திங்கள், 31 ஆகஸ்ட், 2015


பெரியார் 1000 போட்டியினை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக சென்னை மண்டல பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பெரியார் 1000 போட்டியை வெற்றி பெறச் செய்ய பல்வேறு வழிமுறைகளையும் ஆலோசனைகளையம் எடுத்துரைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ப.க. பொதுச் செயலாளர்கள் வீ.குமரேசன், மா.அழகிரிசாமி, ப.க. துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் சென்னை மண்டல ப.க. பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். (30.8.2015)
 -விடுதலை,30.8.15











.

சென்னை, செப். 10_ சென்னை மண்டல பகுத் தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைப் பெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் இரா .தமிழ்ச் செல்வன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. முதலில் திருத்தணி மாவட்ட திரா விடர் கழகத் தலைவரும் செயல் வீரருமான சண் முகம் அவர்களின் மறை வுக்கு வீர வணக்கம் 2 மணித்துளிகள் அமைதி காத்தனர். வட சென்னை, தென் சென்னை, தாம்பரம், கும்மிடிபூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களும், உறுப் பினர்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தலைமையுரை ஆற்றிய இரா.தமிழ்ச் செல்வன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப்  பொருளாளர் முனை வர் சி. தமிழ்ச் செல்வன் அவர்கள் , பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூறினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் பகுத்தறிவா ளர் கழகத்தின் செயல் திட் டங்களையும் முக்கியத்து வத்தையும் விளக்கி உரை யாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத் தினை கட்டமைப்பது குறித்து பேசினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தனது உரை யில்: பெரியார் 1000 நிகழ் வின் அவசியம் குறித்தும், அதை எப்படி வெற்றியாக் குவது என்பது குறித்தும் விளக்கினார். மேலும் உலகப் பகுத்தறிவாளர்கள் மாநாடு ஜெர்மனியில் நடைபெறுவது பற்றியும் அதில் பகுத்தறிவாளர் கழ கத்தின் பங்கு குறித்தும் விளக்க உரை ஆற்றினார்.
திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தனது உரையில்: பகுத்தறி வாளர் கழகத்தின் தோற்றம் வளர்ச்சி அதன் இன்றைய நிலைப பற்றிய தகவல் களை வழங்கினார். தந்தைப் பெரியாரின் நினைவலை களை பகிர்ந்து கொண்ட தோடு அதன் தேவைகளை யும் வலியுறுத்தினார். பெரியாரியம் என்றும் வெல்லும் எனப் பல்வேறு செய்திகளை கூறி , பகுத் தறிவாளர் கழகத்தின் பணி களை பட்டியலிட்டார்.
கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
1. திருத்தணி மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ரும் செயல் வீரருமான சண்முகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
2. பெரியார் 1000 நிகழ் வினை சென்னை மண்ட லத்தில் சிறப்பாக நடத்த உதவிட வேண்டும்.
3. கழக வெளியீடுக ளான விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு போன்ற இதழ்களுக்கு உறுப்பினர் சேர்ப்பது,
4. பகுத்தறிவாளர் கழ கத்திற்கு புதிய உறுப்பினர் களை சேர்ப்பது,
5. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் நடத் துவது,
6. பெரியார் பேசுகிறார் நிகழ்வினை மாதமொரு முறை நடத்துவது ,
என்பன போன்ற தீர் மானங்கள் தோழர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண் ணன், மண்டல திராவிடர் கழகச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் பா.தென்னரசு, தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் எஸ்.டி. இரத்தின சபாபதி, செயலாளர் பொறியாளர் திராவிடப் புரட்சி, வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்கறிஞர் சு.குமாரதே வன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.த. சண்முக சுந்தரம், செயலா ளர் ச.கமலக்கண்ணன், எல்.அய்.சி. வளர்ச்சி அதி காரி பெருமாள், வட சென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழகச் செயலா ளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் பா.இராமு, துணைச் செயலாளர் வீ.இராச சேகர், வீ.இரவிக்குமார், தி. புருனோ, உடுமலை, தோழியர் மணிமேகலை, த. செல்வபாரதி, த.கோ. திலீபன், வேலவன், இர. வெற்றிச்செல்வன், சுழற் சங்கத்தைச் சார்ந்த நண்பர்கள் கார்த்திகேயன், வீ.அரசு, மற்றும் பல நண் பர்கள் கலந்து கொண்டனர்.
தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திராவிடப் புரட்சி நன்றி கூறினார்.
-விடுதலை,6.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக