வெள்ளி, 14 அக்டோபர், 2022

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

 

தாம்பரம், அக். 9- தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 5.10.2022 புதன் கிழமை அன்று மாலை 5.10 மணி யளவில் மேற்கு தாம்பரம் சி.டி.ஓ காலனி எழில் மாண்டிசோரி மழ லையர் மற்றும் தொடக்கப் பள்ளி யில் மாநில துணைத் தலைவர் ந.கரிகாலன் தலைமையில் நடை பெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் அ.தா.சண்முக சுந்தரம் மற்றும் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன் னிலையில்  எஸ்.ஆர்.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட திரா விடர் கழக  தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத் திகன், நகர செயலாளர் சு.மோகன் ராசு, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் மற் றும் கலந்து கொண்ட தோழர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்கள்

கூட்டத்தில் புதிய பொறுப் பாளர்களாக மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் மதிவாணன், மாவட்ட அமைப்பாளர் இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புஷ்பலதா, அருணா,  குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.சு.உத்ரா என்று முறையே மாநில தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் அறிவித்தார். 

நிகழ்ச்சியில் கு.ஆறுமுகம், கோ.பழனிச்சாமி, செ.சந்திரசேகரன், த.குணசேகரன், அஜய், கரசங்கால் இர.கதிர்வேல், அ.கருப்பையா மற்றும் த.மணிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.