புதன், 29 ஜூலை, 2015

கடவுள், மதங்கள் இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்


சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில் பன்னாட்டளவில் குறிப் பாக 11 நாடுகளில் நாத் திகர்கள் மற்றும் கடவுள், மதம் குறித்த கவலையற்ற வர்கள் அதிகரித்து வருவ தாக 11 நாடுகளைப் பட் டியலிட்டுக் குறிப்பிட்டுள் ளது.
மதங்கள் வழி நடந்து வரும் நாடுகளில் சமூக, தொழில்நுட்ப வளர்ச்சி கள் மந்தமாக  பின்னோக் கியே  இருப்பதையும் அந்த இணையப் பக்கத்தில் சுட் டிக் காட்டப்பட்டுள்ளது. உலகை குறிப்பிட்ட வடிவத்தில் வடிவமைப் பதில் மதம் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அம்மதத்தை மக்கள் ஏற் றுக்கொள்ளும் வரையில் தான் அது பொருந்தும். மதம் என்பதே நாட்டுப் புறங்களில் நிலவிவந்த கற்பனைகளின் அடிப் படையில் உள்ள கதைகள், பாடல்கள் ஆகியவை களின்மூலமாகவே மதக் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. மக்களைக் கவர்ந்த கற்பனைக்காவி யங்கள் எதையோ சொல்ல வருவதுபோல்,  தோன்றி னாலும், பொதுவான நடைமுறைகளில் மக்களி டையே உள்ள இயலாமை களின் அடிப்படையில் பரப்பப்பட்டு வந்துள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் இவை எதை யுமே நாம் கவனிப்ப தில்லை. அன்றைய காலம் தொட்டு புதிய புதிய மத நம்பிக்கைகளால், மதங் களும் அதன் பல்வேறு பிரிவுகளும், கிளைகளும் அதன் எதிரிகளின் குருதிக் கறைகளால், வாள்முனை யில் பிரகாசிக்கும் என்று எண்ணுகிறார்கள்.
சில மதங்கள் எப் படியோ நூற்றாண்டு காலங்களாக மக்களி டையே பின்னிப் பிணைந்து விட்டபடியால், இப் போதும்கூட உள்ள மக்க ளிடையே பிரபலமாக செல்வாக்குடன் அந்த மதங்களைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கின்ற நிலையைக் காணமுடிகிறது. ஆனால், அதனால் அந்த மக் களுக்கு நன்மை ஏதும் விளைகின்றதா? என்றால் இல்லை என்றுதான் கூற முடிகிறது.
நவீன உலகில் மதங் களை ஏற்கமுடியாத மதங் களுக்கு எதிரான நிலை உயர்ந்தவண்ணம் உள் ளது. நவீன உலகில் மக் களிடையே வேரூன்றிப் போய் உள்ளவைகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து கற்பிக்கவும், தனி மனித ஒழுக்கம், நன்மை, தீமைகளின் எல்லைகள் குறித்தும் கற்பிக்கப்படும் நிலை இயல்பாக ஏற்பட் டுள்ளது. ஆனால், மதங் களிடையே இதுபோன்று தொடங்கப்படவில்லை. மத நூல்களில் கூறப் பட்டவைகளைத் தவிர வேறு எந்த விளக்கங் களையும், மாற்றங்களை யும் ஏற்காமல், அந்த அடிப்படையிலேயே மதத் தின் கருத்துகளைப் பரப்பி  வருவதுடன், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்டுப்பாட்டுடன்கூடிய கருத்துகளாக வானவெளி யில் இயற்கைக்கு மீறிய சக்தியுள்ளவர்கள் மிதந்து கொண்டிருப்பதாக கரு தும் நிலை குறைந்து கொண்டு வருகிறது.
நாம் இன்று வசித்து வரும் உலகில் அறிவியல்  முறையிலான விளக்கங் கள் பரவிவருகின்றன. அறிவியல் வளர்ச்சிகளால் நூற்றாண்டு கால கிறித் துவ சர்ச்சுகள் மூடப் பட்டுவருகின்றன. மக்களிடையே பெண் கள்மீதான வன்செயல்கள்,   கொலைகள் இருப்பது குறித்து எண்ணிலடங் காத புள்ளிவிவரங்கள் உள்ளன. பல்வேறு கலாச் சாரங்கள் உள்ள நிலை யில், பின்னிப்பிணைந் துள்ள கடவுள் கருத்து களால், தாங்கள் மகிழ்ச்சி யாக இருப்பதாக எண்ணு கிறவர்களும் இருக்கிறார் கள். அப்படி என்றால், கற் பனையில் உள்ளவைகளுக் காக தொடர்ச்சியாக பல காலங்களாக சண்டையிட் டுக் கொண்டிருப்பது ஏன்? இந்தக் கேள்வி ஒன் றும் ஆபத்தானதும் அல்ல. பதில்தான் தேவை. தற் பொழுதுள்ள காலகட்டத் தைப்போல் முன்பு எப் போதுமில்லாதவாறு மதங்கள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலை அதிகரித் துக்கொண்டு வருகிறது.
அமைதி, அன்பு, கருணை மற்றும் விழிப் புணர்வு ஆகிய அனைத் தும் ஒருங்கே அமைந் துள்ள கருத்துருவை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம்.  மக்களி டையே தன்னம்பிக்கையை விதைப்பவையாக உள் ளன. ஆனால், அவை களை அச்சுறுத்தலின் மூலமாக திணிப்பது, அவைகளை வலியுறுத்துவ தாகக்கூறி குருதியை சிந்தச் செய்வது, தொல் லைகளைத் தருவது சரி யான வழி அல்ல. இது போன்ற வழிமுறைகள், நாம் பார்க்கின்ற நாத்தி கர்களை, கடவுளைப்பற் றிய கவலையற்றவர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இல்லை என்பதைப் பார்க் கலாம்.
1.சுவீடன் நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள் அதி கரித்துள்ள 11 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவீடன் உள்ளது-. சுவீடன் நாட்டின் மக்கள் தொகை யில் 80 விழுக்காடு மக்கள் மதங்கள் தொடர்பில் கற்பித்துள்ள பழங்கதை களையோ, புராணங் களையோ அவர்கள் எந்த வகையிலும் ஏற்பதாக இல்லை என்று புள்ளி விவ ரங்கள் குறிப்பிட்டுள்ளன.
2. டென்மார்க்
அதிக எண்ணிக்கையி லான நாத்திகர்கள் அல் லது கடவுள் கவலை அற் றவர்கள் அதிகம் கொண் டுள்ள நாடு மட்டும் அல்ல. மிகக்குறைந்த அள விலான மத நம்பிக்கை உள்ள மக்கள் கொண் டுள்ள நாடாகவும் டென் மார்க் இருக்கிறது. 80 விழுக்காடு மக்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு சிறிதளவேனும் இருப்பது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளனர். இந்த ஸ்காண்டினேவியன் நாடான டென்மார்க், பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. ஈஸ்டோனியா
ஈஸ்டோனியா பட்டிய லில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அய்ந்தில் ஒரு வருக்கும் குறைவாக உள்ள வர்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு முக்கிய மான பங்காற்றிவருவ தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
4.நார்வே
ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் கடந்த காலங்களில் கிறித்துவ சர்ச்சுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் பிரபலமா னவை. நார்வே நாட்டின் மக்கள்தொகை, உலகில் உள்ள மதங்களின் எண் ணிக்கையைப்போல் அதி கமாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால், அதுதான் கிடையாது. அதேநேரத்தில், குறைந்த அளவிலான மத நம் பிக்கை உள்ள மக்கள் இருக்கின்றனர். பட்டிய லில் நான்காம் இடத்தில் நார்வே உள்ளது.
5. ஹாங்காங்
சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக சிறப்பு நிர் வாகத்தின்கீழ் தனித்துவ மான சுயாட்சி பெற் றுள்ள நாடாக ஹாங் காங் நாடு, பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றி என்பதே அந்நாட்டு மக்கள் மதத்தை விட்டு ஒழித்ததால்தான் சாதிக்க முடிந்துள்ளது.
6. நெதர்லாந்து
நெதர்லாந்து மக்கள் சற்றேறக்குறைய அனை வருமே வாழு, வாழ விடு கொள்கையைப் பின்பற்று பவர்களாக இருக்கிறார் கள். அந்த நாட்டில் உள்ள கடவுளர்கள் அத் தனையும் சுற்றுலாவாசி கள் காண்பதற்காக மட் டுமே இருக்கின்றன. நெதர் லாந்து மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற் றத்துக்கான அவர்களின் செயல்களுக்கு குறிப்பிடத் தக்க அளவில் மதத்தின் பங்களிப்பு தேவையெனக் கருதவில்லை.
7. ஜப்பான்
ஜப்பான் நாட்டில் சுற்றுலா வருபவர் எண் ணிக்கை என்பதே சுருக்க மாக இருந்துவருவதாகும். காரணம் உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருப் பதைப்போன்று மதவாதி களுக்கான இடம் என எங்குமே கிடையாது. இன்று மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரண மாகத் திகழக்கூடிய அள வில் பலதுறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.
8. செக் குடியரசு
மகிழ்ச்சிகரமான மக் களின் தொகுப்பு உள்ள நாடாக செக் குடியரசு திகழ்ந்து வருகிறது. முத லில் அந்நாட்டில் குடிப் பிரியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். உழைப்ப தும், களிப்பதுமாக இருந்து வரும் செக் குடியரசு மக் கள் தங்களின் மகிழ்ச்சி கரமான வாழ்வில் கேடு பயக்கும் மதங்களை அனுமதிப்பதே இல்லை.
9. அய்க்கியப் பேரரசு
அய்க்கியப் பேரரசா கிய இங்கிலாந்து நாட்டில் பல்வேறு காலகட்டங் களில் நாடுமுழுவதும் பல்வேறு கிறித்துவ சர்ச் சுகள் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த காலங்களில் அய்க்கியப் பேரரசில் சில முக்கிய நிகழ்வுகளில் மதங்களின் சர்வாதிகாரத் தன்மைகள் மேலோங்கி இருந்துவந்துள்ளன. நீண்ட காலத்திற்கு அப் படித்தான் இங்கிலாந்தில் இருந்துவந்தார்கள். அதெல்லாம் ஒருகாலம். ஆனால், தற்பொழுது நாத் திகர்கள், கடவுள் கவலை யற்றவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். பட் டியலில் 9 ஆம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
10. பின்லாந்து
ஸ்காண்டினேவியன் நாடுகள் இந்தப் பட்டிய லுக்குள் வருமா? எனக் கருதினால், அது சரியானது தான். பின்லாந்து நாடு, ஸ்காண்டினேவியன் நாடு களில் மிக அதிகஅளவில் மத நம்பிக்கைகளுடன் இருந்து வரும் நாடு. பன் னாட்டளவில் நாத்திகர் கள், கடவுள்குறித்த கவலை யற்றவர்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டிய லில் 10 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது.
11. பிரான்ஸ்
பிரான்சு நாட்டு மக்கள் தங்களின் வாழ்வில் மதம் முக்கியப் பங்காற்றுவது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளார்கள். பன்னாட் டளவிலான கத்தோலிக்க மய்யம் அளித்துள்ள தக வலின்படி, பிரான்சு நாட் டில் சர்ச்சுகள் முக்கியமாக ஒட்டுமொத்தமாக மூடப் பட்டுவரும் நிலை இதை உணர்த்திவருகிறது.
இவ்வாறு பன்னாட் டளவில் நாத்திகர்கள், கடவுள், மதம்குறித்த கவ லையற்றவர்களாக உள்ள வர்கள் அதிகரித்துவரு கிறார்கள் என்பதற்கான 11 நாடுகளின் பட்டியலை இன்சைடர்மாங்கி இணைய தளம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப் பிட்டுள்ளது.
விடுதலை,1.7.15

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!! சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!

ஆந்திரா மாநிலம் - குண்டூரில் சமூகநீதி விழா
குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு!
ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!

சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!
ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!
குண்டூர், ஜன.4_ ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதிப் பெரு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்.
சமூக நீதிப் பெரு விழா வில் குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களையும் உள்ளடக்கி அனைத்துத் தரப்பினரையும் ஈடு படுத்தி, தொடர்ந்து 10 நாள் சமூக நீதிப் பிரச் சாரப் பயணம் மேற் கொள்ளப்படும் என பிரகடனப்படுத்தி தமிழர் தலைவர் உரையாற்றினார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில், ஆந்திர பிர தேச பிற்படுத்தப்பட்ட வகுப்பின் சங்சேம சங்கத்தின் சார்பாக சமூக நீதிப் பெருவிழா நடை பெற்றது. 3.1.2015 அன்று குண்டூரின் மய்யப் பகுதி யில் அமைந்துள்ள சிறீ வெங்கடேசுவர விஞ் ஞான மந்திர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆந்திர பிரதேச பிற்படுத் தப்பட்ட வகுப்பின சங் சேம சங்கத்தின் மாநிலத் தலைவராக தெரிந்தெடுக் கப்பட்டுள்ள கேசன சங்கர் ராவ் பாராட்டப்பட்டார். சமூக நீதி ஆர்வலர்கள், தலைவர்கள் பலர் பெரும் திரளாக விழாவில் பங் கேற்றுச் சிறப்பித்தனர். சமூக நீதிப் பெருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சமூக நீதியின் அடுத்த கட்ட  விழிப் புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக் கிட ஆந்திர மாநிலத்தின் அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கி தொடர் பிரச்சாரப் பய ணம் மேற்கொள்ளப்படும் என எழுச்சிமிகு அறிவிப் பினைத் தெரிவித்தார்.
சமூகநீதிப் பெரு விழா விற்கு ஆந்திர மாநில மசூலிப்பட்டிணத் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப் பினர் கொனகல்ல நாரா யணராவ் தலைமை வகித் தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின சங்சேம சங் கத்தின் தேசியத் தலை வரும், தெலங்கானா சட் டமன்ற உறுப்பினருமான ஆர். கிருஷ்ணய்யா முன் னிலை வகித்தார். விழா வில் தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா, ஆந்திர மாநில பிற்படுத்தப்பட் டோர் மேம்பாடு மற்றும் கலால்துறை அமைச்சர் கே. ரவீந்திரா, தெலங் கானா மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவாஜி, சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசகவுடு, ஜில்லா பரிசத் தலைவர் சேக் ஜானிமுன், தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் டி. சுமன் மற்றும் அனைத்துத் தரப்பு சமூக நீதித் தலைவர்கள், அமைப்பு   அடிப்படையிலான ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சமூக நீதித் தலைவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சமூகநீதி விழா தொடங்குவதற்கு முன்ன தாக குண்டூரில் அமைந் துள்ள சமூகநீதிக்குப் பாடுபட்ட தலைவர் களான ஜோதிபா புலே, அண்ணல் அம்பேத்கர் பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரின் சிலை களுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தமிழர் தலைவருடன் சமூகநீதித் தலைவர் கேசன சங்கர்ராவ், ஆந்திர மாநில சமூகநீதி அமைப் பினர் வழக்குரைஞர் ராம கோட்டீஸ்வரராவ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் மற்றும் பலர் திரளாகச் சென்றனர்.
சமூகநீதித் தலைவர் களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், மாலை 4 மணியளவில் சமூகநீதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் சமூகநீதி அமைப் பினர் மற்றும்  ஆர்வ லர்கள் கலந்து கொண் டனர். ஊர்வலம், விழா அரங்கினை சென்ற டைந்து, பின்னர் சமூக நீதிப் பெரு விழா தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. சமூக நீதி விழாவில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை
சமூகநீதி விழாவில் திராவிடர் கழகத்தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப் பிட்டதாவது:
மக்கள் நாயகம் என்பது, மக்கள் தொகையில் பெரும்பான்மையினரை, அவர்களது நியாயமான தேவைகளை, உரிமைகளை பெற்றுத் தருகின்ற வகையில் அரசாட்சி அமைந்திட வேண்டும். ஆனால், இந்த மண்ணில் நிலவி வந்த, ஆதிக்கம் செலுத்திவரும் சிறுபான்மையினரின் நலனைப் பேணுகின்ற வகையில், பெரும்பான்மையினரின் நலனை தடைப்படுத்துகின்ற வகையில், மட்டுப்படுத்துகின்ற வகையில் ஆட்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஏகபோக சமூக ஆதிக்கவாதிகளால் (social monopolies) பெரும்பான்மையினர் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். இனியும் இந்த ஆதிக்கவாதிகளின் அதிகார ஆட்சி நடைபெறாது. ஒடுக்கப்பட்ட மக்களில் - பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர், மத அடிப் படையிலான சிறுபான்மையினர் எனும் பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு தோன்றியுள்ளது. அத்தகைய விழிப்புணர்வின் வெளிப்பாடுதான். இந்த சமூகநீதி விழாவில் பெருந் திரளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கேற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம்கேட்பது சலுகை அல்ல; உரிமை --_ சமத்துவ உரிமையினைதான் கேட்கிறோம். (We are not demanding charity but parity)
ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்கும் சமத்துவம் பெறுவதற்கான இடஒதுக்கீடு என்பது மனிதனை வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு என ஆதிக்கவாதிகள் விளக்கம் அளிக்கின்றனர். இடஒதுக்கீடு என்பதை தொடங்கியதே இத்தகைய ஆதிக்கவாதிகள்தான். ஒரு குலத்துக்கு ஒரு நீதி, ஒரு தொழில் என்று மனு காலம் முதல் கொண்டு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருபவர்கள்தான் வீணான விளக்கமளிக்கும் ஆதிக்கவாதிகள். அன்று முதல் ஆதிக்கவாதிகள் வலியுறுத்தி வரும் இடஒதுக்கீடு மனிதரை பிரிவுபடுத்தி பார்ப்பது. இன்று அடக்கப்பட்ட மக்கள் தங்களுக்காகக் கோரும் இடஒதுக்கீடு, பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தினரை இணைத்துப் பார்ப்பது; சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டிச் செல்வது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சி வலைகளை அடையாளம் கண்டு அவைகளை அறுத்து எறிந்து தமக்கு உள்ள உரிமைகளைப் பெற வேண்டும். போரிட்டுதான் பெறவேண்டும். ஆயுதப் போர் அல்ல; அறிவாயுதம் தாங்கி அமைதியான போர்; கருத்து அடிப்படையிலான போர் தொடங்கப்பட வேண்டும். இத்தகைய உணர்வுகளுக்கு உந்துதலுக்கு இத்தகைய சமூக நீதிப் பாராட்டு விழா அச்சாரமாக அமைந்திடல் வேண்டும்.
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களில், சமத்துவம் பெறுவதற்கான கொள்கைகளை, அவர் களுடைய வழிகாட்டுதலை ஒடுக்கப்பட்ட மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதித்தலை வர்களான ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரது சிலைகளுக்கு விழா தொடங்குவதற்கு முன்னர் மாலை அணிவித்து மரியாதை செய்த வேளையில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடும் தேவை மற்றும் அவருடைய பகுத்தறிவு கொள்கையினைப் போற்றுதல் பற்றிய உரையாடல் நடைபெற்றது. மிகவும் மகிழ்வுடன் இந்த சமூகநீதி விழாவினர் குணடூரில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திட முன் வந்தனர். அதற்கான முயற்சிகள் உடனே தொடங்கப்பட உறுதி அளித் துள்ளனர். (குண்டூரில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியாரின் சிலை ஆந்திர மாநிலத்தில் நிறுவப்படும் இரண்டாவது சிலையாகும். முதல் சிலை விசாகப் பட்டினத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது)
சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு (அன்று ஆந்திரப்பகுதியினை உள்ளடக்கிய சென்னை மாகாண காலம்தொட்டு) ஒரு சிறப்பான வரலாறு உண்டு. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீட்டிற்கு தனியாக ஒரு சட்டத்தினை இயற்றி 69 விழுக்காடு மொத்த இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெரும்பான்மை மக்களின் உண்மையான, நியாயமான பிரதிநிதித்துவம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைத்திட, உரிய அளவில் இட ஒதுக்கீடு அளவு அந்தந்த மாநிலங்களில் சட்டத்தின் மூலம் நிலை நிறுத்தப்படவேண்டும். நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக்குகின்ற வகையில் ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி பற்றிய தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல், மதம் கடந்த அடையாளங்களைத் தாண்டியதாக தொடர் பிரச்சாரம் அமைந்திட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அந்த சமூக நீதிப் பிரச்சாரப் பயணம் அமையும். ஆட்சியாளர்கள் கவனத்தை கவருகின்ற வகையிலும் அந்த பிரச்சாரப் பயணம் அமையும். பெரியார் இயக்கம் ஆந்திராவில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும் இணைத்து, கலந்துபேசி சமூக நீதிப் பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்திடும். விரைவிலேயே சமூகநீதிப் பிரச்சாரப் பயண கால அட்டவணை வெளியிடப்படும்.
இந்த சமூக நீதி விழாவில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஈசுவரய்யா பங்கேற்று சிறப்பித்துள்ளார். ஆணையத்தின் செயல்பாட்டிற்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் சமூகநீதிக்கான அமைப்பினரின் குரல் எழுப்ப வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முழுமையான நீதி நிர்வாக அதிகாரம் கொண்டதாக திருத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் முழுமையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கிடைக்கின்ற வகையில் சமூக நீதி அமைப்புகள் கோரிக்கை விடுத்தல் வேண்டும். ஒருங்கிணைந்த செயல்பாட்டால்தான் அத்தகைய கூடுதல் அதிகாரங்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கிடைக்கும்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும், சமூகநீதி விழாவின் நாயகர் ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின தலைவர் கேசன சங்கரராவ் பாராட்டுதலுக்கு உரிய செயல் வீரர். அவருடைய தலைமையில் சமூக நீதிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் ஆந்திர மாநிலத்தில் துவக்கப்பட வேண்டும். அத்தகைய உரிமை மீட்பு, போராட்டங் களுக்கு, செயல்பாடுகளுக்குப் பெரியார் இயக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கும் எனக்கூறி சமூக நீதி விழாவின் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
திரையுலக முன்னணி நடிகர்
சமூகநீதி விழாவில் பங்கேற்ற திரைப்பட நடிகர் டி.சுமன் குறிப்பிட்டதாவது:-
இந்த சமூகநீதி விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரையுலக மேடையாகட்டும், இதர மேடைகளாகட்டும், நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதை அடையாளப் படுத்திக் கொள்வதில் உரிமை கலந்த பெருமை கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி ஆக்கம் பெறுகின்ற வகையில் என்னால் ஆனவரை செய்திட அணியமாக இருக்கிறேன்.
இன்று நான் ஆந்திர திரைஉலகில் பிரபலமாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது படித்தது தமிழ்நாட்டில்தான். 33 ஆண்டு காலம் தமிழகத்தில்தான் இருந்தேன். தமிழ் திரையுலகம்தான் எனக்கு திரை உலக வாழ்வினை அளித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் இயக்கத்தினைப் பற்றி நன்றாக அறிவேன். அதன் தலைவர் அய்யா வீரமணி அவர் களிடம் நேரடி பழக்கம் இல்லாவிடினும், அவரை நான் நன்றாகவே அறிவேன்.
தமிழ்நாட்டின் மக்களிடம் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது தந்தை பெரியாரது இயக்கம்தான். அந்த இயக்கத்தின் துணையோடு ஆந்திர மாநிலத்தில் சமூகநீதிப் பயணத்தில் பெரும் வெற்றி பெற இயலும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
எனது செயல்பாடும் சமூகநீதித் தளத்தில் கூடுதலாகவே இருக்கும். எனது ரசிகர்களையும் இந்த சமூக நீதிப் பயணத்தில் பங்கேற்க வைத்திட முழு முயற்சி எடுப்பேன் என்பதை இந்த சமூகநீதி விழாவில் உறுதியளிக்கிறேன்.
குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைந்திடுவதற்கு ஆதரவு
அய்யா வீரமணி அவர்கள் குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைப்பது குறித்துப் பேசினார். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் சிலையினை குண்டூரில் அமைத்திடும் பணியில் எனது நிதி பங்களிப்பு உண்டு. அதற்கான முயற்சிகளில் என்னையும் ஈடுபடுத்தி விரைவில் தந்தை பெரியாரின் சிலை நிறுவப் பாடுபடுவேன் என்பதை இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது திரையுலக வாழ்வோடு, சமூக நீதிப் பயணத் திற்கான பங்கும் சேர்ந்தே இருக்கும். நமது உரிமைகளை வென்றெடுப்போம்.
இவ்வாறு திரைப்பட நடிகர் சுமன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
குண்டூரில் நடைபெற்ற சமூகநீதி விழா, ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவித மாறுதலுக்கான வித்தாக அமைந்தது. எழுச்சியுடன் பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்பினர் கலந்து கொண்டது. ஒருங்கிணைந்த சமூகநீதி செயல்பாட்டுக்கான துவக்கமாகவே அமைந்துவிட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த சமூகநீதிப் பிரச்சாரம் பயணம் சமூக நீதி விழாவினரிடம் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதி பாராட்டு விழா சமூக நீதி விடியலுக்கான அச்சாரமாகவே அமைந்து விட்டது.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் ஒரே மாலையாக பெரிய மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வழக்குரைஞர் கோட்டீஸ்வர ராவ், தொழிலதிபர் டில்லி பாபு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள சமூகநீதிப் போராளிகளான மகாத்மா ஜோதிபாபூலே, ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கவுத லட்சண்ணா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைக்கு தமிழர் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை....
ஆந்திர மாநிலம் அமராவதியில் கிருஷ்ணா நதி கரையில் புதிதாக அமைந்துவரும் புத்தர் சிலைமுன் தமிழர் தலைவர்; புத்த பிட்சுகள் மற்றும் புத்திஸ்டுகள் தமிழர் தலைவருடன் உள்ளனர்; பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்குத் தமிழர் தலைவர் மரியாதை...
ஆந்திர மாநிலம் குண்டூர் வந்த தமிழர் தலைவருக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பூங்கொத்து வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
சமூகநீதி ஊர்வலத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், மேடையில் தமிழர் தலைவருக்கு விழாக் குழுவின் சார்பில் சிறப்பு; புதிதாக பொறுப்பேற்ற கேசன சங்கரராவ் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு....
சமூகநீதிப் போராளிகளின் உரையை கேட்கத் திரண்டிருந்த மக்கள் கூட்டம்
-விடுதலை,4.1.15

திங்கள், 20 ஜூலை, 2015

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!
அமெரிக்க உளவியல் சங்கத்தின் முடிவினைப் பாரீர்!
தந்தை பெரியார் கருத்துக்கு மேலும் ஓர் ஆதாரம்
துண்டறிக்கை மூலம் மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே என்று அமெரிக்க உளவியல் நிபுணர்கள் வெளி யிட்டுள்ள அரிய கருத்தினைத் துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் எடுத்துச் செ(சொ)ல்ல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
அதே போன்று நன்னெறிகள் குறித்த வழிகாட்டுதல் களை சங்கம் அளித்து அதற்கான சட்ட வடிவமும் அமெரிக்காவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
1892ஆம் ஆண்டில் தோற்றம்
31 பேரைக் கொண்டு 1892ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அதிவேகமாக வளரத் தொடங்கியது. உளவியல் உட்பிரிவுகளாக 54 பிரிவுகளைக் கொண்டு சங்கத்தின் உறுப்பினர்களாக 1,37,000 பேர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
1,37,000 பேர் உறுப்பினர்கள்
அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,37,000 பேரை உறுப்பினர் களாகக் கொண்டுள்ள அமைப்பாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 11.50 கோடி டாலர் (115 மில்லியன் டாலர்) செலவினங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறையினரின் விசாரணையில் உள்ளவர்களின் நலன், மனிதக்கடத்தல், மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை ஆகியவைகளை உள்ளடக்கிய மனித உரிமைக் கான செயல்பாடுகள், ஓரினச் சேர்க்கையாளர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், பல்வேறு நிலைகளிலும் சமூகத்தில் உள்ள பாலியல் வேறுபாடுகளைக் களைதல் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
நிர்வாகம்
சங்கத்தின் நிர்வாகம் என்பது ஜனநாயக முறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவதாகும். சங்கத்தின் உறுப்பினர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலைவர் அவருடைய பணிக்காலத்தில் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும்படியாக செயல்படுவார். நிர்வாகத்தில் ஆறுபேர் இடம் பெறுகிறார்கள். மேனாள் தலைவர், தலைவர், அடுத்த தலைவர், பொருளாளர், பதிவு செயலாளர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் நிர்வாகிகளாகவும் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பட்டதாரி மாணவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆண்டு வருவாய் 6 கோடி டாலர்
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்குத்தான் நிறுவனத்தின் கொள்கைகளை வகுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கு கிடைக்கின்ற ஆண்டு வருவாய் சுமார்  6 கோடி டாலர் (60 மில்லியன் டாலர்) ஆகும். உளவியல் நிறுவனத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் மாகாணங்களில் உள்ள உளவியல் சங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆண்டு வருவாய் 6 கோடி டாலர் சேகரிக்கப்பட்ட வருவாயாகும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் நிர்வாக முறை என்பதில் நடைமுறைப்படுத்துவது, படிநிலை செயல் முறைகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் ஆகிய வற்றில், அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, 2011ஆம் ஆண்டு ஜனவரியில் நல்ல நிர்வாகத் தன்மைக்கான திட்டம் தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மேலும் சிறந்த நிர்வாகத்துக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 31.7.2013 முதல் 2.8.2013 வரை நிறுவனத்தின் செயல்பாடுகளில் சிறப்பான நிர்வாகத் துக்குரிய மாற்றங்களை செய்வதற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்படியே பின்பற்றப்பட்டது.
சங்கத்தின் கட்டமைப்பு
செயல் அலுவலகம், பதிப்பகப் பணிகள், அலுவல கங்கள் மற்றும் நிர்வாக முகவரி, வணிகம், தகவல் தொழில் நுட்பம், இயங்குவதற்கான தேவை, கல்வித்துறையுடன் இணைந்து உளவியல் மருத்துவத்தை செயல் திட்டங்களை செயல்படுத்துவது, உடல்நலன் பேணுவோருக்கு உளவியல் சார்ந்த மருத்துவத்தை வழங்குவது என பல்வேறு திட் டங்களை அமெரிக்கன் உளவியல் சங்கம் கொண்டுள்ளது.
பொதுமக்களிடையே ஆர்வத்துடன் உளவியலைக் கொண்டு செல்வதில் அவர்களிடையே உள்ள அடிப்படையான பிரச்சினைகளை பேசுவதன்மூலமும், மக்கள் நலன் கருதி, உரிய அளவில் அவர்களுக்கான பங்களிப்பை வழங்குவது, அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்களிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவது ஆகியவைகளில் பொது மக்களிடையே அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் இருந்து பொறுப்புடன் செயல் ஆற்றுவார்கள். அறிவியல் செயல்கள்மூலம் நிரூபிக்கவும், உளவியல் அறிவியலுக்காக குரல் கொடுக்கவும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
உறுப்பினர்கள்-உளவியலாளர்கள்
இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்கள் உளவியலாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதற்குரிய அளவில் கல்வியும், பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் செயல்பாடுகளாக பாலியல் மாறுபாடுகளைக் களைவது மற்றும் பாலியல் உரிமை, மனித உரிமை, நல்ல முறையிலான நிர்வாகங் களில் செய்யப்படவேண்டிய  மாற்றங்கள், கருக்கலைப்பு உரிமை, ஒருபாலின மண உரிமை, உடல்நலத்துக்கு இன்றி யமையாத உளவியல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வருகிறது.
உடல் நலம் பேண உளவியல் நிலை பாதுகாக்கப்பட வேண்டும், உளவியல் என்பது அறிவியலே, மாணவர் களிடம் உளவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முதன்மையானவை யாக முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.
பணியிடங்கள்
மருத்துவர்களுக்கு ஈடாக ஆரம்பக் கல்வி முதல் பள்ளிக் கல்வி வரை பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவப் படை முகாம்கள், நீதித்துறை, சிறைகள், வணிகம் மற்றும் தொழில்கூடங்கள் உள் ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இடங்களில் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவ னங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், உள வியல் ஆய்வாளர்கள், உள வியல் கல்வி பெற்றவர்கள் அமெரிக்கன் உளவியல் சங் கத்தில் அங்கத்தினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். அமெரிக்க அய்க்கிய நாடுகள் மற்றும் கனடா மட்டுமன்றி பிற நாடுகளி லிருந்தும் உளவியல் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மன நல மருத்துவத் துறையினர் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்.
கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று   அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுத் தகவல் கூறுகிறது.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத நம்பிக்கையாளர்களாக இருப்ப வர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர் களாகவும் இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கருணையே வடிவானவன் என்று கருதுவதுடன் தங்களுக்கு மன அமைதியைத் தருபவர் என்றெல்லாம் கடவுள்குறித்து எண்ணிவரும் கடவுள் நம்பிக்கை யாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டு விதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மைநிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்துவருகின்றன.
பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்த சிகிச்சை அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பார்கள் என்று எடுத்துச் சொன்ன போதிலும், அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வரும்போதுதான், அந்த மக்களைக் காக்க முடிகிறது.
குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
யகோவா என்கிற கடவுளே சாட்சியாக இருக்கிறார் என்பார்கள். அவர்களுக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். மதவாதிகளாக இருப்பவர்கள் பலரும் தங்களின் கைகளுக்கே குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்கள். கடவுளுக்கு என தனியே மொழி இருப்பதாக நம்புகிறார்கள். அந்த மொழி யாருக்கும் தெரியாது. இடையில் தொடர்பாளராக இருப்பவர் களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று எண்ணுகிறார்கள். (கடவுளும் மனிதர்களைப் போன்று நாவால் பேசுவதாக எண்ணுகிறார்கள்) அவ்வப் போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடை யாளமாகவே பார்க்க முடியும்.
கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை
கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற் றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கை யாளர்கள் கருதுகிறார்கள். காலத்தால் ஏற்பட்டு வரும் மாற்றங்களிடையே நவீன சமூகத்திலும் இவையாவும் தொன்மையான நம்பிக்கைகளாக, மூளை செயல்பாடு களின்றி நீண்ட காலமாக அப்படியே நீடித்த நிலையில் இருந்து வருகிறது. இவைகுறித்த முதல் அடியாக பல வகையிலும் நேர்மறை வழிகாட்டுதலாக இந்த ஆய்வு அமைந்துள்ளது என்று பேராசிரியர் ஆண்ட்ரியூஸ் கூறினார்.
உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை
புதிய விளக்கங்களின்படி, அமெரிக்க உளவியல் சங்கம் சட்டம் இயற்றுவதற்கான வழிகாட்டுதல்களை முன் னெடுக்கிறது.  அந்த சட்டத்தின்மூலமாக, மத நம்பிக்கை களால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர் களின்  உயிரைக் காப்பதற் காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின் பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட முடியும்.
விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெ ரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்பட்டுவரும் இதழில் வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள் ளும்படியாக வெளியிடப்படும் என்றும் அச்சங்கத் தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் www.thenewsnerd.com  எனும் இணையத் தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.
மேற்கண்ட அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை - துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இவை சரியானவைகளே என்று முடிவு கட்டவும் இந்த ஆய்வுகள் பயன்படும்; இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.
இங்குள்ள பல கோடி மக்களை மதம் பிடித்துள்ளதோடு, கடவுள் நம்பிக்கை எத்தனை மோசமான நிலையில் அவர்களை வைத்துள்ளது!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி  பேருந்திலிருந்து மனிதாபிமானமின்றி உருட்டி விடப்பட்டுக் கொன்ற பஞ்சாப் பெண்மணியினைப் பற்றி அங்குள்ள அமைச்சர் அது கடவுள் செயல் - கடவுள் சித்தம் என்று  இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூறினார் என்றால் இதைவிட மனநோயாளிகளாக கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை?
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - கடந்த ஒரு வாரமாக நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது எதைக் காட்டுகிறது?
கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - பக்தி என்பது அதன் வெறித்தன வெளிப்பாடு என்பதைத்தானே அது காட்டுகிறது!
அதுபோலவே நேற்று முன்தினம் ஒடிசாவின் பூரி தேர் இழுப்பு விழாவில் 3,4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இன்னமும் நரபலிக்கு ஆள்தேடும் அளவுக்கு தமிழ் நாட்டில்கூட அவ்வளவு மோசமான பைத்தியக்காரத்தனம் தலை தூக்கி - அடி வாங்கியவுடன் தலையை இழுத்துக் கொள்ளுகிறது என்பது எதைக் காட்டுகிறது!
அமெரிக்கா ஆய்வான இதை நாடு முழுவதும் துண்டறிக்கையாக பகுத்தறிவாளர்களும் பரப்ப வேண்டும்.
அறிவுப் பூர்வமான - உளவியல் பூர்வமான இந்த ஆய்வு செய்தவர்களை, துணிவுடன் வெளியிட்ட அமெரிக்க உளவியல் ஆய்வாளர்களையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர்களும் நீண்ட காலமாகக் கூறி வருவதை ஆய்வு மூலம் அமெரிக்கன் உளவியல் ஆய்வு நிரூபித் துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.
கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்
சிங்கப்பூர்
20.7.2015
விடுதலை,20.57.15

ஞாயிறு, 19 ஜூலை, 2015

நன்னெறியாம் நாத்திகம் வளர்கிறது! கவிஞர் கலி. பூங்குன்றன்


நாத்திகமா? நல்லதன்று - நாட்டையும் நல்ல மனிதர்களையும் கெடுக்கக் கூடியது.
உலகத்தைப் படைத்த ஆண்ட வனையே மறுக்கக் கூடியவர்கள் - உதவாக் கரைகள் - உருப்பட மாட்டார்கள் என்று சாபம் விடுவோர் உண்டு.
சாபம் விடுவதாலேயோ, சண்டைக்கு வருவதாலேயோ ஆகப் போவது என்ன? அவர்களின் முட்டாள்தனத்தை மூர்க்க மாகப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர மூளக்கூடிய பலன் ஏதுமில்லை.
கடவுள் உண்டா, இல்லையா என்று கோதாவுக்குள் குதிப்பதைவிட அந்தக் கடவுளை நம்புவதாகக் கூறுபவர்கள் உண் மையிலேயே நடைமுறையிலே நம்பு கிறார்களா? நம்பி எந்தக் காரியத்தைக் கடவுளிடம் ஒப்படைக்கிறார்கள்?
உண்ணும் உணவிலிருந்து, உடலைப் பாதுகாப்பது உட்பட வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளிலும் தானே கையை ஊன்றிக் கரணம்போடுகிறானே தவிர, கடவுள் கவனித்துக் கொள்வார் என்று எதனை  கடவுளிடம் விட்டு வைக்கிறான்?
சங்கராச்சாரியாரே கண் பார்வை சரி யில்லை என்றால் சங்கரா  நேத்திராலயத் துக்குத்தானே ஓடினார்?
கடவுள் அவதாரம் என்று அடேயப்பா கடல் அளவுப் பிரச்சாரத்தையும், விளம்பரத் தையும் அவிழ்த்துக் கொட்டினார்களே - புட்டபர்த்தி சாயிபாபா - மூன்று மாதம் படுத்த படுக்கையில் கிடக்கவில்லையா? புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் எல்லாம் கூடிக் கூடி ஆலோசித்து ஆலோசித்து வைத்தியம் பார்த்தும் பிள்ளை பிழைக்க வில்லையே!
இதேபோல் எத்தனை எத்தனையோ கேள்விகளைக் கேட்டதுண்டு, அறிவு நாண யமான முறையில் பதில் சொன்ன ஒரே ஒரு மனிதனையும் காண முடியவில்லை.
உலகம் இன்று உண்மையை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. உண்மையை உணரும் ஆர்வத்தில் ஆயிரம் ஆயிரம் பரி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
பெரு வெடிப்புச் சோதனை (பிக்பேங் தியரி) நடத்தி பூமி உண்டான விதத்திற்கு விஞ்ஞானத்தின் மூலம் விடை கண்டுள் ளனர்.
மரபணு இரகசியங்களைக் கண்டறிந்து மரணமற்ற வாழ்வை மனிதன் மேற் கொள்ள முடியுமா எனும் ஆய்வில் குதித் துள்ளனர்.
இந்த ஏவுகணை வேகத்தால் மத நம்பிக் கைகளும் கடவுள் நம்பிக்கைகளும் புதை குழியை நாடுகின்றன.
கிறித்தவ நாடுகளில்கூட சர்ச்சுகள் விலைக்கு என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பியு ஆய்வு நிறுவனம் உலக மதங்களின் எதிர்காலம் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் உலக அளவில் கடவுள் மறுப்பாளர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சி மற்றும் நவீன மய மாகும் மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கல்வி யறிவு, அறிவியல், பொருளாதார சுதந்திரம், சமத்துவம், சமூக அமைதி கொண்ட மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிராமங்களை விட நகரங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மிகவும் வேகமாக இல்லாவிட்டாலும் உள் ளூர் கடவுள் மறுப்பு, நாத்திக சித்தாந்தம் கொண்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்தியாவில் இன்றளவிலும் சமூகச்சூழலில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் பக்திமான்களாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர அவர்கள் கடவுள் மறுப்புச் சிந்தனையைக் கொண்டுள்ளனர்.  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் அதிகம் உள்ளனர்.
கடவுள் நம் பிக்கை அதிகம் உள்ள நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்திலும் இன்னும் பின்னடை வைக் கண்டு வருவதும் குறிப்பிடத்தக்க தாகும். முக்கியமாக ஆசியாவில் உள்ள இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆப்பி ரிக்காவில் உள்ள சூடான், நைஜீரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கானா போன்றவற்று டன் தென் அமெரிக்காவில் பெரு,சிலி, ஈக்வெடார், மெக்ஸிகோ என பல நாடுகள் மத நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வருகின்றன.
இந்த நாடுகள் அனைத்தும் மூன்றாம் உலக நாடுகள் இவற்றில் பல பொருளாதார நிறைவு பெறாத நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.       2014 அமெரிக்கவின் ஹுட்சன் மாகா ணத்தில் உள்ள ரைஸ் பல்கலைகழக பேரா சிரியர் எலைன் ஹவார்ட் தலைமையில் கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பல் வேறு அறிவியல் அறிஞர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத் தினர்.
இந்தக் கணக்கெடுப்பை இங்கி லாந்தின் அறிவியல் அறிஞர்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அதில் கடவுள் நம்பிக்கையற்ற அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 6 விழுக்காடு இங்கிலாந்து 71 விழுக்காடு உள்ளனர்.
மத விழாக்கள் மற்றும் மதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிவி யல் அறிஞர்கள் இந்தியாவில் 32 இங்கி லாந்தில் 10 பேர்.
மதவிழாக்களை முற்றிலும் புறக்கணிக் கும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 19 விழுக்காடு, இங்கிலாந்து 69 விழுக்காடு. கடவுள் இருக்கிறார் என்று நம்பும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 32 விழுக்காடு, இங்கிலாந்து 10 விழுக்காடு.
நம்மைக் காப்பாற்றும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பிக்கைகொள்ளும் அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 38 விழுக்காடு இங்கிலாந்து 8 விழுக்காடு.
Rationalist International Bulletin  2013 எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில்  79 விழுக்காடு மதநம்பிக்கை கொண்ட வராகவும்,. 13 விழுக்காடு எந்த மதத்தை சாராதவர்கள் என்றும், 6 விழுக்காடு நாத்திகர்கள் என்றும் பதிவு செய்துள்ளனர்.
வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க இதழ் மே மாதம் 2013 ஆண்டு மக்கள் தொகை மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விவாதத்திற்காக உலகம் முழுவதும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மூலம் மத நம்பிக்கை குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் இளைய தலை முறையைச் சேர்ந்தோர்களில் 42விழுக்காடு நபர்கள் கடவுள் மறுப்பு கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
2020 ஆண்டு 100 பேரில் 30 பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப் பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் உலகில் கடவுள் மறுப்பாளர்கள் மக்கள் தொகையில் மூன்றாமிடத்தை பிடித்துவிடுவார்கள் என்று தெரியவருகிறது. வரும் காலத்தில் தொடர் அறிவியல் வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றம் காரணமாக கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட மிகவும் அதிகமாக வாய்புள்ளதாக கூறியுள்ளது.
நாடு            கடவுள் மறுப்பாளர்
(நாத்திகர்)
1.  ஸ்வீடன்        65.5%
2. செக் குடியரசு    64.3%
3. வியட்நாம்       63.55%
4. டென்மார்க்     61.5%
5. அல்பேனியா    60%
6. அய்க்கிய இராச்சியம் 52%
7.  ஜப்பான்    51.8%
8.  அஸ்ர்பைஜான் 51%
9.  சீனா 50.5%
10.  எஸ்தோனியா 49%
11.  பிரான்ஸ் 48.5%
12.  ரஸ்யா 48.1%
13.  பெல்லாரஸ் 47.8%
14.  பின்லாந்து 44%
15.  அங்கேரி 42.6%
16.  உக்ரைன் 42.4%
17.  நெதர்லாந்து 41.5%
18.  லாத்வியா 40.6%
19.  தென் கொரியா 36.4%
20. பெல்ஜியம் 35.4%
21.  நியூசிலாந்து 34.7%
22.  ஜெர்மனி 34.6%
23.  சிலி 33.8%
24.  லக்ஸம்பேர்க் 29.9%
25.  ஸ்லோவீனியா 29.9%
26.  வெனிசுவேலா 27.0%
27.  கனடா 23.9%
28.  எஸ்ப்பானியா 23.3%
29.  ஸ்லவாக்கியா 23.1%
30.  ஆஸ்திரேலியா 22.3%
31.  மெக்சிகோ 20.5%
32.  அமெரிக்கா 19.6%
33.  லிதுவேனியா 19.4%
34.  இத்தாலி 17.8%
35.  அர்ஜென்டினா 16.0%
36. தென்னாப்பிரிக்கா 15.1%
37.  குரோவாசியா 13.2%
38.  ஆஸ்திரியா 12.2%
39.  போர்த்துகல் 11.4%
40.  புவேர்ட்டோ ரிக்கோ 11.1%
41.  பல்கேரியா 11.1%
42.  பிலிப்பைன்ஸ் 10.9%
43.  பிரேசில் 8.0%
44.  அயர்லாந்து 7.0%
45.  இந்தியா 6.6%
46.  செர்பியா 5.8%
47.  பெரு 4.7%
48.  போலந்து 4.6%
49.  அய்ஸ்லாந்து  4.3%
50.  கிரேக்கம் 4.0%
51.  துருக்கி 2.5%
52.  ருமேனியா 2.4%
53.  தன்சானியா 1.7%
54.  மால்ட்டா 1.3%
55.  ஈரான் 1.1%
56.  உகாண்டா 1.1%
57.  நைஜீரியா 0.7%
58. வங்காளதேசம் 0.1%
இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்களிடையே நாத்திகக் கருத்து வலுவாகப் பரவியுள்ளது. 2013-14 ஆம் கல்வி யாண்டில் பயிலும் மாணவர்களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந் துள்ளது.
இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்விகற்கும் நிலையில், அவர்களின் கடவுள், மத நம்பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில்நுட்ப மேற்கல்வி பயிலும் மாணவர்கள் ஆத்திக கருத்துள் ளவர்கள் என்றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும்  தெரிய வந்துள்ளது.
இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங்களுக்கு இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான்; கல்வி கற்கும் போது அறிவியல் உபகர ணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலையில்லை என்று கூறினர். பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினர். மதப்பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டுத் தான் இங்கு வருகிறார்கள்.
2013-14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பக் கழக மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்திவிடுகின்றனர். தேர்வு என்று வரும்போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.
மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ண யித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியது.
இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது. ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கைகளை கொஞ்சம் மூட்டைகட்டிவைத்துவிட்டுத்தான் வருகிறார்கள் இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் நாத்திக கருத்துக் களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை என்று கூறினார்.
முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு, பாடங் களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவை களால்தான்  தலைசிறந்த மாணவர்களாக அவர்கள் இங்கிருந்து வெளியேற முடியும் என்பதும் தொழில் நுட்பக் கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளு டன் பயிலும்போது சரியான எல்லையை அடைய முடியாமல் போவதுடன் அவர் களால் சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.
இதுதான் உண்மை நிலை!
இந்தியாவில் இந்து மதத்தில் நாத்திகம் - ஆத்திகம் என்பது என்ன?
உலகம் முழுவதும் கடவுள் மறுப்புதான் நாத்திகம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இந்து மதமோ நாத்திகம் என்பதற்கும், ஆத்திகம் என்பதற்கும் வேறு கண்ணோட்டத்தில் விளக்கம் தருகிறது.
சங்கராச்சாரியார்கள் என்ன சொல்லு கிறார்கள்? குறிப்பாக காஞ்சீபுரம் மூத்த சங்கராச்சாரியார் என்றும் சங்கராச்சாரியார் களிலேயே மிகவும் மதிப்புக்குரியவர் என்று அவர்களின் வட்டாரத்திலேயே பெரிதாகப் பேசப்படும் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறும் கருத்து இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதே.
நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமி, ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர் களாக இருக்க முடியும்
அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?  அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்!
வைதீக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல என்கிறார் காஞ்சி சந்திரசேக ரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி பக்கம் 407 - 408).
இது ஏதோ காஞ்சி சங்கராச்சாரியார் தன்னோக்கில் தான்தோன்றித்தனமாகச் சொல்லி விட்டாரா?
அதுதான் இல்லை; அவர்தான் சாஸ் திரங்களைக் கரைத்துக் குடித்தவர் ஆயிற்றே! மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல் லுகிறது? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக் தியைக் கொண்டு
மறுப்பவன் நாஸ்திக னாகின்றான் (மனுதர்மம் அத்தியாயம் - 2; சுலோகம் 11)
கடவுளை நிந்தித்தாலும் பரவாயில்லை; வேதங்களை, தரும சாஸ்திரங்களை மட்டும் விமர்சிக்கக் கூடாது, எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் விரும்புவது - ஏன்? அதற்கான விடை எளிதானதுதான்.
வேதங்கள்தான் பார்ப்பனர்களை பிர்மா வின் நெற்றியில் பிறந்ததாகக் கூறுகின்றன.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் ததேவதா
தன்மந்த்ரம் பிரம்மாதீனம்
பிராமணா மம தேவதா
(ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆம் சுலோகம்)
உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட வர்கள், மந்திரம்  பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களே கடவுள் என்கிறது வேதம்.
இதற்கு விளக்கம் கூடத் தேவை யில்லை. கடவுள்களுக்கு மேல் பிராம ணர்கள் என்று கூறுகிற வேதங்கள், சாத் திரங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட் டவை - அப்படி விமர்சிப்பதுதான் நாத்திகம் என்று கூறப்படுவதன் பொருள் - இரகசியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது பெரும்பாலும் பார்ப்பனர் அல்லா தார் தந்தை பெரியார் அவர்களாலும் அவர்கள் கண்ட கழகத்தாலும் தன்மான உணர்வு பெற்றவர்கள் அத்தனைப் பேரும் நாத்திகர்களே! இதற்கொரு எடுத்துக் காட்டும் உண்டு.
1971இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது, திராவிடர் கழகத்தாரால் ராமன் செருப்பாலடிக்கப்பட்டான் என்று கூறிப் பெரு மழைப் பிரச்சாரத்தைப் பார்ப்பனர் களும், அவர்களின் ஊடகங்களும் செய்த நிலையில்,  தவத்திரு குன்றக்குடி அடி களார் அவர்கள் தெரிவித்த கருத்தை இந்த இடத்தில் சாட்சிக்கு அழைக்கலாம்.
இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? (விடுதலை 19.2.1971) என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதை கருத்திற் கொண்டால் இந்து மதத்தில் ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினராகக் கருதப்படும் பார்ப்பனர்களுக்கானது நாஸ் திகம் என்பது பிறப்பின் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களின் நலமாகும்.
யதாஹிசவ்ர:
ஸ்யத தயாஹிபுத்த
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி
என்கிறது வால்மீகி இராமாயணம். திருடனும் புத்தனும் ஒன்றாவான், அவன் நாத்திகன் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக உலகம் நாத்திகத் திசையில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலோ இந்து மத வாதிகள் பிறப்பின் அடிப்படையில் மேல் ஜாதி ஆதிக்கவாதிகளாக வரித்துக் கொள்ள ஆஸ்திகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் களானாலும் நாத்திகர்களாகவே இருந்து தீர வேண்டிய கட்டாயமாகி விட்டதா இல்லையா?
-விடுதலை ஞாயிறு மலர், 9.5.15