சென்னை, டிச.15 பகுத்தறிவாளர் கழகத்தின் புதிய மாநில பொறுப்பாளர்கள் முதல் கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 04. 12. 2021 அன்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. கூட்டத் திற்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். வருகை புரிந்த மாநில பொறுப்பாளர்களை மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் வரவேற்றார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி இயக்கத்திற்கு கட்டுப்பாடு மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்திப் பேசியவர், அறிவுச்சுடர் தொலைக்காட்சி பற்றி எடுத்து கூறினார். ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் நட்பு வட்டத்தில் அதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு ஒவ்வொரு வருமே யூடியூப் சேனல் தொடங்க வேண் டும் என்பதையும் அது தொடங்குவது எளிது என்கின்ற வழிகளையும் வலி யுறுத்தி பேசினார்கள்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு உரையில், போட்டிகள் நடத்தப்பட வேண்டும், போட்டிகள் எப்படி எல்லாம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க வேண்டும் என்பதை பற்றி யெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரிகளில் மாணவர்களிடம்...
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ம.கவிதா பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடம் அய்யா வின் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி உரையாற்றி னார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் பேராசிரியர் முனைவர். எஸ். அருள்செல்வன் தங்கள் பகுதியில் உள்ள பேராசிரியர்களின் விவரங்களை தெரிவிக்க அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். கல்லூரி பேராசிரியர்கள் அளவில் கூட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும், திட்டமிட்டு கொண்டி ருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வாரூர் இரா. சிவக்குமார் கட்டுப்பாடோடு இயக்கம் இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆசிரியர்களின் அவசியம் பற்றியும் , ஆசிரியர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடியது பற்றியும் எடுத்துரைத்தார்.
அடுத்து பேசிய மாநில ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன் ஒவ்வொரு அணிக்கும் அய்ந்து பேர் என ஒரு ஒன்றியத்தில் 25 பேராவது இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி கலைத் துறையில் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில துணைத்தலைவர் சுப. முருகானந்தம் கருத்தரங்குகள் ,பட்டிமன்றம் ,வழக்காடு மன்றம், பேச்சுப் போட்டி ,கட்டுரைப் போட்டி நடத்தப் பட வேண்டிய முறைகள் பற்றி கூறினார்.
மூடநம்பிக்கை ஒழிப்பு
பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தன்னு டைய தந்தை எப்படி தங்களை வளர்த் தார்கள் என்பதை கூறி மூடநம்பிக்கை ஒழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் வேல்.சோ.நெடுமாறன் தன்னுடைய அனுபவங் களையும் தன்னுடைய நோக்கங்களையும் அய்யா கொள்கையை இன்னும் பரப்பிட வேண்டியதன் அவசியத்தையும், தன் னால் ஆன ஆதரவினை தருவதாகவும் கூறினார்.
பயிற்சிப் பட்டறைகள்
அடுத்து பேசிய மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில பொறுப்பாளர்கள் விடுதலையில் அறிவித்துவிட்டு நிகழ்ச்சிக்கு மாவட் டங்களை நோக்கி வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
அடுத்து பேசிய மாநில துணைத் தலைவர் கோபு. பழனிவேல் பயிற்சிப் பட்டறைக்கு அதிகம் பேரை அனுப்புவ தாகவும், சந்திப்பு கூட்டங்கள் அதிகம் இருக்க வேண்டும் என்றும் பெண்கள் அதிகம் வர வேண்டும் என்றும், பகுத்தறிவாளர் கழகம் அதிக நிதி தர வேண்டும் என்றும் பேசினார்கள்.
அடுத்து பேசிய மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம் சமூக வலைதளங்கள் பற்றியும், தனது இயக்க அனுபவங்கள் பற்றியும் பேசினார்.
களத்துக்கு வாருங்கள்
அடுத்து பேசிய மாநில துணைத் தலைவர் நல்லதம்பி ஓய்வு பெற்றவர்கள் களத்துக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவராக இருக்கும் கே.டி.சி . குருசாமி அவர்களை பணியிலிருந்து விடுவித்து மாநில அமைப்பாளராக பணியாற்றிட ஆசிரியர் ஒப்புதல் பெற்று அறிவித்தார்.
யூஆர்.எல் லிங்க்....
அடுத்து பேசிய துணை தலைவர் ஆறுமுகம் தென்காசி தோழர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தலைவர் ஆசிரியர் அவர் களது ஒப்புதலோடு நல்லதம்பி, கே.டி.சி. குருசாமி பொறுப்பு வகித்த மாவட்டங் களை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும், மாநில துணைத் தலைவராக இருக்கும் இல. மேகநாதன் அவர்களை விடுவித்து, அவரை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளராக செயல்படவும், மாநில துணைத் தலைவராக வேதாரண்யம் புயல் குமாரை ஆசிரியர் அவர்களுடைய ஒப்புதலோடு அறிவித்தார்.
அடுத்து பேசிய மாநில துணைத் தலைவர் புயல் குமார் தனித்தனி பொறுப் பாளர்கள் பட்டியலில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
அடுத்து பேசிய ஆடிட்டர் ரஞ்சித் குமார் யூ ஆர் எல் லிங்க் பற்றி பேசினார். விருப்பமுள்ளவர்கள் தானே சென்று பதிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாநில பொதுச் செயலாளர் வெங்க டேசன் தொடர்ந்து ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதை செய்வது என் வேலை என்று கூறினார்.
இறுதியாக பங்கேற்ற அனைவருக்கும் பொதுச்செயலாளர் வி.மோகன் நன்றி கூறினார்.
மாநில பொறுப்பாளர்கள் பெரும ளவில் கலந்து கொண்ட இக் கூட்டம் இனிதே முடிவுற்றது.