• Viduthalai
பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்கள் மத்தியில் பெரியாரைப் பற்றி புரிந்து கொள்ளும் சிறப்பான நிகழ்வாக நடந்தேறியது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆசிரிய பெருமக்களும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்தனர். அவர்களும் பெரியார் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வழக்கம் போல மாணவிகளே பெருமளவில் கலந்து கொண்டனர்.
23-08-2022
9 பள்ளிகளில் பெரியார் 1000 தேர்வு நடத்தப் பட்டது.
அயப்பாக்கம்
1. அயப்பாக்கம் அரசுப் பள்ளியில் 216 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். சி.அரசு மாணவர் களுக்கான புத்தகங்களை வழங்கினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
2. அயப்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில் 200 மாணவி கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். சி.அரசு மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
பெரம்பூர்
3. பெரம்பூரிலுள்ள சென்னை மகளிர் பள்ளியில் 108 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி மாணவி களுக்கான புத்தகங்களை வழங்கினார். மாநில பகுத்தறி வாளர் கழகச் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வட சென்னை மாவட்ட கழகச் செயலாளர் தி.செ.கணேசன் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
செம்பியம்
4. செம்பியத்திலுள்ள சென்னை பள்ளியில் 100 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், வட சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் தி.செ..கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
5. அயனாவரம் கல்கி அரங்கநாதன் மேனிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பெரியார் 1000 தேர்வினை எழுதினார்கள். ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமாக தேர்வு நடை பெற்றது. சென்னையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கலந்து கொண்ட பள்ளி இது. பள்ளியின் முதல் வரும், ஆசிரியப் பெருமக்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள். பேராசிரியர் சுரேஷ் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இயக்க ஆர்வலர் துரைராஜ், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
6. தியாகராயர் நகரில் உள்ள நவபாரத் பள்ளியில் பெரியார் ஆயிரம் தேர்வு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அரும்பாக்கம் தாமோதரன், அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எண்ணூர்
7. எண்ணூரிலுள்ள அரசுப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ.மு.மோகன் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
சைதாப்பேட்டை8. சைதையிலுள்ள மாந்தோப்பு சென்னை மகளிர் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 150 மாணவிகள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவிகளிடையே தேர்வின் நோக்கத்தினை விளக்கி சிறப்புரையாற்றினார். மாணவிகளுக்கான புத்தகங்களை வழங்கி முனைவர் ஏ.திருவேங்கடம் விளக்க உரையாற்றினார். பள்ளியின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கண்ணம்மாபேட்டை9. .தியாகராயர் நகர் கண்ணம்மா பேட்டை சென்னை மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 60 மாணவர்கள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவரர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாடி நிகழ்வினை துவக்கிவைத்தார். வருமானத் வரித்துறை அதிகாரி கு.அன்பு தனசேகர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். தோழர் கு.கண்ணன் மற்றும் வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
24.08.2022 - செனாய் நகர்
10. செனாய் நகரிலுல்ள வி.க. மேனிலைப் பள்ளியில் 51 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர்
ஆ.வெங்கடேசன் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
11. செனாய் நகரிலுல்ள அரசு மகளிர் மேனிலைப் பள்ளி யில் 125 மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழகச் பொதுச் செயலாளர்
ஆ.வெங்கடேசன் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தேர்வினை நடத்தினார்.
அய்.சி.எப்.
12. அயனாவரம் அய்.சி.எப். மேனிலைப் பள்ளியில் 102 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினார்கள். மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாற்றி நிகழ்வினை துவக்கி வைத்தார். சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் ஏஜாஸ் அகமது மாணவர் களுக்கு புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் கலந்து கொண்டார்.
13. அயனாவரம் சவுந்திரப் பாண்டியனார் மேனிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள். மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே கலந்துரையா டினார். இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி உரையாற்றினார். அரும்பாக்கம் தமிழ்ச்செல்வன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
25.08.2022 - கொடுங்கையூர்
14. சென்னை கொடுங்கையூரிலுள்ள சேவியர் மேனிலைப் பள்ளி, (முத்தமிழ் நகர்) இங்கு 51 மாணவர்கள் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் தேர்வெழுதினார்கள். பேராசிரியர் சுரேஷ், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இப் பள்ளியில் சென்ற முறை நடை பெற்ற பெரியார் 1000 தேர்வில் கலந்துகொண்ட மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
15. அயனாவரம் ரங்கையா நாயுடு மேனிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள். இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
16. அயனாவரம் மார்க்கெட்சென்னை மேனிலைப் பள்ளியில் 75 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழு தினார்கள். இயக்க ஆர்வலர் துரைராஜ் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
பெரம்பூர்
17. பெரம்பூர் கல்கி அரங்கநாதன் மேனிலைப் பள்ளியில் 150 மாணவர்கள் பெரியார் 1000 தேர்வினை எழுதினார்கள். ஆங்கிலம் - தமிழ் இரண்டிலுமாக தேர்வு நடை பெற்றது. பள்ளியின் முதல்வரும், ஆசிரியப் பெருமக்களும் சிறப் பான ஒத்துழைப்பை நல்கினார்கள். பேராசிரியர் சுரேஷ் , வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
30.08.2022 - கீழ்ப்பாக்கம்
18. சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள சி.எஸ்.அய். பெய்ன் மகளிர் மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 150 மாணவிகள் தேர்வெழுதினார்கள். மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவி களிடையே தேர்வின் நோக்கத்தினை விளக்கி சிறப்புரை யாற்றினார். பள்ளியின் முதல்வர் மாணவர் கழகச் செயலாள ருக்கு சிறப்பு செய்தார். பள்ளியின் துணை முதல்வரும் உரையாற்றினார். பள்ளியின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் நிகழ்வில் கலந்து கொண்டார்.
19. ஆரணியிலுள்ள முள்ளிண்டிறம் அரசு மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. 100 மாண வர்கள் தேர்வெழுதினார்கள். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.
01.09.2022 - சீசமங்கலை
20. ஆரணியிலுள்ள மேல் சீசமங்கலை அரசு மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. 50 மாணவர்கள் தேர்வெழுதினார்கள். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.இராமு முன்னி லையில் தேர்வு நடைபெற்றது.
02.09.2022 - எழும்பூர்
21. சென்னை எழும்பூரிலுள்ள டான்பாஸ்கோ மேனி லைப் பள்ளியில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே கலந்துரையாடி தேர்வினை துவக்கி வைத்தார். வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் முன்னிலை வகித்தார்.
ஆயிரம் விளக்கு
22. ஆயிரம் விளக்கிலுள்ள சர்ச் பார்க் கான்வென்டில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடைத் தேர்வினை 260 மாணவிகள் எழுதினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அரும்பாக்கம் தாமோதரன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.இராமு ஆகியோர் முன்னிலையேற்றனர்.
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 22 பள்ளிகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக தோழர்கள் ஒத்துழைப்புடன் நடத்தப் பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக