செவ்வாய், 21 ஜூலை, 2015

ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!! சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!

ஆந்திரா மாநிலம் - குண்டூரில் சமூகநீதி விழா
குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு!
ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!

சமூகநீதி விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரை!
ஆந்திராவில் சமூக நீதிக்காக தொடர் பிரச்சாரப் பயணம்!!
குண்டூர், ஜன.4_ ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதிப் பெரு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்.
சமூக நீதிப் பெரு விழா வில் குண்டூரில் தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிட முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களையும் உள்ளடக்கி அனைத்துத் தரப்பினரையும் ஈடு படுத்தி, தொடர்ந்து 10 நாள் சமூக நீதிப் பிரச் சாரப் பயணம் மேற் கொள்ளப்படும் என பிரகடனப்படுத்தி தமிழர் தலைவர் உரையாற்றினார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில், ஆந்திர பிர தேச பிற்படுத்தப்பட்ட வகுப்பின் சங்சேம சங்கத்தின் சார்பாக சமூக நீதிப் பெருவிழா நடை பெற்றது. 3.1.2015 அன்று குண்டூரின் மய்யப் பகுதி யில் அமைந்துள்ள சிறீ வெங்கடேசுவர விஞ் ஞான மந்திர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆந்திர பிரதேச பிற்படுத் தப்பட்ட வகுப்பின சங் சேம சங்கத்தின் மாநிலத் தலைவராக தெரிந்தெடுக் கப்பட்டுள்ள கேசன சங்கர் ராவ் பாராட்டப்பட்டார். சமூக நீதி ஆர்வலர்கள், தலைவர்கள் பலர் பெரும் திரளாக விழாவில் பங் கேற்றுச் சிறப்பித்தனர். சமூக நீதிப் பெருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சமூக நீதியின் அடுத்த கட்ட  விழிப் புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக் கிட ஆந்திர மாநிலத்தின் அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கி தொடர் பிரச்சாரப் பய ணம் மேற்கொள்ளப்படும் என எழுச்சிமிகு அறிவிப் பினைத் தெரிவித்தார்.
சமூகநீதிப் பெரு விழா விற்கு ஆந்திர மாநில மசூலிப்பட்டிணத் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப் பினர் கொனகல்ல நாரா யணராவ் தலைமை வகித் தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின சங்சேம சங் கத்தின் தேசியத் தலை வரும், தெலங்கானா சட் டமன்ற உறுப்பினருமான ஆர். கிருஷ்ணய்யா முன் னிலை வகித்தார். விழா வில் தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா, ஆந்திர மாநில பிற்படுத்தப்பட் டோர் மேம்பாடு மற்றும் கலால்துறை அமைச்சர் கே. ரவீந்திரா, தெலங் கானா மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவாஜி, சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசகவுடு, ஜில்லா பரிசத் தலைவர் சேக் ஜானிமுன், தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் டி. சுமன் மற்றும் அனைத்துத் தரப்பு சமூக நீதித் தலைவர்கள், அமைப்பு   அடிப்படையிலான ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சமூக நீதித் தலைவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சமூகநீதி விழா தொடங்குவதற்கு முன்ன தாக குண்டூரில் அமைந் துள்ள சமூகநீதிக்குப் பாடுபட்ட தலைவர் களான ஜோதிபா புலே, அண்ணல் அம்பேத்கர் பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரின் சிலை களுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். தமிழர் தலைவருடன் சமூகநீதித் தலைவர் கேசன சங்கர்ராவ், ஆந்திர மாநில சமூகநீதி அமைப் பினர் வழக்குரைஞர் ராம கோட்டீஸ்வரராவ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் மற்றும் பலர் திரளாகச் சென்றனர்.
சமூகநீதித் தலைவர் களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், மாலை 4 மணியளவில் சமூகநீதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் சமூகநீதி அமைப் பினர் மற்றும்  ஆர்வ லர்கள் கலந்து கொண் டனர். ஊர்வலம், விழா அரங்கினை சென்ற டைந்து, பின்னர் சமூக நீதிப் பெரு விழா தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. சமூக நீதி விழாவில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை
சமூகநீதி விழாவில் திராவிடர் கழகத்தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப் பிட்டதாவது:
மக்கள் நாயகம் என்பது, மக்கள் தொகையில் பெரும்பான்மையினரை, அவர்களது நியாயமான தேவைகளை, உரிமைகளை பெற்றுத் தருகின்ற வகையில் அரசாட்சி அமைந்திட வேண்டும். ஆனால், இந்த மண்ணில் நிலவி வந்த, ஆதிக்கம் செலுத்திவரும் சிறுபான்மையினரின் நலனைப் பேணுகின்ற வகையில், பெரும்பான்மையினரின் நலனை தடைப்படுத்துகின்ற வகையில், மட்டுப்படுத்துகின்ற வகையில் ஆட்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஏகபோக சமூக ஆதிக்கவாதிகளால் (social monopolies) பெரும்பான்மையினர் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். இனியும் இந்த ஆதிக்கவாதிகளின் அதிகார ஆட்சி நடைபெறாது. ஒடுக்கப்பட்ட மக்களில் - பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர், மத அடிப் படையிலான சிறுபான்மையினர் எனும் பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு தோன்றியுள்ளது. அத்தகைய விழிப்புணர்வின் வெளிப்பாடுதான். இந்த சமூகநீதி விழாவில் பெருந் திரளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பங்கேற்றுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம்கேட்பது சலுகை அல்ல; உரிமை --_ சமத்துவ உரிமையினைதான் கேட்கிறோம். (We are not demanding charity but parity)
ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்கும் சமத்துவம் பெறுவதற்கான இடஒதுக்கீடு என்பது மனிதனை வேறுபடுத்திப் பார்க்கும் போக்கு என ஆதிக்கவாதிகள் விளக்கம் அளிக்கின்றனர். இடஒதுக்கீடு என்பதை தொடங்கியதே இத்தகைய ஆதிக்கவாதிகள்தான். ஒரு குலத்துக்கு ஒரு நீதி, ஒரு தொழில் என்று மனு காலம் முதல் கொண்டு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருபவர்கள்தான் வீணான விளக்கமளிக்கும் ஆதிக்கவாதிகள். அன்று முதல் ஆதிக்கவாதிகள் வலியுறுத்தி வரும் இடஒதுக்கீடு மனிதரை பிரிவுபடுத்தி பார்ப்பது. இன்று அடக்கப்பட்ட மக்கள் தங்களுக்காகக் கோரும் இடஒதுக்கீடு, பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தினரை இணைத்துப் பார்ப்பது; சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டிச் செல்வது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சி வலைகளை அடையாளம் கண்டு அவைகளை அறுத்து எறிந்து தமக்கு உள்ள உரிமைகளைப் பெற வேண்டும். போரிட்டுதான் பெறவேண்டும். ஆயுதப் போர் அல்ல; அறிவாயுதம் தாங்கி அமைதியான போர்; கருத்து அடிப்படையிலான போர் தொடங்கப்பட வேண்டும். இத்தகைய உணர்வுகளுக்கு உந்துதலுக்கு இத்தகைய சமூக நீதிப் பாராட்டு விழா அச்சாரமாக அமைந்திடல் வேண்டும்.
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களில், சமத்துவம் பெறுவதற்கான கொள்கைகளை, அவர் களுடைய வழிகாட்டுதலை ஒடுக்கப்பட்ட மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதித்தலை வர்களான ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம், சர்தார் லட்சண்ணா ஆகியோரது சிலைகளுக்கு விழா தொடங்குவதற்கு முன்னர் மாலை அணிவித்து மரியாதை செய்த வேளையில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடும் தேவை மற்றும் அவருடைய பகுத்தறிவு கொள்கையினைப் போற்றுதல் பற்றிய உரையாடல் நடைபெற்றது. மிகவும் மகிழ்வுடன் இந்த சமூகநீதி விழாவினர் குணடூரில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்திட முன் வந்தனர். அதற்கான முயற்சிகள் உடனே தொடங்கப்பட உறுதி அளித் துள்ளனர். (குண்டூரில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியாரின் சிலை ஆந்திர மாநிலத்தில் நிறுவப்படும் இரண்டாவது சிலையாகும். முதல் சிலை விசாகப் பட்டினத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது)
சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு (அன்று ஆந்திரப்பகுதியினை உள்ளடக்கிய சென்னை மாகாண காலம்தொட்டு) ஒரு சிறப்பான வரலாறு உண்டு. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இடஒதுக்கீட்டிற்கு தனியாக ஒரு சட்டத்தினை இயற்றி 69 விழுக்காடு மொத்த இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெரும்பான்மை மக்களின் உண்மையான, நியாயமான பிரதிநிதித்துவம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைத்திட, உரிய அளவில் இட ஒதுக்கீடு அளவு அந்தந்த மாநிலங்களில் சட்டத்தின் மூலம் நிலை நிறுத்தப்படவேண்டும். நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வினை ஒடுக்கப் பட்ட மக்களிடம் உருவாக்குகின்ற வகையில் ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி பற்றிய தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல், மதம் கடந்த அடையாளங்களைத் தாண்டியதாக தொடர் பிரச்சாரம் அமைந்திட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அந்த சமூக நீதிப் பிரச்சாரப் பயணம் அமையும். ஆட்சியாளர்கள் கவனத்தை கவருகின்ற வகையிலும் அந்த பிரச்சாரப் பயணம் அமையும். பெரியார் இயக்கம் ஆந்திராவில் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும் இணைத்து, கலந்துபேசி சமூக நீதிப் பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்திடும். விரைவிலேயே சமூகநீதிப் பிரச்சாரப் பயண கால அட்டவணை வெளியிடப்படும்.
இந்த சமூக நீதி விழாவில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஈசுவரய்யா பங்கேற்று சிறப்பித்துள்ளார். ஆணையத்தின் செயல்பாட்டிற்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் சமூகநீதிக்கான அமைப்பினரின் குரல் எழுப்ப வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முழுமையான நீதி நிர்வாக அதிகாரம் கொண்டதாக திருத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் முழுமையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கிடைக்கின்ற வகையில் சமூக நீதி அமைப்புகள் கோரிக்கை விடுத்தல் வேண்டும். ஒருங்கிணைந்த செயல்பாட்டால்தான் அத்தகைய கூடுதல் அதிகாரங்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கிடைக்கும்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும், சமூகநீதி விழாவின் நாயகர் ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின தலைவர் கேசன சங்கரராவ் பாராட்டுதலுக்கு உரிய செயல் வீரர். அவருடைய தலைமையில் சமூக நீதிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் ஆந்திர மாநிலத்தில் துவக்கப்பட வேண்டும். அத்தகைய உரிமை மீட்பு, போராட்டங் களுக்கு, செயல்பாடுகளுக்குப் பெரியார் இயக்கம் என்றும் உறுதுணையாக இருக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்கும் எனக்கூறி சமூக நீதி விழாவின் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
திரையுலக முன்னணி நடிகர்
சமூகநீதி விழாவில் பங்கேற்ற திரைப்பட நடிகர் டி.சுமன் குறிப்பிட்டதாவது:-
இந்த சமூகநீதி விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரையுலக மேடையாகட்டும், இதர மேடைகளாகட்டும், நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதை அடையாளப் படுத்திக் கொள்வதில் உரிமை கலந்த பெருமை கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் சமூக நீதி ஆக்கம் பெறுகின்ற வகையில் என்னால் ஆனவரை செய்திட அணியமாக இருக்கிறேன்.
இன்று நான் ஆந்திர திரைஉலகில் பிரபலமாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது படித்தது தமிழ்நாட்டில்தான். 33 ஆண்டு காலம் தமிழகத்தில்தான் இருந்தேன். தமிழ் திரையுலகம்தான் எனக்கு திரை உலக வாழ்வினை அளித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் இயக்கத்தினைப் பற்றி நன்றாக அறிவேன். அதன் தலைவர் அய்யா வீரமணி அவர் களிடம் நேரடி பழக்கம் இல்லாவிடினும், அவரை நான் நன்றாகவே அறிவேன்.
தமிழ்நாட்டின் மக்களிடம் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது தந்தை பெரியாரது இயக்கம்தான். அந்த இயக்கத்தின் துணையோடு ஆந்திர மாநிலத்தில் சமூகநீதிப் பயணத்தில் பெரும் வெற்றி பெற இயலும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
எனது செயல்பாடும் சமூகநீதித் தளத்தில் கூடுதலாகவே இருக்கும். எனது ரசிகர்களையும் இந்த சமூக நீதிப் பயணத்தில் பங்கேற்க வைத்திட முழு முயற்சி எடுப்பேன் என்பதை இந்த சமூகநீதி விழாவில் உறுதியளிக்கிறேன்.
குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைந்திடுவதற்கு ஆதரவு
அய்யா வீரமணி அவர்கள் குண்டூரில் தந்தை பெரியாரின் சிலை அமைப்பது குறித்துப் பேசினார். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின் சிலையினை குண்டூரில் அமைத்திடும் பணியில் எனது நிதி பங்களிப்பு உண்டு. அதற்கான முயற்சிகளில் என்னையும் ஈடுபடுத்தி விரைவில் தந்தை பெரியாரின் சிலை நிறுவப் பாடுபடுவேன் என்பதை இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது திரையுலக வாழ்வோடு, சமூக நீதிப் பயணத் திற்கான பங்கும் சேர்ந்தே இருக்கும். நமது உரிமைகளை வென்றெடுப்போம்.
இவ்வாறு திரைப்பட நடிகர் சுமன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
குண்டூரில் நடைபெற்ற சமூகநீதி விழா, ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவித மாறுதலுக்கான வித்தாக அமைந்தது. எழுச்சியுடன் பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்பினர் கலந்து கொண்டது. ஒருங்கிணைந்த சமூகநீதி செயல்பாட்டுக்கான துவக்கமாகவே அமைந்துவிட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த சமூகநீதிப் பிரச்சாரம் பயணம் சமூக நீதி விழாவினரிடம் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் குண்டூரில் நடைபெற்ற சமூக நீதி பாராட்டு விழா சமூக நீதி விடியலுக்கான அச்சாரமாகவே அமைந்து விட்டது.

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் ஒரே மாலையாக பெரிய மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வழக்குரைஞர் கோட்டீஸ்வர ராவ், தொழிலதிபர் டில்லி பாபு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள சமூகநீதிப் போராளிகளான மகாத்மா ஜோதிபாபூலே, ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கவுத லட்சண்ணா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைக்கு தமிழர் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை....
ஆந்திர மாநிலம் அமராவதியில் கிருஷ்ணா நதி கரையில் புதிதாக அமைந்துவரும் புத்தர் சிலைமுன் தமிழர் தலைவர்; புத்த பிட்சுகள் மற்றும் புத்திஸ்டுகள் தமிழர் தலைவருடன் உள்ளனர்; பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்குத் தமிழர் தலைவர் மரியாதை...
ஆந்திர மாநிலம் குண்டூர் வந்த தமிழர் தலைவருக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பூங்கொத்து வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
சமூகநீதி ஊர்வலத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், மேடையில் தமிழர் தலைவருக்கு விழாக் குழுவின் சார்பில் சிறப்பு; புதிதாக பொறுப்பேற்ற கேசன சங்கரராவ் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு....
சமூகநீதிப் போராளிகளின் உரையை கேட்கத் திரண்டிருந்த மக்கள் கூட்டம்
-விடுதலை,4.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக