ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

பைபிளையும் ஏசுவையும் நான் நம்பவில்லை! டார்வின் கடிதம் ஏலம்


நியூயார்க், செப். 12- உலகின் அனைத்து மக்களும் தாம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என எண்ணியிருந்த காலத்தில், பரிணாம வளர்ச்சி பற்றிய தனது தேடல்களை புத்தகமாக வெளியிட்ட சார்லஸ் டார்வின் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டிருந்த கடிதம் ஏலத்துக்கு வரவிருக்கிறது.
இங்கிலாந்தின் பணக் கார குடும்பத்தில் பிறந்த டார்வின் தனது சிறு வயது முதலே, இயற்கை யின் புதிர்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட் டினார். அதன்பின்னர் மேற்கொண்ட ஐந்து ஆண்டு கப்பல் பயணம், அவரை ஒரு பிரபல புவியியல் வல்லுநராகவும் அடையாளம் காண காரணமானது.
அவரது பரிணாம வளர்ச்சி கொள்கை என்ற தனித் தன்மையான கருத்தால் டார்வின் தனியாகத் தெரிந்தாலும், தனது கடவுள் மறுப்பு கொள் கையை அவர் பகிரங்க மாக ஒப்புக்கொள்ள வில்லை.
அவரது புத்த கத்தைப் படித்த ஆத்திகரான மெக்டெர்மோட் என்கிற ரசிகனின் கேள் விக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் ஏசு கடவுளின் குழந்தை என ஒப்புக் கொள்ள முடியவில்லை என டார்வின் குறிப்பிட் டிருந்தார்.
மெக்டெர் மோட் இதுகுறித்து யாரி டமும் வெளிப்படுத்த மாட்டேன் என அவர் டார்வினுக்கு கொடுத்த வாக்குப்படி இதுவரை யாருக் கும் தெரிவிக்கவில்லை.
இந்தக் கடிதம் எழுதிய இரண்டாண்டுகளில் டார்வின் மரணத்தைத் தழுவினார். எனினும், இந்தக் கடிதம் பற்றி 100 ஆண்டுகளுக்கு எந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாமல் இருந்தது. பிரிட்டனின் பிரபல போன்ஹாம்ஸ் என்னும் ஏல நிறுவனத்தின் அறி வியல் மற்றும் வரலாறு தொடர்பான சேமிப்பு களில் ஒன்றான இந்தக் கடிதத்தை வரும் 21-ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏலம்விட இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய கடிதம்  90 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 60 லட்சம்) வரை   ஏலம் கேட்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-விடுதலை,12.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக