ஞாயிறு, 24 ஜூலை, 2022

மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ச.த. அண்ணாமலை 'டத்தோ' விருது பெற்றார்


கோலாலம்பூர், ஜூலை 23 மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர்  ச.த. அண்ணா மலை அவர்கள்; பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோசிறீ உத்தாமா அமாட் ஃபூசி அப்துல் ரசாக்கின் 73ஆம் அகவை நாளில், உயரிய டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து மலேசிய திராவிடர் கழக தோழர் இரெசு. முத்தையா தெரிவித்துள்ளதாவது:

மலேசிய திராவிடர் கழக வரலாற்றில் 'டத்தோ' விருது பெறும் முதல் தேசியத் தலைவர் என்ற பெருமை மதிப்புமிகு ச.த.அண்ணாமலையையே சாரும்.

இளவயது முதலாக, திராவிடர் கழகத்தில் தன்னை ஒருவராக இணைத்துக் கொண்டு  திறம்பட பணியாற்றி வருபவராவார்.  திராவிடர் கழகத்தில் அவரின் தொண்டு அளப்பரிய தாகும்.

மலேசியத் திராவிடர் கழகத்தில் - கிளைச் செயலாளர், தலைவர், மாநிலத் தலைவர், தேசிய உதவித் தலைவர் என படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்று கழகத்தின் தேசியத் தலைவராக செயல்பட்டு வரும் வேளையில் அவருக்கு 'டத்தோ' விருது கிடைத்திருப்பது கழகத் திற்கு கிடைத்திட்ட உயரிய பெருமையாகும்.

'டத்தோ' விருது பெற்றுள்ள  ச.த. அண்ணா மலைக்கு மனமுவந்த வாழ்த்துகளை உரித்தாக்கு வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் மேனாள் பணியாளன் என்ற உரிமையோடும்; மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத்தின்  சார்பாகவும்,  வாழ்த் துகளை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தாங்கள், மேலும் மேலும் பல உயரிய விருது களைப் பெற்று பெருமையுற விழைகிறேன்.

ஞாயிறு, 17 ஜூலை, 2022

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் (ஜூலை 13-- 9.7.2022 சனி)


சென்னை, ஜூலை 13-- 9.7.2022 சனி மாலை 7 மணிக்கு பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்க, பொதுச் செயலாளர் தோழர் ஆ. வெங்கடேசன் வரவேற் புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர்கள் முறையே அ.தா.சண்முக சுந்தரம், கரிகாலன், வேண் மாள், வேல்.சோ.நெடு மாறன், அருட்செல்வன் மற்றும் மாவட்ட பொறுப் பாளர்கள் இராகு (வட சென்னை) மாணிக்கு, வேணுகோபால் (தென் சென்னை), கார்த்தி கேயன் (ஆவடி), அரசு, ஜெயராமன் (சோழிங்க நல்லூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற கலந்து ரையாடல்கள் வெளியில் நடந்தால் நன்றாக இருக் கும் என்று தோழர் கார்த் திகேயன் கருத்து சொன் னார். தோழர் அ.தா.சண் முகசுந்தரம் மாவட்ட அளவில் கையில் நிதி இருக்கும் வண்ணம் செயல் வேண்டும் என்றும், தோழர் வேண்மாள் இணைய வழி யில் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும், தோழர் வேல்.சோ.நெடுமாறன் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என் றும், தோழர் ஜெயராமன் தலைமை சொல்படி செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டனர்.

இறுதியாக இரா.தமிழ்செல்வன் எல்லா வற்றைப் பற்றியும் விளக் கமாக பேசினார்.

1. மாவட்ட பொறுப் பாளர்கள் தலா பத்து விடுதலை சந்தா,

2. தி மார்டன் ரேஷன லிஸ்ட் தொடர்பாக ஆங் கிலத்தில் கலந்துரையா டல்,

3. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து,

4. விரைவில் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வது குறித்து,

5. திமிஸிகி மாநாடு பர் னலாவில் நடக்க இருக்கி றது - அது பற்றியும்

6. பெரியார் 1000 தேர் வுகள் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என் றும் பேசினார். கடைசி யாக தோழர் அ.தா.சண் முகசுந்தரம் நன்றி கூறினார்.

சனி, 2 ஜூலை, 2022

விழுப்புரம், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழகம் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை