வெள்ளி, 28 செப்டம்பர், 2018

பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!



சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

குஜராத்தில்...




குஜராத் மாநிலத் தலைநகரம் காந்தி நகரில் அமைந்துள்ள குஜராத் மத்திய பல் கலைக்கழகத்தில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. தற்காலத்துக்கும் தேவையான தந்தை பெரியார் சிந்தனைகள் எனும் தலைப்பில் பொது விவாதம் நடைபெற்றது. தந்தைபெரியார் குறித்து பலரும் பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறினார்கள்.

மதம் பகுத்தறிவுக்கு முற்றிலும் விரோத மானது. ஜாதி முறையை ஒழிக்காமல் எவ்விதமான முற்போக்குக் கொள்கைகளும் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியாது. ஜாதியை ஒழிக்காமல் கம்யூனிசம் பற்றி பேசுவது என்பது அடிப்படையான ஆரம்பக்கல்வியைக் கற்காமல் உயர்கல்விகுறித்து விவாதிப்பதைப் போன்றது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மூடநம்பிக்கைகள் மூலம் சுரண்டப்படுகிறார்கள். கடவுள் மற்றும் தலைவிதி என்பவை பகுத்தறிவுக்கு நேரடியான எதிரிகள் ஆகும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் கடவுள், விதி என்பவை களைக் கூறிக்கொணடு அடிமைப்படுத்தி விடலாம். அதனால், மரத்துண்டு தண்ணீரில் (எவ்வித இலக்குமின்றி) மிதப்பதைப்போன்று ஆகிவிடுவான். சுயமரியாதை மற்றும் கண்ணி யத்துடன் அனைவரும் வாழவேண்டும் என்ப தற்காகப் போராடிவந்தார்.  தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டு வதையும், எந்திரங்களால் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் கவனித்தார். பகுத்தறிவு ஒன்று மட்டுமே அமைதிக்கான வழியில் இட்டுச்செல்லும். ஆதிக்கம் செலுத் துபவர்களாலேயே மக்கள் வறுமை மற்றும் கவலைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் தந்தை பெரியார்.''

தந்தைபெரியார் பிறந்த நாளில் தற்காலத்துக் கும் தேவையான தந்தைபெரியார் சிந்தனைகள் எனும் தலைப்பில் நடைபெற்றபொது விவா தத்தில் பேசிய பலரும் தந்தை பெரியார் குறித்து மேற்கண்ட பல்வேறு தகவல்களை எடுத்துரைத் தார்கள்.

காந்திநகர் குஜராத் மத்திய பல்கலைக்கழக அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்ட மைப்பின் உறுப்பினர் ஆகாஷ்குமார் ராவத் மற்றும் நண்பர்கள்  தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாட்டினை செய்தார்கள்.

டில்லியில்...




டில்லி பல்கலைக்கழகம் டிசிஏசி கல்லூரியில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள்விழா 17.9.2018 அன்று கொண்டாடப்பட்டது. பேராசி ரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து அவதேஷ் தலைமையில் தந்தைபெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பீகாரில்...




பீகார் தலைநகர் பாட்னாவில் மகாபா  பகுதியில் அமைந்துள்ள சிஷூ எப்வான் மழலையர் பள்ளி வளாகத்தில் சமூக நீதிக்கான மாபெரும் தலைவரும், சமூகப் பொறியாளருமாகிய  140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2018 அன்று எஸ்.இ.டபிள்யூ.ஏ. அமைப்பின்சார்பில் கொண்டாடப்பட்டது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயலாளர் ரவீந்திர ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தந்தை பெரியாரின் சமூகப்போராட்டங்கள் மற்றும் தந்தைபெரியாருடைய தன்னலமற்ற தொண்டுகுறித்தும், இன்றைய காலக்கட்டத்தில் திராவிடர் கழகத்தை தலைமையேற்று வழி நடத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். விழா ஏற்பாட்டாளர்களுக்கு தந்தை பெரியார் குறித்த புத்தகங்களையும் அவர் அளித்தார்.

சேவா அமைப்பின் அமைப்பாளர் ராகேஷ் யாதவ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விஜயா வங்கியின் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆர்.கே.குப்தா, அரவிந்த் யர்வாடா, யூனியன் வங்கியின் பிற்படுத்ப்பட்டோர் சங்க பொறுப்பாளர்கள் பாரத் பூஷன், அமித்குமார், பிரகாஷ் குமார் ஆகியோர் தநதைபெரியார் பிறந்த நாள் விழவில் பங்கேற்றனர்.

தெலங்கானாவில்...




தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத்தில் 17.9.2018 அன்று தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் தெலங்கானா மாநில பொறுப்பாளர்கள் யு.சின்னய்யா, ஜி.மல்லேஷ், எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் தந்தை பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மும்பையில்...




மும்பை திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாள் விழா 17.09.2018 காலை பத்து மணிக்கு பெரியார் சதுக்கத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 7.30 மணியளவில் தாராவி திமுக, கலைஞர் மாளி கையில் மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் தலைமையில், செய லாளர் அந்தோணி வரவேற்புரையாற்ற, ரவிச்சந் திரன் தொடக்கவுரை நிகழ்த்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழகத்தின் பொருளாளர் கண்ணன், ஜெய்பீம் பவுண்டேசன் தோழர் இராஜா குட்டி , மனிதநேய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் டிராவிட், விழித்தெழு இயக்கத்தின் தோழர் சிறீதர் தமிழன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அய்யா என்.வி.சண்முகராசன், அம்பேத்கர் அறக்கட்டளையின் நிறுவனர் தோழர் சசிகாந்த் கெய்க்வாட், திருச்சி வெ.சித்தார்த்தன், மகிழ்ச்சி மகளிரணி தோழி ந.வளர்மதி, திராவிடர் மறுமலர்ச்சியின் நிறுவனர் ஸ்டீபன் ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினர். தமிழ் இலெமூரியா' திங்கள் இதழின் முதன்மை ஆசிரியர் குமண ராசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அய்யா பிச்சமணி , முலுண்ட் பகுதியைச் சார்ந்த பாலசுப்ரமணியம் , குணசேகர் , தோழர் இராதாகிருஷ்ணன், மாறன் ஆரியசங்காரன், ஹேமலதா ஸ்டீபன் ரவிக்குமார், ரா.சுரேஷ்குமார், தோழர் ஜே.டேவிட் , தாராவி திமுக இராசன், எஸ்.வெண்ணிலா, வனிதா இளங்கோவன், தோழர் ராபின்சன், அறிவுமதி கணேசன், உமா கணேசன், கண்மணி, என்.சேர்மன் துரை மற்றும் பி.இராசா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மும்பை திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஜெ.வில்சன் நன்றி கூற, கூட்டம் இரவு 10.20 மணிக்கு முடிவு பெற்றது.

- விடுதலை நாளேடு, 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக