வெள்ளி, 28 செப்டம்பர், 2018

கலிபோர்னியாவில் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்

"பெரியார் - பொது வாழ்க்கையின் ஒரு முன் மாதிரி"கூப்பேர்டினோ, செப். 27- சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழாவை கடந்த 22.9.2018 அன்று  பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும்  குழந் தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃ போர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டா டினர். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தக் கார்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின் அடிப் படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள் நடைப்பெற்றது.

டாக்டர் வா.கீதா


சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின் வழியே “பெரியார் - பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன் இருக்கண்களாக கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார். பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும் அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர் அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்ற தக்க நல்ல வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு  முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் வேண்டு மென்றே கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார இந்துத்துவ சிந்தனையை சவால் செய்ய கூடிய கருவியாக இருக்கும் என்றார்.

முனைவர் மா.சோ.விக்டர்


சங்கக்காலத்திலும், சங்க இலக்கியங்களிலும் “ஜாதி” என்ற சொல் இல்லை. மேலும் பிறப்பின் அடிப் படையிலான ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட குறிப்புகள் இல்லவே இல்லை. இவையாவும் தமிழர் நிலங்களுக்கு அந்நியமானவை. கி.பி.4-ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் இவை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத் தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தையும் தென்னிந்தியாவையும் ஆண்ட பல்வேறு பெரும் மன்னர்கள் ஜாதிய வேறுப்பாடுகளை மிக ஆழமாக வளர்த்தெடுத் தார்கள். ஜாதிய வேறுபாடுகள், ஜாதியக் கொடு மைகள்  கி.பி.19ஆம் நூற்றாண்டு கால தொடக்கத்தில் தான் முதன்முதலாக அயோத்திதாசப் பண்டிதர் அவர்களால், அவர் நடத்திய  “திராவிடம்”, “ஒரு பைசா தமிழன்” போன்ற பத்திரிக்கைகள் மூல மாக தமிழ் மண்ணில் எதிர்ப்பை  பதிவுச் செய்தது. அவரின் தொடர்ச்சியாகத்தான் தந்தை பெரியார் ஜாதியத்திற்கு எதிரான தன் சமூக பணிகளை ஆற்றினார் என்றும் முனைவர். மா.சோ.விக்டர் அவர்கள் குறிப்பிட்டார்.

மணி எம்.மணிவண்ணன்


தொடர்ந்து, உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (INFITT)  நிறுவன உறுப்பினரும், வளை குடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும், மொழியியல் செயல்பாட்டாளருமான திரு. மணி எம்.மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை உரையாற்றினார். பெரியாரின்  தீவிர சமூக நீதி கொள்கைகள் தமிழத்தில் மிகப் பெரிய மாற்றங்களை மக்களின் மனதில் ஏற்படுத் தியது.  தனது சொந்த குடும்ப உறவுகளின் உள் ளேயே, வசதி வாய்ப்பில் ஓரளவுக்கு மேல்நிலைக்கு வந்தவர்கள் பெரியாரின் சமூகக் கொள்கைகளை புறம்  தள்ளுவதும், நிலத்தில் உழன்று உழைக்கும் உறவினர்கள் பெரியாரை போற்றுவதும் இன்றும் என் கண்முன்னே நாள் தோறும் நடக்கிறது என்று மணி உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார். பல்வேறு ஜாதிய அடுக்குகளை கொண்டிருக்கும் இந்திய சமூக அமைப்பில், அடுக்கின் கீழ் என்று சொல்லப் பட்ட மக்கள் தங்கள் விடுதலையை தாங்களே தான் போராடி பெறவேண்டும். அடுக்கின் மேலே இருப் பவர்கள் என்று சொல்லுபவர்கள், ஜாதிய அடுக்கின் கீழே உள்ளவர்களுக்கு விடுதலையை தரமறுப் பார்கள். தோழர். மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னதை போல் சுதந்திரமும் உரிமையும் கொடுக் கப்படுவதில்லை, அவைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் மேற்கோள் காட்டி கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களின் உரிமைகளை சுதந்திரத்தை அவர்களே வென்றெடுக்க வேண்டும். அதற்கு புரட்சியாளர். அம்பேத்கர் போன்ற தலைவர்கள், தலித் மக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட  மக்களின் மத்தியில் தோன்றி இன்று பரவலாக சமூகப்பணி ஆற்றி கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கரங் களை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறி னார்.

கேள்வி - பதில்


இதனை தொடர்ந்து கேள்வி-பதில் நேரத்தில், பல்வேறு பார்வையாளர்கள் பெரியாரின் பகுத்தறிவு கொள்கை, பின்னாளில் திணிக்கப்பட்ட பொய்யும் புராணப்புரட்டும் தாக்கம் கொண்ட தமிழ் மொழியின்பால் பெரியாரின் விமரிசனம், தலித் மக்களின் விடுதலை, பெண்கள் விடுதலைக்கான தீவிர கொள்கை, யார் பெரியாரின் கொள்கைகளை உண் மையான பின்பற்றுபவர்கள், பெரியாரின் நிலத்தில் ஏன் சாதி வன்கொடுமைகள் மற்றும் ஆணவக் கொலைகள் இன்றும் நடக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

சாந்தி கதிரேசன்


நிகழ்ச்சியை திரு.செல்வராஜ் தொகுத்து வழங்க, திரு.சைதன்யா திவாத்கர் அனைவரையும் வர வேற்று பேசினார். பேச்சாளர்களை திரு.கேசவா, திருமதி.இராஜலட்சுமி, திரு.அசுதோஸ் அவர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தினர். திருமதி.சாந்தி கதிரேசன் நன்றி கூறினார். அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedkar King Study Circle), அஸோஸியேஷன் ஃபார் இந்தியா டெவெலப் மென்ட் - பே ஏரியா (Association for India’s Development - Bay Area),  சான் ஜேரிஸ் அமைதி மற்றும் நீதி மய்யம் (San Jose Peace and Justice Center), அம்பேத்கர் அஸோஸியேஷன் ஆப் நார்த் அமெரிக்கா (Ambedkar Association of North America), கபிலர்-பாரி நட்பு படிப்பு வட்டம் (Kapilar-Paari Friendship Study Cirlce), அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டர் (Ambedkar International Center), அமெரிக்கத் தமிழ் வானொலி (America Tamil Radio) மற்றும் அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிஷன் (Ambedkar International Mission) ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சி அரங்கத்தில் அம்பேத்கர், பெரியார், தலித் விடுதலை, நீட் எதிர்ப்பு, பொருளாதாரம், அமெரிக்கப் பழங்குடியினர் உண்மை வரலாறு  போன்று பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

- விடுதலை நாளேடு, 27.9.18

சார்லஸ் பிராட்லாதனது தந்தையாரைப் பற்றி அவரது மகள் பிராட்லா பானர் இப்படி எழுதினார்.

Without god he lived, and without god he died  -கடவுளின்றியே அவர் வாழ்ந்தவர். கடவுளின்றியே அவர் மறைந்தும் போனார் என்று எழுதினார்.

பிரிட்டன் நாடாளுமன்றத் திற்குத் தேர்வு செய்யப் பட்டார். ஆனாலும் அந்நாடாளுமன்றத்தின் மரபுக்குத் தலை குனிய மறுத்தார். அதுதான் கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுப்பது என்ற நிலை. அதனால் அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், கொஞ்சம்கூட ஊக்கம் தளரவில்லை; இரண்டு முறை தேர்தலில் தோல்வி கண்டு மூன்றாம் முறையாக நார்த் ஹாட்டன் தொகுதியில் வெற்றி பெற்று கம்பீரமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந் தார். இப்பொழுது அவர் கொள்கையில் வெற்றியும் பெற்றார்.

மனசாட்சிப்படி உறுதி மொழி எடுக்கலாம் என்று ஒரு மசோதாவையே இவருக்காகவே பிரிட்டன் நாடாளுமன்றம் நிறைவேற் றியது என்றால் அந்தத் தனி மனிதனின் நாத்திக உரமும், போராடும் குணமும்தான் எத்தகையது!

இவ்வளவுக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்தான். தந்தையார் ஒரு வக்கீல் குமாஸ்தா. பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்றவருமல்லர். தந்தையார் வேலை பார்த்த அந்த அலுவலகத்திலேயே 12 வயதில் எடுபிடி வேலையில் சேர்ந்தார்.

பிராட்லாவின் நாத்திகக் கொள்கை பலரையும் புரட்டி எடுத்தது; அவர் வேலை பார்த்த இடத்தின் முதலாளி - 'பிராட்லா தன் நாத்திகக் கொள்கையைக் கைவிட வேண்டும்; இல்லையேல் அவர் பார்க்கும் வேலையைக் கைவிட நேரிடும்' என்பதுதான் அந்த நிபந்தனை.

அந்த வறுமைக்காரரோ கொள்கைச் சீமானாய் வெளியேறினார்.

பிறகு இராணுவத்திலும் பணியாற்றினார். அவர் கொள்கையில் மேலும் மேலும் மெருகேறினார். வழக்குகள்   - எதிர்ப்புகள் என்பது அவரின் நிழலாகவே தொடர்ந்து கொண்டிருந்தன.

சுதந்திர சிந்தனையாளர் கட்சி  (Free Thought Publicity Company) ஒன்றை நிறுவினார். இதற்கு நிதி சேர்த்தது எப்படி தெரியுமா? வெறும் சந்தாக்கள்தான்.

'ஒரு வாய் புகையிலையைத் தியாகம் செய்யுங்கள். ஒரு குவளைப் பீரைத் தியாகம் செய்யுங்கள்!' என்பதுதான் அவர்தம் வேண்டுகோள். ஆம், சந்தாக்கள் குவிந்தன (இந்த இடத்தில் 'விடுதலை' சந்தாவை நினையுங்கள்.)

வெறுத்த மக்கள் அவருக்கு சிலை எழுப்பி மகிழ்ந்தனர். இவர் யார் தெரியுமா? சார்லஸ் பிராட்லா. என்ன, பெரியார் வாழ்வைப் பல வகை களிலும் ஒத்துள்ளது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்க!

- மயிலாடன்

குறிப்பு: இன்று அவர் பிறந்த நாள் (1833).
(26.9.1833)

- விடுதலை நாளேடு, 26.9.18

பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

குஜராத்தில்...
குஜராத் மாநிலத் தலைநகரம் காந்தி நகரில் அமைந்துள்ள குஜராத் மத்திய பல் கலைக்கழகத்தில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. தற்காலத்துக்கும் தேவையான தந்தை பெரியார் சிந்தனைகள் எனும் தலைப்பில் பொது விவாதம் நடைபெற்றது. தந்தைபெரியார் குறித்து பலரும் பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறினார்கள்.

மதம் பகுத்தறிவுக்கு முற்றிலும் விரோத மானது. ஜாதி முறையை ஒழிக்காமல் எவ்விதமான முற்போக்குக் கொள்கைகளும் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியாது. ஜாதியை ஒழிக்காமல் கம்யூனிசம் பற்றி பேசுவது என்பது அடிப்படையான ஆரம்பக்கல்வியைக் கற்காமல் உயர்கல்விகுறித்து விவாதிப்பதைப் போன்றது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மூடநம்பிக்கைகள் மூலம் சுரண்டப்படுகிறார்கள். கடவுள் மற்றும் தலைவிதி என்பவை பகுத்தறிவுக்கு நேரடியான எதிரிகள் ஆகும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் கடவுள், விதி என்பவை களைக் கூறிக்கொணடு அடிமைப்படுத்தி விடலாம். அதனால், மரத்துண்டு தண்ணீரில் (எவ்வித இலக்குமின்றி) மிதப்பதைப்போன்று ஆகிவிடுவான். சுயமரியாதை மற்றும் கண்ணி யத்துடன் அனைவரும் வாழவேண்டும் என்ப தற்காகப் போராடிவந்தார்.  தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டு வதையும், எந்திரங்களால் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் கவனித்தார். பகுத்தறிவு ஒன்று மட்டுமே அமைதிக்கான வழியில் இட்டுச்செல்லும். ஆதிக்கம் செலுத் துபவர்களாலேயே மக்கள் வறுமை மற்றும் கவலைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் தந்தை பெரியார்.''

தந்தைபெரியார் பிறந்த நாளில் தற்காலத்துக் கும் தேவையான தந்தைபெரியார் சிந்தனைகள் எனும் தலைப்பில் நடைபெற்றபொது விவா தத்தில் பேசிய பலரும் தந்தை பெரியார் குறித்து மேற்கண்ட பல்வேறு தகவல்களை எடுத்துரைத் தார்கள்.

காந்திநகர் குஜராத் மத்திய பல்கலைக்கழக அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் உறுப்பினர் ஆகாஷ்குமார் ராவத் மற்றும் நண்பர்கள்  தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாட்டினை செய்தார்கள்.

டில்லியில்...
டில்லி பல்கலைக்கழகம் டிசிஏசி கல்லூரியில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்விழா 17.9.2018 அன்று கொண்டாடப்பட்டது. பேராசி ரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து அவதேஷ் தலைமையில் தந்தைபெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பீகாரில்...
பீகார் தலைநகர் பாட்னாவில் மகாபா  பகுதியில் அமைந்துள்ள சிஷூ எப்வான் மழலையர் பள்ளி வளாகத்தில் சமூக நீதிக்கான மாபெரும் தலைவரும், சமூகப் பொறியாளருமாகிய  140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2018 அன்று எஸ்.இ.டபிள்யூ.ஏ. அமைப்பின்சார்பில் கொண்டாடப்பட்டது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயலாளர் ரவீந்திர ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தந்தை பெரியாரின் சமூகப்போராட்டங்கள் மற்றும் தந்தைபெரியாருடைய தன்னலமற்ற தொண்டுகுறித்தும், இன்றைய காலக்கட்டத்தில் திராவிடர் கழகத்தை தலைமையேற்று வழி நடத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். விழா ஏற்பாட்டாளர்களுக்கு தந்தை பெரியார் குறித்த புத்தகங்களையும் அவர் அளித்தார்.

சேவா அமைப்பின் அமைப்பாளர் ராகேஷ் யாதவ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விஜயா வங்கியின் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆர்.கே.குப்தா, அரவிந்த் யர்வாடா, யூனியன் வங்கியின் பிற்படுத்ப்பட்டோர் சங்க பொறுப்பாளர்கள் பாரத் பூஷன், அமித்குமார், பிரகாஷ் குமார் ஆகியோர் தநதைபெரியார் பிறந்த நாள் விழவில் பங்கேற்றனர்.

தெலங்கானாவில்...
தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத்தில் 17.9.2018 அன்று தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் தெலங்கானா மாநில பொறுப்பாளர்கள் யு.சின்னய்யா, ஜி.மல்லேஷ், எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் தந்தை பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மும்பையில்...
மும்பை திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாள் விழா 17.09.2018 காலை பத்து மணிக்கு பெரியார் சதுக்கத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 7.30 மணியளவில் தாராவி திமுக, கலைஞர் மாளி கையில் மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் தலைமையில், செய லாளர் அந்தோணி வரவேற்புரையாற்ற, ரவிச்சந் திரன் தொடக்கவுரை நிகழ்த்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகத்தின் பொருளாளர் கண்ணன், ஜெய்பீம் பவுண்டேசன் தோழர் இராஜா குட்டி , மனிதநேய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் டிராவிட், விழித்தெழு இயக்கத்தின் தோழர் சிறீதர் தமிழன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அய்யா என்.வி.சண்முகராசன், அம்பேத்கர் அறக்கட்டளையின் நிறுவனர் தோழர் சசிகாந்த் கெய்க்வாட், திருச்சி வெ.சித்தார்த்தன், மகிழ்ச்சி மகளிரணி தோழி ந.வளர்மதி, திராவிடர் மறுமலர்ச்சியின் நிறுவனர் ஸ்டீபன் ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினர். தமிழ் இலெமூரியா' திங்கள் இதழின் முதன்மை ஆசிரியர் குமண ராசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அய்யா பிச்சமணி , முலுண்ட் பகுதியைச் சார்ந்த பாலசுப்ரமணியம் , குணசேகர் , தோழர் இராதாகிருஷ்ணன், மாறன் ஆரியசங்காரன், ஹேமலதா ஸ்டீபன் ரவிக்குமார், ரா.சுரேஷ்குமார், தோழர் ஜே.டேவிட் , தாராவி திமுக இராசன், எஸ்.வெண்ணிலா, வனிதா இளங்கோவன், தோழர் ராபின்சன், அறிவுமதி கணேசன், உமா கணேசன், கண்மணி, என்.சேர்மன் துரை மற்றும் பி.இராசா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மும்பை திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஜெ.வில்சன் நன்றி கூற, கூட்டம் இரவு 10.20 மணிக்கு முடிவு பெற்றது.

- விடுதலை நாளேடு, 22.9.18

மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

தமிழர்களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் பெரியார்


மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
கோலாலம்பூர், செப். 23- மலேசிய திராவிடர் கழகம், தலைமைக் கழக ஏற்பாட்டில் பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழா கடந்த 17.9.-2018ஆம் நாளன்று பிற்பகல் 2.00 மணிக்கு, மலேசிய தலைநகர், கோலாலம்பூர், பிரிக்பீல்டு, பார் வையற்றோர் சங்க மண்டபத்தில், கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கலைஞருக்கு இரங்கல்

தொடக்க நிகழ்வாக அண்மையில் மறைந்த முத்தமிழ் மூதறிஞர் செம்மொழிவேந்தன் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


ச.த.அண்ணாமலை

இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் கழகம் கடந்த 72 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக தந்தை பெரியார் மேற்கொண்ட பணிகளையும், கொள்கை களையும் மலேசிய தமிழர்கள் மத்தியில் பேசியும், பரப்புரை செய்துவருவதையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள மாநி லக் கிளைகள், தங்கள் கிளைகளின் வழி சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

டத்தோ எம்.இராஜன்

சிறப்புரையாற்றிய 'தமிழ்மலர்' நாளிதழின் தலை மையாசிரியர் டத்தோ எம்.இராஜன் அவர்கள், தமிழர் களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் தந்தைபெரியார் என்று புகழுரைத்தார். தந்தை பெரியா ரின் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதற்கு மலேசிய திராவிடர் கழகத்திற்கு தமது நாளிதழில் ஒருபக்கத்தை ஒதுக்கி தருவதாக வாக்குறுதியளித்தார்.

திருமாவளவன்

மலேசிய தமிழ்நெறிக் கழகத்தின், தேசியத் தலைவர் திருமாவளவன் தமதுரையில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாருக்கும், தந்தை பெரியாருக்கும் ஏற்பட்ட நட்புறவை சுவைப் பட கூறினார். தந்தை பெரியாரை குறை கூறுபவர்கள் அவரை முழுமையாக அறியாதவர்கள் என்றும், தன் தமிழனம் தலை நிமிர்ந்து வாழவகை செய்த ஒரே தலைவர் தந்தைபெரியார் என்றும் பெருமைபட கூறினார்.

து.காமாட்சி

சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு து.காமாட்சி அவர்கள் பெண்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்ட தந்தைபெரியாரை பெண்ணினம் போற்றி புகழ வேண்டும் என்று தமதுரையை நிறைவு செய்தார்.

கவிதை - பேச்சுப் போட்டிஇப்பெரியார் விழாவில் ஆரம்ப மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்களுடன், மழலையர் பள்ளி மாணவர்களின் சிறப்புபடைப்புகளாக கவிதைகள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டிகள், பாடல்கள் என ஒரு கலவையாக தந்தை பெரியார் 140ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பங்கேற்றோர்


இந்நிகழ்வில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய உதவித் தலைவர் செ.குணாளன், பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், துணைப் பொதுச் செயலாளர் கா.நா.கோபால், தேசியப் பொருளாளர் சா.பாரதி, தேசிய இளைஞர் தலைவர் பா.சோம சம்பந்தனார், தேசிய மகளிர் தலைவி சு.குமுதா, செயலாளனி க.சாந்தி, கழக மத்திய செயலவை உறுப் பினர்கள், பொறுப்பாளர்கள், கிளை உறுப்பினர்கள், பெரியார் பற்றாளர்களுடன், பொதுமக்களும் திரளாக  கலந்துகொண்டு இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.

மலேசிய தலைநகர், காப்பார், புக்கிட் பெருந்தோங் நகர்களில் பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள்

கோலாலம்பூர், செப். 23- மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள், நூல்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டன.

காப்பார் நகரில் உள்ள மெதடிசு தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார் மற்றும் டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

புக்கிட் பெருந்தோங் நகரத் தமிழ்ப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள் வழங் கப்பட்டன.

திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி விளக்கவுரை நிகழ்த்தினார்.

பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையன், கு.க.இராமன், இரா.பெரியசாமி, அன்பு இதயன் மற்றும் கழகத் தோழர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 23.9.18

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல்
ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில் காந்தியாரின் சேவாகிராமத்தில் சில மாதங்கள் தங்கி மக்களுக்குச் சேவை ஆற்றிட வேண்டும் எனும் உறுதிப்பாட்டினை மேற்கொண்டவர்.

நாடாளுமன்றத்திற்கு (லோக் சபா) இரண்டு முறை உறுப்பினராக விஜயவாடா தொகுதியிலிருந்து காங்கிரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு அதன் வெற்றிக்கு பாடுபட்டவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு சென்றபொழுதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று மரியாதை செலுத்திய பண்பாளர். பெரியார் இயக்கத்தின் மீது நீங்காத பற்று கொண்டிருந்தவர். சென்னபடி வித்யா அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்த தமிழர் தலைவர் நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநரும் வித்யா அவர்களின் சகோதரருமான டாக்டர் விஜயம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பினார். கோரா வலியுறுத்திய நேர்மறை நாத்திகம் (றிஷீவீவீஸ்மீ கிலீமீவீனீ) கருத்துகளை மேலும் பலப் படுத்துவதே மறைந்த வித்யா அவர்களுக்கு செலுத்தப்படும் சரியான மரியாதையாகும் என தமிழர் தலைவர் தமது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 21.9.18

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

இந்துத்துவாவின் அடியாட்கள்: கவுரி லங்கேஷ் படுகொலை சிறப்பு விசாரணைக் குழு வெளிப்படுத்திய உண்மைகள்!


முக்கிய சிக்கல்: கருநாடகாவிலுள்ள நம்மில் பலரும் இதைப்பற்றிப் பேசவில்லை.இங்கு நடக்கும் செய்திகள் எந்த அளவுக்கு, என்ன விவரம், வெளிமாநில ஊடகங்களில் வெளிவருகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கிறோம். ஆகஸ்ட்  30ஆம் தேதி பேராசிரியர் எம்.எம். கல்புர்கியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி கவுரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு படுகொலைகளைப் பற்றிய உண்மைகளையும் நம் நினைவுத் துளைகளில் நாம் நழுவவிட்டிருக்கலாம். அதாவது, சிறப்புப் புலனாய்வுக் குழு, கவுரி லங்கேஷ் படுகொலையில் பலரைக் கைது செய்தது.கைதானவர்களில் ஒருவனான , விஜயபுராவைச் சேர்ந்த பரசுராம் வாக்மரே, தான்தான் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டான். கிடைத்த ஒவ்வொரு தொடர்புகளையும் பிடித்துகொண்டு நகர்ந்ததில், சிறப்புப் புலனாய்வுக் குழு, வழக்கைத் திறமையாக வெளிக் கொண்டுவந்தது. ஒவ்வொருநாளும் செய்தித் தாள்களில் விரிவாக வெளியிடப்பட்ட கதைகள் நடுங்க வைப்பன. அன்றாடம்  வெளிவந்த உறுதியான ஆதாரங்கள் இல்லை யென்றால் இவையெல்லாம் ஏதோ டான் பிரவுன் எழுதிய சிறந்த க்ரைம் கற்பனைக் கதை என்று நினைத்து மறந்து விடலாம். ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் வாழும் நம்மிடையே, இந்துத்துவாவை தீவிரமாக விமர்சிக்கும் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களை, கவனமாகத் திட்ட மிட்டு, கொடூரமாகக் கொலை செய்யும் வலதுசாரிகளும் இருக்கிறார்கள்!

வெளிவராத  செய்தி என்னவென்றால், இந்தப் பச்சைப் படுகொலைகளை செய்வதற்கென்றே,   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் திறமையான கொலை பொறி யமைப்பை  (killing  mechanism) உருவாக்க 'உயரடுக்கு' வலதுசாரி சிந்தனையாளர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான்! இந்த, முறையான திட்டமிடலில் முதற்கட்ட மாக, கொலைகாரர்களையும் அவர்களுக்கு துணை புரிபவர்களையும் பணியமர்த்த விருக்கிறார்கள். இதற்காக, இந்துத்துவா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அர்ப்பணிப் பும், துடிப்புமுள்ள இளைஞர்களை கண்டறிந்து அணுகு கிறார்கள். கவுரி கொலை வழக்கில் தொடர்புடையவனும் இந்துத்துவா விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிலரின் ஒருவன் ஆவான்.இப்படித் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள்  மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும், விவாதங் களுக்கும் அழைக்கப்படுவர்.

இரண்டாம் கட்டமாக, மூளைச்சலவை செய்தல். கவுரி லங்கேஷைக் கொலை செய்த, வாக்மரேவுக்கு கவுரியின் பேச்சுக்கள் அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது. "அதைப் பார்த்து என் ரத்தம் கொதித்தது'' என்று அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். பிறகு அவன்,படிப்படியாக கவுரியைத் 'தண்டிக்க' ஊக்கப்படுத்தப்பட்டான். தேர்வு செய்யப் பட்டவர்கள் இப்படி 'அறிவுரை'வழங்கப்பட்டபின்  அடுத்த கட்டம் தொடங்கும். அடர்ந்த காடுகளில் முன்னாள் காவல் துறையினர் மற்றும் தொழில்முறை துப்பாக்கி சுடுபவர்களைக் கொண்டு, கைத்துப்பாக்கியில் சுடுவ தற்கான பயிற்சி கொடுக்கப்படும்.இதனால் குறி தவறாமல் சுடும் திறமையைப் பெறுகிறார்கள்.இந்த ஆயுதங்கள் இவர்களுக்கு எங்கிருந்து வருகின்றன? கவுரி வழக்கை விசாரித்த, சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தபடி, கருநாடகாவிலுள்ள  ஒருவர் கட்டியுள்ள மூன்றடுக்கு பாது காப்பு கொண்ட ஒரு உண்மையான கோட்டை! மிகவும் மரியாதையான அந்த மனிதர், ஒரு ஆயுத வியாபாரி என்று தெரியவந்தபோது அந்த மரியாதை மாறியது!.   வெவ்வேறு இந்திய மொழிகள் பேசுபவர்கள் அவருடைய கிராமத்தில், அந்தக் கோட்டைக்குச் சென்று வருவதை அந்த கிராம  மக்கள் கவனித்ததாக, செய்தித் தாள்கள் கூறுகின்றன.

மேலே சொன்ன, மிகவும் அபாயகரமான விவரங்கள், கிரைம் கதைகளில் (அகதா கிறிஸ்டி, ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் கதைகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.) வருவதைப் போல, மிகவும் நடுங்க வைக்கின்றன. கோவாவில், மிகவும் பிரபலமான இந்துத்துவா அமைப்புகளுக்கிடையே வாழும் சாதாரண மக்களும் இதையே சொன்னார்கள். உள்ளூர் மக்களே போக முடியாத இடத்திற்குக் கூட, வெளியாட் களும், புதியவர்களும், உள்ளூர் மொழி பேசாதவர்களும் போய் வருவதாக அவர்களும் கூறினார்கள்.கிரிமினல் வலைப் பின்னல்கள் 'தேசியம்' என்ற பெயரோடு இயங்கு கின்றன.இதுபோன்ற குழுக்கள், இந்தியாவெங்கும் இயங்கு கின்றன என்பது தெளிவாகிறது.இளைஞர்கள் (இயல்பாகவே, சூத்திரர்களும் சில தலித்துகளும்) அன்றாடம் தேர்வு செய் யப்பட்டு கொலைக் கூடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், தீவிர இந்துத்துவா விமர்சகர்கள்  ஆகியோரின் பெயர்ப்பட்டியலை குற்ற வாளிகள் பரிமாறிக்கொண்டதையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்திருக்கிறது.இதன்மூலம் எந்த அறிவுஜீவியை  யார் கொல்வது என்பது தெளிவாகும். அடுத்ததாக, திட்ட மிடுதலும், ஒத்திகையும் நடைபெறும்.கூடவே, சமுதாயத்தில் மதிப்புள்ள,பொது குடிமகன், கொலை யாளிகள் தங்குவதற்கு இடமும் உணவும் அளிக்க வேண்டும். கவுரி கொலை யாளிகளுக்கு ஒரு மருத்துவர்தான் தன்னுடைய கிளினிக்கில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். கொலையாளிகளுக்கு மோட்டார் பைக் எப்படிக் கிடைத்தது என்பது போன்ற விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனென் றால், கிரைம் எழுத்தாளர்களின் பிழைப்பைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

இது நம்மை எங்கே கொண்டு செல்லும்? மதச்சார் பின்மை, கருத்துரிமை, ஆகியவை பற்றியத் தீவிரமான விவாதங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாம் உங்களையும் என்னையும் போன்ற முட்டாள்களின் மூளையற்றவர்களின் நுகர்வுக்காகத்தான். இவையெல்லாம், இந்தியாவில் வலதுசாரிகளின் அரசு மற்றும் தரகு முதலாளித்துவத்தினர் திசை திருப்பி, 'பொறி'யில் மாட்டிவிடும் யுக்தியாகும். ஏன்? இதன்மூலம், இந்தியா முழுதும் பரந்துவிரிந்த கொலை வலைப்பின்னலை விரிக்க முடியும். இறுதித் தீர்வை நடைமுறைப்படுத்தச் செய்யவேண்டிய திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப் பட்டுவிட்டன.

தேர்வு செய்யப்பட்ட கொலையாளிகள் தடயங்கள் இல்லாமல் மறைந்து கொள்வ தற்கான விரிவான கட்டமைப்பு இந்தியாவெங்கும் செயல்படுகிறது. நீங்கள் சாதாரணமாக ஒரு தெருவில் நடந்து செல்லும்போது கண்ணுக்குத்தெரியாத சிலர் உங் களை கண்காணிக்கிறார்கள். ஒரு அமைதியான ஞாயிறு காலையில் அல்லது மாலையில் ஒரு மோட்டார் பைக் காத் திருக்கிறது. அதில் இரண்டு நெருங்கிய பழக்கம் உள்ளவர்கள் அமர்ந் திருக்கிறார்கள்.அதில் ஒருவன் உங்களை மிக அருகில் குறிபார்த்து சுடுகிறான்.மற்றவன் உடனடியாக வண்டியை வேகமாக ஓட்டுகிறான். அதாவது அவர்களுடைய பட்டியலில் நீங்கள் இருந்தால்.... ....'ஞிவீணீறீ பி யீஷீக்ஷீ னீக்ஷீபீமீக்ஷீ.'

படுகொலை நடந்த ஓராண்டு முடிந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 5ஆம் தேதிவரை கர்நாடகாவில்  'வழமையில்லா கிழமை' (unusual week) கடை பிடிக்கப்பட விருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நடந்த மிக அதிர்ச்சிகரமான கொலைகளுக்குப் பின்பும் கேளாக் காதினராக இருக்கும் நிலையைத்  தகர்க்க வேண்டும். கருநாடகாவில்,   இந்திய ஜனநாயகத்துக்கும் அரசியலமைப் புக்கும் எதிரான பெரிய குற்றத்தை சிறப்புப் புலனாய்வுக்குழு தோண்டியெடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தியாவின் விளிம்புநிலை மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய அறியாத ஒருவரை இந்தி யாவின் மிக வலிமையான ஆண் என்று ஒருவர் பரிந்துரைத்தபோது நான் சிரித்தே செத்துவிட்டேன். விளிம் புகள்தான்  'மய்யம்' என்பதை வரையறை செய்கின்றன.  அதாவது விளிம்புகள்தான் 'மய்யங்கள்'.

குறிப்பு: வாசகர்களே, மேலே சொன்னவையெல்லாம் டிஸ்டோபியன் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல. அனைத்தும்,கவுரி லங்கேஷ் கொலை பற்றிய சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் வெளியிடப்பட்டவை.

ஆங்கிலத்தில் ராஜேந்திர சென்னி.

தமிழில்: க.அருள்மொழி

- விடுதலை நாளேடு, 14.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தேடி வந்த பார்ப்பனர்கள்6.9.2018 அன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் பூரணி - சுதாகர் இவர்களுடைய இணையேற்பு விழா மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இ.இன்பக்கனி இணையேற்பு சான்றிதழ் வழங்கி வாழ்விணையர்களை வாழ்த்தினார்.

-  விடுதலை நாளேடு, 8.9.18

நாடு, மொழி, மதம் கடந்த சுயமரியாதைத் திருமணம்! பென்சில் வேனியா ஆம்ப்லரில் நடைபெற்றது!பிலடெல்பியா, செப்.8 அமெரிக்கா & பிலடெல்பியா அருகிலுள்ள ஆம்ப்லர் தலமோர் கண்ட்ரி கிளப்பில் (பென்சில் வேனியா மாநிலம்) 20.7.2018 அன்று பகல் 2 மணி முதல் 4 மணி வரை டவுனிங் டவுன் டாக்டர் கே.என்.பன்னீர் செல்வம் & மேகலா ஆகியோரின் மகன் டாக்டர் நவீன்செல்வம் அவர் களுக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரஹாப் சுல்தான் அவர்களுக்கும் மணவிழா நடைபெற்றது. இருதரப்பைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் திரளாக மணவிழாவில் பங்குபெற்றனர்.


மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டபின் பொன் அணியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் எடுத்துக் கொடுத்து மணவிழாவை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியை கலிபோர்னியாவைச் சேர்ந்த ரமேஷ் ஒருங்கிணைத்தார். நாடு கடந்தும், மொழி கடந்தும், மதம் & ஜாதி கடந்தும் இம்மணவிழா சீரிய முறை யில் நடைபெற்றது. தத்துவப்பேராசான் தந்தை பெரியார் கொள்கை வழியில் சுயமரியாதைத் திரு மணம் கடல் கடந்த நாடுகளில் இப்படி நடை பெறுவது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். திருமணம் முடிந்த பின்பு மாலை 6 மணியளவில் வாழ் விணையர் வரவேற்பு மிகச்சிறப்பாக ஆடல் & பாடலுடன் நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 8.9.18

கவுரி லங்கேசை பரசுராம் வாக்மோர் தான் சுட்டுக் கொன்றார் : தடயவியல் ஆய்வில் உறுதி

பெங்களூரு, செப்.7 பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை அவருடைய வீட்டில் வைத்து அடையாளம் தெரி யாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நடந்தது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த படுகொலை குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

கவுரி லங்கேஷ் கொல்லப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு அடையும் நிலையில் வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செ ய்யப்பட்டு உள்ளனர். இதில் அமோல் காலே உள்பட 3 பேரை முற்போக்கு சிந்தனை யாளரான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் காவ லில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக கைதான பரசுராம் வாக்மோர் தான் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கலாம் என்று சிறப்பு விசாரணை குழுவினர் கருதினர். இதை உறுதி செய்யும் வகையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கிய வீடியோவை சிறப்பு விசா ரணை குழுவினர் குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மய் யத்துக்காக அனுப்பி வைத் தனர். இதில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஹெல்மெட் அணிந்து மோட் டார் சைக்கிளில் செல்லும் 6 வினாடிகள் ஓடும் வீடியோவும் அடங்கும்.

மோட்டார் சைக்கிளில் பய ணிக்கும் நபர் பரசுராம் வாக் மோர் தான் என சந்தேகித்ததால் அவரை மோட்டார் சைக்கிள் ஓட்ட செய்து இன்னொரு காணொலியையும் காவல் துறையினர் பதிவு செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத் தனர். இந்த 2 காணொலி களையும் கெய்ட் முறையில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த முறையில் காணொலி களில் இடம்பெற்றிருக்கும் நபரின் உடல் அசைவுகள் மற்றும் அமைப்புகள் ஒப்பிடப் படுகின்றன. இந்த ஒப்பிட்டு முறையில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக் கிளில் பயணித்த நபரின் உருவம், பரசுராம் வாக்மோ ருடன் பொருந்தியது. இந்த ஆய்வு அறிக்கை தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, கவுரி லங் கேசை சுட்டு கொன்றதாக சிறப்பு விசாரணை குழு வெளியிட்ட வரைபடம் பரசுராம் வாக்மோருடன் பொருந்துவ துடன், கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்ட நபரின் உயரம் 5 அடி 2 இன்ச் என கணக்கிடப்பட்டது. இந்த அம்சமும் பரசுராம் வாக்மோ ருடன் பொருந்தியுள்ளது.

இதுதவிர, சீகேஹள்ளி வாடகை வீட்டில் பரசுராம் வாக்மோர் தங்கி இருந்ததும், கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் அவர் வீட்டை காலி செய்த விவரங்களை வீட்டு உரிமையாளர் கொடுத்த தகவல் மூலம் சிறப்பு விசா ரணை குழுவினர் அறிந்து கொண்டனர்.

இந்த நிலையில், தற்போது தடயவியல் ஆய்வு முடிவும் பரசுராம் வாக்மோருடன் பொருந் துவதால், கவுரி லங்கேசை, பரசுராம் வாக்மோர் தான் சுட்டு கொன்றான் என்பதை சிறப்பு விசாரணை குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 7.9.18