வெள்ளி, 27 மே, 2016

நாத்திகப் படிப்பிற்கான உயராய்வு இருக்கை!

அமெரிக்க நாட்டு மியாமி பல்கலைக்கழகத்தின் சாதனை!
நியூயார்க், மே 26_ அமெ ரிக்க நாட்டில் மதத்தினை புறந்தள்ளும் போக்கு அதி கரித்து வரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே நாத்திகம், மனிதநேயம் மற்றும் மதச் சார்பின்மை நெறி பற்றிய படிப்பிற்கான கல்வி உய ராய்வு இருக்கையாக (Study Chair Atheist)  அது ஏற்படுத்தப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டி யுள்ள ஓய்வு பெற்ற வணி கரும், பார்பிசன் பன் னாட்டு மாதிரிப் பள்ளி யின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே அப்பிக்னானி கொடையாக அளித்த 2.2. மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன் நாத்திக உயராய்வு இருக்கை நிறு வப்பட்டுள்ளது. பல்வேறு மனிதநேய, மதச்சார்ப்பற்ற பணிகளுக்கு நன்கொடை வழங்குவதை வாடிக்கை யாக அப்பிக்னானி கொண் டிருப்பவர்.
நாத்திகர்கள் சமுதாயத் தில் வேறுபடுத்தப்பட்டு பார்க்கப்படுவதை களை வதின் நோக்கமே தம்மை நாத்திக உயராய்வு இருக் கைக்கு நன்கொடை வழங் கிட வைத்தது. தமது கொடை, நாத்திகம் முறையான, சட் டப்படியான வாழ்வியல் பண்பாக போற்றப்படுவதற் கான ஒரு சிறு முயற்சியே என அபிக்கானி கூறு கிறார்.
மியாமி பல்கலைக்கழ கத்தில் நாத்திக உயராய்வு இருக்கையின் அங்கமாக செயல்படுவதற்கு சான்றோர் பெருமக்களை தெரிவு செய் வதற்காக ஒரு குழுவினை நியமித்து, உயராய்வு இருக்கை அமைக்கப்பட் டுள்ள முறையான அறிவிப்பு  விரைவில் வெளியாகும்.
பெரும்பான்மையான கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் மதம் பற்றிய துறைகள் மற்றும் மதம் சார்ந்த கல்வி புகட் டும் பேராசிரியர்கள் செயல் படுவது ஒரு வாடிக்கையாக உள்ளது. தேவாலயங்கள் அளித்து வரும் நிதி மற்றும் பொருளுதவிகளால் அவை செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை படிப்பு ஏற்றுக்கொள்ளப் படும் கல்விக்களமாக மாறி வருகிறது. ஆராய்ச்சி, கொள் கைகள், கல்வி மாநாடுகள், பயிற்சி அளித்தல் என்ற நிலையினை அடுத்து நாத் திகத்திற்கான உயராய்வு இருக்கை இப்பொழுது முதன்முதலாக உருவாக் கப்பட்டுள்ளது.
“மியாமி பல்கலைக் கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்சலான செயல்” என “கடவுள் ஒரு பொய் நம் பிக்கை (The God Delusion) நூலாசிரியரும், பரிணாம வியல் உயிரியலாளரும் நாத்திகப் பெருந்தகையு மான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“மத விலங்கினை உடைத்திடும்'' நோக்கத்தில் நாத்திக உயராய்வு இருக்கை ஏற்படுத்தப்பட் டுள்ளது அதி முக்கியத்து வம் வாய்ந்தது'' எனவும் ரிச்சர்டு டாக்கின்ஸ் பிரிட் டனிலிருந்து தொலைபேசி வாயிலாக செவ்வி மூலம் தெரிவித்துள்ளார்.
பிஇடபிள்யூ (PEW) ஆராய்ச்சி மய்யம் நடத்திய ஆய்வின் மூலம் அமெரிக் காவில் மதச்சார்பற்றோர் என வெளிப்படுத்திக் கொள் வோரின் எண்ணிக்கை அண்மைக்கால குறுகிய இடைவெளியில் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என தெரிய வருகிறது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மதச் சார்பற்றோரின் எண் ணிக்கை 2007ஆம் ஆண் டில் 16 விழுக்காடு என இருந்த நிலை 2014ஆம் ஆண்டில் 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இளை யோரில் பலர் மத நம்பிக்கையில் ஆர்வம் அற்றவர்களாக உள்ளனர். புத்தாயிரம் ஆண்டு அறி பருவர் ((adult)) எண்ணிக்கையினரில் 35 விழுக்காட் டினர் தம்மை நாத்திகர், கடவுள் கவலையிலார் அல்லது மத நம்பிக்கை அற்றோர் என தெரியப் படுத்தியுள்ளனர்.
‘மதச்சார்பற்ற அமெ ரிக்கர்கள் (Secular Ameri cans)’ எனும் மனிதநேய அமைப்பினர் அரசியல் பாதையில் பயணிக்க முடி வெடுத்துள்ளனர். அடுத்த மாதத்தில் அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கையற் றோர், தலைநகர் வாசிங் டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் -பகுத்தறி வுப் பேரணி (Rally of Reason) ஒன்றை  நடத்தி  தமது எண்ணிக்கை வலி மையினை அமெரிக்க காங் கிரசுக்குக் காட்டி, அர சை யும் மதத்தையும் (கிறிஸ்தவ மதம்) பிரிக்கக்கோரு வதாக உள்ளனர்.
“நாத்திக உயராய்வு படிப்பு'' என்பதற்கான வித்து 15 ஆண்டுகளுக்கு முன்பு முளைத்திட ஆரம் பித்தது- ‘மியாமி பல் கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் (Harvey Siegel) நாத்திகக் கொடையாளர் லூயிஸ் அப்பிக்னானியும் கலந்து பேசி அன்றே முடிவெடுத் தனர். அமெரிக்க மக்கள் மத்தியில் நாத்திகம் பற்றிய ஒருவித அவமதிக்கும் பார் வையும், இழித்துரைக்கும் போக்கும் நிலவிடும் நிலையில், பல்கலைக்கழக உயராய்வு இருக்கைக்கு “நாத்திகம்'' எனும் பெயர் வைத்திடுவதில் அதிகார நிலையாளர்களுக்கு தயக்கம் நிலவிய சூழலில், தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் தான் நாத் திகம் பற்றி எடுத்துரைத்து, விளக்கிச் சொல்லி ‘நாத்திக உயராய்வு இருக்கை’ என பெயர் ஏற்பட காரணமாக இருந்தார்.
‘நாத்திகம்’ பெயர் பற்றி முடிவெடுக்கையில், பல் கலைக்கழகத்தினரை ஒத்துக்கொள்ள வைத்திட மதம் சார்ந்த படிப்புகளில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறையினையே பல்கலைக்கழகம் மேற் கொள்ளலாம் என பரிந் துரை செய்யப்பட்டது. மதம் சார்ந்த படிப்புகளில் எந்த ஒரு மதத்தினையும் வலியுறுத்தும் வகையில் படிப்பு முறை இல்லாதது போலவே, நாத்திகப் படிப் பிலும், நாத்திகக் கொள்கையினை வலியுறுத்திடும் தன்மை இல்லாதவாறு நாத்திக உயராய்வு இருக்கை அமைக்கப்படலாம் என பரிந்துரை வழங்கப்பட்டது. “நாத்திகம்'' பெயர் கொண்டு உயராய்வு இருக்கை ஏற் படுத்தப்படுவதற்கு நாத் திகக் கொள்கையாளர்கள் எடுத்திட்ட முயற்சி போற் றுதலுக்கும் பாராட்டுதலுக் கும் உரியது.
அமெரிக்காவில் நாத் திகம், மதச்சார்பின்மை, அய்யுறவியல் (skepticism) பற்றிய புரிதல் மற்றும் போற் றுதல் மக்களிடையே,குறிப் பாக கல்வி நிலையங்களில் அதிகரித்து வருகிறது.
தென் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிட்சர் கல்லூரியில் அய்ந்து ஆண்டு களுக்கு முன்னரே ஆயிரம் மாணவர்களைக் கொண்டு திறந்த சிந்தனைக் கலைப் பள்ளியினை நடத்தி வரு கின்றனர். இந்த பள்ளியில் பில் சக்கர்மேன் (Phil Zuckerman) எனும் மதம் பற்றிய சமூகவியலாளர் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆறு பேராசிரியர் கள் நான்கு பாடப் படிப் பினை நடத்தியுள்ளனர். இத்தகைய பாடப்படிப்பு களுக்கு மாணவர்களி டையே ஆர்வம் பெருகி வருகிறது. சென்ற ஆண்டு நடை பெற்ற ‘மதச்சார்பின்மை & அய்யுறவியல்’ பாட வகுப் பில் சேர வந்த மாணவர் களில் பெரும்பாலானோரை அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாத கார ணத்தால் அனுமதி மறுக் கப்பட்ட நிலை இருந்தது-. நாத்திகச் சான்றோர் சிலர் மதமின்மை மற்றும் மதச் சார்பின்மை ஆராய்ச்சி தொடர்பகம் எனும் அமைப்பின் கீழ் தங்களது நான்காவது மாநாட்டினை ஜூரிச் நகரில் நடத்திட உள்ளனர். ‘மதச்சார் பின்மை மற்றும் மத மின்மை’ எனும் ஆராய்ச்சி இதழினினையும் அவர்கள் நடத்தி வருவது பலரது பாராட்டையும் பெற்றுள் ளது.
சமூகவியலாளர் சக்கர் மேன் மதச்சார்பற்ற படிப் பிற்கான உண்மையான தேவை ஏற்பட்டுள்ளது என கூறுகிறார். மேலும் ‘மதச்சார்பின்மை பண்பு அதிகரிப்பது தொடரும் நிலையில், அமெரிக்காவில் மட்டுமின்றி, உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள மதச்சார்ப்பற்ற மக் கள், மதச்சார்பற்ற பண் பாடு, மதச்சார்பின்மை ஆகி யவைகளை ஒருங்கி ணைத்து கொள்கை சார்ந்த அரசியல் அமைப்பு தொடங்கிட வேண்டும்’ எனும் கருத்தினையும் அவர் தெரிவித்து உள்ளார்.
உகலகம் முழுவதிலும் நாத்திகம், மதச்சார்பின்மை, மதமின்மை கருத்துடனான வாழ்வியல் பண்பாடு பெருகி வருகிறது என்பதற்கு “நியூ யார்க் டைம்ஸ்'' இதழில் வெளிவந்த மேற்குறிப் பிட்ட செய்திகளே சான் றாக அமைந்துள்ளன. வருங் காலம் நாத்திகம் தழைத்து செழித்தோங்கும் மனித நேயம் போற்றப்படும் கால மாக உருவாகும் என்பது உறுதியாகி வருகிறது.
-விடுதலை,26.5.16

ஞாயிறு, 22 மே, 2016

நாத்திகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள்


நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து, வரலாற்று ஆசிரியர்)
நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)
ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்
(பால்காக், ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)
தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)
கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)
கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)
மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)
ணீ இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள் (கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)
-விடுதலை,29.1.16