பிரிட்டன் தற்போது மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. பல கலாச்சா ரங்கள், மதசார்பின்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மதத்திலும் மாற்றம் ஏற்படுகிறதா? அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து தலைநகர் இலண்டனிலிருந்து வெளி யாகும் ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) இதழ் நம்பிக்கை களுக்கு அப்பால் (Beyond Belief) என்கிற தலைப்பில் அக்டோபர் மாதம் முழுவதுமாக பிரிட்டனில் உள்ள பொது மக்களின் மதநம்பிக்கை தொடர்பான மாற்றத்தை உருவாக்கும்வகையில், பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவருகிறது.
கருத்துக்களைத் தெரிவித்துள்ள வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நல்லதைக்காட்டிலும் கேடுகளையே மதம் உண்டாக்கியுள்ளதாகத் தெரி வித்தனர். கருத்து தெரிவித்தவர்களில் கால்பங்கிலும் குறைவானவர்கள் கூறும் போது, நல்லவர்களாக இருப்பதற் காகவே நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் மக்களில் 20 விழுக் காட்டினர் தங்களை மத நம்பிக்கை யாளர்கள் என்று கூறிக்கொண்டாலும், சமூகத்தின் தீமையாக மதம் உள்ளதாகக் கூறினார்கள். அவர்களில் கால் பங்கினர் கூறுமபோது மத நம்பிக்கை உள்ள வர்களைக்காட்டிலும் நாத்திகர்களாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக அளவில் அறநெறியாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஹஃப்-போஸ்ட் தனிப்பட்ட புள்ளிவிவர சேகரிப்பின்படி பிரிட்டன் வாழ் மக்களில் 8 விழுக்காட்டினர் தங்களை மதவாதிகளாக கூறியுள்ளனர். 60விழுக்காட்டினருக்கும் மேல் உள்ள வர்கள் மதத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பில்லாதவர்களாகக் கூறியுள்ளனர்.
கண் திறந்துள்ள புள்ளிவிவரமாக, பிரிட்டிஷ் சமூகத்தில் மதத்துடன் தொடர்பில்லாதவர்களாக 60 விழுக்காட்டினர் கூறியுள்ள விவரம் வெளியாகி உள்ளது. மேலும், அவர் களின் மதம்குறித்த எண்ணமாக கூறும் போது, பிரச்சினைகளை சரி செய் வதைவிட, அதிகப் பிரச்சினைகளுக்கு காரணமானதாக மதம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
ஹஃப்-போஸ்ட் இதழ்சார்பில் மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து களுக்கான வாக்கெடுப்பு அளிக்கும் தகவலின்படி, அதிக எண்ணிக்கை யிலான மக்கள் கருத்துப்படி மதவாதி களாக இருப்பதைக்காட்டிலும், மத நம்பிக்கையற்ற நாத்திகர்களாக இருப் பதன்மூலம் நல்லவர்களாக இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
சரியாகச் சொல்வதானால், கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டானியர்களில் எட்டுபேரில் ஒருவர் கூறும்போது நாத் திகர்கள்தான் அதிக அறநெறியாளர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். ஒப்பீட்ட ளவில் 6 விழுக்காட்டினர் நாத்திகர் களை அறநெறியில் குறைந்தவர்களாக கூறியுள்ளனர். பிரிட்டிஷ் அறநெறி கோட்டையில் எஞ்சிநிற்கும் கடைசி யான ஒன்றாக மதம் குறித்த நம்பிக்கை இருக்கிறது.
கல்வி நிறுவனங்களில் மதம்
நம் கல்வியிலும், கல்வி நிறுவனங் களிலும் அதிகமான மதசார்பின்மையின் தாக்கம் உருவாக்கப்படுமா?
நம்பிக்கைகளுக்கு அப்பால் என்னும் ஹஃப்-போஸ்ட் தொடங்கியுள்ள முன் னோட்டமான ஆய்வு முடிவுகள் பூமி யைப்பிளக்கச் செய்வதுபோல் அச்சமற்ற பிரிட்டானியர்கள் கூறியுள்ள கருத்துக் களால் அவர்கள் மதத்துக்குள் நேர் மறையான மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகின்றனர்.
வெளியாகி உள்ள முக்கியமான கருத்துக்கள்
2,004 மக்களிடையே புள்ளிவிவரம் எடுக்கப்பட்டுள்ளது. 56 விழுக் காட்டினர் தங்களைக் கிறித்துவர் என் றனர். 2.5 விழுக்காட்டினர் முசுலீம்கள் என்றனர். ஒரு விழுக்காட்டளவில் யூதர்களாக உள்ளனர். மற்றவர்கள் பிற மத நம்பிக்கையாளர்கள் அல்லது மத நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர்.
பிரிட்டானியர்களில் பெரும்பாலான வர்கள் மதம் அறநெறியாளர்களை உருவாக்குவதில்லை என்று கருதுகின் றனர். ஆய்வில் கருத்து தெரிவித்தவர் களில் 55 விழுக்காட்டினருக்கும் மேலாக உள்ளவர்கள் மதவாதிகளைக் காட் டிலும் நாத்திகர்கள் அறநெறியாளர் களாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 30 விழுக்காட்டினர் தீமையைவிட நன்மை பயப்பதாகக் கருதுகின்றனர். 55 வயதிலிருந்து 64 வயதுள்ளோரிடத்தில் ஒப்பீட்டளவில் 19 விழுக்காட்டினரே இக்கருத்தில் உள்ளனர்.
பொதுவாழ்வில் மதத்தின் பங்கு குறித்த மறுசிந்தனைக்கான அழைப்பாக மாபெருமளவில் மத சார்பின்மையும், பல கலாச்சாரங்களும் உள்ள பிரிட்டிஷ் சமூகத்தில் இந்த ஆய்வு வலிமையான ஆதாரமாக உள்ளது.
சமூகவியல் பேராசிரியை
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மதம் தொடர்பான சமுகவியல் பேரா சிரியர் லிண்டா உட்ஹெட் கூறும் போது, மதம் தேவையில்லை என ஏராளமான பொதுமக்கள் விளக்கி நன்றாக உறைக்கும்படி கூறியுள்ளனர் என்றார்.
மேலும் லிண்டா உட்கட் கூறும் போது, அய்க்கியப் பேரரசில் மதம் தடுக் கப்பட வேண்டியதாகிவிட்டது என் பதை என்னுடைய சொந்த ஆய்விலும், தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய் வுத்தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.
மேலும், நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில், நம்பிக்கை, தெய்வீக நம்பிக்கை, அல்லது ஆன்மீகம் ஆகிய வற்றின்மீது முழுமையான மறுப்பு ஏற்பட்டுள்ளது. மத நிறுவனங்களால் வரலாறுபோல் மக்களிடையே பிர பலமாகி உள்ளன.
மதத்தை தள்ளுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பாலியல் முறைகேடுகளில் கத்தோலிக்க பாதிரி கள் மற்றும் ஹெப்ரியூ மதகுருமார்கள் ஆகியோரின் தொடர்புகள், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மோதல்கள் மற்றும் இசுலாமிய தீவிரவாத தாக்கு தல்கள் ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன. என்று லிண்டா உட்ஹெட் கூறினார்.
நான் இன்னும் சொல்லுவதானால், சுதந்திர மதிப்புகள், சமத்துவம், சகிப்புத்ததன்மை, பிரிவுகள் ஆகிய வற்றை ஏற்காமல் மதத் தலைமைகள் அவற்றிலிருந்து விலகியே இருக்கின்றன. அதேநேரத்தில் அவற்றைக் கருத்தில் கொண்டு அக்கறையுடன் இருக்கும் வெற்றியாளர்களாக மதமற்றவர்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும், நாத்திகர்களும் இருக்கிறார்கள். அவைகளுக்கு அதிக அழுத்தங்களையும் கொடுத்துவருகிறார்கள் என்று லிண்டா கூறினார்.
பிரிட்டிஷ் மனித நேய அமைப்பு
பிரிட்டிஷ் மனிதநேய அமைப்பின் செயல் தலைவர் ஆண்ட்ரியூ காப்சன் கூறும்போது, இன்றைய பிரிட்டன் மக்கள் குறித்த பொது அறிவை வெளிப் படுத்துவதாக இந்த புள்ளிவிவரம் உள்ளது. மதவாதியோ, மதநம்பிக்கை குறைந்தவரோ அறநெறியுடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, மத நம்பிக்கை முறைகளுடன் பிணைக் கப்படாமல் சமூகத்தில் மதிப்பு, நன்னடத்தை, அறநெறியுடன் மக்கள் இருக்கவேண்டும். பொதுவான பண்பு என்பது மனிதத்தன்மையுடன் இருப் பதுதான். சமூக விலங்குகளாக ஒரு வருக்கொருவர் அக்கறைகொண்டு மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது மனிதனுக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது மட்டுமன்றி மத நம்பிக்கைகள் அற நெறிகளைக்கடந்து மோசமானவையாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சகிப்புத்தன்மையின்மையை ஊக்கப்படுத்துதல், நெகிழ்ச்சியின்மை மற்றும் பெரிய அளவில் நல்லதைச் செய்வதாகக்கூறிக்கொண்டே அதிக தீமைகளை செய்துகொண்டிருப்பது மத நம்பிக்கை ஆகும். நாம் காண வேண்டிய தெல்லாம் நம்மைச் சுற்றி உள்ளவை குறித்த உண்மைகளை விழிப்பாக இருப்பதுதான் என்று ஆண்ட்ரியூ காப்சன் கூறினார்.
ஆண்ட்ரியூ காப்சன் கூறுகையில், பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களில் பொதுவாழ்வில் மதத்தின் பங்கு தொடரவேண்டிய அவசியம் என்ன? மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலரும் பிரிட்டனை கிறித்தவ நாடு என்கிற எண்ணத்தின் அடிப் படையில், மக்களின் தேசிய அளவி லான செயல்களைக்கொண்டு எதிர் பார்க்கிறார்கள் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ஒன்று பட்டு பகிர்ந்துகொள்ளும் சமூகம் எங் களுக்கு தேவை. கல்வி நிறுவனங்கள் மதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படு வதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். மதரீதியிலான நிறுவனங்கள் பள்ளிகள் நடத்துவதில் நாட்டில் மூன்றாம் இடத்தில் உள்ளன. தேர்ந்தெடுக்கப் படாத மதத்தைச்சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் அமருகிறார்கள். மதச்சார்பின்மையை பொது சேவைகளில் கொண்டுவருவதில் மத நிறுவனங் களிடையே பாரபட்சமான கருத்துக்கள் நிலவுகின்றன என்றார்.
பிரிட்டனில் 2014 அக்டோபர் மாதத்தில் 2004 பேரிடம் நம்பிக்கை களுக்கு அப்பால் என்கிற தலைப்பில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இப் புள்ளிவிவரங்கள் பிரிட்டனில் மத வாதிகள் மத்தியில் பெரும்புயலை எழுப்பி உள்ளது. மதங்கள் கடவுள்மீதான நம்பிக் கைகளின் அடிப்படையிலா?, கலாச்சார கூட்டமைப்புகளாகவா?, நவீன உலகில் மதத்தின் பயன் என்ன? என்கிற அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை மக்களிடம் அளித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தின்மூலமும் கருத்துக் களைக் கேட்டுள்ளது ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு. சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்து வெளியிடப் போவ தாகவும் தெரிவித்துள்ளது.
Tweet us with the hashtag #HPBeyond Belief to tell us in 140 characters என்கிற அறிவிப்பை ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு அறிவித்துள்ளது.
-ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு, 3.11.2014
-விடுதலை,8.11.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக