ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இந்தியாவில் மதம், மதமற்றவர்களின் எண்ணிக்கை

திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

மின்சாரம்
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான கணக்கெடுப்பின்படி மத நம்பிக்கையற்றவர்கள் என்ற பகுதியும் திராவிடர்கழகத் தலைவர் வீரமணி அவர்களின் கோரிக்கைக்கு இணங்க சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் மத நம்பிக்கையற்ற வர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது, தற்போதுள்ள கணக் கெடுப்பின் படி இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும் வரும் காலங்களில் நான்கில் மூன்று பங்கு மதநம்பிக்கையற்றவர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-மத ரீதியான ஜாதி ரீதியான வகையில் நடை பெற்றது. திராவிடர் கழகத்தின் கோரிக் கையை ஏற்று ஜாதி மதம் என்ற பகுதியில் மதமறுப்பாளர் என்ற பகுதியும் சேர்க்கப் பட்டது.  121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 28.7 லட்சம் நாத் திகர்கள் (கடவுள் மறுப்பாளர்) என்று இந்த பகுதியில் தங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
இதில் வியப்பிற்குரிய செய்தி நகரங் களை விட கிராமப்புறத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் கடவுள் மறுப்பாளராக உள்ளனர். கிராமப்புறப்பகுதியில் 16.45 லட்சம் நபர்கள் கடவுள் மறுப்பாளராக உள்ளனர். அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ள நகரப் பகுதியில் 12.24 லட்சம் பேர்கள் தங்களை கடவுள் மறுப்பாளராக பதிவுசெய்துள்ளனர்.
அதே போல் பெண்களும் ஆண் களுக்கு நிகராக மதமறுப்பாளராக மாறி வருகின்றனர். பெண்களின் 14.04 விழுக்காடு என்றால் ஆண்களில் 14.64 விழுக்காடாக பதிவு செய்துள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவரின் கருத்து
இதுகுறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மகிழ்ச் சியைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் போது மதநம்பிக்கை யற்றவர்கள் என்ற கணக்கெடுப்பின் முடிவுகள் மிகவும் மகிழ்வடையச் செய்யும் செய்தியாகும், முதல் முறையாக எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து மதமற்றவர்கள் பிரிவையும் சேர்த்துள்ளது. இதன் பலனாக இன்று இந்தியாவில் மதமறுப்பாளர்களின் உணர்வும் வெளிப்பட்டுள்ளது.
இரு குறைபாடுகள்
மதநம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. ஒன்று அரசிடம் மதமற்றவர்கள் என்ற பகுதிகுறித்து மக்களிடம் தெளிவாக தெரிவிக்க போதுமான பரப்புரைகள் செய் யப்படவில்லை, மேலும் மதநம்பிக்கை குறித்து மக்கள் வெளியே சொல்ல அஞ்சும் சூழ்நிலை இன்றும் உள்ளது.
எடுத்துக்காட்டாக கணவன் ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்தால் மனைவி மதநம்பிக்கையற்றவராக இருக்கும் கார ணத்தினால் கணவருக்கு மதிப்பளிக்கும் வகையில் தானும் மத நம்பிக்கையுள்ளவர் என்று பொய் கூறும் ஒரு சூழல் இந்தியா வில் உள்ளது.
இதே நிலைதான் கார்ப்ப ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளை யோரிடமும் உள்ளது. என்னைப் பொறுத்த வரை மதநம்பிக்கை யற்றவர்களின் எண் ணிக்கை மொத்த மக்கள் தொகையில் குறைந்த பட்சம் ஒரு சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என்றும் கூறினார்.
கழகத் தலைவரின் இந்தக் கருத்தினை ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (27.8.2015) வெளியிட்டுள்ளது.
-விடுதலை ஞாயிறு மலர்,29.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக