புதன், 12 செப்டம்பர், 2018

நாடு, மொழி, மதம் கடந்த சுயமரியாதைத் திருமணம்! பென்சில் வேனியா ஆம்ப்லரில் நடைபெற்றது!



பிலடெல்பியா, செப்.8 அமெரிக்கா & பிலடெல்பியா அருகிலுள்ள ஆம்ப்லர் தலமோர் கண்ட்ரி கிளப்பில் (பென்சில் வேனியா மாநிலம்) 20.7.2018 அன்று பகல் 2 மணி முதல் 4 மணி வரை டவுனிங் டவுன் டாக்டர் கே.என்.பன்னீர் செல்வம் & மேகலா ஆகியோரின் மகன் டாக்டர் நவீன்செல்வம் அவர் களுக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரஹாப் சுல்தான் அவர்களுக்கும் மணவிழா நடைபெற்றது. இருதரப்பைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் திரளாக மணவிழாவில் பங்குபெற்றனர்.


மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டபின் பொன் அணியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் எடுத்துக் கொடுத்து மணவிழாவை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியை கலிபோர்னியாவைச் சேர்ந்த ரமேஷ் ஒருங்கிணைத்தார். நாடு கடந்தும், மொழி கடந்தும், மதம் & ஜாதி கடந்தும் இம்மணவிழா சீரிய முறை யில் நடைபெற்றது. தத்துவப்பேராசான் தந்தை பெரியார் கொள்கை வழியில் சுயமரியாதைத் திரு மணம் கடல் கடந்த நாடுகளில் இப்படி நடை பெறுவது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். திருமணம் முடிந்த பின்பு மாலை 6 மணியளவில் வாழ் விணையர் வரவேற்பு மிகச்சிறப்பாக ஆடல் & பாடலுடன் நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 8.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக