திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வட அமெரிக்காவில் பிறந்த நாள் விழா - இந்தியாவில் சமூக நீதி அடுத்த கட்ட நகர்வு


வட அமெரிக்காவில் தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
கலிபோர்னியா,ஆக.22_ பெரியார் பன்னாட்ட மைப்பு, டாக்டர் அம்பேத் கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர பன்னாட்டமைப்பு, முல்னிவாசி சங்கம், பாம்செப்  ஆகிய அமைப் புகள் இணைந்து வட அமெரிக்காவில் தந்தை பெரியார் 137 ஆவது ஆண்டு பிறந்த நாளை வெகு சிறப் பாக கொண்டாடுகின்றன.
வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத் தில் பிரிமான்ட் நகரில், 3377 ஆல்டர் ஏவ் பகுதி யில் உள்ள லாஸ் செரிட் டோஸ் சமூக அரங்கில் 12.9.2015 சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை தந்தை பெரி யார் 137ஆவது பிறந்த நாள் விழா கொண்டா டப்படுகிறது.
இந்தியாவில் சமூக நீதி எனும் தலைப்பில்  கருத்தரங்கம் நடைபெறு கிறது. கருத்தரங்கில் பெரி யார் பன்னாட்டமைப்பு இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், டாக்டர் அம்பேத்கர் சீக் கியர் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அம்ரிக் சிங், இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பைச் சேர்ந்த உமர் மாலிக்,பாம்செப் அமைப்பைச் சேர்ந்த அசோக்புலா, அகில இந் திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணா நிதி ஆகியோர் உரை ஆற்றுகின்றனர்.
தந்தை பெரியார் 137ஆவது பிறந்த நாள் விழாவை கலிபோர்னியா வில் வெகு சிறப்பான 12.9.2015 அன்று நடத்திட பெரியார் பன்னாட் டமைப்பு, டாக்டர் அம் பேத்கர் சீக்கியர் பவுண் டேஷன், இந்திய அமெ ரிக்க முசுலீம் கவுன்சில், அம்பேத்கர் பன்னாட்டு மய்யம், முல்னிவாசி சங் கம், பாம்செப் (ஙிகிவிசிணிதி) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றி ணைந்து விழா ஏற்பாடு களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
விழா அழைப்பிதழில் தந்தை பெரியார் படத் துடன் நாராயணகுரு, சாகு மகராஜ், ஜோதிராவ் புலே, டாக்டர் அம்பேத் கர் ஆகிய சமூக நீதிக்கு பாடுபட்ட  தலைவர் களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
தந்தைபெரியார் சிலை உருவப்படத்துடன் யுனெஸ்கோ 27.6.1970 தந்தை பெரியாருக்கு அளித்த விருதில் உள்ள தந்தைபெரியாரை சிறப் பித்துக் கூறப்பட்ட பாராட்டுமொழிகளான பெரியார் புத்துலகின் தீர்க்கதரிசி, தென்கிழக் காசியாவின் சாக்ரட்டிஸ், சமூக சீர்திருத்த இயக்கத் தின் தந்தை மற்றும் அறி யாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்பது அழைப் பிதழில் குறிப்பிடப்பட் டுள்ளது-
இந்தியாவில் சமூக நீதி_அடுத்த கட்ட நகர்வு என்கிற வாசகங்களும் பார்ப்பவரைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட் டுள்ளது.
வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத் தில் நடைபெற உள்ள தந்தை பெரியார் 137ஆவது பிறந்த நாள்விழா ஏற் பாடுகளில் பல்வேறு அமைப்பினர் தங்களை இணைத்துக்கொண்டு விழா சிறக்க பெரு முயற்சி யுடன் பணியாற்றி வரு கிறார்கள்.
பெரியார் உலக மயமா கிறார். சமூக நீதிக்களத் தில் என்றும் பெரியார் பேசப்படுகிறார் என்பதை பறைசாற்ற தந்தை பெரி யார் 137ஆவது பிறந்த நாள் விழா  கருத்தரங்கம் அமெரிக்காவில் நடை பெறுகிறது குறிப்பிடத்தக்கது.
விடுதலை,22.8.15