ஞாயிறு, 20 நவம்பர், 2016

முசுலிம் நாட்டிலும் நாத்திகம் முளைக்கிறது


இசுலாமிய மதத்தைச் சார்ந்த மன்னராட்சி உள்ள சவுதி அரேபி யாவில் சமூக வலைத்தளங்களில் நாத்திகக் கருத்துகள் பதிவுகள் பெருகி வருகின்றன. 28 வயது இளைஞர் ஒருவர் சமூகவலைத் தளமான டிவிட்டரில் தன்னுடைய நாத்திகக் கருத்துகளை பதிவு செய் திருந்தார். நாத்திகக் கருத்துகளைப் பதிவிட்டதில் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவ்விளைஞர் தண் டனைக்கு உள்ளானார்¢.
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளங்களில் மதக்கருத்து களைக் கண்காணித்து வரும் காவல் துறையின் ஒரு பிரிவு டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங் களின்மூலமாக மதம் தொடர்பான கருத்துகள் பதிவிடுவதைக் கண் காணித்து வருகிறது.
காவல்துறையினர் கண்காணிப் பில் 600க்கும மேற்பட்டோர் கடவுள் இருப்பதாகக் கூறப்படுவதை மறுக் கின்ற கருத்துகளை பதிவிட்டுள் ளார்கள். குர்ஆன் வசனங்களிலும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதுடன், கடவுள் கருத்துகள் என்று கூறப்படுபவை யாவும் உண்மைக்கு மாறானவையாகவும், பகைமை உணர்ச்சிகள் நிரம்பி, அதையே கற்பிப்பதுமாக உள்ளன என்று கடவுள், மதம் உள்ளிட்டவை குறித்து தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
28 வயதுள்ள ஓர் இளைஞர் நூற் றுக்கணக்கிலான நாத்திக கருத்துப் பதிவுகளை பதிவிட்டிருந்தார். அப்பதிவுகளைக் கொண்டு கண் காணிப்பு காவல்துறையினர் அவ் விளைஞரிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது தன்னை கடவுள், மத நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகன் என்றும், தான் பதிவிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரி விக்கப் போவதில்லை என்றும், எனக்கு சரி என்று பட்டதை எழுதி யுள்ளேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விளைஞர் அவ்வாறு குறிப் பிட்டதைத் தொடர்ந்து,  சவுதி அரேபியா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் 2000 சாட்டை அடிகள் கொடுக்கவும் உத்தர விட்டது. மேலும் அவ்விளைஞருக்கு 20ஆயிரம் ரியால் தண்டத் தொகை செலுத்தவேண்டும் என்றும் தீர்ப் பளித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப் பில் 5,300 டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சத்து 63 ஆயிரம் ஆகும்.
விடுதலை ஞ.ம.,5.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக