வெள்ளி, 25 அக்டோபர், 2019

மனிதநேயத்தின் தொடக்க நிலை சுயமரியாதையே!

(பன்னாட்டு மனித நேய

அமைப்பின் தலைவர், நார்வே)

அன்றைக்கு மெட்ராஸ் என அழைக்கப் பெற்ற சென்னைக்குச் சரியாகப் பத்தாண்டு களுக்கு முன்பு முதன்முறையாகச் சென்றேன். பெரியார் இயக்கம் அல்லது சுயமரியாதை இயக்கம் என அழைக்கப்படும் மனிதநேய அமைப்பைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்ட டிருந்தேன். பன்னாட்டு மனிதநேய - அறநெறி ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவன் என்ற வகையில், உலகெங்கும் உள்ள ஒத்த மனத் தினரைக் கொண்ட அமைப்பு களுடன் தொடர்பு கொண்டு, எங்களுடைய ஒன்றியத்தில் சேர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது.

சென்னையில் நான் எடுத் துக்கொண்ட முயற்சிகளின் விளைவைக் குறித்துப் பெரு மைப்படுகிறேன். சுயமரியா தைக்காரர்கள் பன்னாட்டு மனித நேயக் குடும்பத்தின் உறுப் பினர் ஆயினர். இந்த உலக ஒன்றியத்தில் சேர்ந்தவர்களில், சுயமரியாதையினரின் அமைப்புத்தான் மிகப் பெரியது ஆகும். புவிக் கோளத்தின் அனைத்துக் கண்டங்களிலும் - இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகளின் சார்பிலும், லண்டன் தலைமை இடத்தில் உள்ள இப்பன்னாட்டு அமைப்பின் பொதுச்செயலாளர் பாபு கோகினேனி (அவரும் ஓர் இந்தியர்) அவர்களின் சார்பிலும் இங்கு கூடியுள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரி வித்துக்கொள்கிறேன்.

மேற்கு நாடுகளில் உள்ள மனித நேய அமைப்புகள் பெரியவையென்றும், பொதுவாழ்வில் முக்கிபயப் பங்காற்றுகின் றன என்றும் நீங்கள் நினைக்கலாம். பெர்ட்ரண்ட்ரஸ்ஸல், கார்ல்சாகன் ஆகியோரின் நூல்களை நீங்கள் கற்றிருக்கலாம்.

அந்த அடிப்படையில் மேற்கு நாடுகளில் உள்ள நவீன, வளர்ந்த சமுதாய மக்கள் மனித நேயம், பகுத்தறிவு ஆகியவற்றை முக்கிய மானவை எனக் கருதிப் போற்றுவதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், நடப்பு அதற்கு மாறாக இருக்கிறது.  கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் பொது வுடைமை ஆட்சி வீழ்ந்த பின்பு, அங்கு ரோமன் - கத் தோலிக்க மதமும், கீழைக் கிறித்துவ (ஆர் தொடாக்ஸ்) மதமும் அங்கு நிலை கொண்டுள் ளன. அய்க்கிய மாநில அமெரிக்காவின் குடிய ரசுத் தலைவர்கள் தவறாமல் வழிபாட்டுக் கட்டடங்களுக்குச் செல்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை காலையில் விவிலிய நூலைத் தங் களுடைய கைகளில் ஏந்திச் செல்வது தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதில் கவன மாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான மேற்கு நாடு களில் ஒருபகுத்தறிவாளரோ, சமயச் சார்பற்றவரோ, வெளிப்படையான மனித நேயக்காரரோ, அரசியல் பதவிகளில் தலையாய ஓர் இடத் திற்கு வருவதற்குக் கடுமையான சிக்கல்களைச் சந்திக்கவேண்டி யிருக்கிறது.  இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த எனது சென்னைப் பயணம் என் வாழ்வில் மிகப்பெரும் வியப்பை அளிப்பதாக அமைந்தது. விமான நிலையத்தில் இருந்து டேக்சி ஒன்றில் சென்று கொண்டிருந்தேன்; அது பெரியார் நெடுஞ் சாலையின் வழியே சென்ற பொழுது, அப் பெயருக்கும் அங்கு வாழ்ந்த மனித நேய ருக்கும் தொடர்பு இருக்க முடியுமா என எண்ணி’ னேன். ஆனால், சிறிது நேரத்தில் ஒரு சிலையைக் கடந்து சென்றோம்; அது பெரி யாரின் பெயரைத் தாங்கியிருந்ததையும் படித் தேன். அதை அடுத்து பகுத்தறிவின் “சுவர்க் கம்” எனத் தகும் இடத்தை அடைந்து விட் டேனோ எனச் சில நிமிடங்கள் கழித்து என்னை நானே கேட்டுக் கொண்டேன்,

கல்வி, சுகாதாரம், பகுத் தறிவுப் பண்பாட்டு வளர்ப்பு ஆகியவற்றிற்காக, ஒரு பகுத்தறிவு நாள் இதழ் உட்பட, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தமிழ்நாட்டின் சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதைக் கண் டேன். - இஃது உலகிலேயே எங்கும் கேள்விப்படாத. ஒன்று. உலகெங்கும் உள்ள மனித நேய அமைப்புகளின் பன்னாட்டுத் தலைவனாக இருக்கிறேன். இருப்பினும் ஒன்றைப்பற்றி உறுதியாகச் சொல்லமுடியும். பெரியாரின் படம் அஞ்சல் தலையில் இடம் பெற்றது போல் என்னுடையது என்றுமே இடம்பெறாது.

1990-இல் சென்னை சென்றபொழுது, தலைவர் திரு. வீரமணி அவர்களை அவரு டைய இல்லத்தில் கண்டேன். உலகெங்கும் நன்கு விற்பனையாகும் நூல் ஒன்று, அங்கி ருந்த சிறிய மேசையின் மீது இருந்தது. வி.எஸ். நைபால் எழுதிய அப்புத்தகத்திற்கு, “இந்தியா ‘- இப்பொழுதுள்ள பல்லாயிரம் கிளர்சிக்கள்”(India a million mutinies now) என்பது பெயர். .

அப்புத்தகத்தின் 70 பக்கங்கள் பெரியா ரைப் பற்றியும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் இருந்ததால் திரு. வீரமணி அதை என்னிடம் ஆர்வத்துடன் காட்டினார்.

அந்நூல் முழுவதும் அடிக்கோடுகள் இட்டு, அவர் படித்திருந்தார். அந்தப் படியையே எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இப் பொழுது என் கையில் உள்ள அந்த ஏட்டின் படியை கடந்த பத்து ஆண்டுகளாக என் நண்பர் களுக்குப் பெருமையுடன் காட்டியிருக்கிறேன். திரு வீரமணி அவர்களின் அடிக்கோடுகளைக் காண்பித்து, இந்தியாவில் மனித நேய இயக்கம் சாதித் துள்ளவைகளைக் காணுங்கள் எனச் சொல்லுவேன்.

இந்நூலின் பக்கங்களைப் பலமுறை புரட்டியுள்ளேன். இதை இன்று திரு. வீரமணி அவர் க்ளுக்குத் திருப்பித்தர விரும்புகிறேன்.

புதிய டில்லி பெரியார் மய்யத்தில் உள்ள நூலகத்தில் இந்தப் படியை வைக்க வேண்டும். டில்லியில் உள்ள புத்தகக் கடைகளில் இந் நூலின் புதிய படிகளை நீங்கள் பெறமுடியாது என அய்யப்பட்டு இந்த நூலை இங்கு வைக்க வேண்டும் என நான் கூறவில்லை. இதில் திரு. வீரமணி அவர்களின் சிந்தனையைப் புலப் படுத்தும் அடிக்கோடுகள் இருப்பதாலும், சுயமரியாதை இயக்கத்துடன் பன்னாட்டு மனித நேய அமைப்பு முதன் முதலில் தொடர்பு கொண்டதை இது அடையாளப்படுத்துவதாலும், இந்தப்படி இங்குள்ள நூலகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுயமரியாதை இயக்கம் தனது செயல் களத்தைச் சென்னையிலிருந்து டில்லிக்கு விரிவுபடுத்துகிறது. அதன் பொருள் என்ன? சுயமரியாதைக்கான - அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான  போராட்டம் தென்னிந்தியாவிற்கு மட்டும் தேவையான ஒன்று அல்ல; நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள - மனிதா பிமானிகள் அனைவருக்கும் இது ஒரு தேவையான பொறுப்பாகும்.  அதே நேரத்தில் சுயமரி யாதை இயக்கத்தின் பன்னாட்டுத் தாக்கத்திற்கு அது வலிமை சேர்க்கிறது.  முக்கியமான அரசியல் அரங்கங்கள், அயல்நாட்டுத் தூதுக்குழுக்கள், தகவல் தொடர்புச் சாதனங்கள் முதலியவற் றிற்கு நெருக்கமாகப் பெரியார் மய்யம் அமைந்துள்ளது.

பல நாடுகளிலும் உள்ள குழுக்களுடனும், லண்டனில் உள்ள பன்னாட்டு மனித நேய அமைப்பின் தலைமை அலுவலகத்துடனும் நீங்கள் புதிய பாலங் களை அமைத்துக்கொள் ளலாம். எல்லாக் கண்டங்களிலும் சமூகநீதிக் கான போராட்டத்தை நீங்கள் நடத்தவேண்டும். என்பது எமது விருப்பம் ஆகும்.

இந்தியாவைப் பொறுத் தவரை, இந்துச் சமுதாய அமைப்பால் துயரப்படுபவர்கள் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஆவர்; அவர்களுக்காக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

அய்க்கிய நாடுகளின் அவையில் எமது பன்னாட்டு மனிதநேய அமைப்பிற்கு, அரசு சாராத அமைப்பிற்குரிய ஆலோசனை கூறும் தகுதி இருக்கிறது. -

அதைப் பயன்படுத்தி, மற்ற குழுக்களுடன், இணைந்து பணியாற்றி, எமது லண்டன், அலுவலகம் ஒரு காரியத்தைச் செய்தது.. அய்க்கிய நாடுகள் (யு.என்.) அவையில் ‘மனித உரிமைகளுக்கான உயர் ஆணையம் திருமதி. மேரி ராபின்சன் அவர்களிடம் மன்றாடி, ஒடுக்கப்பட்டோரின் (தலித்துகளின், பிரச்சினையை, அடுத்து நிகழ இருக்கும் உலக மாநாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகச் சேர்க்கக் செய் துள்ளோம்.

இன ஒதுக்கல், அயல் இனவெறுப்பு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சகிப்புத் தன்மை இன்மை ஆகியனவற்றை எதிர்த்து மேற்படி மாநாடு நடக்கவிருக்கிறது. திருமதி மேல் ராபின்சன் எமது கோரிக்கையை ஏற்று, அதை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தலித்துகள் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து அரசு சாராத அமைப்பும் (என்.ஜி.ஓ) ஒத்த வகையில் அமைந்த ஒரு கருத்தரங்கை தென் ஆஃப்பிரிக்காவில் நடத்த விருக்கின்றன.

நீங்கள் அதில் பங்கேற்பீர்கள் என நம்புகிறோம்.

சுயமரியாதை இயக்கம், பண்பாட்டுச் சமு தாய வாழ்வில் பல துறைகளில் செயலாற்றி வருவதை உணர்கிறேன். இவ்வமைப்பு எவ் வகையில் ஒரு மனிதநேய அமைப்பாக இருக்கிறது என கேட்கலாம். சுயமரியாதை இயக்கத்திற்கும் பன்னாட்டு மனிதநேய அமைப்பிற்கும் இடையே மூன்று பொது நோக்கங்கள் உண்டு. முதல் பொது கொள்கை பகுத்தறிவு நெறியாகும். நடை முறையில் மூட நம்பிக்கை, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஆகியவற்றை விலக்கி பகுத்தறிவு, கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம்.

புதிய கால இயக்கம் எனப்படுவது, சமீப காலத்தில், அறிவுக்குப் புறம்பான உணர்வு. களைப் பெரிதுபடுத்துகிறது. இத்தகைய இருளைப் பரப்பும் சக்திகளை எதிர்த்து, எல்லாக் காலத்திலும் கடமை ஆற்ற வேண்டிய பொறுப்பு மேலைநாடுகளிலும் கீழை நாடுகளி ‘லும் உள்ள மனித நேயர்களுக்கு உண்டு.

இரண்டாவதாக, நாம் சமத்துவ நிலைக்காகப் பொதுவாக உழைக்கிறோம். ஆண் - பெண் பல்வேறு இனங்கள் வெவ்வேறு பண் பாட்டாளர்கள், தனி நபர்கள் இடையே சமத் துவம் நிலவவேண்டும். பெரியார் இயக்கத்தவர்கள், இந்த இலக்கை எட்டுவதற்கு, இந்தியா வின் பெரும் பகுதிகளில் ஆற்றியுள்ள சேவை) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வகையில், பன்னாட்டளவில் மனித நேயர்கள், மதத் தலைவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பல நூற் றாண்டுகளாக இந் நிலை தொடர்கிறது.

மூன்றாவது பொது நோக்கு, தனிமனித மாண்பு, சுயமரியாதை எனும் சொல்லால் அதைப் பெரியார் சிறப்பாக வெளிப்படுத் தியுள்ளார். மனித நேயத்தின் மய்யக் கருத்து இதுவே. நீங்களும் நானும் நம்மை மதிக்கிறோம். கடவுள் என்று சொல்லப்படும் ஆதிக் கத்தையோ ஆட்சியாளரின் ஆதிக்கத்தையோ ஏற்க மறுக்கிறோம். ஒரு நபர் இன்னொரு வரைவிட மதிப்பில் குறைந்தவர் என்பதை நான் ஒப்புவதில்லை.

பெரியார் சொல்லுகிறார்: “தன்னிடம் உள்ள தாழ்மை உணர்வை ஒவ்வொரு மனிதரும் தானே போக்கிக்கொள்ள வேண்டும். மற்றவரை விடப் பிறப்பிலே தாழ்ந்தவர் என்ற உணர்வைப் போக்கி, தன் நம்பிக்கையையும் சுயமரி யாதையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

பெரியாரின் இந்தக் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பட்டதாகும். மனித நேயத்தின் தொடக்க நிலையாகச் சுயமரியாதை உணர் வைத் தவிர வேறொன்றை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. மாந்தர்களுக்கான மதிப்பு வீட்டிலே தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதரிடத்தும் இருந்து தொடங்குகிறது.

இந்த மூன்று கொள்’ கைகளும், உலக மனித நேய ஒன்றியத்தில் இணைந்துள்ள பிற இந்திய அமைப்புகளுக்கும் பொதுவான தாகும். அக்குழுக்களின் தலைவர்களில் சிலர் இங்கு வந்திருப்பதைக் காண மகிழ்கிறேன்.

நைபால் எழுதிய புகழ்வாய்ந்த நூலின் 237ஆம் பக்கத்தில் உள்ளதைப் படித்து என்னு டைய உரையை முடிக்க விரும்புகிறேன். அவருடைய சொற்கள் என்னுடைய கருத்தை யும் பிரதிபலிக்கின்றன.

“சென்னைக்குச் செல்லும்வரை பெரியார் பெயரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருந்தேன். திரு. வீரமணி அவர் களைப்பற்றி எனக்கு எது வும் தெரியாது. ஆனால், அவர் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பெரும் புரட்சியின் மய்யத்தில் இருந்திருக் கிறார். சுதந்திரம் இந்தியாவின் பொருளாதார அறிவு மேம்பாட்டுடன் இந்தப் புரட்சி ஒரு சிறிய போரின் இயல்பைப் பெற்றிருக்கிறது. இது வரை திரு. வீரமணி அவர்கள் வெற்றிப் பாதை யில் செல்லுகின்றவராகவே இருக்கிறார்.”

நைபாலின் மேற்படிக் கருத்துடன் எனது கருத்தையும் சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன். சமூக நீதிக்கான போர் முற்றுப் பெறவில்லை. மனித மாண்பு, உரிமை, சமத்துவம், சகோதரத் துவம் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு மனித நேயக்காரரும் உலகின் ஒவ்வொரு பகுதி யிலும் இன்னும் போராட வேண்டியிருக்கிறது.

இழிவு, அடக்குமுறை, மனிதனை மனிதன் சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து உலகளாவிய வகையில் நடக்கும் போராட்டத்திற்குப் பெரி யார் மய்யம் ஒரு வலிய அரண் ஆகும். இந்தியாவிலுள்ள சுயமரியாதைக் காரர்களும், திரு. வீரமணி அவர்களும் இன்னும் வெற்றிப்பாதை யில்தான் பயணம் செய்கிறார்கள்.

மனித நேயத்தின் கோட்டையாகத் திகழும் இந்தப் பெரியார் மய்யத்தைத் திறப்பதில் மகிழ்கிறேன்; அதனால் பெருமை அடைகிறேன்.

- இவ்வாறு லெவில் பிராகல் உரையாற் றினார்.

 - விடுதலை ஞாயிறு மலர், 19.10.19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாபிரிஸ்பென், அக்.4 ஆஸ்திரேலியா வில் 29.9.2019 அன்று தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா எழுச்சி யுடன் கொண்டாடப்பட்டது.

விழாவில் பத்மாலட்சுமண் தொகுத்து வழங்கினார்.  தமிழர்களின் முன்னேற்றத் துக்காக பாடுபட்ட தந்தை பெரியாருக்கு நன்றி காட்டும் விழாவாக பெரியார் 141ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்ப தைக் குறிப்பிட்டு முகுந்தராஜ் அனைவரையும் வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியார் ஆற்றிய பகுத்தறிவு, அரசியல், சமூக நீதிப் பணி களை இருட்டடிப்பு செய்து, வதந் திகள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை விளக்கி பல்வேறு வரலாற்று உண்மைத் தகவல்களைக் கொண்ட காணொலி (விகடன் தொலைக்காட்சி தயாரித்தளித்த) காட்சிப்பதிவை லெனின் திரையிட்டு விளக்க உரையாற்றினார். கவிஞர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா சிறப்பு விருந்தினராக விழாவில் இணையம் வாயிலாக உரையாற்றினார்.

இணைய வழி உரையாடலில் சிறப்பு விருந்தினராக ராஜாத்தி சல்மா இணைந்து பெரியாரும், பெண்ணியமும் தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் பார்வை யாளர் வரிசையிலிருந்து ஜான்சி ராணி என்பவர் தம்முடைய கருத்துகளைப் பகிர்ந்து கொ ண்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடங்கப்பட்டு தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

ஆஸ்திரேலியா பிரிஸ்பெனில் 29.9.2019 அன்று நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழாவில் குழந்தைகளுடன் தமிழ்க் குடும்பங்கள், நட்புரிமைகொண்ட அம்பேத்கர் சிந்தனையாளர்கள், குயின்ஸ் லாந்து தமிழ் மன்றம், தமிழ் ஒலி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் விழாவில் பலரும் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 4. 10 .19