர்வும் தோன்றி தந்தை பெரியாரால் வளர்க்கப் பட்டு திராவிடர் இயக்கங்களால் கட்டிக் காக்கப்பட்டு வரும் நிலையையும் விளக் கினேன். போலித் தமிழ்த் தேசியங்களால் பேசப்படும் பொய்மைகளைத் தமிழ் பேசும் திராவிடர்கள் சரியாகவே விளங் கிக் கொண்டனர்.
மறுநாள் சுமார் நூறுபேர் அமரக்கூடிய மண்டபத்தில் பகுத்தறிவு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 பேருக்கு மேல் பயிற்சியாளராகப் பதிவு செய்திருந்தனர். காலை 11.30 மணிக்கு பட்டறை தொடங் கியது. இப்பட்டறையின் அவசியம் குறித்து பெரு. அ.தமிழ்மணி சுருக்கமாக உரை நிகழ்த்தினார். உலக உற்பத்தி, உயிர்களின் தோற்றம் பற்றி வகுப்புகள் நடத்தினேன். கடவுள் என்ற கற்பனைக்கு வேலையேயில்லை என்பதை அறிவியல் அறிவும், ஆய்வு முடிவுகளும் நிரூபித்து வருவதை எடுத்துரைத்தேன். சோதிடம் பற்றிய பொய்யுரைகளை எடுத்துக் காட்டு களுடன் மறுத்தேன்.
இராமாயணம், மகாபாரதம் எனும் இந்து இதிகாசங்களின் பொய்ம்மைத் தன்மையை விளக்கிக் கூறினேன். உயிர் களின் தோற்றம், வளர்ச்சி, மாறுதல்கள் பற்றிய சார்லஸ் டார்வினின் ஆய்வு முடிவுகளின் மெய்த்தன்மையை விரிவாகக் கூறினேன். டைவர்ஜன்ஸ் (விலகல்) கோட்பாடு என்பதன் அடிப் படையில்  குரங்கு விலகியதால் ஏப், கொரில்லா, சிம்பன்சி, உராங் ஊடான்,  கிப்பன் எனும் மனிதக் குரங்குகள் படிப் படியாக உருவாகி, உருமாறி, மனிதனாக வளர்ந்த விதம் பற்றி விளக்கினேன். நியான்டர்தால் மனிதனும், ஹோமியோ, சேப்பியன் மனிதனும் 30-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தே வாழ்ந்து வந்ததையும், நியான்டர்தால் மனிதனின் அழிவுக்குப் பின் தற்போதைய மனிதன் உருமலர்ச்சி பெற்று வளர்ந்த விதம் குறித்தும் விளக்கினேன். ஆப்ரிக்க நாடுகளில் தோன்றியது முதல் மனிதன் அல்ல; முதல் தாய், அந்த ஒரு தாயின் மக்கள் தான் உலகில் உள்ளோர். முதல் தாயின் பயணம்,  மனிதர்களின் பயணம், அவரவர் வாழ்ந்த பகுதிகளின் தட்ப வெப்ப நிலைகட்கு ஏற்ப தோலின் நிறம் ஏற்பட்டவை குறித்தெல்லாம் விளக்க மளித்தேன்.
மதிய உணவுக்கு அரைமணி நேரம் இடைவெளி தவிர, மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெற்றன. பங்கு பெற் றோரில் இருவர் ஆர்வமுடன் அய்யங் களைக் கேட்டு விளக்கம் பெற்றுத் தெளிவு பெற்றனர்.
4.7.2017 அன்று கோலாலம்பூரில் விமானம் ஏறி அன்றிரவு 11 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம். பயனுள்ள பயணம் - கொள்கை விளக்கப் பயணம் - 1929, 1954 ஆகிய ஆண்டுகளில் தந்தை பெரியாரின் பிரச்சாரப் பயணங்களுக் கடுத்து, கழகத்தலைவர் ஆசிரியர் அவர் களின் சுற்றுப்பயணப் பிரச்சாரத்துக்குப் பிறகு, வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது நல் வாய்ப்பே! மகிழ்ச்சியும், நிறைவும் தந்த வாய்ப்பாக அது அமைந்தது!
-விடுதலை,29.7.17

புதன், 26 ஜூலை, 2017

ஜெர்மனியில் தந்தை பெரியார்

இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் சென்ற ஜெர்மனிக்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. #வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ் நாட்டிலிருந்து 41 பேராளர்கள் வரும் 26ஆம் தேதி பிற்பகல் புறப்படுகின்றனர்.

எதற்காக? ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெறும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் செல்லுகின்றனர்.

எதற்காக? மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று 60 ஆண்டுகளுக்கு முன் பாடினாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அந்தத் தலைவரின் தத்துவத்தை மய்யப் பொருளாக வைத்து நடத்தப்பட உள்ள மாநாட்டில் பங்கு கொள்ளத்தான் செல்லு கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழ்நாடு, பிரான்சு முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்க இருக் கின்றனர். தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத் தத்துவம் குறித்து ஆய்வுக் கட் டுரைகளை அளிக்க இருக்கின்றனர்.(Inter National Conference on Periyar Self Respect Movement)

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் ஒரு முறை சொன்னார். “திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?” என்று சொன்னார்.

நான்காம் வகுப்புப் படித்த தலைவரின் கொள்கைச் சித்தாந்தங்களை நாடுகளைத் தாண்டிப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar InterNational) அமெரிக் காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (13.11.1994).

இன்று அமெரிக்கா, லண்டன், பிரான்சு, மியான்மா, சிங்கப்பூர், துபாய், குவைத், ஜெர்மனி முதலிய நாடுகளில் கிளை பரப்பி அய்யாவின் கருத்துக்களைப் பரப்பும் அரும் பணியில், பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெர்மனியில் 2014 ஜூன் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவராக கவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2014 ஜூன் மாதம் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவ லரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சென்றார்.

ஜூன் 3ஆம் தேதி மாலை “திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைத் தத்துவமும்” எனும் தலைப்பில் அரிய உரையாற்றினார்.

மறுநாள் கொலோன் பல்கலைக் கழகத்தில் (4.6.2014) “இந்தி எதிர்ப்பு இயக்கம்” எனும் தலைப்பில் மாணவர் களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் “பவர் பாய்ண்ட்” வழி ஆய்வுரை வழங்கினார்.

ஓர் இணையருக்குச் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அங்கு சென்றபோது தான் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளை தொடங்கப் பட்டது.

இந்தப் பெரியார் பன்னாட்டு  அமைப்பு தான் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான வீரமணி விருதை” வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 17 பேருக்கு அளிக் கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மாநாட்டிலும் இறுதி நாளன்று (29.7.2017) மைக்கேல் செல்வநாயகம் (துணைமேயர், கிராட்டன் மாநகராட்சி இங்கிலாந்து) அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

(விரிவான நிகழ்ச்சி நிரல் 13ஆம் பக்கத்தில் காண்க!)

50 ஆண்டுகளுக்கு முன் இதே ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன்; மாநாட்டின் ஓய்வு நேர இடைவேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர்களுடன் உரையாடினார்.

அப்பொழுது வால்டர் ரூபன் ஒரு வினாவை முன் வைத்தார்.

“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத  மகத்தான மானுட ஆளுமையாளர் யார்? (Who is the Unpreceded  Human Personality of the Present India?)என்பதுதான் அந்த அர்த்தமிக்க வினா.

காந்தி என்றனர், நேரு என்றனர். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை அந்தப் பேரறிஞர்.

“நீங்களே சொல்லி விடுங்கள்” என்றனர் அந்த உரையாடலிலே பங்கு கொண்ட இந்திய அறிஞர்ப் பெரு மக்கள்.

உலகப் பேரறிஞர் வால்டர் ரூபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்!” என்று பட்டை தீட்டிய வகையில் பதில் அளித்தார் அந்தப் பேரறிஞர்.

இந்தத் தகவலைத் தெரிவித்தவர் யார் தெரியுமா? சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளரும், பிரபல எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள்.

தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பது உலகளாவிய “பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்ற கருப்பொருளைக் கொண்ட தாகும்.

2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மய்ய மாநாட்டுக்குச் செல்லுகிறோம் என்றால் இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அந்நாட்டுக்குச் சென்றதை எண்ணிப் பார்க்கிறோம். 19.5.1932 முதல் 14.6.1932 வரை 27 நாள்கள் ஜெர்மனியிலே எஸ். இராமநாதன், இராமு ஆகியோர்களுடன் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

தந்தை பெரியார் சென்ற அம்மண்ணுக்கு தமிழர் தலைவர் தலைமையில் 41 இருபால் தோழர்களும் பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதே!

பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் தந்தை பெரியார்தம் சுயமரியாதை  இயக்கத் தத்துவத்தின் மீது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.

பெரியார் காணும் சுயமரியாதை எத்த கையது என்பதை படம்பிடிக்கக் காத்திருக் கின்றனர். தந்தை பெரியார் பார்வையில் உலக விழிப்புக்கும், மாற்றத்திற்குமான பல அரிய சிந்தனை வித்துகளை எதிர்ப் பார்க்கலாம்.

26 ஜூலையில் புறப்படும் தோழர்கள் சில அய்ரோப்பிய நாடுகளிலும் (சுவிட்சர் லாந்து, இத்தாலி, பாரீஸ்) சுற்றுப்பயணம் சென்று  ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் சென்னை திரும்புவர்.

தந்தை பெரியார்பற்றி பழி தூற்றும் தக்கைகளின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்து புத்தி தெளிவு கொண்டால்  மகிழ்ச்சியே!
பார்ப்பனர்கள் பதைப்பது புரிகிறது - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஆக்கிக் கொண்டு, அவர்களின் தொங்கு சதைகளாக இருக்கின்றவர்கள் தான் திருந்த வேண்டும். எங்கே பார்ப்போம்!

-கவிஞர் கலி. பூங்குன்றன்......