திங்கள், 20 பிப்ரவரி, 2017

*அம்பேத்கர்...* பெயர்க்காரணம் ...

சிலர் அம்பேத்கர் என்பது பீமாராவ் அவர்களுக்குப் பாடம் நடத்திய ஒரு பிராமண ஆசிரியர் பெயர் எனக் குறிப்பிடுகின்றனர்.

நன்றியால் அவர் பெயரை அம்பேத்கர் வைத்துக்கொண்டதாகத் தொடர்ந்து எழுதுகின்றனர்.

சமீபத்தில் சல்லிக்கட்டிற்கு எதிராக நான் முகநூலில் எழுதியமைக்காக என்னிடத்தில் ஒரு பார்ப்பனன் வலியவந்து வம்பிழுத்தான்...

அப்பொழுது நீண்ட விவாதத்தில் அம்பேத்கர் என்பதுகூட ஒரு பார்ப்பனனின் பெயர்தான் என அண்ணலின் வரலாற்றை இழிவுபடுத்த முயற்சித்தான்...

அத்தகைய
ஈனப் பிறவிகளுக்காகவே இப்பதிவு.

// மராட்டிய கொங்கணி வட்டாரத்தில், இரத்தனகிரி மாவட்டத்தில், *அம்பாவடே* என்னும் கிராமத்தில்,

மோவ் என்னும் இடத்தில் அம்பேத்கர் பிறந்தார்.

அது இராணுவக் குடியிருப்பு. ஆதலால் Military Head Quarters of War -MHQW- என அந்த இடம் பெயர் பெற்றது!

அம்பேத்கரின் தந்தையார் இராணுவ சுபேதார், ராம்ஜி மாலேர்ஜி சக்பாலுக்கும் பீமாபாய் அம்மையாருக்கும் பதினான்காவது பிள்ளையாக, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் பிறந்தார்.

‘பீம்’ என்றும், ‘பீமாராவ்’ என்றும் இயற்பெயர் பெற்றவரின் ஆதிக் குடும்பப் பெயர் சக்பால்.

ஆனால் பீமின் *குடும்பப் பெயர், ‘அம்பவடேகர்’* என்பது ஆகும்.

‘அம்பவடேக’ என்பது இவருடைய சொந்த ஊர் என்பதால், அம்பவடேகர் என்ற குடும்பப் பெயர்கள் முன்னோர்களின் சொந்த ஊரையே அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

இப்பெயரே பின்னாளில் *அம்பேத்கர்*
என மாறியது. //

அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர் ; அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார் ; அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பரப்புரையினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

*அண்ணல் அம்பேத்கரை இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பல் கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது.*

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர். அத்துடன் இந்துமகாசபா ஆதரவாளர்.

அவர் வீர சவர்க்கருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

வீர சவர்க்கருக்கு ஆதரவாகவும் அந்த நூலில் பல இடங்களில் எழுதியுள்ளார்.

அம்பேத்கரை விமர்சனம் செய்தும் அந்த நூலில் சில இடங்கள் வரும்.

அம்பேத்கருடைய வரலாற்றில் சில விசமத்தனங்களையும் அவர் புகுத்தியுள்ளார்.

அதில் ஒன்றுதான் அம்பேத்கருடைய பெயர் ...
அவருடைய ஆசிரியர் பெயர். அதனை அம்பேத்கர் தன்னுடைய பெயராக ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

அதனை இப்பொழுது ஆர்எஸ்எஸ் காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்பேத்கரது

*இளமைக்காலத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர்.*

இவர் ஒரு தீண்டத்தகாவர் என்பதால் இவரைத் தொட்டு அடித்தால் தீட்டாகிவிடும் என்பதால் அம்பேத்கரை அடிக்க மாட்டார்களாம்.

பல ஆசிரியர்கள் அம்பேத்கருக்குப் பாடம் நடத்துவதையே விரும்ப மாட்டார்களாம்.

அம்பேத்கரும் அவரது அண்ணனும் பள்ளி செல்லுகின்றபொழுது கூடவே ஒரு கோணிப்பையையும் எடுத்துச் சென்று அதில்தான் அமர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஒரு பார்ப்பன ஆசிரியர் நீயெல்லாம் எதற்குப் படிக்க வருகிறாய்? என்று கேட்டாராம்.

அதற்கு அம்பேத்கர் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள் என்று பதில் சொன்னாராம்.

அதுபோல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்தபோது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க நினைத்தாராம்.

பார்ப்பன ஆசிரியர்கள் சூத்திரனான உனக்கு சமஸ்கிருதத்தை சொல்லித் தரமாட்டோம் என்று கூறி விட்டார்களாம். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்துப் படித்தார் அம்பேத்கர்.

பார்ப்பனர்கள் இவ்வளவு இடையூறு செய்துள்ளார்கள் என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு கிட்டாது என்பதால் இப்பொழுது அவரது பெயர்ப் பிரச்சினையைக் கெட்டியாகப் பிடித்துள்ளார்கள்.

அதாவது அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் மிகவும் பிரியமாக இருந்ததால் அதன் நன்றி உணர்ச்சியாக அம்பேத்கர் அவர்களே தனக்கு அந்த ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டுள்ளார் என்று பொய்யான பரப்புரை செய்கிறார்கள்.

உண்மையில் தனஞ்செய்கீர் அவர்களது நூலிலுள்ள தகவலே அதன் புரட்டை வெளிப்படுத்துகிறது.

அதாவது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்பதாகும்.

அம்பாவடே என்பது அவரது ஊரின் பெயர்.

அதனால் அதை அம்பாவடேகர் என்று பெயரை பள்ளியில் சேர்க்கும்போது பதிவு செய்துள்ளார்கள்.

பணியில் ஒழுங்கில்லாத சோம்பேறியான பார்ப்பன ஆசிரியர் அந்தப் பெயரைப் பள்ளி பதிவேட்டில் அம்பேத்கர் என்று எழுதிவிட்டார்.

இப்படித்தான் அண்ணல் அம்பேத்கருக்கு அந்தப் பெயர் வந்தது.

இதனை அப்படியே தலைகீழாகப் புரட்டி அம்பேத்கரே நன்றியுணர்ச்சியின் காரணமாக அம்பேத்கர் என்ற தனது ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டார் என்று எழுதி பார்ப்பன ஆசிரியர்கள் அம்பேத்கரின் கல்விக்கு செய்துவந்த இடையூறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அமபேத்கருக்கு உதவி செய்ததாகச் சொல்லும் அந்த ஆசிரியரின் வாரிசுகள் இன்றைக்கு இருப்பார்கள் அல்லவா? அல்லது அம்பேத்கர் என்பது பார்ப்பன இனத்தவர் வைத்துக் கொள்ளுகின்ற பெயராக இருந்தால் மற்றவர் யாராவது அந்தப் பெயரில் இருப்பார்கள் அல்லவா?

தமிழகத்தில்தான் தந்தை பெரியார் இயக்கத்தின் சாதனையாக எவரும் தன்னுடைய பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் வால் மாதிரி தங்கள் ஜாதியை ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த வாலை வைத்து அவர்கள் என்ன ஜாதி என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.

ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பார்ப்பனர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லையே ஏன்?

மகாராஷ்டிராவில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்கள் சில:

1) பட்னவிஸ் (தேவேந்திர பட்னவிஸ்)

2) கட்கரி (நிதின் கட்கரி)

3) மகாஜன் (பிரமோத் மகாஜன்)

4) தேசாய் (மொரார்ஜி தேசாய்)

5) ஹெட்கேவர் ( ஆர்எஸ்எஸ் தலைவர்)

6) கோல்வால்கர் (குருஜி கோல்வால்கர்)

7) சவர்க்கர் (வீரசவர்க்கர்)

8) கோட்ஷே (நாதுராம் கோட்ஷே)

9) திலக் (பாலகங்காதர திலகர்)

10) ரானடே

11) டென்டுல்கர்

12) மங்கேஸ்கர்

13) ஜோஷி

14) குல்கர்னி

15) பட்

16) நட்கர்னி

17) ஷர்போத்தார்

18) ஆப்தே

19) ஷர்தேசாய்

20) பட்கே

21) தேஷ்பான்டே

22) தேவ்ரஸ்

23) தாக்கரே

இவையெல்லாம் உதாரணம். இதுபோல் நூற்றுக் கணக்கான பெயர்களில் பார்ப்பனர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த நூற்றுக் கணக்கான பெயர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பரப்புரையினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருமேயானால்... *இந்தக் கேள்விக்கு விடையளித்து விட்டு அதற்குப் பிறகு அந்தப் பரப்புரையைச் செய்யட்டும்..*

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

புவியில் கடவுள் இல்லாத பகுதியாக கிழக்கு ஜெர்மனி இருப்பது ஏன்?




ஒரே நாடாக இருந்த ஜெர்மனி பெர்லின் சுவரால்  பிரிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இருந்தன. பின்னர் அரசியல்ரீதியில் மீண்டும் ஒன்றாக இணைந்து இருபதாண்டுகள் கடந்த பின்னரும் ஜெர்மனி மதக்கூறுகளால் பிரிந்தே உள்ளன. இன்னமும் மேற்கு ஜெர்மனி யில் கிறித்தவம்  ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் படியாகவே நிலை கொண் டுள்ளது. அந்த அளவில் கிழக்கு ஜெர் மனியில் இல்லை. கிழக்கு ஜெர்மனியில் மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தங்களை நாத்திகர்கள் என்று பகிரங்கமாகப்  பதிவு செய்து கொண்டுள்ளனர்.
ஜெர்மானிய சனநாயக குடியரசு நாட்டில் மீண்டும் கிறித்தவம் திரும்பும் என்று எண்ணுபவர்களின் எண்ணம் ஈடேறாது என்றே நினைவுக்கு எட்டியவரையில் தோன்றுகிறது. புதிதாக எடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, நாத்திகம் கிழக்கு ஜெர்மனியில் நன்றாகவே வளர்ந்து வருகிறது. கிழக்கு ஜெர்மனியில் 28 வயதுக்குட்பட்டவர் களில் 71 விழுக்காட்டினர் எப்போதுமே மேலான சக்தி என்று ஒன்றை நம்பிய தில்லை என்கின்றனர். 38லிருந்து 47 வயதினரில் 72.6 விழுக்காட்டினர் எவ் வித கடவுள் நம்பிக்கையும் இல்லாத வர்களாக உள்ளனர்.
கடவுள்மீதான நம்பிக்கை என்று வரும்போது இளம்தலைமுறையினர், நடுத்தர வயதினரைப் போலவே நாத்திகர்களாகத் தங்கள் சிந்தனையில் ஒரே அலைநீளத்தில் உள்ளனர். முன்பு பிரிந்திருந்தநிலையில் கிழக்கு ஜெர்மனி யில் அரசியல் மாற்றங்களில், இன்னும சொல்லப்போனால் மக்கள் எண்ணங் களிலேயேகூட  மதம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் வெகுசிலர் நாத்திகர்களாக இருந்துள்ளனர். 28 வயதிலிருந்து 37 வயதினராக இருந்த வர்கள் 63.6விழுக்காட்டினர் ஒருபோதும் கடவுளை நம்பாத முழுமையான நாத்திகர்களாகவே இருந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இருக்கின்ற அடுத்த தலைமுறையினர் மதமற்ற பெற்றோர்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் டாம் டபிள்யூ.ஸ்மித் என்பவர் நாடுதோறும், காலந்தோறும் கடவுள் நம்பிக்கையின் நிலைகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அண்மையில் ஆராய்ச்சியின் அறிக்கையை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காலத்துக்கேற்ப கடவுள்நம்பிக்கை மாற்றம் அடைந்துள்ளதைக் குறிப்பிட் டுள்ளார். ஆய்வாளர்கள் அவர்களு டைய சொந்தக் கருத்துகளை கூறுவ தில்லை. சர்வதேச சமூகவியல் புள்ளி விவரத்திட்டங்கள் அளிக்கும் விவரங் களைச் சார்ந்தே ஆய்வுகளை அளிக் கின்றனர். 1991, 1998 மற்றும் மீண்டும் 2008இல் உலகம்முழுவதும் மதங்களின் விகிதம் குறிப்பாக கிறித்துவம் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியாவிலிருந்து இஸ்ரேல் வரை, ருஷ்யாவிலிருந்து சைப்ரஸ்வரை என்று உலகம் முழுவதும் புள்ளிவிவரங்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனாலேயே ஜெர்மனி என்று வரும்போது, இரண்டாக கிழக்கு மேற்கு என்று புள்ளிவிவர முடிவுகள் பெறப் பட்டுள்ளன. புவியில் நீண்டகால மாகவே அதிக அளவில் நாத்திகர்கள் உள்ள நாடாக கிழக்கு ஜெர்மனி இருந்துவந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியில் 52.1விழுக்காட்டினர்  கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று கூறி உள்ளனர். அதேநேரத்தில் முற்றிலும் வேறுபட்டு 10.3 விழுக்காட்டினர்  மேற்கு ஜெர்மனியில் நாத்திகர்களாக அடை யாளப்படுத்திக் கொண்டுள்ளனர். ருஷ்யாவில் 6.8விழுக்காட்டினரும், அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 3விழுக்காட்டினரும், பிலிப்பைன்சில் 0.7விழுக்காட்டினரும் நாத்திகர்களாக உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் தோராய மாக 46விழுக்காட்டினர் புள்ளி விவரங் களின்படி தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், டச்சு நாட்டினர் 15.3விழுக்காட்டினரும், மேற்கு ஜெர்மனியில் 4.9 விழுக்காட்டினரும், இத் தாலியில் 1.7 விழுக்காட்டினரும் நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். 1991 முதல் 2008வரையிலான காலங்களில் நாத்திகர்களின் விகிதம் 3.4விழுக்காட்டு அளவில் வலிமையான அளவில் அதிகமாகி உள்ளனர். அதேநேரத்தில் ருஷ்யாவில் 11.7விழுக்காடாக சுருங்கி உள்ளது.
நவீனத்துவத்தின் அடையாளத்தின்  குறியீடு
உலக அளவில் தலை முறைகளுக் கிடையே ஒப்பிடும்போது, பெரும்பாலும் இளைஞர்கள்தான் 55 வயதைக்கடந்த முதியவர்களைக் காட்டிலும், மத நம்பிக்கைளைக்கடந்து நவீனத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்களாக கருதப்படு கிறார்கள். உதாரணமாக போலந்தில் 79.3 விழுக்காட்டினரில் 68 வயதைக் கடந்தவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் களாகவும் 28 வயதிலிருந்து 37 வயதி னராக உள்ளவர்கள் 58.4 விழுக்காட் டினர் நாத்திகர்களாகவும் உள்ளனர்.  இதற்கு விதிவிலக்காக இஸ்ரேல் உள்ளது. மத சார்பற்ற யூதர்களின் இசுரேலை நோக்கிய இடப்பெயர்வால் இசுரேலில் உள்ள இளைஞர்கள் இறைநம்பிக்கையாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையே வேறுவிதமாக, யூதர்களின் இடப்பெயர்வு மட்டுமின்றி யூதர்கள், இசுலாமியர்களை மதரீதியில் வேறுபடுத்திப் பார்ப்பதாலும் அவ்வாறு உள்ளதாக புள்ளிவிவர ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதரீதியான  பிரிவாலும், போட்டியாலுமே மத நம்பிக்கைகளை அடையாளப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். மத நம்பிக்கை என்பது ஒருவரின் எண் ணத்தில் தனிப்பட்ட அடையாளத்துக் காகவே அதிக அளவில் மத அடை யாளங்கள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. கிழக்கு ஜெர்மனியில் மதரீதியான போட்டிகள் இல்லால் இருப்பதற்கு அங்கு இசுலாமியர் குறைந்த அளவில் இருப்பதுதான். ஆய்வாளர்கள் இதை மட்டுமே காரணமாகக் கூறாமல், நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கான காரணங்களை விரிவாக அலசி ஆராய்ந்து உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் நாத்திகம் பரவி உள்ளதன் காரணத்தை ஆய்வாளர் ஆராயும்போது தேசிய சமூகவியலாளர் கள், பொதுவுடைமைவாதிகள் விட்டுச் சென்ற ஆழமான தடங்கள்தான் காரண மாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ஏராளமானோர் அடிமை களாக நடத்தப்பட்டதன் காரண மாகவும், இடைப்பட்ட காலத்தில் மதச் சடங்குகளின்மீது பிடிப்பில்லாதவர்கள் இருந்த காரணங்களாலும், மதமற்றவர் களாகவே இருந்துள்ளனர். 1918லிருந்து 1933 காலம்வரையிலான வெய்மர் குடியரசாக இருந்தபோது மதசார்பற்ற இயக்கங்கள் இயங்கி உள்ளன. குறிப்பாக துறிங்ஜியா, சக்சோனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் கடவுள், மத மறுப்பாளர் களாகவே இருந்துள்ளனர். அந்தப் பகுதிகளில் சர்ச் கிறித்தவ ஆலயம் என்று எதுவுமே இருக்கவில்லை. போலந்தி லிருந்து கத்தோலிக்கர்கள் நுழைவை அடுத்து, அவர்களால் மதபோதனைகள் நடைபெற்றன.
தற்போதைய ஆய்வின் முடிவு களின்படி, ஜெர்மனி முழுவதும் நாத்திகக் கருத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிகிறது. மேற்கு ஜெர்மனியில் அதன் அண்மை நாடுகளான செக் குடியரசு, பிரான்சு நாடுகளைவிடவும் மத நம்பிக்கையில் வலுவாக உள்ளதாக தெரிகிறது. அய்ரோப்பாவில் நம்பிக்கைமீதான கருத்தானது தனி நபருக்குரியதாகவும், பெரிதான நம்பிக்கை என்பதன் வீரியத் தில் குறைந்துவிட்டதாகவும், மதம் என்பது பொதுவாக கவுரவத்துக்காகவும், மற்றபடி கடவுள், மத மறுப்புகளே உள்ளதாக ஆய்வு கூறுகிறது. அய் ரோப்பா முழுவதும் நாத்திகக்கருத்து முதன்மையான சவாலாகவே உள்ளது.
ஜெர்மனியில் உள்ள  கிறித்தவ ஆலயத்தின் துணைத்தலைவர் குண்ட் லாச் வெல்ட் இணையத்தில் கூறும் போது, கிழக்கு மற்றும மேற்கு ஜெர் மனிகளை ஒன்றோடொன்று ஒப்பிடு வதே பொருத்தமற்றது. அய்ரோப்பாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கடவுள் நம்பிக்கை என்பது பெரும் சவாலாக உள்ளதை ஒப்புக் கொள் கிறோம் என்றார். எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஆன்மீகப் பேராசிரியர் எபெர்ஹர்ட் டைஃபென்சீ கூறும்போது, கிழக்கு ஜெர்மனி மிஷனரி நாடாக இருந்தால் கிறித்தவ பயிற்சிகுறித்தோ, மற்ற மதங்கள்குறித்தோ  கூறலாம். ஆனால், நுற்றாண்டுகளாகவே அந்த நாடு மத மற்றதாக இருந்து வருகிறது என்றார். நூற்றாண்டுகளாக மிஷனரி இயக் கங்களுடன் எந்த காரணம்முன்னிட்டும் இணையாமல் இருந்து வந்துள்ளது. இப்படிக்கூறுவதன்மூலம் அவரை பணியிலிருந்து விடுவித்துவிடுவார்களா என்று கேட்டபோது, அதற்கான அவசியமே இல்லை. இருக்கும் நிலையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மிஷன் என்றோ, எவாங்கலைஸ் என்றோ, புதிய ஏற்பாடு என்றோ   எந்தவிதத்தில் முயன்றாலும் அவர்கள் கவனிப்பதாகவே தெரியவில்லை. மதத் தின்பெயரால் அவர்களைப் பிரிப்ப தாகவே கூறுகிறார்கள். எப்போதுமே மதத்தின்பேரால் செயல்படுபவர்களை மதிப்பதாகவே தெரியவில்லை. அவர்களுடைய இலட்சியங்களை வெளிப்படையாகவே கொண்டுள்ளனர். அவர்களுடைய பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதில்லை என்று டைஃபென்சீ கூறினார்.
எர்ஃபர்ட் நகரில் நடைபெறும் ஜெர்மானிய பிஷப்புகளின் மாநாட்டுக் குழுத் தலைவரான  ஹுபெர்டஸ் ஸ்கோனிமேன் கூறும்போது, மிஷன ரியமாக செயல்படும்குழுவாக புதிய வாழ்வுக்காலக் கொண்டாட்டம் என்கிற தலைப்பில் விளக்கக் கூட் டங்கள் நடத்தப்படுகின்றன.
கிழக்கு ஜெர்மனியில் 14ஆம் வயதை பருவ வயதை அடைந்ததாகக் கொண்டாடு வதன்மூலம் சிறிதளவு வெற்றி பெற்றுள்ளதாகவும், அதேபோல் கிறிஸ்துமஸ்  விடுமுறை என்பதால் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல்நாளிலேயே விழா கொண்டாடப்படுவதன்மூலமும், காதலர் தினவிழாவில் காதலர்களுக்கு சேவை ஆற்றுவதன்மூலமும் மத நம்பிக்கையை வளர்த்துவருவதாக கூறும்போதே, இவை அனைத்தும் கடவுள்மீதான நம்பிக்கையை வளர்ப் பதற்கே தவிர தவறாக எடுத்துக் கொள் ளக் கூடாது என்றும் எச்சரிக்கையுடன் கூறுகிறார்.
-_ வேர்ல்டுகிரென்ச்.காம்
-விடுதலை ஞா.ம.,14.6.14

வறுமையில் வாடிய ஸ்டாலின்!


சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி  செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பதாகும். இவர் 1879ஆம் ஆண்டில் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார்.
இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷிய மொழியி லிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்னர் கற்றுக் கொண்டார். ரஷிய மொழியை இவர் ஜார்ஜிய மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார்.
ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப் 11 வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்,
வாலிப பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1899-ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துகளைப் பரப்பியதற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் இவர் தலைமறைவு மார்ச்சி இயக்கத்தில் சேர்ந்தார். சாதாரணப் பின்னணியில் வாழ்க் கையைத் தொடங்கிய ஸ்டாலின், உல கின் பெரிய நாடு ஒன்றின் அதிகார மிக்க தலைவராக உயர்ந்தார். அதற்குப் பொருத்தமாக, இரும்பு மனிதன் என்று பொருள்படும் வகையில் தனக்கு ஸ்டாலின் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.
-விடுதலை ஞா.ம.,6.9.14