பகுத்தறிவு உலகு

வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஆந்திர மாநிலம் - விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் தமிழர் தலைவர்


   February 13, 2023 • Viduthalai

மண்டல் சிலையினை திறந்திட ஆந்திர மாநிலம் குண்டூருக்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்கள் சிலைத் திறப்பு மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து விஜயவாடா வழியாக சென்னை திரும்புகையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு நேற்று (12.2.2023) மாலை 6 மணி  அளவில் சென்றிருந்தார்.  நாத்திகர் மய்யத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் மற்றும் கோ. நியான்தா, மாரு - ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

மறைந்த அர்ஜுன் ராவ் மற்றும் விஜயம்  ஆகியோருக்கு இரங்கல்

நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநராக இருந்த கோ. விஜயம் அவர்கள் மற்றும் கோரா அவர்களின் மூத்த மருமகன் அர்ஜுன் ராவ் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தமிழர் தலைவர் நேரில் தெரிவித்தார். நாத்திகர் மய்யப் பொறுப்பாளர்களுடன் மய்யப் பணிகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்து அறிந்து கொண்டார். கடந்த காலத்தைப் போலவே நாத்திகர் மய்யமும், திராவிடர் கழகமும் ஒருங்கிணைந்து நாத்திக சமுதாயப் பணியில் ஈடுபட்டு வர வேண்டும். அடுத்த தலைமுறையிலும் பணி பெருகிட வேண்டும் எனும் விருப்பத்தினையும் தெரிவித்தார். தமிழர் தலைவருடன் கழகப் பொருளாளர் வீ. குமரேசன்,  வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் சென்றிருந்தனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 8:45 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நாத்திக மையம், விஜயவாடா

சமூகநீதிக்கான அடுத்த போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்!' ஆந்திர மாநிலம் - குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்

.

'
  February 13, 2023 • Viduthalai
குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்



ஆந்திர மாநிலம் - குண்டூரில் பிற்படுத்தப்பட் டோருக்கான அனைத்திந்திய ஆணையத்தின் தலைவராக இருந்து ஒன்றிய அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு பரிந்துரைத்த சமூகநீதியின் நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (12.2.2023) எழுச்சியுடன் நடைபெற்றது. மண்டல் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதிக்கான அடுத்த  போர்க் களத்தினைப் பிரகடனப் படுத்தினார்.

மண்டல் சிலைக்கு ஏற்பாடு

நாட்டிலேயே முதல் முறையாக மண்டல் அவர்களுக்கு சிலை எழுப்பிடும் பணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அமைப்பினர் கடந்த சில மாதங்களாகவே முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மண்டலுக்கு சிலை அமைத்திடும் பணி நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா விற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டல் அவர்களின் சிலையினை திறந்து வைத்திடுமாறு சமூகநீதிப் போராளி களின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிலை அமைத்திடும் குழுவினர் வேண்டிக் கொண்டனர். சிலை திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும், பல மாநிலங் களிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் தலை வர்கள், சமூகநீதி உணர்வுடன் செயல்பட்டு வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிலை திறப்பு விழா

பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (12.2.2023) குண்டூர் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் உள்ள சினி ஸ்கெயர் முனையில் மண்டல் அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. காலை 11 மணியளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக் குரலுக்கு மத்தியில் திராவிடர் கழகத் தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிகளுக்கிடையில் மண்டல் அவர்களின் சிலையினைத் திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். சிலை திறப்பு நிகழ்வில் ஆந்திர மாநில அரசின் இந்நாள் மேனாள் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் அனைத்திந்திய தலைவர்கள், குண்டூர் மாநகராட்சியின் மேயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலை திறப்பு மாநாடு

மண்டல் அவர்களின் சிலை திறப்பிற்குப் பின்னர் குண்டூர் நகரத்திலேயே  ஒரு தனியார் மைதானத்தில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புரையினை மண்டல் சிலை அமைப்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு ஆற்றினார். குழுவின் தலைவரும் ஆந்திர மாநில சட்டமன்றப் பேரவையின் ஆளும் கட்சியின் கொறடாவுமாகிய தங்கா கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.சி. தலைமை உரையினை ஆற்றினார். மாநாட்டின் முக்கிய உரையான தொடக்க உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழர் தலைவர் ஆற்றிய உரையினை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வழங்கினார்கள். (ஆசிரியர் உரை தனியே காண்க)

மாநாட்டில் முற்பகலில் உரையாற்றிய பெருமக்கள்

தமிழர் தலைவரின் தொடக்க உரையினை அடுத்து ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மேனாள் வருவாய் துறை அமைச்சரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான ரகுராமரெட்டி, அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர் கேப்டன் டாக்டர் அஜய்சிங் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள்

ஆந்திர மாநில அரசின் சமூகநலத்துறை அமைச்சர் செல்லுபோயின வேணுகோபால கிருஷ்ணா, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிடா மஸ்தான்ராவ், பி.பி. மண்டல் அவர்களின் பெயரன் பேராசிரியர் சூரஜ் மண்டல், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவருமான ஈஸ்வரய்யா மற்றும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய அமைப் பின் தலைவர்கள் பலர்  மாநாட்டின் முக்கிய விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சமூகநீதி உறுதிமொழி

மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்களும், கலந்துகொண்ட பல தரப்பட்ட மக்களும், சமூகநீதிப் பயணத்தினை முன்னெடுத்துச் செல்லுவதற்கான உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழியினை மாநாட்டு ஏற்பட்டாளர்கள் கூற, மற்ற அனைவரும் எழுச்சியுடன் உறுதிமொழியினை மொழிந்தது கொள்கைப் பூர்வ காட்சியாக இருந்தது.

தமிழர் தலைவர் எழுதிய மண்டல் பற்றிய நூல்

மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூல் 'Mandal Commission Report & Implementation' (மண்டல் குழு அறிக்கையும் நடைமுறையும்) வழங்கப்பட்டது. உடன் 'The Modern Rationalist'ஆங்கில மாத இதழும் (பிப்ரவரி 2023) வழங்கப்பட்டது.

மாநாட்டிற்கு வந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு

மண்டல் சிலையினை திறந்து வைத்து, மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய தமிழர் தலைவருக்கு விழாக் குழுவின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 12.2.2023 அன்று அதிகாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் விஜயவாடா வந்த தமிழர் தலைவரை சிலை அமைப்புக் குழுவினர் வரவேற்றனர். சிலை திறப்பிற்குப் பின்னர் நடந்த மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றிய பின்னர் ஆசிரியருக்குச் சிறப்புச் செய்து, நினைவுப் பரிசினை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

மண்டல் சிலை திறப்பிற்கு தமிழர் தலைவருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி சென்றிருந்தனர். மேலும் சிலை திறப்பு நிகழ்விலும், மாநாட்டிலும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் - தாம்பரம் முத்தையன், கோ. நாத்திகன், மோகன்ராஜ், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மா. குணசேகரன், சீ. லட்சுமிபதி, மாடம்பாக்கம் அ. கருப்பையா கொடுங்கையூர் தங்கமணி - தனலட்சுமி இணையர் மற்றும் தோழர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்


இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 8:43 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், குண்டூர், மண்டல்

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023
   February 12, 2023 • Viduthalai

ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி - தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநில மேனாள் அமைச்சர்கள், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். விழா அமைப்புக் குழுவின் தலைவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் கொறடா தங்கா.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவர்களும், செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு அவர்களும், குண்டூர் மாநகராட்சி மேயர், அனைத்துக் கட்சி சமூகநீதி ஆர்வலர்களும் உடனிருந்தனர். பலத்த கரவொலிக்கிடையே  தமிழர் தலைவர் அவர்களால் சிலை திறக்கப்பட்டது (12.2.2023).

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு
  February 12, 2023 • Viduthalai

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக அயலுறவு அணிச் செயலாளர் கோ. கருணாநிதி.

குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
  February 12, 2023 • Viduthalai
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023
  .பி.மண்டல் சிலைக்குத் தமிழர் தலைவர் - எழுச்சித் தமிழர் மரியாதை
  February 13, 2023 • Viduthalai

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 8:38 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குண்டூர், சிலை திறப்பு, மண்டல்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

இங்கர்சால்

இங்கர்சால்
சிலை
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்சுலாந்து
  • அய்ரோப்பா
  • அரியான் செரின்
  • அலகாபாத்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆந்திரா
  • ஆவடி
  • ஆஸ்த்திரேலியா
  • இங்கர்சால்
  • இயேசு
  • இறப்பு
  • உலக நாத்திகர்
  • உலப்பகுத்தறிவாளர்
  • உறுப்பினர் சேர்க்கை
  • எடைக்கு எடை
  • எபிகூரஸ்
  • எர்னஸ்ட் எம்மிங்வே
  • எழுத்தாளர்
  • ஏரியன் ஷெரீன்
  • ஏரியன் ஸெரீன்
  • ஒடிசா
  • ஓப்ரா வின்ஃபிரி
  • ஓபரா
  • ஓபாரா
  • கடவுள் மறுப்பு
  • கர்நாடகம்
  • கருத்தரங்கம்
  • கலந்துரையாடல்
  • கலிபோர்னியா
  • கலைஞர்
  • கவிஞர் ஷெல்லி
  • கவிதா
  • கனடா
  • காரல் மார்க்ஸ்
  • கி.வீரமணி
  • கியூபா
  • கிரேக் எப்ஸ்டீன்
  • கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
  • குண்டூர்
  • குவைத்
  • கேத்தரின் ஹேப்பர்ன்
  • கேரளா
  • கொலை
  • கொலைவெறி
  • கோ.கருணாநிதி
  • சங்கமம்
  • சமூகநீதி
  • சல்மான் ருஷ்டி
  • சார்லஸ் பிராட்லா
  • சித்தராமையா
  • சிலை திறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சுடுகாடு
  • சுபவீ
  • சுவிட்சர்லாந்து
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • செஞ்சி
  • சென்னை
  • சேகுவேரா
  • டத்தோ விருது
  • தஞ்சை
  • தாம்பரம்
  • தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson)
  • தாமஸ் அய்க்கன் ஹெட்
  • தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி
  • திராவிடர் க
  • திருச்சி
  • திருமணம்
  • திருமா
  • தில்லி
  • தீர்மானம்
  • தெலங்கானா
  • தெலுங்கானா
  • தென்சென்னை
  • நன்கொடை
  • நாணயம்
  • நாத்திக சங்கம்
  • நாத்திக நாடுகள்
  • நாத்திக மையம்
  • நாத்திகர்
  • நிகழ்ச்சிகள்
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நூல்கள்
  • நூல்வெளியீடு
  • ப.க.
  • ப.க. பயிற்சி பட்டறை
  • ப.க.கலந்துரையாடல்
  • ப.க.மாநாடு
  • பக
  • பக சின்னம்
  • பக பேரணி
  • பக மாநாடு
  • பகுத்தறிவாளர்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு
  • பஞ்சாப்
  • படுகொலை
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சி வகுப்பு
  • பரிசளிப்பு
  • பல்கலைக்கழகம்
  • பள்ளி
  • பன்னாட்டு
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னாட்டு மையம்
  • பன்னாட்டு விருது
  • பார்ப்பனர்
  • பிராட்லா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • புதிய பொறுப்பாளர்
  • புதுதில்லி
  • புரட்சிக்கவிஞர்
  • புரூஸ் வில்லிஸ்
  • பெங்களூரு
  • பெண்
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மையம்
  • பெரியாரியல்
  • பென் & டெல்லர்
  • பொறுப்பாளர்
  • மக்கள் தொகை
  • மண்டல்
  • மத்திய பிரதேசம்
  • மத நம்பிக்கை
  • மதச்சார்பற்ற சட்டம்
  • மதம்
  • மதவெறி
  • மராட்டியம்
  • மலேசியா
  • மறுப்பு
  • மறைநிலவு
  • மறைவு
  • மாநாடு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மும்பை
  • ராண்டி
  • ரிச்சர்டு டாக்கின்ஸ்
  • லெவிஃபிராகல்
  • வட அமெரிக்கா
  • விஞ்ஞானி
  • விருது
  • விருதுநகர்
  • விழா
  • விஜய்வாடா
  • விஜயம்
  • விஜயவாடா
  • வைக்கம்
  • ஜோசப் இடமருகு
  • ஹரியானா
  • DRAVIDIAN STOCK

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • உலகளவில் நாத்திகர்கள்
    உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது. globalnation.inquirer.net இணையத்தில் (9.5....
  • வறுமையில் வாடிய ஸ்டாலின்!
    சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ்...
  • பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்
    தஞ்சாவூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பட்டறையில் கீழ்கண்ட பொறுப்பாளர்களை பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவ...
  • இங்கர்சால் பொன்மொழிகள்
    உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம் உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில். ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூ...
  • இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899)
    பகுத்தறிவு உலகின் ஒப்பற்ற மாமேதை இராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833 - 1899) வீ. குமரேசன் உலகில் உருவாகிய உயிரினங் களுள் மனித இனத...
  • நாத்திக நன்னெறியின் அழைப்பு!
    "மதம், மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கி...
  • மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)
    சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்த...
  • இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை
    திராவிடர் கழகத் தலைவரின் கருத்து மின்சாரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதி...
  • நவம்பர் 16 இல் விருதுநகரில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா (50 ஆண்டு) மாபெரும் மாநாடு!
    தமிழர் தலைவர் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது சென்னை, 17.8.2019 * பெரியார் 1000 வினா - விடை...
  • கருத்தரங்கம் * கவியரங்கம் * பெரியார் விருதளிப்பு சிங்கப்பூரில் பெண்களே நடத்திய பெரியார் விழா
    சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கா.தனலட்சுமி பங்கேற்று கருத்துரை யாரையும் நெருங்கவிடாதபடி தலைமைக்கான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொள்பவர் பெ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2023 (13)
    • ►  மார்ச் (9)
    • ▼  பிப்ரவரி (3)
      • ஆந்திர மாநிலம் - விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் தமி...
      • சமூகநீதிக்கான அடுத்த போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்...
      • ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு
    • ►  ஜனவரி (1)
  • ►  2022 (31)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2021 (40)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (20)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (13)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (7)
  • ►  2019 (38)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (50)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (3)
    • ►  ஜனவரி (7)
  • ►  2017 (48)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2016 (19)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (55)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.