ஞாயிறு, 12 ஜூன், 2016

பகுத்தறிவாளர் தபோல்கரை படுகொலை செய்த இந்துத்துவாவாதி கைது


கல்புர்கி, பன்சாரேவை கொன்றதும் இந்த கும்பல் தானா?
படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர்கள்

புனே ஜூன் 12 புனேயை சேர்ந்த தலைசிறந்த பகுத்தறிவுவாதியும், சிறந்த சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் எந்த ஒரு முன்னேற் றமும் இல்லாததால் இந்த வழக்கை  மத்திய புலானாய்வுத் துறைக்கு  மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்தக் கொலை வழக்கை மத்தியப் புலானாய் வுத்துறை. அதிகாரிகள் விசா ரித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய முக் கிய குற்றவாளியை சி.பி.அய். அதிகாரிகள் ஜூன் 9-ஆம் தேதி  மும்பையை அடுத்த பன்வேல் என்ற என்ற நகரத்தில்  கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் வீரேந்திரசிங் தாவ்டே என்பதும், அவர் சனா தன் சன்ஸ்தாவின் உறுப்பினர் முக்கிய உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் காது, மூக்கு, தொண்டைக்கான மருத் துவர் என்னும் மற்றொரு தக வலும் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்குப்
பிறகு கைது

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியை சி.பி. அய். கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் இணைந்து புலன்விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ஆரம்பத் தில் இருந்தே சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப் பினர் தொடர்புடைய பல சான்றுகள் கிடைத்தன.

இந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனாதன் சன்ஸ்தா விற்கு உறுப் பினர்களைச் சேர்க்கும் பிரிவின் தலைவராக செயல்பட்ட சமீர் என்பவரை கோலாப்பூரில்  கர் நாடக மாநில காவல் துறை யினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து  விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது அவ ருடைய வீட்டில் இருந்து கைப் பற்றப்பட்ட நாட்குறிப் பேட்டை ஆய்வு செய்தனர். அதில் உள்ள தொலைப்பேசி தொடர்பு எண்கள் அனைத்தும் மங்களூரு, புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள நபர்களின்   எண்களாகும்.  இந்த எண்கள் அனைத்தும்  நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே மற்றும் கர்நாடகாவில் வைத்து கொலை செய்யப்பட்ட கல்புர்கி ஆகிய மூவரின் கொலை பற்றிய சந்தேக வளையத்திற் குள் வந்தவர்களின் தொடர்பு எண்கள் என்பது தெரிய வந் தது.  இதில் உள்ளவர்கள் அனை வரும் சனாதன் சன்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் எனவும் தெரியவந்துள் ளது. இந்தப் பட்டியலில் உள் ளவர்களைத் தீவிரமாக விசாரித் தும் அவர்களிடம் கைப்பற்றப் பட்ட ஆவணங்களை வைத்தும் நரேந்திர தபோல்கரின் கொலை யில் மூளையாக செயல்பட்ட வீரேந்திரசிங் தாவ்டே  கைது செய்யப்பட்டுள்ளார்.

சனாதன் சன்ஸ்தா

கோவா நகரில் உள்ள சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவலகம் மூடநம்பிக்கையின் தலைமையிடமாகத் திகழ் கிறது. இந்து அமைப்புகள் நடத்தும் கல்விச் சாலைகள், கோவாவிற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் போது சனாதன் சன்ஸ்தாவிற்கு கட்டாயம் அழைத்துச் செல் லும். அங்கு குழந்தைகளுக்கு மூளைச்சாயம் ஏற்றப்படும். இது குறித்து பல்வேறு புகார் கள் எழுந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியும், சனாதன் சன்ஸ்தாவும்

சனாதன் சன்ஸ்தாவின் பன்வேல்(மகாராஷ்டிரா) கிளைக்கு 10.6.2009 அன்று காஞ்சி சங்கராச்சாரி வந்தார். அப்போது அவர் கூறியதாவது: சனாதன் சன்ஸ்தா இந்து மதத்தின் பாரம்பரியம், வழி பாட்டுமுறை மற்றும் இந்துக் களின் பாதுகாவலராகச் செயல் படுகிறது. சனாதன் சன்ஸ்தா வின் செயல்பாட்டின் மூலமாக இந்துமத பாரம்பரியம் மீட் டெடுக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் இந்து தர்மத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைகளும், பாரம் பரிய பழக்க வழக்கங்களும் மறுபிறவி எடுக்கும். இந்தப் பணியில் சனாதன் சன்ஸ்தா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.   கோவா, மகாராஷ்ரா வில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் இந்த அமைப் புகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் உள்ளனர்.

பகுத்தறிவாளர்
கொலை ஏன்? 

நரேந்திர தபோல்கர், கல் புர்கி மற்றும் கோவிந்த பன் சாரே போன்றவர்கள் மகாராஷ் டிரா, கர்நாடகா, கோவா போன்ற பகுதிகளில் நடக்கும் மூடநம்பிக்கை செயல்பாடு களை கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் மதச்சடங் குகள் மூலம் பணம், காலம், மக்களின் உழைப்பு வீணாகிறது என்ற கருத்து தபோல்கரின் பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடையே மிகவும் வேக மாக பரவ ஆரம்பித்தது, முக்கி யமாக தீவிர விநாயகர் வழி பாட்டை மேற்கொண்டிருந்த மக்கள் தபோல்கரின் கருத்துக் களை மிக விரைவில் ஏற்றுக் கொண்டனர்.

இதன் தாக்கம் 2005-ஆம் ஆண்டு 35000 விநாயகர் மண் டல்கள் புனேவில் இருந்தன. 2011-ஆம் ஆண்டு வெறும் 8000 மண்டல்களாக குறைந்து விட்டது.  இளைஞர் அமைப் புகள் பல தபோல்கரின் கருத் துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக சேவையில் ஈடுபட்ட காரணத் தால்தான் விநாயகர் மண்டல் கள் குறைந்துவிட்டன.

இது போன்ற பல்வேறு மதம் தொடர்பான விழாக்களில் ஈடு பட்ட இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் சனாதன் சன்ஸ் தாவின் பிரச்சாரங்களில் பெரி தும் பாதிப்பு ஏற்பட்டது, சனா தன் சன்ஸ்தாவிற்கு உறுப்பி னர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டே சென்றது ஆகவே மிகவும் திட்டமிட்டு இந்த அமைப்பினர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி மற்றும் கோவிந்த பன்சாரேவை கொலை செய்துள்ளனர்.
-விடுதலை,12.6.16

செவ்வாய், 7 ஜூன், 2016

நாத்திகர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது


சீனா 90; ஜெர்மன் 60; இஸ்ரேல் 57 சதவிகிதம் கடவுள் மத நம்பிக்கையற்றவர்கள்!புதுடில்லி, மார்ச் 23_ உலகில் கடவுள், மத நம்பிக்கை யற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
நார்வே நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெருகிவருகிறார்கள் என்கிற ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.
நார்வே நாட்டில் சுமார் நான்காயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 39 விழுக்காட்டினர் முற்றிலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளனர். 37 விழுக்காட்டினர் கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பதாகக்குறிப்பிட்ட அதேநேரத் தில், 23 விழுக்காட்டினர் கடவுள்குறித்து எவ்வித கருத் தையும் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே 1985ஆம் ஆண்டில் முதல்முறையாக கடவுள் நம்பிக்கைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். தற்போது அவ்வெண் ணிக்கை பெருமளவில் சரிந்து 37 விழுக்காடாகிவிட்டது. 1985ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக அய்ந்தில் ஒரு பங்கினர் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 39 விழுக்காட் டளவில் உயர்ந்துள்ளது.
நார்வே நாட்டைச்சேர்ந்த ஜான் பால் பிரெக்கே தற்போது நார்வேயினரிடையே கடவுள் நம்பிக்கைகுறித்த ஆய்வை 4000 பேரிடம் மேற்கொண்டார். அவர் கூறும்போது,
30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பணியைத் தொடங்கியதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தைக் காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் 29 விழுக்காட்டினர் மட்டுமே கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக உள்ளனர். ஆய்வுத் தகவல் குறித்து பிரெக்கே கூறும்போது, நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், பிறப்பால் அனைத்து மதங் களைச் சேர்ந்தவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. கேள்வியில் கடவுள் என்பது குறித்த வரை யறையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துள்ள நாத்திகர் களின் எண்ணிக்கை
கேல்லப் இன்டர்நேஷனல் மற்றும் பியூ ஆய்வு மய்யம் இணைந்து கடவுள்மீதான நம்பிக்கை குறித்த ஆய்வு மேற்கொண்டன. ஆய்வு முடிவுகளின்படி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் மற்றும் மதமற்றவர்கள் பன்னாட்டளவில் மக்கள் தொகையில் 33 விழுக்காட்டளவில் உள்ளனர்.
சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற நாத்திகர்கள் நாடுகளின் வரிசைப்படி,
சீனா மற்றும் ஹாங்காங்
சீனாவில் 90 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 70 விழுக்காட்டினரும் தங்களை மதமற்றவர்களாக அல்லது நாத்திகர்களாக குறிப்பிட்டுள்ளனர்.
செக் குடியரசு
யுஎஸ்எஸ்ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது. 45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்துவந்துள்ளதாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஜப்பான்
பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுக்காட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனி
ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இசுரேல்
இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம் பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இசுரேல் நாளிதழ் ஹாரெட்ஸ் நாத்திகக் கருத்துகள் இசுரேல் சமூகத்தினரிடையே ஆழமாக வேரூன்றி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா, அய்ஸ்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடவுள் நம்பிக்கை என்பதில் சுதந்திர அணுகு முறையுடன் இருந்துவருவதாக ஆய்வுத்தகவல் சுட்டிக் காட்டி உள்ளது.
_டைம்ஸ் ஆப் இந்தியா, 22.3.2016
-விடுதலை,23.3.16

ஞாயிறு, 5 ஜூன், 2016

நாஸ்திகம்


5.5.1929 (குடிஅரசிலிருந்து)
எனக்கு விக்கிரக ஆராதனை யில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஜெபம் வேண்டாம்.
கோயில்சென்று கும்பிட வேண்டாம். சாம்பிராணி முதலிய செலவு செய்து பூஜைபோட வேண்டாம், தாழ்த்தப்பட்டவர் களையும் தீண்டாதவர்கள் என்று கொடுமை செய்யப்பட்டவர் களையும் நெற்றிவேர்வை நிலத் தில் சிந்த சரீரத்தால் வயல்களில் பாடுபட்டு உழைக்கின்ற ஏழைகளையும் பார். அவர்களை கவனிப்பதில் ஈஸ்வரனைக் காண். - ரவீந்திரநாத் தாகூர்
சன்மார்க்கங்களுக்கு முக்கிய தடைகள் சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பர். அவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணாசிரமம் முதலியவைகளும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.- இராமலிங்க சுவாமிகள்
பச்சை நாஸ்திகம்
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்
சாத்திரத்தைச் சுட்டு மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையை பொய்யாக்கி மேல்கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப்புரட்டு என்று தள்ளி சூத்திரத்தைக் கண்டு பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து சுகம் பெறுவதெல்லாம்  அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?
- பத்திரகிரியார்

-விடுதலை,26.2.16