வெள்ளி, 28 செப்டம்பர், 2018

மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

தமிழர்களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் பெரியார்


மலேசியாவில் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெருமிதம்




கோலாலம்பூர், செப். 23- மலேசிய திராவிடர் கழகம், தலைமைக் கழக ஏற்பாட்டில் பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் 140ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழா கடந்த 17.9.-2018ஆம் நாளன்று பிற்பகல் 2.00 மணிக்கு, மலேசிய தலைநகர், கோலாலம்பூர், பிரிக்பீல்டு, பார் வையற்றோர் சங்க மண்டபத்தில், கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கலைஞருக்கு இரங்கல்

தொடக்க நிகழ்வாக அண்மையில் மறைந்த முத்தமிழ் மூதறிஞர் செம்மொழிவேந்தன் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


ச.த.அண்ணாமலை

இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் கழகம் கடந்த 72 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக தந்தை பெரியார் மேற்கொண்ட பணிகளையும், கொள்கை களையும் மலேசிய தமிழர்கள் மத்தியில் பேசியும், பரப்புரை செய்துவருவதையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள மாநி லக் கிளைகள், தங்கள் கிளைகளின் வழி சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

டத்தோ எம்.இராஜன்

சிறப்புரையாற்றிய 'தமிழ்மலர்' நாளிதழின் தலை மையாசிரியர் டத்தோ எம்.இராஜன் அவர்கள், தமிழர் களின் எழுச்சிக்காக போராடிய மாபெரும் தலைவர் தந்தைபெரியார் என்று புகழுரைத்தார். தந்தை பெரியா ரின் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதற்கு மலேசிய திராவிடர் கழகத்திற்கு தமது நாளிதழில் ஒருபக்கத்தை ஒதுக்கி தருவதாக வாக்குறுதியளித்தார்.

திருமாவளவன்

மலேசிய தமிழ்நெறிக் கழகத்தின், தேசியத் தலைவர் திருமாவளவன் தமதுரையில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாருக்கும், தந்தை பெரியாருக்கும் ஏற்பட்ட நட்புறவை சுவைப் பட கூறினார். தந்தை பெரியாரை குறை கூறுபவர்கள் அவரை முழுமையாக அறியாதவர்கள் என்றும், தன் தமிழனம் தலை நிமிர்ந்து வாழவகை செய்த ஒரே தலைவர் தந்தைபெரியார் என்றும் பெருமைபட கூறினார்.

து.காமாட்சி

சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு து.காமாட்சி அவர்கள் பெண்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்ட தந்தைபெரியாரை பெண்ணினம் போற்றி புகழ வேண்டும் என்று தமதுரையை நிறைவு செய்தார்.

கவிதை - பேச்சுப் போட்டி



இப்பெரியார் விழாவில் ஆரம்ப மற்றும் இடை நிலை பள்ளி மாணவர்களுடன், மழலையர் பள்ளி மாணவர்களின் சிறப்புபடைப்புகளாக கவிதைகள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டிகள், பாடல்கள் என ஒரு கலவையாக தந்தை பெரியார் 140ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பங்கேற்றோர்


இந்நிகழ்வில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய உதவித் தலைவர் செ.குணாளன், பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், துணைப் பொதுச் செயலாளர் கா.நா.கோபால், தேசியப் பொருளாளர் சா.பாரதி, தேசிய இளைஞர் தலைவர் பா.சோம சம்பந்தனார், தேசிய மகளிர் தலைவி சு.குமுதா, செயலாளனி க.சாந்தி, கழக மத்திய செயலவை உறுப் பினர்கள், பொறுப்பாளர்கள், கிளை உறுப்பினர்கள், பெரியார் பற்றாளர்களுடன், பொதுமக்களும் திரளாக  கலந்துகொண்டு இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.

மலேசிய தலைநகர், காப்பார், புக்கிட் பெருந்தோங் நகர்களில் பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள்

கோலாலம்பூர், செப். 23- மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள், நூல்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டன.

காப்பார் நகரில் உள்ள மெதடிசு தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார் மற்றும் டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

புக்கிட் பெருந்தோங் நகரத் தமிழ்ப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு "பெரியார் பிஞ்சு" இதழ்கள் வழங் கப்பட்டன.

திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி விளக்கவுரை நிகழ்த்தினார்.

பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையன், கு.க.இராமன், இரா.பெரியசாமி, அன்பு இதயன் மற்றும் கழகத் தோழர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 23.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக