வியாழன், 29 அக்டோபர், 2015

சென்னை பெரியார் திடலுக்கு ஜெர்மன் பகுத்தறிவாளர்கள் வருகை

90 ஆண்டு இயக்க சாதனை, பெரியார் தொண்டின் விளைச்சலைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்!
சென்னை, அக்.29_ ஜெர்மன் பகுத்தறிவாளர் கள் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்த வர்கள் சென்னைப் பெரியார் திடலுக்கு நேற்று மாலை (28.10.2015) வருகை தந்தனர். தமிழர் தலைவர் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு, பாராட்டு அளிக்கப்பட்டது.
90 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் வீறு நடைபோடும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களின் தொண்டால் ஏற்பட் டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்து வியப்பில் ஆழ்ந்தனர்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (28.10.2015) மாலை தமிழகம் வருகைதந்துள்ள அய்ரோப்பிய மனித நேய அமைப்புத் தலைவர் டாக்டர் வோல்கெர் முல்லர், ஜெர்மன் மனித நேய, சுதந்திர சிந்தனையாளர் சங்க செயலாளர்    கேத்ரின் ஜுரா மற்றும் ஜெர்மன் மனித நேய இளைஞர் குழுவினருக்கு பாராட்டுவிழா  நடை பெற்றது.
கேத்ரின் ஜுராவை அறிமுகப்படுத்தி பகுத்தறி வாளர் கழகப் பொருளாளர் தமிழ்செல்வன் உரை யாற்றினார்.   டாக்டர் வோல்கெர் முல்லர்குறித்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்புச் செய லாளர் இரா.தமிழ்செல்வன் அறிமுக உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன் விழாத் தொடக்க உரையாற்றினார்.
டாக்டர் வோல்கெர் முல்லர் தம்முடைய அமைப் பின் பணிகளை விளக்கிக்கூறி உரையாற்றினார். கேத்ரின் ஜுரா உரையாற்றுகையில் நாத்திகம், சுயமரியாதை மனிதநேயக் கருத்துகளை வலியுறுத்தி 90 ஆண்டுக.ளாக இயங்கிவரும் திராவிடர் கழகம் குறித்து அறிந்து மிகவும் வியந்தார்.
பகுத்தறிவாளர் கழகப் புரவலர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாத் தலைமையேற்று டாக்டர் வோல்கெர் முல்லர், கேத்ரின் ஜுரா ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்களை வழங்கிப் பாராட்டினார்.
விருந்தினர்களுக்குப் பயனாடை!
ஜெர்மன் மனித நேய இளைஞர் குழுவைச் சேர்ந் தவர்களான மிடாலா, லியோனி பியா, ஜார்ஜ், பாஸ்கல், பால், லூய்சா, மார்கோ, லாரென்சியா, லியோ, டேனியல் மற்றும் விஜயவாடா கோரா நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவரான அரி.சுப்பிரமணியம்  ஆகியோருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மேனாள் மேயர் சா.கணேசன், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெகதீசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த திவாகர், தங்க.தனலட்சுமி, சேரலாதன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர்  கி.சத்தியநாராயணன், தமிழ்ப்பணி இதழ் ஆசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர், பெரியார் மணியம்மை மருத்துவமனை பல் மருத்துவர் தேனருவி, பகுத்தறிவு ஆசிரியர் இராசேந்திரன் ஆகியோர் பயனாடைகளை அணிவித்து, இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்களை வழங்கினார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டதாவது:
ஆசிரியர் விளக்கவுரை வெவ்வேறு நாடுகளிலிருந்து ஒரு குடும்பமாக நாம் இங்கே இணைந்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். நீங்கள் ஜெர்மனிலிருந்து வந்துள்ளீர்கள். இங்கே தமிழ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நம்மை அன்புடன் சுயமரியாதை, மனித நேயம் இணைக்கிறது.  விஜய வாடாவிலிருந்து உங்களை இங்கு அழைத்துவந்துள்ள கோரா மய்யத்தைச் சேர்ந்த அரி.சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கோரா மய்யத்தடன் இணைந்து நாத்திகக் கருத் துகளைப் பரப்பி வருகிறோம்.
பெரியார் திடல் திராவிடர் கழகத்தின் தலைமை யகம்., திராவிடர்கழகம் மனித நேயத்தை அடிப்படை யாகக் கொண்ட இயக்கம்.  மனிதன்மட்டுமே சிந்திப் பவன். மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுவது அதில்தான். சுயமரியாதையின் நோக்கம் என்று வரும்போது, நாங்கள் உங்களை மதிக்கிறோம். நீங்கள் எங்களை மதிக்கிறீர்கள். நம்முடைய நோக்கம் விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் வேண்டும் என்பதுதான்.
இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதை அறி வீர்கள். சமூகத்தில்  பாகுபாடுகள் ஜாதிய முறையால் ஏற்பட்டு உள்ளன. இந்திய சமூகத்தில் ஒருவரின் சமூக அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் உள்ளது. அடுக்கு முறையில் ஜாதி அமைப்பு உள்ளது. ஜாதீய முறை மனிதர்கள் ஏற்றத்தாழ்வுடன்  பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என்று இருக்கின்ற ஜாதீய அமைப்பு முறை இருக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 17இன் மூலமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட் டாலும், நடைமுறையில் ஜாதீய முறைகளால் முரண்பாடுகள் அப்படியே உள்ளன. சட்டத்தில் ஜாதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிறவிப் பேதம் பேசும் வருண தர்மம்  இந்து வர்ணாசிரம தர்மப்படி, ஜாதிய முறை நான்கு வர்ணங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள ஜாதி அமைப்பு முறைகுறித்து ஜெர் மனியிலிருந்து வந்திருக்கக் கூடிய உங்களால் புரிந்து கொள்வது சற்று கடினமே. ஜாதிய முறை என்பது சமத்துவம் இல்லாததாக, படிக்கட்டுமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் படிக்கட்டில் பார்ப்பனர், இரண்டாம் படிக்கட்டில் சத்திரியர், மூன்றாம் படிக்கட்டில் வைசியர் இந்த மூன்று பிரிவினருக்கும் அடிமையாக நான்காம் நிலையில் இருக்கும் நிலை. அடிமையாக இருப்பவர்கள் தங்கள் அடிமைத்தனத்தை அப்படியே ஏற்றக்கொண்ட அவலம்.
இந்த நிலை ஏன் என்று கேட்கின்ற மனித நேய அமைப்புதான் திராவிடர் கழகம். 90 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தை 1925ஆம் ஆண்டில் தொடங்கினார்.
மனிதரில் ஒருவருக்கொருவர் சரிசமமாக உட்கார முடியாது. தொடடுக்கொள்ள முடியாது. தீண்டாமை என்று மனிதன் தொட்டால் மாசு (Pollution) ஏற்படுகிறது என்றால், மற்ற வகைகளில் (External factors) வெளிப்பொருள்களால் ஏற்படலாம். ஆனால், மனிதனை மனிதன் தொட்டுக்கொள்வதில் தீட்டு ஏற்படுகிறது என்று குளிக்கிறான். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு ஏன் என்று தந்தை பெரியார் கேட்டார். மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் நான்கு வர்ணங்களுக்கும்கீழ், அய்ந் தாவது நிலையில் அவர்ணஸ்தர்கள் என்கிற ஆறாவது நிலையில் ஆண்களுக்கு அடிமைகளாக
ஜெர்மன் பகுத்தறிவாளர்கள் வருகை..
பெண்களை வைத்துள்ளார்கள்.  பெண்கள் சுயமாக எதையும் செய்துவிடமுடியாது. கல்வி உரிமை கிடையாது. இதையெல்லாம் மாற்றியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் பணிகளின்மூலமாக பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டன. இயக்கத்தின்மூலம், பிரச்சாரத்தின்மூலம் மக்களிடையே சென்று கருத்துகளை பரப்பினார். எதிர்ப்பு எங்கிருந்து வந்தது என்றால், யாருக்காகப் பேசினாரோ அவர்களிடமிருந்தே வந்தது. மேடையில் பெரியார் பேசிக்கொண்டிருக்கும் போது அழுகிய முட்டை, மலம், செருப்பு ஆகியவற்றை அவர்மீது வீசினார்கள். அதை யெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த மக்களுக்காகவே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். மக்களிடையே பிரச்சாரம் செய்ததுபோல், பத்திரிகைகளையும் அவர் நடத்தினார்.
பிரச்சாரம் - செயல்பாடுகள்
மேற்கத்திய நாடுகளில் நாத்திக அமைப்பு செயல்படுவதற்கும் இங்கே செயல்படுவதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இங்கே மக்கள் இயக்கமாக இயங்கிவருகிறது. படித்தவர்களை மட்டும் கொண்ட தில்லை. சாதாரண மக்களையும் கொண்ட இயக்கமாக இயங்கி வருகிறது. தந்தை பெரியார் பாமர மக்களும் பகுத்தறிவைப் பெறச் செய்தார். அப்படி செய்தபோது எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வந்தது. உலகில் வேறு எவருக்கும் இதுபோன்ற எதிர்ப்புகள் இருந்திருக்காது.  பழைமைகள் குறித்து தந்தைபெரியார் கேள்வி கேட்டார். எதிர்ப்புகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார். கொள்கைகளை பேசியதோடு நிறுத்தாமல் செயல்படுத்திக்காட்டியவர் தந்தை பெரியார்.
செய்தி நிறுவனங்கள் எப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை நன்கு அறிவீர்கள். ஆகவேதான், கொள்கைகளைப் பரப்புவதற்காகவே தந்தை பெரியார் பல பத்திரிகைகளை நடத்தினார். குடியரசு, ரிவோல்ட் எனும் ஆங்கில வார இதழ், பகுத்தறிவு, புரட்சி என்று பல ஏடுகளை நடத்திவந்தார். பத்திரிகைகள் மூலமாக பிரச்சாரம் செய்துவந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பாக உண்மை இதழைத் தொடங்கினார். இன்றும் வந்துகொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான இதழ் பெரியார் பிஞ்சு வெளிவருகிறது. 80ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் மூடநம்பிக்கை, சினிமா, அரசு விளம் பரங்கள் ஏதுமின்றி நடத்தப்படுகிறது.
திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை களாகிய பகுத்தறிவு, மனிதநேயம், சுயமரியாதை, சமூக சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்டவைகளை தொடர்ந்து பரப்பி வருகிறது.
_ இவ்வாறு ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார்கள்.
விழாவில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மனோகரன், கொடுங்கையூர் தங்கமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன்,  தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம், திருவொற்றியூர் கணேசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல்(தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி) உள்ளிட்ட திரளான தோழர்கள், தோழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விழா முடிவில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆ.வெங்க டேசன் நன்றி கூறினார்.
-விடுதலை29.10.15

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நல்லதைக் காட்டிலும் மதம் மிகவும் தீங்கையே உண்டாக்குகிறது

நல்லதைக் காட்டிலும் மதம் மிகவும் தீங்கையே உண்டாக்குகிறது : 60% பிரிட்டிஷ் மக்கள் கருத்து


பிரிட்டன் தற்போது மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. பல கலாச்சா ரங்கள், மதசார்பின்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மதத்திலும் மாற்றம்  ஏற்படுகிறதா? அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து தலைநகர் இலண்டனிலிருந்து  வெளி யாகும் ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) இதழ் நம்பிக்கை களுக்கு அப்பால் (Beyond Belief) என்கிற தலைப்பில் அக்டோபர் மாதம் முழுவதுமாக  பிரிட்டனில் உள்ள பொது மக்களின் மதநம்பிக்கை தொடர்பான மாற்றத்தை உருவாக்கும்வகையில், பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவருகிறது.
கருத்துக்களைத் தெரிவித்துள்ள வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நல்லதைக்காட்டிலும் கேடுகளையே மதம் உண்டாக்கியுள்ளதாகத் தெரி வித்தனர். கருத்து தெரிவித்தவர்களில் கால்பங்கிலும் குறைவானவர்கள் கூறும் போது, நல்லவர்களாக இருப்பதற் காகவே நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் மக்களில் 20 விழுக் காட்டினர் தங்களை மத நம்பிக்கை யாளர்கள் என்று கூறிக்கொண்டாலும், சமூகத்தின் தீமையாக மதம் உள்ளதாகக் கூறினார்கள். அவர்களில் கால் பங்கினர் கூறுமபோது மத நம்பிக்கை உள்ள வர்களைக்காட்டிலும் நாத்திகர்களாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக அளவில் அறநெறியாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஹஃப்-போஸ்ட் தனிப்பட்ட புள்ளிவிவர சேகரிப்பின்படி பிரிட்டன் வாழ் மக்களில் 8 விழுக்காட்டினர் தங்களை மதவாதிகளாக கூறியுள்ளனர்.  60விழுக்காட்டினருக்கும் மேல் உள்ள வர்கள் மதத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பில்லாதவர்களாகக் கூறியுள்ளனர்.
கண் திறந்துள்ள புள்ளிவிவரமாக, பிரிட்டிஷ் சமூகத்தில் மதத்துடன் தொடர்பில்லாதவர்களாக 60 விழுக்காட்டினர் கூறியுள்ள விவரம் வெளியாகி உள்ளது. மேலும், அவர் களின் மதம்குறித்த எண்ணமாக கூறும் போது, பிரச்சினைகளை சரி செய் வதைவிட, அதிகப் பிரச்சினைகளுக்கு காரணமானதாக மதம்  உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
ஹஃப்-போஸ்ட் இதழ்சார்பில் மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து களுக்கான வாக்கெடுப்பு அளிக்கும் தகவலின்படி, அதிக எண்ணிக்கை யிலான மக்கள் கருத்துப்படி மதவாதி களாக இருப்பதைக்காட்டிலும், மத நம்பிக்கையற்ற நாத்திகர்களாக இருப் பதன்மூலம் நல்லவர்களாக இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
சரியாகச் சொல்வதானால், கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டானியர்களில் எட்டுபேரில் ஒருவர் கூறும்போது நாத் திகர்கள்தான் அதிக அறநெறியாளர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். ஒப்பீட்ட ளவில் 6 விழுக்காட்டினர் நாத்திகர் களை அறநெறியில் குறைந்தவர்களாக கூறியுள்ளனர். பிரிட்டிஷ் அறநெறி கோட்டையில் எஞ்சிநிற்கும் கடைசி யான ஒன்றாக மதம் குறித்த நம்பிக்கை இருக்கிறது.
கல்வி நிறுவனங்களில் மதம்
நம் கல்வியிலும், கல்வி நிறுவனங் களிலும் அதிகமான மதசார்பின்மையின் தாக்கம் உருவாக்கப்படுமா?
நம்பிக்கைகளுக்கு அப்பால் என்னும் ஹஃப்-போஸ்ட்  தொடங்கியுள்ள முன் னோட்டமான ஆய்வு முடிவுகள் பூமி யைப்பிளக்கச் செய்வதுபோல் அச்சமற்ற பிரிட்டானியர்கள் கூறியுள்ள கருத்துக் களால் அவர்கள் மதத்துக்குள்  நேர் மறையான மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகின்றனர்.
வெளியாகி உள்ள முக்கியமான கருத்துக்கள்
2,004 மக்களிடையே புள்ளிவிவரம் எடுக்கப்பட்டுள்ளது. 56 விழுக் காட்டினர் தங்களைக் கிறித்துவர் என் றனர். 2.5 விழுக்காட்டினர் முசுலீம்கள் என்றனர். ஒரு விழுக்காட்டளவில் யூதர்களாக உள்ளனர். மற்றவர்கள் பிற மத நம்பிக்கையாளர்கள் அல்லது மத நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர்.
பிரிட்டானியர்களில் பெரும்பாலான வர்கள் மதம் அறநெறியாளர்களை உருவாக்குவதில்லை என்று கருதுகின் றனர். ஆய்வில் கருத்து தெரிவித்தவர் களில் 55 விழுக்காட்டினருக்கும் மேலாக உள்ளவர்கள் மதவாதிகளைக் காட் டிலும் நாத்திகர்கள் அறநெறியாளர் களாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.  18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 30 விழுக்காட்டினர் தீமையைவிட நன்மை பயப்பதாகக் கருதுகின்றனர். 55 வயதிலிருந்து 64 வயதுள்ளோரிடத்தில் ஒப்பீட்டளவில் 19 விழுக்காட்டினரே இக்கருத்தில் உள்ளனர்.
பொதுவாழ்வில் மதத்தின் பங்கு குறித்த மறுசிந்தனைக்கான அழைப்பாக மாபெருமளவில் மத சார்பின்மையும், பல கலாச்சாரங்களும் உள்ள பிரிட்டிஷ் சமூகத்தில் இந்த ஆய்வு வலிமையான ஆதாரமாக உள்ளது.
சமூகவியல் பேராசிரியை
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மதம் தொடர்பான சமுகவியல் பேரா சிரியர் லிண்டா உட்ஹெட் கூறும் போது, மதம் தேவையில்லை என ஏராளமான பொதுமக்கள் விளக்கி நன்றாக உறைக்கும்படி கூறியுள்ளனர் என்றார்.
மேலும் லிண்டா உட்கட் கூறும் போது, அய்க்கியப் பேரரசில் மதம் தடுக் கப்பட வேண்டியதாகிவிட்டது என் பதை என்னுடைய சொந்த ஆய்விலும், தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய் வுத்தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.
மேலும், நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில், நம்பிக்கை, தெய்வீக நம்பிக்கை,  அல்லது ஆன்மீகம் ஆகிய வற்றின்மீது  முழுமையான  மறுப்பு ஏற்பட்டுள்ளது. மத நிறுவனங்களால் வரலாறுபோல் மக்களிடையே பிர பலமாகி உள்ளன.
மதத்தை தள்ளுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.  பாலியல் முறைகேடுகளில் கத்தோலிக்க பாதிரி கள் மற்றும் ஹெப்ரியூ மதகுருமார்கள் ஆகியோரின் தொடர்புகள், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மோதல்கள் மற்றும் இசுலாமிய தீவிரவாத தாக்கு தல்கள் ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன. என்று லிண்டா உட்ஹெட் கூறினார்.
நான் இன்னும் சொல்லுவதானால், சுதந்திர மதிப்புகள், சமத்துவம், சகிப்புத்ததன்மை, பிரிவுகள் ஆகிய வற்றை ஏற்காமல் மதத் தலைமைகள் அவற்றிலிருந்து விலகியே இருக்கின்றன. அதேநேரத்தில் அவற்றைக் கருத்தில் கொண்டு அக்கறையுடன் இருக்கும் வெற்றியாளர்களாக மதமற்றவர்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும், நாத்திகர்களும் இருக்கிறார்கள். அவைகளுக்கு அதிக அழுத்தங்களையும் கொடுத்துவருகிறார்கள் என்று லிண்டா கூறினார்.
பிரிட்டிஷ் மனித நேய அமைப்பு
பிரிட்டிஷ் மனிதநேய அமைப்பின் செயல் தலைவர் ஆண்ட்ரியூ காப்சன் கூறும்போது, இன்றைய பிரிட்டன் மக்கள் குறித்த பொது அறிவை வெளிப் படுத்துவதாக இந்த புள்ளிவிவரம் உள்ளது. மதவாதியோ, மதநம்பிக்கை குறைந்தவரோ அறநெறியுடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, மத நம்பிக்கை முறைகளுடன் பிணைக் கப்படாமல் சமூகத்தில் மதிப்பு, நன்னடத்தை, அறநெறியுடன் மக்கள் இருக்கவேண்டும். பொதுவான பண்பு என்பது மனிதத்தன்மையுடன் இருப் பதுதான். சமூக விலங்குகளாக ஒரு வருக்கொருவர் அக்கறைகொண்டு மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது மனிதனுக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது மட்டுமன்றி மத நம்பிக்கைகள் அற நெறிகளைக்கடந்து மோசமானவையாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சகிப்புத்தன்மையின்மையை ஊக்கப்படுத்துதல், நெகிழ்ச்சியின்மை மற்றும் பெரிய அளவில் நல்லதைச் செய்வதாகக்கூறிக்கொண்டே அதிக தீமைகளை செய்துகொண்டிருப்பது மத நம்பிக்கை ஆகும். நாம் காண வேண்டிய தெல்லாம் நம்மைச் சுற்றி உள்ளவை குறித்த உண்மைகளை விழிப்பாக இருப்பதுதான் என்று ஆண்ட்ரியூ காப்சன்  கூறினார்.
ஆண்ட்ரியூ காப்சன் கூறுகையில், பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களில்  பொதுவாழ்வில் மதத்தின் பங்கு தொடரவேண்டிய அவசியம்  என்ன? மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலரும் பிரிட்டனை கிறித்தவ நாடு என்கிற எண்ணத்தின் அடிப் படையில், மக்களின் தேசிய அளவி லான செயல்களைக்கொண்டு எதிர் பார்க்கிறார்கள் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ஒன்று பட்டு பகிர்ந்துகொள்ளும் சமூகம் எங் களுக்கு தேவை.  கல்வி நிறுவனங்கள் மதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படு வதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். மதரீதியிலான நிறுவனங்கள் பள்ளிகள் நடத்துவதில் நாட்டில் மூன்றாம் இடத்தில் உள்ளன. தேர்ந்தெடுக்கப் படாத மதத்தைச்சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் அமருகிறார்கள். மதச்சார்பின்மையை பொது சேவைகளில் கொண்டுவருவதில் மத நிறுவனங் களிடையே பாரபட்சமான கருத்துக்கள் நிலவுகின்றன என்றார்.
பிரிட்டனில் 2014 அக்டோபர் மாதத்தில் 2004 பேரிடம் நம்பிக்கை களுக்கு அப்பால் என்கிற தலைப்பில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இப் புள்ளிவிவரங்கள் பிரிட்டனில் மத வாதிகள் மத்தியில் பெரும்புயலை எழுப்பி உள்ளது. மதங்கள் கடவுள்மீதான நம்பிக் கைகளின் அடிப்படையிலா?, கலாச்சார கூட்டமைப்புகளாகவா?, நவீன உலகில் மதத்தின் பயன் என்ன? என்கிற அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை மக்களிடம் அளித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தின்மூலமும் கருத்துக் களைக் கேட்டுள்ளது ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு. சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்து வெளியிடப் போவ தாகவும் தெரிவித்துள்ளது.
Tweet us with the hashtag #HPBeyond Belief to tell us in 140 characters என்கிற அறிவிப்பை  ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு அறிவித்துள்ளது.
-ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு, 3.11.2014
-விடுதலை,8.11.14