சனி, 18 மார்ச், 2023

சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது

 கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது

"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி 

வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" 

விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூக நீதி விருது வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர.ராதா மன்றத்தில் 10.11.2023 அன்று மாலை நடைபெற்றது. 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு மய்யம்  மற்றும் சென்னை வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தப்பட்ட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மைத் துறை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்தார்.

விருது பெற்றவர் பற்றிய குறிப்புகள்

விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விருதினை பெறும் மொரிசியஸ் நாட்டு மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் வாசித்தார்.

2021 ஆண்டுக்கான சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெறும் கயானா நாட்டு மேனாள் பிரதமர் மற்றும் பொறுப்பு அதிபர் பதவி வகித்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வாசித்தார்.

விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு

விழாவிற்குத் தலைமைவகித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விருதாளர்களுக்கு வேந்தர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து விருதுடன் நினைவுப்பரிசு மற்றும் இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.

வேந்தர் ஆசிரியர் அவர்களுக்கும், விருதாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத்

விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் சென்னை வளர்ச்சி மன்றத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள், "சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி" விருதுபற்றிய உருவாக்கம், கடந்த காலத்தில் விருது வழங்கப்பட்ட பெருமக்கள் பற்றி அறிமுக உரையாற்றினார். 2020ஆம் ஆண்டுக்கான விருது மொரிசியஸ் நாட்டு மேனாள் தலைவர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டுக்கான விருது கயானா  நாட்டு மேனாள் பிரதமர் பொறுப்பு அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவித்தார். விருதுகளை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் டாக்டர் 

கி.வீரமணி அவர்கள் வழங்கி பெருமைப்படுத்துவார்கள் எனக் கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்ச்சியின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

விருது வழங்கிடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலகத் தமிழர் நல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் உரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது: 

அமைச்சர் என்கிற நிலையை உயர்த்திக்கொடுத்து இந்த நிகழ்ச்சியில் உங்களோடு கலந்துகொள்கிற வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் வரும்போது எங்களுக்குள் இருக்கின்ற உணர்வுகள், சிறிய வயதில் படிக்கிற காலத்தில் பள்ளிப்படிப்பு படிக்கின்ற காலத்தில், தந்தைபெரியார் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தம்முடைய பயணத்தை மேற்கொள்கிற நேரத்தில், நான் செஞ்சிக் கூட்டத்தில், அவர் வாகனத்திலிருந்து பேசுகின்ற நேரத்தில் மண் தரையில் அமர்ந்து அவர் பேசியதை முதலிலே மனதிலே பதியவைத்தவன். நல்ல வெய்யில் நேரம். மதிய நேரத்தில் வந்துவிட்டார். அப்போது எல்லாரும் நிழலுக்காக ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள். பிள்ளைகளெல்லாம் நாங்கள் எதிரில் உட்கார்ந்துவிட்டோம்.

அன்று ஒரு வார்த்தை சொன்னார் தந்தை பெரியார். இன்றைக்கும் அது நினைவில் இருக்கிறது.

என்னுடைய பேச்சை ஏற்கெனவே கேட்டு செயல் படுத்துவதற்கு தயாராக இருப்பவர்கள், நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை போய்ப்பார்க்கலாம். 

என்னுடைய பேச்சைக் கேட்டு எதிர்காலத்தில் செயல்படுத்துபவர்கள் மட்டும் இங்கே இருந்தால் போதும் என்றார்.

அந்த வெய்யிலில் ஓரம்பாரம் இருந்தவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பெரியவர்கள் எல்லாரும் உட்கார்ந்து தந்தைபெரியார் பேச்சைக் கேட்டார்கள். இன்றைக்கும் அது மனதிலே அப்படியே இருக்கிறது.

ஒரு மனிதன் எந்தக்காலத்திலும், எந்த செயலில் ஈடுபட்டாலும், ஏன், எதற்கு என்று சிந்தித்து செயல்படச் சொல்லி அவருடைய தலைமையுரையைத் துவக்கினார்.

ஒரு மனிதனுக்கு எந்தக் காலக்கட்டத்திலேயும் சலிப்பு இருக்கக்கூடாது, அது தற்கொலைக்கு சமம் என்றும் அங்கே எடுத்துரைத்தார்.

மனிதனுக்கு அழகு மானமும் அறிவும் என்றும் அங்கே தந்தை பெரியார் தனது உரையில் சொன்னார்.

இதெல்லாம் மனதிலே பதிந்த காரணத்தினால், எதைப்பற்றியும் எப்போதும் கவலைப்படாமல், இன் றைக்கு வரையிலும் அந்த சுயமரியாதை கருத்துகளை ஏற்று தன்மானத்தைக் காக்கக்கூடிய - எந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் இருந்தாலும், அதில் கலந்து கொள்கின்ற ஓர் உணர்வோடு என்னை அதில் ஈர்ப்புடன் இணைத்துக்கொள்கிறேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு காலக் கட்டத்திலே தென்னார்க்காடு ஒன்றுபட்ட மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். 

அப்போது எங்களுக்கு மாவட்டச்செயலாளர் செஞ்சி இராமச்சந்திரன். நான் செஞ்சி பேரூர் தி.மு.கழகத்தி னுடைய செயலாளர். 

விழுப்புரத்திலிருந்து வளவனூர் பகுதியில் நம் முடைய ஆசிரியர் அவர்கள் பிரச்சாரத்தை மேற் கொள்கிற நேரத்தில், அப்போது அந்தக் கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை, விழுப்புரத்தில் இருக்கிறோம். விழுப்புரம் பயணியர் விடுதியில் ஆசிரியர் அவர்களை சந்தித்தோம். அந்த கூட்டம் சிறிது தடைபட்டது என்பதை கேள்விப்பட்டதும், நாங்கள் சென்றோம். சென்றவுடன் ஆசிரியர், ‘இல்லை, நான் பேசிவிட்டுத் தான் செல்வேன் என்று பிடிவாதமாக சொல்லும்போது, நாங்கள் அன்புக்கட்டளை இட்டோம். பேசினால் ஒரு இடம்தான் பேசப்போகிறீர்கள், நாளை மாலை இதே நேரத்திலே ஆரம்பித்து வளவனூர் முழுக்க நீங்கள் சுற்றி பேசிவரலாம் என்று சொன்னவுடனே - எந்த காலக்கட்டத்திலேயும் ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்று கூட இருந்தவர்கள் எல்லாம் சொன்னார்கள் - எப்படி நீங்கள் சொன்னீங்க, ஒத்துக்கொண்டார் என்றார்கள்.

அன்று இரவு இருந்து மறுநாள் மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையிலும் எந்த ஊரிலே அந்த பிரச்சாரத்துக்கு தடை ஏற்பட்டதோ, அந்த ஊரிலே ஒரு நபர்கூட வீட்டுக்குள்ளே இல்லாமல், வீட்டு வாசலில் நின்று, ஒவ்வொரு வீதியாக சென்று குறைந்தது 5 இடத்திலே பேசினார். அது ஒரு பேரூராட்சிதான் சின்ன ஊருதான்.

அங்கே பேசும்போது, ஒட்டுமொத்த கிராமத்திலிருப்பவர்களும் அவர் பேச்சைக் கேட்கின்ற நிலை.

அப்போது பெண் அடிமைத்தனம் பற்றி பேசினார். பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும். பாரதி கண்ட புதுமைப்பெண்களைப் படைக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்.

நம்வீட்டில் பிறக்கின்ற பெண் குழந்தைகளை பெற்ற தாய் தந்தையே உதாசீனப்படுத்துவது எந்த விதத்திலே நியாயம் என்றெல்லாம் பல்வேறு கருத்துகளை அங்கே வலியுறுத்திப் பேசினார்.

இதற்கெல்லாம் உங்களுக்கு விடை காண வேண்டும் என்று சொன்னால், நம்வீட்டு பிள்ளைகளை நீங்கள் கல்வி கற்கச் செய்ய வேண்டும். 

படித்தால்தான் இந்த சமுதாயத்தில் சம நிலைக்கு சம தகுதியைப் பெற முடியும் என்று இந்த தத்துவத்தினுடைய பேச்சுகள் எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழன்  தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்காக இன்றைக்கு உருவாக்கப்பட்டிருப்பதன் அடித்தளம்தான் தந்தை பெரியாருடைய கருத்துகள், பெரியாருடைய பயணம். அதைத்தொடர்ந்து நம்முடைய ஆசிரியர்  90 வயதிலும் விடா முயற்சியாக அவருடைய பயணம் உள்ளது.

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முத் தமிழறிஞர் கலைஞரின் பெயரில் விருது வழங்குகின்ற விழாவில் ஒரு சாதாரண தொண்டனான எனக்கு அந்த வாய்ப்பினை வழங்குகின்ற நேரத்தில், உண்மையிலேயே இதுதான் கொள்கைக்கும், இலட்சியத்துக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்பதை நான் உணர்ந்து இவர்களை வாழ்த்த வயதில்லாவிட்டாலும், சுயமரியாதை கருத்துகளோடு சொல்லும்போது, வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனதுதான் தேவை என்று நம்முடைய கருத்துகள் சொல்லப்படுகின்ற அந்த நிலையில், நம்முடைய விருதுகளை பெறுபவர் களை, டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்களையும், டாக்டர் மோசெஸ் வீராசாமி நாகமுத்து அவர்களையும் தமிழ் இனத்தின் சார்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக உங்கள் அனைவரையும் வாழ்த்தி, உங்களுடைய பணிசிறக்க வாழ்த்துகிறோம். 

தமிழர்கள் உலகமெங்கும் வாழ்கிற நிலையில், பல்வேறு பொறுப்புகளில் அங்கே தலைசிறந்து வாழு கின்ற ஒரு மாபெரும் பொறுப்பினை தமிழர்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தனது உரையில் குறிப்பிட்டார்.   

மொரிசியஸ் நாட்டு 

டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி

இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இது என் மூதாதை யர்கள் வாழ்ந்த மண். இங்கே திரு. வீரமணி அவர்களின் கரங்களால் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூகநீதி 2020" ஆண்டுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமைக்குரிய விஷயம். இந்த அங்கீகாரத் திற்கும் கவுரவத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை அரசியல் அறிவியல் ஆய்வு மய்யத்திற்கும் சென்னை வளர்ச்சிக் கழகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் என் தொடர்பும், நல்லுறவும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகம் ஆற்றி வரும் நற்பணிகள் பாராட்டுக்குரியவை. கலைஞர் கருணாநிதி அவர்களும் பொது மக்கள் வாழ்வில் வளம் பெற்று முன்னேற பாடுபட்டதை எவராலும் மறக்க முடியாது. சமூகநீதிக்காக மேலும் கடுமையாக உழைத்து பொதுப் பணி புரிய உங்கள் மூலமாக எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுகிறது. ஒடுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காக போராட நீங்கள் அனைவரும் என்னை ஊக்குவித்துள்ளீர்கள்.

 கயானா நாட்டின் மேனாள் பிரதம அமைச்சர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களுக்கு 2021 ஆண்டுக்கான சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகிறது.

உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். இந்த 2023 புத்தாண்டில் உங்கள் அனை வரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி சமூகநீதியை நிலைநாட்ட உறுதியளிப்போம். நன்றி.

கயானா நாட்டு 

டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து

2021ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட கயானா நாட்டு மேனாள் பிரதமரும்  அந்த நாட்டு பொறுப்பு அதிபர் பதவியில் இருந்தவருமான டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டதாவது:

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சமூகநீதிக்கான விருதினை பெறும் வேளையில் மாபெரும் தலைவரும், கொள்கையாளரும், தனித்துவமிக்க பெருந்தகையாள ருமான ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடுவதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். ஆசிரியரைச் சந்தித்து உரையாடிய நேரம் - சில நிமிடங்களே என்றாலும், எனது வாழ்வில் இருந்த ஒரு வெற்றிடம் நீங்கியதாக - நிரப்பப்பட்டதாக உணர் கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காக, பெண்கள் விடுதலைக்காக பாடுபட்ட பெரிய தலைவர் தந்தை பெரியார் என்பதை அறிவேன்.

1860களில் - அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த மலபார் பகுதியிலிருந்து கயானா சென்றனர் எனது மூதாதையர்கள். என்னுடைய தந்தையார் பெயரும் இராமசாமி ஆகும். இன்று அனுபவ பூர்வமாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் எந்த அளவிற்கு உழைத்திருக்கிறார் என்பதை இங்கு வருகை தந்து உணர முடிகிறது; அறிய முடிகிறது.

1971ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளராகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டேன். போராட்ட வாழ்வையே பொது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டேன். பொது வாழ்க்கையாக போராட்ட வாழ்வு எனும் பொழுது ஆசிரியர் கி. வீரமணி அவர்களைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவரைப் போல பொது வாழ்க்கையில் இழிவைச்  சந்தித்தவர்கள் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும்! அப்படிப்பட்டவர் இன்று மக்களால் போற்றப்படும் உயர்நிலையில் இருக்கிறார்.

பெரியார் ஜாதி அமைப்பு முறைக்கு எதிராக போராடினார். ஜாதி அமைப்பு என்பதே நாகரிக உலகில் ஒருவித நோய் போன்றது. அப்படிப்பட்ட தலைவரிடம் பாடம் பயின்றவர் ஆசிரியர் அவர்கள். ஆசிரியர் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. சந்தித்த வேளையில் கற்றுக் கொள்கின்றோம்.

கயானாவில் ஏழை மக்களுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு வாதிடும், போராடும் பணியை மேற்கொண்டேன். அந்த மக்களுக்கு  ஓரளவு நம்பிக்கையையுடன் பணி செய்து வருகிறோம். உங்களது போராட்ட வரலாறு குறித்து அறியும் பொழுது நான் மிகவும் எளிமையாளனாகி விடுகிறேன்.

உலகம் மாறி வந்தநிலையில் 1961 ஆம் ஆண்டு முதல் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக பங்கேற்றேன். புரட்சியாளர்களெல்லாம் ஜனநாயகப் பாதையை தெரிவு செய்து கொண்ட காலம். கயானா நாடு எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் மிக்க நாடு. வனவளமும் மிகுதியாகக் கொண்ட நாடு. எனவே வெளிநாடுகளுக்கு அரிய பொருள்களை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டும் நிலையில் உள்ள நாடு. ஆப்பிரிக்க வழி சமுதாயத்தினரும் இந்திய வழி சமுதாயத்தினரும் பெரும்பான்மையாக வாழும் நாடு - கயானா. இரண்டு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டு சமுதாய ஒற்றுமை இல்லா நிலைமை நிலவி வந்தது. இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்ட நான் இந்திய வாழ் சமுதாயத்தினருக்காக - அவர்தம் உரிமைக்காகப் பாடுபட்டு செடி ஜாகன் (Cheddi Jagan)  தலைமையில் அரசியல் தலைமை ஆட்சி அதிகாரத் தலைமையில் பங்கேற்றேன். பின்னர் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்தேன். பின்னர் வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் ஊடுருவலால் அதிகாரத்தை இழந்தாலும், மக்களின் உரிமைக்காக களத்தில் நிற்கிறோம்; போராடிக் கொண்டும் இருக்கிறோம். எங்களது வாழ்க்கையில் மதம் மாறும் நிலைமை ஏற்படாது. பின்னாளில் மத உணர்வு நம்மை - மனிதரைப் பிரிக்கிறது என அறிந்து கொண்டோம். கூட்டுறவால் பண்பாடு காக்கப்படும். கூட்டாட்சியால் பண்பாட்டில் பல தரப்பட்ட பண்பாட்டு ஒருமைப்பாட்டால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை காண முடியும் என்ற நிலையில் உள்ளோம்.

பெருமை மிக்க, சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருது பெற்றதை பெருமையாகக் கருதுகிறோம். தந்தை பெரியாரைப் பின்பற்றுவோம். தவறான வழியில் நிச்சயம் பயணிக்க மாட்டோம்.  விருதினை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி; அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் 

வாழ்த்து - பாராட்டுரை

'சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி'  விருது' வழங்கப்படும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை உடையது. தொடக்கத்தில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி எனும் சிறப்பினை உலக அளவில் பெற்ற கல்வி நிறுவனம் அது. அப்பொழுது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (Memorandum of Understanding)  பொழுது 'பெண்களுக்கு மட்டுமான  பொறியியல் கல்லூரியா? என வியப்புடன் வெளிநாட்டவர் அதன் சிறப்புக் குறித்து கேட்டறிவார்கள்.

தந்தை பெரியார், அவருக்குப்பின், அன்னை மணியம்மையார், அவர்களுடைய சொந்த  நிதி, சொத்து ஆதாரங்களைக் கொண்டும், பொது மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையைக் கொண்டும் தொடங்கப்பட்ட கல்லூரி அது. பின்னாளில் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உருவெடுத்தது.

விருதுப் பெயரான 'டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி', அவர்கள் தந்தை பெரியாரால் கொள்கை வடிவமாக வார்த்து எடுக்கப்பட்டவர். அதற்கு  முன்னர் அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரிடம் கொள்கை மாணாக்கராக இருந்த முதற் சீடர். பெரியாரிடம் கொள்கைப் பாடம் பயின்றவர்கள் பின்னாளில் 'முதல் அமைச்சர்' எனும் அரசியல் ஆட்சி அதிகார உயர்நிலைக்குச் சென்றார்கள். ஆனால் தந்தை பெரியார் ஆட்சி, அதிகாரத்தை தான் அடைய விரும்பவில்லை. ஆட்சி, அதிகாரம் பலமுறை அவரிடம் வந்து நின்ற வேளைகளிலும் அதை மறுத்தவர் பெரியார். அன்றாடம் மக்களைச் சந்தித்து, கருத்துரு வாக்கத்திற்கு பரப்புரை செய்து அதிகாரம் மிக்க மக்களை நாளெல்லாம் ஆட்சி செய்தவர்;  வழி நடத்தியவர் தந்தை பெரியார்.

மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பெரிதும் பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டவையே. ஆனால் இந்த மண்ணில் ஏற்பட்டுள்ளது சமூக முன்னேற்றத்துடன் கூடிய பொருளாதார முன்னேற்றம்.

விருது பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் பெரு மக்களாகிய நீங்கள் பல்வேறு உயர் பொறுப்புகளில், உங்கள் நாடுகளில் இருந்தாலும், பண்பாட்டுப் பாரம் பரியத்தில் நீங்கள் எங்களது சொந்தங்கள்; உறவுக் குரியவர்கள். பெரியார் மாபெரும் மனித மாண்பாளர். அவர் பள்ளிக்கூட வாசலை முழுமையாக சென்றடைந்த தில்லை. ஆனால் அவரது பெயரால் பெரும் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் இன்று உருவாகியுள்ளன. பெரியாரது சிந்தனைகள் சுய சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் - அவை குறித்து உயர்நிலை ஆராய்ச்சிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. ஆய்வுப் புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

பெரியார், சிந்தனையோடு நின்றவரில்லை; சிந்தித் ததை மக்களிடம் எடுத்துச் சொன்னார். பரப்புரை செய்த தோடு மட்டும் நிறுத்திக் கொண்டவரல்ல; சிந்தனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர். தானே முன்வந்து நடைமுறையாக்கியவர்.

இந்த மண்ணில் மனிதநேயத் தலைவர்கள் களம் கண்டாலும் அவரது சிந்தனைகள் உலகளாவியவை. உலக மக்களை மேன்மைப்படுத்திடும் மனிதநேயம் சார்ந்தவை. இங்கு பெரியாரின் சிந்தனை வேர்கள் ஆழமாகச் சென்று நிலைத்து பரவியதால் அந்த மரத்தின் விழுதுகள் உலகெங்கும்  உள்ளன. பயனளித்து வருகின்றன. அப்படிப்பட்ட விழுதுகளின் வெளிப்பாடாக அடையாளச் சின்னமாக இன்று விருது பெற்ற நீங்கள் விளங்குகின்றீர்கள்.

1929களின் தொடக்கத்தில் தந்தை பெரியார், அன்றைய மலேயா நாட்டிற்குச் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்) சென்றிருந்தார். மலேய மண்ணில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக, ரப்பர் மலைத் தோட்டங்களில் உழைத்த மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர் களையெல்லாம் தேடிச் சென்று சந்தித்து உறவாடினார்; அறிவுரை வழங்கினார். "நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாகச் செலவழியுங்கள்; உங்களது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுங்கள்; அதுதான் நிலையானது; உயர்வானது. எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ அந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் நீங்கள்; நீங்கள் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்" என்று தமிழர்களுக்கு பாடம் போன்று எடுத்துரைத்தார். அதன் விளைவு இன்று மலேசியா, சிங்கப்பூர் பலவிதங்களில் முன்னேற்றம் கண்டு உலகளாவிய வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு வாழும் தமிழர்களும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

விருதினைப் பெற்றுள்ள கயானா நாட்டு மேனாள் பிரதமர் நாகமுத்து அவர்கள் ஒரு சிறந்த சமூகப் போராளி; மாணவப் பருவம் தொட்டு போராளியாக இருந்தவர்; இன்றைக்கும் போராளியாக தொடர்பவர்; வாழ்ந்து வருபவர். நாடுகள் நம்மைப் பிரிக்கலாம்; நாடுகளுக்கிடையே நிலவிடும் அரசியல் சூழல்கள் நம்மை இடைவெளிப்படுத்தலாம். ஆனால் நம்முடைய பண்பாடு என்றென்றைக்கும் நம்மை இணைத்திடும்; பிணைத்திடும்; உறவுகளை நீடிக்க - நிலைத்திருக்க வைத்திடும்.

விருது பெற்ற மற்றொரு அரசியல் ஆளுமை டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி  மொரிசியஸ் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அரசியல் சூழலில் தனித்துவத்துடன் விளங்கிடும் தமிழர் பாரம்பரியத்தில் வந்த தகைமையாளர். பண்பாட்டை மறக்காத பண்பாளர். வேர்களைத் தேடி, உறவு காட்டி வரும் விழுது போன்றவர் - இன்று சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி விருதினைப் பெற்றுள்ளார். எப்பொழுதும் போல் உறவுகள் தொடர்ந்திட வேண்டும். 

பெரியார் திடல் உங்களுக்கான வீடு. எப்பொழுது வந்தாலும் தமிழ்நாடு உங்களது முன்னோர்கள் தடம் பதித்து வாழ்ந்த தாயகம் - தாய்வீடு போன்றது பெரியார் திடல். 

சமூகநீதி விருதினை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் உரியவர்களுக்கு வழங்கிடும் அரும் பணியினைச் செய்து வரும் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள் ஒரு பாலம் போன்றவர். நல்ல தொடர்பாளர் பெரும் ஒருங்கிணைப்பாளர், உலகெங்கிலும் வாழும் தமிழ் வழிச் சமுதாயச் சொந்தங்களை பிணைக்கும் ஆற்றலாளர்; விளம்பரமில்லாமல் சமுதாயப் பணியினைச் செய்து வரும் சிறப்புக்குரியவர். தொடர்ந்து இந்தப் பணியினைப் பரந்துபட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு இந்தி யாவின் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆறு முறை வருகை தந்துள்ளார். குடியரசுத் தலைவராக இருந்த பொழுதும் வருகை தந்துள்ளார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு உயர் கல்வி நிறுவனம் மட்டுமல்ல; பொது மக்களுக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை வழங்கி வரும் மக்கள் பல்கலைக் கழகமுமாகும். பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள 69 கிராமங்களில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கல்வி சார்ந்த அடிப்படைக் கட்டமைப்புகளை  வழங்கிடும் புரா  (Providing Urban Amenities to Rural Areas - 'PURA') எனும் வளர்ச்சித் திட்டத்தை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் ஊரகப் பகுதியில் வாழ்பவர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே புரா (PURA)  திட்டத்தின் நோக்கம்.  

பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த கலாம் அவர்கள் இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்டு பல இடங்களில் தான் பேசி வந்துள்ளதாகவும் - தற்பொழுது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மூலம் அந்த சிந்தனைகள் நடைமுறை கண்டு வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இந்த புரா திட்டத்தினை - 'பெரியார் புரா'  - திட்டத்தினை நாட்டின், உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும்  தூதுவராக இருக்க விரும்பினார் - பெரியார் புரா தூதுவராகவும் விளங்கினார்.

அனைவருக்கும் அனைத்தும்; அனைவரும் சமம்; அனைவருக்கும் சம வாய்ப்பு; சம வசதி இருப்பதே பெரியார் புராவின் கோட்பாடு. பெரியார் 60 ஆண்டு களுக்கு முன்பு கூறிய இந்த நிலையை இன்று 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தி வரும் மாண்பமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் 10,000க்கும் மேற்பட்டோர் உலகின் பல பகுதிகளில் பல நிறுவனப் பொறுப்புகளில் உள்ளனர், சிறந்து விளங்குகின்றனர். கல்வி, சமத்துவம் மட்டுமல்ல; கல்வியின் மூலம் உயர்நிலை, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்திடும் நிலையினை உருவாக்கியதில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு பெரும் பங்கு உண்டு.

அரசியல் அடிமைத்தனம் பல நாடுகளில் உண்டு. சமூக அடிமைத்தனமும் மிகப் பல நாடுகளில் நிலவுகிறது. பண்பாட்டு அடிமைத்தனத்தினைத் தகர்த்து, வெளிக்கிளம்பிய, மனிதநேயம் புகட்டிய பெரியாரின் தத்துவம் வளர்ந்து வரும் நிலையில் உள்ளோம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, சமத்துவ பண்பாட்டை பிரதிபலித் திட, நடைமுறையாக்கிட பெரியார் சிந்தனைகளை உலகெங்கிலும் பரப்பிட வேண்டும். இன்றைக்கு விருது பெற்ற பெரு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; நிச்சயம் இருப்பார்கள் என்று நன்றி கூறி அப்பெருமக்களைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ். வேலுசாமி நன்றி கூறினார்.

விருது வழங்கிடும் நிகழ்வில் 

கலந்து கொண்டோர்

ரஷ்ய தூதரக அலுவலர் திமித்ரி ஏ.ஷெசெர்பினின், மேனாள் துணைவேந்தர் திருவாசகம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், சு.குமாரதேவன், 

பா.மணியம்மை, பொறியாளர் ச.இன்பக்கனி, தே.செ.கோபால், ஜெயராமன், சோ.சுரேஷ், பெரியார் மாணாக்கன், தொண்டறம், உடுமலை வடிவேல், அன்பு செல்வன், சா.தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

(விருது பெற்ற பெருமக்கள் மற்றும் அந்த நாட்டு தமிழ்வழி சமுதாயத்தைச் சார்ந்தோர் தமிழ் மொழியை முழுமையாகப் புரிந்து பேசிட, இயலாத நிலையில் அவர்களுக்கு விளங்கிடும் வகையில், 75 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்திலேயே நடந்தேறியது. அந்த உரைகளின் தமிழாக்கச் சுருக்கமே இது)


விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு மாநாடு

 

 

"நாத்திகம் - எதிர்மறையான கருத்தல்ல; மனிதரின் 

முன்னேற்றம் - வளர்ச்சிக்கான ஒரு வாழ்வியல் முறை" 


தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி வழி நிறைவுரை ஆற்றினார்

ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் நாத்திக அறிஞர் கோரா அவர்களின் 120ஆம் ஆண்டு மற்றும் சரஸ்வதி கோரா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள்களை போற்றும் விதமாக பன்னாட்டு மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. 

2023 ஜனவரி 7, 8 & 9 ஆகிய மூன்று நாள்கள் நாத்திகர் மய்ய வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். ஜனவரி  7ஆம் நாள் தொடங்கிய மாநாட்டு நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நாட்டின் பிற மாநிலங்களி லிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாத்திக அமைப் பினர் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

தொடக்க நிகழ்ச்சி

மாநாட்டு தொடக்க நிகழ்ச்சிக்கு நாத்திகர் மய்யத்தின் தலைவர் டாக்டர் கோ. சமரம் தலைமை வகித்தார். "நாத்திகம் - மதச் சார்பின்மை சிந்தனை  & சமூகச் செயல்பாடு" எனும் மாநாட்டின் நோக்கம் குறித்து நாத்திகர் மய்யத்தினைச் சார்ந்த விகாஸ் கோரா விளக்க வுரை ஆற்றினார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் மேனாள் பேரவை துணைத் தலைவர் மண்டலிபுத்தபிரசாத், சட்டமன்ற உறுப்பினர் கட்டே ராமமோகன், அமெரிக்க நாட்டு - மதத்திலிருந்து விடுதலைக்கான நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் பார்க்கர் மற்றும் அமித்பால், ஜெர்மனி நாட்டு - அய்யுறும் உளப்பாங்கிற்கான (ஷிளீமீஜீtவீநீ) அய்ரோப்பிய மன்றத்தின் தலைவர் அமர்தேவ் சர்மா, இந்திய பகுத்தறி வாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், மராட்டிய மாநில மகாராட்டிரா அந்த ஸ்ருத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட் டில், இங்கிலாந்துநாட்டு மனிதநேயர் பன்னாட்டமைப்பின் உத்தம் நிருலா, பஞ்சாப் மாநில தர்கச்சீல சங்கத்தின் சுமீத் சிங், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, டில்லியிருந்து பத்திரிகை யாளர் சக்தி எடமருகு மற்றும் விடுதலை  வீராங்கனையும், காந்திய நாத்திகருமான திருமதி  மனோரமா ஆகியோர் உரையாற்றினர். 

கருத்து அமர்வுகள்

முதல் நாள் பிற்பகல் தொடங்கி 'ஊடகமும், மதச் சார்பின்மையும்', "நாத்திகமும் அரசியலும்", "மதச்சார் பற்ற சமூகப் பணிகள்", "பன்னாட்டு மனிதநேயர் இயக் கம்" ஆகிய நான்கு தலைப்புகளில் உரை வீச்சு  & கலந்து ரையாடல் நடைபெற்றது. மாலையில் கோரா - சரஸ்வதி கோரா ஆகியோரது வாழ்க்கை பற்றிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

ஜனவரி 8ஆம் நாளன்று கருத்து அமர்வுகள் இரண்டு அரங்குகளில் தொடர் நிகழ்வுகளாக நடைபெற்றன. 'அறி வாய்வு சிந்தனையும் தடையற்ற விளக்க விசாரணையும்', 'மனித உரிமையும் நாத்திகமும்', 'நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை'', 'கல்வியும் அறிவியல் பார்வையும்', 'மதவாத உச்சக்கட்டமும் மதவெறியும்', 'புத்துலகில் சமூகச் செயல்பாடும், சீர்திருத்தமும்' ஆகிய தலைப்புகளில் உரைவீச்சும், விவாத விளக்கங்களும் நிகழ்ந்தன.

நிறைவு நிகழ்ச்சி

மாலையில் நடைபெற்ற மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக நிறைவுரை ஆற்றினார். மாநாட்டுப் பேராளர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாத்திகர் மய்யத்தினர் நிறைவு நிகழ்ச்சியில் ஆசிரியர் அவர்களின் உரையினை செவிமடுத்தனர்.

ஆசிரியர் அவர்களின் நிறைவுரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது நிறைவு ரையில் பேசியதன் சுருக்கம்:

அண்மையில் நாத்திகர் மய்ய தொடக்க கால செயல் பாட்டாளரும், கோரா - சரஸ்வதி கோரா அவர்களின் முதல் மருமகனுமான அர்ஜூன் ராவ் (வயது 105) அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாத்திகர் மய்யத்தை நிறுவிய கோரா அவர்கள் சமூக மாற்றங்களை உருவாக்கிய நாத்திகராக வாழ்ந்து மறைந் தார். அவர் நினைத்ததை, லட்சியத்தை எட்டு கின்ற வகையில் அவருக்குப் பின்னர் பணியாற்றிய  காலம் சென்ற லவனம், விஜயம் மற்றும் கோரா குடும்பத்தைச் சார்ந்த மறைந்த பெருமக்கள் அனைவரும் போற்றுதலுக் குரியவர்கள். இன்றைய பொறுப்பாளர்களும் தொடர்ந்து கோரா காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களது நாத்திகம் பரப்பிடும் பணி தொடர வேண்டும் என்பது எமது விருப்பம்.

தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பொழுது கோரா அவர்கள் கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 'கடவுள் எனும் கோட்பாடு' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிய கோரா, பலவித கண்டனங்களுக் கும், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆளானார். சுதந்திரப் போராட்டத்தோடு நாத்திகம் பரப்பிடும் பணியிலும் கோராவும், அவரது இணையரான சரஸ்வதி கோராவும் ஈடுபட்டு வந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக் காகப் பணி யாற்றிய அவர்தம் பாங்கு, அதனால் பயன் பெற்ற மக்களாலேயே தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நாத்திகம் என்பது எதிர்மறையான கோட்பாடு அல்ல; நேர்மறையானது; மனிதரை மேம்படுத்திட வல்லது என எடுத்துரைத்தார்; சென்ற இடமெல்லாம் கொள்கை முழக்கம் புரிந்தார்.

இந்த மாநாட்டின் நோக்கம் நாத்திகம், மதச்சார் பின்மையை வலியுறுத்துவதாக உள்ளது.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே 'மதச் சார்பின்மையைக் கொண்ட நாடு' என பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு அந்தக் கோட்பாடு நடைமுறையில் உள்ளது என்பது கேள்வியே. இந்தக் கோட்பாட்டையே பொருளற்றதாக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் 'கடவுள் காப்பாற்றுவார்' என்று குரல் எழுப்புபவர்களாக உள்ளனர். ஏன் அமெ ரிக்க நாட்டில்  'புழக்கத்தில் உள்ள பண நோட்டில்கூட 'கடவுளின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' (மிஸீ நிஷீபீ ஷ்மீ  ஜிக்ஷீust) என்று அச்சடிக்கப்பட்டுள்ள அளவில் மதச் சார்பின்மையை பொருளற்றதாக்கி வருகின்றனர்.

இறையாண்மை மக்கள் வசமே

இறையாண்மை என்பது 'இறைவன்' என்று சொல்லப் படுகின்றவரிடம் இல்லை; இந்திய அரசமைப்புச் சட் டத்தை நாட்டுக்கு, தமக்குத்தாமே வழங்கிக் கொண்டுள்ள இந்த நாட்டு மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது. இதை மறுக்கின்ற வகையில் 'கடவுளிடம்தான் அனைத் தும் உள்ளது' என்பது தவறானது மட்டுமல்ல; அரசமைப் புச் சட்டத்தினையே அவமதிக்கும் செயலாகும்; அரச மைப்புச் சட்டம் உருவான பொழுது அந்த அவையிலே, முதுபெரும் சமதர்மக் கொள்கையாளர் என்று அறியப் பட்ட எச்.வி. காமத் தனது கூற்றாக - முகப்புரையிலே 'கடவுளின் பெயராலே' என்ற வாசகங்கள் இடம் பெற வேண்டுமென வாதிட்டார். பகவத் கீதையின் உள்ளீடாக 'கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும் இருந்திட வேண்டும்' எனக் கூறினார். ஆனால் அவரை ஆதரித் தோர் வெகு சிலரே - எதிர்த்தோர் மிகப் பலர். இதுதான் அரசமைப்புச் சட்டம் உருவான வரலாறு.

அந்த நேரத்தில் அத்தகைய எதிர்ப்பு நிலவி, அரச மைப்புச் சட்டம் உருவானதில் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கர் அவர்களின் பங்குபெரிதானதாகும்.

ஆனால், இன்று அத்தகைய நிலைமைகள் தலைகீழாக மாறிப் போயுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி, நாட்டு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் என்பது மதச்சார்பின்¬யை கேலிக் கூத்தாக்குகிறது.

சமூகத்தில் நியாயமாக நடைபெற வேண்டிய செயல்பாடுகள் தாமதமாவதைப் பொறுத்துக் கொள்ள லாம்; முரண்பாடானவை நடைபெறும்பொழுது எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அன்றாடம் மக்கள் நேர்கொள்ளும், அவதிப்படும் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தடை என்று உள்ள நிலையில், மக்களை திசை திருப்பிட கோயில்கட்டும் பணியில் கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குள் கட்டி முடித்திட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டம் - மதவாத முடக்கம்

தமிழ்நாட்டின் - இந்திய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கடல்வழி வர்த்தக வளர்ச்சிக்கு உதவிடும் சேதுக் கால்வாய் திட்டம் முறையாக ஆய்வு செய்து அரசு அனுமதி பெற்று அரசே தொடங்கிய திட்டம். இதனை புராணப் புனைவான இராமன் கட்டிய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக அரசியல் வாதிகள் போர்வையில் உள்ள மதவாதிகள் உச்சநீதிமன் றத்திற்குச் சென்று தடையாணை பெற்றுள்ளனர். உலகில் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்று வரவிருந்த சேது  சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இத்தகைய மனித முன்னேற்றத்தை மறந்து, மதத் தைத் தூக்கிப் பிடித்து மனிதத்தை மறுக்கும் செயல்கள் முறியடிக்கப்பட வேண்டும். இவை குறித்தெல்லாம் இந்த மாநாடு கலந்து பேசி, விவாதம் மேற்கொண்டு ஆக்கரீதியாக தீர்மானங்களை நிறைவேற்றிட வேண்டும். நாத்திக அடிப்படையில் மதச்சார்பின்மை உலகெங்கும் வலியுறுத்தப்பட வேண்டும். மாநாட்டு நிகழ்ச்சிகள் அதன் நோக்கத்தினை நிறைவேற்றிடும் வகையில் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகிறோம். 

                         இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

கழகப் பொருளாளரின் உரை

மாநாட்டினை தொடங்கி வைத்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

நாத்திகத்தினை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடைபெறுகின்றது. சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவிடும் சூழலில் - கடவுள்கள் பெயரால் பேதம், பிரிவினை, உரிமை மறுப்பு நடைபெறும் சூழலில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்போடு மட்டுமல்ல; கடவுள் எதிர்ப் பாகவும் களம் காண வேண்டும். இது யாரையும் புண் படுத்திட அல்ல; மனிதனை - ஒடுக்கப்பட்ட மக்களை ஏற்றம் காணச் செய்திடும் செயல். இதுதான் நேர்மறை நாத்திகம் (றிஷீsவீtவீஸ்மீ கிtலீமீவீsனீ) ஆகும்.

மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைக்காகப் போராடியவர்கள் பலர் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். காரணம் அந்த மதங்களின் கடவுளர்கள் மனிதரைப் பேதப்படுத்திடவில்லை; ஒடுக்கப்படுவதை வலியுறுத்திடவில்லை. ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம் கடவுளின் பெயரால் மனிதரை பிளவுபடுத்தியுள்ளது. எனவே மனிதரை ஒன்றுபடுத்திட, ஒற்றுமைப்படுத்திட கடவுள் மறுப்பு - கடவுள் எதிர்ப்பு அவசியமாகியது. இதைத்தான் தந்தை பெரியார் 'கடவுள் மற - மனிதனை நினை' என சமூகச் செயல்பாட்டுக்கான முழக்கமாக வழங்கினார்.

மேற்கத்திய நாடுகளில் மதம் குறுக்கிடாத மதச் சார்பின்மைக்கு அறைகூவல் வந்துள்ளது. மத உணர் வாளர்களின் ஆதிக்கம் - அரசின் மீதான ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மதவாதிகளின் குறுக் கீட்டால் - ஆதிக்கத்தால் மனித சமுதாயம் இழந்தவை ஏராளம்; கண்ட பின்னடைவுகள் பலப்பல.

கடந்த கால வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. இந்தியநாடு மதச் சார்பின்மையற்ற அரசு ஆளும் நாடு என அறிவிக்கப்பட்டாலும், மதத்தின் பிடியிலிருந்து விலகிய பாடில்லை. மதம் நீங்கிய மனித வாழ்க்கைதான் உண்மையான வாழ்வாகும்; உன்னத மான வாழ்வாகும் எனக் கூறி மாநாட்டினை தொடங்கி வைக்கிறோம்.

இவ்வாறு வீ.குமரேசன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக, நாத்திகர் மய்யத்தின் களப் பணிகளைப் பார்வையிட பேராளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பன்னாட்டு மாநாட்டில் 

கலந்து கொண்ட கழகத்தினர்

விஜயவாடாவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பி.சி.ஜெயராமன், திரா விடர் கழகப் பொறுப்பாளர்கள் தாம்பரம் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், அ.கருப்பையா, நாத்திகன் - மீனாம்பாள் இணையர்; கோ.தங்கமணி - இரா.தனலட்சுமி இணையர், இளைஞரணி பார்த்திபன், வழக்குரைஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாடலிலும் கருத்துரைகளை வழங்கினர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!

 

உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!

இந்தியா - கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவுக்கும் - 

சி.பி.எம். கட்சிக்கும் பாராட்டுகள்: தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜன.19 தந்தை பெரியாரும், சேகுவேராவும் கொள்கையில் சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள்; பொதுவுடைமை இயக்கத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் தொடர்பு எப்பொழுதும் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழங்கினார்.

அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு

நேற்று (18.1.2023) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு மற்றும் சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா!

மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ் நாட்டில் நாம் பெருமையடையக் கூடிய மகிழ்ச்சிக்குரிய, எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா - இந்த விழாவில், வழமையான பொங்கல் திருநாளில், உழைக்கின்ற பாட்டாளி மக்களுக்கு மட்டுமல்ல, உழைக்கின்ற பேச முடியாத ஜீவன்களுக்குக்கூட விழா எடுக்கக்கூடிய அறுவடைத் திருநாள் என்ற உழவர் திருநாள் முடிந்து, அந்த விழாவின் தொடர்ச்சி யாக, நேற்று காணும் பொங்கல் - இன்றைக்குக் காண வேண்டியவரை காணும் பொங்கலாகவே வந்திருக்கக் கூடிய மிக அருமையான  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களுக்கும், அவரை ஒருங்கிணைத்து அழைத்து வந்த பேபி அவர்களின் அமைப்பிற்கும் முதலில் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் மண்ணைச் சார்ந்த, சமதர்ம மண்ணைச் சார்ந்த, சுயமரியாதை மண்ணைச் சார்ந்த, தமிழ்நாட்டு மண்ணிற்கு, அம்மையார் அவர்களை அழைத்து வந்தமைக்கு நன்றி!

‘‘தோழர், தோழர்’’ என்று அழையுங்கள் என்றார் தந்தை பெரியார்!

புரட்சியாளர் சேகுவேரா - 'சே' என்றால், தோழர் என்று அர்த்தம். ‘‘தோழர்; தோழர்’’ என்று அழையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள், எங்களைப் போன்ற, உங்களைப் போன்ற இளைஞர்கள் பிறக்காத காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் ‘‘தோழர், தோழர்’’ என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல...

‘‘காம்ரேட்’’ என்று சொல்லக்கூடிய அந்த அற்புத மான பொதுவுடைமைத் தத்துவம். அந்தப் பொது வுடைமைத் தத்துவத்தைப்பற்றி சிறப்பாக உலகம் முழுவதும் பரவச் செய்து வெற்றி பெறும் நல்வாய்ப்பு - ஏகாதிபத்தியங்கள் எவ்வளவுதான் எதிர்த்தாலும், எங்களால் பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல, கியூபா போல நின்று வெற்றி பெற முடியும் என்று காட்டுவதற்கு, அந்தப் புரட்சியாளருடைய வரிசையில் சிறந்தவராக சேகுவேரா அமைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட அருமையான புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா அவர்களுக்கும், அவருடைய பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா அவர்களுக்கும் மாபெரும் வரவேற்பு - சோசலிச கியூபாவிற்கு வரவேற்பு என்ற இந்த அருமையான நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருக் கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 

தமிழ்நாட்டினுடைய செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

‘தமிழ்நாடு’ என்று சொல்லும்பொழுது இப்பொழுது எவ்வளவு பூரிப்படைகிறீர்கள்; இந்த பூரிப்பு மட்டுமல்ல நண்பர்களே, இங்கே எழுப்பப்படும் கரவொலி சாதாரணமான கரவொலி அல்ல - இது எங்கெங்கோ போய் ஒலித்து, யார் யாரையோ குடைந்து கொண் டிருக்கின்ற கரவொலியாகவும் இருக்கின்றது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றியுள்ள அரு மைத்தோழர் குணசேகரன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய தோழர் சுந்தரராஜன் அவர்களே, வேல்முருகன் அவர்களே, செல்வா அவர்களே, வர வேற்புப் பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணா அவர்களே,

விருந்தினர் அறிமுக உரையை மிக உணர்ச்சிப் பூர்வமாக இங்கே நிகழ்த்திய நம்முடைய கேரளத்துத் தோழர் சகோதரர் எம்.ஏ. பேபி அவர்களே,

கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - 

அருமைத் தோழர் கனிமொழி

எங்கள் தனித்தமிழ்ச் செல்வம், திராவிட முன் னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் பிறகு, எந்நாளும் பகுத்தறிவுச் செல்வம், கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், எங்கள் அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - அருமைத் தோழர் கனிமொழி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற எங்கள் ஆருயிர் தோழர், நாங்கள் பிரிய முடியாத தோழர் என்றால், அவர் தோழர் முத்தரசன்தான் - சி.பி.அய்.யின் தமிழ்நாட்டுச் செயலாளர் அவர்களே,

அதேபோல, தமிழ்நாட்டில் யாரையெல்லாம் ஒரு காலத்தில் ஒடுக்கி வைத்திருந்தோம் என்று ஆணவக் காரர்கள் நினைக்கின்றார்களோ, அந்த ஒடுக்குமுறை யாளர்கள் எல்லாம் இன்றைக்கு அலறக்கூடிய அள விற்கு ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் எங்கள் எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவள வன் என்று சொல்லக்கூடிய பெருமைமிகு தோழரே!

இந்நிகழ்ச்சியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கலந்துகொண்டுள்ள கொள்கை விளக்க அணியின் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கம் - அந்தப் பேரியக்கம் - இலட்சியத்தில் தமிழ்நாடு வழிகாட்டுகிறது. அரசியல் ரீதியாகப் பார்க்கும்பொழுது, மற்ற மாநிலங்களில் இருக்குமா இதுபோன்ற கூட்டணி என்பது வேறு; ஆனால், இது தமிழ்நாடு - எங்களை இலட்சியங்கள் ஒன்றிணைக்கும் - எதுவும் எங்களைப் பிரிக்காது என்று காட்டுவதற்காக வந்திருக்கின்ற அருமைச் சகோதரர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர், செய்தித் தொடர்பாளர் அருமைத் தோழர் கோபண்ணா அவர்களே,

இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிரணி தலைவர் - நம் குடும்பத்து உறுப்பினர் என்று அவரையும் அழைக்கலாம். பல பேர் நினைக்கலாம், இவர் என்ன, எல்லோரையும் உறவு  கொண்டாடுகிறாரே என்று - ஆம்!  இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான். அவருடைய தாய் - தந்தையாருடைய திருமணமே, தந்தை பெரியாருடைய தலைமையில்தான் நடைபெற்றது என்கிற வரலாறு இருக்கிறதே, அது இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்கப்படவேண்டிய வரலாறாகும்.

அதுபோலவே, தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள். நாங்கள் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள்; ஒரே தெருவைச் சார்ந்தவர்கள். அதுதான் மிகவும் முக்கியமானது.

நம்முடைய நாராயண ஆறுமுக நாயனார் அவர்களே,

பேராசிரியர் ஹாஜாக்கனி அவர்களே,

தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், எவ்வளவு சுறுசுறுப்பாக, எவ்வளவு ஆவேசமாக, எல்லா உரிமைகளையும் எவ்வாறு கேட்கவேண்டுமோ அவ்வாறே கேட்கிறார் என்று சொன்னால், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வெங்கடேசன் அவர்களே,

இந்த மேடையைப் பார்க்கிறேன்; இந்த மேடையில் பேசவேண்டிய அவசியமில்லை. இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்களும் சரி; மேடைக்கு எதிரில் அமர்ந்திருக்கின்ற நீங்களும் சரி; யாருக்கு என்ன பதில் வேண்டுமோ - அவர்களுக்குப் பதில் சொல்லக்கூடிய அற்புதமான வாய்ப்புப் பெற்றுள்ள உணர்வாளர்கள்.

இங்கேயே ஒரு கியூபா புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

ஒன்றை மட்டும் எடுத்து நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்ன இவர்களுக்கு இவ்வளவு உறவுகள் என்று நினைக்கலாம். நான் இங்கே வந்தவுடன், புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள்.

அருகிலிருந்த மொழி பெயர்ப்பாளர் சிறப்பான முறையில் மொழி பெயர்த்து அவர்களுக்குச் சொன்னார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்தவர்!

அந்த வகையில், தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான  சாதனைகளைப்பற்றியெல்லாம் நம்முடைய தோழர் சேகுவேராவின் மகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், தோழர் பேபி அவர்கள், ஒரு முத்தாய்ப்பான செய்தியை சொன்னார்.

அது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை இந்தியாவில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு, அதற்காக சிறைச்சாலைக்குச் சென்றவர் என்று சொன்னார்.

புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; 

தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு

இந்த அறிமுகம் போதும்; நம் உறவு என்பது எப்பொழுதும் புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு என்பதுதான் மிகவும் முக்கியம்.

இது ஒரு பெரிய நிகழ்ச்சி. காண வேண்டியவர்களை காணும் பொங்கல் நாளின் மீட்சியாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி.

உலகளாவிய மனிதப் பார்வை சேகுவேரா அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் இருந்தது என்பதை இளைஞர் உலகம் பார்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எல்லாம் சேகுவேரா படத்தையும், இன்னொரு பக்கம் தந்தை பெரியாரின் படத்தையும் போட்டிருப்பார்கள்.

சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சி!

ஏனென்றால், இரண்டு பேரும் புரட்சியாளர்கள். அவர்கள் செய்த புரட்சி என்பது சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சியாகும்.

‘‘இனிவரும் உலகம்’’

பெரியார் பேசுகிறார் கேளுங்கள்:

‘‘ஒரு மனிதன் தன்னுடைய காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்வதுபோல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கும் ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியாக அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டு வாழ்க்கையின் ஒற்றுமையும், உணர்ச்சியும் உள்ள சமுதாயம் ஏற்படும்’’ என்று தந்தை பெரியார் 1943 இல், ‘இனிவரும் உலகம்’ என்ற உரையின்மூலம் சொன்னார்கள்.

அந்த உரையைக் கேட்ட அண்ணா அவர்கள், ‘‘இனிவரும் உலகம்‘‘ என்ற தலைப்பில் எழுதி, நூலாக வந்திருக்கிறது.

இது பெரியாருடைய கருத்து 1943 ஆம் ஆண்டு.

வண்ணங்கள் மாறுபடலாம்; ஆனால், எண்ணங்கள், புரட்சியை நோக்கியே, எல்லா சாலைகளும் அங்கு நோக்கியே என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி வந்திருக்கிறது.

சேகுவேரா பேசுகிறார்!

இப்பொழுது சேகுவேரா பேசுகிறார் கேளுங்கள்:

‘‘If you tremble with indignation at every injustice, then you are a comrade of mine.’’

‘‘ஒவ்வொரு அநீதியைப் பார்க்கும்பொழுது, உங்களுடைய கைவிரல்கள், உங்கள் உடல்கள் நடுநடுங்கி கோபதாபங்களை உருவாக்கக் கூடிய அந்த சூழ்நிலையில் இருந்தால், நீ என்னுடைய தோழன்.’’

"Yes. We are the Comrades of the Cuba's humanists

We are the Comrades of Working Class

We are the Comrades of oppressed, depressed and suppressed

We oppose tooth and nail - fundamentalists and facists"

எனவே, இந்த நாள் ஓர் இனிய நாள். 

இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில்!

அதுபோல நண்பர்களே, இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில் - தந்தை பெரியாரும் சரி; சேகுவேரா அவர்களும் சரி.

அவருடைய மகளையும், பேத்தியையும் அவ்வளவு அன்போடு வரவேற்கிறோம். இது ஒரு சம்பிரதாய உறவல்ல.

நீங்கள் கியூபாவின் மகள் மட்டுமல்ல; இந்த நாட்டின் மகள். இந்த நாட்டின் மகள். இங்கே வந்திருக்கின்ற பேத்தி, எங்கள் பேத்தி.

நீங்கள் தமிழ்நாட்டு மகள்!

இந்த நாட்டு மகள் என்பதைவிட, அதிகமாக ஒருபடி மேலே சொல்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டு மகள். அதுபோல, கேரளத்தின் மகள். அதுபோல, வங்கத்தின் மகள்.

எங்கே இருந்தாலும், நீங்கள் எங்கள் செல்வம்; எங்கள் உறவு - இந்த உறவு நீடிக்கவேண்டும். 

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய உடலில் இயற்கை வழியிலே சிறுநீர் பிரியாத நேரத்தில்கூட வயிற்றில் துளை போட்டு, ஒரு குழாயை இணைத்து, அந்தக் குழாயின் மறுபகுதியை ஒரு பாட்டிலினுள் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்து, அதைத் தூக்கிக்கொண்டு 5 ஆண்டுகாலம் நடந்தார் என்பது மிகப்பெரிய வரலாறு.

பதவி மோகமற்ற போராளிகள்

அதேநேரத்தில்தான், கியூபா புரட்சியில் வென்று, அமைதியை நிலவ வைத்து, பொறுப்பைத் துறந்து சென்றவர், நம்முடைய சேகுவேரா அவர்கள். அவருடைய உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல், பதவி மோகமற்ற போராளியாக -எங்கெல்லாம் அநீதிகள் நடைபெறுகின்றனவோ - எங்கெல்லாம் சமூக அநீதிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் எனக்கு வேலை இருக்கிறது; அங்கெல்லாம் நான் செல்வேன் என்று சொன்னவர்தான் காமரேட் என்ற உணர்வுபடைத்த சேகுவேரா அவர்களுடைய பணி.

அதனால்தான், இன்னொரு மகளைப் பார்த்துச் சொன்னார், நீங்களும் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். கொள்கைப் பணிக்கு வாருங்கள் என்று சொன்னார்.

அது வாரிசு முறையல்ல நண்பர்களே - புரட்சியின் தொடர்ச்சி அது!

பொதுவுடைமைதனைக் 

காப்போம்! காப்போம்!!

‘‘இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் 

இது எனது என்ற கொள்கையை உடைப்போம் 

உலகமெங்கும் புதிய சமுதாயத்தைப் படைப்போம்

பொதுவுடைமைதனைக் காப்போம்! காப்போம்!!’’

இதுதான் உறுதி என்று சொல்லி, உங்களை வரவேற்கிறோம்!

வாழ்க புரட்சி!

வளர்க புரட்சி!

வாழ்க தமிழ்நாடு!

வளர்க பொதுவுடைமைத் தத்துவம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - ‘’மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில் (மூன்று முறை) நாம் பெருமை யடையக் கூடிய விழா’’ என்று உரைத்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து விண்ணைப் பிளக்கும் வகையில்,
‘‘தமிழ்நாடு வாழ்க!’’,  ‘‘தமிழ்நாடு வாழ்க!’’, ‘‘தமிழ்நாடு வாழ்க!’’ என்று பலத்த கைதட்டலுடன் முழக்கமிட்டது மெய்சிலிர்க்கச் செய்தது. 
குறைந்த நேரம் பேசினாலும், கலகலக்கச் செய்தார் ஆசிரியர்!

ஏகாதிபத்திய எதிர்ப்பு - சமதர்ம புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி அலெய்டா குவேராவுக்குப் பாராட்டு

 

 சேகுவேராவின் பெயர்த்தி டாக்டர் எஸ்டெஃபானிக்கு

 தமிழர் தலைவர் பெரியாரின் பெண்ணியம் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை வழங்குகிறார்

"அநீதியால் ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் தனது தோழரே என்ற மானுட சகோதரத்துவத்தின் மாண்பாளர் சேகுவேரா"

 உலகறிந்த சோசலிச புரட்சியாளர் - தென் அமெரிக்கா கண்டத்தினைச் சார்ந்த அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபா விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டவர் - தனக்குக் கிடைத்த முதன்மை அதிகாரப் பதவிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காங்கோ, பொலிவியா ஆகிய நாடுகளில் நிலவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது,  அதிகார அழிவு சக்திகளால் கொல்லப்பட்டவர் - தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முறையைக் கடைப்பிடித்த பெரும் புரட்சியாளரான எர்னெஸ்ட் சே குவேரா அவர்களின் மகள் மருத்துவர் அலெய்டா குவேரா சென்னை மாநகருக்கு வருகை தந்திருந்தார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா நாட்டு டனான ஒற்றுமையைப் பேணும் தேசியக் குழுவின் ஏற்பாட்டில் வருகை தந்திருந்த அலெய்டா குவேரா அவர்களுக்கு வரவேற்பும், பாராட்டு விழாவும் சென்னை - அண்ணாமலை மன்றத்தில் 18-1-2023 அன்று அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.

பாராட்டுக் கூட்டத்திற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தோழர்கள் எல்.சுந்தரராஜன், 

ஆர். வேல்முருகன், ஜி. செல்வா ஆகியோர் முன்னிலை யில் என். குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

மருத்துவர் அலெய்டா குவேரா பற்றிய அறிமுக உரையினை எம்.ஏ. பேபி அவர்கள் வழங்கினார். தமிழர் தலைவரின் பாராட்டுரையுடன் தொடங்கிய விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (தி.மு.க.), தொல்.திருமாவளவன் (வி.சி.க.), இரா. முத்தரசன் (சி.பி.அய்.) வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உ.வாசுகி, ஜி. இராம கிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பேராசிரியர் ஹாஜாகனி (ம.ம.க.) மற்றும் பலர் பாராட்டி உரையாற்றினர்.

அலெய்டா குவேராவுக்கு தமிழர் தலைவர் செய்த சிறப்பு

புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வியான மருத்துவர் அலெய்டா குவேராவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். நினைவுப் பரிசாக 'Collected Works of Periyar E.V.R.'  மற்றும்  'A Man Ahead of His Time' ஆகிய புத்தகங்களை வழங்கினார். சிறப்புச் செய்திடும் பொழுது தந்தை பெரியார் பற்றிய சிறப்புகளை, குறிப்பாக அலெய்டா குவேராவிடம் ஆசிரியர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, எம்.ஏ. பேபி அவர்கள் 'பெரியார்தான் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை  (Communist Manifesto) தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என வெகு பொருத்தமாக அலெய்டா குவேராவிடம் கூறினார்.

அலெய்டா குவேரா அவர்களுடன் வருகை தந்திருந்த அவரது மகளும், சேகுவேராவின் பெயர்த்தி யுமான எஸ்டெஃபானி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து 'Periyar Feminism'எனும் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். 

பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சார்பாக சிறப்புச் செய்யப்பட்டது. நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

விருந்தினர் பற்றிய அறிமுக உரை

அலெய்டா குவேரா அவர்களுடன் பல்வேறு நகரங்களுக்குச் சென்று வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி அறிமுக உரையாற்றினர்; அதன் சுருக்கம்:

ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்த கியூபா, புரட்சித் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, எர்னெஸ்ட் சேகுவேரா ஆகியோர்களின் வழிகாட்டுதலில் சோசலிச குடியரசாக மலர்ந்தது. இருப்பினும் கியூபாவினை எதிர்த்து பொருளாதாரத் தடையினை அமெரிக்கா விதித்தது. அய்க்கிய நாடுகள் அவையில் (United Nations Organisation) அங்கம் வகிக்கும் கியூபா பொருளாதாரத் தடையினை நீக்கக்கோரி அவையில் வேண்டியது ஓட்டுக்கு விட்ட பொழுது இன்றைக்கு உக்ரைன், பிரேசில் (சோசலிசம் மலர்ந்துள்ள நாடு) ஆகிய இரண்டு நாடுகள் மற்றும் தடை விதித்த அமெரிக்கா தவிர, உலக நாடுகள் முழுவதும் - இந்தியா உட்பட கியூபாவின் வேண்டு கோளுக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும், அமெரிக்க நாட்டுப் பொருளாதாரத் தடை நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட குறைந்த மக்கள் தொகையான 1.5 கோடி மக்களைக் கொண்ட கியூபா நாடு சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் பல வகையிலும் முன்னேற்றம் கண்டுள் ளது. மருத்துவர் - மருத்துவர் சேவை மிக அழுத்தமாகக் கிடைக்கும் நாடு கியூபா, வருகை தந்துள்ள சேகுவே ராவின் மகள் அலெய்டா குவேரா அவர்களும் ஒரு மருத்துவர் - குழந்தை மருத்துவ வல்லுநர் - ஒரு சமூகப் போராளி. ஒரு பெண்ணிய - பெண் விடுதலைப் போராளி. மக்கள் அதிகாரமே மகத்தானது என்பதை அடிப்படையாக வைத்து சமத்துவம், சம வாய்ப்பினை உருவாக்கிட பாடுபட்டு வருகின்றார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று பாடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட பெண் போராளி - பெண்ணியப் போராளி அலெய்டா குவேரா அவர்களுக்கு நாம் தரும் ஆதரவு முழக்கம் 'வெற்றியை நோக்கிப் பயணியுங்கள்' என்பதே. இவ்வாறு அலெய்டா குவேரா பற்றி  எம்.ஏ. பேபி அறிமுகம் செய்தார்.

(தமிழர் தலைவரின் தொடக்க - பாராட்டுரை தனியே காண்க).

கவிஞர் கனிமொழி உரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள்  ஆற்றிய உரையின் சுருக்கம்:

நான் எப்பொழுதும் ஆசிரியர் அய்யா அவர்களைப் பின்பற்றி வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சியிலும் ஆசிரியருக்கு அடுத்து, அவரைத் தொடர்ந்து பாராட்டுரை வழங்கிட வாய்ப்பளித்ததற்கு எனது நன்றியினைத்தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகம், படங்கள் ஆகியவற்றில் மட்டுமே பார்த்துப் படிக்கப்பட்ட புரட்சியாளர் சேகுவேரா அவர்களை - அவரது சாயல் உள்ள அன்புப் புதல்வியார் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்கள் மூலம் பார்க் கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறது. புரட்சியின் வெற்றியை பறைச £ற்றிடும் நாடு கியூபா, சிறிய தீவு நாடாக இருந்தாலும் அந்த மக்களி டையே கொள்கை அளவில் தெரியும் மொழி ஒரே மொழி 'மனிதநேயம்' மட்டுமே.

அதிக அளவில் மருத்துவர் எண் ணிக்கை, நாட்டுமக்களுக்கு நிறைந்த மருத்துவ சேவை வழங்கிடும் நாடு கியூபா. இருப்பினும் கியூபா நாட்டு நிலைமையை ஒரு சமயம் அலெய்டா குவேரா குறிப்பிட்டார். மருத்துவ சேவைகள் வழங்கிடும் அடிப்படை வசதிகள் கியூபாவில் நிலவினாலும் உடல் நலத்திற்கான மருந்துகள் வெளி நாடுகளிலிருந்து தான் - குறிப்பாக அமெரிக்காவிலிருந்துதான் வர வேண்டும். வர வேண்டிய மருந்து வராததால் மருத்துவர் இருந்தும், மருத்துவ சேவை இருந்தும் மர ணத்தைத் தழுவிய குழந்தைகள் ஏராளம் என்பதே அலெய்டா கூறியது. அந்நிலை நீங்கிட உலக நாடுகள் ஆதரவுக் குரல், கரம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும்     NEET ('நீட்') தேர்வுவிலக்கு மட்டும் கிடைத்து விட்டால் கியூபாவில் உள்ளதைப் போல பரந்துபட்ட மருத்துவ சேவை வழங்கிட முடியும்.  ழிணிணிஜி  மூலம் தடை உள்ள நிலையிலும், 'இல்லம் தேடி மருத்துவம்" சேவை வழங்கப் பட்டு வருகிறது. புரட்சியின் பலன் முழுமையாகக் கியூபாவில் கிடைப்ப தற்கு அலெய்டா குவேரா எடுத்து வரும் முன்னெடுப்புகள் - முயற்சிகள் வென்றிட நாமெல்லாம் உறுதுணை யாக இருப்போம் என கூறி அவர் களை வரவேற்று பாராட்டி அமர் கின்றேன்.

இவ்வாறு கவிஞர் கனிமொழி தமது உரையில் குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் 

தொல். திருமாவளவன் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்  - தலைவர் டாக்டர் தொல். திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மொழி, மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து உலகப் பார்வையுடன் வாழ்ந்த புரட்சியாளர் சேகுவேரா உலகில் எந்தப் பகுதியில் ஆதிக்க சக்திகளால் அல்லல்படும் மக்கள் இருக்கிறார்களோ அவர்களுக் கெல்லாம் தோழனாக விளங்கினார்.  அலெய்டா குவேரா அவர்களைப் பார்க்கும்பொழுது - சேகுவேரா அவர்களே நேரில் வந்தது போல - அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.

ஏகாதிபத்தியம் என்பது முதலா ளித்துவம் சார்ந்தது மட்டுமல்ல; மத அடிப்படையிலான ஆதிக்கமும்  - ஒரு வகையான ஏகாதிபத்தியமே! சேகுவேராவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இந்த மண்ணில் சனாதன எதிர்ப்பு என்பதாகவே கருதப்பட வேண்டும். அல்லல்படும் மக்களுக்கு ஆதரவாகவே  இருந் திருப்பார் சேகுவேரா. அவர் வாழ்ந்த காலத்தில் ஈழப்போர் நடைபெற்றி ருந்தால் ஈழ விடுதலை கிடைத் திருக்கும். கியூபா புரட்சியை முடித்து விட்டு பொலிவியா நாட்டிற்குச் சென்றதைப் போல, பல நாடுகளுக்கும் - ஆதிக்க சக்திகளால் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சேகுவேரா குரல் எழுப்பியிருப்பார். காலம் அவரை விட்டு வைக்கவில்லை என ஏகாதிபத்திய சக்திகள் திசை திருப்பிட முனைந்தார்கள். அவரது  வேறுபட்ட அணுகுமுறை, சோசலிச கொள்கை மீதான பற்று உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வினை - எழுச்சியினை ஊட்டிட வேண்டும் எனக் கூறி, அவரது அருமை மகள் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்களை பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு எழுச்சித் தமிழர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

தலைவர்களின் பலரது பாராட்டு களுக்குப் பின்னர் மருத்துவர் அலெய்டா குவேரா உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நன்றி உரையினை ஆறுமுக நயினார் வழங்கினார். 

பல கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல தரப்பினரும் உணர்ச்சிப் பெருக்குடன் அலெய்டா குவேரா அவர்களைக் காண பெருந் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

திராவிடர் கழகத்தின் சார்பாக துணைத் தலைவர், கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. கும ரேசன், சென்னை மண்டல செயலா ளர் தெ.செ. கோபால்,  அமைப்பாளர் சண்முகப்பிரியன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேஷ் மற்றும் பல தோழர்கள் பங் கேற்றனர். சமூகநீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத், டாக்டர் சாந்தி மற்றும் பல ஆர்வலர்கள் பாராட்டு நிகழ் விற்கு வருகை தந்திருந்தனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அலெய்டா குவேரா

தனது பண்பாட்டு அடையாளம்பற்றி

"ஒரு முதலாளித்துவ சாம்ராஜ்யத்திற்குப் பக்கத் தில் இருந்து கொண்டு, சோஷலிசப் புரட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற கரீபியன் பகுதியில் உள்ள ஒரு தீவில் (கியூபா) இருந்து  நான் வருகிறேன். கருப்பின மக்களோடு, ஸ்பானிஷ் மிகச் சிறிய அளவில் பூர்வ குடிகள், சிறிது சீனர்கள் இணைந்த கலவையாக விளங்கும் 'கரீபியன் கலாச்சாரம்' என்னுடையது."

(தனது பன்மைத்துவ பண்பாட்டுத் தன்மை பற்றி அலெய்டா குவேரா கூறியது - கியூபா போன்ற மிகச் சிறிய, ஆனால் மிகப் பெரிய கொள்கைப் பலம் வாய்ந்த நாட்டில் உள்ள 'பண்பாட்டு' நிலையாகும். பன்மைத்துவம் கலந்த பண்பாட்டிலும், ஒருமைப் பாடு காட்டி வருகின்றனர்).


புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் - அலெய்டா குவேரா!

 

கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான் கொண்ட லட்சியத் திற்காக தன்னையே கொடுத்த தகத்தாய கொள்கைத் தங்கம் தான் புரட்சியாளர் சேகுவேரா!

அவர்தம் புரட்சிப் பட்டறையில் பதப்படுத்தி பூத்த புதுமலர்கள் - கொள்கைகள் நறுமலர்கள் தான் தமிழ்நாட்டிற்கு - கேரள சுற்றுப் பயணம் முடித்து வந்து நமது கொள்கைப் போராட்டத்தின் திரிகளுக்கு மேலும் ஒளியூட்டினர். அவரது  அன்பு மகள் அலெய்டா சேகுவேரா மற்றும்  குழந்தை நல மருத்துவரும், அவரது கொள்கைப் பேத்தியுமான டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்தனர். பெரியார் மண்ணான தமிழ்நாட்டு மண்ணின் கொள்கை - லட்சிய மணத்தினை முகர்ந்து - முற்றோதிய முழு மனிதம் நோக்கிய இலக்குடன் பதப்படுத்திய  மண்ணாக தமிழ் மண் இருப்பது கண்டு புளகாங்கிதத்துடன் பூரித்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும், அவர் களுக்குத் தோள் கொடுக்கும் இயக்கத் தலைவர்களும் கரம் கோர்த்து, புதியதோர் உலகு செய்து, பொது உடைமைக் கொள்கை புத்தாக்கம் தரும் புதிய பூமி, புதிய வானமாக தமிழ்நாடு- பெரியார் மண் திகழ்வதில் நம்மைப் போலவே - தோழர் அலெய்டாவும் மகிழ்ந்து "உங்கள்  மாநிலத்தின் பெயர் என்ன?" என்று கூடியிருந்த மக்கள் பெருந்திரளைப் பார்த்துக் கேட்க - 'தமிழ்நாடு' என்று மக்கள் ஓங்கிக் குரல் கொடுக்க, இன்னும் உரத்து முழங்குங்கள் என்று கூறியது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திராவிட இலக்கின் உண்மையை உலகும் உணர்ந் தோதுகிறது என்பதையே காட்டியது!

அது மட்டுமா?

அவரை நாம் பெருமையோடு, அவர் 'புரட்சி வயிற்றிலிருந்து  வந்த பீரங்கி' என்று வர்ணித்து வரவேற்ற நிலையில் நேற்று அவர் பதிலளித்தப் பாங்கு வியக்கத்தக்கது! வித்தகர் அவர் என்பதை விரி உலகத்திற்கே உணர்த்தியது!

"நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல;

நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம்!

என் தாயார் (புரட்சியாளர் சேகுவேராவின் மனைவி) கூறிய அறிவுரை எனக்கு என்ன தெரியுமா?"

"இந்த மண்ணில் கால் ஊன்றிய நீ எப்போதும் உறுதியாக நிற்க வேண்டும். இதை இந்த நேரத்தில் நினைவு கொள்கிறேன்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது!

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அங்குள்ள மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்.

எத்தனை தடைகள் இருந்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியை மட்டும் அமெரிக் காவால் தடுக்க முடியவில்லை"

"எனது தந்தையார் இறந்தபோது (படுகொலை செய்யப்பட்டதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார் - கவனியுங்கள்) உலக மக்களில் பெரும்பாலோர் வருத்தப்பட்டனர்.

ஒருவரின் இறப்புக்காக யாரும் அழ வேண்டியது இல்லை; அவர் கடமையைத் தொடர்ந்து செய்தால் அவர் நம்மோடு வாழ்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்"

இந்த வீரமும், நெஞ்சத்துக் கொள்கை உரமும் நிறைந்த பக்குவப்பட்ட பேச்சே, சேகுவேராவின் குடும்பம் கொள்கைப் பட்டறையில் தயாரித்த போர்க்கள ஆயுதங்களாகவே அமைந்திட்டன என்பதை நமக்கும், உலகத்திற்கும் காட்டுகிறது!

இப்படிப்பட்ட வீரப் பெண்களே, வீர வேங் கைகளே, விவேக சிந்தாமணிகளே இன்றைய அடிமைப் பெண்ணுலகை  ஆர்ப்பரித்து எழ வைக்கக் கூடிய தகுதி வாய்ந்தோராவர். பாலின வேறுபாடு இன்றி சமூகப் புரட்சிக்குத் தலை மையாக - அன்னை மணியம்மையார் போன்ற தியாகத் திருஉருவங்களை முன்னிறுத்தி புதியதோர் உலகு செய்து, அதனைப் பொது உரிமை, பொது உடைமை பூத்த சமுதாயமாக மாற்றிட புரட்சி பூபாளம் பாடுவோம் என்பதே தோழர் அலெய்டா பெற்ற வரவேற்பும், அதில் அவர் ஆற்றிய பதிலுரையும் - இல்லையா?

வியாழன், 9 மார்ச், 2023

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் தந்தை பெரியார் பிறந்த நாள் - கழகக் கொடியேற்று விழா

 

ஆவடி, அக். 8- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம், மற்றும் கொடியேற்று விழாக்கள் என மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை யில் சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

"பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 4.10.2022 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமையில், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவர சன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத்தலைவர் சிவ.இரவிச்சந்திரன், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் இரா.வேல் முருகன்,  மாவட்ட துணைச்செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கழகத் தோழர்கள், 14 புதிய உறுப் பினர்கள் உட்பட 28 பேர் கலந்து கொண்டனர். தோழர்கள் தன்அறிமுகம் செய்த பின்பு, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ரா.முருகேசன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.

"பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப் பில் தலைமை உரையை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் ஆற்றினார். உரையில் தொழிலாளர் களிடமும், மக்களிடமும் பகுத்தறிவுச் சிந்தனைகளை கொண்டுச் செல்வதற்கான தேவையை வலியுறுத்தினார்.

 மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஆகியோர் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கினர். அவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக ஆவடி நகரச் செயலாளர் இ. தமிழ்மணி அதே தலைப்பில் சிறப்புற தம் உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் தாம் இயக்கத்தில் இணைந்த சூழலையும் காரணத்தையும் விளக்கியதுடன் புத்தக வாசிப்பின் அவசியங்களை விளக் கினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பகுத்தறிவாளர் கழகத் தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழகத்தினை வளப்படுத்த பல்வேறு வழித்திட்டங்களை முன்னிறுத்தி உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் "பகுத்தறிவு உலகை நோக்கிய பயணம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். அவரது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கம், வளர்ச்சி, ஆற்றிய பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் ஆகியவற்றையும், பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் செயல்பட வேண்டிய தேவையையும் விளக்கி, கழக ஏடுகளான  ‘விடுதலை', ‘உண்மை', ‘Modern Rationalist', ‘பெரியார் பிஞ்சு' போன்ற ஏடுகளைப் படித்தல் மற்றும் பரப்புதலின் அவசியத்தை விளக்கினார். ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் பெரியார் உலகம் நன்கொடை பற்றிய முக்கியத்து வத்தையும், மற்றும் வருகிற 29 , 30 அக்டோபர் ஆகிய தினங்களில் நடைபெறவிருக்கும் அகில இந்திய பகுத்தறி வாளர் சம்மேளனம் மாநாட்டை பற்றியும் (Federation of Indian Rationalist Association) (FIRA) எடுத்து ரைத்தார்.

இறுதியாக, பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் துணை செயலாளர் கே. கார்த்திகேயன், கூட்டத்தின் தீர் மானத்தை முன் மொழிந்து நன்றியுரையாற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஆவடி மாநகராட்சி மற்றும் இதனை சுற்றி அமைந்துள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான மேல்நிலை பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், இவ்வட்டார மாணவர்களின் உயர் கல்விக்கான அரசு கல்லூரி எதுவும் அருகில் இல்லை. எனவே ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளின் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி ஒன்றை நம் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைக்க வேண்டும் என்று இக்கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. அதற்கான முயற்சிகளை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளகிறது.

இக்கூட்டத்தில் இறுதியாக ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புது மண இணையரை (பால கணபதி - தாரணி) நமது மாநில பொறுப்பாளராகள் வாழ்த்தினர்.

கூட்டத்தில் ஆவடி நகரச் செயலாளர் கோ.முருகன், வச்சிரவேலு, பேபி ஜெயராமன், மு.சுந்தரவடிவேலு, எ.கண்ணன், கன்னடப்பாளையம் தமிழரசன், கலைச் செல்வன், ரகு, மைனர் சேவுகன், ரூபன், அழகொளி, தாரணி, பாலகணபதி, சுந்தர்ராஜன், ஆவடி நாகராஜ், சந்தோஷ், இளந்தென்றல் மணியம்மை, வை.கலையரசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு முன் இணை நிகழ்வாக புதிய இரண்டு இடங்களில் மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திகேயன் முயற்சியில் உருவான கழகக் கொடியேற்றமும் நிகழ்ந்தது.

கோவர்த்தனகிரி பேருந்து நிறுத்தம்

முதலாவதாக கோவர்த்தனகிரி பேருந்து நிறுத்தத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ரா.முருகேசன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்  கழகக் கொடியேற்றினார். இதில் ப.க. மாவட்டத் தலைவர் ஜானகிராமன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் க.இளவரசன், ஆவடி ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, மாயாதேவி, சுஜிதா கார்த்தி கேயன், சவிதா சட்டக் கல்லூரி மாணவர் சந்தோஷ் பெரியார் பிஞ்சுகள் சமிக்ஷா, இளந்தென்றல் மணியம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்வா நகர்

அடுத்து கோவர்த்தனகிரி செல்வா நகரில் தோழர் கார்த்திகேயன் இல்லத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொடிமரத்தில் ப.க.மாவட்டத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் கொடி யேற்றினார். இதில் சுஜித்ரா கார்த்திகேயன், துளசி பாண்டு ரங்கன், கமலி செல்வம், கோவிந்தம்மாள் கண்ணபிரான், கயல்விழி சேகர், மாயாதேவி ஜெயபால், செந்தில் உள்ளிட்ட தோழர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் பெரியார் 1000 தேர்வு - மய்யங்கள் 22 மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

 

பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்கள் மத்தியில் பெரியாரைப் பற்றி புரிந்து கொள்ளும் சிறப்பான நிகழ்வாக நடந்தேறியது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆசிரிய பெருமக்களும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்தனர். அவர்களும் பெரியார் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

வழக்கம் போல மாணவிகளே பெருமளவில் கலந்து கொண்டனர்.

23-08-2022

9 பள்ளிகளில் பெரியார் 1000 தேர்வு நடத்தப் பட்டது.

அயப்பாக்கம்

1. அயப்பாக்கம் அரசுப்  பள்ளியில் 216 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். சி.அரசு மாணவர் களுக்கான புத்தகங்களை வழங்கினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

2.  அயப்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில் 200 மாணவி கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். சி.அரசு  மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் 

பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. 

பெரம்பூர்

3. பெரம்பூரிலுள்ள சென்னை  மகளிர் பள்ளியில் 108 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி  மாணவி களுக்கான புத்தகங்களை வழங்கினார். மாநில  பகுத்தறி வாளர் கழகச் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வட சென்னை மாவட்ட கழகச் செயலாளர் தி.செ.கணேசன் ஆகியோர் முன்னிலையில் தேர்வு  நடைபெற்றது. 

செம்பியம்

4. செம்பியத்திலுள்ள சென்னை  பள்ளியில் 100 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள்.  மாநில  பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், வட சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் தி.செ..கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

5. அயனாவரம் கல்கி அரங்கநாதன் மேனிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பெரியார் 1000 தேர்வினை எழுதினார்கள். ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமாக தேர்வு நடை பெற்றது. சென்னையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கலந்து கொண்ட பள்ளி இது. பள்ளியின் முதல் வரும், ஆசிரியப் பெருமக்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள். பேராசிரியர் சுரேஷ்  முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இயக்க ஆர்வலர் துரைராஜ், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தியாகராயர் நகர்

6. தியாகராயர் நகரில் உள்ள நவபாரத் பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அரும்பாக்கம் தாமோதரன், அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எண்ணூர்

7. எண்ணூரிலுள்ள அரசுப் பள்ளியில் பெரியார்  1000 தேர்வு நடைபெற்றது 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ.மு.மோகன் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

சைதாப்பேட்டை

8. சைதையிலுள்ள மாந்தோப்பு சென்னை மகளிர் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 150 மாணவிகள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவிகளிடையே தேர்வின் நோக்கத்தினை விளக்கி சிறப்புரையாற்றினார். மாணவிகளுக்கான புத்தகங்களை வழங்கி முனைவர் ஏ.திருவேங்கடம் விளக்க உரையாற்றினார். பள்ளியின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால்  நிகழ்வில் கலந்து கொண்டார்.  

கண்ணம்மாபேட்டை

9.  .தியாகராயர் நகர் கண்ணம்மா பேட்டை  சென்னை மேனிலைப்  பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 60 மாணவர்கள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவரர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாடி நிகழ்வினை துவக்கிவைத்தார். வருமானத் வரித்துறை அதிகாரி கு.அன்பு தனசேகர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். தோழர் கு.கண்ணன் மற்றும் வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

24.08.2022 - செனாய் நகர்

10.   செனாய் நகரிலுல்ள வி.க. மேனிலைப் பள்ளியில் 51 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள்.  மாநில  பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. 

11.   செனாய் நகரிலுல்ள அரசு மகளிர் மேனிலைப் பள்ளி யில் 125 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள்.  மாநில  பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தேர்வினை நடத்தினார். 

அய்.சி.எப்.

12. அயனாவரம் அய்.சி.எப்.  மேனிலைப் பள்ளியில் 102 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள்.  மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார். சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் ஏஜாஸ் அகமது மாணவர் களுக்கு புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் கலந்து கொண்டார்.

13.  அயனாவரம் சவுந்திரப் பாண்டியனார்   மேனிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள்.  மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே கலந்துரையா டினார். இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

25.08.2022 - கொடுங்கையூர்

14. சென்னை கொடுங்கையூரிலுள்ள சேவியர் மேனிலைப் பள்ளி, (முத்தமிழ் நகர்) இங்கு 51 மாணவர்கள் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் தேர்வெழுதினார்கள். பேராசிரியர் சுரேஷ், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இப் பள்ளியில் சென்ற முறை நடை பெற்ற பெரியார் 1000 தேர்வில் கலந்துகொண்ட மாணவி  மாநில அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத் தக்கது.

15. அயனாவரம் ரங்கையா நாயுடு மேனிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள்.   இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 

16. அயனாவரம் மார்க்கெட்சென்னை மேனிலைப் பள்ளியில் 75 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள்.   இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 

பெரம்பூர்

17. பெரம்பூர் கல்கி அரங்கநாதன் மேனிலைப் பள்ளியில் 150 மாணவர்கள் பெரியார் 1000 தேர்வினை எழுதினார்கள். ஆங்கிலம் - தமிழ் இரண்டிலுமாக தேர்வு நடை பெற்றது.  பள்ளியின் முதல்வரும், ஆசிரியப் பெருமக்களும் சிறப் பான ஒத்துழைப்பை நல்கினார்கள். பேராசிரியர் சுரேஷ் , வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர்  முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

30.08.2022 - கீழ்ப்பாக்கம்

18. சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள சி.எஸ்.அய். பெய்ன் மகளிர் மேனிலைப் பள்ளியில்  பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 150 மாணவிகள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவி களிடையே தேர்வின் நோக்கத்தினை விளக்கி சிறப்புரை யாற்றினார். பள்ளியின் முதல்வர் மாணவர் கழகச் செயலாள ருக்கு சிறப்பு செய்தார். பள்ளியின் துணை முதல்வரும் உரையாற்றினார்.  பள்ளியின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் நிகழ்வில் கலந்து கொண்டார்.  

19. ஆரணியிலுள்ள முள்ளிண்டிறம் அரசு மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. 100 மாண வர்கள் தேர்வெழுதினார்கள்.  வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

01.09.2022 - சீசமங்கலை

20. ஆரணியிலுள்ள மேல் சீசமங்கலை அரசு மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. 50 மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.  வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னி லையில் தேர்வு நடைபெற்றது.  

02.09.2022 - எழும்பூர்

21. சென்னை எழும்பூரிலுள்ள டான்பாஸ்கோ மேனி லைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே கலந்துரையாடி தேர்வினை துவக்கி வைத்தார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் முன்னிலை வகித்தார்.

ஆயிரம் விளக்கு

22. ஆயிரம் விளக்கிலுள்ள சர்ச் பார்க் கான்வென்டில் உள்ள  ஆங்கிலோ-இந்தியன் மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடைத் தேர்வினை 260 மாணவிகள் எழுதினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அரும்பாக்கம் தாமோதரன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால்,  வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.இராமு ஆகியோர் முன்னிலையேற்றனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 22 பள்ளிகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக தோழர்கள் ஒத்துழைப்புடன் நடத்தப் பட்டது.

பெரியார் உலகமயமாகிறார் : மண்டைச் சுரப்பை உலகு தொழும் மலேசியா நாட்டில் உள்ள கெடா, பினாங்கு மாநிலங்களில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா


படம்: 1 மலேசியா நாட்டில் உள்ள கெடா மாநிலம் கூலிம் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழாவில் பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்தார் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன். நிகழ்வில் தேசியத் தலைவர் அண்ணாமலை, தேசிய துணைத் தலைவர் பாரதி, கூலிம் கிளை தலைவர் டாக்டர் முரளி, துணைத் தலைவர் மாரிமுத்து, கெடா மாநில தலைவர் சு பாலன் குமரன், அறிவிப்பாளர் சரளா, கூலிம்கிளைச் செயலாளர் விக்டர், உதவி தலைவர் மனோகர், பட்டர் வொர்த்குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் எழுச்சி உரை ஆற்றினார் பெரியார் பிஞ்சுகளின் உரையரங்கமும் நடைபெற்றது. 18.9.2022 மாலை 4 மணி கூலிம் தமிழவேள்கோ. சாரங்கபாணி தமிழ் பள்ளி. படம் 2:  மலேசிய நாட்டின் ம. தி .க சார்பில் பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு போல் நடைபெற்றது. தேசிய தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மேனாள் மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் நிகழ்வை தொடங்கி வைத்து தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பான கருத்துக்களை பதிவு செய்தார் மாநில கழக பொருளாளர் குணாளன் வரவேற்புரையாற்றினார் செயலாளர் யோகேஸ்வரி ஏற்பாட்டு குழு தலைவர் நாராயணசாமி துணைத் தலைவர் மருதமுத்து தேசிய துணைத் தலைவர் பாரதி, தேசிய உதவி தலைவர் மனோகர், டத்தோ மரியதாஸ், பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, கெடா மாநில தலைவர் பாலன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா படங்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து பெரியார் தொண்டர்களுக்கு சிறப்பு செய்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தந்தை பெரியார் குறித்த பேருரை ஆற்றினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. (18.9.2022  காலை 9 மணி - பட்டர்வொர்த் தேவான் தத்தோ ஹாஜி அகமத் படாவி அரங்கம்).

ஞாயிறு, 5 மார்ச், 2023

கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு மும்பையில் விருது

 

மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக பல்வேறுவகையில் செயல்பட்ட யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கி ஊழியர் அமைப்பின் செயலாளருமான கோ.கருணநிதி அவர் களுக்கு ராஷ்டிரிய சமாஜ் யஷ்வந்த் கவுரவ் விருது 2023 வழங்கி சிறப்பித்தனர். 

விருது வழங்கும் விழாவில் ஆந்திர மாநில மேனாள் தலைமை நீதிபதி மற்றும் சித்தராமானந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதினை வழங்கினர். 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய 

கோ.கருணாநிதி சமுகநீதிக் களத்தில் தந்தை பெரியாரின் பங்கும் அதன் பலன் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிப்பது குறித்து உரையாற்றினார்.