சுருக்கென்று தான் கேட்டார் அந்த கல்லூரி இளைஞர்! நானோ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்!
"அய்யா எல்லோருக்கும் பகுத்தறிவு இருக் கிறது. பின்னர் ஏன் உங்களை மட்டும் பகுத்தறி வாளர்கள் என்று சொல்றீங்க? மற்றவர்களுக்கெல் லாம் பகுத்தறிவு இல்லையா?" இது அவர் கேட்டது.
" எல்லோருக்கும் தான் இருக்கிறது, ஆனால் யார் பகுத்தறிவை ஆள்கிறார்களோ, யார் பகுத் தறிவை பயன்படுத்துகிறார்களோ, யார் பகுத்தறி வின் பயனை நுகர்வோர் ஆக்கிக்கொண்டு மற்ற வருக்கு கொடுக்கிறார்களோ அவர்கள்தான் பகுத் தறிவாளர்கள்! பகுத்தறிவை கையாளத் தெரிந்த வர்கள்! எடுத்துக்காட்டாக வெற்றுக் காலில் நடந்து போகும்போது சாணத்தை மிதித்து விட்டால் அரு வருப்பாக உள்ளது என்று கழுவிவிட்டு நிம்மதி பெறுவது பகுத்தறிவு. அதே ஆள் சற்று தூரத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாணியை வைத்து ஒரு புல்லை வைத்தால் அங்கே தலையை குட்டிக் கொண்டு நின்றால் பகுத்தறிவை பயன்படுத்த வில்லை என்பது பொருள். இப்போது நன்றாக உங்களுக்கு விளங்குமே" இது நான் சொன்னது!
பல கோடி பேர் நாட்டில் உலவினாலும் பகுத் தறிவாளர்கள் எவரென்று 4.2.2022 அன்று நடை பெற்ற பகுத்தறிவு பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் இப்படி தெரி வித்தார். சரி, இந்த பகுத்தறிவாளர்களுக்கு என்ன தான் பணி நாட்டில்? என்று அடுத்து எவரேனும் கேட்பாரென்றால் அதற்கும் பதில் சொல்கிறார்.
அடிப்படைக் கடமையே, அடிப்படைப் பணி!
"அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51a உட்பிரிவு h இல் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமை களை பற்றி இங்கு எல்லோரும் கவலைப்படு கிறார்கள். ஆனால் அடிப்படைக் கடமைகளைப் பற்றி பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் கவலைக் கொண்டு அன்றாடம் அப்பணியைச் செய் கிறார்கள்.
நம் ஊரிலே என்னதான் அறிவியலில் பட்டம் பெற்றாலும் நெற்றியில் பட்டை போட்டுக்கொள் கிறார்கள். கேட்டால் உடம்பில் இருக்கும் நீரை எடுத்து விடும் என்று வியாக்கியானம் பேசு கிறார்கள். பெரியார் கேட்டார், இரும்பு பெட்டிக்கு போடுகிறீர்களே அதற்குள் என்ன இருக்கிறது இழுத்துக் கொள்ள என்று? அதனால் சொல்கி றோம். அறிவியல் படித்தால் மட்டும் போதாது... அறிவியல் மனப்பான்மை வந்தால் வாழ்வில் எந்த சோதனையையும் வென்று வரலாம்.
ஏன் வேண்டும் அறிவியல் மனப்பான்மை என்றால் மனிதநேயத்தை எல்லோருக்கும் பரப்ப வேண்டும் என்பதால் வேண்டும். அதுதான் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பது.
இதை எப்படி பெறமுடியும் என்றால் கேள்வி கள் கேட்பதன் மூலம் பெறலாம். அடுத்ததாக அடிப்படை கடமைகளில் இறுதியாக வருவதுதான் 'சீர்திருத்தத்திற்கு மாற்றம் பெற அஞ்சாத நிலை.' இப்படியாக அரசமைப்புச் சட்டத்தில் கடமைகளாக கூறப்பட்ட இந்த நான்கு அம்சங்களையும் அன்றாடம் செய்யும் அமைப்பு தான் திராவிடர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும். மற்றவர்கள் செய்யத் துணியாத காரியம், செய்ய தயங்குகிற பணி -செய்யாத பணியை நாம் செய்கிறோம். அதனால் பெருமை கொள்வோம் என்கிறார்!
நாம் யார்? நம்முடைய பணி என்ன? என்ப தெல்லாம் சொல்லி விட்டு எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோமே என்று நாம் எண்ணிக் கொள்ள தேவையில்லை, 180 கோடி மக்கள் தொகையில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறை வானவர்கள் மட்டுமே. அப்படித்தான் நாமும் என்கிறார். அடுத்த செய்திகளை தலைவர் அவர்கள் சொல்லக் கேட்கும் போது வர வேண்டிய கர்வம் சற்று தூக்கலாகவே எட்டிப் பார்க்கிறது நமக்கு.
சென்னை பகுத்தறிவின் அன்னை!
அமெரிக்காவின் முக்கிய நகரமான செயின்ட் லூயிஸில் என்னைப் பேச அழைத்தார்கள். பத்து பதினைந்து பேர் பரபரப்பின்றி இயல்பாக அமர்ந் திருந்தார்கள். இன்னும் யாராவது வரவேண்டுமா துவங்கலாமா என கேட்டேன். வழக்கமாக மூவர் நால்வர் வருவோம் இன்று நீங்கள் வந்திருப்பதால் "Full attendance" என்று மகிழ்ச்சியோடு அந்த அம்மையார் சொன்னார்கள்... எனக்கோ ஒரே வியப்பு. அந்த அம்மையார் தான் இங்கே வந்து நம் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை எல்லாம் பார்த்து வியந்து 'உலகின் பகுத்தறிவுத் தலைநகரம் சென்னை' என்று பாராட்டினார்.
உலக நாத்திக அமைப்பின் தலைவர் நார்வே நாட்டின் லெலி ஃபிராக்கில் சொல்லிச் சென்ற கருத்தும் மிக முக்கியமானது, நம் செயல்பாடு களுக்கு உரமிடக் கூடிய ஒன்று" என்று புரிய வைக்கிறார் நமக்கே நமக்கான பெருமையை.
"சென்னையில் இருக்கிற மிக முக்கியமான இரண்டு சாலைகள் இரண்டு நாத்திகர்கள் பெய ரால் இருப்பது மிகப்பெரிய சிறப்பு. அமெரிக்கா போன்ற இடங்களில் எல்லாம் கூட பகுத்தறிவாளர் களுக்கு இத்தகைய சிறப்புகள் இல்லை! பல்வேறு நாடுகளிலும் பகுத்தறிவாளர்கள் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் கூட்டம் கூடி புத்தக ஆய்வு செய்வார்கள். ஆனால் (லிபர்டி) 'விடுதலை' என்ற பெயரில் நாளிதழ் தொடங்கி அன்றாடம் பகுத்தறிவுப் பணியை செய்து கொண்டிருப்பவர்கள் நீங்கள் மட்டும்தான்!" என்று அவர் சொன்னதை பெருமையோடு சுட்டிக்காட்டி உலகிலேயே மிகவும் தனித்துவமானவர்கள் நாம் என்று உற்சாக வெள்ளத்தில் நம்மை மிதக்க விடுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அய்யாவும் அண்டை பகுத்தறிவாளர்களும்!
"உலகத்தின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட மற்றும் பல அய்ரோப்பிய நாடுகளில் நாத்திக அமைப்புகள் - பகுத்தறிவாளர்கள் நிறைய உண்டு என்றாலும் அவர்களுக்கும் பெரியாருக்கும் என்ன ஒரு பெரிய வேறுபாடு என்றால் பெரியார் மட்டும் தான் இங்கே மக்கள் இயக்கம் ஆக்கிக் காட்டினார். மற்றவர்களெல்லாம் தங்கள் அறிவு ஆற்றல் சிந்தனைகளை இவற்றை வளர்த்துக் கொண்டு மேம்படுத்திக் கொண்டு தங்களை பகுத்தறிவா ளர்கள் ஆக்கிக்கொண்டாலும் தாங்கள் சார்ந்த சமூகத்தை அந்த வகையிலே கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் மக்கள் பிரச்சினை களில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தந்தை பெரியார் மட்டும் தான் சமூக நீதி, பாலியல் நீதி, எல்லோருக்குமான சமவாய்ப்பு, உரிமைகள் பற்றி மாலைநேர கல்லூரிகளாக தம் வகுப்பை மாற்றி மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை இங்கே முன் னெடுத்தார். இது தந்தை பெரியாருக்கு மட்டுமே உடைய பெரும் சிறப்பு" என்று முத்தாய்ப்பாக ஆசிரியர் அவர்கள் சொன்ன செய்தி என்பது பெரியாரியலை வாழ்வியலாக ஏற்ற நம் அனைவருக்கும் பெருமை என்பதோடு தெளிவும் உறுதியும் ஒருங்கே பெறும் நிலைக்கு நம்மை ஆளாக்குகிறது.
அய்யிரண்டு திசைமுகத்துக்கும்!
எனவே திசைகள் எட்டு, மேல் கீழ் என்று பத்தும் ஆன இந்த பூமிப் பந்தில் இந்த அளவிற்கு புகழ் பெறக்கூடிய பயன்பெறக்கூடிய ஒரு தத்துவம் தான் தந்தை பெரியார் என்று ஆசிரியர் புகழாரம் சூட்டுகிறார்.
ஆசிரியரின் பேச்சை ஆராய்ச்சி செய்தால் ஆறாம் அறிவென்பதின் 'அடையாளப் பேருரு வாக' நம் கண்முன் விண்முட்டும் அளவில் காட்சியளிப்பது 'பெரியார் எனும் மனிதநேயமே!' அவ்வறிவை எல்லோரும் ஆள, நாம் பெற்ற பேரின்பம் ஞாலமெலாம் நிறைய தமிழர் தலைவர் வழியே தஞ்சமாவோம்!
பெரியாரை வாரி இறைக்கும் அவர் உழைப் புக்கே என்றும் நன்றியாவோம்- நீட்சியாவோம்!
- ம.கவிதா, திருப்பத்தூர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற
துணைத் தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக