வியாழன், 3 நவம்பர், 2016

மீரட் நகரில் நாத்திகப் பிரச்சாரத்துக்கு எதிராக இந்துத்துவாக் கும்பல் வன்முறை வெறியாட்டம்

நாத்திகம் குறித்த தேசிய அளவிலான இரண்டாவது மாநாடு -- நான் ஏன் நாத்திகனானேன்? பகத்சிங் குறித்த அமர்வில் செய்தியாளர் சந்திப்பில் நாத்திக சம்மேளனம் அமைப்பினர்.

மீரட், நவ.2 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியாராக இருந்தவர் நாத்திகராக மாறினார்.அவருடையநாத்திகப்பிரச் சாரத்துக்கு எதிராக அம்மாநிலக் காவல் துறையினரின்துணையுடன்இந் துத்துவா கும்பல் வெறியாட்டம் போட்டுவருகிறது

வட இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பிந்து சேவா சன்ஸ்தான் தொடர்ந்து பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பிவருகின்ற நாத்திக அமைப்பாக இயங்கிவருகின்ற அமைப்பாகும்.

சுவாமி பாலெண்டு மத பரப்புரை செய்பவராக இருந்தவர். நாத்திகராக மாறி, தொடர்ந்து நாத்திகப் பிரச்சாரத்தை பிந்து சேவா சன்ஸ்தான்  அமைப்பின்மூலமாக தொடர்ந்து செய்துவருபவர் ஆவார்.

கடந்த 14.10.2016 அன்று மீரட் நகரில் கூட்டம் நடத்துவதாக அறிவித் திருந்தார். மத உணர்வுகளைப் புண் படுத்துவதாகக் கூறி, இந்துத்துவா கும்பல் அப்பகுதிக்கு திரண்டு வன் முறைத் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினரிடம் பாலெண்ட் புகார் கொடுத்தார். ஆனால், வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள்.

சுவாமி பாலெண்ட்மீது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சாமியார்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலெண்டை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின் றனர்.
-விடுதலை,2.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக