வெள்ளி, 28 செப்டம்பர், 2018

கலிபோர்னியாவில் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்

"பெரியார் - பொது வாழ்க்கையின் ஒரு முன் மாதிரி"



கூப்பேர்டினோ, செப். 27- சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழாவை கடந்த 22.9.2018 அன்று  பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும்  குழந் தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃ போர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டா டினர். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தக் கார்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின் அடிப் படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள் நடைப்பெற்றது.

டாக்டர் வா.கீதா


சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின் வழியே “பெரியார் - பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன் இருக்கண்களாக கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார். பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும் அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர் அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்ற தக்க நல்ல வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு  முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் வேண்டு மென்றே கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார இந்துத்துவ சிந்தனையை சவால் செய்ய கூடிய கருவியாக இருக்கும் என்றார்.

முனைவர் மா.சோ.விக்டர்


சங்கக்காலத்திலும், சங்க இலக்கியங்களிலும் “ஜாதி” என்ற சொல் இல்லை. மேலும் பிறப்பின் அடிப் படையிலான ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட குறிப்புகள் இல்லவே இல்லை. இவையாவும் தமிழர் நிலங்களுக்கு அந்நியமானவை. கி.பி.4-ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் இவை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத் தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தையும் தென்னிந்தியாவையும் ஆண்ட பல்வேறு பெரும் மன்னர்கள் ஜாதிய வேறுப்பாடுகளை மிக ஆழமாக வளர்த்தெடுத் தார்கள். ஜாதிய வேறுபாடுகள், ஜாதியக் கொடு மைகள்  கி.பி.19ஆம் நூற்றாண்டு கால தொடக்கத்தில் தான் முதன்முதலாக அயோத்திதாசப் பண்டிதர் அவர்களால், அவர் நடத்திய  “திராவிடம்”, “ஒரு பைசா தமிழன்” போன்ற பத்திரிக்கைகள் மூல மாக தமிழ் மண்ணில் எதிர்ப்பை  பதிவுச் செய்தது. அவரின் தொடர்ச்சியாகத்தான் தந்தை பெரியார் ஜாதியத்திற்கு எதிரான தன் சமூக பணிகளை ஆற்றினார் என்றும் முனைவர். மா.சோ.விக்டர் அவர்கள் குறிப்பிட்டார்.

மணி எம்.மணிவண்ணன்


தொடர்ந்து, உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (INFITT)  நிறுவன உறுப்பினரும், வளை குடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும், மொழியியல் செயல்பாட்டாளருமான திரு. மணி எம்.மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை உரையாற்றினார். பெரியாரின்  தீவிர சமூக நீதி கொள்கைகள் தமிழத்தில் மிகப் பெரிய மாற்றங்களை மக்களின் மனதில் ஏற்படுத் தியது.  தனது சொந்த குடும்ப உறவுகளின் உள் ளேயே, வசதி வாய்ப்பில் ஓரளவுக்கு மேல்நிலைக்கு வந்தவர்கள் பெரியாரின் சமூகக் கொள்கைகளை புறம்  தள்ளுவதும், நிலத்தில் உழன்று உழைக்கும் உறவினர்கள் பெரியாரை போற்றுவதும் இன்றும் என் கண்முன்னே நாள் தோறும் நடக்கிறது என்று மணி உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார். பல்வேறு ஜாதிய அடுக்குகளை கொண்டிருக்கும் இந்திய சமூக அமைப்பில், அடுக்கின் கீழ் என்று சொல்லப் பட்ட மக்கள் தங்கள் விடுதலையை தாங்களே தான் போராடி பெறவேண்டும். அடுக்கின் மேலே இருப் பவர்கள் என்று சொல்லுபவர்கள், ஜாதிய அடுக்கின் கீழே உள்ளவர்களுக்கு விடுதலையை தரமறுப் பார்கள். தோழர். மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னதை போல் சுதந்திரமும் உரிமையும் கொடுக் கப்படுவதில்லை, அவைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் மேற்கோள் காட்டி கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களின் உரிமைகளை சுதந்திரத்தை அவர்களே வென்றெடுக்க வேண்டும். அதற்கு புரட்சியாளர். அம்பேத்கர் போன்ற தலைவர்கள், தலித் மக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட  மக்களின் மத்தியில் தோன்றி இன்று பரவலாக சமூகப்பணி ஆற்றி கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கரங் களை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறி னார்.

கேள்வி - பதில்


இதனை தொடர்ந்து கேள்வி-பதில் நேரத்தில், பல்வேறு பார்வையாளர்கள் பெரியாரின் பகுத்தறிவு கொள்கை, பின்னாளில் திணிக்கப்பட்ட பொய்யும் புராணப்புரட்டும் தாக்கம் கொண்ட தமிழ் மொழியின்பால் பெரியாரின் விமரிசனம், தலித் மக்களின் விடுதலை, பெண்கள் விடுதலைக்கான தீவிர கொள்கை, யார் பெரியாரின் கொள்கைகளை உண் மையான பின்பற்றுபவர்கள், பெரியாரின் நிலத்தில் ஏன் சாதி வன்கொடுமைகள் மற்றும் ஆணவக் கொலைகள் இன்றும் நடக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

சாந்தி கதிரேசன்


நிகழ்ச்சியை திரு.செல்வராஜ் தொகுத்து வழங்க, திரு.சைதன்யா திவாத்கர் அனைவரையும் வர வேற்று பேசினார். பேச்சாளர்களை திரு.கேசவா, திருமதி.இராஜலட்சுமி, திரு.அசுதோஸ் அவர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தினர். திருமதி.சாந்தி கதிரேசன் நன்றி கூறினார். அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedkar King Study Circle), அஸோஸியேஷன் ஃபார் இந்தியா டெவெலப் மென்ட் - பே ஏரியா (Association for India’s Development - Bay Area),  சான் ஜேரிஸ் அமைதி மற்றும் நீதி மய்யம் (San Jose Peace and Justice Center), அம்பேத்கர் அஸோஸியேஷன் ஆப் நார்த் அமெரிக்கா (Ambedkar Association of North America), கபிலர்-பாரி நட்பு படிப்பு வட்டம் (Kapilar-Paari Friendship Study Cirlce), அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டர் (Ambedkar International Center), அமெரிக்கத் தமிழ் வானொலி (America Tamil Radio) மற்றும் அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிஷன் (Ambedkar International Mission) ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சி அரங்கத்தில் அம்பேத்கர், பெரியார், தலித் விடுதலை, நீட் எதிர்ப்பு, பொருளாதாரம், அமெரிக்கப் பழங்குடியினர் உண்மை வரலாறு  போன்று பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

- விடுதலை நாளேடு, 27.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக