வியாழன், 3 செப்டம்பர், 2015

கல்புர்கியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்:


இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தார்வாடி, செப்.1_ மூட நம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதி ராகவும் பேசியதால் சுட் டுக் கொல்லப்பட்ட மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் உடல் முழு அரசு மரியா தையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
தார் வாடில் நடைபெற்ற அவ ரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் மரி யாதை செலுத்தினர்.
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் மூத்த எழுத்தாளரும், முற் போக்கு சிந்தனையாளரு மான எம்.எம்.கல்புர்கி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 8.40 மணியளவில் அவரது வீட் டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
நேற்று அவரது உடல் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக தார் வாட் கர்நாடக பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கேசிடி மைதானத்தில் வைக்கப்பட்டது. அப் போது கர்நாடக முதல்வர் சித்த ராமையா, அமைச் சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ஜெயசிறீ, முன்னாள் முதல் வர்கள் எடியூரப்பா, ஜெக தீஷ் ஷெட்டர்,
குமார சாமி, தார்வாட் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் கல்புர்கியின் மனைவி உமா தேவி, மகன் விஜய், மகள்கள் பூர்ணிமா, ரூபா தர்ஷி உள்ளிட்டோருக்கு ஆறு தல் கூறினர்.
இதையடுத்து ஊர் வலமாக கொண்டு செல் லப்பட்ட கல்புர்கியின் உடல், கர்நாடக பல்கலை. வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரி யாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த எழுத்தாளரான கல்புர்கி யின் மறைவையொட்டி, தார்வாட் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
உரைநடை இலக்கியத் தில் ஆழமான புலமை மிக்க கல்புர்கியின் மறை வுக்கு கன்னட எழுத்தா ளர்களும், பேராசிரியர் களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல் வெட்டு அறிஞராகவும், ஹம்பி கன்னட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்புர்கியின் கொலையை கண்டித்து மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர் களும் கர்நாடகாவில் பல இடங்களில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
விடுதலை,1.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக