வெள்ளி, 23 டிசம்பர், 2016

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்!

ஸ்டாக்ஹோம்,அக்.28நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட் டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரி யாக சுவீடன் திகழ்கிறது.

சுவீடனில் உள்ள பொர் லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம்புகழ் பெற்றஸ்டோராடூனாதேவா லயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள் கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர்எவ்விததயக் கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசுஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள் கையில்நம்பிக்கைஉடையவர் களின்உடலைஎவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்க லாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த் தைகளோ இருக்காது.

ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!

சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக் கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனி தன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும்என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர் களுக்கு ஒரு கல்லறைத் தோட் டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்து களைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படிநல்லடக்கம்செய் யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள் ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.

மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவா லயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்தி கர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

சுவீடன் நாத்திகக் கருத்து களை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட் டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங் களின் தாக்கம் அன்றாட வாழ் வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.

சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,

இந்தநாடுநாத்திகக்கருத் துகள்நிறைந்தநாடு,இங் குள்ளமக்கள்மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப் பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை யில் கூறப்போனால் எங்க ளின் ஒருவித மனநோய்கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையா கும், என்று கூறியிருந்தார்.

 -விடுதலை,28.10.16

சனி, 3 டிசம்பர், 2016

மனிதநேயத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கி.வீரமணி



கிருஷ்ணசாமி வீரமணி அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்து சமூகச் சீர்திருத்தவாதியானவர். (ஆசிரியர் பத்து வயதிலேயே சமூகச் சீர்திருத்தம் பேசிய வர் - ப.கா.) தென்னிந்தியாவில் மனிதப் பொதுமை நலத்திற்காகப் போராடி வருபவர் ஆசிரியர் வீரமணி. தற்போது அவர் திராவிடர் கழகத்தின் தலைமை ஏற்று அதனை வழிநடத்தி வருகிறார். திராவிடர் கழகம் விடுதலை வேட் கையை மக்களிடையே விதைத்து வளர்த்து ஊக்கப்படுத்தி வரும் இயக்க மாகும். மேலும் சாதிய - பாலியல் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடி வரும் இயக்கம் அது! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக அவ்வியக்கம் அரும் பணி ஆற்றி வருகிறது. திராவிடர் கழகத் தின் தலைவர், பெரியாரின் (1879-1973) அடியொற்றித் தடம் பிறழாது பணியாற்றி வருகிறார்.
ஏழுகோடிப் பேருக்கு மேல் உள்ள தற்காலத் தமிழ்நாட்டைத் தற் போதுள்ள நிலைக்குச் செம்மைப்படுத்திக் கொண்டு வந்தவை பெரியாரின் கொள் கைகளும் அவருடைய இயக்கமும் தாம்! 1967 முதற்கொண்டு தமிழ்நாட்டை ஆண்டு வரும் இரண்டு அரசியல் கட்சி களுமே பெரியார்தான் தங்களுக்குச் சமூக அரசியல் தூண்டுணர்வு தரும் ஆசான் என்று இன்றுவரை கூறி வருகின்றன. 1973இல் பெரியார் இயற்கை எய்திய பின்னர் அவர்தம் வாழ்விணையர் இயக்கத்தின் தலைமை ஏற்றார். அவருக்குப் பின் ஆசிரியர் வீரமணி அவர்கள் தலைமைப் பொறுப் பினை ஏற்றுக் கொண்டார்.
தற்போது வீரமணி அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தின் வேந்தராகவும் பல பள்ளிகளை யும், கல்லூரிகளையும் ஊர்ப்புற மேம் பாட்டு மய்யங்களையும் ஆறு மருத்துவ மனைகளையும் உள்ளடக்கிய அய்ம் பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வரும் ஒரு மாபெரும் இயக்கத் தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர். பல புத்தகங்களைப் பதிப்பித்து வெளி யிட்டவர்;‘The Necessity of Scientific Temper எனும் அவரு டைய புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். அறிவியல் மனப்பான்மை பெறுவதில் தான் நம் எதிர்காலம் அடங்கி இருக் கிறது என்று கருத்துரைத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
1933இல் பிறந்த ஆசிரியர் வீரமணி அவர்கள் தமது பத்தாம் அகவை யிலேயே இயக்கத்தில் இணைந்து துடிப்புடன் பணியாற்றி வந்தார்.
பின்னர் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுத் தமிழ் நாளே டான விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன் பதிப்பாசிரியராகவும் அவர் தொடர்ந்து இருந்து வருவதோடு (உண்மை) எனும் கிழமை இதழின் ஆசிரியராகவும், ‘The Modern Rationalist  எனும் ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அவருடைய வயதோ (எண்பதற்குமேல் ஆகி விட்டது) அவர்மீது எதிரிகள் தொடுத்த கொலை வெறி வன்முறைத் தாக்குதல் களோ அவருடைய தொண்டறப் பணிகளின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை.
ஓர் ஆய்வு நூலகம், அருங்காட்சி யகம், புத்தக விற்பனை நிலையம், ஆசிரியர் அலுவலகம், அச்சகப் பணி மனை, திருமண அரங்கு, பெரியார் நினைவிடம் என்று பரந்து விரிந்து கிடந்த ஒரு வளாகத்தில் 2014 பிப்ரவரி யில் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்தேன். இந்த இயக்கத்தின் தோற் றத்தைப் பற்றியும் அதன் தற்போதைய தொண்டறப் பணிகளைப் பற்றியும் அவருடன் நான் கலந்துரையாடினேன். பெரியாரைப் பற்றி அவர் தெளிவாக எடுத்துரைத்தார். பெரியார் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளர்; தற்காலத் தமிழ் நாட்டின் தந்தை அவர்; இங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அறிவு ஆசான் பெரியார் தான் என்று ஆசிரியர் விளக்கினார்.
ஆசிரியர் வீரமணி அவர்கள் பகுத் தறிவுப் பணியைத் தொடர்ந்து முன் னெடுத்துச் செல்கிறார். சாதிய அமைப் பின் உருவாக்கமான சமூக ஏற்றத் தாழ்வுகளை - முரண்பாடுகளைக் கொண்டுள்ள இந்துத்துவத்தை அவர் எள்ளி நகையாடுகிறார். பல ஆண்டு களுக்கு முன்பு கீழ்ச்சாதியில் பிறந்த வர்கள் புனிதமான ஓர் இந்துக் கோயில் உள்ள தெருக்களில் நடப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. சாதி என்பது நம் சமுதாயத்தின் மேல் படர்ந்த நஞ்சு; ஏனெனில் ஒருவரது தகுதி நிலையும் சிறப்புரிமையும் அவரது பிறப்பினால் முடிவு செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்க நிற வேற்றுமையைவிட இது மிகவும் கொடுமையானது. நிற வேற்றுமையில் கருப்பின மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்படவில்லை. அவர்களுக்குத் தனிப்பள்ளிகள் ஒதுக்கித் தரப்பட் டிருந்தன. ஆனால் இங்கே சாதிய அமைப்பின் மிகக் கொடுமையான செயல் என்னவென்றால், ஒரு சாதியில் நீங்கள் பிறந்துவிட்டால் அந்தச் சாதி யிலேயே நீங்கள் வாழ்கிறீர்கள்; அந்தச் சாதியிலேயே நீங்கள் சாகிறீர்கள். ஆகவே சாதிய அமைப்பு முறையே இங்கு எல்லாவற்றையும் முடிவு செய் கிறது. நீங்கள் கல்வி பெறுவதற்கு உரிமை உடையவரா இல்லையா என்பதைச் சாதிதான் முடிவு செய்கிறது. நீங்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராக இருந் தால் உங்களுக்குக் கல்வி பெறும் உரிமை கிடையாது என்று ஆசிரியர் வீரமணி தெளிவாக விளக்கினார். பெரியார் தொண்டினால் சமூகம் எப்படிப்பட்ட மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் போது, பெரியார் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்த நிலையை இப்போது நாம் கற்பனை செய்து பார்ப்பது கூடக் கடினமாக இருக்கிறது. அடிப்படையாக - இந்து மதம் மட்டுமே சாதிய அமைப்பினைக் கட்டிக் காத்துப் பேணி வருகிறது என்றார் அவர். நாங்கள் மக்களுக்கு அறிவியல் மனப்பான்மை வரவேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக மனித நேயம் மிக்கவர்களாகவும் பகுத்தறிவாளர்களாக வும் மக்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று ஆசிரியர் கூறி முடித்தார்.
மக்கள், உரிமை, சமத்துவம், உடன் பிறப்பொற்றுமை (சகோதரத்துவம்) ஆகியவற்றைப் பெறவேண்டும் என்பது திராவிடர் இயக்கத்தின் மனித நேயப் பார்வை என்று ஆசிரியர் வீரமணி விளக்கினார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையிலும் இந்த இயக் கத்திற்கு அவர் நன்றி செலுத்துகிறார். ஏனென்றால் கீழ்ச்சாதி உறுப்பினர் ஆனபடியால் இதற்கு முன்னர் கல்வி பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த இயக்கத்தினால் தான் தம்முடைய தலைமைப் பண்புகளும், திறன்களும் மதிக்கப்படுகின்றன என்றார்.
கடந்த பல ஆண்டுகளாகச் சமூக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கின்ற. அவற்றுள் சமஸ்கிருத மந் திரங்களை ஓதி நடத்தப்பெறும் இந்துத் திருமணங்களை விட்டு விலகி மதச் சார் பற்ற திருமணங்களுக்கு மக்கள் மாறி வந் துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (இம் மந்திரங்களை அவர் பெரும் பித்தலாட் டம் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் மக்களுக்கு இவற்றின் பொருள் என்ன வென்று தெரியாது). மதச்சார்பற்ற திரு மணங்களை அவர் ஊக்கப்படுத்தி வரு கிறார். ஆயிரக்கணக் கான சுயமரியா தைத் திருமணங்களை அவர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.
அவருடைய இயக்கத்தின் இயல் பினையும் அரசியலையும் ஒப்பிட்டுக் கூறுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு என்ற முறையில் எந்த அரசும் வரலாம்; போகலாம். ஆனால் சமு தாயத்தில் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திராவிடர் கழகம், அரசியல் கட்சிகள் உள் நுழைந்து சிக்கலை உண்டு பண்ணவியலாத சமூகச் சமத்துவத்தையும் அதிகாரத்தையும் விரும்புகிறது. திராவிடர் கழகம் சாதி ஒழிப்பிற்காகவும் பெண் உரிமை பெறு வதற்காகவும் போராடும் இயக்கம் என்றார் ஆசிரியர் கி.வீரமணி. கிறித்துவ மதத்தில் ஒருவர் பாதிரியாக (புரோகி தராக) வேண்டுமென்றால் அதற்குரிய கல்வித் தகுதியை அவர் பெற்றிருந்தால் அப்பணியில் அவர் அமர்த்தப்படுகிறார். அதைப் போலவே ஒரு முசுலீம் முல்லா வாக வேண்டுமென்றால் அதற்குரிய கல்வியைப் பெற்று அப்பணியில் அமர லாம். ஆனால் இந்து மதத்தில் இது போன்று நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்து மதத்தில் பரம் பரையாக இந்து மதத்தின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் பயின்று பயிற்சி பெற்ற உயர்சாதியினர் (பார்ப்பனர்) மட்டுமே அத்தகைய பணிகளைப் பெறமுடியும், என்று ஆசிரியர் வீரமணி குறிப்பிட்டார்.
திராவிடர் கழகத்தின் தனிச் சிறப்பி னைப் பற்றி விளக்கிய ஆசிரியர், பெரியார் பகுத்தறிவையும் சமூகநீதியை யும் முன்னெடுத்துச் செல்வதற்காகத் தம்முடைய செல்வம் அனைத்தையும் ஒரு பொது அறக்கட்டளையாக உரு வாக்கினார். பள்ளிகள், மருத்துவமனை கள், குழந்தைகள் காப்பகங்கள் என்று இந்த இயக்கம் மனிதநேயச் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அனைத்துலக அளவில் இது தெரிந்த செய்தியே. 2014இல் மேரிலேண்ட் மாநிலத்தின் மேனாள் ஆளுநர் பாரிஸ் கிளிண்டெனிங் அவர் களுக்கு இங்கு வரவேற்பளிக்கப்பட்டது. இயக்கத்திற்கு வழங்கப்பெறும் நன் கொடைகள், மதவாதிகளிடமிருந்து வரும் எதிர்ப்பினைப் புந்தள்ளி இவர் களின் தொண்டறம் தொடர்வதற்குப் பெரிதும் துணை செய்கின்றன.
என்மீது நான்கு முறைக்கு மேல் கொலை வெறித் தாக்குதல் நடத்தப் பெற்றது. இந்துத்துவத் தேசிய முன்னணி யினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் எனக்கு மாலையணிவிக்க வருபவர் களைப் போல வந்தமையால் என் ஓட் டுநர் வண்டியை நிறுத்தினார். உடனே அவர்கள் தாக்கத் தொடங்கி விட்டனர். தாக்குதலில் மூக்கின் இடைப்பகுதி கிழிந்து போய்விட்டது என்றார் ஆசிரியர்.
இத்தகைய தாக்குதல்களுக்கும் அச் சுறுத்தல்களுக்கும் அஞ்சாது, பகுத்தறி வையும் மனித நேயத்தையும் பரப்புவ தற்காக, சமத்துவத்தையும் சமூக நீதியை யும் வென்றெடுப்பதற்காக வேறு சிந் தனையின்றித் தமது எண்பதாவது வயதி லும் பயணம் செய்வது மகிழ்ச்சியளிப்ப தாகப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஆசிரியர்.
- தமிழில்: டாக்டர் ப.காளிமுத்து
-விடுதலை,4.3.15