பிரிஸ்பென், அக்.4 ஆஸ்திரேலியா வில் 29.9.2019 அன்று தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழா எழுச்சி யுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில் பத்மாலட்சுமண் தொகுத்து வழங்கினார். தமிழர்களின் முன்னேற்றத் துக்காக பாடுபட்ட தந்தை பெரியாருக்கு நன்றி காட்டும் விழாவாக பெரியார் 141ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்ப தைக் குறிப்பிட்டு முகுந்தராஜ் அனைவரையும் வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.
தந்தை பெரியார் ஆற்றிய பகுத்தறிவு, அரசியல், சமூக நீதிப் பணி களை இருட்டடிப்பு செய்து, வதந் திகள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை விளக்கி பல்வேறு வரலாற்று உண்மைத் தகவல்களைக் கொண்ட காணொலி (விகடன் தொலைக்காட்சி தயாரித்தளித்த) காட்சிப்பதிவை லெனின் திரையிட்டு விளக்க உரையாற்றினார். கவிஞர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா சிறப்பு விருந்தினராக விழாவில் இணையம் வாயிலாக உரையாற்றினார்.
இணைய வழி உரையாடலில் சிறப்பு விருந்தினராக ராஜாத்தி சல்மா இணைந்து பெரியாரும், பெண்ணியமும் தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் பார்வை யாளர் வரிசையிலிருந்து ஜான்சி ராணி என்பவர் தம்முடைய கருத்துகளைப் பகிர்ந்து கொ ண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடங்கப்பட்டு தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
ஆஸ்திரேலியா பிரிஸ்பெனில் 29.9.2019 அன்று நடைபெற்ற பெரியார் 141ஆவது பிறந்த நாள் விழாவில் குழந்தைகளுடன் தமிழ்க் குடும்பங்கள், நட்புரிமைகொண்ட அம்பேத்கர் சிந்தனையாளர்கள், குயின்ஸ் லாந்து தமிழ் மன்றம், தமிழ் ஒலி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் விழாவில் பலரும் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 4. 10 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக