டெட்ராய்ட், அக். 8- வட அமெரிக்கா - மிச்சிகன் மாநிலம் டெட்ராய்டில் (டிராய் சமுதாய நல மய்யத்தில்) 30.9.2018 அன்று மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் ஒருங் கிணைப்பாளர் கா.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. வினோத் சந்தர் வரவேற்புரை யாற்றினார். எழில், தீனா, பிரேம், அன்புச் செழியன், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் வரலாற்றுக் கண்காட்சி
நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் தந்தை பெரியாரின் வரலாற்றுக் கண்காட்சி அமைக் கப்பட்டிருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் நினை வேந்தல் நிகழ்ச்சியை தோழர் திருமலை ஞானம் முன் மொழிந்தார். டாக்டர் அம் பேத்கர் மய்யத்தைச் சேர்ந்த சுத்தமல்லி கங்கா, மகேஷ், விவேக், மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுப்ரியா, நிபூலா, சாதனா, தீபிகா, பிரியா ஆகியோர் பங் கேற்றனர். மாணவர்கட்கு ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும் நடை பெற்றது. திருமூர்த்தி, ராம்குமார் ஆகி யோர் நடுவராக இருந்து வெற்றிக் குரியவர்களை தேர்வு செய்தனர்.
ஓவிய - பேச்சுப் போட்டி...
பேச்சுப்போட்டியில் பிரிவு 1-இல் கவினி ராயன், தன்யசிறீ, பிரியிங்கா ஆகியோரும் பிரிவு 2-இல் பிரியதர்சினி, மதுநிகா, தாருனிகா, ஆகியோரும், ஓவியப் போட்டியில் அகில் ராயன், பிரியங்கா ஜான்சன், திராவிட் ஆகி யோரும் வெற்றி பெற்று - பரிசளிக்கப் பெற்றனர்.
முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ‘பகுத்தறிவு - பெண்ணுரிமை - சமதர்மம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தீர்மானங்களை விளக்கிப் பேசிய அவர் - 2019ஆம் ஆண்டு சிகா கோவில் நடைபெற உள்ள பெரியார் சுயமரியாதை மாநாடு பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியரின் வருகைப் பற்றியும் விளக்கிப் பேசினார். விழா நினைவு விருதினை தோழர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கட்கு வழங்கி மகிழ்ந்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தோழர் மன்னை பரணீதரன் தீர்மானங்களை முன் மொழிந்தார்.
1) தமிழ்நாட்டின் சில இடங்களில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலை களை அவமரியாதை செய்த சமூக விரோதிகளை வன்மையாக கண்டிப்பதுடன் உரிய நடவடிக்கைகளை எடுத்திட தமிழக அரசை வலியுறுத்தியும்,
2) முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவுக்குப் பின் திமுக தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக் களை தெரிவிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 9.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக